Thuli Thee Neeyaavaai - Teaser

#1
“சரி பவி, இன்னைக்கு நான் ட்யூட்டில ஜாய்ன் செய்தாகணும், கிளம்புறேன்… மதியம் வர்றப்ப லஞ்ச் வாங்கிட்டு வந்துடுவேன், இன்னும் ஒன் ஆர் டு டேஸ்குள்ள சர்வென்ட் மெய்ட்க்கு ஏற்பாடு செய்துடலாம்” என்றபடி கிளம்பியவன்,

“கதவை பூட்டிக்கோ” என்ற தனது அடுத்த வார்த்தைகளுக்கு அப்படி ஒரு பின் விளைவை எதிர்பார்க்கவே இல்லை.

அதுவரைக்கும் அவன் சொல்வது காதிலேயே விழவில்லை என்பது போல் சமயலறைக்குள் போய் குப்பை தொட்டியில் காகிதத்தை போடும் வேலையை செய்து கொண்டிருந்தவள், அந்த நொடியே விறு விறுவென தன் அறைக்குள் போய்,

இவன் என்ன என ஊகித்து முடிக்கும் முன், கன கச்சிதமாய் அத்தனை லயமாய் கட்டிய ஒரு நீல நிற புடவையில் வெளியே வந்திருந்தாள்.

படு வேகமும் பாய்ண்ட் பெர்ஃபெக்ஷனும் எப்போதுமே பவியின் அடையாளம். இவன் வகையில் காணாமல் போயிருந்த அதை மீண்டுமாக இந்த நொடியில் உணர்ந்தவன், அத்தனை சூழலிலும் சின்னதாய் மனதுக்குள் அவளை ரம்யபட்டுக் கொள்ள,

அவளோ மேஜையிலிருந்த வீட்டு சாவியை எடுத்து கட கடவென கதவை நோக்கிச் சென்றாள்.

அதாவது இவன் சொன்ன கதவ பூட்டிக்கோவை, ‘பத்ரமா வீட்ல இரு’ என அர்த்தத்தில் எடுத்து அதற்கு நேர் எதிரா வீட்டை விட்டு வெளியே கிளம்பிக் கொண்டிருக்கிறாள் அவள் என அப்போதுதான் புரிகிறது அவனுக்கு.

“பவி ப்ளீஸ் பவி” சற்று அழுத்தமாக சொல்லியபடி அவளுக்கு குறுக்காக இவன் செல்ல,

அவன் என்ன சொல்ல வந்தானோ… அதற்குள் இவர்கள் வீட்டு கேட்டை யாரோ திறக்கும் சத்தம். மெல்லியதாய்தான் எனினும் துல்லியமாய் காதில் விழுகிறது அவனுக்கு.

இப்போது பவிக்கும் கேட்கும் வண்ணம் இவர்களது வீட்டு கதவிலேயே கேட்கிறது சாவியின் சத்தம். வீடு உள்பக்கமாய் இவர்களால் பூட்டப் பட்டு இருக்க… வீட்டின் இரண்டு சாவியுமே இவர்களிடமே இருக்க… யார் அது இப்படி பட்டப் பகலில் வந்து கதவை திறக்க முயல்வது?

இதற்குள் பவியின் கையிலிருந்த சாவியை வார்த்தையின்றி கேட்டிருந்தான் அவன். கதவின் மேல் சென்றிருந்த கவனத்தில் மறுப்பின்றி கொடுத்திருந்தாள் அவளும்.

நேராக சென்று கதவை திறந்தான் அவன்.

சாவியும் கையுமாக அதிர்ந்து போய் அங்கே நின்று கொண்டிருந்தாள் அந்தப் பெண். பதினேழு பதினெட்டு வயது இருக்குமாயிருக்கும்.
 
#2
151662304075497060.png
 

New comments

Latest Episodes

Top