• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THIRUMANA MALARGAL THARUVAAYA - 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Manjula Saravanan

SM Exclusive
Joined
Jul 23, 2018
Messages
696
Reaction score
1,664
Location
TAMILNADU
:love::love::love:அன்புத் தோழமைகளே:love::love::love:
வணக்கம்.....
இந்த தடவை தாமதம் ஆகிவிட்டது:cry::cry::cry:
'நாங்க அதுக்கு பீல் பண்ணலையேனு ' நீங்க சொல்றது எனக்கும் கேட்குது:censored::censored::LOL:...இருந்தாலும்... மன்னிப்பு கேட்டக வேண்டியது என் கடமை அல்லவா:giggle::giggle:....
கதைகளை படிக்க விரும்பும் அத்துணை நல்லுல்லங்களும் என்னை
'மன்னிக்கவும் மக்கா...???'
இங்கு அடுத்த அத்யாயத்தை பதிவிட்டுவிட்டேன்....படித்துவிட்டு உங்கள் அன்பான?? கரங்களால் கொஞ்சமே கொஞ்சம் அங்கீகாரம்....மற்றும் விமர்சனம் கொடுக்க வேண்டுகிறேன்....இப்போ கதைக்கு ஓடிடலாம்....???

THIRUMANA MALARGAL THARUVAAYA

அத்யாயம் - 5
அவ்விடம் முழுவதையும் காரிருளின் தாக்கம் கவ்வியிருந்தது....பல விலங்குகளின் ஒலிகள் தொடர்ந்து அங்கே கேட்ட வண்ணம் இருந்தது...ஒருப் புறம் சிங்கத்தின் கர்ஜனை மறுபுறம் புலியின் உறுமல் அருகில் இன்னும் பல இனம் அறியமுடியாத விலங்குகளின் ஒலிகள் இவற்றில் முதலில் எதற்குப் பலியாவோம் என்ற நினைப்பில் தப்பிக்கும் மார்கமின்றி மருளும் விழிகலோடு நடுவிலே நின்றிருந்தது ஒரு புள்ளிமான்....

சிறு இடைவேளை கிடைத்தாலும் தாவி விடும்

" படச்சோனே...காப்பாதுப்பா"

இப்படிக் கடவுளை வேண்டுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய இயலாத நிலை அந்த மானிற்கு....இறுதியில் அதன் குரல் இறைவனின் செவிகளை எட்டியது போல.....

"இதுவே கடைசி முறையா இருக்கணும்...இனி இந்த மழைல நனையர வேலைலாம் விட்டிடு....."




சிங்கத்தின் கர்ஜனை மாறி...தணிந்த வேலனின் குரலாகக் கேட்டக...அந்த நொடி... புள்ளி மானாய் நின்ற மீனாட்சியின் கண்களுக்குக் காரிருள் மறைந்து வெளிச்சம் பரவியது....விலங்காய் இருந்தவர்கள் மனித உரு பெற்றனர்....
புலியாய் இருந்த செண்பா

"அப்பா சொன்னது புரிஞ்சதா மீனாட்சி...." என்று கேட்டக...


WALTER சிங்கம் அமைதிபெற்ற சந்தோசத்தில் மனதில் குத்தாட்டம் போட்ட மீனாட்சி வெளியில்...அமைதியாகத் தளையை மட்டும் ஆட்டினால்....

"தலைய ஆட்டுனா மட்டும் பத்தாது மீனா...அதைச் செய்யணும்....."


வசுந்தரா அவர் பாணியில் ஒரு கொட்டு வைத்தார்....
அதன் பிறகு அங்கு யாரும் நிற்காமல் மேல் தளத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தனர் மீனாட்சியோ
வழிப் பொறுக்க முடியாமல் தலையைத் தேய்துக்கொண்டே வசுந்ராவைப் பார்த்து மனதில்....

' வசு.....டைமிங்ல வஞ்சம் தீர்கரிங்களா....உங்களுக்கு இருக்கு அப்புறம்....'
அவள் பார்வையைப் பார்த்துப் பதறிப்போன சுஜி அவளிடம்

"அம்மா...பாவம்டி எதும் ஏடாகுடமா பன்னிடாத....கல்யாணத்துல அம்மா நடமாடனும்...."என்றாள் பரிதாவமாக....மிகவும் மெல்லிய குரலில்" சுஜிகா....பரவாலயே கண்டுபிடிச்சிட்டிங்க...நல்ல அக்கா...."

"நான் நல்ல அக்கா தான்...நீயும் நல்ல தங்கையா இந்த அக்காமேல கரிசனம் வைடி...."

"ஹ்ம்ம்...உங்களுக்காக விட்றேன் சுஜிகா.... அன்பு அத்தையே உங்க பொண்னால இப்போதைக்கு சேப் சோன்ல இருக்கீங்க....."

பேசிக்கொண்டே கடையினுள் புகுந்தவர்கள் முதலில் சுஜியின் வருங்காலக் கணவருக்கும் ரகுவிற்கும் ஆடை எடுக்க ஆண்கள் ஆடைகளின் பகுதிக்குச் சென்றனர்.... உள்ளே நுழையும்பொழுதே மீனாட்சிக்கு குளிரெடுக்க ஆரம்பித்து விட்டது ....அவளின் கைகளைப் பிடித்துக்கொண்டிருத்த பூர்ணி

"மீனாட்சி....இப்படி நடுங்குதேடி.... என்ன பன்றது..."

என்று கூறப் பக்கவாட்டில் அவளையே ரசித்தபடி வந்த ரகுவும் இதைக் கேட்டு மீனாட்சியைக் கவனித்தான் நடுக்கம் அதிகமாவது அவனுக்கும் தெரிந்தது உடனே அவள் அருகில் நின்றப் பூர்ணியிடம்

"Darl.....ஹ்ம்ம்...பூ..ர...ணி..."

"நான்...பூ..ர..ணி... இல்ல ஜஸ்ட் பூர்ணி "

"ஓகே...ஜஸ்ட் பூர்ணி....இப்போ உன் பிரெண்டு ஏன் நடுங்கரா...."
இதைக் கேட்ட அவனை முறைத்துக் கொண்டே

"குளிறுதில்ல அதான் நடுங்கரா...."
ஆனால் அந்த நடுக்கத்திலும் வாய் அடங்கவில்லை மீனாட்சிக்கு...

"ரகுப்பா....நீங்க டைரெக்டாவே பேசலாமேப்பா.... என்ன வச்சு ஏன்பா...'ஈ' வெரட்டுறீங்க..."

"மீனாட்சிப்பா..... உங்க உடம்பே நடுக்கம் கண்டாலும் வாய்கு அதோட எபெக்ட் தெரிலயே பா..."

"அதுல உங்களுக்கு ரொம்பக் கவலை போலயேப்பா"

"இப்ப ரெண்டுப் பேரும் வெட்டிக்கத்துக் கத்துரத விட்டிடு ... நடுக்கத்தைக் குறைக்கர வழியப் பாருங்க..."
இவ்வாறு கூறியப் பூர்ணி ரகுவை நோக்கி...

"நீங்க ஆன்ட்டிய கூப்பிடுங்க ரகு நாங்க இங்க தள்ளி நிக்கரோம்..."

அவனிடம் பேச அரம்பித்தவுடனே சொர்கத்திற்கு ஆகாய மார்கமாக பயணமானவனை மீண்டும் அதே குரல் பாதாளத்தில் தள்ளியது

"என்ன இன்னும் பெராக்குப் பார்திட்டு நிக்கரிங்க...போங்க..."
அவளை விசமமாக முறைத்தபடி

" சேர்கைய மாத்துனா இந்தத் தெனாவட்டுலாம் சரியாப் போய்டும்...."
என்று கூறி விட்டு அவளையே பார்த்தப் படி செண்பகத்தை அழைக்க நடையைக் கட்டினான்...சிறிது நேரத்தில் செண்பகம்,அபிராமி,அஞ்சலி ஆகிய மூவரும் அங்கு வந்துச்சேர்த்தனர்...இவர்களைப் பார்த்து என்னவென்று வினவ....

"டிரஸ் ஈரத்துல உடம்பு நடுங்குது ஆன்ட்டி..."

"பின்ன மழைல நினைஞ்சா மணக்குமா...விடும்மாப் பூர்ணி அப்படியே இருக்கட்டும்..."

"அம்மா... ஜோக் அடிக்காம என்ன பண்ணலாம்னு சொல்லுங்க மா..."என்றால் அபி

"வேற என்னடிப் பண்ணச் சொல்ற இவக் கூத்தே பெருசா இருக்கே...பூர்ணி நீயும் அபியும் இவ கூட இருங்க நானும் அஞ்சுவும் போய் இவளுக்குப் புதுடிரெஸ் வாங்கிட்டு வரோம்..."

என்று கூறிவிட்டுச் சென்றனர்....ஐந்து நிமிடங்களில் கையில் கவரோடு வவந்த செண்பகம்....பூர்ணியிடம் கொடுத்து மீனாட்சியை மாற்றிக் கொண்டு வரும்படி சொல்லிவிட்டு அபிராமியுடன் அவ்விடத்தை விட்டு அகன்றார்....அருகிலிருந்த ட்ரையல் ரூமில் உடைமாற்றி ஸ்கர்ட் அண்ட் டாப்ஸ்சிற்குத் தாவியிருந்தாள்....மீனாட்சி முடியைத் தளரவிட்டு இருபக்கமும் எடுத்துக் கேட்சஸ்சினுள் அடக்கியிருந்தாள்....தன்னை சரிசெய்து வெளிவந்தவள் தன் நண்பிகளுடன் அவர்கள் குடும்பம் இருக்கும் இடம் நோக்கி வேகநடையிட்டாள்

"ராங்கி அம்மா....இவ்ளோ வேகம் எதுக்கு பொறுமையா நடயேன்..." அவளின் வேகத்திற்கு ஈடு கொடுக்கமுடியாமல் கூறினாள் அஞ்சலி

"எலி....என்னைய மரியாதையாக் கூப்பிட்டு இப்படி ரோஸ்தட்ட வைக்காதடி...."
என்றபடி தலையைச் சாய்த்துக் கொண்டு வெட்கப்படுவது போல் பாவனைச் செய்யத் தலையைக் குனிந்துக் கைகளால் முகத்தை மறைக்கப்போக அதில் கால்கள் தடுக்கியது...அருகில் வந்த இருவரும் அவளை விழுவதிலிருந்து காக்கக் கைகளைப் பற்றிக்கொண்டனர்...

"ஹே...அடிகிடிப் பட்ருச்சா மீனா..."

"கொஞ்ச நேரம் உக்காந்துட்டுப் போலாமாடி..."
தன் தோழிகளின் அன்பில் கரைந்தவள் அவர்களை அசுவாசப்படுத்தும் பொருட்டு

"நோ..நோ...ஐயம் பைன் நான் பார்த்துக்கறேன்...எனக்கு அடிலாம் படலபா...."
என்று கூறிக்கொண்டே இருவரையும் அழைத்துச் சென்றாள்...
அப்பொழுதான் அங்கே ரேஷ்மியுடன் பக்கவாட்டிலிருந்து வந்த மாறன்....மீனாட்சிக் கூறிய வார்த்தைகளின் முன் பகுதியைக் கேட்டுத் திரும்பிப் பார்த்து ஏம்மாந்து போனான்....


தன்னைக் கடிந்துகொண்டே சென்ற மாறனுக்கு ரேஷ்மிக் கூறியவையை உள்வாங்கத் தோன்றவில்லை....அனிச்சையாகப் பதில் தந்தான்....

"தாத்தா ரொம்ப ஸ்வீட் இல்ல... ரொம்ப நல்லா பேசராறு...."

"ஹ்ம்ம்..யா..."

"கயல எனக்கு நல்லாவே தெரியும் சோ பிரின்ட்லி...ஆன்ட்டிகிட்டயும் சாரி சாரி.... அத்தைகிட்டயும் இனி பேசிப் பலகிக்கனும்...."

"ஹ்ம்ம் கேரிஆன்..."

முகம் மலர்ந்து மாறனை பார்த்துவிட்டு நடந்தாள் ரேஷ்மி.... அவளின் செயலுக்கு மாறன் மகிழவும்மில்லை தவிர்க்கவும் இயலவில்லை....
இவர்கள் வருவதைப் பார்த்துவிட்ட கயல்...தன் கணவனின் பிடியிலிருந்து வலுக்கட்டாயமாகத் தன்னை விடுவித்துக் கொண்டு....

"அவங்க வந்துட்டாங்க யோகி..."என்றாள் முறைத்துக்கொண்டே

"அதனால என்ன கயல்.."

"அதுசேரி....அவங்க பாக்கும்போதும் அப்படியே நின்னா நல்லாவா இருக்கும்..."

"என்னடி நீ....என்னமோ கட்டிபுடிச்சுக் காதல் பண்ண மாதிரிச் சொல்ற...ஹ்ம்ம்...அப்படி கூடத்தான் இருந்தா என்ன... யாரு கேப்பாங்க"


என்று கூறிய யோகி கயலை நோக்கி ஆனந்தமாய்க் கண்ணடிக்க உள்ளே மயங்கித்தான் போனாள் ஆனால் வெளியே..

"அடடா...போதுமே...உங்க விளையாட்ட வீட்ல வச்சிக்கோங்க...இப்போ நல்ல அண்ணனா உங்க தங்கைய கவனிங்க..."
என்று கூறி யோகியை முன்னால் தள்ளிக் கொண்டு வந்தாள்....இரு ஜோடிகளும் ஒன்று சேர்ந்தனர்...

"ரேஷ்மி அண்ணி... அண்ணாகிட்ட எல்லாம் கிளியர் பண்ணிக்கிட்டாச்சா உங்களுக்கு ஓகே தானே...."
கயல் கேட்டதற்குச் சிரித்தப்படியே தலையை ஆட்டினாள் ரேஷ்மி...

"தலைய மட்டும் அசச்சா எனக்குப் போதாது அண்ணி....நீங்க வார்த்தையா சொல்லுங்க"

"கண்டிப்பா ஓகே தான் கயல்..."

"போதுமா அருமை மனைவியே...கல்யாணத்த இன்னும் பத்து நாள்ல வச்சிக்கிட்டு இஃது என்ன மாதிரி கிளேரிபிகேஷன்??"

"எனக்கும் தெரியும் யோகி பட் அண்ணிகிட்ட ஒரு தடவை கேட்டு கிளாரிபை பண்ணிக்கிட்டா தான் நான் டென்சன் இல்லாமல் வேலை பார்க்க முடியும்" அதற்கு ரேஷ்மியும்...

"அதனால என்ன கயல் நீ என்ன வேணா கேட்கலாம் இன்னும் உனக்கு டவுட் இருந்தாலும் கேளு நான் சொல்றேன்"

"அய்யய்யோ எனக்கு டவுட்லாம் இல்லை அண்ணி நீங்க சொன்னதே போதும் "என்று கூறிவிட்டு மகிழ்ச்சி பொங்கத் தன் அண்ணனிடம் திரும்பினாள் கயல்...அவனும் இவர்களைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்...

"பீலிங் சோ ஹாப்பி பார் யு அண்ணா...."


முகத்தில் மென்மை படர"தெரியும் கயல்...."

அவனைக் கவனித்த ரேஷ்மி 'இவன் சிரிப்பு கிலோ என்ன விலைன்னு கேட்பான் போல' என்று நினைத்துக் கொண்டாள்

"ஓகே.. ஓகே... வாங்க போலாம் அங்க நமக்காக எல்லாரும் காத்துக்கிட்டிருப்பாங்க " என்று கூறிய யோகி பெண்கள் இருவரையும் முன்னே அனுப்பிவிட்டு இவன் பின்னாடி மாறனுடன் சென்றான்....இருவரும் பேசிக்கொள்ளவில்லை...மாறன் எப்போதும் அப்படித்தான்...யோகியின் மனதில் தன் தங்கை பற்றிய நினைப்பு

'ரேஷ்மிக்கு ரொம்ப புடிச்சிடுச்சு போலயே....இல்லைனா இவ்ளோ இனக்கமா இவர்களோட பேச மாட்ட....ஹ்ம்ம்... மாறனின் மனதையும் புரிஞ்சு நடந்துக்கணும் ' தன் இரு சொந்தங்களுக்கும் சேர்த்து மனதார வேண்டிக்கொண்டான்....

ஆண்கள் இருவரும் ஒன்றாக வருவதைக் கண்ட மூர்த்தி அவர் பாணியில்
"அட...என்ன மேன்.... நீங்க ரெண்டு பேரும் ஒன்னா வரதையா நாங்க பாக்கணும்....அதான் உங்களோட மெயின் போர்டு ரெண்டுமே பக்கத்துல வராங்கல்ல அவங்க கூட சேர்ந்து வாங்கய்யா...."
சிரித்துக்கொண்டே தன்னை கயலுடன் இணைத்து நடந்தான் யோகி...மாறனும் ரேஷ்மியும் இப்பொழுது தானாகவே இணைந்திருந்தனர்....அவர்கள் வருவதை வாத்சல்யத்துடன் அவர்கள் ஜோடியைப் பார்த்து ரசித்தனர் குடும்பத்தினர்....

அங்கிருந்தவர்கள் பார்த்தும் அலட்சியம் செய்த ஒன்று ஆனால் நம் கண்களுக்கு முக்கியமாகப் படுகிறதே.....அதோ...நடுவில் மாறன் இடப்பக்கம் சற்று தள்ளி ரேஷ்மி...வலப்பக்கம் வெகு அருகாமையில் மீனாட்சி....

 




Manjula Saravanan

SM Exclusive
Joined
Jul 23, 2018
Messages
696
Reaction score
1,664
Location
TAMILNADU
தன் தாயை மட்டும் அவர்கள் வட்டத்திடமிருந்து பிரித்துவந்து இவர்கள் இருக்கும் இடத்தில் அடுக்கப்பட்டிருந்த புடவைகளை பார்த்தபடி நின்றிருந்தாள் மீனாட்சி....மாறன் நடந்து வருகையில் அவனை ஒட்டியிருந்த ஆளுயர கண்ணாடியில் தான்அவள் பிம்பம் தெரிந்தது...சட்டென்று பார்ப்பவர்களுக்கு எதிரில் கண்ணாடியிருப்பது அவ்வளவாகத் தெரியாது அதிலுள்ள பிம்பம் தான் தெரியும் அப்படி தான் ஒரு நிமிடம் நமக்கும் ஜோடியாகத் தெரிந்தார்கள்......

இந்த முறை விதி சதி செய்யவில்லை....புடவையை ஆராய்ந்து கொண்டிருந்த மீனாட்சி என்னவோ தோன்ற எதிரில் வருபவனைப் பார்த்து அப்படியே நின்று விட்டாள்....தன்னைத் தாண்டி செல்பவனை அவனும் தன்னை பார்ப்பானா என்ற ஆவலில் பார்த்தவளுக்கு பெரிய டியூப்லைட் தலைக்கு மேலே எறிந்தது...
பின்னே... அவன் தான் இவள் பக்கமே திரும்பாமல் அருகில் வந்த பெண்ணிடம் தலையசைத்த வண்ணம்மிருந்தானே...
இருவரையும் ஒரு சேர பார்த்த மீனாட்சிக்குக் காதலர்கள் என்றே தோன்றியது.....

'அட... வளந்தவன் இந்த பியூட்டிய பாக்கத்தான் அப்படி வேகமா வந்தானா!!!
ஏம்பா....ராசா....உன் தேனடைய பார்க்க வரத்துக்கு...அடுத்தவன் கடைய காலி பண்ணுவியப்பா....'
என்று எண்ணிக்கொண்டு அவர்கள் இருவரையும் பார்த்தபடி நின்றிருந்தாள்...

"ஏய்... மீனாட்சி ....கவனம் எங்க இருக்கு....இவ்ளோ நேரம் கத்துறனே உன் காதில் விழுதா இல்லையா..." செண்பகத்தின் மிரட்டலுக்குப் பலன் இருந்தது மீனாட்சி விழுக்கென்று விழுந்து தன் தாயின் பக்கம் திரும்பிக் கொண்டாள்....

"சாரி....மா அந்தப் பக்கம் சாரீஸ் நல்லாருக்கேனு பார்த்தேன் அதான் நீங்க கூப்டது கேக்கல"

"அப்போ வா அங்கபோய் முதல்ல பார்ப்போம்..."

'ஐயோ அம்மா...இப்படி நேரம் காலம் தெரியாம பன்றிங்களே...எல்லாம் உன்ன சொல்லணும்டி...உன் வாய்தான்'

மீனாட்சிக்கு அவளைக் கலங்கடித்தவனை மறுபடியும் பார்த்தபொழுது மேலும் அவன் செயல்களை கவனிக்கவேண்டும் என்று தோன்றியது ஆனால் அவள் ஏதோ சமாளிக்க கூறிய வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டு அவளை அழைத்துச் சென்றார் செண்பகம்....

"இந்த பிங்க் எப்படி இருக்கு...இல்ல இந்த ரெட் கலர்...."

"....."

"மீனாட்சி....நானும் பார்த்துட்டு இருக்கேன்.... மழைல நனைஞ்சதுல இருந்து நீ சரியில்லடி..."

அப்பொழுதுதான் மீனாட்சிக்கு ஓர் உண்மை உரைத்தது...காலை தான் இருந்த தோற்றம் வேறு இப்பொழுது தான் இருக்கும் தோற்றம் வேறு என்று...

"அட....ஆம்மால்ல" என்று உரக்கச் சொல்லிவிட இவளை ஒரு மார்க்கமாகப் பார்த்துவிட்டு

"என்னடி.... பைத்தியம் பிடிச்சுபோச்சா உனக்கு.... இங்க என்ன புகழ்ந்துட்டா இருக்கேன்...."

"அம்மா...ஏதோ ஞாபகத்துல பேசிட்டேன் மா...நீங்க செலக்ட் பண்ணுங்க"

அவள் மனசாட்சி...
' ஏ...மீனாட்சி....அவன் உன்னப் பார்த்தா என்ன பார்க்கலான என்ன... நீ எதுக்கு அவன் பாக்காததுக்கு நியாயம் தேடற...இந்த எண்ணம் சரி வராது விட்டிடு...'

'நான் ஒன்னும் அவனைத் தேடி போகலையே...எதர்ச்சியா பார்த்தேன்...இன்னும் என்ன செய்றான்னு பாக்க நினைச்சேன் அவ்ளோதான்..இனி அதுவும் வேண்டாம் ஓகே வா..'

'புரிஞ்சா சரி மீனாட்சி...இப்போ சாரிய கவனிச்சு எடு'

என்று கூறிவிட்டு மனசாட்சி அகன்றது....
"ஹ்ம்ம்...அதுதான் சரி..." என்று வாயில் முணுமுணுத்தபடி தாயுடன் சேர்ந்துகொண்டாள்


"எது சரி...அவ பார்க்க தான ஆசைப்படறா பாத்துட்டு வரட்டுமே...இல்ல நானே கூட்டிட்டு போரேன்..."

" டேய் அவ கேட்பது கிரௌண்ட் புளோர்ல இருக்குடா மாறா...இப்போ வேணாம்னு... யோகி சொன்னதுக்கு தான் நானும் சரின்னு சொன்னேன்..."

"தாதா..யோகி..... யாரு கூட்டிட்டு போரிங்க..."
அதற்கு மேல் அங்கே யார் சொன்னாலும் கயல் செல்வது உறுதி என்று அறிந்த இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர் இறுதியில் தாதா தானே சென்று வருவதாகக் கூறினார்.....

கீழ் தளத்திலிருந்த பைன் ஆர்ட்ஸ் எக்ஸிபிஷன் பார்க்க வேண்டும் என்று மால்லில் புகுந்த உடனே முடிவு செய்திருந்தாள் கயல்...அதற்கான நேரம் முடியப்போவதை அறிவித்தவுடன் உடனே செல்ல வேண்டும் என்று கூறி ஒருவாறு தன் தமயன் மூலம் அதைச் சாதித்தும் கொண்டாள்...

"பெரிப்பா....நாங்களும் கிளம்பறோம்...வந்த காரியம் நல்லபடியா முடிஞ்சது எங்க எல்லாருக்கும் முழு திருப்தி....இனி போய் மீதி கல்யாண வேலையை கவனிக்கும்...தலைக்கு மேலே இருக்கே..."

"ரொம்ப நல்லது பரதா....எங்களுக்கும் பூரண திருப்தி ...உன் பொண்ணு ரேஷ்மியோட ரிங் அளவு மட்டும் யோகி மாப்ளகிட்ட குடுத்திடுபா... ஏன்னா ரெண்டு பேருக்கும் ரிங் எடுக்கணும்...."

"குடுத்துட்றேன் பெரிப்பா...."


"மாப்ள....நாங்க புறப்பட்றோம் சீக்கிரமே சந்திக்கலாம்"
என்று கூறிவிட்டு மகிழ்ச்சியோடு கை குலுக்கினார் பரதன்....தானும் அவருக்குப் பதில் கரம் கொடுத்து இன்முகமாக விடைகொடுத்தான் மாறன்....

அவன் அருகில் வந்த ரேஷ்மி
"மீட் யு சூன் மாறன்..."
அவன் கண்ணோடு கண் கலந்தாள்... இவனோ அவளைப் பார்த்தானே தவிர அதில் எதுவும் தெரியவில்லை...

"யா..பை.."
என்ற பதில் மட்டுமே வந்தது...தலையசைத்து விட்டு அருகில் நின்ற அகிலாவிடம்

"போய்ட்டு வரேன் ஆன்ட்டி....தாத்தா பை....கயல் வரேன் ஒடம்ப கவனிச்சிக்கோ...ப்ரோ பை...."
என்று எல்லார்க்கும் கூறிவிட்டு தன் தந்தை பக்கம் வந்து நின்றுகொண்டாள்....

"அகிலாமா....நாளைக்கு நம்ம சைடுல இன்னும் பாக்கி இருக்கவங்களுக்கு பத்திரிக்கை வச்சுடலாம்...காலைல ஆறுமணிக்கு போர்ப்படலாம்மா..."

"அப்படியே பன்னிடலாம்ணா..... நான் நேரா நம்ம வீட்டுக்கு வந்திர்றேன்"

"சரிமா...அப்போ நாங்க கிளம்பறோம்" என்று விடைபெற்று அங்கிருந்து ரேஷ்மி குடும்பத்தினர் சென்றுவிட்டனர்....யோகி அவர்களை விட்டுவர்ச்சென்றிருந்தான்....
இதற்குள் கயல் மற்றும் மூர்த்தி எக்ஸிபிஷன் நடக்கும் இடத்திற்கு சென்றிருந்தனர்.....
அவர்கள் உள்ளே சென்று சுற்றிப் பார்த்துவிட்டு வெளியே வருவதற்கும் ரகுவுடன் சேர்ந்து வந்த இளமை கூட்டம் உள்ளே நுழைவதற்கும் சரியாக இருந்தது...

அதிகம் மகிழ்ந்ததாலோ அல்லது அலைச்சலோ தெரியவில்லை மூர்த்திக்கு உடலை என்னவோ செய்தது உடல் வேர்கத்தொடங்க அவரால் மேலே அடியெடுத்து வைக்கமுடியவில்லை அப்படியே தூணில் சாயமுற்பட்டார்....வேடிக்கை பார்த்தவாறு வந்த கயல் பின்னால் நின்ற தாதா மயங்கிவிழுவதைப் பார்த்து பதபதபதைத்து அருகில் பிடிக்க வர....அவரை அதற்குள் தாங்கியது மீனாட்சியின் கரங்கள்....

"Sir.... என்ன ஆச்சு....முழிங்க ரகு இங்கவா..."என்று அவனை அழைக்க அவர்களோ கூட்டத்தில் சிக்கியிருந்தனர்...
அப்பொழுது பக்கம் வந்த கயல் அலைபேசியில் மாறனை அழைத்தாள் ஆனால் தொடர்பு கிடைக்கவில்லை...

"தாதா.... என்ன செய்து...கொஞ்சம் இருங்க அண்ணாவை கூப்பட்றேன்"
கயலின் நிலமையைப் பார்த்துவிட்டு

"மேம்... நீங்க பயப்படாம கால் பன்னுங்க நான் இவங்கள பார்த்துக்கறேன்...."
என்று கூறிவிட்டு கைதாங்களாய் மூர்த்தியை அழைத்துச் சென்று அருகில் இருந்த இருக்கையில் அமர்த்திவிட்டு...ஓடிச் சென்று தண்ணீரைக் கொண்டுவந்து அவர்க்கு முன்னால் மண்டியிட்டு நீரைப் புகட்டினாள்....நா தழுதழுக்க அதைக் குடித்தார்....கையில் வைத்திருந்த டைரிமில்கை பிரித்து அவர் வாயில் பெரிய துன்டைவைத்தாள்...

"Sir... இதை முழுசா சாப்பிடுங்க...ஒரு வேலை
low-sugar ஆகியிருந்தால் கொஞ்சம் நார்மல் ஆகும்..."
எழுந்து அவரது தோள்களை பற்றி அப்படியே இருக்கையில் சாய்த்தாள்.... அவர் அருகில் நின்றுகொண்டே கயலை நோக்க அவள் இங்கே ஒரு கண்ணும் போனில் கையுமாக விடாமல் கால் செய்தவண்ணம் இருந்தாள்....

நிஜத்தில் சர்க்கரை அளவு தான் குறைந்திருந்தது போல...சில நிமிடங்களில் மூர்த்தி சற்று தெளிவுற்றார்....
அந்த நேரம் அவர் கைப்பேசி சிணுங்க அதை எடுக்க முயற்சித்தார் ஆனால் இயலவில்லை....மீனாட்சியே மேல் பாக்கெட்டினுல் இருந்த போனை எடுத்துக் கொடுத்தாள் நம்பரைப் பார்த்தவர்

"மை grand-son.."

தடுமாறிய படி... அவளையே பேச சொன்னார்.....தலையை ஆட்டியவள் போனை ஆன் செய்து காதிற்கு கொடுத்தாள்...அந்த பக்கக் குரல்

"தாதா.... எங்க இருக்கிங்க கயல் பண்ணா...திரும்ப கூப்டா லைன் பிசி...."

கொஞ்சம் தயங்கிய மீனாட்சி பின் தொடர்ந்தாள்...

"Sir...actually உங்க தாத்தாக்கு சுகர் லெவல் காம்மியாகி மயங்கிட்டாங்க....இப்போ ஹி இஸ் பைன்...."

"மால்ல எங்க இருக்கிங்க..."
அவன் பதட்டமாவதை அவன் குரல் சொல்லியது...வேகநடையில் கைப்பேசி அதிர்வது மீனாட்சிக்குக் கேட்டது

"இப்போ நாங்க என்ட்ரன்ஸ் கிட்ட தான் இருக்கோம் sir... யூ டோன்ட் கெட் பேனிக்... நீங்கப் பொறுமையா வாங்க"
என்று சொல்லிவிட்டு போனை அணைத்து மூர்த்தியிடம் நீட்டினாள்....இதற்குள் மூர்த்திக்குத் தெம்பு திரும்பியிருந்தது....நிமிர்ந்து உட்கார்ந்து கைக்குட்டையால் முகத்தைத் துடைத்து கொண்டார்....
கயல் அங்கே மீண்டும் மாறனுக்கு அழைக்க அவன் தகவல் கிடைத்து விட்டதாகவும் தான் வந்துகொண்டிருப்பதாகவும் கூறினான்....மூர்த்தியிடம் திரும்பி வந்த கயல்...
மீனாட்சியின் கைகளை பற்றிக்கொண்டு

"ரொம்ப தேங்க்ஸ் மா...நீ இல்லனா நான் என்ன செய்திருப்பனே தெரியாது...இட்ஸ் அன் டைமிலி ஹெல்ப்...."

"ஐயோ...mam....இட்ஸ் ஓகே...நான் பெருசாலாம் எதும் பண்ணல ...சோ லீவ் இட்...."

"குழந்த....ஒரு நிமிஷம் இப்படி உட்காருமா..."மூர்த்தி கேட்டுக்கொள்ள மீனாட்சியும் அவர் எதிரில் மண்டியிட்டாள்
அவள் தலையை அன்பாய் கோதியபடி...

"ரொம்ப நன்றி மை சைல்ட்....கடவுள் உன்கூட என்றைக்கும் துணை இருப்பார்..."
முகம் மலர்ந்த மீனாட்சி அவர் கைகளை பிடித்து...

"செக்கண்ட் சொன்னது நான் எடுத்துக்கரேன்...பர்ஸ்ட் நாட் நீடெட் சோ அது உங்களுக்கே தந்தர்ரேன் "

"ஹா ஹா ஹா....யுவர் விஷ்"

"ஓகே...sir நான் கிளம்பரேன் என்ன தேடுவாங்க..."

"இரும்மா என் அண்ணா வந்தவுடனே நாங்களே வந்து சொல்லி விட்டிட்றோம்.."

"இல்ல பரவால்ல மேம்... நான் பார்த்துக்குவேன்...யூ டேக் கேர் " என்று கூறி கயலின் வயிற்றை பார்த்தாள்

"சூர் மா... அண்ட் டேங்க்யு..."

"Sir... நீங்களும் ஒடம்ப பார்த்துக்கோங்க...நான் போய்ட்டு வரேன்..." என்று கூறி தலை அசைத்து இருவரிடமும் விடை பெற்றுச்சென்றாள்...

"ஸ்வீட் அண்ட் ஆக்டிவ் கேர்ள் பாப்பா....எவ்ளோ சீக்கிரம் ரெஸ்க்யூ பண்ணா தேரியுமா...."

"அந்த ஆண்டவன் தான் அந்த பொண்ணா வந்திற்கார் தாதா...."

"உண்மை பாப்பா...அட அவசரத்தில் அந்த பொண்ணு பேரக் கூட கேட்களையே மா..."

"அச்சோ... நானும் அத யோசிக்களை தாதா..." என்று கூறி இருவரும் வெசனப்பட்டனர்
 




Manjula Saravanan

SM Exclusive
Joined
Jul 23, 2018
Messages
696
Reaction score
1,664
Location
TAMILNADU
" தாதா....."
என்ற குரல் கேட்டு இருவரும் திரும்பி பார்த்தனர் அவர்களை நோக்கி வேக நடையோடு வந்திருந்தான் மாறன்...வந்த வேகத்தில் மூர்த்தியின் தோல்களை பற்றி எழுப்பிக் கொண்டே

"ஆர் யூ ஓகே...வாங்க தாதா...லேட் பண்ணாம ஹாஸ்பிடல் போய்டுலாம்...."

"மை....பா.. ய்.."

"கயல் நான் யோகிக்கு கால்ல சொல்லிட்டேன்...நீ ...அம்மா எல்லாரும் அவர் கூட போய்டுங்க..நான் தாதாவை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன்...யோகி உங்கள வீட்ல விட்டுட்டு நேரா ஹாஸ்பிடல் வந்திடுவார்..."
என்று படப்படவென ஒப்பித்துக்கொண்டே மூர்த்தியை அழைத்துச் சென்றான்.....நிதானமாக வந்த மூர்த்தியைப் பார்த்து

"தாதா...உங்களால நடக்க முடியுதா...நான் ஆம்புலன்ஸ் கூப்டட்டுமா..."

"மை பாய்....ரிலாக்ஸ்... நான் நல்லாருக்கேன்...நம்ம பொறுமையாவே ஹாஸ்பிடல் போய்கிலாம்..."

"என்ன சொல்றிங்க தாதா"

"ஆமாடா....எனக்கு உண்மைலேயே இப்போ ரொம்பவே பரவால்ல...ஆல் பிகாஸ் ஆப் தட் ஸ்வீட் கேர்ள்...."
சொல்லும்போதே அவர் கண்களில் அன்பு ததும்பியது...

"தாதா சொல்றது கரெக்ட் அண்ணா....அந்த பொண்ணு தான் தாதாக்கு ஹெல்ப் பண்ணா...என்ன உங்களுக்கு எல்லாம் கால் பண்ண சொல்லிட்டு அவ தான் பாத்துக்கிட்டா..."

"ஓஹ்..அவங்க எங்க..."

"நீங்க வந்தப்போ தான் அந்த பொண்ணு போனா...."

"அவங்க டீடெயில்ஸ் ஏதாச்சும் இருக்கா.."

"இல்ல நா டென்ஷன்ல ஸ்ட்ரைக்கே ஆகல..."

"ஹ்ம்ம்...தட்ஸ் ஓகே...ஏதாச்சும் தேங்க்ஸ் டோக்கன் உன்ன குடுக்க சொல்லலாம்னு கேட்டேன்... லீவ் இட்..."

"அப்பா....இப்போ எப்படிப்பா இருக்கு...மாறன் விசியத்தை சொல்லிட்டு உங்கள கூட்டிட்டு ஹாஸ்பிடல் போரேன்னு வேகமா கீழ வந்துட்டான்...நான் லிப்ட்ல தான் வந்தேன்..." என்று பதறிக்கொண்டே அங்கு வந்திருந்தார் அகிலா அவர் பின்னால் அவர் நாத்தனார் குடும்பம்...

"எனக்கு ஒன்னும் இல்ல அகிலா... ஐயம் ஆல்ரைட்..."

"அதை ஹாஸ்பிடல் முடிவு பண்ணட்டும்பா....ஏன் இன்னும் இங்கேயே இருக்கீங்க கிளம்புங்க..."

"மா....நான் சொன்ன மாதிரி வந்திடுங்க..." என்று கூறி விட்டு அவரை அழைத்துக் கொண்டு மருத்துவமனை விரைந்தான் மாறன்...வலி முழுக்க அவர் கையில் ஏதோ வைத்திருப்பதாகத் தெரிய எனவென்று வினவினான்...

"தாதா... கைல என்ன"

"அந்த பொண்ணு எனக்கு குடுத்த சாக்லேட்....ஹோப்பிட்டல் போரத்துக்குள்ள மீண்டும் மயக்கம் இருக்க மாதிரி இருந்தா இந்த சாக்லேட்டை வாயில் போட்டுக்க சொல்லுச்சு...."

பதில் பேசாமல் அவரையும் அந்த டைரிமில்கையும் பார்த்து விட்டு சாலையில் கவனம் செலுத்தினான்....
மனதில் 'அந்த பொண்ணு யாரு???' இன்று மட்டும் ஏன் இத்தனை மர்ம முகங்கள் காலையில் தொடங்கி இப்பொழுது வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறதே.....

'ஹ்ம்ம் பார்ப்போம்...'
என்று நினைத்துக் காரை மருத்துவமனை வளாகத்தினுள் நுழைந்தான்....

"அம்மாடி மீனாட்சி வந்துட்டயாடி....உன்ன எல்லாப்பக்கமும் தேடி தேடி கடைசில அங்கிள்கே சொல்ல கால் போட்ருப்போம்.."என்று கூறினால் அஞ்சலி....

"நல்லவேளை செஞ்ச எலி....இல்லனா என்ன ஆகும்"

"எங்க போன...மீனாட்சி..."

"உங்க கூடத்தான் வந்தேன்...திடீர்னு அங்க ஒருத்தர் மயக்கம் போட்டுட்டார்....நான் அவர உட்கார வைச்சிட்டு உங்கள திரும்பி பாக்ரேன் உங்க யாரையும் காணோம்"

"அந்த ரஷ்ல எங்கனால உன்னை கண்டுபுடிக்க முடில...இல்லனா உன் கூடவே வந்திருப்போம்...." என்று பதிலுரைத்தான் ரகு உண்மையான வருத்தத்தோடு...

"விடு ரகு பரவால்ல...."

"ஹ்ம்ம்... வாங்க சீக்கிரம்.... நடைய கட்டுவோம்...நமக்கான டைம் முடிஞ்சது" என்றாள் அபி

" பொருடி அம்மா,அப்பா கிளம்பரப்போ நம்மலும் போவோம்"என்றால் மீனாட்சி

"எம்மா....மீனாம்மா அவங்க கிளம்பி இருபது நிமிஷம் ஆச்சு...உன்ன தேடிட்டு இருந்தப்பவே போன் பண்ணி கிளம்பரதா சொல்லிட்டாங்க...."

"ஆமா மீனாட்சி...நாங்க தான் ...எக்ஸிபிஷன் உள்ள கூடத்துல மாடிக்கிட்டோம்னு பொய் சொல்லி... அவங்கள முதல்ல கிளம்ப சொன்னோம்..."

"தெய்வமே....உங்க காலலாம் காட்டுங்க....பொய் சொல்லி இந்த புள்ளைய காத்ததுக்கு...."

"ஹ்ம்ம்...ஹ்ம்ம்....சீக்கிரம் விழு எல்லாரும் கால காட்டுங்க பா.."என்றான் ரகு படு சீரியஸ்சாக...

"டேய் ரகு... என்ன கொஞ்ச நேரம் நல்லவளா இருக்க விடமாடியே..."

"தெரியுதில்ல அப்ரோம் எதுக்கு அந்த சீன்...பேசாம வாங்க எல்லாரும் ஊரப்பாத்து போவோம்..."

"இது ஒரு நல்ல...முடிவு" என்றாள் அஞ்சலி அதன் பின் அறுவரும் அவினாஷிநோக்கி பயணப்பட்டனர்....ஏறும்போதே மீனாட்சிக்கு காரை தர முடியாதென்று உறுதியாக கூறிவிட்டான்...

அவளுக்கும் சற்று அமைதி தேவை பட்டது...பின் சீட்டில் கதவையொட்டி அமர்ந்து கொண்டாள்
காரில் செல்லும் வலி முழுக்க அன்றைய நினைவுகள் தான் மீனாட்சிக்கு... தான் சந்தித்த அந்த 'வளந்தவன்' முதல் இறுதியாய் உதவிய பெரியவர் வரை....'எல்லாத்துக்கும் காரணம் இருக்கும்னு சொல்வாங்களே அப்போ....இந்த உணர்வுக்கும் ஏதாச்சும் சம்மந்தம் இறுக்கோ....' யோசித்தவண்ணம் பயணமானாள்....ஆனால் அதற்கு விடை தான் வெகு தூரத்தில் இல்லையே....இதை யார் அவளிடம் சொல்வது....

விரைவில் மீண்டும் மலர்வோம்....



 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top