• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Then Sinthum Poovanam! - Final

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 24

அன்று புது நிறுவனம் தொடங்குவது பற்றிய முக்கியமான மீட்டிங்கில் கலந்து கொள்ள மும்பை கிளம்பிக் கொண்டிருந்தாள்.. அவளின் மனதில் ஆயிரம் நினைவுகள் படையெடுத்தாலும் இந்த முடிவு சரியே என்ற நினைவுடன் கிளம்பிக் கொண்டிருந்தாள்..

அவள் கிளம்பும் நேரத்தில் சந்தோஷ் அனுப்பிய ஆடியோ ரெகார்ட் பார்த்தவள் அதை ப்ளே செய்து கேட்ட ஆரம்பித்தாள்.. அதில் அபிநந்தன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவளின் மனதில் முள்ளேன்று தைத்தது..

‘ஒவ்வொரு முறை பிரியாவைக் காயப்படுத்தும் பொழுதெல்லாம் என்னோட மனசு எவ்வளவு சந்தோஷமாக இருந்தது.. இப்போ அதெல்லாம் நினைக்கவே கேவலாக இருக்கு..’ என்றவளின் மனம் சொல்ல பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட தீபிக்கு ஒரு விஷயம் நன்றாக புரிந்தது..

‘கேட்டவள் என்று பெயர் வாங்க சில நொடி போதும்.. நல்லவள் என்று பெயர் வாங்க இந்த யுகமே போதாது..’ என்று உணர்ந்தவளின் மனதில் பாரம் ஏறிவிட தீபியின் கண்களில் கண்ணீர் மட்டுமே மீதமிருக்க தன்னுடைய செல்லில் இருந்து சந்தோஷிற்கு அழைத்தாள்..

சந்தோஷ் – பிரியா இருவரும் நிச்சயதார்த்த வேலைகள் புயல் வேகத்தில் நடந்து கொண்டிருக்க எல்லோரும் ஆளுக்கு ஒரு வேலையை இழுத்து போட்டு செய்ய வீடே திருவிழா கோலமானது..

அந்த நேரத்தில் சந்தோஷ் செல்லடிக்க, ‘யாராது..?’ என்று திரையைப் பார்த்துவிட்டு, “என்ன தீபி இப்போதான் ஆடியோ கேட்டு முடிச்சியா..?” என்றவன் பொறுமையாக கேட்டதும், “ம்ம் ஆமா இப்போதான் கேட்டேன்..” என்றவள் சொல்ல, “என்னோட அம்மா எடுத்த முடிவில் எந்த தவறும் இல்ல.. அது மட்டும் இல்லாமல் எங்க அம்மாவிற்கு உன்னோட அப்பா மீது எந்த கோபமும் இல்ல..” என்றவன் சொல்லிக் கொண்டிருக்க தீபிகா அவனை இடைமறித்தாள்..

“அத்தை மேல் எந்த தவறும் இல்ல.. தாத்தா செய்த பாவத்திற்கு அவங்க என்ன பண்ணுவாங்க..?” என்றவள் கேட்க அவனோ அமைதியாக இருக்க அவளே தொடர்ந்தாள்.. “அத்தை மாதிரி ஒருத்தங்களை இனிமேல் என்னோட லைப் ல பார்க்க முடியுமான்னு தெரியல.. பட் நல்ல குடும்பத்தில் வாழும் வாய்ப்பை மட்டும் இழந்துட்டேன் என்று தெளிவாக புரியுது..” என்றவள் சிலநொடி மௌனமாக இருந்தாள்..

“நான் பிரியா கிட்ட பேசணும்.. அவள் பக்கத்தில் இருந்தால் போனை கொடுங்க ப்ளீஸ்..” என்றாள் தீபிகா..

அப்பொழுது ஏதோ வெளியாக அவனைக் கடந்து சென்ற பிரியாவைப் பார்த்த சந்தோஷ், “பிரியா இந்த போன்..” என்றவளின் கையில் போனைக் கொடுத்தவன் அவளை விட்டு விலகிச்செல்ல, “அத்து யாரு போனில்..?” என்று கேட்டவள், “ஹலோ..” என்றாள்..

“ஹலோ பிரியா நான் தீபி பேசறேன்.. எப்படி இருக்கிற..” என்றவள் விசாரிக்க, “தீபி நான் நல்ல இருக்கிறேன்.. நீ எப்படி இருக்கிற..” என்றவள் அவள் செய்த தவறை எல்லாம் நினைக்காமல் புன்னகையோடு கேட்டதும், “எனக்கு என்ன நான் நல்ல இருக்கிறேன்.. நீ லைப் ல ஜெயித்துவிட்டாய் பிரியா..” என்றவள் கூறினாள்..

“ஏய் என்னடி சொல்ற.. எனக்கு ஒன்னும் புரியல.. இங்கே பாரு உன்மேல் எங்க யாருக்கு எந்த கோபமும் இல்ல சரியா.. நீ சும்மா புலம்பாமல் இரு..” என்றவள் அதட்ட, “சரிங்க அக்கா..” என்றவள் கிண்டலுடன் கூற வாய்விட்டு சிரித்தாள் பிரியா

“சந்தோஷ் என்னோட பழகினான் என்று நீ அவனை ஒதுக்காதே பிரியா.. அவனுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்.. அதை உன்னிடம் சொல்லத்தான் போனை கொடுக்க சொன்னேன்..” என்றவள் அறிவுரை சொல்ல, “இங்கே இன்னும் கொஞ்ச நேரத்தில் நிச்சயதார்த்தம் நடக்க போகிறது நீ வருகிறாயா..” என்று கேட்டாள் பிரியா..

‘இதுவரை உங்களைப் பிரித்ததே எனக்கு போதும்.. இனிமேல் உங்களோட கண்ணில் படவே கூடாது என்ற முடிவில் இருக்கிறேன்..’ என்றவள், “உன்னோட மனசு யாருக்கும் வாராது பிரியா..” என்ற தீபிகா, “நான் எதிரியாகவே இருக்கிறேன் சரியா.. அந்த பூவனத்தைக் கலைக்க நினைத்த தீபி இப்போ இல்ல.. இங்கிருந்து நான் கிளம்பறேன் பிரியா.. வெளிநாட்டில் ஒரு கம்பெனிஸ்டாட் பண்ணிருக்கேன்.. அங்கேயே போறேன்..” என்றவள் சொல்ல பிரியா மெளனமாக இருந்தாள்..

“அந்த தேன் சிந்தும் பூவனத்தில் நீங்க எல்லோரும் இருங்க.. நான் அந்த தகுதியை எப்பவோ இழந்துவிட்டேன்.. அதை நினைக்கும் பொழுது கொஞ்சம் வருத்தமாக இருக்கு.. உங்களோட மான்விழியும் இருக்கிறாள் இல்ல.. என்னோட முட்டாள் தனத்தால் என்னோட தோழியையும் இழந்துவிட்டேன்..” என்றவள் வருத்தப்பட, “தீபி ரிலாக்ஸ்..” என்றாள் பிரியா..

அப்பொழுது சந்தோஷ் அவளின் அருகில் வர, “சந்தோஷ் கிட்ட சொல்லிரு பிரியா.. அத்தை எந்த தவறும் செய்யல.. அதை நான் புரிஞ்சிக்கிட்டேன்.. இனிமேல் கனவில் கூட யாருக்கும் கெடுதல் நினைக்கும் எண்ணம் எனக்கு வாராது என்று சொல்லிரு..” என்றவள் பிரியா பேசும் முன்னே போனை வைத்துவிட்டாள்..

இவர்கள் இருவரிடமும் பேசியதில் அவளின் உள்ளத்தில் நிம்மதி பரவியது.. அந்தே நிம்மதியுடன் மும்பை சென்றாள் தீபிகா.. அவள் மட்டும் இல்லாமல் தன்னுடைய அப்பா, தாத்தா இருவரையும் ஏற்காட்டில் இருந்து அழைத்துக்கொண்டு மும்பை சென்றுவிட்டாள்..

அவள் போனை வைத்துவிட, “என்ன சொன்னால் தேனு..” என்றவன் கேட்டதும், “வெளிநாடு போறேன் என்று சொன்னாள்..” என்ற பிரியா நிச்சயதார்த்ததிற்கு ரெடியாக பிரியாவின் மனதில் இருந்த கொஞ்ச தயக்கமும் அவளை விட்டு விலகிச் சென்றது..

அவனும் சென்று நிச்சயத்திற்கு ரெடியாகி கீழே வரவும் முகூர்த்த பத்திரிக்கை வாசிக்கப்பட மித்ரா அசோக்கைப் பார்க்க அவனும் அவளையே பார்த்தான்.. மௌனமாகவே தன்னுடைய காதலில் வெற்றி பெற்றனர் இருவரும்..!

சந்தோஷ் – பிரியாவைப் பார்வையால் பாருகிட, “அண்ணா வழியுது..” என்றாள் சஞ்சனா தன்னுடைய வழக்கமாக குறும்புடன்.. அவன் பிரியாவின் விரலில் மோதிரம் போட்ட அவனின் விழியைக் காதலோடு பார்த்தவளும் அவனுக்கு மோதிரம் அணிவித்தாள்..

சந்தோஷ் சொன்னது போலவே ஒவ்வொரு நொடியையும் ரசித்தான்.. பிரியாவும் அவனோடு இணைத்து அனைத்தையும் ரசிக்க ஆரம்பித்தாள்.. தங்களின் கண் முன்னாடி பிரிந்து நின்ற பேரனும் பேத்தியும் இப்பொழுது நொடி பொழுது விலகாமல் இருப்பதைப் பார்த்த மோகன் சுமது உள்ளம் மகிழ, மணிகண்டன் – சீதாவின் உள்ளம் நிம்மதியடைந்தது..

அடுத்த பதினைந்து நாளில் சந்தோஷ் – பிரியதர்ஷினி திருமணம் நடந்தது.. அன்று விக்ரமிடம் சொன்னது போலவே ஊரறிய அவளின் கழுத்தில் தாலிகட்டி அவளை மனைவியாக ஏற்றுகொண்டான் சந்தோஷ்.. அந்த நொடி அவனின் விழிகளில் தெரிந்த காதலை தன்னுடைய மனபெட்டகத்தில் அழியாத பொக்கிஷமாக சேகரித்தாள் பிரியதர்ஷினி..

அப்பொழுது பெரியவர்கள் அவர்களுக்கு முதலிரவு ஏற்பாடு செய்யும் பொழுது இருவருமே ஒரே மாதிரி வேண்டாம் என்று மறுத்துவிட, “எதுக்குடா வேண்டாம் என்று சொல்ற..” என்று எல்லோருமே கேட்டனர்..

“முதலில் இவங்க இருவரின் திருமணத்தைக் கவனிப்போம்.. அப்புறம் நாங்க எங்களோட வாழ்க்கையைத் தொடங்குகிறோம்..” என்ற சந்தோஷ் அருகில் சென்ற சஞ்சனா, “அண்ணா ஏதோ உள் குத்து இருப்பது போல இருக்கே..” என்றவள் சொல்ல, “எனக்கும் அப்படிதான் தோணுது..” என்றான் சஞ்சீவ்..

அவர்கள் எல்லோரும் இவர்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்க பிரியாவின் அருகில் நின்ற சந்தோஷ், “ஏய் தேனு.. இன்னும் கொஞ்சநாள் காதலிக்கலாம்.. அப்புறம் நம்ம வாழ்க்கையைத் தொடங்கலாம்..” என்றவன் குறும்புடன் கண்சிட்டினான்..

“என்னோட ஸ்வீட் அத்து..” என்றவனைக் கொஞ்சிய பிரியாவோ, “அத்து நம்ம ஓடிபோலாமா..” என்றவனைப் பார்த்து குறும்புடன் கண்சிமிட்டி அவள் கேட்டதும் அதில் தன்னை மறந்த சந்தோஷ், “ஓ போலாமே..” என்றவன் வேகமாகச் சொல்ல, “இவங்க இந்த ஜென்மத்தில் உருப்பிட மாட்டாங்க..” என்று முடிவே செய்துவிட்டனர் சஞ்சனாவும், சஞ்சீவும்..

இருவரும் பேசுவதைக்கேட்டு எல்லோரும் வாய்விட்டு சிரிக்க மித்ரா மட்டும் புரிதலோடு அவர்களைப் பார்த்தவண்ணம் இருவைன் அருகில் சென்றவள், “தேங்க்ஸ்டா அண்ணா..” என்றவள் சொல்ல, “நீயும் மதுவும் முதலில் புகுந்தவீடு போய் சந்தோசமாக வாழனும்.. அப்புறம் நாங்க எங்களோட வாழ்க்கையைப் பற்றி யோசிக்கிறோம்..” என்றவனின் வலது தோளில் மித்ரா சாய்த்து கொள்ள மறுதோளில் மது சாய்ந்து கொண்டாள்..

அதை தன்னுடைய கேமராவில் போட்டோ எடுத்த சஞ்சீவ், “ரொம்ப அழகாக இருக்கு..” என்றவன் புன்னகையோடு கூறினான்.. அவர்களின் ஒற்றுமையை விலகி நின்று ரசித்தாள் பிரியா.. இவர்களின் ஒற்றுமையைப் பார்த்து பெரியவர்களின் உள்ளத்தில் மகிழ்ச்சி அதிகரித்தது..

அசோக்குமார் – சங்கமித்ரா, கிருஷ்ணா – மதுபாலா இருவரின் திருமணமும் ஒரே மேடையில் நடைபெற்றது.. இருவரும் ஒரே நேரத்தில் அவர்களை விட்டு பிரிந்து செல்லும் நேரத்தில் மித்ரா ஓடிவந்து பிரியாவை அனைத்து கொண்டு கதறிவிட்டாள்..

“மை டார்லிங்.. இங்கிருந்து போகவே மனசு வரல பிரியா..” என்றவள் அண்ணனின் தோள் சாந்து அழுக, “அக்கா பிரிவு வருவது நம்ம உறவை வலிமை படுத்தத்தான்..” என்றவன் தெளிவாக சொல்ல, “குட்டி பையனாக இருந்தவன் இன்னைக்கு எனக்கு அண்ணா மாதிரி தெரியறடா..” என்றவனின் தோளிலும் சாய்ந்து அழுதாள்..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
மதுவும் மித்ராவைப் போல அழுக, “புகுந்த வீட்டிற்கு தானே போறீங்க.. அதுக்கு எல்லாம் அழுகலாமா..?” என்று கேட்டு பெரியவர்கள் அவர்களை சாமதானம் செய்து அனுப்பி வைத்தனர்.. அவர்கள் இருவரும் இல்லாத வீட்டை பார்க்க மற்ற எல்லோருக்கும் மனசு கஷ்டமாக இருந்தது..

மணிகண்டனும், சீதாலட்சுமியும் காசி ராமேஸ்வரம் செல்ல அவர்களோடு சேர்ந்து மோகனும், சுமதியும் ஆன்மீக பயணம் செல்ல சஞ்சனா தன்னுடைய மேல் படிப்பைத் தொடர, சஞ்சீவ் அவனது படிப்பைக் கவனித்தான்..

அபிநந்தன் – பிருந்தா, விக்ரம் – மீரா, சந்துரு – மலர்விழி, அர்ஜூன் - மேகா நான்கு ஜோடியும் ஏற்காடு எஸ்டேட் கணக்கு வழக்கு பார்க்க ஊருக்கு செல்ல, “காதல் பறவைகள் சரணாலயம் போகுது..” என்று அவர்களை புன்னகையோடு சந்தோஷ் கிண்டலடித்தான்..

அவனின் கிண்டலை எல்லாம் காதில் வாங்காத அந்த நான்கு ஜோடிகளும், “இருவரும் சண்டை போடாமல் இருங்க.. சண்டை போட்டு யாராவது ஏற்காடு பக்கம் வந்தீங்க எங்களுக்கு கெட்ட கோபம் வரும்..” என்று அவர்களை மிரட்டிவிட்டு ஊருக்கு கிளம்பிச் சென்றனர்..

அவர்களின் கார் சென்றதும் தன்னுடைய மனைவியின் பக்கம் திரும்பிய சந்தோஷ், “மையூ..” என்றவன் மையலோடு அழைக்க கலங்கிய விழிகளுடன் திரும்பிப் பார்த்தாள் பிரியா.. அவளின் முகத்தில் இருந்த சோகத்தைக் கவனித்தவன், “வா மையூமா..” என்றவன் அழைத்தான்..

“ஒரு வாக் போயிட்டு வரலாம் வா..” என்றவன் அழைக்க அவளோ வானத்தைப் பார்த்தாள்.. வானம் இருள் சூழ்ந்திருக்க, ‘நான் இதோ வந்துவிடுவேன்..’ என்ற நிலையில் மழை பொழிய வானம் தயாராக இருந்தது..

“இப்போ மழை வந்துவிடும் அத்து.. இந்த நேரத்தில் சின்ன வாக்..” என்றவள் கேட்டதும், “இப்போ நீ வா..” என்றவன் வீட்டைப் பூட்டிவிட்டு அவளை அழைத்துக்கொண்டு சாலையில் இறங்கி மெல்ல நடக்க ஆரம்பித்தனர்..

அடுத்த சிலநொடியில் சில்லென்ற காற்று இருவரையும் தழுவிச்சென்றது.. பிரியா மெளனமாக அவனின் கைகோர்த்த வண்ணம் அவனோடு இருக்கும் தருணத்தை அவள் ரசித்த வண்ணம் வர அவளின் மனநிலை அறிந்த சந்தோஷ் பார்வை அவளை ஆசையுடன் தழுவியது..

“தீபியைக் காதலித்தேன் என்று உனக்கு என்மேல் கோபம் இருக்கா..?” என்றவன் கேட்டதும், “எனக்கு எந்த கோபமும் இல்ல அத்து.. உன்னோட செயலில் எல்லோரின் மனமும் முதலில் காயப்பட்டாலும் கூட, இப்போ இந்த நொடி யாரோட மனதிலும் எந்த கவலையோ இல்ல வருத்தமோ இல்ல..” என்றவன் அவளைப் பார்த்தாள்..

அவன் மௌனமாக அவளை பார்க்க, “இந்த நொடியில் நீ வாழ்க்கையை ஜெய்த்துவிட்டாய் அத்து.. நமக்கு கெடுதல் நினைத்தவங்களுக்கு கூட நன்மை செய்யும் நல்ல பண்பு எல்லோரிடமும் வந்துவிட்டால் எல்லோரின் வீடுமே ஒரு தேன் சிந்தும் பூவனமாக மாறிவிடும்..” என்றவள் சொல்ல சந்தோஷிற்கு அவளைக் கட்டியணைத்து முத்தமிட வேண்டும் என்று தோன்றியது..

தன்னுடைய சின்ன சின்ன ஆசைக்கு எல்லாம் அவள் முகம் சுழிக்காமல் தலையசைப்பில் அவனின் உள்ளம் அவனிடம் களவு போயிருக்க இருவரின் இடையே மௌனம் ஆழகாக மலர மழை பொழிய ஆரம்பித்தது..

“இதுக்குதான் சொன்னேன்.. பாரு மழை வந்துவிட்டது..” என்றவள் சொல்ல அவளை இழுத்துக்கொண்டு பக்கத்தில் இருக்கும் காபி ஷாப் உள்ளே நுழைந்த சந்தோஷ், “டூ காபி..” என்று ஆடார் செய்துவிட்டு எதிரே அமர்ந்திருந்த பிரியாவின் முகம் பார்த்தான்..

அவனின் பார்வை தன்னை தழுவிச் செல்வதை உணர்ந்தவளின் உள்ளத்தில் படபடப்பு ஏற்பட மழையில் நனைந்ததால் கைகால்கள் எல்லாம் நடுங்க விழி உயர்த்தி அவனைப் பார்த்தாள் பிரியா.. இருவரின் பார்வையும் தங்களின் காதலை வெளிபடுத்த ஆவி பறக்க சூடாக காபி வந்து சேர்ந்தது..

அதில் ஒன்றை பிரியாவிடம் கொடுத்த சந்தோஷ், “பிரியா அத்து மேல் ஏதாவது கோபமா..?” என்றவன் காபியைப் பருகிய வண்ணம் அவளிடம் கேட்டதும், “உங்கமேல் எனக்கு என்ன கோபம்..?” என்றவள் வெளியே பொழியும் மழையை வேடிக்கை பார்த்தாள்..

“அப்போ அத்து மேல் உனக்கு கோபம் இல்ல..” என்றவன் கேட்டதும், “அதெல்லாம் கோபம் இல்ல அத்து..” என்றவள் சொல்லிக் கொண்டிருக்க, “அப்போ வா ஓடிபோலாம்..” என்றவன் மெல்லிய குரலில் சொல்லி அவளைப் பார்த்து கண்ணடித்தான்..

“ஹா ஹா..” என்று வாய்விட்டு சிரித்தவள், “அப்போவே ஓடி போயிருக்கலாம்டா என்னோட மக்கு புருஷா..” என்றவள் சொல்ல, “எனக்கு அப்போ தோணலடி.. இப்போதான் தோணுது..” என்றவன் குறும்புடன் சொல்லிவிட்டு குடித்த காபிக்கு பில்லைக் கட்டிவிட்டு கொட்டும் மழையில் பிரியாவுடன் மழையில் நனைத்த வண்ணம் நடந்தான் சந்தோஷ்..

அவர்கள் வீட்டிற்கு செல்லும் பாதை கொஞ்சம் காடு போல இருக்க வழி எங்கிலும் மரங்கள் தொகுப்பாக நின்றிருக்க சாலை எங்கும் பூக்கள் விழுந்து சாலையேங்கும் பரவி இருக்க சேலையுடன் ஓடிய பிரியாவைப் பார்த்த சந்தோஷ் முகத்தில் புன்னகை அரும்பியது.. அந்த சாலையில் அதிகமாக யாரின் நடமாட்டமும் இல்லை..

அவள் தன்னை விட்டு கொஞ்சதூரம் செல்லும் வரையில் சாலையில் மெல்ல நடந்தவன், “தேனு..” என்று கத்தினான்.. அவனின் சத்தம்கேட்டு அவள் நின்று அவனைத் திரும்பிப் பார்க்க, “ஐ லவ் யூ மையூ..” என்றவன் கத்தினான்..

அவள் மழையில் நினைந்தவண்ணம் நின்று, “என்ன சொல்ற அத்து எனக்கு ஒன்னும் கேட்கல..” என்றவள் கத்திட, “ஐ லவ் யூ மை ஸ்வீட் ஹனி..” என்றவன் சாலையில் மண்டியிட்டு, “என்னோட காதலை எதுக்கோ.. நம்ம ஓடிபோலாம்..” என்றவன் புன்னகையோடு அதே நேரத்தில் ஆர்ப்பாட்டமாக அவனுடைய காதலைச் சொல்ல பிரம்மித்தாள் பிரியா..

அவள் மழையில் சிலையென நின்றிருக்க, “நான் தெரியாமல் செய்த தவறுக்கு நாலு வருஷ தண்டனை போதுண்டி.. உன்னோட அத்து பாவம் இல்ல..” என்றவன் அவளைப் பார்த்தவண்ணம் கேட்டதும் அவனை நோக்கி ஓடிவந்தாள் பிரியா..

அதற்குள் எழுந்து நின்று அவளை இமைக்காமல் பார்க்க, “ஐ லவ் யூ..” என்றவள் அவனின் தோளில் சாய, “என்னோட காதலை இப்படி சொல்லணும் என்று தாண்டி நான் அமைதியாக இருந்தேன்..” என்றவன் சொல்ல அவளோ அவனை இமைக்காமல் பார்த்தான்..

இரு இதயங்களும் காதல் என்ற மௌன மொழி பேசியது.. எந்த நொடி யாரின் மனதில் காதல் என்ன மாயம் செய்யுமோ அறியாது இருந்த இரு உயிர்கள் இன்று ஒன்றானது காதலால் மட்டுமே..!

சந்தோஷ் - பிரியா இருவரும் வீடு சென்றனர்.. அவள் வீட்டின் உள்ளே நுழைந்த மறுநொடி அவளை இழுத்து மார்புடன் அணைத்த சந்தோஷ் அவளின் இதழில் இதழ்பதித்தான்.. அவனின் முத்தத்தில் அவள் காணாமல் போனாள் பெண்ணவள்..!

அவளைத் தூக்கிக் கொண்டு தன்னுடைய அறைக்குள் சென்று படுக்கையில் அவளை இறக்கிவிட்டவன், “எனக்கு நீ வேணும் பிரியா..” என்றவனின் கண்களில் காதலைத் தேக்கி கேட்டதும் அவள் வெக்கத்தோடு புன்னகைத்து தன்னுடைய சம்மதத்தை அவனிடம் கூறினாள்..

அடுத்தநொடி அவளுக்குள் தன்னை தேடும் முயற்சியில் இறங்கினான் சந்தோஷ்.. அவனுக்கு முழுமனதோடு தன்னைக் கொடுத்தாள் பிரியா.. இரு உயிர்கள் காதல் என்ற ஒரு கூட்டில் அடைந்தது சுகமாக..!

இங்கே இருக்கும் பிள்ளைகளின் மனதில் வேற்றுமையை வளர்க்காமல் ஒற்றுமை என்ற எண்ணத்தை விதைத்ததால் மீண்டும் ஒரு பூவனத்தை உருவாக்கி இருந்தார்..

ஜாதி, மதம், இனம், மொழி, ஏற்றத்தாழ்வு எல்லாம் கடந்து பிருந்தாவினால் ஒரு பிருந்தாவனம் உருவானது என்றால், சந்தோஷ் நல்ல மனத்தால் மீண்டும் ஒரு தேன் சிந்தும் பூவனம் உருவானது...

இவர்கள் இதே காதலோடும், ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இவர்கள் வாழ்க்கை பல்லாண்டு வாழ வேண்டுமென்று வாழ்த்தி விடை பெறுவோம்..!
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சந்தியா ஸ்ரீ டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top