• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Ullam Vizhithathu Mella - 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,089
Reaction score
4,588
Location
Coimbatore
உள்ளம் விழித்தது மெல்ல – 10

“காய் துவர்க்கும். பழம் இனிக்கும். அது என்ன?”

“துவர்க்கும்னா?”

துவர்ப்புனா.. வந்து அது ஒரு சுவை. நீ சாப்பிட்டு இருக்க. பாடத்துல சின்ன கிளாஸில படிக்கும் போது பாக்கு துவர்க்கும்னு படிப்பில்ல அதுதான்” என்று சமாளித்தார்.


என்னவா இருக்கும்? என்று யோசித்த மகளை நிம்மதியாகப் பார்த்தார் லட்சுமி. சிறிது நேரம் வீட்டு வேலை செய்யலாம்.

கோடை விடுமுறை விட்டாலும் விட்டார்கள் இவள் தொல்லை கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டு இருக்கிறது.

கோடை விடுமுறைக்குச் சென்று செல்லம் கொஞ்சும் அளவு அவர்களுக்கு சொந்தக்காரார்கள் வீடு இப்போது இல்லை.

இருந்த கிருத்திகாவையும் பகைத்துக் கொண்டு விட்டாயிற்று. அவர்களுடையது ஒரு பெரிய சண்டை இல்லை. ஆனால் சண்டை மும்முரத்தில்

“ஆம்பளப்புள்ள அருமை உனக்கு எப்படித் தெரியும்? உனக்குதான் ரெண்டும் பொண்ணாச்சே?” என்று கிருத்திகா கேட்க

“அது கூட உனக்க இல்லையே?” என்று சட்டென சொல்லி விட்டார் லட்சுமி.

கிஷோரை தன் குழந்தையாகவே நினைத்திருந்த கிருத்திகா விதிர்விதிர்த்துப் போனாள் என்றால் நாமா இந்த வார்த்தை சொன்ம்? என்று லட்சுமியும் பதைத்துதான் விட்டார்.

அதன் பின் ‘சுட்ட சட்டி (பானை) ஒட்டாது’ என்பதாக இருவரும் விலகி விட்டார்கள். தன்னிடம் பெருமை பீற்றவாவது சீக்கிரம் கிருத்திகாவிற்கு ஒரு குழந்தையைக் கொடு என்று லட்சுமியும் இறைவனை நினைக்கும் போதெல்லாம் வேண்டிக் கொண்டுதான் இருக்கிறார். அதாவது இறைவனை நினைக்கும் போதெல்லாம்.

அதுதான் கோமதி புண்ணியத்தில் அடிக்கடி நினைக்கிறாரே? .தவிர அந்த நிகழ்ச்சியின் கதாநாயகியே அவள்தானே?

கிருத்திகா தவிர வேறு எந்த சொந்த பந்தமும் அத்தனை ஒட்ட மாட்டார்கள். அவரவர்களுக்கு அவரவர்கள் பாடு. அன்னம்மா அதற்கு சரிப்பட்டு வர மாட்டார். இத்தனை நடந்த பின்பும் அவரைப் போய்ப் பார்த்தது லட்சுமியின் தைரியம் என்றால் அவரை மனதார வரவேற்றது அன்னம்மாவின் பெருந்தன்மை.

கிருத்திகாவிடம் போய்ப் பேச லட்சுமிக்கு குற்ற உணர்வாக இருந்தது. அவள் சொன்னது சரி என்றால் இவர் சொன்னதும் சரி. அவள் சொன்னது தப்பு என்றால் இவர் சொன்னதும் தப்பு. குழந்தைகளில் ஆண் குழந்தை என்ன? பெண் குழந்தை என்ன?

அதேப் போல குழந்தை இல்லாவிட்டால் அது என்ன பெரிய பாவம்?

எப்படி சுகர் இல்லையோ? பிரஷர் இல்லையோ? அது போலத்தான் இதுவும். இருந்தால் மெயின்டெயின் செய்ய வேண்டுமே? என்பார் லட்சுமி.

தன் குழந்தைகளைப் பொதுவாகப் பார்த்து லட்சுமி அடிக்கடி “உங்களைப் பெத்ததும் போதும். இப்படி சீரழியறதும் போதும்” என்று புலம்புவார்.

“நான் என்னம்மா செய்தேன்?” என்று கொஞ்சலாக கோபிப்பாள் பாரதி.

“சொல்றதுன்னா அவளை மட்டும் சொல்லு” என்று எடுத்து வேறு கொடுப்பாள்.


“நீயெல்லாம் ஒரு தங்கச்சியா புள்ள? ஒவ்வொரு வீட்டுல தங்கச்சிங்க எப்டி இருக்காங்க தெரியுமா?”

“எப்டி இருக்காங்க?”

“வந்து.. அக்கா சொன்னா அப்டியே கேப்பாங்க தெரியுமா?” என்று மென்று முழுங்கினாள் கோமதி.

“அப்படி ஒரு தொங்கச்சிய சொல்லு பாப்போம் “ என்று சவால் விட்டாள் பாரதி!

“ஏன் மத்தவங்களைத் தேடணும்? எங்க ஆஷா டீச்சர் தங்கச்சி ப்ரியா அக்கா அவங்க அக்கா சொன்னதை அப்டியே கேப்பாங்க தெரியுமா?” என்று பெருமையடித்தாள் கோமதி.

“பெருமை பீத்தக் கலயம். கஞ்சி ஓட்டக் கலயம். டீச்சர் சொன்னா கேட்டுத் தானே ஆகனும்?” இதைச் சொன்னது பாரதிதான். இந்த பழமொழிகளை அரைகுறையாக தன் அன்னையிடம் கற்று வருகிறாள். கோமதிக்குதான் துவர்ப்பு என்றாலே புரியவில்லையே?

அவளது மொழியறிவை நம்பி ‘சிறுவர்களுக்கு நூறு விடுகதைகள’என்ற புத்தகத்தை வாங்கி வைத்துக் கொண்டு தப்பித்து வருகிறார் லட்சுமி. அதில் கேட்ட ஒரு விடுகதைக்கு பதில் சொல்லாமல் தற்போது “வேப்பங்காயா? பாவக்காயா?”என்று தன்னைப் பின் தொடரும் மகளைப் பார்த்துச் சிரித்தார் லட்சுமி.


அவளை தையல் கிளாஸில் சேர்த்து விடலாம் என்று யோசித்த போது அது குறிப்பிட்ட நேரம்தான் என்று சொல்லி விட்டார்கள்.

இதர நேரங்களில் மற்ற கொஞ்ச நஞ்ச துணிகளைத் தைப்பதற்கு இல்லாமல் இவரிடம் வாயைப் பிடுங்க வந்து விடுவாள் இவர் பத்து மாதம் சுமந்து பெற்ற மாமியார்.

அதிலிருந்து தப்பிக்க அவர் செய்த உத்தி அவரை எள்ளி நகையாடியது. கோமதி ‘விடுகதையின் விடை அதுவா? இதுவா? ‘என்று இன்னும் குடைய ஆரம்பித்து விடுவாள்.

லட்சுமி சிரித்ததைப் பார்த்து மெல்லச் சிரித்துக் கொண்டார் சீனிவாசன். அன்று பிள்ளைகளை வெளியே கூட்டிச் செல்ல வேண்டும் என்று சீக்கிரம் வந்திருந்தார்.


தன் ஒரு வயதில் மகள் இரும்புச் சேரைப் பிடித்துக் கொண்டு நின்ற போது லட்சுமியின் முகத்தில் தெரிந்த அதே பெருமை இப்போதும் இருந்தது. அதைப் பார்த்துதான் இவருக்கு இத்தனை பூரிப்பு.

“அப்பா… அப்பா..” என்று அவரிடம் ஓடிய பிள்ளைகள் வழக்கம் போல அவர் கைகளில் இருந்து பண்டங்களை வாங்கிக் கொண்டனர்.

அந்த இடத்திலேயேப் பிரித்து சமோசாவை ருசி பாத்தவர்கள் மறவாமல் தந்தைக்கு ஒரு சமோசா கொடுத்திருந்தார்கள். லட்சுமிக்கும் ஒன்று ரிசர்வட் செய்யப்பட்டு இருந்தது.

சமோசாவை முடித்து அன்னை கொடுத்த தேநீரையும் பருகிய பின்

“அப்பா காய் துவர்க்கும். பழம் இனிக்கும். அது என்ன?” என்றாள் கோமதி.

“நீ கண்டு பிடிச்சிட்டியா?”
“இல்லப்பா”
“என்னடா நீ. இதுகூடத் தெரியல. நான் உன்னை பெரிய படிப்பெல்லாம் படிக்க வைக்கனும்னு நினைச்சிட்டு இருக்கேன்…” என்று கொஞ்சமாக வருந்தினார் சீனிவாசன்.

“பெரிய படிப்பெல்லாம் என்னை படிக்க வைங்கப்பா. “ என்று அவருக்கு ஆறுதல் சொன்னாள் பாரதி.

“போதும். உன் பெருமை. அப்பா.. நீங்க சொல்லுங்கப்பா”

“விடுகதை யாருக்கு போட்டாங்களோ அவங்கதான சொல்லனும்”

“ப்பா..ப்பா..”என்று பெரிய மகள் கொஞ்சவே சின்னவளைப் பார்த்து கண்ணால் கேட்க

“வாழைப்பழம்” என்றாள் பாரதி. கூடவே “நீ பெரிய பள்ளிக் கூடத்துல படிக்கிறேன்னு வெளிய சொல்லிராதே” என்று எக்காளமிட்டாள்.

தமிழ் நன்கு படிக்கத் தெரியும் அவளுக்கு. அதனால் அம்மா வாங்கி வைத்திருந்த புத்தகத்தை மெது மெதுவாக வாசித்துக் கொண்டு இருக்கிறாள் அவள்.

இந்த விடுகதையை நேற்றே அப்பாவிடம் கலந்து ஆலோசித்து விட்டாள். அந்த சமயம் சமூகம் சைக்கிள் ஓட்டப் போய் இருந்தது.

“பெரிசா சொல்ல வந்துட்டா.. அம்மா அடுத்த விடுகதையைச் சொல்லுங்க அம்மா. அதை நானே கண்டு பிடிக்கிறேன” என்று உள்ளே ஓடினாள் கோமதி.

லட்சுமி சற்றும் மனம் தளராமல்

“ஒரே புட்டியில் இரண்டு தைலம் - அது என்ன? இதுக்கு நீயே விடை கண்டு பிடிச்சு சொல்லனும். அப்பதான் இனி விடுகதை போடுவேன்” என்று நிபந்தனை போட்டார் .

தலையைத் தட்டி யோசித்தவாறே வெளியே கிளம்பத் தயரானாள் கோமதி.

மீண்டும் குளித்துக் கிளம்பி அன்பான தன் குடும்பத்துடன் ஆட்டோவில் பொருட்காட்சிக்குப் பயணப்பட்டார் சீனிவாசன்.

தன் மூத்த மருமகனை அங்கே கண்டு கொண்டார் அவர்.

**************************************
திருக்குற்றாலத்தில் அருவி அமைவிடத்திற்கு அருகில் இருந்த ‘விஜயா ஸ்டோர்ஸ்’ என்ற பெயரிட்ட எண்ணெய் கடையை செந்திலுக்கு காட்டினான் கிஷோh.

கடவுளை வணங்கி விட்டு அருவியில் குளித்துவிட்டு இருவரும் ஈர பனியன் - காய்ந்த சட்டை மற்றும் ஈர பேன்ட்டுடன் இருந்தனர். கிஷோர் தோளில் காசித் துண்டு இருந்தது. செந்திலுக்கு அதன் பயன் சற்றுக் குறைவாக இருந்ததால் தனியாக எடுத்து வரவில்லை.

இன்னும் அருவியில் குளித்துக் கொண்டு இருந்த மனைவியையும் மாமியாரையும் அதில் இருந்து பெயர்த்தெடுக்க முடியவில்லை அவனால். இருவரையும் ஒருவருக்கு ஒருவர் காவல் என்று வைத்து விட்டு மச்சினனுடன் நடையைக் கட்டி இருந்தான் செந்தில்.

கிஷோர் இவனிடம் “அத்தான் நான் உங்க கிட்ட தனியா பேசனும்.” என்று காதைக் கடித்ததுதான் காரணம்.




“அத்தான்… இந்தக் கடையில அக்கவுன்ட்ஸ் பார்க்றதுக்கு ஆள் வேணுமாம். சொஞ்ச நாள் எடுபிடி வேலை பார்த்துட்டு அப்புறம்தான் தருவாங்க. சம்பளம் என் ஒருத்தனுக்குப் போதும்” என்று சொல்லிக் கொண்டே போக


“நிறுத்திறியா? நான் என் செத்தா போனேன்? பனிரெண்டு முடிச்சுட்டு மேல படிக்கறதுக்கு இல்லாம எதுக்கு வேலைக்குப் போகனும் நீ?” என்று பொரும உறும ஆரம்பித்து விட்டான் செந்தில்.

“இல்ல அத்தான். நான் உங்க கிட்ட எவ்வளவோ சொல்லிட்டேன். எனக்குப் படிப்பில இன்ட்ரஸ்ட் இருக்கு. பட் ஸ்கூல்இகாலேஜ் போறது பிடிக்கல. நான் இப்படியே இருக்க மாட்டேன். கரஸ்ல கண்டிப்பா படிப்பேன். என்னை என் மனப் போக்குக்கு தயவு செஞ்சு விடுங்க. உங்க பேரை காப்பத்துவேனான்னு எனக்கும் தெரியல. ஆனா நிச்சயமா கெடுக்க மாட்டேன்.” என்றவன் நீளமாக உரையாற்றி கொஞ்சம் சென்டிமென்ட் பிட்டும் போட்டு சம்மதம் வாங்கி விட்டான்.

‘என்னை விட கில்லாடியா இருப்பான் போல இருக்கே? ‘என்று மனதுள் வியந்தும் மகிழ்ந்தும் கொண்டான் செந்தில்.

“அதுல்லாம் சரி. நீ இருக்கறது திருநெல்வேலி டவுன்ல. அங்கேயே பாக்காம ஏன் இங்க வந்தே?”

“ஒரு சிலரைப் பார்க்கக் கூடாதுன்னுதான். வாழ்க்கையில ஏதோ ஒண்ணு சாதிச்சதுக்கு அப்புறம்தான் சொந்த ஊருல தலை நிமிந்து நடக்க முடியும். நம்ம எல்லோரும் தவறாம ஆசைப்படறது சொந்த ஊருல கௌரவமா இருக்கனும்னுதான். என்ன நான் சொல்றது?” என்ற போது சிறுவன் கிஷோர் அங்கே இல்லை.

மச்சினனைக் கனிவுடன் நோக்கிய செந்தில் “உனக்கு என்னடா குறை?” என்றான்.

“இது குறை இல்ல அத்தான். நிறை. அது என்னை கையால் ஆகாதவனா எனக்கே என்னைக் காட்டுது.” என்றவன் இடையிட முயன்ற செந்தில் கைகளைப் பிடித்துக் கொண்டான்.

“இந்த வேலைக்கு நான் இன்னும் சேரல. அப்படிச் சேந்தாலும் அவங்களுக்கு என்னைப் பிடிக்குமான்னு தெரியலை. இது எல்லாம் நடந்து இங்கே நான் ஒரு நிலைக்கு வர ஒரு ரெண்டு மூணு வருஷமாவது ஆவும். அதுக்கு அப்புறம் என்ன பண்ணலாம்னு நான் உங்களைக் கண்டிப்பா கேப்பேன். இப்ப எனக்கு ஒரு மாறுதலோட வேலையும் அவசியம் அத்தான். இதுவரை என் வாழ்க்கையில நான் நல்லா இருக்கனும்னு நீங்களும் அக்காவும் ரொம்ப கஷ்டப்பட்டீங்க. என்னால உங்களுக்கு நிம்மதியைத் தர முடியல. இன்னும் அதைப் படிக்கிறேன் இதைப் படிக்கிறேன்னு காலேஜூக்குப் போய் அங்கேயும் பிரச்சனை பண்ணிட்டு வர விரும்பல. அப்படி இருக்காதுன்னு சொல்வீங்க. ஆனா நான் இப்ப ஒரு முடிவெடுத்திருக்கேன். ப்ளீஸ் ஹெல்ப் மீ” எனவும்

“சரி. உன் இஷ்டம். எதுக்கும் உன் அக்காகிட்ட பர்மிசன் வாங்கிக்க. ஆனா நீ எடுபிடியாலாம் சேர வேணாம்…”

“இல்ல அத்தான். அப்பதான் அடிப்படை தெரியும். நான் சந்தோசமாத்தான் சொல்றேன்.” என்றவனை கண் நிறையப் பார்த்தான் செந்தில்.

“மச்சானும் மச்சினனும் என்ன எங்களுக்குத் தெரியாம சொஞ்சிக்கிடுதீங்க?” என்றவாறு இவர்கள் உடுத்திக் குளித்த துணி மூட்டைகளுடன் வந்தாள் கிருத்திகா.

“உன்னை யாரு வெயில்ல இத்தனை துணியையும் தூக்கிட்டு வரச் சொன்னது. அங்கேயே இருக்க வேண்டியதுதானே? இப்ப வந்திருவோம்னு சொல்லிட்டுத் தானே வந்தோம்? என் சட்டைக் கலரைப் பார்த்துக்கிட்டே என் பின்னால வாரதை எப்பதான் விடுவியோ?” என்று படபடத்தான்.

கிருத்திகாவை விட செந்தில் வேகமாக நடப்பான். அதனால் அவன் சட்டைக்கலரைப் பார்த்துக் கொண்டே அவனைத் தொடர்வது அவள் வழக்கம். அதன் பலன் அவள் வேறு எதையும் பார்க்க மாட்டாள். பார்த்து அது வேண்டும் இது வேண்டும் என்று ஆசைப்பட மாட்டாள்.

இப்போது இவர்கள் நடக்க ஆரம்பித்ததும். குளியலை நிறுத்தி விட்டு அம்மாவை அவளைத் தொடரச் சொல்லிவிட்டு இதுணிகளையும் அள்ளிக் கொண்டு பின்னே வந்து விட்டாள். அவர்கள் ஒரே இடத்தில் நின்றதால் தப்பித்தாள். இல்லை என்றாலும் திரும்பி வரும் போது பார்த்திருப்பார்கள்.

வேகமாக வந்தவள் தடுமாறி விழப் போனாள். சட்டெனத் தாங்கிய மூதாட்டி ஒருவர் “ நானும் உன்னை பார்த்துக்கிட்டேதான் இருக்கேன். இந்த நேரத்துல இத்தனையையும் தூக்கிக்கிட்டு இப்படி நடக்கலாமா?” என்று மென்மையாகச் சிரித்தார்.

“நல்லா சொல்லுங்க பாட்டி. இந்த வெயில்ல இப்படி வரலாமா?” என்ற செந்திலின் முதுகில் தட்டி”அட கோட்டிக்காரா! நான் அதை சொல்லல. உண்டாகி இருக்கும் போது இப்படி வரலாமான்னு கேக்கேன?” என்று சலித்துக் கொண்டார்.

"பாட்டி! எப்படி? எப்படி? "என்று செந்தில் பரபரக்க

“நீ யாரு?” என்று இருவரையும் ஆராய்ந்தவர் பெருமகிழ்ச்சி பயம் இரண்டும் சரிவிகித்தில் இருந்த அந்த முகங்களைக் கொண்டு உறுதி செய்து கொண்டார்.

“இவ புருஷனா? எப்படின்னு எங்கிட்ட கேக்க? நீதான் சொல்லனும்.நாங்கல்லாம் அந்த காலத்து ஆளுங்க. நடையை வச்சே கண்டு புடிச்சிருவோம். இன்னும் முகம் நல்லா காட்டிக் குடுத்திரும். எதுக்கும் உன் கண் எதிர்க்க நாடி பார்த்து சொல்றேன். நீயும் இங்கிலீசு ஆஸ்பத்திரில காமி. அங்க சொன்னா தானே நம்புவீங்க?” என்றவர் நாடி பார்த்தும் சொல்லி விட்டார். ஆனந்தத்தில் மடிந்து உட்கார்ந்து அழுது விட்டாள் கிருத்திகா. தங்களை ரட்சித்த கடவுளைத் தொழுதான் செந்தில்.தாய் மாமன் கிஷோர் "உனக்குப் போட்டி வந்திருச்சு புள்ள" என்று கோமதியைக் கறுவினான். பாரதிக்கும் அவன் தாய் மாமன்தான். ஆனால் அவளைப் பார்த்தால் அவனுக்கு அத்தனைப் பிரியம். அழகாகத் தூக்கி வைத்துக் கொள்வான். தன் மகளைப்போல.

""அன்னிக்கு சொல்லிட்டு போனா என் ஆத்தா லட்சுமி. சொன்ன மாதிரி என் மக வயிறு குளுந்துருச்சு. மக்க பெறக்கது அந்த மகேசன் கையிலதான்.அந்த நேரம் வந்ததுச்சே! தெய்வமே" என்று கொண்டாடினார் அன்னம்மா. 'ஆக அந்த சுற்றம் லட்சுமிதானாக்கும்' என்று அழுகையின் ஊடே முறைத்த கிருத்திகா பின் பாசமாக தன் அக்காவை நினைத்துச் சிரித்தாள்.

நாள் தள்ளி போனதென்று
நாணமுடன் சொல்ல
நாடிப் பார்த்து மருத்துவச்சி
நல்ல சேதி சொன்னாள்

ஆராரோ ஆரிராரோ ஆரிராரோ

-------------------------------------------------------------------------------------
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரமாலக்ஷ்மி டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top