• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

thevathai-2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
View attachment 482
அத்தியாயம்-2
சௌமியா அழுவதைப் பார்த்த ஆதிரையன் காரை சட்டென்று நிறுத்தினான்.

“ஏய்! சௌமி… அழறியா? சும்மா விளையாட்டுக்குதான் கேட்டேன். என் செல்லத்தை பற்றி எனக்கு தெரியாதா?”

“அண்ணா, உனக்கே தெரியும். நான் எப்பவும் யாரையும் காதலிக்க மாட்டேன். நீ பார்த்து இவன் நம்ம தங்கையை நல்லா பார்த்துக் கொள்ளுவான்னு நம்பி யாரையாவது கல்யாணம் செய்யுன்னு சொல்கிற வரைக்கும் நோ கல்யாணம் அதிலயும் காதலுக்கு என்னிக்குமே நோதான்” என்று அழுத்தமாகச் சொன்னாள்.

“சரி. என் சௌமி செல்லத்தை பற்றி எனக்கு தெரியாதாடா?”

“அப்புறம் ஏன் அண்ணா அப்படி கேட்டாய்? அது என்னை எவ்வளவு ஹர்ட் செஞ்சுச்சு தெரியுமா? போண்ணா” என்று செல்லமாகக் கோபித்தாள்.

“சரிடா செல்லம். அண்ணா இனி அப்படி கேட்கவே மாட்டேன் போதுமா? கொஞ்சம் சிரிடா. என் தங்கமில்லியா?” என்று வருந்தமாக கேட்டான்.

“அண்ணா…! நீ வருத்தப்படறியா? நானும் விளையாட்டுக்குதான் கோவிச்சுக்கற மாதிரி பேசினேன். என் அண்ணா என்னை பற்றி தப்பாக நினைப்பாரா?” என்று சிரித்தாள்.

“அப்ப அண்ணா மேலே உனக்கு?” என்று கேட்க “அண்ணா… உன்னை…” என்றாள்.

“சரிம்மா. உனக்கு ஏற்ற ஒரு நல்ல மாப்பிள்ளையாக உன்னை என்னை விட நல்லா பார்த்துக் கொள்கிற மாப்பிள்ளையான்னு தெரிஞ்சுக்கிட்டுதான் உன்னை நான் அவனுக்கு கட்டி வைப்பேன்”

“நானும் உடனே கட்டிப்பேன் ஆனால் அதற்கு முன்னால் என் கல்யாணத்தை முன்னால் நின்று நடத்த எனக்கு ஒரு அண்ணி வேண்டும்” என்றாள் சௌமியா.

“சௌமி என் வாழ்கையில் நடந்தது தெரியுமில்லையா? நான் எப்படிம்மா திரும்பி கல்யாணம் செய்கிறது?”

“அண்ணா, அது எல்லாம் முடியாது அண்ணி வந்துதான் எனக்கு கல்யாணம் நடக்கனும் இல்லை என்றால் எனக்கு கல்யாணமே வேண்டாம்” என்று பிடிவாதமாகச் சொன்னாள். அவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

“நான் என்ன சொன்னாலும் இல்லைன்னு சொல்லாமல் நீ செய்து தந்து முடித்து விடுகிறாய் அண்ணா. நான் கேட்காமலே பலவற்றை செய்து தந்து விடுகிறாய் அண்ணா ஆனால் கல்யாணப் பேச்சை எடுத்தால் மட்டும் ஏன் மறுக்கிறாய் அண்ணா?” என்று கேட்டாள்.

“சௌமி, உன் பர்த்டே அதுவுமாக நீ ஆசைப்பட்டு கேட்கிற விஷயத்தை நான் மறுக்க முடியாமல் நான் தவிக்கிறேன்” என்று அவன் வருத்தப்பட்டு சொன்னான் அண்ணன்.

“சாரி அண்ணா. உன்னை நான் கஷ்டப்படுத்திட்டேன்னு நினைக்கிறேன். என் ஆசையை சொன்னேன் அவ்வளவுதான். உனக்கு ஒகே இல்லைன்னா வேண்டாம். என் அண்ணாவை நான் எப்பவும் முடியாதுன்னு சொல்ல விடமாட்டேன்.” என்றாள்.

ஆதிரையன் உடனே அவளைப் பார்த்து “என் சௌமிக்குட்டி அவள் பர்த்டே அதுவுமாக கஷ்டப்படக் கூடாது. எனக்கு முழு சம்மதம் ஆனால் ஒரு நிபந்தனை” என்று நிறுத்தினான் ஆதிரையன்.

“என்ன அண்ணா அது?” என்று அவனைப் பார்த்து அவள் கேட்க “என் சௌமி செல்லத்தை என்னை விட அதிகமாக பார்த்துக்கிற பொண்ணாக இருக்கனும். என் சௌமிக்கு அண்ணியாக இல்லாமல் அம்மாவாக இருக்கனும் அப்பதான் நான் கல்யாணம் செய்வேன்” என்றான் அண்ணன்.

“சரி அண்ணா நான் சீக்கீரமே உனக்கு அப்படி ஒரு பெண்ணை உனக்கு மனைவியாக சாரி எனக்கு அம்மாவாக கொண்டு வந்துக் காட்டறேன்” என்றாள்.

“அப்புறம் அண்ணா ஒரு நிமிஷம்” என்று அருகில் வந்து அவன் தோளில் கை வைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்து விட்டு “என் அண்ணான்னா அண்னாதான்” என்றாள்.

ஆதிரையன் காரை மறுபடியும் கிளப்ப “நான் முத்தம் கொடுக்க வசதியாகத்தானே காரை நிறுத்தினாய் அண்ணா” என்றாள்.

அண்ணன் சிரிக்க ஆனந்த யாழை மீட்டுகின்றாய் என்ற பாடலை அவள் செல்போனில் பிளே செய்தாள் சௌமியா.

“சௌமி நான் உன் அண்ணாடா. என்று அண்ணன் சொன்னவுடன் “நீ என் அப்பாவும் கூடத்தான்” என்றாள் சௌமியா.

“அண்ணா! வாங்க அவங்க நம்மளை நெருங்கிட்டு இருக்காங்க பாரு. அவங்க ஒவர் டேக் செஞ்சு போகாமல் நாமதான் முதல்ல போகனும் அண்ணா.” என்று குழந்தையாய் சொல்ல “ஒகே செல்லம்” என்று வேகத்தை அதிகப்படுத்தினான் ஆதிரையன்.

ஆதிரையனும் அவள் தங்கையும் ஆனந்தமாய் சென்றுக் கொண்டிருக்க, அவனை பின் தொடர்ந்து இளந்திரையனும் ஜெயகாந்தனும் வந்துக் கொண்டிருக்க, சௌமியா அவர்களை பார்த்தபடியும் கத்தியபடியும் வந்துக் கொண்டிருந்தாள்.

ஆதிரையன் ஒரு வளைவில் திரும்பி வரும் பொழுது ஆள் அரவமற்ற அந்த சாலையில் மையத்தில் ஒரிடத்தில் நின்றுக் கொண்டிருந்த ஒரு பெண் வண்டியை நிறுத்துவதற்காக சாலையின் குறுக்கே நின்றுக் கொண்டு தன் துப்பட்டாவை மேலே தூக்கிக் காட்டினாள்.

“அண்ணா... தூரத்துல ஒரு பொண்ணு ரோட்டுக்கு குறுக்கே நிற்கிறாள். வண்டியை ஸ்லோ செஞ்சு நிறுத்து” என்றாள் சௌமியா.

“சரிம்மா” என்று அந்தப் பெண் நிற்கும் இடத்திற்கு சில அடிகள் முன் காரை நிறுத்தினான் ஆதிரையன். சௌமியா காரை திறந்து சீட்பெல்ட்டை கழட்டி விட்டு இறங்கி அவளிடம் வரும் பொழுதுதான் கவனித்தாள்.
 




Last edited:

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
சாலையோரத்தில் ஒரு பெண் பலமாக அடிபட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் சுய நினைவின்றி மயங்கிக் கிடந்தாள். அவள் அருகே ஒரு ஸ்கூட்டி கவிழ்ந்துக் கிடந்தது. அவளுக்கும் கை. கால்களில் அடிப்பட்டு ரத்தம் வந்துக் கொண்டிருந்தது.

சாலையின் குறுக்கே நின்ற பெண் “மேடம்... இவள் என் பிரண்டு நாங்க வர வழியில் ஆக்சிடென்ட் ஆயிடுச்சு. ப்ளீஸ் அவளை காப்பாற்ற உதவி செய்யுங்க” என்று கை கூப்பிக் கேட்டாள்.

சௌமியா உடனடியாக அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண்ணின் அருகில் சென்று கையில் நாடி பிடித்துப் பார்த்தாள்.

“அண்ணா... இவங்களோட நாடித்துடிப்பு குறைஞ்சிட்டு வருது அதனால் இவங்களை நாம் உடனே காப்பாற்றி ஆகனும். நாம் லேட் செய்கிற ஒவ்வொரு நிமிசமும் இவங்க உயிருக்கு ஆபத்துண்ணா. அவங்களை தூக்கி நம்ம காரில் போடுங்க. நம்ம ஹாஸ்பிடலில் போயி சிகிச்சை செஞ்சிக்கலாம்” என்று பரபரப்பாய் சொன்னாள் சௌமியா.

“சரிம்மா... நாம் அப்படியே செஞ்சிடலாம்” என்று சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் இளந்திரையனும் ஜெயகாந்தனும் பின்னே வந்துவிட்டனர்.

அவர்கள் பைக்கை நிறுத்தி விட்டு வந்த அவர்கள் நிலைமையை புரிந்துக் கொண்டு அவர்களும் உதவி செய்ய ஆரம்பித்தனர்.

பெண்ணின் தோழி முதலில் காரில் ஏறிக் கொண்டு இரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த பெண்ணை தூக்கி காரில் போட அவளை தன் மடியில் கிடத்திக் கொண்டாள்.

“சௌமியா... நீ வேகமாக நம்ம ஹாஸ்பிடலுக்கு முன்னாலே போ. ஆபரேசன் தியேட்டரை ரெடி பன்ன சொல்லிடு. நான் பின்னாலே வருகிறேன்” என்று ஜெயகாந்தன் சொன்னதும் கார் கிளம்பியது.

“ஜெயா, இது ஆக்சிடென்ட் கேஸ் அதனால் நாம போலீசுக்கு சொல்லியாகனும். நான் இன்பார்ம் செஞ்சிட்டு இங்கேயே இருந்து அவங்கள் வந்தால் பின்னால் அவங்ககிட்ட நடந்ததை விளக்கிச் சொல்லி அவங்களையும் அழைச்சிட்டு நான் ஹாஸ்பிடலுக்கு வந்திடறேன். இன்ஸ்பெக்டர் என் பிரண்டுதான் அதனால நான் பார்மாலிட்டிகளை எல்லாம் சீக்கீரமாக முடிச்சிட்டு வேகமாக வந்திடறேன். நீ வேகமாக போயி அவங்களுக்கு உதவி செய்” என்றான் இளந்திரையன்.

“சரி நான் கிளம்பறேன். நீ இங்கே இருந்து பார்த்து விட்டு வா” என்று அவனும் கிளம்ப இளந்திரையன் போனை எடுத்து டயல் செய்தான்.

“ஹலோ சண்முகமா, நான் இளந்திரையன் பேசறேன். இங்கே ஆறாவது வளைவுல ஒரு ஆக்சிடென்ட்” என்றான்.

சௌமியாவோ செல்லும் வழியில் தன் செல்போனை எடுத்து “ஹலோ நான் சௌமியா பேசறேன்” என்று ஹாஸ்பிடலுடன் தொடர்புக் கொண்டு அந்தப் பெண் சிகிச்சை பெறுவதற்கு தேவையான ஏற்பாடுகள் எல்லாவற்றையும் செய்துக் கொண்டே வந்தாள்.

மயங்கி கிடந்த பெண்ணை மடியில் போட்டுக் கொண்டிருந்த பெண் தன் தோழியின் உயிர் காப்பாற்ற படவேண்டும் என்ற கவலையில் இறைவனை வேண்டியபடியும் அழுதபடியும் வந்தாள்.

ஆதிரையன் காரை அதிவேகமாகச் செலுத்தி தர்மலிங்கம் நினைவு மருத்துவமனை முன் கொண்டு வந்து நிறுத்தினான். சௌமியா வருவதற்கு முன்னதாகவே செல்போனில் அனைத்து தகவல்களும் தந்ததால் ஸ்டெரச்சர் தயாராக இருந்தது.

சௌமியா காரை விட்டு பரபரப்பாக இறங்கியவுடன் வேகமாக வந்த இரு ஆண்கள் கார் கதவைத் திறந்து காரில் ஏறி மயங்கிக் கிடந்த பெண்ணை ஸ்டெரச்சரில் தூக்கிப் போட்டுக் கொண்டு ஆபரேசன் தியேட்டர் நோக்கிச் சென்றனர்.

“நர்ஸ்... ஆபரேசனுக்கு வேண்டிய எல்லாம் ரெடியா? சார் பின்னாடியே வந்திடுவாரு. அவரு வந்த சில நிமிசங்களில் ஆபரேசன் நடந்தாகனும்” என்றாள் சௌமியா.

“ஆபரேசன் தியேட்டரை நர்ஸ் மேரி ரெடி செஞ்சுட்டாங்க மேடம். பேஷண்ட் பிளட் தெரிஞ்சால் அதையும் ரெடி செய்யலாம் மேடம்” என்று நர்ஸ் மாலதி பதில் அளித்தாள்.

“ஆமாம் நான் அதை கேட்கவே இல்லையே? எங்கே அவங்க கூட வந்த பொண்ணு” என்று அவள் முடிப்பதற்குள் “ஒ பாசிட்டிவ் மேடம்” என்றாள் தோழி.

“ஒ பாசிட்டிவா? அப்ப நோ பிராபளம். நம்மகிட்ட நிறைய ஸ்டாக் இருக்குதானே?” என்று சௌமியா கேட்க “எஸ் மேம்” என்றாள் நர்ஸ்.

“சௌமியா… ஆபரேசனுக்கு தேவையான எல்லாம் ரெடியா?” என்று கேட்டபடி வந்தான் ஜெயகாந்தன்.

“ஒகேப்பா” என்று அவள் சொன்னதும் “சரி நான் போயி ரெடி ஆயிட்டு வருகிறேன்” என்று அவன் தன் அறைக்குச் சென்றான்.

“சரி நானும் ரெடி ஆயிட்டு வருகிறேன். நீ அதற்குள்ளே பார்மாலிட்டிகளை எல்லாம் முடி” என்று நர்சிடம் சொல்லிவிட்டு அவளும் சென்றாள்.

“சரிங்க மேடம்” என்ற நர்ஸ் சென்று சில பேப்பர்களை எடுத்துக் கொண்டு அப்பெண்ணின் தோழியிடம் வந்தாள்.

“பேரு இந்துமதி, வயது 25, சிங்கிள், ஒ பாசிட்டிவ், கருணை மலர்கள் இல்லம், நீலகிரி” என்று அவள் எல்லாவற்றையும் வரிசையாகச் சொன்னாள்.

“மேடம்... நீங்கள் அவங்களுக்கு?”

“அவளுக்கு அப்பா அம்மா இல்லை. எனக்கு அவள் தங்கைங்க. நான் அவளுக்கு கார்டியனாக கையெழுத்து போடறேன்” என்ற அவளை ஆச்சரியமாகப் பார்த்தாள் நர்ஸ் மாலதி.

“மேடம் நானும் நர்ஸ்தான்” என்று அவள் சொன்னவுடன் “அப்படியா! மேடம்” என்றபடி கையெழுத்து வாங்கினாள்.
 




Last edited:

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
ஜெயகாந்தனும், சௌமியாவும் ரெடியாகி ஆபரேசன் அறைக்குள் செல்ல “சரி வர்றேன் மேடம்” என்று அவள் சென்றாள்.

“உங்களுக்கும், மேடத்துக்கும் ரொம்ப தேங்க்ஸ் சார்” என்று அங்கே அருகில் இருந்த ஆதிரையனிடம் அவள் நன்றி சொன்னாள்.

“உங்களுக்கும் அடிபட்டிருக்கே” என்று அவளைக் கவனித்த அவன் பதறிச் சொன்னான். அவன் உடனே அங்கிருந்த நர்சை பார்த்து, “நர்ஸ் இங்கே வாங்க” என்றான்.

“என்ன சார்” என்றபடி வந்தவளிடம் “இவங்களுக்கும் கை, கால்ல அடிப்பட்டிருக்கு பாருங்க. இவங்கள கூட்டிட்டு போயி டாக்டர்கிட்ட காட்டுங்க” என்றான் ஆதிரையன்.

“சரிங்க சார்” என்று பதில் அளித்த நர்ஸ் “வாங்க மேடம் போகலாம்” என்று அவளை அழைத்துக் கொண்டுச் சென்றாள்.

“மேடம் உங்க பேரு… வயது…” என்று நர்ஸ் கேட்டாள்.

“என் பேரு அன்புசெல்வி, வயசு 29, மேரிட், பி நெகட்டிவ், கருணை இல்லம்,நீலகிரி” என்று ரத்தின சுருக்கமாக தன்னைப் பற்றிச் சொன்னாள் அப்பெண்.

“சரிங்க மேடம்” என்று நர்ஸ் டாக்டர் அறைக்குள் அவளை அழைத்துச் சென்றாள். சிறிது நேரத்திற்குப்பின் வெளியே வந்தவளின் முகம், கை, கால்களில் சிறிய பிளாஸ்திரிகளுடன் வந்தாள்.

அன்பு செல்வி வந்தவுடன் நேராக ஆபரேசன் தியேட்டர் இருக்கும் இடம் நோக்கிச் சென்றாள்.
அங்கே அவளுக்கு முன்னதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகமும், அவருக்கு துணையாக இரு கான்ஸ்டபிள்கள், இளந்திரையன் உடன் ஆதிரையனும் இருந்தான்.

அன்பு செல்வி அவர்களைப் பார்த்ததும் எந்தவித பதற்றமும் இல்லாமல் இருந்தாள்.
“குட் மார்னிங்... இன்ஸ்பெக்டர்” என்று வணக்கம் செலுத்தினாள்.

“அன்பு… நீங்களா? அவங்க கருணை இல்லத்த சேர்ந்தவங்க. அவங்க ஒரு நர்ஸ் என்றதும் நீங்களாதான் இருக்குமுன்னு நினைச்சேன். அப்ப அடிபட்டது யாரு?” என்றார் இன்ஸ்பெக்டர்

“இந்துமதி சார். நானும் அவளும் பக்கத்தில இருக்கற ஒருத்தர்கிட்ட டொனேசன் கலெக்ட் செய்ய வந்தோம் சார். அவர் வீட்டுக்கு போகிற வழியிலத்தான் இந்த ஆக்சிடென்ட். இந்து பாத்துதான் மெல்ல டிரைவ் பன்னா சார்.” என்றாள் அன்புசெல்வி.

“அன்பு நீங்க முதல்ல உட்காருங்க அப்புறமா பதில் சொல்லலாம். உங்களுக்கும் அடிப்பட்டிருக்கு” என்றார் இன்ஸ்பெக்டர்.

“தாங்க்ஸ் சார்” என்று அவள் அருகிருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

“அது ஒரு சிவப்பு கலர் மாருதி கார்தான் சார். ஒவர் ஸ்பீடுல வந்தாங்க. இந்து வண்டிய ரைட் கட் பன்ன ட்ரை செஞ்சா ஆனா அதுக்குள்ள அவங்க மோதிட்டு வேகமாக நிற்காம போயிட்டாங்க சார். நம்பர கூட் பாக்க முடியல சார்” என்று எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள்.

“கான்ஸ்டபிள் இவங்க சொன்னத அப்படியயே எழுதிக் கையெழுத்து வாங்குங்க” என்று உத்தரவிட்டார்.

“இவங்கள எனக்கு நல்லா தெரியும் சார். கருணை இல்லத்த சேர்ந்தவங்கதான். குட் கேரக்டர் அதனால வி ஹேவ் நோ டவுட் வித் ஹெர். அன்பு… இது ஒரு ஒரு பார்மல் என்கொயரிதான். தாங்க்ஸ் பாரி யுவர் கோஆபரேசன்” என்றார் இன்ஸ்பெக்டர்.

“ஒகே சார்” என்று அவள் புன்னகைத்தாள்.

“இளா… இது ஒவர்ஸ்பீடு மற்றும் ரேசடு டிரைவிங்கால வந்த ஆக்சிடென்ட். இத நாங்க பாத்துக்கிறோம். பை தி பை அவங்க பேரு என்ன?” என்று கேள்விக் கேட்டு நிறுத்த “இந்துமதி சார்” என்றாள் அன்பு செல்வி.

“அவங்களுக்கு…” என்று இன்ஸ்பெக்டர் நிறுத்த “ஆபரேசன் தியேட்டருக்கு கொண்டு போயிருக்காங்க சார்” என்றாள்.

“சரி நாங்க இப்ப கிளம்பறோம் சார். அவங்க கண் முழிச்சதும் இன்பார்ம் செய்யுங்க. அவங்ககிட்ட வந்து ஸ்டேட்மென்ட் வாங்கனும். கருணை இல்லத்து மதர்கிட்ட ஒரு பார்மல் என்கொயரி செய்யனும். அத நாங்க செஞ்சிக்கிறோம்.” என்றார் இன்ஸ்பெக்டர்.

கான்ஸ்டபிள் அவள் சொன்னதை எழுதிவிட்டு வந்து கையெழுத்து கேட்க அவளும் கையெழுத்திட்டாள்.

“அப்புறம் உங்க ஸ்கூட்டிய நீங்க ஆப்டர் பார்மாலிட்டி நீங்க ஸ்டேசன்ல வந்து ரெகவர் பன்னிக்கலாம் அன்பு” என்று சொல்லிவிட்டு இன்ஸ்பெக்டர் சென்று விட்டார்.

“அண்ணா அவர விட்டுட்டு வந்திடறேன்” என்று இளந்திரையன் அவருடன் சென்று விட்டான்.
“அன்பு செல்வி உங்கள பாராட்டறேன். போலீச பார்த்ததும் எப்படி ரியாக்ட் செய்வீங்களோன்னு நினைச்சேன். நான் எதிர்பார்க்கவே இல்லை. நீங்க ரொம்ப போல்டா பேசினிங்க” என்று மனதாரமாகப் பாராட்டினான் ஆதிரையன்.

“சார் நாம தப்பும் செய்யலேன்னா ஏன் சார் பயப்படனும். அவங்க அவங்க கடமைய செய்யறாங்க சார். நமக்கு தெரிஞ்சத மறைக்காம சொன்னாலே போதும் சார்”

“சரியா சொன்னிங்க அன்பு. உங்க இல்லத்துக்கு சொல்லியாச்சு. அவங்க வரேன்னு சொல்லிட்டாங்க. நானும் என் சிஸ்டரும் பல தடவ உங்க இல்லத்துக்கு வந்திருக்கோம் ஆனா நாங்க உங்கள பாக்கலேயே?”
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
“நீங்கள் அதிகமாக என்னை பார்த்திருக்க வாய்ப்பே இருக்காது சார். நான் இங்கே வந்து ஒரு வருசம்தான் ஆச்சு சார். நீங்கள் வந்து பாக்கும்போது எங்க மேடத்தையும், மற்ற சிஸ்டர்களையும்தான் பார்ப்பீங்க சார். நான் பெரும்பாலும் மிஷன் ஹாஸ்பிடல்லதான் இருப்பேன்.”

“நானும் வந்து ரொம்ப மாசங்களாச்சுதான் ஆனால் என் தங்கை அடிக்கடி மெடிக்கல் கேம்புன்னு வருவாள்” என்றான் ஆதிரையன்.

“ஆமாம்… சௌமியா மேடம் அடிக்கடி என்னை பார்த்திருக்காங்க. அவங்கள் நார்மலாக இருந்திருந்தால் கண்டிப்பாக விசாரிச்சு இருப்பாங்க. அவங்க என் தோழி உயிரை காப்பாற்றுவதில் கவனமாக இருக்கறதால் அவங்கள என்னை கண்டுக்கலை அவ்வளவுதான்” என்றாள் அன்புசெல்வி.

“யெஸ் அவளுக்கு இன்னிக்கு பர்த்டே கோயிலுக்கு போயிட்டு வந்தோம். ஆக்சிடென்ட்டை பார்த்ததும் எல்லாவற்றையும் அவள் மறந்துட்டாள். அவள் எப்பவும் அப்படித்தான்” என்றான் ஆதிரையன்.

கருணை மலர்கள் இல்ல கார்டியன் மதர் நிர்மலா மேரி அங்கே வர அவரைக் கவனித்த அன்புசெல்வி “சார் மேடம் வராங்க” என்றாள்.

“வாங்க மேடம்…” என்று ஆதிரையன் வரவேற்க “காட் பிளஸ் யூ மை சைல்ட்” என்று வாழ்த்தினார்.

“அன்பு... இப்ப இந்துவுக்கு எப்படி இருக்கும்மா?” என்றார் மதர்.

“தெரியலை மேடம். ஆபரேசன் தியேட்டருக்கு கொண்டு போயிருக்காங்க. டாக்டர்கள் வெளில வந்தால்தான் தெரியும் மேடம்”

“கர்த்தர் அவளுக்கு அருள் புரியட்டும்.” என்று மதர் இறைவனை நினைத்து வேண்டினார்.

“மேடம்... சாரும், அவரோட தங்கையும்தான் ரொம்ப ஹெல்ப் பன்றாங்க” என்று ஆதிரையனைக் காட்டினாள் அன்பு செல்வி.

மதர் அவரைப் பார்க்க “மதர் நாங்க ஒன்றும் பெரிசாக செய்யல. எங்க கடமையத்தான் செஞ்சோம்” என்று தன்னடக்கமாகப் பேசினான் ஆதிரையன்.

“மேம்… நம்ம ஹோமுக்கு அடிக்கடி அடிக்கடி வருவாங்களே சௌமியா அவங்கதான் இவங்க சிஸ்டர்” என்றாள்.

“ஒ… அந்த பொண்ணா! தங்கமான பொண்ணு சார் உங்க தங்கை. இன்னிக்கு அவங்க பர்த்டேதானே?” என்றார் மதர்.

“ஆமா மதர்” என்று அவன் சொன்னதும் “வருசா வருசா அவங்க பர்த்டேவுக்கு ஒரு வாரம் முன்னாடியே ஒரு நாள் சாப்பாட்டு செலவுக்கு செக் வரும். இன்னிக்கு கூட அவங்க பேரச் சொல்லி பிரார்த்தனை பன்னிட்டு வர்றோம்” என்றார் மதர்.

“எல்லாம் கடவுள் அருள் மதர்” என்று ஆதிரையன் என்றதும் “கர்த்தர் உங்களுக்கும், உங்க சிஸ்டருக்கும் அருள் புரியட்டும்” என்றார் மதர்.

“அன்பு… உனக்கும் அடிப்பட்டிருக்கு போல. இந்து நினைப்புல உன்ன கவனிக்கல” என்றதும் “எனக்கு லேசான காயம்தான் மதர்” என்றாள் அன்புசெல்வி.

“கர்த்தர் உன் காயங்களை குணப்படுத்தட்டும் அன்பு” என்று அவள் காயங்களை தொட்டுப் பார்த்தபடி அவர் சொல்ல “சரிங்க மதர்” என்றாள்.

ஆபரேசன் தியேட்டர் விளக்குகள் அணைந்தன. ஜெயகாந்தனும், சௌமியாவும் வெளியே வந்தனர்.

அன்புசெல்வியையும், மதரையும் பார்த்தவள் அவர்கள் இருக்குமிடம் நோக்கி வந்தாள்.
“மதர் என்னை பிளஸ் பன்னுங்க” என்று காலை அவர்கள் காலில் சௌமியா விழுந்தாள்.

“காட் பிளஸ் யூ மை சைல்ட். உன் நல்லா மனசுக்கு கர்த்தர் உனக்கு நல்லதே செய்வார்” என்று மதர் வாழ்த்தினார்.

“மதர் என்னையும் ஆசீர்வாதம் பன்னுங்க” என்று ஜெயகாந்தனும், இளந்திரையனும் கேட்க “தேவன் உங்களுக்கும் கருணை செய்யட்டும்” என்றார் மதர்,

“பேஷண்டுக்கு ஒன்றும் இல்லை. அவங்க சேப் ஆயிட்டாங்க. அவங்களுக்கு தலையில பலமா அடிப்பட்டதால ரத்தம் நிறைய போயிருக்கு. அவங்கள ஐ.சி.யூல வைக்கிறோம். அவங்க கண் முழிச்ச பின்னாடிதான் மீதிய சொல்ல முடியும்” என்றாள் சௌமியா.

“சரிங்க மதர். நான் இப்ப வந்திடறோம்” என்று அவளும், ஜெயகாந்தனும் கிளம்பிச் சென்றார்கள்.
சில நிமிடங்களில் ஆபரேசன் தியேட்டரிலிருந்து இந்துமதியை வெளியேக் கொண்டு வந்தனர்.

தலையில் பலத்தக் கட்டுடன் இந்துமதியைப் பார்த்த அன்புசெல்வியும் மதரும் ஒரு நிமிடம் கண் கலங்கினார்கள். பணியாளர்கள் அவளை வேகமாக ஐ.சி.யூவுக்கு கொண்டுச் செல்ல அவர்களை பின் தொடர்ந்துச் சென்று ஐ.சி.யூவுக்கு வெளியே நின்றுக் கொண்டார்கள்.

“மதர்… இந்துவுக்கு ஒன்றும் ஆகாது.” என்றபடி வந்தாள் சௌமியா.

“சரி சௌமியா நீ காலையிலிருந்து எதுவும் சாப்பிடலை. வா சாப்பிடலாம்” என்று அண்ணன் அழைத்தான்.

“சரி அண்ணா” என்றவளிடம் “சௌமியா நீ போயி சாப்பிட்டு வாம்மா” என்றார் மதர்.
“சரிங்க மதர். நான் சாப்பிட்டுட்டு வந்திடறேன்” என்று சொன்னவளை அழைத்துச் சென்றான் அண்ணன்.

“மதர் அவங்க ரெண்டு பேருக்கும் எவ்வளவு நல்ல மனசு” என்று அன்பு செல்வி பாராட்ட “அவங்க அப்பாவும் அப்படித்தான்” என்று பாராட்டினார் மதர்.

இந்துமதியை ஐ.சி.யூவில் படுக்கையில் மயக்கநிலையில் இருக்க, தோழியை கண்ணாடி வழியே பார்த்தபடி இருந்தாள் அன்புசெல்வி.
 




Last edited:

mahathipriya

மண்டலாதிபதி
Joined
Mar 2, 2018
Messages
153
Reaction score
281
Location
jayankondam
என்ன சக்தி போங்க நாயகிகள கெத்தா இறக்காம இப்படி ஆக்சிடென்ட்ல அறிமுகப்படுத்தறிங்க

அன்ப அவங்கள அவங்களே அறிமுகப்படுத்திகிட்டவிதம் நல்லா இருந்தது
 




mahathipriya

மண்டலாதிபதி
Joined
Mar 2, 2018
Messages
153
Reaction score
281
Location
jayankondam
ஆதிரையன் நீங்க செளமிக்கு ஒவர் செல்லம் தர்றீங்க என்னதான் செளமி நல்ல பொண்ணா இருந்தாலும் இப்படியா எல்லாத்துக்கும் சரிங்கறது
 




mahathipriya

மண்டலாதிபதி
Joined
Mar 2, 2018
Messages
153
Reaction score
281
Location
jayankondam
அன்பு உங்க தைரியத்துக்கு என் சல்யூட் ஆனா தோழிய காப்பாத்த ரோட்டுக்கு குறுக்க நிற்கிறது எல்லாம் கொஞ்சம் ஒவர்தான்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top