• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode TVPN-3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bhavya

அமைச்சர்
Joined
Feb 27, 2019
Messages
1,305
Reaction score
4,767
Location
Thanjavur
ஹாய் பிரெண்ட்ஸ்

அடுத்த எபியோட வந்திட்டேன்... தெலுங்கு வேர்ட்ஸ் சில தப்பா இருக்கலாம்...சாரி ஃபார் தட்... படிச்சிட்டு உங்க கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் பிரெண்ட்ஸ்


அன்று காலையில் கண்விழித்ததிலிருந்தே ஏதோ சரியில்லை என்றேத் தோன்றியது சாருவிற்கு.ஒரு வாரத்திற்கு முன்பு நியதியோடு பேசியதில் குழப்பம் அதிகமானதே தவிர குறையவில்லை.


தந்தையும் மகள் திருமணம் வேண்டாம் என்றதில் கோபித்துக் கொண்டு அவளோடு பேசுவதை நிறுத்திவிட்டார்.அவரோடு அவள் பேச முயற்சித்ததெல்லாம் வீணானது.மௌன போராட்டமா என உள்ளுக்குள் பொறுமினாள்.போனில் பேசிய தம்பி அஸ்வினும் தந்தையின் பல்லவியை பாடவே அவனை சரியாகத் திட்டி போனை கட் செய்து விட்டாள்.


இது எல்லாம் போதாது என்பது போல் மூன்று நாட்களுக்கு முன் அமூல்யாவின் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவிற்கு வேலை பளுவால் சாருவால் செல்ல முடியவில்லை.இரவு விழாப் பற்றி அம்முவிடம் கேட்டப் போது விழா மேடையில் அமர்ந்திருந்த வயதான தாத்தா ஒருவர் விழா முடிந்ததும் அவளை அருகே அழைத்து அவள் யார் பெயர் என்ன தாய் தந்தை யார் வீடு எங்கே என்றெல்லாம் விசாரித்தாக தெரிவித்தாள்.


இவ்வளவு விவரம் கேட்ட அந்த பெரியவர் யாராக இருக்கும்? ஒருவேளை...? இல்லை இல்லை அப்படி நடக்க வாய்ப்பேயில்லை...அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேயாகத் தெரிகிறது..!குழம்பிய மனம் எதையெதையோ எண்ணி கலங்குகிறது! எல்லாவற்றையும் மறந்து பணியிடம் நோக்கி சென்றாள்.


சாருவிடம் பரிசோதனைக்கு வரும் ஒரு பெண்ணுக்கு பிரசவம் கடினமானதால் சிசேரியன் செய்து விட்டு மாலை மூன்று மணி அளவில் தான் வீட்டிற்கு வந்தாள்.வெதுவெதுப்பான நீரில் தலைக்குக் குளித்து மஞ்சள் வண்ண சுடியில் தயாரானப் போது படபடவென கதவுத் தட்டப்பட்டது.


"சாரும்மா! சீக்கிரம் வாடா..."என்று அழைத்தார் தந்தை.


ஒரு வாரமாக முகம் கொடுத்து பேசாத தந்தை திடிரென அழைக்கிறாரே.. ஏதேனும் சுகவீனமோ என்று பயந்தவள் பட்டென கதவைத் திறந்தாள்.ஆனால் அவரைப் பார்த்தால் அப்படி ஏதும் தெரியவில்லை.


"சீக்கிரம் கீழ வாடா.‌‌..அவங்கள்லாம் காத்துக்கிட்டு இருக்காங்க.."


"யாருப்பா?"


"அதெல்லாம் கீழ போனப்புறம் தெரியும்...வா வா "என்று அவசரப்படுத்தினார்.


யாரு கீழ காத்திருக்கிறது?...ஒருவேளை இவர் பாத்த மாப்பிள்ளையோ!என்னை ஒரு வார்த்தை கேக்காம வீட்டுக்கே கூப்பிட்டுட்டாரா? இவருகிட்ட பேசி பிரயோஜனம் இல்லை...அந்தாளையே லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி இனிமே கல்யாணம்னு கனவுலையும் நினைக்கக் கூடாது அப்படி பண்றேன்.."என்று சண்டையிடத் தயாராக தடதடவென படிகளில் இறங்கினாள்.


அங்கே ஹாலில் அறுபது வயது மதிக்கத்தக்க பெரியவர் அமர்ந்திருந்தார்... அவருக்கு சற்று அப்பால் அவளே வரைந்த ஃபேரம் செய்யப்பட்ட ராதா கிருஷ்ணா படத்தைப் பார்த்தபடி நின்றிருந்தான் ஒரு நெடியவன்.


அவர்களைக் கண்டு பின்தங்கி நின்ற மகளை,


"வாம்மா சாரு!"என்ற அவர் அழைப்பில் சரக்கென திரும்பினான் அந்த நெடிய திருமால்.


அவன் அணிந்திருந்த நீலக் கோட்சூட் அவனின் ஆண்மையை எடுத்துக் காட்டியது.வலது கை பேண்ட் பாக்கெட்டில் இருக்க இடது கை கார் கீயை பிடித்திருந்தது.கருமையான அவனின் கூந்தல் அடங்காமல் நெற்றியில் புரண்டது.அழுத்தமான உதடுகள் அவனும் அழுத்தமானவனே என்று கூறியது.எல்லாவற்றையும் விட அவனின் கூர்கண்கள் யாரும் கூறாமலே அவன் யார் என்பதை சாருலதாவிற்கு உணர்த்திவிட்டது.அதை நிச்சியமாக்குவது போல அந்த பெரியவர் கொச்சையான தமிழில்,


"அம்மாயி!நேனு வெங்கடாசலம்...ஊரு விசாகப்பட்டினம் பக்கம் அம்பாபுரம்...இவனு நா அண்ணன் மக ஆர்யவர்தன் தேஜா...அமூல்யா இவன மகளு...கூட்டிப் போக வோச்சிந்தி.."


"நோ!...அம்மு இவர் பொண்ணுதான் எப்படி நம்பறது... அதெல்லாம் யார் கூடவோ அனுப்ப முடியாது..."


"நா சத்தியமா சொல்றேன்...அம்மு இவன் பொண்ணு... டிடெக்டிவ் ரிப்போர்ட் வுந்தி"


"இவர் பொண்ணுதாங்கறதுக்கு என்ன சாட்சி இருக்கு...அவ என் பொண்ணு...என்னோட தான் இருப்பா"


"அது.."என்று ஆரம்பித்த வெங்குவை கையமர்த்திய ஆர்யவர்தன் ,


"ஒரு சின்ன டிஎன்ஏ டெஸ்ட் போதும் அவ என் பொண்ணுன்னு ப்ரூஃப் பண்ண...உங்க பொண்ணுன்னு சொல்றீங்களே...அத எப்படி ப்ரூஃப் பண்ணுவீங்க?"


"அஞ்சு வருஷமா அவள வளர்த்தது நான்... இன்னிக்கு வந்து நான் தான் அவ அப்பான்னு சொல்றீங்களே இத்தன வருஷம் எங்க போனீங்க?அவள ஏன் தேடல?"


"பாரம்மா நாங்க தேடிட்டு தான் இருந்தோம்...முந்தானாள் ஸ்கூல் ஃபங்க்ஷனுக்கு நானும் வந்திருந்தேன்...அமூல்யா அவ தாயி ரூபம்...அவளு இப்ப இல்ல...இதுல அனுமானமே காது...அவளு நம்ம அம்மாயி தான்.."என்றார் வெங்கு அழுத்தமாக.


அம்மு கூறிய பெரியவர் இவரே என நிச்சயமானது அவளுக்கு.சுமந்து பெற்ற தாயை விட மேலாக வளர்த்த தன்னை விட்டு பிரிக்க நினைக்கும் அவர்கள் ராட்சதர்களாக தோன்றினர்.இத்தனை ஆண்டுகளாக இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலை வரும் என அவள் கனவிலும் நினைக்கவில்லை.


சொல்லி வைத்தாற்போல அமூல்யாவை அழைத்து வரும் கார் வந்து வாயிலில் நின்றது.ஏதோ உற்சாகம் தரும் விஷயத்தை தாயிடம் கூறத் துடித்துக் கொண்டு ஓடி வந்த அம்மு புதியவர்கள் இருவரைக் கண்டு தயங்கி தாயின் பின்னே சென்று நின்றாள்.


அம்முவை காணவும் ஆர்யவர்தனின் கடின முகத்தில் லேசான கனிவு வந்தது.அவளை நோக்கி அவன் எட்டு எடுத்து வைத்தப் போது அம்மு பயந்து தாயிடம் நன்றாக ஒட்டிக் கொண்டாள்.அவன் கண்களில் லேசான ஏமாற்றம் தெரிந்தது.எடுத்த அடியை பின் வைத்து பழைய நிலையிலேயே நின்றான்.


கேசவனின் நிலையும் தர்மசங்கடமாக தான் இருந்தது.அம்முவை அவர் தன் சொந்த பேத்தியாக நினைத்து கொண்டு தான் இத்தனை ஆண்டுகள் அவள் மேல் பாசத்தை பொழிந்தார்.இப்போது அவளை பிரிய வேண்டுமே என்று பரிதவித்தது அவர் நெஞ்சம்.அவருக்கே அப்படியென்றால் மகளோ அவள் வாழ்வின் ஆதாரமாக மகளை நினைத்திருந்தாள்.அப்படியிருக்கும் போது அமூல்யாவை வந்தவரோடு அனுப்பிவிடும் என்று மகளிடம் அவர் எப்படி கூறுவார்?


இதற்கு தீர்வளிக்க தாங்கள் மட்டும் போதாது என தீர்மானித்தவர் அண்ணன்கள் இருவர் அக்கா கணவர் சமர்த் எல்லோரையும் வீட்டிற்கு அழைத்தார்.


வந்தவர்களிடம் அமூல்யாவின் பிறப்பு சான்றிதழ் இன்ன பிற ஆவணங்கள் எல்லாவற்றையும் காண்பித்தான் ஆர்யவர்தன்.அதையெல்லாம் பார்வையிட்ட சமர்த் அதெல்லாம் சரியாக இருப்பதாக உறுதி கூறினான்.


"சாரு! இவர் காட்டின ப்ரூஃப் எல்லா கரெக்டா இருக்கு...அம்முவ அனுப்பறது தான் சரி..."


"நோ...ஐ காண்ட்!இவள விட்டு இருக்க முடியாது..."


"சாரு!எமோஷன்ஸ தள்ளி வச்சுட்டு ரியாலிட்டிய ஏத்துக்கோ..."


அங்கே ஆபத்து என்று தெரிந்தும் கண்ணுக்கண்ணான மகளை அனுப்ப மனம் வரவில்லை அவளுக்கு.ஆனால் எல்லோருமே ஆர்யவர்தனின் பக்கமே பேசுவது அவளுக்கு அவன் மேலான கோபத்தை அதிகப்படுத்தியது.


இதுவரை புரிந்தும் புரியாமலும் அங்கு நடப்பதை பார்த்திருந்த அமூல்யாவிற்கு சமர்த்தின் பேச்சு தாயின் மவுனம் எல்லாம் விஷயத்தை உணர்த்தி விட்டது.


"அம்மா!என்னை எங்க போகனும் சொல்றாங்க?நீயும் என்னோட வரியா?"


அவளுக்கு புரிய வைக்க அவள் அருகில் வந்து அமர்ந்த சமர்த்,


"குட்டிம்மா!அதோ பாரு..அங்க உட்கார்ந்திருக்காரே அவர் தான் உங்க அப்பா!அவரோட நீ அவங்க ஊருக்கு போகனும்...அங்க பெரிய வீடு...பாட்டி...நிறைய ரிலேடிவ்ஸ் எல்லாம் இருக்காங்க...ஓகேவா"


"அம்மா?!!அம்மா தாத்தா... அவங்களும் வருவாங்க தானே?"


"இல்லடா குட்டிம்மா!அம்மா தாத்தா இங்கேயே இருப்பாங்க...நீ அப்பா கூட போவியாம்...நா அப்புறமா அவங்கள கூட்டிட்டு வரேன்...சரியா?"


"ம்ஹூம்...மாட்டே...அம்மா வந்தாதா நா போவேன்..."


"அடம் பண்ணக் கூடாதுடா...நீ குட் கேர்ள் தானே...சமத்தா அப்பா கூட கிளம்பனும்"


"நோ நோ...நா போமாட்டே... எனக்கு அம்மா தான் வேணும்..அப்பா வேண்டா"என்று தாயை கெட்டியாக அணைத்துக் கொண்டது அந்த இளங்குருத்து.


ஆர்யாவர்தனின் மனதின் வலி ஒருகணம் கண்களில் வந்துபோனதை சமர்த் கண்டான்.எந்த தந்தைக்கும் தன் குழந்தை தன்னை வேண்டாம் என்ற போது அந்த வலி இதயத்தை ஊசிக் கொண்டு துளைக்கத்தான் செய்யும்.ஆனால் நினைவு தெரிந்ததிலிருந்து சாருலதாவே எல்லாம் என்று இருந்த மகவை திடிரென அவளைப் பிரிந்து புதிதாக வந்த ஒருவரை அப்பா என்று அவரோடு போக சொல்வது எந்தளவு சரியானது?...ஆனால் குழந்தையின் பிறப்புரிமைப் பறிப்பதும் தவறே! இதற்கு என்ன தான் தீர்வு?


அனைவரும் இதற்கு என்ன தீர்வு என்ற குழப்பத்தில் மவுனமாக இருந்தனர்.அதை கலைத்தார் வெங்கு,


"நேனு ஒக்க யோசன செப்தானு!"


என்ன என்பது போல் அனைவரும் அவரையே நோக்கினர்...ஆர்யவர்தன் உட்பட.


"அமூல்யா எங்களுக்கு வேணும்...அவள தாயி இப்ப இல்ல... அவளுக்கு தாயி வேணும்...நூவு சாருலதாவ மா ஆர்யவர்தனுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கனும்... ரெண்டு பேர சமஸ்யயும் தீரும்"


"நோ.............!"என்று ஒரே நேரத்தில் கூவினர் சாருலதா மற்றும் ஆர்யவர்தன்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஆர்யாவோட வந்த தாத்தா இதைத்தான் சொல்லுவாருன்னு நினைச்சேன்
அதே மாதிரியே சொல்லிட்டாரு
சாரு ஆர்யாவை திருமணம் செய்வாளா?
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top