• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Un Uyir Thaa..! Naam Vazha..! 24 ( PRE - FINAL)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

AnithaKarmegam

இணை அமைச்சர்
Joined
Jan 21, 2018
Messages
711
Reaction score
1,865
Age
27
Location
Thiruvarur
அவன் முத்தத்தில் சிலிர்திருந்த தேகம் குளிர் நீரில் அடங்கியது.. கௌதமும் தன்னை ஒருவாறு சமாளித்து அவன் மெதுவாக மேல் ஏறி அவளுக்கும் கை கொடுத்து அவளை மேலே தூக்கிவிட்டான்...

தொட்டி தண்ணீரில் மூழ்கியதில் அவளின் உடை நனைந்து உடலுடன் ஓட்டியதில் கூச்சத்துடன் உடையை இழுத்துவிட்ட அவளை கண்ட அவனில் பல பல கற்பனைகள் வளர... குளிரில் அவளின் உடல் நடுக்கத்தை கண்ட அவன்...அவனின் ஷர்ட்டை கழட்டி அதை பிழிந்து உதறி அவள் கையில் கொடுத்து “போட்டுக்க ”என்று கூறி அவளை அணைத்துக் கொண்டே கோட்டை நோக்கி சென்றான்...

இவர்களின் வரவை உணர்ந்த வீட்டில் உள்ளவர்கள், அவர்கள் வரும் நிலையையும், சோர்வையும் மீறி.. கௌதமை காணும் மைத்ரேயி கண்ணில் தெரிந்த காதலையும், அவனுக்கு அவள் மேல் உள்ள காதலையும் கண்டு அனைவர்க்கும்சந்தோசம். ஆனால் வர்ஷிக் மனம் மட்டும் மிகுந்த வருத்தமாய்... கூடவே கோட்டைத்தாய் மனதின் ஓரத்தில் சிறு கவலையாய்...

பாசமாய், நேசமாய் வளர்த்த மகள், “ அவளின் வாழ்க்கை துணையை தேர்தெடுத்ததை தன்னிடம் மறைத்து விட்டாளே ” என்று... எப்படி இருந்தாலும் இவளை அவன் கெளதம்க்கு தான் திருமணம் செய்து கொடுப்பான்.. ஆனாலும் அவளுக்கு இவன் மேல் இருக்கும் ஆசையை முதலில் தன்னிடம் கூற வில்லையே என்ற ஒரு சிறு வருத்தமே... அந்த வருத்தம் வர்ஷிக் கண்களில் அப்பட்டமாக தெரிந்தது.. அதேவருத்தத்தை கண்களில் தேக்கி அவன் செல்ல மகளை பார்த்தான் வர்ஷிக்...

எல்லாரும் சந்தோசத்துடன் அவரவர் அறைக்கு செல்லவும், மைத்ரேயி தயக்கத்துடன் கௌதமை பார்த்தாள்.. கண்களை மூடி, திறந்து “ போ அப்பாகிட்ட “ என்று அவளுக்கு கண்களால் செய்கை செய்து அவளை போக கூறினான்...

வர்ஷிக் அருகில் வந்த அவள் தவறு செய்த குழந்தையாய் தலையை குனிந்து நிற்கும் நிலை காண முடியாத வர்ஷிக் தாவி அவளை அணைத்துக் கொண்டான்... மகள் நிலை தெரிந்த தந்தையாய்....

அப்பொழுது தான் கௌதம்க்கு, கோட்டையின் கவலையை உணர்த்தினாள் அவள்... ஆனால் அவளுக்கு என்ன கவலை என்று அவனுக்கு தெரியவில்லை.. இதே யோசனையோடு அவன் அறைக்கு சென்றான் கெளதம்...

குளிரில் நடுங்கிய மைத்ரேயியை கண்டவர்ஷிக்“ போம்மா போய் தலையை துவட்டு, எப்படி தண்ணி கொட்டுதுன்னு பாரு “ என்று கூறி அவளை அறைக்கு அனுப்பிவிட்டு, தன் அறை நோக்கி சென்றான் வர்ஷிக்...

தன் அறைக்கு சென்ற வர்ஷிக்கு பெரும் யோசனை “ ஒரு வேளை தன் மகள் மனதில் அவன் இருந்திருப்பானோ? நான் தான் அவளை அறியவில்லையா என்று எண்ணும் அதே நேரம் கௌசிக் கூறியதும், கோட்டை செயலும் நினைவு வந்து அவனின் வருத்தம் எல்லாம் மாயமாக மறைந்தது....

அதே நேரம் அவன் அறைக்கு வந்த கெளதம் “ மாமா நீங்க சின்னு வை தப்பா நினைக்காதிங்க? அன்னைக்கு சொன்னது தான் இப்போவும் சொல்லுறேன், சின்னுவுக்கு எல்லாம் கோட்டை உணர்த்திவிட்டாள்... அவளுக்குஇப்போ தான் எல்லாம் தெரியும், அதனால் தான் உங்க கிட்ட சொல்லலை, இதை நினைத்து வருந்ததீங்க “ என்று நடந்ததை எடுத்துக் கூறி கோட்டை கவலை என்ன என்று எண்ணிக் கொண்டே கிளம்பினான் கெளதம்...

அறைக்கு சென்ற மைத்ரேயிக்கு ஒரே பீலிங் ஆப் தி மைண்ட் தான்.. அவள் அப்பா முகத்தில் கவலையை பார்த்ததினால் வந்த பீலிங் அது...

அப்பொழுது கதவை தட்டி அவள் ரூம் வந்தனர் அவளின் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, மாமா, அத்தைகூடவே அவளின் மாமா.. அவளின் முடிவை அறிய... அவர்கள் அறைக்குள் நுழையவும் மைத்ரேயி பார்த்தது அவளின் அப்பா முகத்தை தான்... எல்லாரும் வந்திருகிறார்கள் என்றால் ஏதோ முடிவெடுத்து விட்டனர் என்று அறிந்துக் கொண்டாள்... அந்த முடிவு அப்பாவுக்கு பிடிகிறதா என்று அறியவே அவர் முகம் பார்த்தாள்.. அவர் முகத்தில் உண்மையான சந்தோசத்தை பார்க்கவும் தான் அவளுக்கு சந்தோசமாக இருந்தது...

அவர் அருகில் வந்து அவரை அணைத்துக் கொண்டாள்... அதை கெளதம் சிறு பொறாமையாக பார்த்துக் கொண்டு இருந்தான், கூடவே சிறு பயமாய்... அவனின் பார்வையை கண்ட அனைவருக்கும் சந்தோசமே. அவனின் காதலை அறிந்தவர்கள் அவர்கள்... அதிக காதலில் தான் இந்த பொறாமை இருக்கும்..

அவளிடம் வர்ஷிக் “ அம்மு உனக்கும் கௌதம்க்கும் கல்யாணம் பண்ண வீட்டுல நினைத்திருக்கிறோம்.. உனக்கு உன் மாமனை பிடிக்கும் தானே ” என்று சிறு கேலியாக கேட்டான் வர்ஷிக்..

அவனின் கேலியை உணர்ந்த அவள் “ போங்கப்பா ” என்று கூறி செல்லமாக அவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள்... அவளின் சம்மதத்தை தெரிந்துக் கொண்ட சியோரா எழுந்து வந்துகாலண்டர் எடுத்து பார்த்து,வரும் முகூர்தத்தில் திருமணத்தை நடத்த வீட்டில் உள்ளவர்களால் ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது....

அவர்கள் எல்லாரும் வெளியில் செல்லவும், கதவை அடைத்த கெளதம் அவளை தலை முதல் கால் வரை ரசனையாக அளந்தான்... பின் மெதுவாக அவன் பார்வை அவள் இதழில் நிலைத்தது... ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து அவள் முன் வந்து நின்றான் அவன்.. மீண்டும் அவள் இதழை தீண்ட தன் இதழை நாவால் ஈரம் செய்துக் கொண்டான் அந்த திருடன்....

அவன் செயலில் அவள் தான் அதிர்ந்தாள். அந்த முத்த தித்திப்பே இன்னும் அவள் நெஞ்சை விட்டு அகலாமல் இருக்கையில் இப்போ அவன் பார்வையேசரி இல்லையே.... என்று அவன் கண்களை பார்க்கவும் அவளுக்குண்டான அத்தனை காதலையும்கண்களில் தேக்கி அவளை பார்த்தான்.. இவள் என்னவள் என்ற உரிமையையும் கண்களில் காட்டினான் அந்த காதலன்....
அவள் அருகில், மிக மிக அருகில், அவனின் மூச்சு காற்று அவள் மேல் சூடாக படவும்.. மூச்சை ஆழ்ந்து இழுத்து விடவும் அவள் முகத்தை பற்றிக் கொண்டான்... அவளின் படப்படத்த கண்ணையும், நடுங்கும் சிவந்த இதழையும் பார்த்த கெளதம் “ தன்னால் பார்க்க மட்டும் முடியாது “ என்று எண்ணி அவளின் கண்களில் இதழை பதித்து விலகி, நடுங்கும் அவளின் இதழை வன்மையாக சிறைசெய்தான்...

அவனின் இந்த வன்மையை எதிர் பார்க்காத அவள் தடுமாறி அந்த பஞ்சு மெத்தையில் விழவும் பேலன்ஸ் இல்லாத அவனும் அவள் மேலையே விழுந்தான்...

அவன் பாரம் முழுவதும் இப்பொழுது அவள் மேல் இருக்க...மூச்சு முட்ட முட்ட, அவன் இதழ்களில் மூழ்கிப் போனாள்... அவள் முதுகில் கை கோர்த்து, தன்னோடு இறுக்கி, அவளின் இதழை வன்மையாக மென்று தின்ன முயன்றான்... இதழ் வலித்தாலும் ஒரு நிமிடம் கூட அவனை விலக்கவில்லை.. “ எடுத்துக்கொள் ” என்பது போல் மூச்சடக்கி காத்திருந்தாள்.. அவளுக்கு தான் அவனின் காதல் தெரியுமே? அவனின் மறுஜென்ம காத்திருப்பும் தெரியுமே...?
அவன் கைகள் ரெண்டும் அவள் இடை வளைவை அளக்க.. அவன் முதுகில் கைகளால் அழுத்தியவள்.. அவன்மூச்சுக் காற்றில்சுவாசிக்கதுவங்கிய பொழுதும்.., அவன் அவளை விட்டு விலகவில்லை...

எங்கே அவளை விட்டு பிரிந்தால், எழுந்து சென்றுவிடுவாளோ.. என்றுபயந்தவன் போல் அவளைதன்னோடுமேலும் நெருக்கினான்.. கோட்டைத்தாயின் கவலையை உணர்ந்த நேரத்தில் இருந்து அவனுக்கு இந்த பயம்...

எலும்புகள் அனைத்தும், நொறுங்கிப் போகும் படியான, அணைப்பில், அவள் தான் திணறிப் போனாள், எதிர்புகளற்ற செய்கையில், அவன் கைகளுக்குள் ஒடுங்கிக் கொண்டாள்... அவளுக்குமே அவனின் இந்த செயல் சிறு அதிர்ச்சியை தந்தது.. அவனின் செய்கையில் அவனின் பயத்தை அறிந்தாள், ஆனால் எதனால் அந்த பயம் என்று அறியாமல் அவன் கைகளுக்குள் சிறைப்பட்டாள்...

மைத்ரேயிக்கு இதழ்கள் இரண்டும் மரத்துப் போன உணர்வு.., அவனைவிலக்க நினைத்தாலும் அவனை ஒரு அணுவும் நகர்த்தமுடியவில்லை... அவன் இதழ்கள் மட்டுமே முற்றுகையிட, இடையைவளைத்தஅவன் கரங்கள் அங்கே இருந்து அகலவில்லை, அவன் முழுதாக அவளை உணர முயன்றிருந்தால்.. என்ன செய்திருப்பாளோ? ஆனால் அவன் பயத்திலும், தடுமாறமாட்டான் என்ற நம்பிக்கை, அவன் காதல் கொடுத்த தைரியம்.. அவன் பாரம் சுகமாய் தாங்கினாள்...

ஒரு கட்டத்தில் அவனே அவளை விட்டு விலக, அவன் பார்வை அவள் மேனியில் சற்று தடுமாறி மீள தன் ஷர்ட்டை மேல் நோக்கி இழுத்து விட்டுக் கொண்டாள்... மெதுவாக தன் இதழை வருடிக் கொண்டாள்.. அதை பார்த்த அவன், அவள் கன்னம் தாங்கி தடித்திருந்த அவள் இதழை பெருவிரலால் வருட, அவன் கையை அப்படியே பிடித்துக் கொண்டு “ மாமா உனக்கு என்ன பயம்” என்று அவனின் தவிப்பான கண்களை பார்த்து கேட்டாள் அவனின் சின்னு.. அவனின் உணர்வுகளை அறிந்த சின்னு...

ஒன்றாய் இணைவோம்....
:love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
spr update....SHa suma therika vitturinga sha
 




mahi

நாட்டாமை
Joined
Mar 13, 2018
Messages
31
Reaction score
33
Location
tsy
Ondrai inainthu vittargal superb epi.. kottai ku ena kavalai.. gowtham athai unarnthu kovama??☺
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top