Un Manaiviyagiya Naan - 13

#1
அத்தியாயம் 13

” வாழ்த்துக்கள் கலை.. “ என்றவன் தன் இருக்கையில் போய் அமர்ந்தான்.

’ இந்த பால் டப்பா என்ன பிளான் போட்டுருக்கான்னு தெரியலையே... இதை எப்படி கலை சமாளிக்க போற..?!!’ என மனதினுள் எண்ணிக்கொண்டிருந்தவளை அழைத்து பேச சொன்னார் தொகுப்பாளர்.

” இந்த குறைவான கால கட்டத்துல எனக்கு இவ்வளவு பெரிய பொறுப்பு கொடுப்பாங்கனு நான் கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கல..! என்ன நம்பி இத ஒப்படைச்சிருக்கீங்க.. கண்டிப்பா என்னோட பெஸ்ட்ட இதுல நான் கொடுப்பேன்.. “ என்ற கலையிடம் ரிப்போர்ட்டர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

“ மேடம்.. ஒரு கேள்வி… “ என கைத்தூக்கினார்.

‘ உன்ன மதிச்சி கேள்வியெல்லாம் கேட்குறாங்கலே கலை’ மனதினுள் எண்ணியவள் “ எஸ்.. சொல்லுங்க… ” என்றாள்.

“ உங்களுடைய இந்த அபரிமிதமான வெற்றிக்கு என்ன காரணம்னு நினைக்குறீங்க..? “ என்றான்.

‘ வேறென்ன எல்லாம் இந்த பால் டப்பாவோட சித்து விளையாட்டுதான்’ என சிந்தையில் சிந்தித்தவாறு “ என்னுடைய தொழில் பக்தி தான்.. என்னுடைய ஒவ்வொறு டிசைனும் என் உயிருல இருந்து நான் பிறக்க வைக்க முயற்சி பண்ணுவேன்.. அதுதான் என்னுடைய பிளஸ்..” என்று கலை கூறவும் கூட்டத்தின் கரகோஷம் காதுகளை கிழித்தது.

‘ பாரு டி கலை.. மேனேஜர்னு சொன்னதும் கைத்தட்டி காக்கா பிடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.. ‘ என்று தனக்குள் சிரித்துக் கொண்டவள் தன் இருக்கையை அடைந்து அமர்ந்தாள்.

கூட்டம் முடிந்து உணவு கொண்டாட்டம் தொடங்க ராகுல் தனக்கான ஆகாரத்தை எடுத்துக் கொண்டு கலை இருக்கும் மேஜையை நோக்கி சென்றான்.

கலை சக பெண் ஊழியர்களுடன் அமர்ந்திருந்த அந்த மேஜையினை அவன் அடைந்ததும் அங்கு வேறு இடமில்லாததைக் கண்டு சிறிது தயங்கி நின்றான். இதனை கண்ட ஒரு பெண் ஊழியர்

“ வாங்க சார்.. வந்து உட்காருங்க..” என்று தன் இருக்கையை தர இவனும் அமர்ந்துக் கொண்டான் நன்றி கூறுவதையும் மறந்தவனாக.

” கலை .. நாளைக்கு உங்க அசிஸ்டண்ட் எல்லா ஃபைல்ஸ்-சையும் உங்ககிட்ட கொண்டு வந்துருவாங்க.. பார்த்துட்டு எதாவது சந்தேகம் இருந்தால் என்கிட்ட கேளுங்க..” என்றான்.

“ கண்டிப்பா சார்.. என்ன நம்பி கொடுத்த இந்த வேளையை கண்டிப்பா நான் நல்லபடியா செய்வேன் சார்.. “ என்றாள்.

“ எனக்கு தெரியும் கலை.. “ என்றான் மர்ம புன்னகையோடு.

’ இவனோட சிரிப்பே சரியில்லையே..! கலை.. நீ கொஞ்சம் ஜாக்கிரதையாவே இரு..! ‘ தனக்கு தானே கூறிக்கொண்டாள் கலை.

“ இப்பவும் என்கிட்ட சொல்லனும்னு தோனலையா கலை..? “ என்றான் நேரம் கடத்தாமல்.

“ என்ன சார்..” என்றாள் கலை.

“ உங்க வீட்டுல வச்சி கேட்டனே..! “ என்றான் ராகுல்.

மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் கண்களை படபடத்தாள் கலை.

“ இனி தான் சார் தேட போகிறேன்.. கிடைச்சதும் கண்டிப்பா உங்ககிட்ட நான் சொல்லுறேன் ..” என்று கூறியவள் எழுந்து கைகழுவ சென்றுவிட்டாள்.

“ என்னது தேடனுமா..??!! “ குழப்பத்தில் மூழ்கிய ராகுல் இதற்கும் மேல் அவளை நச்சறித்து அவளது வெறுப்பை சம்பாதிக்க விரும்பவில்லை. எனவே அமைதியாக அங்கிருந்து நகர்ந்தான்.

மறுநாள் கோப்புகள் அனைத்தும் கலையின் மேஜையில் அடுக்கப்பட்டது. அதில் முதன்முதலில் கலை தேடிய விஷயம் எந்த ஒரு நிகழ்வாவது கிருஷ்ணாவுடைய கம்பெனியுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்று தான். அவள் தேடிய வரையில் ஒன்றும் கிடைக்கப் பெறவில்லை. பெல்லை அழுத்தி அசிஸ்டண்டை உள்ளே அழைத்தாள்.

“ எக்ஸ்யூஸ் மீ மேடம்..?!! “ உள்ளே வர எத்தனித்திருந்தார் அந்த பெண் அசிஸ்டண்ட் மேனேஜர்.

கலையின் மீதுள்ள அதீத காதலினால் அசிஸ்டண்ட் மேனேஜரை கூட பெண்ணாக போட்டுவிட்டான் நம்ம ராகுல். ஆனால் அதுவே கலையின் காதலுக்கு மிக பெரிய உதவியாய் இருக்கும் என ராகுலும் கலையும் அறியவில்லை.. இது அந்த பெண் அசிஸ்டண்ட் மேனேஜருக்கே தெரியாதுனா பார்த்துக்கோங்களேன்..!!

உள்ளே வர அனுமதி கேட்ட பெண்

“ வாங்க ! “ என்ற கலையின் ஏற்பை கையில் எடுத்து உள் நுழைந்தார்.

“ எனக்கு சில தகவல் தேவை படுது..” கலை கூற

” சொல்லுங்க மேடம்..” என்றார் அசிஸ்டண்ட் மேனேஜர்.

“ இந்த ஊருல கிருஷ்ணா குரூப் ஆஃப் கம்பெனி தெரியுமா உங்களுக்கு ..? “ என்றால் கலை.

சட்டென முகம் மாறியது அசிஸ்டண்ட் மேனேஜர் பெண்ணுக்கு.

“ என்ன ஆச்சு..? “ என கேட்டாள் கலை.

” இல்லை மேடம் ஒன்னும் இல்லை.. தெரியும் மேடம்.. “ என்றாள்.

“ ம்ம்ம்.. இதுவரை நடந்த எந்த மீட்டிங்காவது அவருடைய கம்பெனியோட பாண்டு-ல இருக்கா..? என்று கேட்டாள்.

“ இல்லை மேடம்… அவரு எந்த கம்பெனி கூடவும் பாண்டு வைக்க மாட்டாரு.. எல்லாமே தனித்துவம் தான் மேடம்.. “ என்றார் அசிஸ்டண்ட் மேனேஜர்.

“ என்ன மேடம்னு எல்லாம் கூப்பிட வேணாம்.. உங்கள விட ஒன்னு ரெண்டு வயசு தான் பெரியவளா இருப்பேன்.. கலை-னே கூப்பிடுங்க..” என்று நட்பை தொடங்கினாள் கலை.

“ ஓகே கலை.. நீங்களும் அசிஸ்டண்ட் மேனேஜரை சுருக்கி அசிமா-னு கூப்பிடுங்க.. “ என்றார் அந்த பெண் மேனேஜர்.

“ ஏன் .. உங்க பேர சொல்லி கூப்பிட வேணாமா..? “ என்றாள் கலை.

“ எல்லாரும் அப்படி தானே கூப்பிடுறாங்க.. நீங்க வித்தியாசமா கூப்பிடுங்க.. “ என்றாள் அவள்.

“ சரி அசிமா.. அப்படியே கூப்பிடுறேன்..” என்றவள்

“ நாம கிருஷ்ணா குரூப் எம்.டி. மிஸ்டர் கிருஷ்ணா-வ காண்டக்ட் பண்ணுவோமா..? நம்முடைய முதல் டிசைனிங் எக்சிபிஷனுக்கு கெஸ்ட்டா இன்வைட் பண்ணலாம்..” என்றாள் கலை.

“ இல்லை மேடம்.. அவரு ஒரு முக்கியமான விஷயமா போன மாதம் தான் ஆஸ்திரேலியா போனாரு.. இப்போதைக்கு கண்டிப்பா வரமாட்டாரு.. “ என்றாள் ஆசிமா.

“ அட கடவுளே… !! “ என மனதால் வருந்தியவள் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.

“ சரி.. வீடியோ கான்ஃபரென்ஸ் மூலமா ஒரு சர்ப்ரைஸ் விசிட் கொடுக்க சம்மதிப்பாரா..?? “ என்று அடுத்த கேள்வியை தொடுத்தாள் கலை.

“ கலை .. என்னச்சு..? கிருஷ்ணா சார் பத்தி மட்டுமே கேட்குறீங்க.. மத்த டீலர்ஸ் எல்லாம் வேணாமா..? இவர விட இன்னும் பெரிய டீலர்ஸ் கைவசம் இருக்காங்க.. அவங்கள அப்ரோச் பண்ணலாமா இப்போதைக்கு.? ” என்றாள் அசிமா.

“ இல்லை .. இல்லை.. நான் சொல்லுறேன்.. அப்ப சொல்லுங்க.. கிருஷ்ணா ரிடன் ஆகிடாருனா எனக்கு மறக்காம சொல்லுங்க..” என்றாள் கலை.

“ கண்டிப்பா கலை..” என்று விடைப்பெற இருந்தவளை தடுத்து நிறுத்தினாள் கலை.

“ அசிமா.. ஒரு நிமிஷம் நில்லுங்க.. “ என்று கலை குரலெழுப்ப

“ சொல்லுங்க கலை… “ என்றாள் அசிமா.

“ கிருஷ்ணா பத்தி இவ்வளவு க்ளியரான டீட்டைல்ஸ் உங்களுக்கு எப்படி தெரியும்..? “ என கேட்டாள்.

“ ஐய்ய்ய்யோ… செத்த டி நீ..!! “ என திருட்டு முழி முழித்தாள் அசிமா.

“ என்ன கலை.. “ என அசிமா எச்சில் விழுங்கிக் கொண்டிருக்க

“ இல்லை.. டீலர்ஸ் எல்லாரை பத்தின இத்தனை க்ளியரான அப்டேட்ஸ் எப்படி தெரிஞ்சிக்கிறதுனு கேக்குற.. அடுத்த முறை ஒவ்வொருத்தர பத்தியும் கேட்டு உங்கள டிஸ்டர்ப் பண்ண வேண்டி இருக்காதுல.. அதனால கேட்குற..” என்றாள் கலை.

பெருமூச்சு விட்ட அசிமா “ இல்லை கலை.. இண்டர்வ்யூக்காக தெரிஞ்சிவச்சிக்கிட்ட விஷயங்கள் தான்.. வேற ஒன்னுமில்லை..” என்றாள்.

“ சரி சரி.. பரவாயில்லை… போய் வேளையை பாருங்க.. “ என்றாள் கலை.

தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடியேவிட்டாள் அசிமா.

நாட்கள் நகர நகர வேளைகளோடு வேளையாய் தங்கள் நட்பையும் வளர்த்துக்கொண்டனர் கலையும் அசிமாவும். அலுவல ஊழியர்கள் குடியிருப்பில் தங்கியிருக்கும் கலைக்கு அசிமா தன் வீட்டில் இருந்து அடிக்கடி உணவு, திண்பண்டங்கள் என கொண்டுவருவாள்.

ஆசிமாவுடைய அம்மாவின் கை பக்குவம் கலைக்கு மிகவும் பிடித்து போய் இருந்தது. அவரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சமயலை பாராட்டி தள்ளுவாள் கலை.

இது ஒரு பக்கம் அறங்கேற மறு பக்கம் அவ்வப்போது கிருஷ்ணாவின் வரவு பற்றி கலை கேட்ட வண்ணமும் அசிமா தப்பித்த வண்ணமுமாய் கடந்தது அவர்களது நாட்கள். கலை ஏன் கிருஷ்ணா மீது இவ்வளவு ஆர்வம் கொண்டுள்ளாள் என்ற கேள்வியும் அசிமாவுக்கு வந்து செல்வதுண்டு. தான் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே இந்த சந்தேகத்தை கேட்டுக் கொள்ளவில்லை அசிமா. இருவரின் நட்பும் உண்மையாய் திண்மையாய் இருக்கும் இடத்தில் சிறிது குழைவாய் தென்பட்ட இந்த ஒழிவு மறைவு உடையும் நாள் வந்தது.


(சந்திப்போம்)
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top