Un Manaiviyagiya Naan - 11

#1
அத்தியாயம் 11


அவள் எழுந்த வேகத்தில் வர்ணங்கள் அனைத்தும் ஓவியத்தின் மீது கொட்டி பாலாய் போனது. கலைக்கு கோபமும் அழுகையும் பின்னிப்பிணைந்து வந்தது. செய்வதறியாது கைகளை பிசைந்துக் கொண்டு உதடுகளைப் பிதுக்கிக்கொண்டு நின்றிருந்தாள். அவனுக்கோ அவள் முகபாவணையை கண்டு சிரிப்புதான் வந்தது. அவனது ஒற்றை சிரிப்பினில் தன் இன்னல்கள் மறந்து இன்முகம் காட்டினாள்.

‘ காதல் என்ற சொல் நாணத்திற்குரியது என்றெண்ணி மெளன மொழி பேசித்திரிந்தேன் இத்தனை தினங்களும். என்ன பாதகம் செய்தாயோ பாவை இவள் உன்னில் மயங்கி பார்வைகள் பதிக்கிறாள் உன் மீது கொண்ட மீளா காதலால். இதுதான் உன் லீலை என்பதோ என் மாய கண்ணா.. ??!! ‘ என்று மனதினுள் அவனோடு மஞ்சம் கொண்டாள்.

அவன் போகின்ற வழியில் சிரிப்பை சிதறிவிட்டு சென்றுவிட்டான். ஆனால் அந்த ஒற்றை ஓர புன்னகையினைத் தாண்டி அவளால் அணு அளவும் நகன்று வர இயலவில்லை. தான் கொண்ட சபதமெல்லாம் சங்கடமின்றி காணாமல் போனது. மாயவனது சிறு குறு புன்னகை மட்டும் முகவரியாய் ஆனது.

” சிட் டெளன்… (sit down)“ என கூறிவிட்டு தானும் அமர்ந்தான் கிருஷ்ணா.

அனுமதியினை ஏற்று மாணவர்கள் அனைவரும் அமர்ந்துக்கொள்ள கலை இன்னும் தன்னிலை அடைந்த பாடில்லை. அவளருகில் வந்த மேனேஜர்

” கலை.. ஆர் யூ ஓகே..? “ என கேட்டார்.


அதுவரை அசையாதிருந்த கண்கள் அசைவினைப் பெற்று மேனேஜரை நோக்கியது.

” உட்காரு மா… “ என்றார்.

“ சாரி சார்… ஐ லீவ்… தப்பா எடுத்துக்காதீங்க…! “ என்றவள் அவளது அறைக்கு விரைந்தாள்.

உள்ளே வந்தவள் கையில் வைத்திருந்த பையினை தூக்கி எறிந்துவிட்டு முகத்தினை மூடி தன் மடியையே ஆறுதலாய் கொண்டு அழுதுத்தீர்த்துக் கொண்டிருந்தாள்.

” ஏன் இத்தனை இத்தனை சோதனை எனக்கு..?? நான் என்ன தப்பு செஞ்சேன்..? எவ்வளவுதான் நான் என்ன கட்டுகோப்பா வச்சாலும் என் மனசு என்ன மீறி அவன்கிட்ட தான் போகுது.. எனக்கு இங்க இருக்க வேணாம் உடனே நான் கிளம்பனும்.. கிளம்பனும்.. “ என்று குமுறத் தொடங்கினாள்.

துன்பத்தில் வரும் கண்ணீர் துளியும் மாறாமல் துன்புறுத்த அவள் காதினுள் சென்று மூளையை வேவு பார்த்தது எங்கிருந்தோ ஒலித்த அந்த பாடல்..

யாரோ… மனதிலே..
ஏனோ… கனவிலே…
நீயா உயிரிலே…
தீயா தெரியலே…

சென்ற வாரம் மதுரை கலைவிழா போட்டிக்கு வந்திருந்தவள் வேற்று கல்லூரி மாணவியுடனேயான வாக்குவாதத்தின் தாக்கத்தினால் கிருஷ்ணாவை பார்க்க எண்ணி இணையத்தின் துணை நாடிய பொழுது அவள் கண்கள் முதலில் கண்டது அந்த காணொலியைதான்.

அவனது பெண் ரசிகை ஒருத்தி அவனுக்காய் தேர்வு செய்த புகைப்படங்களை அந்த பாடல் வழியே சமர்ப்பித்திருந்தாள்.

அதை காணும் பொழுது எழுந்த தாக்கம் அவள் மனதில் பெறும் ஏக்கத்தை ஏற்ப்படுத்தியது. இவள் யார் என்னவனுக்கு இப்படியொரு பாடலை பதிவு செய்வதற்கு என மனம் கொந்தளிப்பதை அவள் உணராவிடுனும் அதன் வெப்பத்தை அவள் உணர மறுக்கவில்லை..

அன்றிலிருந்து அப்பாடலை அவள் கேட்கும் பொழுதெல்லாம் சூழலுக்கேற்ப அதன் ஒவ்வொரு வரியிலும் அவளையே அறியாமல் அவளது மனது அவனை செதுக்கிக் கொண்டிருக்கும்.

இன்றும் அதே பாடல் ஒலிக்க பிணியில் வாடிய அவள் மனநிலை கூடுதல் வலியை அனுபவித்தது.

மீட்டிங் முடித்து அறைக்குள் வந்த சக தோழமைகள் அவளது அழுகையை பார்த்து சமாதானம் கூற, தன் நிலையை விளக்க இயலாமல் தானே சமாதானமாகிக் கொண்டாள்.

தோழமையில் ஒருத்தி
“ பெயிண்டிங் போனதுக்கு எதுக்கு டி இப்படி அழுகுற..? மீட்டிங் கூட அட்டண்ட் பண்ணாம இங்க வந்துட்ட.. கிருஷ்ணா சார் உன்னோட பெயிண்டிங்க தான் பெஸ்ட் –னு சொன்னாரு மீட்டிங் –ல” என்றாள்.

அழுது வீங்கிய கண்கள் வியப்பின் வினாவை எழுப்பியது.

“ என்னோடதயா..? அதுதான் அழிஞ்சிடுச்சே..! “ என்றாள்.

“ அவரு பார்த்த பிறகு தான அழிஞ்சிச்சு..? நான் பார்த்த அந்த பெஸ்ட் பெயிண்ட்டிங்க உங்களுக்கு பார்க்க கொடுத்து வைக்கலனு சொன்னாரு..” என்றாள் அந்த தோழி.

மனதின் சங்கடங்கள் மன்றாடி அவனை காணதிருக்க சொல்வதை மறந்து அவனை காண ஓடிச் சென்றாள். தான் என்னதான் முயற்சித்தாலும் தன் மனம் அவனை நாடுவதையோ அவனின்றி வாடுவதையோ அவளால் தவிர்க்க முடியவில்லை.

‘ கண்டிப்பாக அவன் என்னவன் தான்.. அவனின்றி நானில்லை.. இப்பொழுதே அவனை காண வேண்டும்..” என்ற அவள் எண்ண ஓட்டம் அவள் கால்களில் சக்கரத்தை கட்டி விட்டது.

கான்ஃபிடென்ஷியல் அறையின் உள்ளே மேனேஜருடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த கிருஷ்ணாவை கண்ட கலை, கிருஷ்ணாவிடம் பேச அவன் அறைக்கு வெளியே காத்துக் கொண்டிருந்தாள்.

பேசி முடித்துவிட்டு வெளியே வந்த மேனேஜர்
“ என்ன மா கலை… சின்ன பிள்ளை மாதிரி சாதாரண விஷயத்துக்கு எல்லாம் இப்படி அழுது ஓடிட்டியே.. இப்ப நார்மல் ஆகிட்டியா..? “ என்றார்.

“ சாரி சார்.. நான் நல்லா இருக்கேன்.. கிருஷ்ணா சார்கிட்ட பேசனும்..” என்றாள்.

” சாரோட விசிட்டிங் டைம் –ல தான் மா பேச முடியும்.. இப்ப முடியாது..” என்றார்.

” சார்..சார்.. ப்ளீஸ்… ஹெல்ப் பண்ணுங்க சார்.. நான் அவர்கிட்ட பேசியே ஆகனும்.. “ என கெஞ்சினாள்.


“ சரி.. என் கூட வா… கிருஷ்ணா சார்க்கு ஒரு கொரியர் வந்துருக்கு.. அதை நான் கொடுத்ததா சொல்லி கொண்டு போய் கொடுத்துட்டு பேசிட்டு வா..” என்றார்.

“ நன்றி சார்.. ரொம்ப ரொம்ப நன்றி..! “ என்றவள் துள்ளிக் குதித்துக்கொண்டு மேனேஜருடன் சென்றாள்.

அவர் கொடுத்த ஒரு கவரை வாங்கிக் கொண்டுவள் முன்னும் பின்னும் திருப்பி பார்த்தாள்.

“ என்ன சார்.. கொரியர்னு சொல்லவும் ஏதோ பெரிய பார்சல்னு நினைச்சேன்.. இப்படி குட்டியா தாரீங்களே… “ என்றாள்.

“ அது கிருஷ்ணா சாருக்கு பொண்ணு பார்க்குறாங்க மா.. அந்த பொண்ணோட போட்டோதான் அது..” என்றார் மேனேஜர்.

தன் நிலையை கண்டு தானே பாவப்படும் நிலைக்கு ஆளானாள் கலை. அவரை நெருங்க நினைத்தால் விலகச் சொல்கிறது, விலக நினைத்தால் நெருங்கச் சொல்கிறது..! விதியின் இந்த விளையாட்டிற்கு பதில் தான் என்ன..? அவன் என்னவன் இல்லையா..? விதி அவனுக்காய் என்னை இங்கு அனுப்பவில்லையா..?! என தன்னுள் மேலும் நொந்துக் கொண்டிருந்தாள்.

“ கலை.. சீக்கிரம் கொண்டு போய் கொடு… அவருக்கு அடுத்த வேளை இருக்கும்.. “ என்றார் மேனேஜர்.

“ நீங்களே கொடுத்துருங்க சார்.. “ என்றவள் அந்த கொரியரை மேனேஜர் கையில் கொடுத்தாள்.

“ என்ன மா.. சார்கிட்ட பேசனும்னு சொன்ன..? “ என்று கேட்டார்.

“ இல்லை சார்.. இப்ப வேண்டாம்..” என்று கூறிய கலை அவர் பதிலை கூட கேட்காமல் அங்கிருந்து நகர்ந்தாள்.


மேனேஜரோ ஒன்றும் புரியாமல் தன் வேளையை பார்க்க தொடங்கினார்.

அன்று இரவு உணவு உண்ண முடியவில்லை கலைக்கு. தட்டில் வைத்திருந்த உணவை குப்பையில் கொட்டிவிட்டு படுக்கைக்கு சென்றாள்.

தன் தலை முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் இந்த குழப்பத்திற்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும் என்பதில் ஊர்ஜிதமானாள்.

” அவர் பெரும் புகழ் கொண்ட ஓவியர். நாம் உலகமோ மிக சிறியது. அவரை கணவனாய் அடையும் தகுதி நமக்கு இல்லை. இது வயதின் கோளாறால் ஏற்பட்ட சிறு சிந்தனை சிதறல் தானே தவிர வேரொன்றும் இல்லை. அவர் பெயருக்கும் புகழுக்கும் எத்தனையோ பெண்கள் அவரை ரசிப்பார்கள். அவர்கள் அனைவராலும் அவரை அடைந்திட முடியுமா..? அந்த பெண்கள் கூட்டத்தில் நீயும் ஒருத்தி அவ்வளவு தான்.,,”

இவ்வாறு கூறி தன் மனதை ஒருமுகப் படுத்தினாள். நாளை அவரை நேருக்கு நேர் பார்த்தாலும் மனம் கலங்காமல் வலியில் துவண்டுவிடாமல் தெளிவாய் எதிர் கொள்ள வேண்டுமென முடிவெடுத்தாள்.

வர்க் ஷாப்பின் இறுதி நாள். காலை விடிந்தது. எழுந்ததும் அம்மாவிற்கு அலைபேசி அழைப்புக் கொடுத்து பேசினாள்.

“ அம்மா… ஹாஆஆஆஆ…. “ என்ற கொட்டாவி குரலோடு தொடங்கினாள்.

“ என்ன டி எரும குட்டி.. இப்ப தான் எழுந்திருக்கிறயா..? “ அம்மா கேட்டாள்.

“ ஆமா மா…” அழுப்பு குறையாமல் கூறினாள் கலை.

“ எப்ப கிளம்புற.. ? “ அம்மா கேட்டாள்.

“ காலை சாப்பாட்ட முடிச்சிட்டு மா.. “ என்றாள் கலை.

“ சரி டி… வேகமா குளிச்சு புறப்படு… பஸ் ஏறினதும் சொல்லு.. அப்பா வந்து பிக் அப் பண்ணிப்பாரு உன்ன..” என்றாள் அம்மா அக்கறையோடு.

“ சரி மா.. நான் கிளம்பிட்டு கால் பண்ணுறேன்…” என்று அலைபேசியை துண்டித்துவிட்டாள்.

குளித்து சாப்பாட்டினை முடித்தவள் கிளம்புவதற்கு ஆயத்தமாக தன் பொருட்களை எடுத்து வைத்து மூட்டைக் கட்டி விட்டாள். மேனேஜர் சார் கிட்ட ஒரு டாடா காட்டிட்டு வந்துவிடலாம் என எண்ணியவள் பெட்டி படுக்கையுடன் மேனேஜர் அறையை அடைந்தாள்.

” எக்ஸ்க்யூஸ் மீ சார்… ” கலை மெல்லமாய் கதவை திறந்தாற்போல் கேட்க

“ வா மா கலை..” என்றார் மேனேஜர்.

“ ரொம்ப நன்றி சார்… வர்க் ஷாப் நிஜமா ரொம்ப நல்லா இருந்தது. நிறைய கத்துக்கிட முடிஞ்சிது.. எங்கள நல்லா பார்த்துக்கிட்டீங்க.. சார்..” என்றாள்.

“ ரொம்ப சந்தோஷம் மா.. பெரிய ஆளா வரனும் நீங்க எல்லாரும்.. “ ஆசிர்வதித்தார் மேனேஜர்.


“ நன்றி சார்.. நான் அப்ப கிளம்புற…” என்றவாறு அவரிடமிருந்து விடைப்பெற்ற கலையை ஒரு நிமிடம் தடுத்து நிறுத்தியது கிருஷ்ணாவின் நினைவு.

( சந்திப்போம்)

 

srinavee

Author
Author
SM Exclusive Author
#5
யாராவது ஒருத்தர் வந்து epiya நிப்பாட்ராங்க .... Nice epi...
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top