• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Ullam Vizhithathu Mella - 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,089
Reaction score
4,588
Location
Coimbatore
உள்ளம் விழித்தது மெல்ல

8


ஆனந்த் தன் தாத்தாவின் கால்களைப் பிடித்துவிட்டுக் கொண்டு இருந்தான். அவன் தினசரி கடமைகளில் இது மிக முக்கியமானது. அவன் கால் பிடித்து விட்டால்தான் தாத்தா தூங்குவார். தாத்தவுக்குக் கால் பிடித்து விட்டுத்தான் இவன் தூங்கப் போவான்.

அவனது சின்ன வயதில் அவன் அண்ணன் அடைக்கலராஜ் சின்னம்மை வந்து தனிமைப்படுத்தப் பட்டபோது இவனை இவன் பெற்றோர் இவன் நலன் கருதி திருநெல்வேலியில் இவனது தாத்தா பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

“கோயம்புத்தூர் குளிர்ச்சியான இடம். இங்கே வந்த சின்னம்மை சூடான நெல்லையில வராதா?” என்ற தன் கணவனின் கேள்விக்கு ஐவகை நிலமும் உள்ள நெல்லையில் குளிர்ச்சியான குற்றாலம் பேருராட்சியில் உள்ள தங்கள் ஊரின் அருமை பெருமைகளை விளக்கி ஒருவழியாக அனுப்பி வைத்தார் விஜயா.

தவிரவும் “வேற எங்க அனுப்பறது?” என்ற இவர் கேள்விக்கு மௌனம்தான் பதிலாகக் கிடைத்து.

கலகலவென்று இருந்த குடும்பம் மகள் திருமணத்திற்குப் பின் சீர் சினத்தி என்று களை கட்டி இருந்தாலும்இ பேரன்களின் கோடை விடுமுறை தவிர்த்து வீடு வெறிச்சோடுவது பெரியவர்களின் மனங்களில் பெரிய குறையாகவே இருந்தது.

ஆனாலும் தங்கள் ஒரே மகளின் மணவாழ்க்கை சிறப்பாக இருப்பதே போதும் எனும் போது தங்களின் வெறுமையை அவர்கள் விழுங்கித் திரிந்தார்கள்.

அடைக்கலராஜ்க்கு சின்னம்மை அறிகுறிகள் வந்த போது உடனடியாக போன் செய்து தன் தாயிடம் “என்னால முடியலம்மா. பயமா இருக்கு. சின்னவனைக் கூட்டிட்டுப் போயிடறிங்களா?” என்று தேம்பினார் விஜயா.

மகள் தழுதழுத்துக் கேட்டதும் அவசர அவசரமாக கோவை வந்து தங்கள் சின்ன செல்லப் பேரனை வாசலில் நின்றே அள்ளிச் சென்றனர் பெரியவர்கள்.

உடுத்தி இருந்த டவுசர் டீஷர்ட்டுடன் கோவையில் இருந்து நெல்லைக்குப் பயணமானான் ஆனந்த். தாத்தா பாட்டியுடன் ஊருக்குச் செல்வது ஆனந்தமாக இருந்த போதிலும் பெற்றவர்களையும் அண்ணனையும் பிரிவது வருத்தமாகத்தான் இருந்தது.

அவனிடம் “தாத்தா உனக்கு ரிமோட் கண்ட்ரோல் கார் வாங்கி வச்சிருக்கேன். ஊருக்கு வா தங்கம்” எனவும் சந்தோசமாக தலையை ஆட்டி விட்டான். அப்புறம் மெதுவாக “தாத்தா அண்ணனுக்கு…?” என்று இழுத்தான்.

“அண்ணனுக்கு அடுத்த தடவை வரும் போது வாங்கிக் குடுக்கலாம். போலாமா தங்கம்..?” என்று பெட்டியைக் கட்டி விட்டார்.

அதன் பிறகு அவர்களுக்கும் இவனைப் பிரிய முடியவில்லை. இவனுக்கும் ஊரும் அதன் அருகில் இருந்த குற்றாலம் ,பாபநாசம் எல்லாம் பிடித்து விட, பெற்றவர்களைப பார்க்க மனம் முணுமுணுத்தாலும் சிறுபிள்ளையின் விளையாட்டுத்தனம் மிக அங்கேயே தங்கி விட்டான். தவிர தாத்தா பாட்டியின் ஏக செல்லம் வேறு.

அதுதான் நினைத்தால் தன் பெற்றோரைப் போய் பார்த்து விடலாமே? தவிர விஜயாவும் முடிந்த அளவு அடிக்கடி ஆனந்த நல்லூர் வந்து விடுவார். அதுதான் அவர்கள் ஊர்.

விஜய தேவ் ஆனந்தின் பெயரில் இறுதியாக அதைச் சேர்ப்பதற்கு அந்த ஊரும் ஒரு காரணம்தான்.

ப்ரியாவை அவன் முதன் முதலாக சந்தித்தப் பள்ளியில்தான் இவன் சிறுவயது முதல் படித்து வந்தான். விளையாட்டுத்தனமாக அலைந்ததால் படிப்பில் அத்தனை அக்கறை செலுத்தி இருக்கவில்லை அவன் . ஏதோ பாஸாகி விடுவான். அதுவே பெரியவர்களுக்கு அத்தனை சந்தோசம்.

தனது இரண்டாவது மகளை எஞ்சீனியர் ஆக்கும் கனவுடன் சுற்றிக் கொண்டு இருந்த பிரகாசம் ‘இந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல் , அந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்’ என்று ப்ரியாவிற்கு பள்ளியை மாற்றிக் கொண்டே இருந்தவர் ஆனந்த் பனிரெண்டு படிக்கும் போது அவளை இவன் பள்ளியில் சேர்த்து அவன் சோதனைக் காலத்தைத் தொடங்கி வைத்தார்.

“மணி ஒம்பதாச்சு. இன்னும் தூங்கலியா ரெண்டு பேரும்?” என்றபடி கையில் சூடான பால் டம்பளர்களுடன் வந்தார் பாட்டி.
சமையலுக்கு வீட்டு சுற்று வேலைகளுக்கு ஆட்கள் இரண்டு பேர் உண்டு. பாட்டி பிரியப்ட்டால் சமைப்பார். மற்றபடி மேற்பார்வை வேலைதான் அவருக்கு. அவர் மேற்பார்வை செய்வதை மேற்பார்வை செய்வது தாத்தாவின் வேலை.

“தூக்கம் எல்லாம் எப்பவோ வந்தாச்சு பாட்டி. இருந்தாலும் உங்க ஸ்பெஷல் ஸ்லீப்பிங் டோஸ்க்குதான் வெய்ட்டிங் பாட்டி”

இரவில் வெதுவெதுப்பான பால் அருந்தினால் நல்ல உறக்கம் வருவதாகச் சொல்லி பாட்டி தினமும் தன் கையால் காய்ச்சித் தருவது அது.

தாத்தாவிற்கு அவன் எவ்வளவோ கடமைப்பட்டவன். அவன் ப்ளஸ்டூவில் திண்டாடித் திணறியபோது கொஞ்சமும் முகம் அசங்காமல் இவனுக்கு உறுதுணையாக நின்றவர். பெற்ற தகப்பன் இவன் ஒழுக்கம் குறித்துத் திட்டி விலகிய போதும் விடாமல் நின்று தோள் கொடுத்தவர் அவர்.

அன்று அனைவர் முன்பும் அவர் மருமகனைப் பார்த்து “பருவத்தில இதுல்லாம் இருக்கறதுதான் மருமகனே. இதை கண்டிச்சு விடாம, பெரிசு படுத்தினதே தப்பு. நீங்க எல்லாம் இதை சாதாரணமா விட்டிருந்தா அவன் சீக்கிரம் மறந்தேப் போயிடுவான். பாப்பாவுக்கும் என்ன தெரியும்? ஏதோ சின்னக் குழந்தைங்க சண்டை மாதிரி தான் அதுவும் நினைச்சு வீட்டுல சொல்லிருக்கு. அது செஞ்சது சரிதான். நாம செய்யறது அவ்வளவு சரியில்லனு நினைக்கிறேன்” என்று பொதுவாகச் சொல்லிப் பார்த்தார்.

பிரகாசம் விடாப் பிடியாக நின்று அவனை அந்தப் பள்ளியை விட்டுத் துரத்திவிட்டுத்தான் ஓய்ந்தார்.

தனக்கு ஆதரவாக நின்றத் தாத்தாவின் பெயரைக் காப்பற்றவேதான் , அவன் பெற்ற அவமானமும் உந்த அந்த வருடம் நன்கு படித்தான். அவன் வெறித்தனமான படிப்பில் ப்ளஸ்டூவில் அதிக மதிப்பெண்கள் பெற்றுத் தேறி இருந்தான். அவன் மதிப்பெண்களைப் பார்த்துவிட்டு அவன் அப்பா அவனை கோவையில் அரசினர் பொறியல் கல்லூரியில் சேர்க்கக் கேட்ட போது அவன் ஒரே அடியாக மறுத்து விட்டான். இனி இவன் ஊர் இதுதான் என்று முடிவு செய்து விட்டான்.

பாலைக் குடித்து விட்டு டம்பளரைப் பாட்டி கையில் கொடுத்துவிட்டு தன் அறை நோக்கிச் சென்றான் ஆனந்த்.

பாலைக் குடித்தால் தூக்கம் வரும் என்ற சொல்லும் இதேப் பாட்டிதான் இவன் பரீட்சைக்குப் படிக்கும் போது டீ போட்டுக் கொடுத்துப் பக்கத்திலேயே இருப்பார். இவர் அதைச் செய்யாவிட்டாலும் அவன் அப்போதும் தூங்கி இருக்க மாட்டான்.
“போய்த் தூங்குங்கப் பாட்டி” என்றால் “இத்தனை மணிக்கு நீ ஒருத்தனா இருந்துப் படிக்கிறியே?” என்று பரிதவிப்பார்.

இப்போது மட்டும் தூக்கம் வந்து விடுமா?

அவன் நன்றாகத் தூங்கி நான்கு வருடங்கள் இருக்கும். நன்கு கண் அசந்துத் தூங்கும் போது திடீரென்று அந்தப் பிரின்சிபல் “ஐ டிஸ்மிஸ் யூ” என்று சொன்னது காதுக்குள் ஒலிக்க திடுமென விழிப்பான். அதைத் தொடர்ந்து அந்தப் பொல்லாத ராட்சசியின் முகம் கண்ணுக்குள் வரும்.

கல்லூரியில் அவளைப் பார்த்த போது இருவருக்கும் ஒருவரை ஒருவர் அடையாளம் தெரியாதது உண்மைதான். ப்ரியா இவனை மறந்தேப் போனாள். இவனை மட்டுமல்ல வேறு எவனையும் அவள் மனத்தில் நிலைக்க அவள் விட்டதில்லை. எல்லோரிடமும் நன்றாகப் பேசுவாள்தான். ஆனால் யாரையும் தன் எல்லைகளுக்குள் வர அனுமதித்ததில்லை.

சின்ன வயதில் நல்ல அழகு குண்டு முகம் அவளுடையது. இப்போது அந்த சதை வடிந்து விட்டதால் அவனால் அவளை சட்டென கண்டுபிடிக்க முடியவில்லைதான். அதிலும் தன்
மீது அவள் மோதிக் கொண்டதில் அவன் அவளைச் சரியாகப் பார்த்திருக்கவில்லை.
சக மாணவர்கள் ‘ஓ’ போட்டதும் அவள் கோபத்தில் சிவந்த முகம் அவளை அவனுக்குக் காட்டிக் கொடுத்து விட்டது.

உடன் படித்த மாணவர்கள் உசுப்பேற்றி விட இவன் அவளுக்கு லவ் லெட்டர் வழங்கிய திருநாளில்தான் அவள் கோபத்தில் முகம் சிவந்திருந்தாள். கண்கள் வெறிக்க உதடு துடிக்க சிவந்த அந்த முகமும் அப்போது அவனுக்கு ரசிக்கத் தோன்றியது. இப்போதும் துடித்த அந்த உதடு தான் அவனுக்கு அவளை அடையாம் காட்டியது.

ஆக அவளுக்கு அன்று கோபம் வந்தது வெறுப்பில் அல்ல. அதை ஒரு அவமானமாக நினைத்ததுதான் என்றுப் புரிந்தது.

பதினான்கு வயதுச் சின்னப் பெண்.

அவளிடம் அந்த உணர்வுதான் அப்போது இருக்கும். இவனுக்கு கண்டிப்பு இல்லாததால் கண்ட படங்களையும் பார்த்துவிட்டு மனதை அலைபாய விட்டதோடு மடடுமில்லாமல் வாழ்வு முழுதுக்கும் வேதனையை இழுத்துக் கொண்டான். இவன் கஷ்டப்பட்டதோடு மட்டும் இல்லாமல் குடும்பத்தினரையும் அல்லவா படுத்தி எடுத்து இருந்தான்.

வாழ்நாள் முழுவதும் இந்த வேதனை அவனை விட்டுத் தீரப் போவதில்லை என்றுதான் அவன் நினைத்தான். அவன் வேதனை தீர ஒரு மருந்து உண்டு என்றால் அது அவள்தான் என்பது அவன் முடிவு.

இன்னும் அவளை விரும்புகிறானா? என்று அவனுக்கேத் தெரியவில்லை. ஆனால் ‘உன்னால் இத்தனை மனவேதனை அடைந்தேன்’ என்று அவளிடம் சொல்ல வேண்டும் எனப் பல நாட்களாகக் காத்திருக்கிறான்.
அவள் பார்த்து அந்தப் பதினான்கு வயதில் சொன்னது போல “அச்சோ ஸாரிப்பா” என்று சொன்னால் போதும் அவன் துன்பம் தீர்ந்துவிடும்.

டிசியை வாங்கிக் கொண்டு வெளியே வரும் போது தற்செயலாக எதிர்ப்பட்ட அவள் அவன் கையில் இருந்த மாற்றுச் சான்றிதழைப் பார்த்து விட்டு உணர்ந்து சொன்னது அது.

ஆனால் அது அப்போது அவனுக்குக் கோபத்தையேக் கொடுத்து. அவளைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை.
பலமுறை நினைத்துப் பார்த்ததில் அவளின் வார்த்தைகள் அவனுககு ஓரளவு ஆறுதலைத் தந்தது உண்மைதான்.


இந்த விவகாரம் நடக்கும் போது ப்ரியாவை உள்ளே விடவில்லை. அவள் மனம் பாதிக்கப்படும் என்று பிரகாசம் மறுத்துவிட்டார்.

ஆனால் அதன்பிறகு அவளைப் பார்ப்பத்தைப் பற்றி அவன் நினைக்கவும் இல்லை. பார்ப்போம் என்றும் நினைக்கவில்லை.

படிப்பு , கிரிக்கெட் என்று அவன் என்னதான் சுற்றிச் சுழன்றாலும் மனதின் ஓரம் இருந்த அந்தக் காயம் இன்னும் ஆறவில்லையே?


படிப்பு முடிந்து ஒரு வேலையும் தேடிக் கொண்டு அதன் பிறகே அவளிடம் மீண்டும் இதை ஆரம்பிக்க வேண்டும் என்றுதான் அவளிடம் அவன் எதையும் காட்டிக் கொள்ளவில்லை.


இது என்ன மாதிரி மனநிலை என்று அவனுக்குத் தெரியவில்லை. அதே நேரம் அவளைக் கண்காணிப்பதை விடவும் இல்லை. அவளைப் பற்றித் தெரிந்து கொள்ள அதே கல்லூரியில் அவனால் சேர்க்கப்பட்டவன் கிஷோர்!

மியூஸிக் சிஸ்டத்தில் எப்போதும் அவன் ஒலிக்க விடும் பாடல் மெல்லக் கசிந்தது.


சின்னக் கண்மணிக்குள்ளே
வந்தச் சின்னக் கண்மணி
எந்தன் செல்லக் கண்மணி
சின்னக் கண்மணிக்குள்ளே

வந்தச் சின்னக் கண்மணி
எந்தன் முததுக் கண்மணி

நீண்ட கால தவமாய் நானே
வாங்கி வந்த வரம்நீ மானே
கண்ணே கண்ணே

அவள் அவனுக்கு வரமாக இருப்பாளா?
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரமா லக்ஷ்மி டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஆனந்தும் சின்ன பையன்தான்
அறியாத இரண்டுங்கெட்டான் வயசு
கண்டிக்கும் பெற்றோர் பக்கத்தில் இல்லை
தாத்தா பாட்டி செல்லம் வேறு
ஏதோ சின்ன பையன் தெரியாமல் செஞ்சிட்டேன் அவன் எதிர்காலம் பாதிக்கப்படும்ன்னு இல்லாமல் கமுக்கமா முடிக்க வேண்டிய விஷயத்தை பிரகாசம் ஊதி பெரிதாக்கி விட்டார்

இப்போ ஆனந்த் அண்ணனுக்கு பிரியா மேலே லவ்வுஸ் வந்துடிச்சு
இனி அண்ணா என்ன பண்ணப் போறார்?
 




Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,089
Reaction score
4,588
Location
Coimbatore
ஆனந்தும் சின்ன பையன்தான்
அறியாத இரண்டுங்கெட்டான் வயசு
கண்டிக்கும் பெற்றோர் பக்கத்தில் இல்லை
தாத்தா பாட்டி செல்லம் வேறு
ஏதோ சின்ன பையன் தெரியாமல் செஞ்சிட்டேன் அவன் எதிர்காலம் பாதிக்கப்படும்ன்னு இல்லாமல் கமுக்கமா முடிக்க வேண்டிய விஷயத்தை பிரகாசம் ஊதி பெரிதாக்கி விட்டார்

இப்போ ஆனந்த் அண்ணனுக்கு பிரியா மேலே லவ்வுஸ் வந்துடிச்சு
இனி அண்ணா என்ன பண்ணப் போறார்?
ananth annan eppo priyava love pannaru? adaikalaraj priya akka asha va tha ponnu kekkuraru. sarithane banuma?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ananth annan eppo priyava love pannaru? adaikalaraj priya akka asha va tha ponnu kekkuraru. sarithane banuma?
ஹா ஹா ஹா
இங்கே அண்ணா ன்னு நான் சொன்னது ஆனந்த் அண்ணாத்தையைத்தான்
அடைக்கலராஜ் பற்றி நான் ஒண்ணுமே சொல்லவில்லை
இருந்தாலும் ஆஷா கண்மணியை அடைக்கலராஜ்ஜுக்கு மணமுடிப்பதாக நீங்கள் சொன்னது ரொம்பவே சந்தோஷம்தான், ரமா டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top