UEJ 5

Riy

Author
Author
#1
உன்னோடு தான்... என் ஜீவன்...

பகுதி 5


அம்மூ கூறியதை கேட்டவன் ... தன் முன் தனக்கு பரிமாறிக் கொண்டிருந்தவளை நோக்கி .... "போதும் .... " என்பதாய் கை காட்டியவனின் , பார்வையில் இருந்த கோபம் .... காயத்ரியை தடுமாற்றம் கொள்ள வைத்தது.....அவன் ஏதாவது பேசியிருந்தால் கூட பரவாயில்லை ... அந்த பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலை கவிழ்ந்தவள்.... மெல்லிய குரலில் ....


" இல்ல இன்னைக்கி வெள்ளிக்கிழமை .... அதான் அம்மனுக்கு விரதம் இருக்கேன்... அதனால தான் சாப்பிடல.. அம்மூகிட்ட அதெல்லாம் சொன்னா ..... கேள்வி மேல கேள்வி கேட்டு டையர்டு ஆக்கிடுவான்னு சொல்லல.... " என தன் தரப்பு நியாயத்தை எடுத்துக்கூறினாள்....அதை கேட்டவனோ முதலில் பார்த்ததை விட தீவிரமான பார்வையை அவள் மீது செலுத்தியவனாய்....


"இப்ப அவசியம் விரதம் இருக்கனுமா காயூ..??? இப்ப தான் உன் ஹெல்த்தும் நல்லா இருக்கு... மறுபடியும் ஏதாவது வந்திட்டா கஷ்டம் தானே.... " என தன் ஆதங்கத்தை வெளியிட்டவன் ...


" உனக்கு சொல்லனுமின்னு இல்ல...இருந்தாலும் சொல்றேன்...

நீ கும்பிடுற சாமி தான் .... எல்லாரையும் காப்பாத்தும் அப்படின்னா... நம்ம இழந்தவங்கள காப்பாத்தியிருக்கலாமே....????!!!


அதே மாதிரி நம்ம பட்ட அவமானம்... கொஞ்சமா.... !? அதெல்லாம் உன் சாமி பார்த்திட்டு சும்மா தானே இருந்துச்சு....

எனக்கு அந்த நம்பிக்கை போய் ரொம்ப வருஷம் ஆச்சு.... அதான் நா ப்ரேயர கூட நிறுத்திட்டேன்....

பட்..

உன்னோட விருப்பத்திற்கு குறுக்க நிற்க கூடாதுங்கற ஒரே காரணத்திற்காக மட்டும் தான் எல்லா விசயத்திலும் உனக்கு அனுமதி கொடுத்திருக்கேன்....


ஆனா ... அத வச்சே நீ உன் உடம்ப கெடுத்துக்க பார்த்தா ............ இதுக்கு மேல என் முடிவ நா சொல்லி தான் நீ தெரிஞ்சுக்கணுமின்னு இல்ல.... " என்று கூறியவன் தன் கைகளை கழுவிட சென்றான்.....
அவன் சொன்னதை கேட்டவள் நிலையோ சொல்லில் வடிக்க முடியாததாக இருந்தது...


கை கழுவி வந்தவன் அவளின் நிலை உணர்ந்து ... மெல்ல.... " காயூ .... " என அழைக்க ... கண்களில் திரண்ட நீரை கீழே விழாத வண்ணம் மறைக்க முயன்ற படி திரும்பியவளின் முயற்சி தோல்வியை தழுவ... அடுத்த நொடி கண்ணின் நீர் அவளின் கன்னத்தில் வழிய ஆரம்பித்திருந்தது....


தன் முன் கண்ணீரில் கரைந்து நிற்பவளை கண்டவன்.... தன் கையாறு நிலையை எண்ணி வெக்கியவனாய்.......


" ப்ளீஸ் .... நா வேணுமின்னு அத சொல்லல காயூ.... உனக்கு நா சொன்னது கஷ்டமா இருக்குமின்னு புரியுது..... அதற்காக நீ, உன் உடம்ப கெடுத்துக்கிட்டு விரதம் இருக்கறத நா விரும்பல அவ்வளவு தான்.... " என கூறிவிட்டு, தன் கவனத்தை அம்மூவிடம் திருப்பினான்....


அவன் கூறியதில் இருக்கும் நியாயம் புரிந்தாலும்..... அந்த மாதிரியான விசயங்களை கை விடவும் மனமில்லை அவளுக்கு..... அவளின் உயிரோடும்.. உணர்வோடும் கலந்தவைகளை முற்றிலுமாக உதறி தள்ளிடும் அளவு அவளின் மனம் கடினமானது அல்லவே....


ஆரனின் போனில் மூழ்கி இருந்ததாலும்... இவர்களின் பேச்சுவார்த்தை மெல்லிய குரலில் நடந்ததாலும் ....அதில் கவனத்தை செலுத்தாதிருந்த அம்மூ.....ஆரனின் வருகையை உணர்ந்து...


" டாடி ... சாப்பிட்டாச்சா...? " என கேட்க...

" ஓ ... நானும் உன்ன மாதிரியே குட் பாய் இப்ப... " என கூறி அவளை கைகளில் ஏந்தி .. தூக்கி போட்டு பிடித்தான்...


ஆரன் எப்போதும் அவளை அவ்வாறு செய்யும் போது ... அவளுக்கு அவ்வளவு கொண்டாட்டமாக இருக்கும்.... இன்றும் அதே போல ஆரன் செய்தவுடன் சத்தம் போட்டு சிரித்ததுடன்... ஆரனை இறுக்கி அணைத்துக்கொண்டாள்....


இருவரின் சிரிப்பு சத்தம் காயத்ரியை நிகழ் உலகுக்கு இழுத்து வர... வேகமாய் தான் கொண்டு வந்த பாத்திரங்களை எடுத்து வைத்துக்கொண்டு...


" அம்மூ ... கிளம்பளாமா... ??? டாடிக்கு வேல இருக்குமில்ல... வா போலாம்.... மிச்ச விளையாட்டை , டாடி வீட்டிற்கு வந்த பிறகு கண்டின்யூ செய்யுங்க... " என கூற....


ஒரு வார பிரிவுக்கு பிறகு ... பார்த்த ஆரனை விட்டு விலக மனமில்லாத அம்மூ....

" அம்மா... ப்ளீஸ் கொஞ்ச நேதம்... அப்புதம் போலாம்... " என கெஞ்சலாய் கேட்டாள்....


மகளின் ஆசை ஒரு புறம்... ஆரனின் வேலை பளு உணர்ந்தவள் , தாங்கள் இங்கே இருப்பதால் அவனின் வேலை கெடுதல் ஒருபுறமென தவித்தவள்..." அம்மூ .....சொன்னா கேட்கனும்... அதென்ன பிடிவாதம் பிடிக்கற பழக்கம்... " என கொஞ்சம் கடுமையாக பேச...


அதுவரை மலரந்த முகத்துடன் இருந்த அம்மூவின் முகம் நொடியில் வாடிய மலராய் மாறி ... தனது சோகத்தை போக்கும் வடிகாலாய் ஆரனின் தோள் சாய்ந்தாள் அம்மூ....


அதை பார்த்துக்கொண்டிருந்த ஆரன்...
"ஏன் காயூ அவள அதட்டற... பாரூ எப்படி பட்டு முகம் மாறி போச்சு... ஆமா வரும் போது யார் கூட வந்தீங்க..??? " என கேட்க......


" நம்ம வீட்டுல நீங்க ஏற்பாடு செஞ்சிருக்க ட்ரைவர் கூட தான் வந்தோம்... தனியா வரக்கூடாதுன்னு நீங்க தான் ஸ்டிரிக்ட்டா சொல்லியிருக்கீங்களே....


அம்மூ உங்கள பார்க்க வந்தே ஆகணுமின்னு பிடிவாதம் பிடிச்சதால தான் வந்தோம் " என்று காலையில் அவன் செய்த எச்சரிக்கையை மீறி வந்ததற்கான காரணத்தோடு சேர்த்து கூற...


மணியை பார்த்தவன் .. தனக்கு இருக்கும் வேலைகளை மனதால் பட்டியலிட்டு பார்த்துவிட்டு....


" ஓகே .... கிளம்புங்க நானும் கூட வந்து... பட்டுவ வீட்டில விட்டுட்டு... அப்படியே கொஞ்சம் வெளிய வேலை இருக்கு போயிக்கறேன் " என கிளம்ப தயாரானான்...தன்னுடன் ஆரனின் வரவையும் அறிந்த அம்மூ... அதன் பிறகு எந்த பிரச்சனையும் இல்லாமல் மலர்ந்த முகத்துடன் கிளம்ப....ஆரன் ஹரிணியை அழைத்து ... "ஹரிணி ... நா வெளிய போறேன்... இங்க பார்த்துக்கோங்க... ஏதாவது இம்பார்ட்டண்ட் மெசேஜ் ஆர் கால் வந்தா மட்டும் எனக்கு பாஸ் பண்ணுங்க....

அப்புறம் நீங்க ... உங்களுக்கு, நா... கொடுத்த வேலைய கண்டிப்பா முடிச்சிட்டு ... எனக்கு மெயில் பண்ணிடுங்க ... நா நைட்டே செக் பண்ணிடுறேன்... அப்ப தான் நாளைக்கு டிசைடு செய்ய முடியும்.... " என கூறி அம்மூ.. காயத்ரியுடன் தன் அலுவலகத்திலிருந்து வெளியேறினான்....


தான் கொடுத்த வேலையால் ஹரிணிக்கு நேர போகும் ஆபத்தை அறிந்திருந்தால் அவன் அவ்வாறு சொல்லாது சென்றிருப்பானோ????....


*************


தன் காரில் காயத்ரியையும் அம்மூவையும் கூட்டிக்கொண்டு கிளம்பிய ஆரன்.... அம்மூ கேட்ட ஓயாத கேள்வி மழையில் நனைந்த படி தன் இல்லம் நோக்கி சென்று கொண்டிருந்தான்.....ஆரன் ... அம்மூ இருவரின் உரையாடலை கேட்டுக்கொண்டே வந்த காயு... பகல் பொழுதிலும் , குளிர் காற்று போல மென்மையாய் வீசிய காற்றினால்... ஒரு கட்டத்தில் தன்னையே மறந்து உறக்கத்தை தழுவ.... அம்மூவுக்கும் வீசிய காற்றில் கண்கள் சொருக ஆரம்பித்தது.....
அவளின் நிலையை பார்த்தவன் காரினை ஓரம் கட்டிவிட்டு... தன்னிருக்கையிலிருந்து இறங்கி... பின் கதவை திறந்து .... அதில் அம்மூவை பத்திரமாக படுக்க வைத்தவன்... அவள் கீழே விழாதவாறு தலையணையை வைத்து விட்டு ... காரினை மெதுவாக ஓட்டலானான்.....பெங்களூரை பொறுத்தவரை அங்கிருக்கும் ட்ராப்பிக் சிக்னல் மிகவும் அதிகம் என்பதால் ... அவன் வாகனமும் நின்று நின்று மெதுவாக செல்ல .... இருவரும் நல்ல ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றிருந்தனர்....அடுத்து வந்த சிக்னலில் தன் காரினை நிறுத்திவிட்டு... அதன் பச்சை விளக்குக்காக காத்திருந்த நேரத்தில்...
தூக்க கலக்கத்தில் இருந்த காயூ.... தன்னிருக்கையிலிருந்து நழுவி கீழே சாய .... அதைக் கண்ட ஆரன்... நொடியில் அவளை தாங்கி பிடிக்கவும்... அவளின் தூக்கம் தெளியவும் சரியாக இருந்தது.......


கீழே விழுந்திடுவோமோ என்ற பதட்டத்தில் ஆரனை அவளும் நன்றாக பிடித்துக்கொண்டாள்....அவளின் பதட்டத்தை பார்த்த ஆரன்..." ஏய் காயூ ..... நர்த்திங்... ஆல் ஈஸ் வெல்..... " என கூறி அவளை பதட்டத்திலிருந்து வெளிக்கொணற பேசிய படியே அவளை அணைத்து.. அருகிலிருந்த தண்ணீரை அவளுக்கு கொடுக்கலானான்.....தண்ணீரை பருகி முடிக்கும் போது .... அவளின் பதட்டமும் மட்டுபட்டது.... அவளின் முகத்தையே பார்த்த படி இருந்த ஆரன் அவளின் ஆசுவாசத்தை உணர்ந்து .... " ஆர் யூ ஆல் ரைட் நௌவ்... ??? " என கேட்க....அவளும் .. "ஆம் " என்பதாய் தலையசைத்தவள்.... "அம்மூ எங்கே???!!!" என்பது போல பார்க்க... அவளின் பார்வை உணர்ந்தவன்....

"பட்டும் தூங்கிட்டா ... அதான் பின்னாடி வசதியா தூங்க வச்சிருக்கேன்.... " என்றவன் தொடர்ந்து...


"நைட் புல்லா தூங்காம இரு.. இப்ப கும்பகரணி மாதிரி தூங்கற ... புள்ளைய தூக்கினது கூட தெரியாம..." என கிண்டலாய் சொல்லி சிரிக்க....


அவன் சொல்ல ஆரம்பித்ததும் திரும்பி அம்மூவை பார்த்திருந்தவள் , அவன் முடிக்கும் போது தன்னை கிண்டல் செய்தததை கேட்டதும்...அவனை முறைத்துவிட்டு, சட்டென தனது முகத்தை எதிர் திசையில் திருப்ப....
ஆரனின் சிரிப்பின் அளவு அதிகமானது அவளின் செய்கையில்....


"காயூ ... சில நேரம் பட்டுக்கும் , உனக்கும் வித்தியாசமே தெரியல.... அவ ஐஸ்கீரிம் கேட்டு ... இல்லன்னு சொன்னா.... இப்படி தான் செய்வா.... அதோ மாதிரி இருக்கு நீ செய்யறது.... " என மலர்ந்து சிரித்தவனை பார்த்தவளுக்கும் மென்னகை உருவானது...


தங்களுக்கு எதிரில் இருந்த வாகன சாரியில்... நான்கு கண்கள் இவர்கள் வண்டியில் நடந்த அந்த நிகழ்வை தான் பார்த்துக் கொண்டிருந்தது....


அதில் இரு கண்கள் கோபத்தையும், வன்மத்தையும் காட்ட.... மற்ற இருகண்களில் அவதானிக்க முடியா உணர்வை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது...
இவர்களின் பேச்சுவார்த்தை எதுவும் காதில் விழாத தொலைவில் இருந்தாலும் ஆரன் பேச்சிலும் சிரிப்பிலும் ... காயத்ரியின் முகம் காட்டிய உணர்வுகளை பார்த்திருந்த அவர்களின் மனதில் எழும் உணர்வுகளை அடக்க முடியாது தவித்தவர்களின் தவிப்பை போக்கவே பச்சை விளக்கு ஒளிர்ந்தது....இவர்கள் காத்திருந்த சிக்னல் விழவும் அவளை விட்டு விலகியவன் தன் காரினை இயக்க...


சரியாக அதே நேரத்தில் எதிர் சாரை வண்டிகளும், தங்கள் சிக்னலிலிருந்து வெளியேற.... அதில் இருந்தவர்கள் பார்வை இருவரையும் பார்த்தே நகர்ந்தது....


ஏதோ ஒரு உள் உணர்வு ஒருவித இதத்தை தர.. அந்த உந்துதலில் காயத்ரியின் பார்வை வெளியே சென்ற வாகனங்களை மிகவும் உன்னிப்பாக பார்க்க வைத்தது....அவள் எவ்வளவு தூரம் தேடியும் அவள் உணர்வுக்குள் வந்த அந்த இதத்திற்கு காரணமானவனை பார்க்க முடியாது போனது அவளின் நல்ல நேரமா... ?கெட்ட நேரமா..... ?

**************


 

Riy

Author
Author
#2
அலுவலகத்தில் தனது வேலையை ஒத்திவைத்துவிட்டு... தான் செய்த பிழையால் விளைந்த அதிகப்படியான வேலையை முடிக்கும் போதே மதிய உணவு வேளையையும் கடந்து போயிருக்க...ஹரிணி , அன்றைய மதியஉணவையும் உண்ணாது இருந்தவள்.. ப்யூனை அழைத்து தனக்கான மாலை சிற்றுண்டியை அப்போதே வர வழைத்தவள் அதை கொறித்து விட்டு....


தனது வேலையை முடித்து ஆரனுக்கு அனுப்ப வேண்டும் என்ற நினைவை மட்டுமே கொண்டு தனது வேலையில் மூழ்கியவளுக்கு சென்று கொண்டிருந்த காலம் தான் தெரியாது போனது....தான் எப்போதும் மாலை ஆறு மணிக்கு மேல் வேலை பார்த்தாலும்.." மீதியை நாளை பார்க்கலாம் " என கிளப்பிவிடும் ஆரனும் இல்லாது போனதால்... அவளும் எதையும் சிந்திக்காமலே இருந்துவிட்டாள்....அவளின் அறையும் , ஆரன் அறையும் மட்டுமே கொண்ட அந்த தளத்திற்கு அதிகமாய் யாரும் வர, போக இல்லாது இருந்ததும் ஒரு காரணமாய் போக....மணி எட்டை தொடும் போது ... அவளின் வேலையை முடித்து ஆரனுக்கு மெயில் அனுப்பவும்...அவளின் போனில் அவளின் தாயின் அழைப்பு வரவும் சரியாக இருந்தது.....தன் தாயின் அழைப்பை ஏற்றவள் அப்போது தான் தன் தவறு புரிய... அந்த புறம் பதட்டத்தில் ஒலித்த தாயின் குரலுக்கு ...


" அம்மா... எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல... இதோ இப்ப கிளம்பிட்டேன்... இன்னும் அரை மணி நேரத்தில வீட்டுல இருப்பேன்.... " என பேசிக்கொண்டே தனது உடமைகளை எடுத்தவள்... வேகமாக லிப்டை அடைந்து பார்க்கிங் ஏரியவிற்கு சென்றாள்.....

பார்க்கிங் சென்று பார்த்தவுடன் தான் தனது மடத்தனம் விளங்கியது அவளுக்கு.... ஏனெனில் அங்கு அவள் வாகனத்தை தவிர வேறு யாருடையதும் இல்லாதது மட்டுமல்ல .... மழை வரும் அறிகுறியாய் மேகம் கரு நிறம் கொண்டு சூழ இருந்த இருளை மேலும் இருட்டாக்கி கொண்டிருந்தது....
அவசரமாக தனது ஸ்கூட்டியை உயிர்ப்பித்தவள்.. வேகமாக வாசலை கடக்க... அங்கிருந்த காவலாளியோ......


" ஏம்மா ... இவ்வளவு நேரமும் உள்ள தான் இருந்தியா நீ.... ???? " " பார்த்து போம்மா... மழை வேற வர்ற மாதிரி இருக்கு... பாத்து பத்திரம்... " என கூற...
ஒப்புதலாய் தலை அசைத்துவிட்டு அங்கிருந்து சென்றாள்....ஹரிணி அந்த நிறுவன எம் டியின் பி ஏ வாக இருந்தாலும் ... எந்த பந்தவும் இல்லாது எல்லோரிடமும் மரியாதையுடனும் , பாசத்துடனும் பழகியதால் வந்த அக்கறை அந்த வாயில் காப்பாளரிடம்......


தனக்கு காத்திருக்கும் ஆபத்தை உணராது அவரிடம் விடை பெற்றவள் தன் வீட்டை நோக்கி தன் வண்டியை இயக்கலானாள்.......
 
Top