• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thulirvidum Nesamadi! - 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 13

நான் செல்லும் திசை எங்கும்

உன்பாதம் வழியானால்

உன்னைத் தொடர்ந்து வரவே

மனம் ஏங்குகிறது பெண்ணே..!

உன் மனதின் எண்ணம் என்னவோ

சொல்லடி எனது துளிர்நிலவே..

வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்த பானுமாவின் மனம் மருமகள் சொன்ன விஷயத்திலேயே இருந்தது.. காலையில் எழுந்ததும் மருமகளுக்கு அழைத்த பானுமா, “ஜெயா எப்படிம்மா இருக்கிற..?” என்று கேட்டார்.. அவரின் பாசம் அவளின் மனதை நெகிழ வைக்க, “ரொம்ப நல்ல இருக்கேன் அத்தை.. மாமா எப்படி இருக்காங்க..?” என்று கேட்டதும், “அவரும் நல்ல இருக்காரு கண்ணு.. ஆமா சின்னவன் எங்க ஜெயா..?” என்று மிதிலனை விசாரித்தார்..

அதற்குள் அம்மாவிடம் இருந்து போனை வாங்கியவன், “பாட்டிம்மா எப்படி இருக்கீங்க..?” என்று பாசத்தோடு விசாரிக்க, “எனக்கு என்ன நான் நல்லாவே இருக்கேன்.. அண்ணனும், தம்பியும் தான் ஊருப்பக்கம் வரவே மாட்டேன்னு இருக்கீங்களே..” என்று அவரும் வருத்தமாக கூறினார்.. அவரின் குரலில் இருந்த வருத்தத்தை உணர்ந்த மிதிலன், “பாட்டிமா இதுக்கு எல்லாம் வருத்தப்பட்ட.. அப்புறம் எப்படி உடம்பு நல்ல இருக்கும்..?” என்று கேட்டவன், “பாட்டி நானும் வெளிநாட்டுக்கு படிக்க போறேன்..” என்று சொன்னதும் பானுமாவின் முகம் மாறிவிட்டது..

“என்ன ராசா சொல்ற நீ..? உன்னோட அண்ணனே இன்னும் இங்க வராமல் வெளிநாடே கெதின்னு இருக்கான்.. இதில நீயும் அங்க போனா என்ன ஆகிறது..?” என்று கேட்டவரின் கண்கள் இரண்டும் கலங்கிவ அவரின் குரலில் வருத்தம் வெளிப்படையாக தெரிவதை உணர்ந்த ஜெயா மகனை முறைத்தார்.. அவனோ, “பாட்டிம்மா இதுக்கு வருத்தப்படக்கூடாது..” என்று மெல்லிய குரலில் கூறினான்

“நான் அங்கே போனதும் அண்ணனை பார்சல் பண்ணி அனுப்பி விடுகிறேன்..” என்று சிரித்துக்கொண்டே கூறினான் மிதிலன்.. அவனின் சிரிப்பு சத்தம் கேட்டதும் பானுமாவின் துயரம் எல்லாம் மாறிவிட, “மகிழனை அனுப்பு வைப்பா.. பாட்டி அவன் மேல சரியான கோபத்தில இருக்கிறேன்னு சொல்லு..” என்று பேரனிடம் பேசிய மாமியாரை நினைத்த ஜெயாவின் மனம் தான் வலித்தது..

அவரோ, “இந்த மாமா பண்ற வேலையல.. இன்னும் எத்தனை பொய் சொல்ல வேண்டி இருக்கு.. இப்போவே கணக்குப்படி ஆயிரத்தி ஐநூறு பொய் சொல்லியாச்சு..” என்று முணுமுணுக்க, “அம்மா யாரிடம் தனியாக பேசறீங்க..?” என்று கேட்ட மிதிலனின் குறும்பு முகம் கண்ட ஜெயா, “மகனே உனக்கு இன்னைக்கு நேரம் சரியில்லடா..” என்று பூரி கட்டையை கையில் வைத்துக்கொண்டு சொன்ன அம்மாவின் முகத்தைப் பார்த்த மிதிலன், “ஹி.. ஹி..” என்று அசடு வழிய சிரித்தான்..

அவனின் முகத்தைப் பார்த்தவர், “பயம் இருக்கில்ல..” என்று கேட்டதும், ‘ம்ம்’ என்று தலையசைத்தவன் போனை எடுத்துக்கொண்டு அவனின் அறைக்குள் சென்று, “பாட்டி அண்ணா அங்கே படிப்பை முடிச்சிட்டு சீக்கிரம் வந்திருவான்..” என்று சொல்லி சமாளித்தவன் போனை வைத்தான்.. அவன் சொன்னதைக் கேட்ட பானுமாவின் மனமும் கொஞ்சம் நிம்மதியடைந்தது..

தன்னுடைய படுக்கையில் அமர்ந்த மிதிலன், “அண்ணா இன்னும் ஏன் பாட்டிக்கிட்ட உண்மையைச் சொல்லாமல் இருக்கான்.. பாட்டி பாவம் இல்ல..” என்று தனக்குதானே கேள்வி கேட்டுக்கொண்டு கோபத்தில் அண்ணனுக்கு அழைத்தான்.. அவனின் அழைப்பைப் பார்த்த மகிழனின், “மிதிலா எப்படி இருக்கிற..?” என்று விசாரித்தான்.. அவனின் விசாரிப்பு மிதிலனுக்கு கோபத்தை தர, “டேய் அண்ணா உனக்கு என்ன பைத்தியமா..? பாட்டியிடம் இன்னும் ஏண்டா உண்மையைச் சொல்லாமல் இருக்கிற..?” என்று கேட்டான்..

அவனின் கோபத்தை உணர்ந்த மகிழன், “இல்ல மிதிலா.. நான் உண்மையைச் சொல்லும் நிலையில் இல்ல..” என்று சொன்னவன் சுவற்றில் சாய்ந்தபடி தோட்டத்தை நோட்டம் விட்டான்.. ‘இவன் எஎன்ன இப்படி சொல்றான்..?’ என்று யோசித்த மிதிலனுக்கு பொறிதட்டியது.. “அண்ணா நீ வளர்மதியைக் காதலிக்கிறீயா..?” என்று மனதில் நினைத்ததைக் கேட்டே விட்டான்..

“ஆமா மிதிலா..” என்று சொன்னவனின் பார்வை தோட்டத்திற்குள் நுழைந்த வளரின் மீது இருக்க, “மிதிலா நான் அப்புறம் பேசறேன்..” என்று சொல்லிவிட்டு அவனின் அனுமதி இல்லாமல் அழைப்பைத் துண்டித்ததும், ‘இவங்களிடம் மாட்டிட்டு நான் முழிக்கிறேன்..’ என்று நினைத்தவன் எழுந்து எல்லாவற்றையும் எடுத்து வைக்க ஆரம்பித்தான்..

காலையில் தோட்டத்தில் இவன் பார்க்கும் பொழுது எல்லாம் மகிழம்பூ மரத்துக்கு தண்ணீர் விடாதவள் கிட்டத்தட்ட பத்து மணிக்கு மேல் வந்து மரத்துக்கு தண்ணீர் விடுவதை மேலிருந்த வண்ணம் பார்த்தான் மகிழன்.. ‘இவ எதுக்கு இந்த நேரத்துக்கு வந்து செடிக்கு தண்ணீர் விடறா..?’ என்ற கேள்வி அவனின் மனதில் எழுந்தது.. நேற்றே அந்த மரத்தை வெட்ட பானுமாவின் மூலம் ஏற்பாடு செய்தவனுக்கு இந்த விஷயம் மிகுந்த ஆச்சர்யத்தைக் கொடுத்தது..

அவள் மரத்துக்கு தண்ணீர் விட்டுவிட்டு திரும்பி வரவும் எப்பொழுதும் போல வேலைக்கு கிளம்பிய மகிழன் வேலைக்கு செல்ல கீழே வரவும் வீட்டின் உள்ளே நுழைந்தாள் வளர்மதி.. அவளைப் பார்த்தும் மகிழன் மனதில் ஒரு யோசனை தோன்றியது.. அவன் அந்த யோசனையுடனே அவளைப் பார்த்தபடியே கீழிறங்கி வந்தான்.. அவனைக் கவனிக்காத வளர்மதி பானுமாவின் அருகில் சென்று அமர்ந்தாள்..

அவள் வந்தது கூட தெரியாத வண்ணம் யோசனையில் இருந்த பானுமாவின் முகம் பார்த்த வளர்மதி, ‘இவங்க என்ன யோசனையில இருக்காக..?’ என்று நினைத்தபடியே அவரின் அருகில் அமர்ந்து பானுமாவின் முகத்தையே பார்த்தாள்.. கொஞ்ச நேரத்தில் எதர்ச்சியாக நிமிர்ந்து வளரின் முகம் பார்த்த பானுமா, “வாடியாத்தா என்ன ஊரு சுத்தமா இங்க வந்திருக்கிறவ..?” என்றவளை பானுமா வம்பிழுத்தார்..

‘இந்நேரம் வர ஒருத்தி பக்கத்தில குத்து கல்லாட்டம் உட்காந்திருக்கேன்.. அது தெரியல.. ஆன வம்பிழுப்பது மட்டும் சரியா பண்றாங்க இந்த பானுமா..’ என்று நினைத்தபடியே அவரைப் பார்த்து முறைத்த வளரு, “நீங்கதான் என்னை வரச்சொன்னதா இந்த பேச்சி சொன்னா..?” என்று கேட்டாள்.. அவளின் கேள்வியில் அதுவரை இருந்த சிந்தனை எல்லாம் மறந்துவிட சிரித்துவிட்டார் பானுமா..

அப்பொழுது வீட்டைவிட்டு வெளியே வந்த மகிழன், “பாட்டி..” என்று அழைக்க அவனின் குரல் கேட்டு நிமிர்ந்த பானுமா, “என்ன ராசா ஆலைக்கு கெளம்பிட்டியா..?” என்று பாசத்தோடு கேட்டார்.. அவனின் பார்வையோ வளரின் மீது இருக்க அவளோ அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல் அமர்ந்திருந்தாள்..

மகிழனோடு எப்பொழுது விளையாட்டாகப் பேசி வம்பிழுக்கும் வளர்மதிக்கு இன்று ஏனோ அவனோடு வம்பு இழுக்கும் மனம் வரவில்லை.. அவன் தன்னையே சுற்றி வருவதை தெரிந்தும் அவனைக் கண்டும் காணாமல் அவன் சொல்ல வருவது புரிந்தும் புரியாதபடி இருக்க ஆரம்பித்தாள்.. அவன் தன்னைப் பார்ப்பது உணர்ந்தும் கூட நிமிராமல் அமர்ந்திருந்தாள்..

அவளின் முகத்தை சிந்தனையோடு பார்த்த மகிழன், ‘இவ ஏன் என்னிடம் பேசாம இருக்கா..?’ என்ற கேள்வியோடு, “ஆமா பாட்டி நானும் ஆலைக்கு கிளம்பிட்டேன்..” என்று முகம் மாறாமல் கூறியவன், “பாட்டி தோட்டத்தில இருக்கிற அந்த மகிழம்பூ மரத்தை வெட்ட ஆளுங்க வருவாங்க.. அவங்க வந்தால் அந்த மரத்தை வெட்டி எடுத்துட்டு போக சொல்லுங்க..” என்றவன் சொல்லவும் வெடுக்கென்று நிமிர்ந்த வளர்மதி முகம் கோபத்தில் சிவந்திருந்தது..

‘என்ன தைரியம் இருந்த மகிழம்பூமரத்தை வெட்ட சொல்லி சொல்வான்..’ என்ற எண்ணத்தோடு அவனை முறைக்க ஆரம்பித்தாள்.. அவளின் முகத்தை கவனிக்காத பானுமா, “சரிப்பா வந்தா வெட்ட சொல்றேன்.. என்ன அந்த மரத்தை என் பேரம் அறியாத வயசுல நட்டுவெச்சது.. இப்போ அதை வெட்றதுக்கு மனசு இல்ல.. அதன் யோசனையா இருக்கு..” என்று அவரும் வருத்ததுடன் கூறினார்..

அதை கேட்டதும் மகிழனுக்கு ஒரு விஷயம் புரிந்தது.. ‘நான் நட்டு வெச்ச செடி இன்னைக்கு மரமாக நிற்கிறது.. நான் கருவில் பேரு வெச்ச பொண்ணு இன்னைக்கு வெளஞ்சி நிற்கிற.. ஆன ஏன் என்னிடம் நேத்து பொய் சொன்னா..? இவ அந்த மரத்துக்கு தண்ணீர் விடாமல் இருந்ததுக்கும், இப்போ தண்ணீர் விடுவதற்கும் என்ன காரணம்.. புரிந்தது போல இருந்த ஒரு விஷயம் புரியாதது போல இருந்தது..’ அவன் குழப்பத்தில் நிற்பதைப் பார்த்த வளரின் முகத்தில் புன்னகை அரும்பியது.. அவளின் முகப்பாவனைகளைக் கவனித்த வண்ணம் நின்றிருந்தான் மகிழன்..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அவன் சொன்ன விஷயம் அவளின் கோபத்தை அதிகரிக்க அவளின் முகம் செந்தணலாக மாறிவிட, “யோவ் பனமரம் அந்த மரம் உனக்கு என்ன பாவம் பண்ணுச்சு.. எதுக்கு அத வெட்ட சொல்ற..” என்று வந்த கோபத்தை அப்படியே அவனிடம் காட்டிவிட்டாள்..

“மரத்துக்கு தண்ணீ விடாம இருக்கற நீ எல்லாம் பேசக்கூடாது வளரு..” என்றவன் கோபத்தில் சொல்வது போல சொல்லவும் அவளுக்கும் கோபம் வர, “நான் மரத்துக்கு தண்ணீ விடாமத்தான் அது அம்புட்டு உயரம் வளர்ந்திருக்கோ..” என்று அவளும் கோபத்தில் எகிறினாள்.. அவளின் கோபம் கண்ட மகிழனின் மனம் சந்தோசம் அடைய அவளை வம்பிழுக்கும் எண்ணத்தில், “நீ நிஜமா அந்த மரத்துக்கு தண்ணீர் விட்ட..?” என்று கேட்டான்..

அவனின் கேள்வியில் அவனை நிமிர்ந்து பார்த்த பானுமா மகிழனின் முகத்தில் இருந்த குறும்பைக்கண்டு, ‘அந்த மரத்துக்கு தண்ணீர் இவ விடமாட்டாளே.. அப்புறம் எதுக்கு இவன் வாக்குவாதம் பண்றான்..’ என்று யோசித்தபடியே இருவரையும் பார்த்தார்.. பானுமா தன்னை கவனிப்பதை அறியாத வளர்மதி, “நான் செடிக்கு தண்ணீ விடலன்னு உனக்கு தெரியுமா..?” என்று கோபத்தில் கேட்டுவிட பானுமா திகைத்தார்..

தன்னுடைய குட்டு தன் வாயால் உடைந்ததை உணராத வளர்மதி மகிழனை முறைக்க அவனோ வந்த சிரிப்பை அடக்கியபடி நின்ற மகிழனின் முகத்தைப் பார்த்த பானுமா, ‘இங்கே என்னடா நடக்குது..?’ என்ற எண்ணத்தில் இருவரின் முகத்தையைப் பார்த்தார் பானுமா.. அவருக்கு ஏதோ விஷயம் புரிந்தது போல இருந்தது..

அவளின் ஆவேசத்தை பார்த்த பானுமா, “ஏண்டி இதுக்கு எதுக்கு அந்த புள்ளகிட்ட சண்டை கட்டிட்டு இருக்கிறவ..?” என்று கேட்டார்.. அப்பொழுதுதான் வீட்டிற்குள் நுழைந்த பொன்னுத்தாய் அவள் கோபத்தில் கத்துவதைப் பார்த்து, ‘இவளோட விளையாட்டு அளவே இல்லாமல் போச்சு.. எங்கே எப்படி பேசணும் என்ற வரை முறையே இல்லாம இருக்கிற..’ என்று திட்டியபடியே மகளை நோக்கி வந்தவர் அவள் பேசிய பேச்சில் ஆத்திரம் வந்து அவளை அடிக்க ஆரம்பித்தாள்..

“பானுமா நீங்க சும்மா இருங்க.. இந்த ஆளுக்கு வேற வேல இல்ல.. மரத்த வெட்டுவராமில்ல.. மரத்துல மட்டும் எவனாவது கத்தி வைக்கட்டும்.. அப்புறம் பாரு கதிரு அறுக்கிற அருவாள்ள உன்னோட சங்கை அறுக்கிறேனா இல்லையான்னு பாரு..” என்று தன்னையும் மீறி அவள் கோபத்தில் கத்த அதைக்கேட்ட பொன்னுத்தாய் மகள் பேசுவதைக் கேட்டு அவரின் மூச்சு ஒருமுறை நின்று போனது..

மகிழனோ அவள் சொன்னதைக் கேட்டு, ‘அம்மாடியோ எம்புட்டு தைரியம் என்னையே சங்கை அறுப்பேன்னு சொல்றாளே.. மகிழா உனக்கு நேரம் சரியில்லையோ..?’ என்றவன் யோசிக்க அவனின் முகத்தைப் பார்த்த பானுமா, “என்ன ராசா இம்புட்டு தைரியமா இவளுக்குன்னு யோசிக்கிறீயா..?” என்று சிரித்தபடியே கேட்டதும், ‘பாட்டி..’ என்று பல்லைக்கடித்தான் மகிழன்..

‘அடிபாவி மகளே.. யாரை சங்கு அறுகிறேன்னு சொல்லிட்டு இருக்கிற பாரு.. ஐயோ அம்மாவுக்கு உண்மை தெரிஞ்ச என்ன ஆகுமோ..?’ என்று புலம்பியவருக்கு கோபம் வந்துவிட வேகமாக அவளின் அருகில் சென்று முடியைப்பிடித்து இழுத்து கன்னத்தில், ‘பளார்..’ என்று ஒன்றுவிட்டார்.. வளர்மதி கன்னத்தில் கைகளைத் தாங்கியபடி கண்கள் இரண்டும் கலங்க அம்மாவின் முகத்தைப் பார்த்தாள்.. அவரின் இந்த செயலில் பானுமாவும், மகிழனும் திகைத்தபடியே பார்த்தனர்..

“வாய் ரொம்ப நீளுது.. சின்ன புள்ள சின்ன புள்ள என்று நானும் அடிக்காம இருந்தா வாய் எப்படி பேசற..?” என்று சொல்லவும் அதற்கு பதில் சொல்லாமல் அவரின் முகத்தையே அமைதியாக பார்த்தவளை தன்னுடைய மடியில் தாங்கிக்கொண்டவள், “என்னடி புள்ளையை இந்த அடி அடிக்கிறவ.. இந்த காலத்துல எந்த புள்ள இவள மாதிரி தைரியமா இருக்கு..?” என்று கேட்டார்..

மகிழனோ வளரின் முகத்தைப் பார்க்க அவளின் கன்னம் சிவந்து கிடக்க அவனின் மனம் வலித்தது.. அவளோ கண்களில் வந்த நீரை கீழே வழியவிடாமல் அம்மாவின் முகத்தையே பார்த்தாள்.. கோபம் வந்து எழுந்தும் செல்லவில்லை.. அடித்தது வலிக்கிறது என்று அழுகவும் இல்லை.. அவளின் பார்வை முழுவதும் பொன்னுத்தாயின் மீதே இருந்தது.. பொன்னுத்தாயோ மகளை முறைக்க ஆரம்பித்தாள்..

“அம்மா நீங்க கம்முன்னு இருங்க இவளுக்கு வாய் ரொம்ப நீளுது..” என்று சொல்ல, “சரிதான் போடி.. அதுக்கு புள்ளைய இந்த அடி அடிப்ப.. இன்னொரு மொற புள்ளமே கை வை அப்புறம் இருக்கு..” என்று பொன்னுத்தாயைத் திட்டியவர் வளரின் கன்னத்தை வருடிக் கொடுத்தார்.. இதையெல்லாம் கவனித்த மகிழனின் மனம் வலித்தது..

‘என்னோட விளையாட்டுதான் இப்போ வினையாக ஆகிவிட்டது..’ என்று நினைத்தவன் பொன்னுத்தாயின் முகத்தைப் பார்க்க அவரோ வீட்டின் உள்ளே சென்றுவிட்டார்.. அவர் உள்ளே சென்றதும், “பாட்டி மரத்தை வெட்ட வேண்டான்னு சொல்லிருங்க.. எனக்கு வேலைக்கு நேரமாச்சு..” என்று சொல்லிவிட்டு சென்றதும் கண்களைத் துடைத்தவள், “இந்த அம்மா இப்படித்தான் பானுமா.. நீங்க இதுக்கு எல்லாம் மனசு வருத்தபடாதீங்க..” என்று வெள்ளையாக சிரித்த வளரைப் பார்த்து பானுமாவின் கண்கள் கலங்கியது..

அவரின் கண்களைத் துடைத்து விட்டவள், “என்னம்மா இதுக்கு எல்லாம் ஒரு அடியில நான் என்ன தேஞ்சா போயிட்டேன்..” என்று கேட்டவள், “பானுமா வயக்கட்டுக்கு போறேன்னு அம்மாட்ட சொல்லிருங்க..” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டாள் வளர்மதி..

அவள் செல்வதைப் பார்த்த பானுமா, ‘அடிவாங்கிட்டு எதுவுமே நடக்காதது போல நடந்துகிறாளே..’ என்று நினைத்தவர் எழுந்து வீட்டின் உள்ளே சென்றார்.. பொன்னுத்தாயோ எதுவும் நடவாதது போல வேலையில் ஈடுபட்டிருக்க அவரும் எதுவும் பேசாமல் தன்னுடைய அறைக்கு சென்றுவிட்டார்.. தன்னுடைய அறைக்குள் நுழைந்த பானுமாவோ, ‘அவளோட மகளை அவள் அடிக்கிற இதுக்கு நான் போய் விளக்கம் கேட்க முடியாதே.. அது அவளோட உரிமை..’ என்று நினைத்தவர் அமைதியாக இருந்தார்..

வீட்டில் இருந்து கிளம்பிய மகிழன் மனம் அவனிடம் இல்லை.. அவனின் மனம் முழுவதும் வளரின் மீதே இருந்தது.. ஆலைக்கு செல்ல மனம் இல்லாமல் வழியில் இருந்த மகிழம்பூ மரத்தின் அடியே கண்களை மூடி நின்றுவிட்டான்.. வளரின் கலங்கிய கண்களும், சிவந்த கன்னங்களும் அவனின் இருவிழியருகே வர அவனின் மனம் வலித்தது.. வயலுக்கு செல்ல அந்த வழியாக வந்தவளின் கொலு சத்தம் அவளை அவனுக்கு அடையாளம் காட்டிக்கொடுக்க விழியைத் திறந்தவன் அவள் வரும் திசையைப் பார்த்தான்..

அவளோ ஏதோ சிந்தனையில் நடந்து செல்ல அவளின் கரம்பிடித்து இழுத்த இழுத்தான் மகிழன்.. திடீரென்று யாரோ கரம்பிடித்து இழுக்க வாய்விட்டு காத்த நினைத்தவள் ஒருநொடி அவனின் முகத்தை நிமிர்ந்து பார்க்க அவளின் விழியைப் பார்த்த வண்ணம் நின்றிருந்தான் மகிழன்.. அவனின் முகம் பார்த்தவள், “எதுக்கு இப்போ என்னோட கையைப்பிடித்து இழுத்த.?” என்று கோபத்தோடு கேட்டாள்..

அவளின் கோபத்தைப் பார்த்தவன், “எதுக்குடி இப்போ உனக்கு மூக்கு சிவக்குது..?” என்று கேட்டவன் அவளின் கன்னத்தைப் பார்த்துவிட்டு, “ரொம்ப வலிக்குதா..?” என்று கேட்டதும் அவனை நிமிர்ந்து பார்த்த வளரு அவனின் முகத்தில் இருந்த வலியை உணர்ந்தாள்..

அந்த வலியை உணர்ந்தும் அதை வெளிக்காட்டாமல், “அந்த மரத்தை எதுக்கு வெட்ட சொன்னீங்க.. உங்கள அது என்ன பண்ணுச்சு..?” என்று எரிச்சலோடு கேட்டாள்.. அவளின் குரலில் இருந்த எரிச்சலை பார்த்த மகிழன், “எதுக்கு நீ என்னிடம் பொய் சொன்ன..?” என்று கேட்டான்.. அவனின் கேள்வியில் இருந்த உண்மையை உணர்ந்தவள் அமைதியாக நிற்க அவளின் கைபிடித்து அருகில் இழுத்தவன், “பதில் பேசுடி..” என்றான்..

அவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்த வளரு, “இல்ல பனமரம் காலையில நான் தண்ணீ விடும் போதும் பானுமா மாடியில இருந்து என்னை பார்ப்பாங்க.. அவங்க பேரன் வெச்ச மரம் அது.. அந்த மரத்துக்கு நான் தண்ணீவிட்டா என்னோட மனசுல அவங்க பேரன் இருப்பதா நெனைச்சுட்டு பேரனோட வரவை ரொம்பவே எதிர்பார்ப்பாங்க..” என்று வருத்தத்துடன் கூறினாள்..

“அது ஏன் அப்படி..? அப்போ அந்த மரத்துக்கு எதுக்கு தண்ணீவிட்ட..?” என்றவன் புரியாமல் கேட்டதும், “அவங்க பேரன் பேரு மகிழன்.. அந்த மரத்துக்கு பேரும் மகிழம்பூ மரம்..” என்று கூறியவள் சிரித்தபடியே, “அதுக்காக மரத்துக்கு தண்ணீ விடாமல் இருக்க முடியுமா பனமரம்.. அதுவும் ஒரு உயிரு தானே..? நமக்கு வாய் இருக்கு கேட்டு வாங்கி சாப்பிடுவோம்.. அதுக்கு வாயிருக்கா..?” என்றவளைப் பார்த்தவன் மனம் அவளின் குணத்தை வெகுவாக ரசித்தது..

“நீ என்னை பார்க்கிற நேரம் எல்லாம் நான் செடிக்கு தண்ணீ விடுவேன்.. அதே நேரத்துல பானுமாவும் மேலிருந்து என்னை பார்ப்பாங்க..” என்று கூறியவள் அவனின் முகத்தைப் பார்த்துவிட்டு தொடர்ந்தாள்.. “நீ ஆலைக்கு கெளம்பினதும் நானும் அந்த மரத்துக்கு தண்ணீ விட்டுட்டு வயலுக்கு போயிருவேன்.. மரத்து மேல கோபத்தை காட்ட அது என்ன எனக்கு எதிரியா..?” என்றவள் தன்னுடைய பக்கத்தில் இருந்த விளக்கத்தைக் கூறினாள்..

அவனோ, ‘இவ விளையாட்டு புள்ளைன்னு நெனச்சா..? இவ இம்புட்டு விவரமா..?’ என்று நினைத்தவன் அவளின் முகத்தை இமைக்காமல் பார்க்க அவளோ அவனைவிட்டு விலகிச்செல்ல நினைக்க அவளின் கரம்பிடித்து மீண்டும் இழுத்தவன் அவளின் சிவந்த கன்னத்தில் முத்தமிட்டான்..

அவனின் இந்த செயலில் திகைத்து நின்றவளின் முகத்தைக் கையில் ஏந்தியவன், “துளிரு மன்னிச்சிருடா.. என்னாலதான் நீ அடிவாங்கின..” என்று அவன் சொல்ல அவளோ அவன் முத்தமிட்ட இடத்தில் இருந்த குறுகுறுப்பை உணர்ந்து இமைக்க மறந்து சிலையென நின்றாள்.. அவனும் அதை ரசித்தபடியே அவளின் கன்னத்தை வருடிக்கொடுக்க அதில் உணர்வு பெற்றவள் அவனின் கைகளை உதவிவிட்டு ஓடிச்சென்றாள்..

அதை பார்த்த மகிழன், ‘என்னோட மனசை முழுவதும் புரிஞ்சி வெச்சிருக்க ஆன வெளிபடுத்தாம இருக்க..’ என்று நினைத்தவன் தன்னுடைய வேலையைச் செய்ய ஆலைக்குச் சென்றான்.. துளிரின் மனதில் நேசம் துளிர்விடும் காலம் இதோ அருகினிலே என்றது அவர்களை தீண்டிச்சென்ற தென்றல்...! காலத்தினால் விதைக்கப்பட்ட காதல் விதைகள் துளிர்விடும்.. விதி போட்டிருக்கும் பொய் முடிச்சுகளுக்கு விடை கிடைக்கும்.. அதுவரை காத்திருப்போம்..

நேசம் துளிர்விடும்..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top