• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thuratthum nizhalgal 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Jensi Jose

மண்டலாதிபதி
Joined
Feb 13, 2018
Messages
168
Reaction score
1,411
Location
Mumbai
ஹாய் ப்ரென்ட்ஸ்,
ரொம்ப ஷாக் ஆகாதீங்க 4 வது அத்தியாயத்தோடு வந்து விட்டேன். :)

கதையை பதிவிடும் முன்னதாக ஒரு முன்னுரை/என்னுரை.

அது என்னவென்றால் இந்த கதையில் ஹீரோயின் சேஸிங்க்கிற்காக எனக்கு ஒரு நகரத்தை காண்பிக்க வேண்டி இருந்தது. கற்பனையான ஒரு உலகை சுட்டிக் காட்டுவது அவ்வளவு எபெக்டிவ் ஆக இருக்காது என்பது என் எண்ணம். அதனால் எனக்கு மிகவும் பரிச்சயமான என் வாழ்விடம் மும்பையை களமாக காட்ட எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

பொதுவாகவே மும்பையை கொலைக்கார நகரம் போல படத்திலும், நாடகங்களிலும் காண்பிக்கும் போது மிகவும் கொதிப்பாக உணர்வேன். that much I love my mumbai & எங்கள் மும்பை கொடூரமான நகரம் அல்ல. உயிர்ப்பான நகரம்.(போதும் அடங்குனு சொல்றீங்களா ஹி ஹி)

ஆகையால் சொல்ல வருவது என்னவென்றால்,

இந்த கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே.
கதையாக மட்டும் கண்டு களிக்க கேட்டுக் கொள்கிறேன்.
 




Last edited:

Jensi Jose

மண்டலாதிபதி
Joined
Feb 13, 2018
Messages
168
Reaction score
1,411
Location
Mumbai
தோட்டா என்பது Gun அதாவது சுடுகலனின் குழலில் இருந்து வெளியேறும் எறியமே ஆகும். ஆங்கிலத்தில்,
புல்லட் என்ற சொல், பிரெஞ்சு வார்த்தையான boulette-ல் (பொருள்: "சிறு பந்து") இருந்து வந்தது.தோட்டாக்கள் வெவ்வேறு வகையான மூலபொருட்களால் செய்யப்படுபவை. தோட்டாக்கள், அதன் தேவைக்கேற்ப பல பாணியிலும், வடிவிலும் தயாரிக்கப்படுகிறது. தோட்டாக்கள் இயல்பாக எந்த வெடிபொருளையும் கொண்டிருக்காது, மோதலாலோ அல்லது துளைத்தோ தான் இலக்கை சேதமடையச் செய்யும்
தோட்டாவின் உந்துதல் பல வழிகளில் நிகழலாம்:
1.வெடிமருந்தை மட்டுமே பிரயோகிப்பது (தீக்கல்லியக்க ஆயுதங்களை போல்)
2.தட்டும் மூடி மற்றும் வெடிமருந்தை பிரயோகிப்பது
3.வெடிபொதியை (தோட்டா,பொதியுறை, வெடிமருந்து, மற்றும் எரியூட்டி ஆகியவற்றின் ஒன்றிணைப்பு)
பிரயோகிப்பது

View attachment 570
1.வார்க்கப்பட்ட குண்டு (இடது),
2.அடியில் தட்டு பொருத்தப்பட்டது (நடு) மற்றும்
3. உயவூட்டப்பட்டது (வலது)
 




Jensi Jose

மண்டலாதிபதி
Joined
Feb 13, 2018
Messages
168
Reaction score
1,411
Location
Mumbai
ரிஷாவோடு மற்றவர்களையும் மும்பையில் உதிர்த்து விட்டிருந்தது இரயில். அந்த ப்ளாட்பாரத்தில் ஆட்கள் குறைந்து சுற்றும் முற்றும் யாரும் இல்லாத நிலை வந்து விட்டிருந்தது. சாயுங்காலம் 5 மணி அளவில் அங்கு வந்துச் சேர்ந்து இன்னும் அரை மணி நேரம் ஆகியும் ரயில்வே ப்ளாட்பாரத்திலேயே, இருந்த இடத்திலேயே அசையாமல் உறைந்தவளாக அமர்ந்திருந்தாள் ரிஷா.

தான் வெகுவாக ஆசைப்பட்ட சுதந்திரம் தற்போது திகட்ட திகட்ட கிடைத்திருக்கிறது. அக்கம், பக்கம் தன்னை கட்டுப் படுத்துவார் யாருமில்லை. இதைச் செய்யாதே , அதைச் செய்யாதே என நெருப்பைத் தேடி ஓடும் குழந்தையை அதட்டுவது போல அதட்டுவதற்கு அவளோடு ஆட்களே இல்லை. ஆனால், இந்த சுதந்திரம் இவ்வளவு கொடுமையாக இருப்பதை தான் எப்படிச் சொல்வது? ஒன்றும் புரியவில்லை அவளுக்கு.

எதற்கு வந்திருக்கிறோம் என்றே புரியாமல், வரவேற்க ஆளுமில்லாமல், அநாதரவாய் எப்படியோ கனவுகளின் நகரமாம் மும்பைக்கு வந்து விட்டாள்.
மும்பையை ஒரு வார்த்தையில் விளங்கச் செய்ய வேண்டுமானால் “பரபரப்பு” என்று எழுதி அதனடியில் கோடிட்டு ஒற்றை வார்த்தைச் சொல்லி முடித்து விடலாம். உலகமே உற்று நோக்கும் பாலிவுட்-ம் நட்சத்திரங்களும், கிரிக்கெட்டர்களும் இருந்தாலும் நடுத்தர மக்கள்களின் கூடுதான் இந்நகரம்.

பெஸ்ட் பஸ், லோக்கல் ட்ரெயின் இவ்விரண்டும் மும்பையின் இரண்டு கண்கள். லட்சக்கணக்கான பயணிகள் தினமும் மும்பையின் இந்த ஓரமும், அந்த ஓரமும் பயணித்து, உழைத்து தங்கள் வருவாயோடு, இந்திய தேசத்தின் வருவாயையும் ஈட்டி களைத்து வீட்டிற்கு வந்து தூங்கி, மறு நாள் அதே பரபரப்பில் எழுந்து புறப்பட்டு நொடி நேர லோக்கல் ட்ரெயின்களை மனப்பாடமாய் வைத்து தொற்றிக் கொண்டு பயணித்து இதுவே அவர்களின் அன்றாட வாழ்க்கை எனில்,
வருடம் ஒரு முறையாகிலும் வரும் மழைப் பேரிடர்களிலும் அரசாங்கத்தின் உதவியை எதிர்பாராமல், பலவித இன , மத மக்களும் தோழமையோடு ஒருவருக்கொருவர் உதவி செய்து, பஸ்ஸிம் இரயிலும் துண்டிக்கப் பட்டாலும் அசராமல் பல மணி நேரங்கள் நடந்தே வீடு வந்து சேர்ந்து அடுத்த நாள் சலிக்காமல் மறுபடி அலுவலுக்கு பயணிக்கும் நெஞ்சுரம் கொண்டது மும்பை மாநகரம்..
 




Jensi Jose

மண்டலாதிபதி
Joined
Feb 13, 2018
Messages
168
Reaction score
1,411
Location
Mumbai
கடல்வழி வரும் தீவிரவாதியோ, பல இடங்களில் அல்லது இரயில் பெட்டிகளில் குண்டுவெடிப்போ எதுவும் எங்களை 24 மணி நேரத்திற்கு மேல் கட்டுப் படுத்தி வைக்க முடியாது என்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு விறுவிறுவென அடுத்த வேலையை கவனிக்கும் எம் பணி அயராது பணிப்புரிவதே எனக் கூறும் மாநகரம்.

இந்த பரபரவென கடக்கும் மாநகரத்தில் நாட்கள் நொடி வேகத்தில் நகர எவன் ஒருவன் எப்போது 20 வயதிலிருந்து லிருந்து 40ற்கு வந்தான், 40 வயதிலிருந்து 60 ற்கும், 60 வயதிலிருந்து எப்போது டிக்கெட் வாங்குகிறான் என்றே கணிக்க முடியாது வாழ்க்கையின் வேகம் அப்படி.

இத்தனை பரபரப்பிலும் பேஸ்புக்கில் சமூக விழிப்புணர்வு போஸ்ட் போட்டு பிடித்தவரை கொண்டாடுவதும், பிடிக்காதவரை நையாண்டி பேசி நகருவதும், வார இறுதியில் ஏதாவது ஒரு மலையுச்சியில் ட்ரெக்கிங்கோ, இல்லை கடற்கரையில் காற்று வாங்குவதோ, மாலில் படமோ பார்த்து தவறாமல் சிக்கனை ஒரு வெட்டு வெட்டி வார இறுதி நாளையும் ஜாலியாகவும் கழிப்பதுவும், திருவிழாக்களை ஒன்றையும் விடாமல் ஆரவாரமாக கொண்டாடுவதுவும், வாரத்தில் மூன்று நாட்கள் அசைவம் சாப்பிடாமல் இறைவனையும் விட்டு விடாமல் பூஜிப்பதுவும் இன்னும் என்னென்ன சொல்ல?

அந்த இரயில் நிலையத்தில் சுற்றும் முற்றும் தூரத்தில் பலர் போவதும் வருவதுமாக ரிஷாவை கவனிக்கவும் நேரமில்லாமல் அவரவர் வேலையில் மூழ்கியவர்களாய் இயந்திரத்தனமாய் நகர ரிஷாவிற்குதான் அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை.

அவள் மனக்கண்ணில் சில மணி நேரம் முன்பு ஷாரதா இரெயிலிலிருந்து பாய்ந்தது ஒன்றே சுழன்றுக் கொண்டிருந்தது.

இன்றைக்கு உன்னை விட்டு நான் பிரிய நேர்ந்தாலும்……..ஷாரதாவின் வார்த்தை காதுக்குள்ளாக ரீங்கரித்தது.

அவர் சொன்னதன் அர்த்தம் இதுவா? எத்தகைய ஒரு ஆபத்து அது?. அவரைச் சுற்றி நின்றவர்களின் உடல்வாகை எண்ணியதும் பயத்தில் சிலிர்த்தாள் அவள். அத்தனை பேரையும் எதிர்த்து நின்ற ஷாரதா கண்ணுக்குள் வந்தார்.

அவர்கள் அவரிடம் என்ன கேட்டிருப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அவர்களின் பிடிக்குள் ஆட்படாமல் அவர் நகர்ந்த லாவகம்.

தனக்கு புர்கா அணிவித்து பாதுகாத்து வைத்து விட்டு அவர் அவர்களுடன் வாக்குவாதம் செய்தது கண்டும் அவளுக்கு புரியாமலிருக்க அவள் குழந்தையா? நிச்சயம் அது அவளை ரிஷாவை தேடி வந்த நபர்கள். ஷாரதா சண்டையிட்டது தனக்காக அல்ல ரிஷாவிற்காக, அவளை பாதுகாக்க.

வெளி உலகம் பார்க்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தாளே எல்லாம் இதற்காகத்தானா? கழிவிரக்கத்தில் கண்கள் கசியவா? என அனுமதி கேட்டுக் கொண்டிருந்தது.

தான் இத்துனைக் காலம் வெறுப்போடு அணுகிய ஷாரதாவின் செயல்கள்தான் தன்னை இத்தனை நாட்கள் பாதுகாத்துக் கொண்டிருந்திருக்கிறது என்று எண்ணியதும் மனதிற்குள் குற்றவுணர்ச்சி எழுந்தது. தான் அவரை மனதிற்குள்ளாக கரித்துக் கொட்டியதனைத்தும் அவளை கொடுக்காய் கொட்டிக் கொண்டிருந்தது.
மறுபடி அவரைப் பார்க்க மனம் ஏங்கியது.

மறுபடி அவரைப் பார்ப்பேனா? விடைத் தெரியாத கேள்விகளுள் அதுவும் ஒன்றாகி விட்டது.

தனக்கு மட்டும் ஏன் இப்படி?

அம்மா அப்பாவிற்கு உடல் நலக் குறைவு என்ற தகவல் ஒரு பக்கம். கடந்த சில நாட்களாக அவரை தொடர்புக் கொள்ள இயலாத நிலை வேறு. முன்பே எத்தனையோ பதில் தெரியாத கேள்விகளால் மனம் அலை பாய்ந்துக் கொண்டிருக்க, இப்போதோ முன் பின் தெரியாத இந்த நகரத்தில் வந்து சேர்ந்து விட்டாள்.
 




Jensi Jose

மண்டலாதிபதி
Joined
Feb 13, 2018
Messages
168
Reaction score
1,411
Location
Mumbai
அவளிடம் இருக்கும் பணத்தில் தற்போது ரெயிலில் என்ன ப்ளைட்டிலேயே சென்னைக்கு பயணமாக முடியும். ஆனால், அவளை ஷாரதாவின் பேச்சு கட்டிப் போட்டிருந்தது. நிகழ்ந்தவற்றிலிருந்து அவள் ஒன்று மட்டும் புரிந்துக் கொண்டிருந்தாள். ஷாரதாவின் சொல், செயல் அனைத்தும் அவள் பாதுகாப்பிற்காக மட்டுமே தான் இருக்கும் என்பது. அதனால் அவரின் பேச்சை தட்டாமல் அவர் சொன்ன அதே இடத்திற்கு பயணமாக முடிவெடுத்து விட்டாள்.

இத்தனையும் அவள் யோசித்து முடிக்க ஒரு மணி நேரம் கடந்து விட்டிருந்தது. அருகிலிருந்த ஸ்டாலில் இருந்து டீயும் பிஸ்கட்டும் வாங்கி உண்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

அந்த சண்டை முடிந்து சில நேரம் கழித்தே வந்த இரயில் போலீசார் சுற்றும் இருந்தவர்களை விசாரித்து ஒன்றும் புரியாமல் திரும்பிச் சென்றதை கவனித்தாள். அவளது உடை மறுபடியும் அவளை பாதுகாக்க இவளிடம் போலீஸார் விசாரிக்கவில்லை.

மும்பை வந்து சேரும் முன்பே தன் உடையை மாற்றியவள். புர்காவை பையினுள் பத்திரப்படுத்தினாள். அதை அணிந்து அவளால் சாதாரணமாக நடமாட இயலவில்லை என்பது ஒரு காரணமென்றால், இனி யாரும் அவளைத் தேடி வர மாட்டார்கள் எனும் மனதின் தைரியம் மற்றொரு காரணம்.

மற்றொரு உடையை அணிந்து முகத்தை சீராக்கி இருந்தவள்

பையை திறந்தாள், அச்சோ என்ன இது? அவள் பையில் இருந்த பொருட்கள் தண்ணீரில் தழும்பி நின்றது . வாங்கிய தண்ணீர் பாட்டிலை பையில் வைத்திருக்க அதன் மூடி திறந்து தண்ணீர் கசிய எப்போது அது பையை நிரப்பியதோ அவளுக்கே தெரியாமல் இருந்திருக்கிறது. வழக்கம் போல அவள் ஆழ்ந்த சிந்தனைகள் தான் அதற்கும் காரணம் என்று தன்னையே நொந்துக் கொண்டாள்.

உள்ளே இருந்தவற்றை அப்படியே பற்றியவாறு தான் அமர்ந்திருந்த இடத்தின் பின்னே இருந்த இடத்தில், தன் பையில் இருந்த தண்ணீரை சரித்து கொட்டியவள் அத்தனை தண்ணீரும் வெளியேறியதும் பையின் ஈரம் போக என்ன செய்வது என புரியாதவளாக பொருட்களின் நிலையை சரி பார்த்தாள்.

வங்கி டாகுமெண்ட்களும் ,பணப்பையும் ப்ளாஸ்டிக்கில் பத்திரமாய் இருந்திருக்க, அது குறித்து ஆசுவாசம் கொண்டவள் போட்டோவும் சில தாள்களுமாய் இருந்தவற்றை எடுத்துப் பார்த்தாள் அவை தண்ணீரில் முற்றும் நனைந்ததாய் இருந்தன.

நனைந்தவற்றில் தான் மும்பையில் எந்த விலாசத்திற்கு செல்ல வேண்டும் என்று தேடும் விபரம் இருக்கும் என்று எண்ணியவளாக பையை மடியில் வைத்து மறுபடி இருக்கையில் அமர்ந்து அவற்றை அமைதியாக பிரித்துப் பார்த்தாள். இரண்டாய் மடித்திருந்த கற்றைத் தாள்களை திறக்க, நடு மத்தியில் இருந்த புகைப்படம் தண்ணீர் பட்டு முழுவதும் சிதிலமாகி வண்ணக் கலவையாய் மாறி இருந்தது. அந்த புகைப்படத்தின் நிறம் , தன்னை மூடி இருந்த தாளில் பரவி எழுத்துக்களை மறைத்து இருந்தது.

ஒரு இளைஞனை அவன் முன் நெற்றிப் பகுதியை மட்டும் தான் புகைப்படத்தில் கண்டது அவள் நினைவிற்கு வந்தது. அவள் அதனை சட்டைச் செய்யும் நிலையில் இல்லை. மேலும் தேடலானாள்.

அந்த புகைப்படத்தை அகற்றியவள் தாளை விரித்துப் பிடித்தாள். அது ஒரு மின்னஞ்சலின் பிரதி. எழுதியவர் பெயரை புரிந்துக் கொள்ள முடியாத அளவுக்கு ரகசியமான மின்னஞ்சல் முகவரியாக இருந்தாலும் என் மகள் என் மகள் என்று பலமுறை ரிஷாவைக் குறித்து குறிப்பிட்ட விதத்தில் அது தன் அப்பாவின் கடிதம் என்று ரிஷாவிற்கு புரிந்தது.

ஷாரதாவிற்கு இந்த மின்னஞ்சல் அப்பா அனுப்பி இருந்திருக்க வேண்டும்.
 




Last edited:

Jensi Jose

மண்டலாதிபதி
Joined
Feb 13, 2018
Messages
168
Reaction score
1,411
Location
Mumbai
மின்னஞ்சலை வாசித்தில் அவளுக்கு புரிய வந்தது இவைதான் குறிப்பிட்ட பையனை தாங்கள் ரிஷாவிற்கு வாழ்க்கை துணையாக தெரிந்தெடுத்திருப்பதாகவும், அவளின் படிப்பு முடிந்ததும் திருமணமாகி அவனோடு ரிஷா வெளிநாட்டிற்கு பயணமாக வேண்டுமென்று விபரமும் கொடுக்கப் பட்டிருந்தது.

அதை வாசித்ததும் சட்டென்று ரிஷாவின் மனதில் பெற்றோர் செயல்கள் மீதான விரக்தியும் , வெறுப்புமான தளைகள் சூழ்ந்துக் கொண்டன. என்னதான் பிரச்சனையாக இருந்தாலும் தன் பெற்றோர்கள் தங்களோடு தன்னையும் வைத்துக் கொண்டு பாதுகாக்காமல், இத்தனை வருடங்கள் பிரித்து வைத்ததுமில்லாமல், படிப்பு முடிந்ததும் தாய் தகப்பனோடு தான் நாட்களைக் கழிக்க எண்ணியதையும் மாற்றும் விதமாக தன் விருப்பம் கேட்காமலேயே தனக்கு உடனே திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை பார்த்திருப்பதை நினைத்து மனம் வெதும்பினாள்.

என்ன பிரச்சனையென்று என்னிடமே சொல்லாமல் மறைத்து வைக்க தான் என்ன இன்னும் 13 வயதுப் பெண்ணா?

என்னைச் சுற்றியுள்ள ஆபத்தை எனக்கேச் சொல்லாமல் எத்தனை நாட்கள் மறைப்பதாக இவர்களுக்கு எண்ணமாம்? மனதிற்குள் பொருமினாள்.

எவன்டா அவன் அந்த மிலிட்டரி கட் பையன், அவன் நேர்ல கிடைச்ச செத்தான்” யார் மேலுள்ள கோபத்தையோ அவன் மீது காட்டி கருவிக் கொண்டாள்.

இந்த பொண்ணு எனக்கு வேண்டாம்னு சொல்லுற அளவுக்கு அவனைக் கொடுமை செஞ்சு கதற விடல என் பேரு ரிஷா இல்ல” மனதிற்குள்ளாக சூளுரைத்துக் கொண்டாள்.

பையனின் பயோடேட்டா என ஒரு தாள் இருக்க அதுவும் தண்ணீரில் நனைந்து பரிதாபகரமாக இருந்தாலும் பிரபாகரன் என்று மட்டும் அதில் பெயர் தெரிந்தது.

அவளுக்கு மீதியை வாசிக்கும் ஆர்வமில்லை. உடனடியாக ஸ்டேஷனிலிருந்து புறப்பட்டு செல்ல வேண்டும். அதற்காக ப்ரீபெய்ட் டாக்ஸி கிடைக்குமிடம் முதலில் தேட வேண்டும் என எண்ணியவளாய் விலாசம் தேட,

அந்த தாள்களுக்கிடையில் ஒரு விசிட்டிங்க் கார்ட் கிடைத்தது. அதில் இருந்த மும்பை விலாசம் "சாத் பங்களா, அந்தேரி"
 




Jensi Jose

மண்டலாதிபதி
Joined
Feb 13, 2018
Messages
168
Reaction score
1,411
Location
Mumbai
View attachment 571

அப்போதுதான் சுற்றும் முற்றும் பார்த்தாள், தான் இருக்கும் ஸ்டேஷன் பெயர் “Bandra” என்றிருக்க அது பழங்கால கட்டமைப்பில் இருப்பதைக் கண்டு சுற்றும் முற்றும் பார்த்தவள் கைப்பையை தோளில் போட்டுக்கொண்டு பக்கத்திலிருந்த தன் துணிகள் இருந்த பையை குனிந்து எடுத்து நிமிரவும் “விஷ்க்: தோட்டா ஒன்று அவளருகே இருந்து பாய்ந்துச் சென்றது. அருகில் இருந்த இருக்கை ஒன்றில் பாய்ந்து வெடித்து அதனை சற்றே சிதிலமாக்கியது.

அவள் சற்று நேரம் முன்பு நிமிர்ந்திருந்தால் அவள் முதுகிலோ, நெஞ்சிலோ பாய வேண்டிய தோட்டா அல்லவா அது, உண்மை உணர்ந்ததும் வெகுவாக மிரண்டாள். திடீரென வயிற்றுக்குள் பயப்பந்தொன்று கலவரமாய் சுழல, தோளில் ஒன்றும் கையில் ஒன்றுமாய் இரு பைகளோடும், எங்கே செல்கின்றோம் என்று இலக்கில்லாமல் தலை தெறிக்க ஓடினாள். அவள் பின்னால் தபதபவென்று ஆட்கள் துரத்துவது கேட்டது.

அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் என்ன நடக்கின்றது என்று கவனிக்க, பாதுகாப்பிற்கு இருக்கும் ரயில்வே போலீசார்கள் அருகே சென்று விட்டால் போதும் என்று எண்ணியவளாய் தன் கண்களை சுழற்றி பார்த்துக் கொண்டே அவள் ஓடிக் கொண்டிருக்க சட்டென்று அவள் கையைப் பற்றி இழுத்தது ஒரு கரம்.

அதுவரை அவள் ஓடிக் கொண்டிருந்த திசைக்கு மாறாய் ஓடி, ஜனத் திரளுக்குள்ளாக அவளை இழுத்துச் சென்று படிகள் ஏறி திசையறியாமல் அவனோடு பயணித்துக் கொண்டிருந்தாள் அவள். ஜனத் திரளுக்குள்ளாக வந்த பின்னர் அவர்களின் ஓட்டம் யாருக்கும் விசித்திரமாய் தோன்றவில்லை. தினமும் வேலை விட்டு திரும்புகின்றவர்கள் கூட இரயிலை பிடிக்க இவ்வாறு ஓடுவதுன்டே.

அவசரமாய், தர தரவென்று இழுத்து அழைத்து வந்த அவன் புறப்பட தயாராக நின்ற லோக்கலின் காலியான ஒரு பெட்டியில் தானும் ஏறி அவளையும் உள்ளே இழுத்துப் போட்டான். குரலெழுப்பி மும்பை லோக்கல் நகர்ந்து வேகமெடுக்க, அதுவரை அவளை இழுத்து வந்தவன் கைப்பிடி தளர்த்தி அவளை உதறி விடவே தடுமாறி நின்றாள் அவள்.

அறிவில்ல உனக்கு? ஒதுங்கி நிக்காம ஓடி வர்ற, என் பின்னால அத்தனை பேரும் ஓடி வந்துட்டு இருக்காங்க என் உயிர காப்பாத்துறதா? இல்லை உன்னைப் பார்க்குறதா? இந்த பொண்ணுங்களுக்கே எப்பவும் யாராவது ஹீரோ வந்து காப்பாத்தணும்னு நினைப்பு.

ஆம்பளைங்க முன்னேறாம போறதுக்கு காரணமே உங்களை மாதிரி பொண்ணுங்கதான்…….விடாமல் பொறிந்துக் கொண்டிருந்தவனை ஆத்திரம் மிக முறைத்துக் கொண்டிருந்தாள் ரிஷா.

தொடரும்​
 




Last edited:

Jensi Jose

மண்டலாதிபதி
Joined
Feb 13, 2018
Messages
168
Reaction score
1,411
Location
Mumbai
super ippa thaan hero entryaaaa
எபி போட்டதும் பர்ஸ்ட் லைக் & கமெண்ட்...feeling blessed sis.

இவர் ஹீரோதானான்னு நான் யோசிச்சுட்டு இல்ல இருக்கேன்....பார்ப்போம். ;)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top