UEJ 2

Riy

Author
Author
#1
உன்னோடு தான்.... என் ஜீவன் ...

பகுதி 2

ஆரன் தனது மனதில் எரியும் கோபத்துடன் தனது வாகனத்தை செலுத்தி கொண்டிருக்கும் நேரம் .... அவனின் கைபேசி மீண்டும் தன் இருப்பை உணர்த்த... அதில் தனது P A ஹரிணியின் எண்ணை கண்டவன்... அதை உடனே அட்டன்டு செய்ய....


அங்கே பயத்துடனும் , பதட்டத்துடனும் ஹரிணி..

" சார் , நம்ம ஏற்கனவே எஸ் எஸ் கம்பெனிக்கு போட்ட கொட்டேஷன் படி நமக்கு கிடைக்க வேண்டிய காண்டராக்ட் நம்மல விட்டு D.S. கம்பெனிக்கு போயிடுச்சு சார்... இப்ப தான் மெசேஜ் வந்துச்சு.... " என்க...


ஹரிணியால் சொல்லப்பட்ட விசயத்தை கேட்டவன் ஒரு நொடி நிதானித்துவிட்டு...

"எஸ்ட்டிமேட் டிபரன்ஸ் மென்ஷன் பண்ணியிருக்காங்களா?? " என கேட்க...

"எஸ் சார் அதான் பெரிய ஷாக்... நாம கேட் பண்ணத விட ஜஸ்ட் டென் தவுசண்ட் தான் ... " என்றதும்.."ஓகே ஹரிணி.... நா வந்துட்டே இருக்கேன்.. அதுக்குள்ள நீங்க மத்த டிட்டைல்ஸ் , நா நேத்து கேட்ட மாதிரி ரெடி பண்ணிடுங்க" என்றவாறே... தன் அலுவலகம் நோக்கி காரை செலுத்தினான்......இங்கே தொழிலை துவங்கியதிருந்து இல்லாது இப்போது புதிதாய் முளைத்த பிரச்சனையை எப்படி கலைவது..?"தன் பிரச்சனைக்கு காரணமானவன் யாராய் இருக்கும்? இதுவரை அவனை பார்க்க முயன்றும் முடியாது போன காரணம் தான் என்ன? தன் முன் வராது, தன்னையும் நேரில் சந்திக்காது பின்னிருந்து தாக்க காரணம் !!!! " என்று சிந்தித்தவனுக்கு ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது...அது அந்த நிறுவனம் முழுமையாக தன்னை மட்டுமே டார்கெட்டாக கொண்டு நெருக்குகிறது என்பதை... அதை காலை வந்த போன் காலும் ... இப்போது ஹரிணி சொன்ன தகவலும் உறுதி செய்துவிட்டதே...


அவர்கள் மற்ற எந்த கம்பெனியின் காண்ட்ராக்டையும் , இதை போல தட்டி பறிக்கவில்லை... அதே போல நஷ்டபடுத்தவும் இல்லை ...அப்படியென்றால் தன் கடந்த காலத்தில் தான் , விட்டு விலக நினைத்த நிழல் மீண்டும் தொடர்கிறதா? அவர்கள் தேவை அவனா? அவளா? தன்னை கூட கொடுப்பான்... ஆனால் அதற்கு காயத்ரியை பலியாக்க முடியுமா? என்ற எண்ணம் வலுக்க சில பல முடிவுகளை மனதில் எடுத்தவனாய் அலுவலகத்தை அடைந்தான்...

************


தோட்டத்தில் வந்து அமர்ந்த காயத்ரி .. தன் கண்களில் வழியும் கண்ணீரையும் உணராது அமர்ந்திருக்க... அவளின் மனமோ அவளின் கடந்த காலத்திற்கு அவளை அழைத்து சென்றிருந்தது....

ஸ்ரீரங்கம்... திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள கோவில் நகரம்....


"மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!

சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்

நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்"
அங்கிருக்கும் அக்ரஹார தெருவில் ....மார்கழி முதல் நாளில் ... தன் வீட்டில் கேட்ட பாடலில் மெய்மறந்து நின்ற சங்கராச்சாரியின் கண்கள் ...தன் முன் மனமுருக கண்ணனை நினைத்து ஆண்டாள் பாடிய பாச்சுரத்தை அச்சுரம் பிசகாமல் அழகாய் தன் மழலை மொழி மாறா வயதிலேயே பாடும் தன் மகளின் மீதே இருக்க... தன் அருகில் வந்த தன் மனைவி ஜானகியை கூட உணராது இருந்தவரை..." ஏன்னா ... தரிசனம் பார்த்துட்டு வந்துட்டேளா... இந்தாங்கோ ஜலம்..." என சொன்னபடியே தண்ணீரை கொடுப்பதையும் உணராது .. மகளின் மேல் கவனத்தை வைத்திருந்தவரை பார்த்தவர்...


"இப்படி பார்த்துன்டே இருக்கேள்... நீங்களே போறும் புள்ளைக்கு கண்ணு போட...." என கூற....


தன் மகளை பார்த்திருந்த கண்ணை திருப்பாமலேயே ..

"ஏன்டீ அபிஷ்டு நம்ம பொண்ணு பாடறச்சே வேற ஏதாவது நேக்கு தோணுமா..... அவா என்னோட அம்மா மாதிரியே இருக்காடீ... அதான் அவளோட முகத்த பார்த்துண்டு இருக்கேன்...


நேக்கு தெரியாதா பெத்தவா கண்ணு புள்ளைக்கு ஆகாதுன்னு.... போ போய் குழந்தைக்கு குடிக்க பால் கொண்டா.. பாவம் பாடி பாடி குழந்தை தொண்டையே வரண்டிருக்கும்.." என மனைவியை ஏவியவர்... தன் மகளை நோக்கி சென்றார்...
இந்த சிறு வயதிலேயே ஆண்டாள் பாடலை மனனமாக அழகாய் பாடும் மகளை காணும் போது பெருமை மிளிர்ந்தது அத்தந்தைக்கு.....குரல் வளத்தில் மட்டுமல்லாது தோற்றத்திலும் செப்பு சிலையாய்... தெய்வீக கலையுடன் திகழும் தன் மகளை காண காண அத்தந்தைக்கு பெருமை பிடிபடவில்லை....


நடுத்தர குடும்பமாய் இருந்தாலும் தன் மூத்த மகன் ராமை காட்டிலும் ... தன் இளைய மகள் காயத்ரியின் மீது பாசம் அதிகம் சங்கருக்கு... காரணம் அவள் தன் தாயின் மறுஉருவமாய் அமைந்ததும்.... அவரின் குரல் வளத்தை பெற்றதுமே ஆகும்...."அம்மாடி குழந்தை " என்ற தந்தையின் அழைப்பில் கடவுளிடம் மனமுருகி நின்றிருந்தவள்... ஆசையோட தந்தையை நாடி வந்து...


"வந்துட்டேலா... இன்னைக்கு மார்கழி முதல் நாளோன்னோ... அதான் பாடின்டு இருந்தேன்.. நன்னா இருந்துச்சா... அப்பா.. பாட்டு மாமி கத்து கொடுத்தா.." என்ற மகளின் கைகளை பாசத்தோடு பிடித்தவர்...

ரொம்பவும் நன்னா பாடுனடா செல்லம்... அப்படியே பாட்டி மாதிரியே இருக்கு உன் குரல்... அதான் மெய் மறந்து நின்னுட்டேன்...."தொண்டையெல்லாம் வரண்டு போயிருக்குமோன்னோ.. வா இப்ப வந்து பாலை குடிம்மா... "என அன்புடன் அழைத்து தன் மடியில் வைத்தவர் ... தன் மனைவி வந்து தந்த பாலை தன் கையால் கொடுத்துக்கொண்டே தன் மனைவியை நோக்கி...


" என் மகள பார்ந்துண்டே இரு... என் பொண்ணுகிட்ட சரஸ்வதியும் லட்சுமியும் வாசம் செய்றா... அவா நம்ம குழந்தையோட இருக்கறச்சே இவ தான் நம்ம அதிஷ்ட லட்சுமி..." என்று சொல்லி பெருமை கொண்டாடினார்....அவரை பெருமை படுத்தும் வகையில் ஒவ்வொரு முறையும் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று வந்தாள்.. காயத்ரி.

"என் பொண்ணு போல யாராச்சும் இருப்பாளா??? " என்று சங்கர் பெருமை பேசாத ஆளே ஸ்ரீரங்கத்தில் இல்லை எனலாம்...

அவள் பன்னிரண்டாம் வகுப்பில் அந்த மாவட்டத்தில் முதலாவதாகவும் , மாநில அளவில் மூன்றாம் இடமும் பெற அவளை விட சங்கரருக்கு தலை கால் புரியா சந்தோஷம்...

அவளின் மேற்படிப்பு விசயமாக யோசித்தவரை , தன் பாலிய சிநேகிதனும் தங்கள் குடும்பத்தில் ஒருவராக விளங்கும் ராகவன்... "சங்கரா , நா சொல்றத கேளூ... புள்ள நல்லா மார்க் எடுத்திருக்கா... அவளுக்கு என்ஜினீயரிங் மேல ஆர்வமும் இருக்கு... பேசாம அவாள சென்னையில் சேர்த்து விடு ... நன்னா வருடா... " என்க..

"எல்லாம் சரி தான், ஆனா இதுவரை அவள நாங்களும் , எங்கள அவளும் பிரிஞ்சிருந்ததே இல்லடா... அதான் யோசனையா இருக்கு..."

"ராம் கூட பேசிக் டிகிரி முடிச்சிட்டு வேலைக்கு போறான்... அதே மாதிரி அடுத்தவா ஆத்துக்கு போற பொண்ணு ... அவளும் அந்த மாதிரி ஏதாவது படிக்க வச்சு , அனுப்பிடலாமுன்னு இருக்குடா.... " என்றதும்....

"சங்கரா உன்கிட்ட இருந்து இப்படி ஒரு பதில எதிர்பார்க்கல... ஏதோ படிக்கட்டுமின்னு நினைக்கறவன் அதை சொல்லியே வளர்த்திருக்கனும்... நேத்து கோவில்ல வச்சு கூட காயத்ரி என்ன சொன்னா தெரியுமா.. "அப்பா என்ன என்ஜினீயரிங் சேர்த்துவிடுவார் .. மாமா " ன்னு.... நீ இப்படி இருக்க.... " என்றதும்...

"காயத்ரி இதுவரை வெளியே போனதே இல்லைங்கற ஆதங்கத்துல சொன்னேன்டா... இப்ப என்ன அவ ஆசை பட்டுட்டா இல்ல... சரி நீயே எந்த காலேஜ் நல்லா இருக்குமின்னு பாத்து சொல்லு சேத்துடுவோம்... "என்றதும்...

"ரொம்ப சந்தோஷம்டா.. உன் கைக்குள்ள வச்சிருந்தா , அவ எப்படி நாலு விசயம் கத்துப்பா... ? வெளிய போய் பார்க்கட்டும் டா... உலகம் எங்கையோ போயிடுச்சு.. பொண்ணுங்க அதைவிட ...


நிச்சயமா நம்ம பொண்ணும் நல்லா வருவா.. " என்று தன் நண்பரை அணைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் ராகவன்...

அன்று அவரின் சொல்லுக்கு மதிப்பளித்து காயத்ரியை படிக்க சென்னைக்கு அனுப்பாது இருந்திருக்க வேண்டுமோ? என்ற எண்ணம் ஒரு நாள் வருமென யார் கண்டார்கள் !


எப்போதும் தன் வீட்டு மகாலட்சமி... அதிஷ்ட தேவதை என்று சொன்னவர்...
அதே வாயால்...... "இவா தான் எங்க ஆத்துக்கே வந்த பிடாரி... எங்க குல பெருமையை அழிக்க வந்தவ " என்று சொல்லும் நாள் வரும் என யார் எதிர்பார்த்தார்கள்.....

அந்த நாளில் நடந்த கொடுமைகள் தான் என்ன.... ஆரன் மட்டும் சரியான நேரத்தில் வராமல் போயிருந்தால் தன் நிலை?????? ... தன் கடந்த காலத்தில் உழண்டு கொண்டிருந்த காயத்ரியை நிகழுலகிற்கு இழுத்து வந்தது... "அம்மா......" என்ற குழந்தையின் மழலை மொழி....
 
#9
வீட்டை விட்டு வெளியே
வர முடியாத அளவுக்கு
அவளை இந்த நிலைக்கு
ஆளாக்கின புண்ணியவான்
யாரோ?
காதலனா? இல்லை கணவனா?
அவன் பெயர் என்னவோ?
அவன் எப்போ வருவான்?
 
#10
ஆரன் காயத்ரியின் கல்லூரிக்
காலத் தோழனா? இல்லை
சிறுவயதிலிருந்தே நண்பனா?
ஆரனின் முழுப் பெயர்
திருவாரூரானாப்பா?
 

Advertisements

Top