• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thulirvidum Nesamadi! - 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
கார்த்திகை தீபத்தின் அன்று உங்களை எல்லாம் காண புது கதையின் முதல் அத்தியாயத்துடன் வந்திருக்கிறேன்.. இதுவரை எனக்கு கொடுத்த அதே ஆதரவை தருமாறு கேட்டுகொள்கிறேன் பிரண்ட்ஸ்.. உங்களின் லைக்ஸ், கமெண்ட்ஸ், அண்ட் ஹார்ட்ஸ் எல்லாவற்றையும் போடுங்கப்பா.. உங்களின் கருத்துகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

அன்புடன்
சந்தியா ஸ்ரீ


துளிர்விடும் நேசமடி!

அத்தியாயம் – 1

நீ கருவில் இருக்கும் பொழுதே

துளிர்விட தொடங்கிவிட்டதடி

உன்மீதான எனது நேசம்...!

இந்த நேசத்தை நீ அறிவாயோ

எனது துளிர்நிலவே...!

அத்தாணி பவானி ஆற்றங்கரையில் அமைத்திருக்கும் அழகிய எழில் வளம்கொண்ட சின்ன கிராமம். பச்சை பசையேல் என்று காணப்படும் வயல்வெளிகள் இன்றும் உயிர்ப்புடன் இருக்க பவானி ஆறுதான் ஆதாரம். பார்க்கும் இடங்கள் எங்கிலும் கரும்பு தோட்டமும், மஞ்சகிழங்கு காடும், ஆற்றங்கரையில் ஓரம் காலுடன் நிற்கும் கொக்கும், நாரையும் அந்த ஊரின் பசுமையைச் சொல்லாமல் சொல்லும் எழில் வனப்பு மிகுந்த கிராமம்.

காலைநேரம் கிழக்கே சூரியன் உதிக்க அந்த சூரியனின் ஒளிபட்டு பளபளக்கும் பச்சை நிறத்தில் புல்வெளிகள்..! அதுவரை பனியோடு உறவாடிய வண்ணம் இருந்த வயல்வெளிகள் பனிக்கு விடைகொடுத்து அனுப்பியது.. பார்க்கும் எந்த இடமும் பச்சை வயலும், அதற்கு காவலுக்கு நின்றது போலவே போலவே வளர்ந்து நிற்கும் தென்னை மரங்களும், கரும்புத்தோட்டமும், மஞ்சள்கிழங்கு காடும் என்று கண்ணுக்கு எட்டும் தூரம் எல்லாம் பசுமையின் வனப்பு நிறைந்து நின்றது..

“அத்தை.. அத்தை..” என்று அழைத்தபடியே மாடியில் இருந்து வேகமாக இறங்கினான் ஏழு வயதை உடைய மகிழன்.. அவனின் வேகம் கண்டவர், “டேய் மகிழ் மெதுவா போடா.. கீழே எங்கையாவது விழுந்துவிட போற..” என்று அவனை பின் தொடர்ந்த வண்ணம் கூறினார்.. அந்த வீட்டின் மருமகள் ஜெயசக்தி மகிழனின் அம்மா..

அவரின் குரலை எல்லாம் காதில் வாங்காத மகிழன் படிகளில் இருந்து வேகமாக இறங்கி நேராக சமையலறையின் உள்ளே சென்று, “அத்தை..” என்று அழைத்ததும் அவனை திரும்பிப் பார்த்தார் அந்த வீட்டில் வேலை செய்யும் பொன்னுதாய்..

அவனின் முகம் பார்த்ததும், “என்ன செல்லம் இங்கே வரைக்கும் வந்திருக்க..” என்று கேட்டவர் அவனின் முகத்தை பாசத்தோடு வருடினார்.. அவரின் முகத்தை தலையைச் சாய்த்து பார்த்தவன், “அத்தை அம்மா சொன்னாங்க.. உங்க வயிற்றில் பாப்பா இருக்குதாம்.. உண்மையா அத்தை..? அவள நான் பார்க்க முடியுமா..?” என்று ஆர்வமாகக் கேட்டான்..

அவர் கருவுற்ற நாளில் இருந்து அவன் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்வதே அவரின் வேலையாகி போனது.. தினமும் அவரிடம் அவன் எப்பொழுதும் கேட்கும் கேள்விதான்.. அவனின் கேள்விக்கு எல்லாம் மற்றவர்களால் பதில் சொல்லவே முடியாது.. சின்னப்பிள்ளைகளிடம் ஒரு விஷயம் சொல்லிவிட்டால் அதன்பிறகு அவர்களை சமாளிப்பது பெரும்பாடுதான்.. இப்பொழுது அப்படிதான் அவனிடம் மாட்டிகொண்டார் பொன்னுத்தாய்..

அவனின் முகம் பார்த்து சிரித்த பொன்னுத்தாய், “இங்க உள்ள இருக்கிற.. நீ இப்போ அவளை தொட்டுதானே பார்க்க முடியும்..” என்று அவரின் பெரியவயிற்றை காட்டியவரைப் பார்த்தவண்ணம் சமையலறைக்கு வந்த ஜெயசக்திக்கு சிரிப்புதான் வந்தது..

பொன்னுதாயின் வயிற்றில் கைவைத்து மெல்ல வருடியவனின் ஆர்வத்தைப் பார்த்த ஜெயா, “இவனிடம் ஒரு விஷயத்த சொல்லிட்டு நான் படும்பாடு இருக்குதே..” என்று பெருமூச்சு விட்டவரைப் பார்த்து சிரித்தார் பொன்னுத்தாய்..

அவரின் முகத்தில் புன்னகையைப் பார்த்த ஜெயசக்தி, “என்ன பொன்னுத்தாயி சிரிக்கிற..?” என்று கேட்டதும், “ஒன்றும் இல்லைங்க..” என்று கூறியவர் மகிழனின் முகம் பார்த்தார்..

அவனோ அவரின் பெரிய வயிற்றைத் தொட்டுப்பார்த்து, “அத்தை இவ வளர்ந்துட்டே இருக்கா.. அம்மா சொல்லிச்சு இவ வானத்தில் இருக்கும் நிலா போல இருப்பா என்று.. பாப்பாவுக்கு நாம துளிர்நிலா என்று பெரு வைக்கலாமா..?” என்று நிமிடத்தில் ஆயிரம் கேள்வி கேட்டவனுக்கு அவர் மட்டும் எப்படி பதில் சொல்ல முடியும்..?

“அதுக்கு என்னடா பேராண்டி வெச்சிட்டாப் போச்சு.. உன்னோட ஆசைக்கு யாராவது தடை சொல்ல முடியுமா..?” என்று கேட்டபடியே தன்னுடைய அறையில் இருந்து வெளியே வந்தார் பானுமதியம்மாள்.. அந்த வீட்டின் பெரிய பண்ணையார் சிவராமனின் மனைவி..

அவரைப் பார்த்ததும் மருமகள் எழுந்து நிற்க, “அட என்ன ஜெயா நீ உட்காரும்மா..” என்று மருமகளைப் பார்த்து கூறியவர் பேரனின் அருகில் சென்று, “என்ன மகிழா இப்போ உனக்கு சந்தோஷமா..?” என்று கேட்டதும் அவனின் முகத்தில் பிரகாசமாக அவரின் கன்னத்தில் முத்தமிட்டான்..

அவனின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியைப் பார்த்த ஜெயசக்தி, “அத்தை நீங்க மட்டும்தான் இவனை சூப்பரா சமாளிக்கிறீங்க..” என்று சொல்லவும் பேரனின் முகத்தை வஞ்சனை இல்லாமல் வருடினார்.. வாசலில் யாரோ வரும் ஆரவாரம் கேட்டு திரும்பிப்பார்த்தார்..

வீட்டின் உள்ளே வேகமாக நுழைந்த சுகுமாறன் பார்த்த பானுமா, “என்ன ராஜா இவ்வளவு வேகமாக வர..” என்று கேட்டதும் அவரின் கேள்விக்கு பதில் சொல்லாதவர், “அப்பா எங்க இருக்கீங்க..?” என்று கேட்டதும் அறையைவிட்டு வெளியே வந்தார் சிவராமன்..

அவரைப் பார்த்தவன், “அப்பா நான் சென்னையில் தொடங்கிய கம்பெனி இப்போ நல்ல லாபம் வருதுப்பா.. நான் இங்கேயே இருந்தால் அதோட வளர்ச்சியை பெருசு பண்ண முடியாது.. அதனால் நான் அங்கேயே போறேன்..” என்று சொல்ல அவனின் முகத்தை அதிர்ச்சியோடு பார்த்தனர் பெரியவர்கள்..

சுகுமாறன் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட ஒரே காரணத்திற்காக அவன் விரும்பிய படிப்பை எல்லாம் படிக்க வைத்தவர்கள் அவனை போலவே நன்றாக படித்த ஜெயசக்தியை அவருக்கு திருமணமும் செய்து வைத்தனர்.. திருமணம் முடிந்தது சென்னை கிளம்பிச் சென்றவர் அடுத்து ஊருக்கு வந்தது ஐந்து வருடம் கழித்துதான்..

அவர் வரும் பொழுதே ஐந்து வயது மகிழனுடன் வந்து இறங்கியதைப் பார்த்த பெரியவர்களின் மனம் மகிழ்ந்து போக அவன் ஒருவனே சிவராமன் – பானுமாவிற்கு உலகம் என்று ஆகிபோனான்.. அவனோட ஓவ்வொரு விருப்பமும் தன்னுடைய விருப்பம் என்றே வாழ்ந்தார்கள் அந்த வயதான தம்பதிகள்.. இங்கிருந்தபடியே சென்னையில் தொடங்கிய தொழிலை அடிக்கடி சென்று கவனித்து வந்தார்..

ஜெயசக்திக்கு அத்தை – மாமாவின் பாசமே பெரிதாக தெரிய அவரிகளிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு விலகி நின்று ரசிப்பதோடு சரி.. அவனும் அவர்களுடன் ஒட்டிக்கொள்ள நாட்கள் விரைந்து சென்றது.. இரண்டு நொடி போல இரண்டு வருடம் ஓடி மறந்தது.. இப்பொழுது ஏழு வயதில் பேரனுடன் ஒரே குடும்பமாக சந்தோஷமாக இருக்கும் நேரத்தில் அவர் சொன்னது அவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது..

அவர் சொன்னது கேட்ட பானுமா, “என்ன ராஜா சொல்ற..? நீ எனக்கு ஒரே பையன்.. உன்னையும், இதோ இந்த பேரனையும் பிரிந்து நாங்க மட்டும் இங்கே எப்படிடா இருக்க முடியும்..?” என்று கேட்டார்.. ஜெயசக்தி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.. சிவராமன் யோசனையோடு நின்றிருந்தார்..

சுகுமாறனோ, “அம்மா அப்போ நீங்களும் எங்களோடு கிளம்பி வந்திருங்க..” என்று கொஞ்சமும் யோசிக்காமல் வேகமாக சொல்ல, “இல்ல பானு அவன் போகட்டும் விடு.. அவனுக்கு பிடித்த படிப்பு என்று படிக்க வெச்சிட்டு இப்போ அவனை தடை சொல்வது தவறு அவன் போகட்டும் விடு..” என்று கூறியவர், “ராஜா மகிழை மட்டும் இங்கே விட்டுவிட்டு போப்பா..” என்று கேட்டார் சிவராமன்..

அவரின் முகத்தைப் பார்த்த சுகுமாறன், “இல்லப்பா அவனை இங்க விட்டுவிட்டு நாங்க மட்டும் எப்படிப்பா.. நான் வேண்டுமென்றால் வருடத்தில் ஒரு மாதம் மட்டும் இங்க வந்து தங்கிவிட்டு போகிறேனே..” என்று கூறினார்.. அதற்குமேல் பெரியவர்களால் என்ன பேச முடியும்.. ஜெயாவும் எதுவும் பேசாமல் இருக்க அவரிடம் கோபத்தை காட்ட மனம் அமைதியாக நின்றனர் பெரியவர்கள்..

தன்னுடைய மருமகளின் அருகில் வந்த பானுமா, “ஜெயா அங்க போனதும் அத்தையை மறக்காமல் இவனை கொண்டு வந்து என்னோட கண்ணில் காட்டனும்..” என்று கூறியவர் பேரனை கட்டியணைத்து கொண்டார்.. அங்கே நடக்கும் எல்லாவற்றையும் ஒரு பார்வையாளராக நின்று பார்த்தார் பொன்னுத்தாய்..

இரண்டு நாளுக்குள் சுகுமாறன், ஜெயசக்தி, மகிழன் மூவரும் சென்னை செல்ல தயாராகிவிட பெரியவர்கள் அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்த்தனர்..சுகுமாறனின் மீது உயிரையே வைத்து வளர்த்தியவர்களால் அவனின் ஆசைக்கு மறுப்பு சொல்ல முடியாமல் அமைதியாக இருந்துவிட்டனர்..

அவர்கள் ஊருக்கு செல்லும் நாளும் வந்துவிட சுகுமாறனை அனுப்ப மனசே இல்லாமல் வழியனுப்ப வாசல்வரை வந்தவர்களைப் பார்த்த மகிழனோ, “பாட்டி நீங்க கவலைபடாம இருங்க.. நான் கொஞ்ச நாளில் வந்துவிடுவேன்..” என்று புன்னகை மாறாமல் கூறினான்..

அவனின் முகத்தைப் பார்த்தவர், “மகிழா பாட்டி தாத்தாவைப் பார்க்க வரணும் சரியா..?” என்று கூறிய பானுமா அவனின் நெற்றியில் முத்தமிட தான் அழுதால் குழந்தைகள் மனம் கஷ்டப்படும் என்று கண்ணீரை கட்டுபடுத்திய வண்ணம் நின்றிருந்தார்.. சிவராமன் மனம் கலங்கினாலும் அதை வெளியே கட்டாமல் அமைதியாக இருந்தார்..
 




Last edited:

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அவர்கள் காரில் ஏறும் சமயம் பொன்னுதாயின் நினைவு வந்த மகிழன் வேகமாக வீட்டிற்குள் ஓடிச்சென்று, “அத்தை நான் போயிட்டு வரேன்.. பாட்டி தாத்தாவைப் பார்த்துகோங்க.. பாப்பாவுக்கு நான் சொன்ன பெயரு வைங்க..” என்று பாசத்தோடு சொல்ல அவனை கட்டியணைத்து அவனின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்ட பொன்னுத்தாயி, “சரி மகிழா..” என்று கூறினார்..

பொன்னுத்தாய் அந்த வீட்டில் வேலை செய்பவர் என்றாலும் அவளை தங்களின் வீட்டில் ஒருத்தியாக அவர்கள் நினைத்ததே மகிழன் அவளின் மீது பாசம் வைத்தது.. அந்த பாசத்தோடு வந்து சொல்லிவிட்டு சென்றவனை நினைத்து அவரின் கண்களும் கலங்கியது..

அவரிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தவன் காரின் பின்னோடு ஏறிவிட கார் கிளம்பியதும் வாசலில் அமர்ந்து அழுதுவிட்டார் பானுமா.. அவரின் அருகில் அமர்ந்த சிவராமன் அவரைத் தேற்றி வீட்டின் உள்ளே அழைத்து சென்றார்..

அவர்கள் சென்ற ஒரு வாரமும் பானுமா பித்துபிடித்து போலவே இருந்தார்.. அவரின் முகத்தைப் பார்த்த பொன்னுத்தாய், “அம்மா என்னம்மா இது நீங்களே இப்படி இருந்தால் அய்யாவை யார் சமாதானம் பண்றது..” என்று கேட்டார்.. அப்பொழுது அவரை நிமிர்ந்து பார்த்த பானுமா கண்கள் இரண்டும் கலங்கியது..

பானுமாவின் கண்கள் கலங்குவதைப் பார்த்து, “என்ன பானு நீயே இப்படி அழுதுட்டு இருக்கிற..?” என்று அவரின் அருகில் வந்து அமர்ந்து அவரை தோளோடு சாய்த்துக்கொள்ள, “என்னங்க எனக்கு மகிழனின் நினைவாகவே இருக்குங்க..” என்று கூறினார்.. மெல்ல மெல்ல மனைவியைத் தேற்றினார்..

அவர்கள் சென்ற ஒரு வாரத்தில் பொன்னுத்தாய்க்கு பிரசவவலி எடுத்துவிட டாக்டரை அழைத்து வந்து மருத்துவம் பார்த்தார் பானுமா.. ரோஜா பூவின் வண்ணத்தில் பெண்குழந்தை பிறக்க அதை கையில் வாங்கும் பொழுதே அவரின் கண்களில் ஆனந்தத்தில் நனைத்தது.. அந்த சின்ன தளிரை கையில் வாங்கியவர் அவளை வருடி வருடி பார்த்தார்..

‘தனக்கு ஒரு பெண் குழந்தை இல்லையே..’ என்ற ஏக்கம் எப்பொழுதுமே பானுமாவிற்கு இருக்கும்.. இப்பொழுது பூந்தளிர் போல இருந்த பெண்குழந்தையை கையில் ஏந்தியதும் அவரின் மனம் அவளை தன்னுடைய மகளாகவே நினைத்துவிட கணவரை நிமிர்ந்து பார்க்க அவரோ, “பானு முதலில் மகளை என்னிடம் கொடு.. ஐயோ சின்ன ரோஜாபூ போலவே இருக்கா..” என்று குதூகலமாக கூறினார்..

அவரின் முகத்தில் சந்தோசத்தைப் பார்த்த பானுமா, “என்னங்க பாப்பாவை நாம் வளர்க்கலாமா..?” என்று ஏக்கமாக கேட்க பானுவின் கையில் இருந்து குழந்தையை வாங்கிய சிவராமன், “நம்ம குழந்தைய நம்ம வளர்க்காம வேற யார் வளர்ப்பாங்க..” என்று கேட்டவர் அவளின் நெற்றில் அழுந்த முத்தமிட்டார்..

இருவரின் பாசத்தையும் பார்த்த பொன்னுத்தாய் மகளை அவர்களின் கையில் மனதார ஒப்படைக்க பானுமாவின் மனம் நெகிழ்ந்தது.. வருடங்கள் பல கடந்தாலும் அவர்களின் பெண் குழந்தை ஏக்கத்தை தீர்த்து என்னவோ பொன்னுதாயின் குழந்தைதான்..

தம்பதியினர் இருவரும் பொன்னுத்தாயின் முகம் பார்த்து, “எங்களோட ஏக்கத்தை புரிஞ்சிக்கிட்ட.. எனக்கு பெண் குழந்தை என்றால் ரொம்ப பிடிக்கும்.. அதுக்கு எல்லா அலங்காரமும் செய்து கொலுசு போட்டு பார்க்க ரொம்ப பிடிக்கும்.. எனக்கு இரண்டுமே மகனாக போய்விட்டது..” என்று சொன்னவர் கண்கள் இரண்டும் சந்தோஷத்தில் கலங்க மனைவியை மார்போடு அணைத்து கொண்டார் சிவராமன்..

மகிழன் சென்ற கவலையை மறக்கடிக்க செய்துவிட்டாள் அந்த சின்ன தேவதை.. கணவன் – மனைவி இருவரும் அவளை கீழே விடாமல் கையிலேயே வைத்திருப்பதைப் பார்த்து சிரித்துவிடுவார் பொன்னுத்தாய்.. அவர்கள் பணத்திற்கும் ஊரில் உள்ள செல்வாக்கிற்கும் தன்னுடைய மகளை அவர்கள் தாங்குவதை நினைத்து மனதிற்குள் சந்தோசப்படுவார் பொன்னுத்தாய்..!

அத்தாணியைத் தாண்டிய கார் அடுத்து இருக்கும் பாரியூரின் உள்ளே நுழைந்தது.. அப்பொழுது தன்னுடைய அப்பா – அம்மா இருவரையும் பார்த்தவன், “அம்மா அப்பாவைப் பார்க்க ஊருக்கு போகிறோமா..?” என்று ஜெயசக்தியைக் கேட்டான்.. அவனின் சாமர்த்தியம் கண்டு புன்னகைத்த ஜெயா, “ஆமா கண்ணா..” என்று கூறினார்..

அந்த காலத்தில் கட்டப்பட்ட வீடு. வாசலில் பெரிய திண்ணைகளும் அதை தாங்கி நிற்கும் தேக்கு மரத்தின் தூண்களும் வீட்டின் உள்ளே நுழைந்ததும் வலதுபுறம் இருக்கும் சமையல் அறையும் அதற்கு அதன் எதிரே அந்த காலத்தின் பூஜை அறையும், இருக்கும் இரண்டு விருந்தினர் அறையும் வீட்டின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தாமரை குளமும் பார்க்க பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும்.. அதுவும் மழை காலங்களில் வீட்டின் ஓட்டில் விழுகும் நீர் நேராக அந்த குளத்திற்கு விழுகும் பொழுது மனம் நிறைந்து போகும்..

வீட்டின் முன் வாசலுக்கு நேர் எதிரே பின் வாசலுக்கு செல்லும் வழி அதற்கு அருகில் அமைக்க பட்டிருந்த இரும்பு ஊஞ்சல் பின் வாசல் வழியாக சென்றால் இடதுபுறம் மாடிக்கு செல்லும் வழியும் மாடியில் மூன்று அறைகளும் இருக்கிறது.. அதற்கு மேல் சென்றால் அந்த ஊரின் எழில் அழகு மொத்தமும் தெரியும் வண்ணம் மொட்டை மாடி..

வீட்டின் முன்னே கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டதும் வாசலுக்கு வந்து பார்த்தார் ஜெயலட்சுமி.. காரில் இருந்து முதலில் இறங்கிய மகிழன், “அம்மா..” என்று கத்தியபடி மரகதத்தை வந்து கட்டிக்கொண்டான்..

அவனின் முகம் பார்த்த ஜெயலட்சுமி, “மகிழா அம்மாகிட்ட வந்திட்டியா..?” என்று கேட்டு அவனின் கன்னத்தில் ஆயிரம் முத்தமிட அதற்கு எல்லாம் சேர்த்து வைத்து அம்மாவிற்கு முத்தமிட்டான் மகிழன்.. இருவரின் பாசத்தையும் கண்ட சுகுமாறன், “அண்ணி இப்பொழுது உங்களுக்கு சந்தோஷமா..?” என்று கேட்டார்..

அவரின் முகத்தைப் பார்த்த ஜெயலட்சுமி, “என்னோட சந்தோஷத்தை சொல்ல வார்த்தையே இல்ல.. என்னோட கணவர் அவங்க விருப்பம் இல்லாம என்னை கல்யாணம் பண்ணியதுதான் அவங்க அவரை ஒதிக்கி வைக்க காரணம்.. என்னோட மகனாவது எங்க அம்மாவின் கையில் வளரனும் என்று ரொம்பவே ஆசைப்பட்டார்..” என்று கூறியவர், “நான் ஒருத்தி வாசலில் நிற்க வெச்சு பேசறேன் பாரு..” இருவரையும் வீட்டின் உள்ளே அழைத்து சென்றார்..

அப்பொழுதுதான் வேலை முடித்துவிட்டு வந்த சிவசங்கரன் வாசலில் காரைப் பார்த்ததும், “யார் வந்திருக்காங்க..” என்ற யோசனையுடன் வீட்டின் உள்ளே சென்றவர் தம்பியின் முகம் பார்த்தும், “சுகுமாறா நீ எப்போடா வந்த..?” என்று பாசத்தோடு கேட்டார்.. பிறகு ஜெயசக்தியைப் பார்த்து, “நீ எப்படிம்மா இருக்க..?” என்று கேட்டார்..

“நான் நல்ல இருக்கேன் அண்ணா..” என்று அண்ணனை ஆரத்தழுவிய சுகுமாறன், “அண்ணா மகிழனை எப்படி அம்மா, அப்பாவிடம் அழைத்து சென்றேனோ அதே மாதிரி கொண்டு வந்து உங்களிடம் ஒப்படைச்சிட்டேன்..” என்று சொல்லவும் மகனைத் திரும்பிப்பார்க்க அவனோ ஜெயலட்சுமியின் முந்தானையைப் பிடித்து சுற்றிக்கொண்டிருந்தான்..

இருவரையும் பார்த்தவருக்கு கண்கள் கலங்க, “அம்மா – அப்பாவோட கையில் என்னோட மகனும் நல்ல வளர்ந்துவிட்டான் இல்ல மாறா..” என்று கேட்டவருக்கு தன்னுடைய ஏழு வருடத்தின் கனவுகளை தன்னுடைய தம்பி நிறைவேற்றிய நிறைவு கிடைக்க காபியோடு வந்த ஜெயலட்சுமி, “என்னோட மகனை என்னிடம் ஒப்படைச்சிட்ட சக்தி.. உனக்கு பொழுது எப்படிமா போகும்..?” என்று கேட்டார்..

அவரின் கேள்வியில் முகம் சிவந்த ஜெயசக்தி, “அக்கா நான் மாசமாக இருக்கேன் அக்கா..” என்று சொல்ல சிவசங்கரன், ஜெயலட்சுமி இருவருக்கும் சந்தோசமாக இருந்தது.. அவர்களின் அருகில் வந்த மகிழன், “அம்மா உங்க வயிற்றில் தம்பி இருக்கானா..?” என்று ஆர்வத்துடன் கேட்ட மகிழனை கட்டியணைத்து முத்தமிட்ட ஜெயசக்தி, “ஆமா மகிழா.. உன்னோட தம்பிக்கு என்ன நேம் வைக்கலாம்..?”என்று கேட்டதும், “என்னோட பெரு மகிழன்.. அப்போ தம்பிக்கு மிதிலன் என்று வைக்கலாம்..” என்று கூறினான்..

அவனின் சொல்லிய பெயர் நால்வருக்கும் பிடித்துவிட, “தம்பிக்கு நீ சொன்ன பெயரே வச்சிடலாம் மகிழா..” என்று சொல்ல, “அம்மா தம்பி பொறந்ததும் என்னிடம் சொல்லணும்..” என்று சொல்ல, “சரிடா செல்லம்..” என்று சொல்லிய சுகுமாறனும், ஜெயசக்தியும் அன்று அங்கே தங்கிவிட்டு மறுநாள் காலையில் சென்னை கிளம்பி சென்றனர்..

துளிர்விடும் நேசம் தொடரும்....
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
உங்களுடைய ''துளிர்விடும்
நேசமடி''-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சந்தியா ஸ்ரீ டியர்
 




Last edited:

Pradeep

அமைச்சர்
Joined
Jun 12, 2018
Messages
1,767
Reaction score
3,949
Location
Coimbatore
ஆரம்பமே அமர்க்களமாக இருக்கு. மகிழன் மிதிலன் துளிர்நிலா அருமையான பெயர்கள். ஐ நம்ம பானும்மாவும் வர்றாங்களா... சூப்பர்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top