• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Ullam Vizhithathu Mella 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,141
Reaction score
4,644
Location
Coimbatore
உள்ளம் விழித்தது மெல்ல 11

விழுந்து விழுந்து அரசுத்தேர்வுக்குப் படித்துக் கொண்டு இருந்தான் அடைக்கலராஜ்.

அவன் பாட்டிற்கு ஜாலியாக ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்து கொண்டு ஊரைச் சுற்றிக் கொண்டு இருந்தான்.

இந்த ஆஷாவைப் பார்த்தாலும் பார்த்தான்
அவளைத்தான் கட்ட வேண்டும் என்று அலைந்து திரிந்து ஒருவழியாக அரேன்ஜ்ட் மேரேஜாக அவளைக் கல்யாணம் செய்து கொண்டும் விட்டான்.

கல்யாணத்திற்குப் பிறகு அவள் அவனை ‘இந்த வேலை வேண்டாம் ஏதாவது நல்ல வேலைக்குப் போங்க’ என்று சொல்லி விட நல்ல வேலை என்று எதுவும் அவனுக்குத் தெரியாததால் டிஎன்பிஎஸ்ஸிக்குப் படித்துக் கொண்டு இருக்கிறான்.

திருநெல்வேலியிலேயே இவர்கள் இருவரும் தனி வீட்டில் இருக்கிறார்கள். காலையில் சமைத்து வைத்து விட்டு அவள் பள்ளிக்கூடத்திற்குப் போய்விட்டால் இவன் பொழுதன்றைக்கும் பாடம் படித்துக் கொண்டு இருப்பான்.

அவள் வந்ததும் கேள்வி கேட்டு டெஸ்ட் வேறு வைப்பாள். ‘என்ன கொடுமை இது’ என்று அவன் உள்ளுக்குள் நொந்து போவான்.

வாசலில் ஆஷாவின் ஸ்கூட்டி வந்து நிற்பது சத்தம் கேட்டது. ஒரு கணம் உள்ளம் துள்ளினாலும் ‘என்னத்தை பெரிசா?’ என்று சலிப்பாகவும் இருந்தது.

கிராதகி! எப்படி எப்படி பேச்சை மாற்றினாலும் மறக்காமல் அன்று படித்ததில் பரிட்சை வைத்து விடுவாள். ஒரு டீச்சரைக் கட்டிக்கிடடதுக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்! என்று நொந்து கொண்டான்.

உடனே பதறிப் போய் ‘தெரியாம வாய் தவறி சொல்லிட்டேன் ஆண்டவா. இதே தாங்க முடியலை. இன்னும் அவகிட்டப் போட்டுக் குடுத்திராத!’ என்று உளமாற வேண்டிக் கொண்டான்.

ஆஷா வண்டியை பார்க் செய்து விட்டு உள்ளே வந்தாள். தனக்க முன் நீட்டப் பட்ட எலுமிச்சைச் சாற்றைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

சோர்ந்து போய் வருவாளே? என்ற இவன்தான் எலுமிச்சைச் சாறு கலந்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து இருந்தான். அவள் வந்ததும் எடுத்துக் கொடுத்து தன் முதல் பிட்டை ஆரம்பித்தான்.

“இவ்ளோ டயர்டா வந்துகிட்டு இன்னும் எனக்கும் பரிட்சைக்கு கைட் பண்றது எவ்ளோ கஷ்டம். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கடா” என்று வழிந்தான்.

எலுமிச்சைச் சாற்றை மெதுவாக அருந்தி முடித்தவள் “ஒன்னும் பிரச்சனை இல்லை. அதை நான் பார்த்துக்கறேன். நீங்க சாப்டீங்களா?” என்ற விசாரித்தாள்.
கையோடு டைனிங் டேபிளில் அவள் எடுத்து வைத்துப் Nபுhயிருந்த ஹாட் பாக்ஸ்களைத் திறந்து பார்த்தாள்.

எல்லாம் வக்கனையாகக் காலி ஆகி இருந்தது. அவள் அவனைப் பார்த்து. “குட். நான் முகம் கழுவி டிரஸ் மாத்திட்டு வர்றேன்.அம்மா வீட்ல இருந்து நைட் சாப்பாடு குடுத்து விட்ருவாங்க. நாம படிக்கலாம்” என்று சொல்ல மண்டை மண்டையாக முட்டிக் கொண்டான். மானசீகமாகத்தான்.

அவள் தயாராகி வந்து “ஹால் டிக்கெட் வந்திருச்சாமே?” என்றதும் அவனுக்குப் பற்றிக் கொண்டு வந்தது.

ரியல் எஸ்டேட் பிஸினஸில் கொடி கட்டிப் பறநது கொண்டு இருந்தான். கை நிறைய காசு வேறு. வாங்குபவர்களும் விற்பவர்களும் கொடுக்கும் மரியதை வேறு.

எல்லாவற்றையும் விட்டு விட்டு இவளுக்காக வேலைக்குப் போக சம்மதித்த ஒரே காரணத்திற்கு இவளானால் வந்ததில் இருந்து படிப்பு …படிப்பு என்று உயிரை வாங்குகிறாள்.

இவர்களுக்குத் திருமணம் முடிவான சமயம் அடைக்கலராஸின் தம்பிக்கு ஒரு சின்ன ஆக்ஸிடென்ட் ஆகி அவனால் வர முடியவில்லை. ராசி அது இதென்று சுற்றம் உளறிக் குளறினாலும் காது கேட்டகாதது போல் இருந்து இவளைக் கல்யாணம் செய்து காரியத்தைச் சாதித்துக் கொண்டான்.

அதன் பின்பும் இவன் தம்பி ஆனந்த் இங்கே வரவில்லை. அங்கேயே அவனுக்குப் பிடித்த மரவேலை செய்கிறான்.

ப்ரியாவும் ஆனந்தைப் பார்;கவில்லை. இருவரையும் ஒருவருக்கு ஒருவுh புகைப்படத்திலாவது அறிமுகப்படுத்தி வைக்க வேண்டும் என்றும் யாருக்கும் தோன்றவில்லை.

ஆனால் ஆனந்த் இவளை அறியாமல் இல்லை. தன் காலில் நின்ற பின்னே இவளிடம் பேச Nவுண்டும் என்று ஒரு எண்ணம் அவனுக்கு. அதே நேரத்தில் இலவு காத்த கிளியாகத் தன் கதை ஆகிவிடக் கூடாது என்று அவளைக் கண்காணிக்க கிஷோரை அவள் படிக்கம் கல்லூhயில் வேலைக்கு அனுப்பி வைத்திருந்தான்.

கிஷோர் டாப் இன்சீனியரிங் காலேஸில் காண்டீனில் வேலை செய்கிறான்.
அவனுக்கும் ஆனந்திற்குமான அக்ரிமென்ட்இ ப்ரியா கல்லூரி முடிக்கும் வரை அவளுக்கு சைலன்ட் பாடி கார்டாகவும் இவனுக்கு ஸ்பையாகவும் இருக்க வேண்டும். அவள் படிப்பு முடிந்ததும் கிஷோருக்கு அந்த காண்டீன் கான்ட்ராக்ட் ஐந்து வருடத்திற்கு ஆனந்த் வாங்கித் தருவான்.

சொந்தம் என்று ஆன பின்பு இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் இருக்கப் போவது இல்லை. ஆனந்த் அதை முடிந்த அளவுத் தள்ளிப் போட்டான்.

தம்பியின் செயல்களுக்கு அர்த்தம் புரியாவிட்டாலும் அவனை அவன் போக்கிற்கு விட்டு விட்டான் அடை;க்கலராஜ். அவன் என்ன சின்ன பிள்ளையா? இடுப்பில் தூக்கி வைத்துக் கொள்வதற்கு?

மற்றபடி சின்ன ஆக்ஸிடென்டுக்கு எல்லாம் கல்யாணத்திற்கு வராமல்மட்டம் போடத் தேவை இல்லை என்பது அவனுக்குப் புரிந்து இருந்தது.

அப்படிக் கூடப் பிறந்தவனையும் மதிக்காமல் இவளைக் கட்டிக் கொண்டால் பரிட்சை வைக்கிறாளாம்! அய்யகோ!

“ஆஷாம்மா..பசிக்குது..” என்று இழுத்தான் அடைக்கலராஜ்.

“கேள்வி கேட்டாஇபசி வரும் தண்ணித் தாகம் வரும். ஒன்னுக்கு வரும். பதில் மட்டும் வராது” என்று சிலுப்பினாள்.

“நீ எல்லாம் நல்லா இருப்பியாயா?” என்று வானத்தை நோக்கிக் கேட்டான் அடைக்கலராஜ். வீட்டில் இருந்து கேட்டதால் அவன் கை நீட்டிய இடத்தில் வீட்டின் மேற்க்கூரைதான் இருந்தது.

சட்டென அதிர்ந்த ஆஷாஇ “யாரைச் சொல்றிங்க?” என்று வியந்தாள். இவள் கணவன் இத்தனை சலிப்புடன் யாரைச் சொல்கிறான்?

“என்னைத்தான் சொல்றேன். நல்ல பொண்ணு. கல்யாணத்துககு அப்புறம் நம்மளை நல்லா கவனிச்சுக்கும்னு நினைச்சேன். அந்த நினைப்பில பல கனவுகள்லாம் கண்டுகினு சுத்திகினு இருந்தேன். ஆனா வேலைக்குப் போன்னு வச்சே பாரு ஆப்பு! அதான் ஆசை காட்டி மோசம் பண்ண என்னை நானே திட்டிக்கிட்டேன்” என்று அவன் புலம்பவும் ஆஷா சிரித்து விட்டாள்.

“ஆமா. சிரி. ஊர் உலகத்துல புதுசாக் கல்யாணம் முடிஞ்சவுங்களப் போயி பாரு..”

“அவுங்களைப் போய் நான் ஏன் பார்க்;கனும்?”

“அது உண்மைதான். அவுங்களை இப்பப் பார்;க முடியாது..” என்று அவன் புலம்பிக் கொண்டே செல்லஇவனை அடக்க ஒரே வழி பத்தகத்தை எடுத்து கேள்வி Nகுட்டு விழி பிதுங்க வைப்பது என்று முடிவு செய்து கையேடு எடுக்க எழுந்தாள் ஆஷா.

மெல்லத் தலை சுற்றவும் சுதாரித்து சோபாவில் அமர்ந்து கொண்டு தனக்குள் சில பல கணக்குகள் போட்டு விடை பாஸிட்டிவ் என்று சொல்ல நாணத்தில் தலை குனிந்தான்.
இவல்வளவு நேரம் இருந்த டீச்சரைக் காணோமே என்று சந்தோசத்துடன் அவளை நெருங்கிய அடைக்கலராஜ் அவள் விழி வழி கடத்திய செய்தியில் தலை கால் புரியாமல் திண்டாடினான்.

படிக்கிறேன் படிக்கிறேன்னு என்ன காரியம் செஞ்சு வச்சிருக்கான்?
-----------------------------------------------------------------------------------------
பொருட்காட்சியைச் சுற்றிப் பார்த்த கோமதியும் பாரதியும் அப்பா அதை வாங்கலாமா? இதை வாங்கலாமா? என்று ஆலோசனை வழங்கிய வண்ணம் இருந்தனர். சீனிவாசன் எதுவும் பேசாமல் சிரித்த தோரணையில் வரஇ லட்சுமிதான் அவர் சார்பாக அவற்றைத் தட்டிக் கழித்து வந்தார்.

“நீ சும்மா இரும்மா. அப்பா சொல்லட்டும்” என்று தன் கில்லாடித்தனத்தைக் காட்டினாள் கோமதி.

“ஏன்? நான் சொன்னா அப்பா சொன்ன மாதிரிதான்” என்று தன் உரிமையை நிலைநாட்டினார் லட்சுமி.

“அது எங்களுக்கும் தெரியும். ஆனா அப்பா சரின்னு சொல்றதைக் கூட நீ வேணடாம்னு சொல்லிறுவே போல இருக்கே?” என்று வெட்டினாள் பாரதி.

அதற்க பதில் சொல்லாமல் திருதிருத்த தாயை வெற்றிப் பார்வைப் பார்த்த தன் மக்களைப் பெருமிதமாகப் பார்த்துச் சிரித்தார் சீனிவாசன்.

அவரைச் சுற்றிலும் இருந்த அன்பு அவருக்கு அத்தனை ஆனந்தத்தைக் கொடுத்தது. இன்னும் என்னதான் வேண்டும் வாழ்வில்? என்று தோன்றியது.

அப்போதுதான் அவர் Charles க் கண்டார். அவனை அவருக்குத் தெரியும். பக்கத்து வீட்டுக்கு அடிக்கடி வருவான். என்ன ஒரு பொறுப்பு அவனுக்கு. அவன் வேறு ஜாதியாக இல்லாமல் இருந்திருந்தான் என்றால் மூத்த மகளுக்கு அவனையே மணமுடித்திருக்கலாம் என்ற ஒரு எண்ணம் அவருக்கு மனதின் ஓரம் உண்டு.

பெண் குழந்தைகள் இருவுரும் தங்களுக்குள் அடித்து பிடித்துக் கொண்டு வர ஒரு கடையில் இவர்கள் பட்டிமன்றம் நடத்தி வாங்கிய பெரிய பலூன் காறறில் பறந்தது.

தன் தாத்தாவுடன் அதேப் பொருட்காட்சிக்கு வந்திருந்த Charles இவர்களைக் கண்டு கொண்டு அந்த பலூனைப் பிடித்துக் கொடுக்க வாங்கிக் கொண்ட கோமதி “தேங்க்ஸ்” என்றாள்.

“அதுல்லாம் எனக்கு எதுக்கு கோமதி” என்றவன் மெலலச் சிரித்துக கொண்டே பாரதியின் தலையைத் தடவி விடை பெற்றான்.

“ரொம்ப நல்லப் பையன் இல்ல?” என்றார் லட்சுமி.

“அதுக்கு?”

“இல்ல.. சொன்னேன்.”

“எல்லாம் எங்களுக்கும் தெரியும். காலம் இன்னும் கிடக்கு. எதையும் நாம அறுதியிட்டுச் சொல்ல முடியாது. நீ உன் திருவாயை மூடிக்கோ” என்றுவிட்டு தடையைக் கட்டினார் சீனிவாசன்

“காந்திமதியும் செல்வமும் வர்றேன்னு சொன்னாங்க இன்னிக்கு. “ என்று சுற்று முறறும் பார்த்தாள் கோமதி.

“அதுல்லாம் வர மாட்டாங்க. ரெண்டு பேரும் பெரிய மனுஷி ஆகிட்டாங்க. அப்டில்லாம் வெளிய தெருவுக்கு கூட்டிட்டுப் போக மாட்டாங்க” எனறு சொன்ன லட்சுமி ‘அய்ய்யயோ’ எனப் பதறியவராக நாக்கைக் கடித்துக் கொண்டார்.

‘இதுக்கு என்ன ஏழரையைக கேட்டு வைப்பாளே?’ எனஅவர் தத்தளிக்க நல்ல Nவுளையாக அதைக் கவனிக்க மறந்த கோமதி “ அவங்க வந்தா அவங்க கிட்ட இநத விடுகதையைச் சொல்லலாம்ன இருந்தேன்” என்று குறைப்பட்டாள்.

“ஆமா நாஞ் சொன்ன விடுகதைக்கு நீ இன்னும் பதிலே சொல்லலியே?”

“அதான் சொல்லியாச்சே.. வாழைப்பழம்”

“அது உன் தங்கச்சி உனககு சொல்லிக் குடுத்தது. ஒரே புட்டியில் இரண்டு தைலம். அது என்ன?”

“வீட்டுக்குப் போறதுக்கு உள்ள சொல்றேன்மா..” என்று வீர வசனம் பேசினாள் பெரிய மகள்.

அதை எப்படித் தெரிந்து கொள்வது? என்று அவள் குறுக்கு வழியில் யோசித்த போது அவளுக்கு நினைவு வந்தவன் சார்லஸ்!

அவனைக் கண்களால் துழாவியவள் அவன் ஒரு வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனைக் கடையில் நிற்பதைப் பார்த்தாள்.

“அம்மா. உனக்கு ஒரு காய் சீவுறது வாங்கலாமா?” என்று கொக்கி போட்டாள்.

“அதை வாங்க Nவுண்டும் என்று லட்சுமி பல நாட்களாகச் சொல்லி வருகுpறார். ஆனால் வெளியே செல்லும் போது நினைவு இருப்பதில்லை. இப்போது அதை நன்கு நினைவு வைத்து குடும்பத்தினரை சார்லஸ் நின்ற கடைக்கு அழைத்துச் சென்றாள் கோமதி.

மெல்ல ஒருவருக்கும் தெரியாமல் அவனை நெருங்கியவள் “ சார்லஸ் சார்லஸ் உனக்கு விடுகதை தெரியுமா?” என்றாள்.

முன் அறிவிப்பின்றி அவள் வந்ததும் இல்லாமல் அவனை பெயர் சொல்லி அழைத்து மொட்ட தாசன் குட்டையில் விழுந்த கதையாக அவள் இப்படிக் கேட்கவும் அவன் உறைந்து நின்றான். ஆனால் தொடர்ந்து அவள் விடுகதைக்கு பதிலையும் சொல்லி அனுப்பி வைத்தான்.

“பரிட்சையில நீ வாங்குறது”
“பரிட்சையில நான் நல்லா மார்க் வாங்குவேன்..” என்று இழுத்தாள்

“ஓ நல்லாத் தெரியுமே? முட்டை மார்க் நல்ல மார்க்தான். ஏன்னா சத்துள்ளதாச்சே?” என்று அவன் கிண்டலடிக்கவும் விடுகதைக்க விடை முட்டை என்று தெரிந்து விட்ட திருப்தியில் அவன் கையைப் பற்றிக் குலுக்கி விட்டுப் போனாள் கோமதி.
----------------------------------------------------------------------------------------
 




Last edited:

Shakthi R

முதலமைச்சர்
Joined
Feb 4, 2019
Messages
6,692
Reaction score
18,201
Location
Madurai
என்னடா நான் Charles ah காந்திமதி ku ல ஜோடி சேர்த்தேன். இங்க என்ன நடக்குது. கோமதி Ku கிஷோர்
 




Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,141
Reaction score
4,644
Location
Coimbatore
என்னடா நான் Charles ah காந்திமதி ku ல ஜோடி சேர்த்தேன். இங்க என்ன நடக்குது. கோமதி Ku கிஷோர்
Naan appave Solla sonnen. Neenga sonningala? Yarukku yaro? Story complete agum pothu tha enakku therium. So keep reading??
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரமா லக்ஷ்மி டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top