• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thulirvidum Nesamadi! - 28

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 28

எனது துளிரும் நிலவே

உன் மனதில் சந்தேகத்தின் துளிரா..?

சந்தேகம் வந்தால் என்னிடம்

வாய்விட்டு கேளடி பெண்ணே..

இதுவரை இருந்த சந்தோஷம்

எல்லாம் நொடியில் மறைவதைப்

போல ஒரு எண்ணமடி!

இது நிஜம்தானா சொல்லடி..

வானில் நிலவு உலா வருவதைப் பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்த வளரின் மனமோ அவனின் வீட்டைக்கண்டு அதிர்ந்திருந்தது.. அவனின் வீட்டைப் பார்த்ததும் அவளின் மனதில் தோன்றிய விஷயம், ‘இவ்வளவு சொத்துக்கு சொந்தகாரனாக இருக்கும் இவன் எதுக்கு மேனேஜர் வேலைக்கு வரணும்.. அதுவும் பானுமா வீட்டிற்கு ஏன் வரணும்..’ என்று தனக்குள் கேள்வி கேட்டபடியே அமைதியாக அமர்ந்திருந்தாள்..

அவளின் மனம் சிந்தனையில் இருக்க அதில் சந்தேகத்தின் விதைகள் துளிர்விட ஆரம்பிக்க தன்னைச் சுற்றிலும் இருக்கும் பசுமை அவளின் மனதில் பதியவே இல்லை.. ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவளின் புருவங்கள் இரண்டும் முடிச்சிட அமைதியாக அமர்ந்திருந்தவளின் அமைதியை உணர்ந்த மகிழனோ, “வளரு என்ன அமைதியாக இருக்கிற.. இந்த வீடு உனக்கு பிடிச்சிருக்கா..?” என்று கேட்டபடியே அவளின் முகத்தைப் பார்த்தான்..

“என்ன ரொம்ப அமைதியாக இருக்கிற..?” என்று கேட்டபடியே அவளின் அருகில் அமர்ந்தான் மகிழன்.. அவளோ யோசித்தபடியே திரும்பிப் பார்க்க அங்கே இருந்த மகிழம்பூ மரத்தைப் பார்த்தவளின் மனதில் ஏதேதோ நினைவுகள் வந்து சென்றது.. அவனை சந்தித்த நாள் முதலாக நடந்த விஷயங்களை யோசிக்க ஆரம்பித்தாள்.. அவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அமைதியாகவே இருந்த வளரின் முகத்தையே பார்த்தவன், ‘இந்த நேரத்தில இவளுக்கு என்ன சிந்தனை..?’ என்று நினைத்தவனின் கைகள் அவளின் இடையோடு பதிய திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள் துளிர்நிலா..

அவளின் விழிகளை அவன் இமைக்காமல் பார்க்க அவனின் பார்வைத் தாங்கியபடியே அவனை இமைக்காமல் பார்த்தாள் வளர்மதி.. அங்கே வார்த்தை பரிமாறலுக்கு இடம் இல்லாமல் போகவே அவளின் விழியில் இருந்தே அவளின் மனதைப்படித்த மகிழன், “என்னடா இவனோட வீடு பானுமாவின் வீடு போலவே இருக்கு என்று யோசிச்சிட்டு இருக்கிற..??” என்றவன் கேட்டதும் இல்லையென தலையசைத்தவள், “இத்தனை சொத்துக்கும் ஒரே வாரிசான நீங்க எதுக்கு அந்த வீட்டுக்கு மேனேஜராக வந்தீங்க என்று யோசிச்சிட்டு இருக்கேன்..” என்று நிதானமாக அவனின் முகம் பார்த்து கூறியவள் இடையில் இருந்த அவனின் கரத்தை எடுத்துவிட்டு எழுந்து நின்றாள்..

அவளிடம் இருந்து இப்படியொரு கேள்வியை எதிர்பார்க்காத மகிழன், “உனக்கு என்னடி ஆச்சு.. எதுக்கு இப்படி எல்லாம் பேசற..?” என்று கேட்டதும், “நான் என்ன வேண்டும் என்ற பேசறேன்.. இங்க என்னை சுற்றி என்ன நடக்குதுன்னு தெரியாமல் இத்தனை நாளும் பைத்தியமாக இருந்த என்னோட முட்டாள் தனத்தை எண்ணி பேசிட்டு இருக்கேன்..” என்றவள் சொல்ல அவளின் பேச்சில் இருந்த மாற்றம் உணர்ந்த மகிழனின் முகம் கோபத்தில் செந்தணலாக மாறியது..

“இந்த சந்தேகம் மட்டும் இருக்குதா..? இல்ல இன்னும் வேற எதாவது சந்தேகம் லிஸ்ட்ல வருமா..?” என்று கோபத்துடனே கேட்டான்.. அவனின் குரலில் இருந்த எரிச்சலை உணர்ந்த வளர்மதி ஏதோபேச வாயெடுத்த வளர்மதி வாசலில் யாரோ வந்து நிற்க யாரென்று திரும்பிப் பார்த்தாள்.. மகிழனுக்கு அதுவரை இருந்த இதம் போன இடம் தெரியாமல் ஓடிமறைய தன்னுடைய கோபத்தை அடைக்கியபடியே அமைதியாக இருக்க முயற்சி செய்துக்கொண்டிருக்க “மகிழா..” என்றழைக்கும் சத்தம் கேட்டதும் வாயிலின் பக்கம் திரும்பிப் பார்த்தான் மகிழன்..

வீட்டின் முன்வாசலில் நின்றிருந்த சிவசங்கரனையும், ஜெயலட்சுமியையும் பார்த்த வளர்மதி, ‘இவங்களை எங்கோ பார்த்த மாதிரியே இருக்கே..’ என்று யோசித்தபடியே தன்னுடைய சிந்தனையை ஓடவிட, “அம்மா, அப்பா உள்ளே வாங்க.. ஏன் வாசலில் நிற்கிறீங்க..?” என்றுகேட்டு வளரை அதிர்ச்சியில் ஆழ்த்தினான் மகிழன்.. அவன் சொன்னதைக்கேட்ட வளர்மதி, ‘இவனுக்கு அப்பா, அம்மா இருக்காங்களா..? இவர் என்னிடம் எதையுமே சொல்லல..’ என்று நினைத்தவள் அதிர்ச்சியில் மயங்கிச்சரிய வீட்டின் உள்ளே நுழைந்த லட்சுமி அதை பார்த்துவிட்டார்..

“டேய் வளரு மயக்கம்போட்டு விழுகிறாள் பாருடா..” என்று சொல்ல வேகமாகத் திரும்பிய மகிழன் எழுந்து அவள் மயங்கிச்சரியும் முன்னே அவளைத் தாங்கிப்பிடித்து, “துளிரு.. ஏய் துளிரு..” என்று கன்னத்தைத் தட்டினான்.. அவள் விழிக்களைத் திறக்காமல் இருக்க அவனின் கோபம் எல்லாம் மறந்து போக தன்னுடைய முட்டாள்தனத்தை என்னை தனக்குள் நொந்து போனவன் அவளை இருக்கரத்திலும் தூக்கிக்கொண்டு வீட்டின் உள்ளே நுழைந்ததும் சிவசங்கரன், “அவளுக்கு அதிர்ச்சி தருகிற மாதிரி அவளிடம் என்ன சொன்னா..?” என்று கேட்டதுக்கு எல்லாம் அவனிடம் பதில் இல்லாமல் போகவே வீட்டின் உள்ளே சென்னு தண்ணீரை எடுத்து வந்தார் லட்சுமி..

‘ஐயோ வந்த முதல் நாளில் இருந்தா எங்க பிரச்சனை ஆரம்பமிக்கணும்..’ என்று மனதிற்குள் புலம்பியபடியே அவளைத் தூக்கிச்சென்று தன்னுடைய அறையில் படுக்கவைத்தான்..அவளின் முகத்தைப் பார்த்துக்கொண்டே அவளின் அருகில் அமர்ந்திருந்த மகனின் முகத்தில் இருந்தே, ‘இருவருக்குள் ஏதோ சண்டை என்று உணர்ந்த லட்சுமி கணவனிடம், ‘அவனிடம் பேசுங்க..’ என்று சைகை செய்தார்..

“அவளிடம் உண்மைச் சொல்லிட்டியா மகிழா..” என்று சந்தேகமாகக் கேட்டதும் இல்லையென தலையசைத்தவன், “நான் எதுவுமே சொல்லலப்பா.. சும்மா பேசிட்டு இருந்தோம்.. அதுக்குள்ள ஏதோ அதிர்ச்சியில் மயக்கம்போட்டு விழுந்துட்டாப்பா..” என்று பெற்றோரை சமாளித்தான்.. அவன் சொல்வது பொய் என்று தெரிந்தும் அவனை மேலும் கேள்வி கேட்காமல் அமைதியாக இருந்தார்..

அதற்குள் வளரின் அருகில் வந்த லட்சுமி அவளின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து கண்கள் இரண்டையும் துடைத்துவிட மெல்ல கண்விழித்தவள் சுற்றிலும் பார்வையைச் சுழலவிட்டாள்.. அவனின் பார்வை முழுவதும் அவளின் மீதிருக்க வளர்மதியோ மகிழனின் முகத்தை ஆழ்ந்துப் பார்க்க அது கலையிளைந்து போயிருந்தது.. அதில் அவளின் மனதிலும் கொஞ்சம் வலி ஏற்பட உதட்டைக் கடித்துக்கொண்டு தலையைக்குனிந்தாள்..

‘எனக்கு எதுக்கு இந்த சந்தேகம் வந்துச்சு..’ என்று தனக்குதானே கேட்டவள் திரும்பிப் பார்க்க அங்கே லட்சுமியும், சங்கரனும் இருப்பதைப் பார்த்தவள் மற்ற விஷங்களை ஒதுக்கிவிட்டு எழுந்து அமர்ந்தவளின் முகத்தைப் பார்த்த மகிழன், “வளரு இப்போ பரவல்லையா..?” என்று கேட்டதும் புன்னகையுடன் தலையசைத்தாள்.. அவளின் மலர்ந்த முகம் பார்த்த மகிழன் மனம் கொஞ்சம் நிம்மதியடைந்தது..

“வாங்க மாமா.. வாங்க அத்தை..” என்று சொல்ல அவர்களின் முகத்திலும் நிம்மதி பரவுவதை உணர்ந்த வளர்மதி, “என்ன அத்தை ரொம்ப பயந்துட்டீங்களா.. வெளியே மகிழம்பூ மரம் இருக்கில்ல.. அதை பார்த்ததும் எனக்கு எங்க வீட்டு நினைவு வந்திருச்சு.. பானுமா வீட்டில் அந்த மரத்துக்கு நான்தான் தண்ணீர் விடுவேன்..” என்றவள் இயல்பாக இருவரிடமும் பேசியதும் அவர்களின் முகத்தில் தெளிவு வருவதைக் கவனித்த மகிழன், ‘இவளோட மனசில இருந்த சந்தேகம் எல்லாம் இப்போ எங்க போச்சு.. இவ இயல்பாக பேசறாளே..’ என்றவன் யோசித்தபடியே அவளை இமைக்காமல் பார்த்தான்..

“என்னையே ஏமாற்றி நீங்க சொன்னதுபோல ஊருவிட்டு ஊரு கடத்திட்டு வந்துட்ட இல்ல..” என்றவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறியவனின் முகத்தில் இருந்த குறும்பு புன்னகையைப் பார்த்தவன் ஏதோ சொல்லும் முன்னே, “நீங்க பேசிட்டு இருங்க.. நான் சாப்பாட்டை எடுத்துவெச்சிட்டு வரேன்..” என்று சொல்லிய லட்சுமி கணவனுக்கு சைகை செய்துவிட்டு வெளியே சென்றனர்.. அவரும் லட்சுமியின் பின்னோடு அறையைவிட்டு வெளியே சென்றார்..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அவர்கள் சென்ற மறுநொடியே, “என்னடி வாய் ரொம்ப பேசற..?” என்று அதட்டலும் கேட்டவன், “அங்கிருந்து உன்னை கடத்திட்டு வரதுக்கு எல்லா உரிமையும் எனக்கு இருக்கு..” என்று நெஞ்சில் தொங்கிய புதுத்தாலியைக் காட்டியவன், “என்ன சந்தேகம் வந்தாலும் என்னிடம் நேரடியாக கேளு.. அதுக்கு நான் உனக்கு விளக்கம் சொல்றேன்.. அதை விட்டுட்டு மனசுக்குள்ள வெச்சுட்டு என்னையும் கோபபடுத்தி நீயும் நிம்மதியில்லாமல் இருக்காதா..” என்று கூறியவனை இமைக்காமல் பார்த்தாள் வளர்மதி..

“நமக்குள்ள என்ன பிரச்சனை வந்தாலும் அது நமக்குள் இருக்கட்டும்.. நீங்களும் அதை வெளியே காட்டிக்காதீங்க..” என்றவள் ஒரு மாதிரியான குரலில் கூறிவிட்டு அவள் படுக்கைவிட்டு இறங்கியவள், “என்னோட மனசுல சந்தேகம் என்ற ஒன்னு கல்யாணம் பண்ணிய முதல்நாளே வந்திருச்சு.. அதுக்காக உங்களிடம் விளக்கம் கேட்டு உங்களோட நிம்மதியையும், சந்தோசத்தையும் கலைக்க விரும்பல..” என்று கூறியவளின் பேச்சில் இருந்தே, ‘அவள் தன்னைவிட்டு எந்த அளவுக்கு விலகி நிற்கிறாள்..’ என்று உணர்ந்துக் கொண்டான் மகிழன்..

“எந்த சந்தேகமாக இருந்தாலும் அதுக்கு விளக்கம் அப்புறம் சொல்றேன்.. இப்போ வா சாப்பிடலாம்..” என்று சொல்ல அவளின் முகம் கொஞ்சம் தெளிவடைய, “எனக்கு சந்தேகம் வரும்போது கேட்கிறேன்.. உங்களோட கேட்ட ஒரு பொய்யை நியாயப்படுத்த ஆயிரம் காரணம் சொல்வீங்க.. நான் யாரிடம் விளக்கம் கேட்கணுமோ அவங்ககிட்ட கேட்டுக்கிறேன்..” என்று அறையின் கதவு வரையில் செல்ல அவளின் கூறிய ஓவ்வொரு வார்த்தையில் இருந்த அழுத்ததை உணர்ந்தவன் அசைவில்லாமல் நின்றிருந்தான்..

அந்த அறையின் கதவுவரை சென்ற வளர்மதி நின்று திரும்பிப் பார்த்தாள்.. அவன் தன்னுடைய பேச்சில் பாதிக்கப்பட்டு இருப்பதை உணர்ந்தவள் அவனின் அருகில் வந்து அவனின் எதிரே நின்று அவனின் முகத்தைப் பார்த்து, “உங்க முகத்தை ஏன் இப்படி வெச்சிருக்கீங்க.. கண்ணால பார்க்க முடியல..” என்று கூறியவளின் முகப்பாவனையில் வாய்விட்டு சிரித்தவன், “என்னை பைத்தியமே பண்ணிட்ட.. சரியான வாலு..” என்று சொல்லிவிட்டு அறையைவிட்டு வெளியே செல்ல அவனின் குரலில் யிருந்த வருத்தத்தை உணர்ந்தவள், ‘கல்யாணம் பண்ணிய முதல் நாளே எங்களுக்குள் பிரச்சனை வருணுமா..’ என்று தன்னை தானே நொந்துக்கொண்டு அவனின் பின்னோடு சென்றாள் வளர்மதி..

இருவரின் இடையே ஏதோ பிரச்சனை என்று நினைத்தபடியே கணவனும், மனைவியும் டைனிங் டேபிளில் அமர்ந்திருக்க, “என்னங்க இருவருக்குள்ளும் ஏதாவது பிரச்சனையாக இருக்குமோ..” என்று பதட்டத்துடன் கேட்ட மனைவியின் கையைபிடித்து ஆறுதல் கொடுத்த சிவசங்கரன், “நேற்றுவரையில் அவனோட பிரச்சனையில் நம்ம தலையிட்ட எந்த பிரச்சனை இல்ல.. ஆனா இன்று அவன் வளர்மதிக்கு கணவன்.. அவனிடம் கேள்வி கேட்ட அவங்களுக்குள் இருக்கும் பிரச்சனை பெருசாகும் லட்சுமி..” என்று கூறியவரின் வார்த்தையில் இருந்த உண்மையை உணர்ந்த லட்சுமி, “சாப்பாடு எடுத்து வைக்கட்டுமாங்க..” என்று கேட்டார்..

அவரின் குரலில் இருந்தே மனைவியின் மனதில் இருந்த பதட்டம் மறைந்துவிட்டது என்று உணர்ந்தவர், “அவங்க இருவரும் வரட்டும் லட்சுமி..” என்று சொல்லிக்கொண்டிருக்க மகிழனும், வளரும் வருவதைப் பார்த்தபடியே, “என்ன வளரு இப்போ எப்படிமா இருக்கு..?” என்று கேட்டதும், “நான் நல்ல இருக்கேன் மாமா..” என்றவள் சொல்லும் பொழுது அவரின் முகத்தைக் கவனித்தவளுக்கு இருவரின் மனக்கவலையும் புரிந்துவிட்டது..

தன்னருகே வந்து கொண்டிருந்த மகிழனின் முகத்தை நிமிர்ந்து பார்த்த வளரு, “மாமா இங்க பாருங்க மாமா.. இவுக என்னிடம் வம்பிழுத்துட்டே இருக்காக..” என்று இழுத்தபடியே கூறிய வளரின் முகத்தைப் புரியாத பார்வைப்பார்த்த மகிழனைப் பார்த்து குறும்புடன் கண்சிமிட்டியதும், ‘இவ எல்லாத்தையும் தெரிந்து பேசறாளா.. இல்ல வேணுன்னு என்னை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறாளா..?’ என்று யோசித்தவனுக்கு தாய், தந்தை மனக்கவலை புரிந்தது..

அவள் சொன்னதைக்கேட்டு மருமகளின் முகம் பார்த்த சங்கரனோ, “கல்யாணம் பண்ணிக்கிற வரைதான் அவன் எங்க பொறுப்பு மருமகளே.. இப்போ அவன் பண்ணும் சேட்டைக்கு எல்லாம் நாங்க பொறுப்பேற்க முடியாது..” என்றவரும் பதில் கொடுத்துவிட்டு லட்சுமியின் முகத்தைப் பார்த்த கணவனுக்கு தட்டை எடுத்துவைத்து பரிமாறுவதில் கவனமாக இருப்பது போல காட்டிக்கொண்டார் லட்சுமி..

“என்ன அத்தை மாமா இப்படி சொல்றாங்க..” என்று அவரையும் தங்களின் பேச்சிற்குள் இழுத்தாள் வளர்மதி.. மகிழனோ, ‘இவள என்ன பண்றது கொஞ்சநேரத்துக்கு முன்னாடி சந்தேகத்துடன் கேள்வி கேட்டா.. இப்போ இவங்கள வம்புக்கு இழுத்துட்டு இருக்கிற..’ என்றவன் நினைக்க, “மகிழா நீங்க இருவரும் சாப்பிடுங்க.. நான் அவளை ரெடி பண்ணும்..” என்று கூறிய லட்சுமி, “வளரு நீ வாம்மா.. அத்தை உனக்கு நான் அலங்காரம் பண்ணிவிடுகிறேன்..” என்று சொன்ன லட்சுமியின் முகத்தைப் பார்த்த வளர்மதி, “எதுக்கு தூங்க போற நேரத்தில அலங்காரம்..” என்று கேட்டதும் மகிழன் தலையில் அடித்துக்கொண்டான்..

அவன் தலையில் அடித்துக்கொள்வதைப் பார்த்து, “மகிழ் மாமா.. எதுக்கு தேவை இல்லாமல் தலையில் அடிச்சுகிறீங்க..?” என்றுகேட்டு சங்கரனின் முகத்தைப் பார்க்க அவரோ சிரிப்பை அடைக்க பெரும்பாடு படுவதைப் பார்த்து லட்சுமியின் முகம் பார்க்க அவரோ வாய்விட்டு சிரித்துக்கொண்டிருந்தார்.. “எதுக்கு மாமா இந்த நேரத்தில எனக்கு அலங்காரம் பண்ணனும்.. இப்போ என்ன நான் நல்லாதானே இருக்கேன்..” என்று சொல்லி மகிழனின் முகத்தை புரியாமல் பார்த்த வளரின் பார்வையில் அவனின் சிந்தனை எல்லாம் திசைமாறியது..

அவளின் இந்த விளையாட்டுத்தனம் அவனின் மனதில் ஏற்பட்ட காயத்திற்கு மருந்தாக மாறிவிட, ‘இந்த கள்ளம்கபடம் இல்லாத பேச்சுதான் என்னோட மனசு உன்பக்கம் சாய்ந்ததடி..’ என்று மனதிற்குள் நினைத்தவன் அவளை குறும்புடன் பார்த்தபடியே, “அவங்களுக்கு எந்த வேலையும் இல்லையாம்.. அதுதான் மருமகளுக்கு அலங்காரம் பண்றேன்னு வந்து நிற்கிறாங்க.. இல்லம்மா..” என்று நக்கலுடன் கூறினான்..

அவனின் குரலிலும் அவனின் பார்வையிலும் இருந்த மாற்றத்தை உணர்ந்த வளர்மதி, “நீங்க ஏன் நிற்கிறீங்க.. நீங்களும் ஒரு சேரை இழுத்துபோட்டு உட்காருங்க..” என்று சொல்ல அவனும் ஒரு சேரை இழுத்துபோட்டு அமர தன்னுடை முந்தானையை இடுப்பில் சொருகியவள், “அத்தை நீங்களும் உட்காருங்க.. நான் உங்க எல்லோருக்கும் பரிமாறுகிறேன்..” என்று சொல்லி லட்சுமியையும் ஒரு சேரில் அமரவைத்தாள்..

“நீ உட்கார்ந்து சாப்பிடு.. அவள் பரிமாறட்டும்.. அப்புறம் வந்த முதல்நாளே என்னோட மகளை வேலை வாங்கறாங்க என்று உன்னோட அம்மா சொல்லுவா..” என்று கூறியதும் ராசாத்தியை நினைத்து வாய்விட்டுச் சிரித்த லட்சுமி, “ராசாத்தி சொல்லாமல் இருந்தால்தான் அதிசயம்..” என்று கணவருக்கு பதில் கொடுத்துவிட்டு, “நீ உட்காரு வளரு நான் உனக்கு பரிமாறுகிறேன்..” என்று கூறினார் லட்சுமி..

“நீங்க உட்காருங்க அத்தை நான் எல்லோருக்கும் பரிமாறுகிறேன்..” என்று சொல்லிவிட்டு சாப்பாடு பரிமாற ஆரம்பித்தாள் வளர்மதி.. அவளின் முகத்தைப் பார்த்தபடியே அமர்ந்திருந்த மகிழனின் மனதில் சந்தேகம் துளிர்விட, ‘இவங்க இருவரும் எப்படி கல்யாணத்துக்கு வந்தாங்க.. ராசாத்தி யாரு..’ என்றவன் யோசிக்க, “அது யார் அத்தை ராசாத்தி..” என்று கேட்டாள் வளர்மதி.. அவளின் கேள்வியில் கணவனும், மனைவியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்..

“உன்னோட அம்மாதான் வளர்.. அவளோட பேரு ராசாத்தி.. இந்த உண்மை உனக்கு தெரியாதா..?” என்றுகேட்டதும், ‘அம்மா பேரு ராசாத்தியா..?’ என்றவள் அதிர்ச்சியில் சிலையாகிவிட, ‘அத்தை பேரு ராசாத்தியா..?’ என்று நினைத்தவனும் அதிர்ச்சியில் பெற்றோரின் முகம் பார்த்தான்..

“அம்மா நீங்க என்ன சொல்றீங்க..? அத்தை பேரு பொன்னுத்தாய் தானே..?” என்று சந்தேகத்துடன் கேட்டான் மகிழன்.. அவனின் முகத்தைப் பார்த்த லட்சுமியோ, “நானும் ராசாத்தியும் சின்ன வயதில் இருந்தே தோழிகள் மகிழா.. உங்கப்பாவை திருமணம் பண்ணுகிற வரையில் அவள்தான் எனக்கு பக்கபலமாக இருந்தா..” என்று சொல்லும் பொழுது அதிர்ச்சியில் இருந்து மீண்டவள் வந்த கண்ணீரை உள்ளிழுத்துக்கொண்டு எல்லோருக்கும் பரிமாறினாள்..

அவள் மெளனமாக இருப்பதைப் பார்த்த மகிழன், “என்ன வளரு என்ன எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிற..” என்று கேட்டதும் கணவனை நிமிர்ந்து பார்த்து, “அத்தை அவங்களோட நட்பு பற்றி பேசும்போது நான் அமைதியாகத்தான் கேட்கணும்.. எனக்கு தெரியாத பலவிஷயங்கள் அதில் இருக்கிறது இல்ல..” என்று இருபொருள்பட கூறிய வளரின் முகத்தில் புன்னகை மட்டும் மாறவே இல்லை.. அவள் எதார்த்தமாக சொல்வதாக நினைத்த லட்சுமி, “ராசாத்திக்கு நான் என்றால் அவ்வளவு பிரியம் வளரு.. நானும் அவளும் பண்ணு சேட்டை இருக்கே.. ஸ்கூலுக்கு போகாமல் வயக்கட்டையே சுத்திட்டு வருவோம்..” என்று சந்தோஷத்துடன் கூறினார்..

மூவரும் சாப்பிட்டு முடிக்கும் வரையில் அமைதியாக இருந்த வளர்மதி அவர்கள் சாப்பிட்டு முடித்ததும், “அத்தை எனக்கு பூ வாசம் சேரவே இல்ல.. ஒரு மாதிரி வயிற்றை பிரட்டுது.. நான் போய் தூங்கவா..?” என்று பாவமாகக் கேட்ட மருமகளைப் பார்த்த லட்சுமிக்கு மனமுருகிப் போய்விட்டது..

“ம்ம் போ உன்னோட அறையில் போய் தூங்குமா.. இன்னைக்கு மற்ற சடங்கு எல்லாம் செய்ய நேரம் சரியில்லன்னு ஐயர் சொன்னார்.. அதனால் நீ போய் நிம்மதியாக தூங்கு..” என்று சொல்லிவிட்டு, “நான் அவளுக்கு துணைக்கு படுத்துத்கிறேன்.. நீங்க இருவரும் உங்களோட அறைக்கு போங்க..” என்று சொல்ல மகிழன் வளரின் முகத்தைப் பார்த்துவிட்டு தன்னுடைய அறைக்குள் சென்று மறைந்தான்..

அவன் சென்றதும் தங்களின் அறைக்குள் நுழைந்த வளர்மதி படுக்கையில் படுத்து கண்மூட அவளின் அருகில் படுத்து உறங்க ஆரம்பித்தார் லட்சுமி.. வளர் எதையோ நினைத்து கண்ணீர் விட்டபடியே விடியும் வரையில் தூங்காமல் இருந்தாள்.. மகிழனும் சிந்தனையுடன் எதுவும் சொல்லாமல் அமைதியாக உறங்க ஆரம்பித்தான்.. ஆனால் உறக்கம் வராமல் விடியும் வரையில் விழித்திருந்தான்.. திருமணம் ஆன முதல் நாளே இருவரின் இடையே பிரிவும் ஆரம்பம் ஆகியது.. கணவன், மனைவியின் இடையே இருந்த சந்தேகத்தின் விரிசல் பெருசாக ஆரம்பித்தது..

நேசத்தில் சந்தேகம் துளிர்விட்டது...
 




Last edited:

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
Nice update Sandhya dear?
Valarku unmaiya sollungappa pillai romba kulappathalu iruku:rolleyes:?
Aanal nalla marumagalaka mamiyar mamanarai varutha padutha koodathunu samalikara(y):cool:
akka ennoda bro pathiyil post panniddaan.. naan ippothan paarthen.. edit panniden padinga.. illaddi thodarchi puriyathu.. thanks akka...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top