• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Ullam Vizhithathu Mella _13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,126
Reaction score
4,628
Location
Coimbatore
உள்ளம் விழித்தது மெல்ல 13


தன் தாத்தாவிடம் முக்கிய வேலையாக வெளியே போவதாகச் சொல்லிவிட்டு அந்த டியூசன் சென்டர் அருகே வந்து ஒரு ஓரமாய் தன் பைக்கில் இடது கை ஊன்றி சாய்ந்து கூலர்ஸால் பாதி முகத்தை மறைத்துக் கொண்டு ,அந்த முகத்தையும் வலது கையால் தாங்கிப் பிடித்தபடி நின்று கொண்டு இருந்தான் சார்லஸ். இதில் மொத்த முகமும் வெளியே தெரியாமல அடிபட்டுப் போய்விட அவனை நன்கு பழகியவர்கள் தவிர மற்றவர்களுகக அடையாளம் தெரிய வாய்ப்பில்லை.

அவனும் வேலையில் சேர்ந்த நாள் முதலாய் இதே வேலையாக இருக்கிறான். தன் விடுமுறை நாட்களில் ஏதாவது காரணத்தைச் சொல்லிவிட்டு இந்த டியூசன் சென்டரை சுற்றி வளைக்கிறான். அல்லது அவள் டியூசன் முடித்து வரும் வழியில் ஏதாவது ஒரு இடத்தில் தற்செயலாக நின்று பார்ப்பது போல பார்த்து விட்டுப் போகிறான்.

மற்ற பாடங்களை நன்றாகப் படித்தாலும் கணக்கு மட்டும் அவளிடம் படம் காட்டுகிறதாம்! அப்படித்தான் அவள் பேசிக் கொண்டு இவனை ஒருமுறை கடந்து சென்று இருந்தாள்.

சிவலிங்கம் கூட கேட்டுப் பார்த்தான்,

“ஏன் சார்லஸ், சன்டே தானே சர்ச் போவே? மத்த நாளும் ஆளைக் காண முடியறதில்ல?” என்று.

கொஞ்சம் ஊன்றிப் பார்த்திருந்தால் இவன் புத்தி போன போக்கைக் கண்டு பிடித்திருக்கலாம். ஆனால் அவனும் செல்வத்தின் நினைப்பில் என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பதால் இவனை சற்று மறந்துதான் விட்டான் என்று சொல்ல வேண்டும்.

இவன் முதலாமாண்டு பொறியியல் படிப்பில் சேர்ந்த அன்றிலிருந்து சிவலிங்கத்திற்குப் பழக்கம். அந்த நட்பு இறுகத்தான் செய்து இருக்கிறது. அதற்காக இன்னும் சின்னக் குழந்தைகள் போல அவரவர்கள் வீட்டிற்குப் போய்ப பார்க்க வேண்டும் என்பதில்லையே? இருக்கவே இருக்கிறது செல்போன்.

எப்போதாவது நேரில் பார்த்துக் கொள்வார்கள். அது பெரும்பாலும் தற்செயலாகத்தான் அமையும்.

இப்போது …

அவனது நேரம் நன்றாக இருந்தால் அவள் முகத்தைக் கொஞ்சம் திருப்பி இவனைப் பார்க்கவும் செய்வாள்.

ஏற்கனவே தெரிந்தவன் என்ற அடையாளத்திற்காக மில்லி மீட்டர் அளவு லேசாக உதடுகளை சிரிப்பதாக காட்டி விட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விடுவாள்.

உடன் வருபவர்களிடம் வழக்காடுவது அவற்றில் முக்கியமானது. அவனுடைய நேரம்இஅவை பெரும்பாலும் பள்ளிப் பாடங்கள் குறித்தவையே.

அவள் நடந்து வந்தாலே அவன் மனம் ஊஞ்சலாட ஆரம்பித்து விடும்.



காதல் ஊர்வலம் அங்கே
கன்னி மாதுளம் இங்கே

சோலைகளெல்லாம்
பூக்களைத் தூவும்
சுகம் சுகம் ஆ….

குயில்களின் கூட்டம்
பாக்களைப் பாடும்
இதம் இதம் ஆ…

காதல் ஊர்வலம் அங்கே
கன்னி மாதுளம் இங்கே



எப்போது இருந்து அவள் அவன் நினைவுகளுக்குள் வந்தாள்?

சார்லஸ் தன் உடன் படிக்கும் சிவலிங்கத்தின் வீட்டிற்கு அவ்வப்பொழுது போவதுதான். போய் பாடங்கள் குறித்த சந்தேகங்கள் கேட்பது பரிட்சைகள் குறித்த விளக்கங்கள் அறிந்து கொள்வது என்று நல்ல பிள்ளையாக இருந்தான்.

அன்றைக்கு ஒரு நாள் தூரத்து உறவினப் பாட்டி ஒருவர் சார்லஸையும் காந்திமதியையும் குறிப்பிட்டு பேசியதில் அவன் அங்கே போவதை முடிந்த வரை குறைத்துதான் இருந்தான். இப்போதெலலாம் போவதே இல்லை.

சிவலிங்கத்தின் தங்கையை அவன் பிரித்துப் பார்க்கவில்லை. காந்திமதியை அவன் பள்ளிக் கூட காலங்களிலேயே அறிவான். சார்லஸிற்கு உடன் பிறந்தவர்கள் யாரும் கிடையாது. தனியாகவே பிறந்து தனியாகவே வளர்ந்து தனியாகவே வாழ்ந்து வருகிறான் இதுவரை.

காந்திமதியைப் பற்றி நினைக்கும் போது அவனுக்கு மகிழ்ச்சி தோன்றும். இனம் புரியாத பாசம் வரும்.

பள்ளியில் அவள் மரத்தின் மீது ஏறி விட்டுஇ குதிக்கப் பயந்து நின்று கொண்டு இருந்த காட்சி இன்னும் அவன் மனக் கண்iணில் அழியாத ஓவியமாக இருக்கிறது.


ஆனால், அவன் மனதைக் குடைபவள் இன்னொருத்தி!

காந்திமதியின் தோழி கோமதி!

இருவர் வீடும் அடுத்த அடுத்த வீடுகளாக இருந்ததால், சிவலிங்கத்தைப் பார்க்க காந்திமதி வீட்டுக்கு வந்தால் அவன் கோமதி வீட்டைத் தாண்டித்தான் ஆக வேண்டும்.

அப்படியும் அவன் மனது நிர்மலமாகத்தான் இருந்து வந்ததுஇ அந்த நிகழ்ச்சி நடக்கும் வரை.

அவன் நான்காவது வருடம் பொறியில் படித்துக் கொண்டு இருந்த சமயம் அது. அப்போது அவள் பத்தாவது படித்துக் கொண்டு இருந்தான்.

அன்று கல்லூரிக்கு ஏதோ உள்ளுர் விடுமுறை. அன்று காலை, பள்ளிச் சீருடையை அணிந்து கொண்டு அவள் சைக்கிளில் முன்னே சென்று கொண்டு இருக்க பின்னால் இவனும் ஒரு சைக்கிளில் அவள் பின்னால்தான் போய்க் கொண்டு இருந்தான்.

முனனே சென்றவள் ஒரு குரைக்கும் நாயைப் பார்த்து ஜெர்க் ஆனாள். கோமதிக்கு இதெல்லாம் சப்பை மேட்டர்தான். ஆனால் இப்போதெல்லாம் நல்ல பிள்ளையாக படித்து வருவதால் இது போன்ற விளையாட்டுத் தனங்களை நிறுத்தி இருந்தாள்.

இல்லை என்றால் சைக்கிளை நிறுத்தி நின்ற வாக்கிலேயே நாயுடன் வாயால் மல்லுக் கட்டி இருப்பாள்.

நாயோ விடாமல் அவள் பின்னாலேயே போனது.

கோமதி குழம்பிப் போனாள். பள்ளிக்கு வேறு சீக்கிரம் செல்ல வேண்டும்.

காலையில் வீட்டில் நடந்த நிகழ்வில் வேறு மனம் குழம்பிக் கிடந்தது. இன்று கறிக் குழம்பு செய்ததில் லட்சுமி சற்று தாமதப்படுத்தி விட்டார். வெள்ளாட்டுக் கறியை கோமதியிடம்தான் சுத்தம் செய்யக் கொடுத்து இருந்தார் லட்சுமி.

“அம்மா.. இன்னிக்கு புதன் கிழமை தானேம்மா. இன்னிக்கு கறி எதுக்கு எடுத்திங்க” என்று கோமதி கூவியதற்கு,

“இன்னிக்கு புதன் கிழமைதானே? எதுக்குப் பல் விளக்கினே?” என்று பதில் கேள்வி கேட்டு அடைத்து வைத்து இருந்தார் லட்சுமி.

“அதுவும் இதுவும் ஒன்னாம்மா?”

“எனக்கு எல்லாம் ஒன்னுதான். என் பிள்ளைங்களுக்கு நல்லதுன்னா எனக்கு நாளும் கிடையாது, கோளும் கிடையாது. நீ வாய் பேசாம கறியைக் கழுவு”

“சரி. சரி. நான் முதல்ல சின்ன சின்னதா வெட்டிக்கறேன்.” என்று வெட்டி வைத்தாள் கோமதி.

“அக்கா இந்த கிராமர் கொஞ்சம் சொல்லிக் குடேன்” என்ற பாரதியின் வேண்டு கோளுக்கு இணங்கி இரண்டு கைகளையும் அசைக்காமல், இவள் தன் தங்கைக்குப் பாடம் நடத்திவிட்டு வந்து பார்த்தால், கறியைக் காணவில்லை.

“அம்மா… கறியை எங்கம்மா?”

“இப்பதான் தாளிச்சு விட்டேன். இன்னும் பத்து பதினைஞ்சு நிமிசத்துல குழம்பு ரெடியாகிடும்”

“அய்யய்யோ… கறியைக் கழுவலம்மா.” கோமதியின் அலறலைக் கேட்டு அதிர்ந்த லட்சுமி முதலில் விழித்தாலும் மனதைத் தேற்றிக் கொண்டார்.

“சரி சரி விடு. யார்கிட்டயும் சொல்லாத. எல்லாம் வெந்தாச் சரியாப் போகும்” என்று சப்பைக் கட்டு கட்டி சமாளித்தார் இவள் முறைப்பை.

குழம்பு தயாரானதும், இருவருக்கும் தட்டில் போட்டு சாப்பிடச் சொன்னார் லட்சுமி.

கோமதி பம்மிப் பதுங்கஇ விபரம் தெரியாத பாரதி,“ அம்மா இன்னிக்குதான் கறிக் குழம்பு சூப்பரா இருக்கு” என்று சப்புக் கொட்டி சாப்பிடவும் இருவருக்கும் அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை.

அந்தக் கறிக் குழம்பை சாப்பிடலாமா? வேண்டாமா? என்பதுதான் குழப்பம். வீட்டில் காலையில் நான்கு இட்லிகளும் பொடியும் வைத்து சாப்பிட்டு விட்டு வந்து இருந்தாள்.

அதே கறிக் குழம்பைதான் இவளுக்கு மதியத்திற்கு கட்டிக் கொடுத்து இருந்தார் இவள் தயாயர். வீட்டில் மற்றவர்களுக்கும் அதே நிலமைதான்.

நாயின் தொந்தரவு அதிகமாகவும், தன் கவனத்தைத் திருப்பினான் சார்லஸ்.

கோமதியை சற்று ஆராய்ந்தான். ‘நாய் குரைக்கிற அளவு இவகிட்ட என்ன இருக்கு?’ என்றுதான் முதலில் பார்த்தான்.


கறுப்பை விட சற்று அதிக நிறமாக இருந்த கோமதியின் செக்கச் சிவந்த உதடுகளில் சரணாகதி ஆனான்.

தோற்றத்தை வைத்து வரும் ஈர்ப்பு நிரந்தரமானது அல்ல என்பது அவன் எண்ணம். அதனால் அழகான பெண்கள் மீதான மயக்கம் அவனுக்குக் கிடையாது. அவன் விரும்புவது இயல்பான குணத்தைத்தான்.

பொருட்காட்சியில் வைத்து விடுகதைக்கு விடை கேட்ட குட்டிப் பெண் இவள்தான் என்பதில் உற்சாக ஊற்று பொங்கியது.

கோமதியின் இனிய இதழ்கள் அவனைப் பார்த்தன. அவனிடம் உதவி கோரின. அப்புறம் தடுமாற்றத்தில் தவித்தன.


அவனால் அதைத் தாங்கவே முடியவில்லை. உடனே அருகில் தன் சைக்கிளை நிறுத்தி,

“என்ன விசயம்?” என்றான்

அவன் கேட்டதிலேயே அவளுக்குத் தொந்தரவு நீங்கியது போல நிம்மதியாக உணர்ந்தாள். அதை அவனும் உணர்ந்தான்.

“தெரியலை”

அவளை சுற்றிப் பார்த்தவன் “சைககிள்ள கறி, மீனு வச்சிருக்கியா?” சரியாகக் கேட்டான்.

“ஆமா”

“அதான் மோப்பம் பிடிச்சிருக்கும்.” என்றவன் வாலை ஆட்டிக் கொண்டு பக்கத்திலேயே நின்ற நாயைக் கல்லால் ஓங்க அது ஓடிப் யோய் நின்று மறுபடியும் குரைத்தது.

“நீ போ” என இவளை அனுப்பி வைத்தான்.

அவள் போனதும் நாய்க்குப் பொறை வாங்கிப் போட்டு விட்டுத் தன் வேலையைப் பார்க்கப் போனான். சுற்றிலும் ஓரிரு பெட்டிக் கடைகளும் சில பல மனிதர்களும் இருந்ததால் இது பெரிய விசயமாகப் படவில்லை கோமதிக்கு.

இந்த நிகழ்ச்சியை மறந்தும் விட்டாள். ஆனால் வீட்டிற்குப் போய் வீட்டு வேலைகளையும் வீட்டுப் பாடங்களையும் முடித்து விட்டு படுக்கப் போன சார்லஸ் மறக்கவில்லை.

இப்போதும் மறக்கவில்லை. எப்போதும் அவன் மனதின் ஓரம் இருக்கும் முகமும் அவளுடையதுதான். அவன் மனத்தை நிறைக்கும் முகமும் அவளுடையதுதான்.

அதன் பின் இரண்டு வருடங்கள் கடந்து விட்டது. அவனும் படித்து முடித்து தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்குப் போகிறான்.

அவன் தூத்துக்குடியில் வேலை பார்ப்பதால் வாரா வாரம் வெள்ளி கிளம்பி திருநெல்வேலி வந்துவிடுவான். மீண்டும் ஞாயிறு இரவு கிளம்பி தூத்துக்குடி போவான்.

சார்லஸிற்கு ஆயாசமாக இருந்தது. இவளை மணப்பதில் தான் எத்தனை தடைகளைக் கடக்க வேண்டுமோ? என்று நினைக்க மலைப்பாக இருந்தாலும், எதாக இருந்தாலும் கோமதி சம்மதித்தால் போதும் என்று சமாதானப் படுத்திக் கொள்வான்.

இப்படியே இரண்டு வருடம் ஓடி விட்டது. அதுவும் சரிதான் அவள் இன்னும் சின்னப் பெண்தானே? அவளுக்கும் திருமண வயது வரவேண்டுமே?

“இன்சீனியரிங்லாம் படிக்கிறதா இல்ல புள்ள. நான் வி.சிதான படிக்கலாம்னு இருக்கேன். எனக்கு அதான் பிடிச்சிருக்கு”

சொல்லிக் கொண்டு நடந்து வந்த கோமதி இவனைப் பார்த்துப் புன்னகைத்தாள். என்னடா இது அதிசயமா இருக்கு? என .இவன் மலைத்துப் போனான்.

“இந்தப் பக்கம் எதும் வேலையா உங்களுக்கு? நான் அப்பப்ப பாக்கிறேனே?” –அவளின் கேள்விக்கு இவன் தடுமாறினான்.


‘நான் தானே நான்தானே
வந்தேன் உனக்காக

சிரிக்கின்றேன் ரசிக்கின்றேன்
உனக்கே உனக்காக

என்னாச்சு
எனக்கே தெரியவில்லை

என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை

அட என்ன இது என்ன இது
இப்படி மாட்டிக் கொண்டேன்

இது பிடிச்சிருக்கா பிடிக்கலியா

ஒருமுறை சொல்லிவிடு
ஒரு ஒருமுறை சொல்லிவிடு’




“என்ன? நான்லாம் கேள்வி கேட்டா பதில் சொல்ல மாட்டிங்களா?” கோமதியின் குரலில் வேதனை இருந்ததோ?

‘என்னை நீ கேள்வி கேக்கனுமங்கறதுதான் என் ஆசையே. இன்னிக்குதான் ஏதோ என்னைப் பார்த்து உன் கண்ணையும் வாயையும் திறந்து இருக்கே. அதைப் பார்த்து நான் வாயைத் திறந்தில பேச்சே நின்னுருச்சு’ இதெல்லாம் அவன் நினைத்துக் கொண்டதுதான்.

“ம் கொஞ்சம் வேலைதான்”இதைச் சொல்வதற்குள் பலமுறை குரல் வழுக்கியது.

அதற்குள் சட்டென மற்ற பெண்கள் விரைந்து சென்று விட்டார்கள். அவர்கள் வயதுக்கு வந்த பெண்கள் என்பதால் வீட்டினரின் கட்டு திடடங்களின்படி வேறு ஒரு ஆணிடம் நினறு பேசாமல் கிளம்பி இருந்தனர்.

நம்ம ஆளுக்கு அது கிடையாது. இவ்வளவு நாள படிப்பில் குறியாக இருந்தாள். இப்போதும் அப்படித்தான். இதன் பிறகு என்ன படிப்பது என்ற இன்றைய சிந்தனையில் கொஞ்சம் குழம்பிப்போய் இருந்த போது இவனைப் பார்த்து விட்டாள்.

இப்போது இவர்கள் இருவர் மட்டும் இருக்க சுற்றி இருந்த தனிமையை அவள் உணரவில்லை.

“அப்புறம்? என்ன விஷேசம்?”

“அதுல்லாம் ஒன்னுமில்ல”

அவள் இப்போது வெள்ளை நிறத்தில் சாமல் நிற பூ போட்ட கவுன் முட்டி வரை அணிந்து இருந்தாள். கவுனின் கை பாகம் அவளுக்கு முட்டிக்கை வரை இருந்தது.

அவள் கால் முட்டிக்குக் கீழ் சென்ற கண்களை தலை தலையாக அடித்து நிறுத்தினான். ‘தப்பு. தப்பு. இவ சின்னப் பொண்ணு.’ என்று அவன் மனம் அவனுக்கு எதிராக வாதாடியது.

“மேல என்ன படிக்கலாம்னு ஒரு டிஸ்கஷன் எங்களுக்குள்ள”

“என்ன படிக்கலாம்னு நினைக்கிற?”

“எனக்கு விசுவல் கம்யூனிஷேன் படிக்கனும்னு ஆசை. வீட்ல அதை ஒத்துக்க மாட்டேங்குறாங்க.”

“வி.சி ல என்ன உன் ஃபேவரைட்?”

“எனக்கு எடிட்டிங் ரொம்ப பிடிக்கும். நான் எடிட் செய்த வீடியோ பாக்கறிங்களா? இது நாங்க புது வீட்டு பால் காய்சினப்ப எடுத்த வீடியோ. நானும் பாரதியும் மாறி மாறி எடுத்தோம். நான் அதை எடிட் செய்து சாங்லாம் போட்டு இருக்கேன். பாத்துட்டு சொல்றிங்களா?”

இத்தனை நாள் இவனிடம் இவள் சரியாகப் பேசியதில்லைதான். ஆனால் தன்னைப் போல ஒரு ஜீவன் இருந்தால் எல்லாருக்கும் ஏற்படும் இயல்பான ஆர்வம் காரணமாக அவள் அவனிடம் இத்தனையும் பேசி இருந்தாள்.

இதுவரை இவளது ஆர்வத்தைத் தடை சொன்னவர்கள்தான் அதிகம். அதிகபட்சம் இவள் அம்மாதான் “இதுலலாம் பொம்பளப் புளளைக்கு எதுக்குலே? பேசாம நாலு எழுத்தைப படிச்சோமா? ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டோமா? குழந்தை குட்டியை பெத்துகிட்டோமான்னு இரு. அதுவே எங்களுக்குப் பெரிய நிம்மதி. இன்னும் வயசுக்கு வேற வரலை. எனக்கு அதுவே பகீர்ங்கு” என்று மறுபடியும் ஆரம்பித்து விடுவாள்.


“அதை எல்லாம் இப்ப பாக்க நேரம் இல்ல. செல் வச்சிக்கியா? எனக்கு வாட்சப் அனுப்பி விடேன். நான் பாத்து சொல்றேன். உன் நம்பர் என்ன? நான் சேவ் செய்துக்கிடுதேன். உனக்கு ஹாய் அனுப்பறேன்.”

கிடைத்த வாய்ப்பை விடாமல் பரபரவென வேலை செய்தான் சார்லஸ்.இவன் செல்போனுக்கு அவள் எண குடி பெயர்ந்து விட்டது.

இப்படி யாருக்கும் நமபர் கொடுத்துவிடக் கூடாது என்பது இவளுக்கும் சொல்லப்பட்ட செய்திதான். ஆனால் இவளின் ஆர்வக் கோளாறு காரணமாக நம்பரைச் சொல்லி இருந்தாள். தவிர அவனும் இவள் ஊர்க்காரன்தானே? என்ற நம்பிக்கையும் இருந்தது.

வாட்சப் டிபியில் தெரிந்த கோமதியின முகத்தை ஆசையாகப் பார்த்தான் சார்லஸ். 'கொஞ்சம் ஒல்லியாத்தான் இருக்கா.’ என நினைத்துக் கொண்டான்.

“என்ன ஒல்லியா இருக்கேனா? ரொம்ப வெயிட் ஆகாதுன்னு டயட்ல இருந்து மெலிஞ்சேன். முந்தி நீங்க ஸகூல் படிக்கிறப்ப உங்களுக்கு ‘ஒல்லிப்பிச்சான்னு’ பேர் சொல்லி கிண்டல் பண்ணுவோம். இப்ப நலலா இருக்கீங்க”

அவள் சொன்னதில் சிரிப்பு வந்தாலும் “ஆமா ஏன் டயட் இருந்து மெலிஞ்சே?” என்ற கேள்வி அவனை மீறி அவன் வாயில் இருந்து வெளியே வந்தது.

“அது.. அது ...இன்னும் பெரிய மனுஷி ஆகலை. ரொம்ப வெயிட் இருக்கக் கூடாதுன்னு யாரோ சொன்னாங்களாம். அதனால டயட்.”

அவள் சொல்லி முடித்த போது சார்லஸ் முகத்தில் இருந்தது பரிதாபமா? கவலையா? வருத்தமா? சோகமா?

இதற்கு மேல் தள்ளிப் போட அவனால் முடியாது. எதாக இருந்தாலும் சேர்த்தே கவனித்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டான்.

“அது பத்திக் கவலைப்படாதே. அதை அப்புறம் பாக்கலாம். இப்ப எனக்கு பதில் சொல்லு. என்னைக் கட்டிக்கிறியா?” என்றான்.

“என்னது?” அதிர்ந்த கோமதி தன்னுள் ஒரு மாற்றத்தை உணர்ந்தாள்.


‘அவன் பார்த்ததுமே
நான் பூத்து விட்டேன்
அந்த ஒரு நொடியை
நெஞ்சில் ஒளித்து வைத்தேன்

நான் குழந்தை என்றே
நேற்று நினைத்திருந்தேன்
அவன் கண்களிலே
என் வயதறிந்தேன்’

-------------------------------------------------------------------
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரமா லக்ஷ்மி டியர்
 




Shakthi R

முதலமைச்சர்
Joined
Feb 4, 2019
Messages
6,692
Reaction score
18,201
Location
Madurai
Why? Gomathikku enna? Next ud la gomathi - Charles and siva- Selvam pathi brief ah parpom???

Thank you sakthi dear❤
Nan Charles ah காந்திமதி Ku pair pannI irrunthen. கோமதி கிஷோர் Ku. Ippo Charles கோமதி join ana காந்திமதி கிஷோர் கா இல்ல நியூ entry agum ah
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top