• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode TVPN-2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bhavya

அமைச்சர்
Joined
Feb 27, 2019
Messages
1,305
Reaction score
4,767
Location
Thanjavur
விட்டத்தை வெறித்தவாறு அமர்ந்திருந்த சாருவின் முன்பு ஆவி பறக்கும் காப்பியைக் கொண்டு வந்து வைத்தாள் நியதி.அவள் அருகில் அமர்ந்தவள்,


"என்ன சித்தப்பா வரன் பத்தி பேசினாரா?அதான் மூட் அவுட்டா இருக்கியா?"


திடுக்கிட்டு எழுந்து அமர்ந்த சாரு,


"உனக்கு எப்படிடி தெரியும்?"


"சித்தப்பாக்கு அந்த வரனப் பத்தி மாமாதான் சொன்னார்...அதப்பத்தி இங்க அவங்க பேசினதக் கேட்டேன்...நீ அது ஒரு விஷயத்துக்கு தானே இப்படி மூட் அவுட் ஆவ...!"


"நா கல்யாணம் பண்ணி போகனுமாம்...அம்முவ இவர் பாத்துக்குவாராம்...நீயே சொல்லு நியதி!அம்முவ விட்டுட்டு என்னால இருக்க முடியுமா!அவளும் என்னை விட்டு இருக்க மாட்டா...தெரிஞ்சும் அப்பா இப்படி சொல்லலாமா?"


அவளை ஓரிரு நிமிடம் கூர்ந்த நியதி,


"சாரு!இத்தன வருஷம் அம்மு யாரு?அவ உன்கிட்ட எப்படி வந்தான்னு நாங்க யாரும் கேக்கல...ஆனா இன்னிக்கு எனக்கு தெரியனும்..அம்மு யாரு? உன்கிட்ட எப்படி வந்தா?"


அவள் கேள்வியில் திகைத்து மவுனமாகிவிட்டாள் சாரு.


"சொல்லு சாரு? இன்னிக்கு நீ அத சொல்லித் தான் ஆகனும்"


"நியதி!அத தெரிஞ்சி என்ன ஆகப் போகுது...அம்மு என் பொண்ணு அவ்ளோ தான்"


"நீ பத்து மாசம் சுமந்து அவள பெத்தியா...பொண்ணுன்னு எந்த விதத்துல உரிமைக் கொண்டாட்ற?சித்தப்பா அன்னிக்கு சொன்னார் அம்முவோட நிஜமான அப்பாம்மா வந்து நின்னா என் பொண்ணு அத எப்படி தாங்குவான்னு! நானும் அதையே கேக்கறேன்...பை சான்ஸ் கொடு எங்க பொண்ணேன்னு வந்து நின்னா நீ என்ன பண்ணுவே?"


"நோ....அவளை யாருக்கும் கொடுக்க மாட்டேன்... எதுக்கு அவளைக் கூட்டிப் போயி பலிக் கொடுக்கவா...நோ...நா அனுப்ப மாட்டேன்...தெரிஞ்சே அவள ஆபத்துல தள்ள மாட்டேன்"


தந்தையைப் போலவே நியதியும் பேசவும் தாளமாட்டாமல் வாயை விட்டு விட்டாள் சாரு.நியதி எதிர்ப்பார்த்ததும் அதையே அல்லவா!அவள் உண்மையை வாய்விட்டு பகிர வேண்டும்.அமூல்யாவின் ரகசியம் வெளியே வந்தால் தான் சாருமதியின் வாழ்க்கை சீராகும்.


"சாரு! எப்படியும் பாதி உண்மையைச் சொல்லிட்ட மீதியையும் சொல்லிடு!"


அவசரத்தில் வாயை விட்ட தன்னையே நொந்துக் கொண்டாள் சாரு... ஆனால் எத்தனை நாட்கள் தான் அவளும் மனதிலேயே பூட்டி வைக்க முடியும்.யாரிடமாவது சொன்னால் தான் அவள் மனபாரம் சிறிதேனும் குறையும்.


"சொல்றேன்...ஆனா இது நம்ம நடுவுல மட்டும் தான் இருக்கனும்...வேற யாருக்கும் தெரியக் கூடாது...சரியா?"


"சரி சொல்லல..."என்று வாக்களித்தாள் நியதி.


ஐந்து ஆண்டுகளுக்கு முன்


இருந்தாற்போல் நான்கு நாட்கள் ஜுரம் என்று படுத்த விமலா எழவேயில்லை.சாருவிற்கு அம்மாவே எல்லாம்...தாய் என்பதை மீறி தோழியாகவும் வழிக்காட்டியாகவும் அவளுக்கு அவர் இருந்தார்.அவளுக்கு அவரின் இழப்பு இதயத்தின் ஒரு பகுதியையே இழந்தது போல் ஆனது‌.


நாளுக்கு நாள் அன்னையின் இழப்பில் அழுதே கரையும் மகளின் நிலையைக் காண சகிக்காமல் அவளை விமலாவின் பிறந்த வீடு இருக்கும் ராஜமுந்திரிக்கு அனுப்பி வைத்தார்.


அங்கே விமலாவின் தமையன் ராஜசேகர் அவன் மனைவி சுகந்தா அவர்களின் ஒரே மகள் நிஷா எல்லோரும் அவளை உற்சாகப்படுத்த முயன்றனர்.ஆனால் யாராலும் அவளை பழையபடி ஆக்க முடியவில்லை.


வேண்டா வெறுப்பாக அவர்கள் வற்புறுத்தலுக்காக உண்டாள் உறங்கினாள்.சினிமா ஷாப்பிங் என்று நிஷா அழைத்த எதற்கும் வர மறுத்துவிட்டாள். அருகில் இருக்கும் கோயிலுக்கு சென்று கண்ணை மூடிக் கொண்டு அமர்ந்துவிடுவாள்.பல மணிநேரம் கோதாவரி நதியின் மரங்கள் சூழ்ந்த அமைதியான கரையில் நதியை வெறித்தவாறு அமர்ந்திருப்பாள்.


அப்படி அமர்ந்த ஒரு நாள் சின்னஞ்சிறு சிசுவின் அழுக்குரல் மோனத்தில் ஆழ்ந்திருந்த சாருவை உலுக்கி அழைத்தது.தாய் எங்காவது அருகில் சென்றிருப்பாள் வந்ததும் குழந்தையின் அழுகை நின்றுவிடும் என்று முதலில் அமைதியாக இருந்தாள் அவள்.ஆனால் பதினைந்து நிமிடங்கள் கடந்தும் அழுகை நிற்கவேயில்லை என்று ஆகவும் அதற்கு மேல் அமைதியாக இருக்க முடியாதவள் குரல் வந்த திசையை நோக்கிச் சென்றாள்.


அடர்வான மரங்கள் இருந்த இடத்தில் அவள் கண்ட காட்சி அவளைத் திடுக்கிடச் செய்தது.ஆஜானுபாகுவான முரட்டு மனிதனின் (ஹீரோ இல்லை???) அருகே தொண்டை நீர் வற்ற அழுதுக் கொண்டிருந்தது ஒரே மாதமான குழந்தை.


அருகில் சென்று இவள் பார்த்த போது அவனுக்கு உயிர் இருப்பது போலவேத் தெரியவில்லை.அவன் உடலில் அங்கெங்கே காயங்கள் ரத்தம் உறைந்து காணப்பட்டது.மருத்துவளாதலால் அவன் நாடியைப் பிடித்துப் பார்த்தப் போது உயிர் இன்னும் அந்த உடலில் ஒட்டியிருப்பதை அது கூறியது.


வேகமாக நதிக்கரையை அடைந்தவள் பெரிய இலை ஒன்றில் நீரை பிடித்தவள் வேகமாகத் திரும்பி வந்து அவன் முகத்தில் தெளித்தாள்.அதில் லேசாக அசைத்தான் அவன்.குழந்தை இன்னுமும் அழுவதைப் பார்த்தவள் அதைத் தூக்கி தோளில் போட்டு லேசாகத் தட்டியவாறு கண் விழிக்க முயலும் மனிதனை கவலையோடுப் பார்த்தாள்.


கண் விழித்த அந்த மனிதன் குழந்தையோடு நின்றவளை குழப்பத்தோடு பார்த்தவன் தன் மங்கும் நினைவுகளை கோர்க்க முயன்றான்.அவன் விழித்ததைக் கண்ட சாரு,


"நுவ்வு எவரு?இதி மீ சிசுஷுனா?"


அவன் திருதிருக்கவும் தாயிடம் சரியாக தெலுங்கை கற்காத தன் சோம்பேறித்தனத்தை உள்ளூர நொந்துக் கொண்டாள்.


"நீ..ங்..க.. ததமி..ழா?"என்று கேட்டு அவள் வயிற்றில் பாலை வார்த்தான்.பின்னே இனி தெலுங்கை கட்டிக் கொண்டு கஷ்டப்பட வேண்டாமே என்ற நிம்மதிதான் வேறென்ன!(வருங்காலத்தை அறியாத நிம்மதி???)


"ஆமா தமிழ் தான்...இந்த குழந்தை உங்களுதா? உங்களுக்கு ரொம்ப அடிப்பட்டிருக்கே...வாங்க முதல்ல ஆஸ்பிட்டல் போலாம்"என்று ஒரு கையால் அவனைத் தூக்க முயன்றாள்.


ஆனால் வேண்டாம் என கையசைத்தவன்,


"இல்ல...நா இன்னும் பிழைக்க மாட்டேன்...பிழை..ச்சா..லும் அவ..ங்க என்..ன உயிரோ..ட விட மாட்டா..ங்க...தயவு... செஞ்சு இந்..த குழ..ந்தைய நீ..நீ..ங்க..ளே கூட்..டி போ..போயிரு..ங்...க..இது..உ..யி..ருக்கு ஆபத்து...போ..போலீ..ஸுக்கு..சொல்..ல வேவேண்..டாடாம்"


அவன் திக்கி திக்கி கூறியதை சேர்த்து பார்த்தவள் பயந்துப் போனாள்.மேலும் விவரமறிய,


"இந்த குழந்தைக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்..?இதோட அம்மா எங்க?"


"இஇதோடட அம்மமா உஉயிரோடட இஇல்லல..நநா இஇத கொகொல்லத்தான்..கொண்டடு‌வவவந்தேன்ன்..ஆஆனா மனசுசு வவரலல..அவங்ககளுக்கு ததெரிஞ்சுசு வேறற ஆளளு கொல்லல வவராங்கக.. சீக்கிகிரமா..போபோங்க"


"கொல்ல சொன்னது யாரு?.. சீக்கிரம் சொல்லுங்க..!"


"கொகொழந்தைதை வீவீட்ட..."வாக்கியத்தை முடிப்பதற்குள் அவன் உயிர் பறந்துவிட்டது.


அவன் கூறியதைக் கேட்டு அவள் சர்வமும் நடுங்கியது.முழு உண்மையைக் கூறாமல் இறந்து வேறு விட்டான்.அவள் பயத்தை அதிகப்படுத்தும்படியாக தூரத்தில் காலடி சத்தம் அருகருகே வரும் சத்தம் கேட்கவும் செய்வதறியாமல் குழந்தையோடு திரும்பிப் பார்க்க தூண்டிய மனதை அடக்கியபடி முடிந்தவரை வேகமாக ஓடினாள்.


தாய்மாமன் வீட்டினர் கேட்ட எந்த கேள்விக்கும் அவளின் ஒரே பதில் குழந்தை யாருமில்லாமல் அனாதையாக இருந்தது பாவம் என்று அழைத்து வந்ததாக கூறி அவர்களை சரிக்கட்டினாள்.போலீஸுக்கு தகவல் கொடுப்பதைப் பற்றி அவர் குறிப்பிட்டப்பட்டப் போது தானே கொடுத்துவிட்டே வந்ததாக பொய் கூறினாள்.குடும்பத்தவர்களாலையே குழந்தைக்கு ஆபத்து எனவும் போலீஸில் கம்ப்ளைண்ட் கொடுக்க விரும்பவில்லை அவள்.போலீஸ் குழந்தையின் வீட்டினரை கண்டுப்பிடித்துவிட்டால் குழந்தையை எடுத்துச் சென்று கொன்றுவிடும் அபாயம் இருந்ததால் புரைத்தீர்க்கும் நன்மைக்காக பொய் புகன்றாள்.


வீட்டிற்கு திரும்பி வந்த பின்னும் அதே பாடத்தையே தந்தை மற்றும் தம்பிக்கும் படித்தாள்...உற்றார் உறவினர் எல்லோருக்குமே அமூல்யாவை தன் மகள் என்றே எண்ண வேண்டும் என்று தீர்மானமாகக் கூறி விட்டாள்.இழந்த தாயே மீண்டும் தன்னிடம் வந்துவிட்டதாக மனம் மகிழ்ந்தாள்.திருமணம் கணவன் குடும்ப வாழ்வு என்பதெல்லாம் அவள் அகராதியிலேயே இல்லாதானது.அம்முவே அவள் வாழ்வின் அர்த்தமானாள்.


அவள் கதையைக் கேட்டு என்னவென்று கூறுவது என்று நியதிக்கு புரியவில்லை.திடிரென அவள் வாழ்வில் வந்து அண்ணனான வினோத்தைப் போல சாருவின் வாழ்க்கையில் வந்திருந்த அமூல்யா என்றாலும் வினோத்தால் அவள் வாழ்வு நேரானது.ஆனால் அம்முவால் சாருவின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருப்பது கண்மூடித்தனமான பாசத்தால் அவளுக்கு புரியவில்லை.


"நியதி!இப்ப சொல்லு நா அந்த சுச்சுவேஷன்ல என்ன பண்ணியிருக்க முடியும்? குழந்தைக்கு ஆபத்துன்னு தெரிஞ்சும் நா எப்படி அவள எப்படியோ போகட்டும்னு விட்ரது?"


"அம்முவோட பேரெண்ட்ஸ் வந்து நின்னா அப்ப என்ன பண்ணுவ?"


"ஆமா இத்தன வருஷம் வராதவங்க இப்ப மட்டும் வந்திடுவாங்களா?சும்மா நடக்காதத பேசாத நியதி!"


"ஒரு வேளை வந்திட்டா?!சரி உன் இதுக்கே வரேன்...அவங்க வரலேன்னே வச்சுப்போம்...அம்மு வளர்ந்து என் அப்பா எங்கேன்னு கேட்டா அப்ப என்ன பண்ணுவ?வெளில மத்த குழந்தைங்க எங்க அப்பான்னு பேசற போது தனக்கும் அப்பா வேணும்னு அவளுக்கு தோணாதா?"


"நியதி!நீ சும்மா என்ன கன்ஃபூஸ் பண்ணாத...அவ கேட்டா உனக்கு அப்பா அம்மா எல்லாம் நான்தான்னு சொல்லுவேன்"


அம்மு மேல் வைத்த பாசம் அவள் அறிவை மறைப்பது நன்றாக தெரிந்தது.ஆனால் நிதர்சனம் எதிரே வரும் போது இவள் எப்படி தாங்குவாள்!


நியதியிடம் பேசியது மேல் அவள் யோசிக்காத அல்ல யோசிக்க விரும்பாதவைகள் எல்லாம் மனதில் தோன்றி அவளை கலங்கடித்தது.ஆனால் அன்றாட கடமைகளில் அதையெல்லாம் ஒரு மூலையில் வைத்துவிட்டு மகள் தந்தை மருத்துவமனை என்று தன்னை முழுகடித்துக் கொண்டாள்.ஆனால் அதை உடைத்து அவளை கலங்கடிக்கவும் ஒருவன் வந்தான்.
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
very good job dear... some spl போல இன்னைக்கு சண்டே அதுவுமா எல்லோரும் ud குடுக்கறாங்க.

நியதி சரியா தான் நினைக்கிறா, சாருக்கு பாசம் கண்ணை மறைக்குது அத திறக்க ஹீரோ எப்போ வருவார் :unsure::love:(y)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top