• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thurathum Nizhalgal 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Jensi Jose

மண்டலாதிபதி
Joined
Feb 13, 2018
Messages
168
Reaction score
1,411
Location
Mumbai
துரத்தும் நிழல்கள்

அத்தியாயம் 8​

யார் நீ?

தன்னிடம் கேட்டவனிடம் வழி தெரியாமல் தொலைந்த பிள்ளைப் போல திரு திருவென முழித்தாள் ரிஷா.

அவளிடம் தன் அடையாள அட்டையை நீட்டினான் இந்தர். அவனா இவன்? எனும் வியப்பு ஓங்க அவனைப் பார்த்தாள்.

நீ லாயரா இந்தர்?

ம்ம்… என்றான் அமர்த்தலாய்

வெறித்த பார்வை பார்த்துக் கொண்டிருந்தவளை அவன் குரல் அசைத்தது.

நீ யார்னு சொல்லவே இல்லியே?

நான்.. நான் ரிஷா, ரிஷா சண்முகம் என்றாள் பதட்டமாக,

ம்ம்…. என்றவன் அவள் பேச தயங்குவதைப் பார்த்து அந்த டிரைவருக்கு தமிழ் தெரியாதுன்னு நினைக்கிறேன். நீ பேசுவதற்கு தயங்காதே என்றவன், சரி நான் முதலில் என்னைப் பற்றிச் சொல்கிறேன். அப்பதான் உனக்கு என் மேல் நம்பிக்கை வரும்.

நான் ஒரு லீடிங்க் லாயர் கிட்டே தற்போது ஜீனியராக பணி புரிகிறேன். என்னோட லாயர் எனக்கு முதன் முதலா சக்ஸேனா கேஸை எனக்குத் தந்தார். தன் கீழே வேலைப் பார்த்துக் கொண்டிருந்த ஓரு ஸ்டாஃபை பல முறை வலுக்கட்டாயமாக வல்லுறவு செய்ததான சக்ஸேனாவுக்கு எதிரான அந்த கேஸ் எத்தனையோ பேர் எடுக்காமல் விட்டிருக்க, உண்மைக்கு குரல் கொடுக்கிறதாக நினைத்து அந்த பாதிக்கப் பட்ட பெண்ணுக்காக சவாலாகவே அந்த கேஸை எடுத்துக் கொண்டேன்.

நான் அந்த கேஸ் எடுத்ததிலிருந்து தன்னோட பணபலத்தால எத்தனையோ முறை அந்த கேஸ் சரியான முறையில் நடத்த விடாம சக்ஸேனா மற்றும் அவனுடைய ஆட்கள் முயற்சி செஞ்சாலும் அவரால என்னை தடுக்க முடியலை. அந்த கேஸ் என் முதல் கேஸ் ஆனதால் என்னிடம் இருந்த அதீத ஆர்வமோ? நீதியின் பால் நான் கொண்டிருந்த தணியாத தாகமோ என்னமோ? நான் ரொம்பவே முயற்சி செய்து சக்ஸேனாவிற்கு தண்டனை வாங்கி கொடுத்து விட்டேன்.

என்றவனை பாராட்டுதலாக பார்த்திருந்தாள் ரிஷா.

ஆனால், என்னிக்கு அந்த சக்ஸேனா ஜெயிலுக்கு போனானோ அன்னியிலிருந்து எனக்கு எம கண்டம், ராகு காலம் இன்னும் என்னென்ன கெட்டதோ அத்தனையும் ஆரம்பிச்சிடுச்சு. எங்கே போனாலும் ஆட்கள் அடிக்க துரத்தினானுங்க. ஒரு தடவை என் வீட்டிலயே தாக்குதல் நடந்துச்சு. என் கூட இருந்த மத்த ரூம் மேட்ஸ் நீ வேற இடத்துக்குப் போன்னு கையெடுத்து கும்பிடற அளவுக்கு ஆகிடுச்சு. என்னோட பாஸ் அதான் அந்த லீடிங்க் லாயர் நம்ம வாழ்க்கையில இதெல்லாம் சகஜம் தான். முதல் கேஸே நல்ல பரபரப்பான கேஸா அமைஞ்சிடுச்சு, வாழ்த்துகள்னு சொல்லி எனக்கு லீவும், கையில பணமும் தந்து ஒரு மாதத்துக்கு எங்கேயாச்சும் கண்ணுல படாம ஒளிஞ்சிருன்னு சொன்னார்.
 




Jensi Jose

மண்டலாதிபதி
Joined
Feb 13, 2018
Messages
168
Reaction score
1,411
Location
Mumbai
அதற்காக நான் இரயில் நிலையம் வந்த போது தான் அந்த துப்பாக்கிச் சூடு நடந்தது. அந்த துப்பாக்கிச் சூடு உன் உயிரை போக்குறதுக்காக உனக்கெதிராக நடந்ததுன்னு இப்பதான் எனக்குப் புரியுது, ஆனால் அப்ப எனக்கு இருந்த பயத்தில நான் ஓடிட்டு இருக்கிற பாதையில நீ நடுவில வர்றேன்னு எரிச்சலா தோணுச்சு அதான் உன்னை இழுத்திட்டு கூடவே கொண்டு போயிட்டேன்.

அப்போது எனக்கு வந்த ஆபத்தில் நீ மாட்டிக்க கூடாதுன்னு தோணுச்சு. ஆனால், இப்போ புரிந்த உண்மை என்னன்னா உன்னோட ஆபத்தில் நானே வாண்டடா தலையைக் கொடுத்திருந்து இருக்கிறேன்.

சரி அது என்னவாகவும் இருந்து விட்டு போகட்டும். கண் முன்னாடி ஒருத்தருக்கு ஆபத்துன்னு தெரிந்தும் உன்னை விட்டு விட்டு போக எனக்கு மனதில்லை.

என்னச் செய்யறது? தமிழச்சியா வேற போயிட்ட” அவளை இலகுவாக்க கிண்டலாய் பேசியவனின் குரலில் நட்பு பாவனை இருந்தது. மேலும் தொடர்ந்தான்.

நான் சில வருடங்களாதான் மும்பையில் இருக்கிறேன். என் குடும்பம் இருப்பது தமிழகத்தில். என்னைப் பற்றி நான் ஏறத்தாழ எல்லாமுமே சொல்லி விட்டேன். என் மேல் நம்பிக்கை இருந்தால் உன்னைப் பற்றி விபரங்களை இனியாவது சொல்வியா ரிஷா?

ம்ம்க்கும்… குரலை சரிப்படுத்திக் கொண்டாள் ரிஷா.

இப்பத்தான்.. ம்க்கும்... இப்பதான் என்னைச் சுற்றி ஆபத்து இருக்குன்னு நான் முழுமையா புரிந்துக் கொண்டேன்னு சொல்லணும்.

இத்தனை நேரமும் நடந்தது எல்லாம் என்னைக் கொல்வதற்கான முயற்சியாக இருக்க அதை உணராமல் நான் இருந்தது குறித்து ரொம்பவே அவமானமாக உணர்கிறேன் இந்தர்.

முதல்ல உனக்கு நன்றி சொல்லிக்கிறேன் இந்தர், கூடவே ஸாரியும்.

யார் எவருன்னே தெரியாத போதும் என் உயிரை ரெண்டு தடவை காப்பாத்திருக்க அதுக்கு ரொம்ப தேங்க்ஸ். அப்பப்போ விளையாட்டுக்கு பேசியிருந்தாலும் அனாவசியமா நிறைய நேரம் உன்னை கிண்டலடிச்சிருக்கிறேன் மன்னிச்சுக்கோ... ப்ளீஸ்.

ம்ப்ச்ச்… இப்ப இதெல்லாம் எதுக்கு? நீ முதல்ல என்னப் பிரச்சனைன்னு சொல்லு? அதற்கு என்னச் செய்யலாம்னு பார்க்கலாம்?

உனக்கே இத்தனை பிரச்சனை இருக்கிற போது நீ என்னைப் பற்றி யோசிக்கிற பார்த்தியா? ரொம்ப நன்றி.. துளிர்த்த கண்ணீரை துடைத்தெடுத்தாள்.

இந்தர் அவளது வார்த்தைகளுக்காக காத்திருப்பதை உணர்ந்து பேச தொடங்கினாள்.

என்ன விஷயம்னு நீ என் கிட்டே கேட்கிற? ஆனா என்ன விஷயம்னு எனக்கு யாருமே தெரிவிக்கவில்லை. அது குறித்து எனக்கே தெரியாதுன்னு சொன்னா நீ நம்புவியா?

ம்ம்…இந்தரின் நெற்றிச் சுருங்கி சமமானது.

எதுக்குன்னே தெரியாம என்னை தனியாகவே வச்சிருந்தாங்க என் பெற்றோர்கள். வீட்டில் நிகழ்ந்தவைகளைப் பார்த்த வரையில் எனக்கு ஒருவர் மீது சந்தேகம் உண்டு. 13 வயதிலிருந்து இப்ப வரைக்கும் நான் ஷாரதான்னு ஒரு லேடியோடு கூட தனியா டார்ஜிலிங்கில் படித்து வந்தேன்.

எப்பவாச்சும் அம்மா இல்லன்னா அப்பா என்னை பார்க்க வந்துட்டு போவாங்க, அதுவும் அவங்க ரெண்டு பேரும் என்னை ஒன்னு போல பார்க்க வந்ததே கிடையாது. தனி தனியேதான் வருவாங்க. என்னப் பிரச்சனை? நான் எதுக்கு தனியா இருக்கிறேன்னு நான் கேட்காத நாளில்லை. ஆனா, சத்தியமா சொல்றேன் இந்தர் இன்னிக்கு தேதி வரைக்கும் எனக்கு உண்மையான காரணமே தெரியாது.

தன் மன வருத்தத்தை பகிர்ந்துக் கொள்ள அனுசரணையானதொரு உள்ளம் கிடைத்து விட்டது என்று எண்ணியதாலோ என்னமோ அவளைக் கேளாமலே கண்களினின்று சுரந்து அவள் மடியில் இருந்த பையில் விழுந்து பட்டுத் தெரித்தது கண்ணீர் துளிகள்.
 




Last edited:

Jensi Jose

மண்டலாதிபதி
Joined
Feb 13, 2018
Messages
168
Reaction score
1,411
Location
Mumbai
2 நாளைக்கு முன்னாடி எனக்கு என்னோட கஸின் பிரதர் கிட்டே இருந்து போன் வந்தது. அம்மா அப்பாவுக்கு உடல் நிலை சரி இல்லாததாகவும் உடனே சென்னை வரும் படியாகவும் சொன்னாங்க. ஷாரதா ஆண்டியும் அதே நேரம் கல்லூரிக்கு வந்து லீவு கேட்டுட்டு என்னைப் புறப்பட சொன்னாங்க. நானும் சென்னைப் போகப் போறதா நினைத்து தான் அவங்களோட புறப்பட்டேன். ஆனால், ஷாரதா ஆண்டி என்னை அழைச்சிட்டு வந்தது மும்பை இரயிலில். இப்பன்னு இல்ல எப்பவுமே ஷாரதா ஆண்டிகிட்டே நான் எந்தவொரு கேள்வி கேட்டாலும் அவங்க என் கிட்டே சரியான பதில் அல்லது காரணம் எதுவுமே சொல்லியது கிடையாது.

அதனால அவங்க அழைச்சிட்டு போகிற மாதிரியே போகலாம் எப்படியாவது அம்மா, அப்பாவை பார்த்தா சரிதான்னு தோணினதால அவங்க கிட்டே விபரம் கேட்கவில்லை.

ஆனால், ஷாரதா ஆண்டி பாதி பயணத்திலேயே என்னை விட்டு பிரிவாங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. இன்றைக்கு மதிய வேளை இரெயிலில் அதுவும் மும்பை வருவதற்கு சில மணி நேரங்கள் முன்பாக சில கற்றைக் காகிதங்கள் கொடுத்து , கூடவே நான் என்னச் செய்யணும்னு என்ன செய்யக் கூடாதுன்னு சிலவற்றைச் சொல்லிக் கொடுத்து, என்னை உடையவே மாற்றி புர்காவை உடுத்த வைத்து அப்புறப்படுத்திட்டு சம்பந்தப் படாதவங்க மாதிரி என்னை விட்டு தள்ளி நின்னாங்க.

எதற்காக இப்படி நடந்துக் கொள்ளுறாங்கன்னு எனக்கு ஒன்னுமே புரியவில்லை. ஆனால், என்னுடன் இத்தனை வருடங்கள் சாந்தமே உருவாக இருந்த ஷாரதா ஆண்டிக்கு குங்க்பூ எல்லாம் தெரியும் என்பதே நான் அதற்கு அப்புறமாகத்தான் அறிந்துக் கொண்டேன்.ரொம்பவே அதிர்ச்சியான தருணம் அது. ஷாரதா ஒரு எஸ்கார்ட் அவரது பொறுப்பில் என்னை இது நாள் வரையிலும் வைத்திருந்து இருக்கிறார்கள். அதன் தேவை என்ன என்று என்னை ஷாரதா ஆண்டியின் நிஜ ரூபம் வெளிப்பட்டு மிரட்டியது தான் உண்மை.

தான் ஷாரதாவிடம் கண்ட அந்த மாறுதலை, இரயிலில் நிகழ்ந்த சம்பவங்களை அதிர்ச்சி மாறாமலேயே கூறியவள்.

என் அம்மா அப்பா என் கூட இல்லாத நிலையில் , அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஷாரதா ஆண்டி, என்னை கருத்தாக பல வருடங்களாக பார்த்துக் கொண்டவர், ஒரு ஆபத்து என்று வந்த பின்னாலும் என் பாதுகாப்பை முதலில் யோசித்தவர் அவர் எதைச் சொன்னாலும் என்னுடைய நன்மைக்காகத்தான் இருக்கும் என்ற உறுதி எனக்கு ஏற்பட்டது.

அதனால் அவர் சொன்ன படியே இந்த விலாசத்துக்கு போகவே நான் முயற்சி செய்தேன். அப்போது தான் பாந்திரா டெர்மினஸில் அந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம். அதன் பின்னால் நீ என்னை ஸ்டேஷனில் இறக்கி விட்டதும் நான் அந்த குறிப்பிட்ட விலாசத்திற்கு செல்ல வேண்டியிருக்க வேண்டும். அதற்காகவே டாக்ஸி ஸ்டாண்ட் சென்றேன்.

ஆனால், என்னுடைய இந்த தலைமறைவு வாழ்க்கைக்கு காரணியாக , என்னுடைய சிறுவயது தோழன் இறந்ததற்கு காரணமான பணத்திற்காக எதையும் செய்யத் துணியும் அந்த ருத்ரபாண்டி அங்கிளை ஸ்டேஷனில் பார்த்ததும் நான் பயந்து நடுங்கினேன்.அப்போது அவர் கண் முன்னாலிருந்து மறைவது ஒன்றே எனக்கு தெரிந்த தீர்வாக இருந்தது.

பயம் என் கண்களை மறைத்து விட்டது. நான் செல்ல வேண்டிய பாதையை மறக்கடித்து விட்டது.
எனக்கு இந்த மும்பை மாநகரில் தெரிந்த ஒரே நபர் நீயாக இருக்க, உன்னோடு பயணிப்பது எனக்கு பாதுகாப்பாக தோன்றியது.

அதனால் நீ ஏறிய பஸ்ஸில் ஏறி நானும் பயணித்தேன். நீ கடற்கரைக்கு வந்த பின்னர் ஒதுங்கி அந்த இருட்டில் பாதுகாப்பிற்காக உட்கார்ந்திருந்திருக்க வேண்டும். ஆனால், அது புரியாமல் நான் உன்னை பின் தொடர்ந்து தொந்தரவு செய்து விட்டிருக்கிறேன்.

பெருமூச்செழுந்தவளாய் தொடர்ந்தாள்.

நிகழ்ந்தவற்றையும் நான் நடந்துக் கொண்டதையும் பார்க்கையில் எனக்கு என்னைப் பார்க்கவே தலையிறக்கமாக இருக்கு, ஒரு பிரச்சனை என்று வந்த உடன் சட்டென்று என்னச் செய்ய வேண்டும்? என்று என்னால் தீர்மானிக்க முடிய வில்லை.

உடனே பயந்து போய் இங்கேயும் அங்கேயுமாக அலைந்து திரிந்து நேரத்தை வீணாக்கியது மட்டும் இல்லாமல் உன்னையும் பிரச்சனையில் இழுத்து விட்டு விட்டேன். என்னால உனக்கு மிகவும் தொந்தரவு தான் மன்னிச்சிரு இந்தர்.

ம்ம்ம் அமைதியாக இருந்தவன்.

அதை விட்டிரு ரிஷா, நானும் தான் உன்னைப் பார்த்ததும் ஏதேதோ அனாவசியமா பேசி இருந்தேனே, நாமெல்லோரும் தவறுகின்றவர்கள் தான். கவலைப் பட வேண்டாம் ரிஷா இனி உன் பிரச்சனை உன் பிரச்சனை அல்ல, நம்ம பிரச்சனை சரியா?

'ப்ரெண்ட்ஸ்',

அவன் நீட்டிய கையை ஆதூரமாக பற்றி கைக் குலுக்கிக் கொண்டாள் ரிஷா.

'ப்ரெண்ட்ஸ்'

பதில் சொன்னவளின் முகம் வெகுவாய் மலர்ந்திருந்தது.

தொடரும்​
 




Last edited:

Jensi Jose

மண்டலாதிபதி
Joined
Feb 13, 2018
Messages
168
Reaction score
1,411
Location
Mumbai
Inder nilamai ivalo kavalaikitamaa sis.aana first Caseil jeyithu oru ponukku nyayam seithu irukane(y)(y)(y)
உண்மையிலேயே இந்தர் பாராட்டுகளுக்கு உரியவன் தான்
நன்றிகள் சிஸ் :)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top