Un Uyir Thaa..! Naam Vazha..! 25 (FINAL)

shanthinidoss

SM Exclusive
Author
SM Exclusive Author
ஹாய் டியர்ஸ்....
உன் உயிர் தா..! நாம் வாழ......!!
கதையின் பைனல் எபி போடுறேன் படிச்சு சொல்லுங்க...
இதுவரை கதை படிச்சு, கருத்தை சொன்ன எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி.. கோட்டை ஆசை, கனவு எல்லாம் அவள் வாரிசால் நிறைவேறிவிட்டது... கோட்டை உங்களுக்கு மறக்க முடியாத கதா பாத்திரமா என்று நீங்கள் தான் கூற வேண்டும்.... கதை எப்படி இருந்தது என்று ஒரு வார்த்தை சொல்லுங்க.. இது வரை அமைதியா படித்து செல்கிற நண்பர்கள் கதை பற்றி கூறுங்கள்... இதுவரை பொறுமையா படிச்ச எல்லாருக்கும் தேங்க்ஸ்...
நல்லபடியா கதையை முடித்துவிட்டேனா என்று நீங்கள் தான் கூறவேண்டும்.. உங்க கருத்துக்காக வெயிட் பண்ணுறேன்.. நன்றி டியர்ஸ்..

உயிர் – 25

அன்று ஊரே கோலாகலபட்டது.. இன்று கெளதம் சியோரா - மைத்ரேயி இருவருக்கும் திருமணம்.. போன ஜென்மத்தில் மைத்ரேயி விட்ட காதலை இந்த ஜென்மத்தில் அடைந்து இதோ அது கல்யாணத்தில் வந்து நிற்கிறது...

இந்த திருமணம் முடிவானதில் இருந்து மைத்ரேயி வானத்தில் பறந்துக் கொண்டு தான் இருக்கிறாள்.. தன் காதலால் அவளை பறக்க வைத்தான் அவளின் மாமா... ஆனால் அவனோ அவளின் கேள்விக்கு இன்று வரை பதில் அளிக்கவே இல்லை... அன்றுஅவள் கேட்டதற்கு “ஒன்றும் இல்லை” என்று கூறிவிட்டான்...

கோட்டைத்தாயின் கவலை என்ன என்று அறியாமல் இவளிடம் கூற எண்ணவில்லை அவன்.. அவள் மகிழ்ந்திருந்தால் மட்டுமே போதும் என்று எண்ணி அவளை தன் காதலால் திக்கு முக்காட செய்தான் அந்த காதலன்.. அதிலிருந்து அவளும் ஒன்றும் கேட்கவில்லை. அவனும் அவளிடம் ஏதும் காட்டவில்லை...

அவளைதினமும் மாம்பழ தோட்டத்துக்கு அழைத்து சென்று அவளுக்கு மாம்பழ முத்தத்தை நியாபகபடுத்தி அவளை சிவக்க வைப்பான் அவன்.. ஆனால் இந்த ஒருவாரமாக அவனை அவள் கண்ணில் காணவே இல்லை.. ஒரே வீடு அதாவது ஒரே கோட்டையில் தான் இருக்கிறார்கள். அவனை மட்டும் காணவில்லை...

அதே நேரம் அவன் அறையில் இருந்து அவனும் அதை தான் யோசித்துக் கொண்டு இருந்தான்... அவனுக்கு கோட்டைத்தாய் கவலை என்ன என்று அறிய முடியவில்லை.. அன்று கனவில் அவனுக்கு ஏதோ “ ஒரு உயர்ந்த இடத்தில் ஒரு பெட்டி தங்க நிறத்தில் ஜெலிப்பதாக பட்டது. அதை ஏக்கத்தோடு கோட்டை பார்பதாக அவனுக்கு பட்டது... அந்த பெட்டியை எண்ணி தான் அவள் கவலையாக இருப்பதாகவே அவனுக்கு பட்டது...

அது இருக்கும் இடத்தை தான் தேடிக் கொண்டு இருக்கிறான். ஆனால் இன்னும் கிடைக்கவே இல்லை. இதே யோசனையோடு இருந்தவனை வர்மா மகன் ஆதிக் வர்மா வந்து மணமேடைக்கு அழைத்து சென்று அவனின் யோசனையை தடை செய்தான்... அவனும் தற்காலிகமாக அவனின் யோசனையை தடை செய்து அவனின் சின்னு வரவை எதிர் நோக்கி இருந்தான்....கோட்டைத்தாய் முன் தான் அவர்களின் திருமணம் நடந்துக் கொண்டு இருக்கிறது. புன்னகை முகமாக அவர்களைபார்த்துக் கொண்டு இருந்தாள்...

ஐயர் பொண்ணை அழைத்துக் கொண்டு வர கூறவே அழகு தேவதையென, பதுமையாக வந்து அமர்ந்தவளையும், அவனை கண்டவளின் முகத்தில் பூத்த சிவப்பு ரோஜாக்களையும் பார்த்துக் கொண்டே அவள் கழுத்தில் தாலி கட்டி அவளை தன் உயிராக ஆக்கிக் கொண்டான்...

அனைவரும் ஆசிர்வதிக்க.. புதுதாலியுடன்.., காதல் கணவன் கைபிடித்து.., அந்த கோட்டைத்தாயின் அத்தனை ஆசிர்வாதத்தையும் பெற்றுக் கொண்டு அந்த கோட்டைத்தாயின் பாதம் பணிந்து வணங்கினர் அந்த காதல் ஜோடிகள்.... பல ஆண்டுகள் அவர்கள் வாழ புன்னகை முகமாக ஆசிர்வதித்தாள் அந்த தாய்...

அவர்களுக்கான நேரம் வரவும், தன் சின்னுவுக்காக காத்திருந்தான் கெளதம் தன் அறையில்....இன்று தான் முதல் முறையாக அவன் அறைக்கு வருகிறாள் அவள்... அவன், அவள் அறைக்கு செல்வானே தவிர அவளை அழைத்து வரமாட்டான்.. இன்று தான் உரிமையாக வருகிறாள்..

அறைக்கு வந்தவள் அவனின் அறை பார்த்து அதிசயித்தாள்... அவன் சிறுவயது புகைப்படம், கூடவே நிழலாக அவள் உருவம்... சிறுவயதில் அவன் அருகில் இருந்த நிழல் மைத்ரேயி...அத்தனையும்அவனின் காதலை அவளுக்கு உணர்த்தின... அவன் வளரும் பருவத்தில் இருந்து கௌதம்க்கு துணையாக அந்த மைத்ரேயி எப்படி இருந்தாள் என்பதும், இவள் பிறந்த பின் அவன் இவள் மேல் வைத்த காதலும் அந்த புகைபடத்தில் வரைந்திருந்தான்... அவனின் காதல் கண்டு அதிசயித்தாள் அவள்...

ஒட்டு மொத்த காதலையும் கண்களில் தேக்கி அவனை அணைத்துக் கொண்டாள் அவள்... அவனின் காத்திருப்புக்கு பலன் இப்பொழுது அவன் நெஞ்சில் சுகமாக சாய்ந்து இருக்கிறது. அவனின் காதல் ஓசையை அவனின் இதயத்தில் கேட்டுக் கொண்டே...

மெதுவாக அவளை நிமிர்த்தி முகம் முழுவதும் ஆயிரம் முத்தங்களால் அர்சித்தவன்.. அவள் இதழ்களுக்குள் தொலைந்துப் போனான்.. அவன் கரங்கள் முதன் முறையாக...அவள் மேனியில் இடம் மாறி தடுமாற “ மாமா“ என்று சிலிர்த்து அடங்கியது அவள் தேகம்... தன் தடைகளை கடந்து அவன் முன்னேற.. வெட்கமாய் கிறக்கமாய் மூடிக் கொண்டன அவள் விழிகள்...

அவனின்“சின்னு” என்ற அழைப்பு அவளின் சம்மதம் வேண்டி.. இதழ்களை இதழ்களால் வருடி வினவ... அவளின் செயல் அவனுக்கு சம்மதத்தை அளிக்க. மொத்தமாய் அவளை கொள்ளையிட துவங்கினான்.. கொள்ளை போவதில் இத்தனை ஆனந்தமா... அவன் நெருக்கம்.. அவன் காதல் அனைத்தையும் சந்தோசமாய், காதலாய் தாங்கிக் கொண்டாள்..

இத்தனை வருடங்கள் தேக்கி வைத்த காதல் அனைத்தையும் அவளிடம் காட்டினான் கெளதம்...அதற்கும் சற்றும் குறைவில்லாமல் “மாமா”என்று அழைத்து அவளின் காதலை அவனுக்கு உணர்த்தினாள் மைத்ரேயி...
அடுத்து வந்த நாட்கள், ஒரு நாளும்... ஒரு நொடியும் விலகாமல் அவர்கள் காதலை ஒருவருக்கொருவர் உணர்த்தி, பகிர்ந்து இன்புற்றனர்....

இப்படியாகநாட்கள் கழிந்து, மாதங்கள் கடந்த நிலையிலும் கௌதமால் அந்த கனவுக்கு அர்த்தம் தெரியாமல் இருந்தான்.. அன்று மைத்ரேயியையும் அழைத்துக் கொண்டு ஊரின் பின்னாடி உள்ள அருவிக்கு செல்லும் பொழுது அவனுக்கு ஏதோ இனம் புரியாத உணர்வு.. ஏதோ உணர்வில் தான் இங்கு அவளை அழைத்துக் கொண்டு வந்தான் கெளதம்...

அருகில் இருந்த மலையில் இருவரும் கைகோர்த்து ஏறி சுற்றிலும் பார்க்கும் பொழுது பக்கத்துக்கு மலை அருகில் பெரிய மலைப்பாம்பு இவர்களை கண்டு விலகி சென்றது.. அந்த பாம்பை கண்ட மைத்ரேயி அவனை ஒண்டி நின்றுக் கொண்டாள்... அவளை அணைத்துக் கொண்டே அந்த பாம்பை பார்த்தான் கெளதம். அது அவனுக்கு ஏதோ உணர்த்துவதாக தெரிந்தது அவனுக்கு.. அதை கூர்ந்துப் பார்த்தான் அவன்..

அது விலகி செல்லவும் அதன் வால் ஒரு பெரிய கொடியை இழுத்து சென்றது... அந்த கொடி விலகிய இடத்தில ஒரு பெட்டி.. அதை பார்க்கவும் அவனுக்கு தெரிந்து விட்டது அது கோட்டை பெட்டி என்று... அவன் அதை பார்க்கவும் கோட்டை அவனுக்கு அவளின் சந்தோசத்தை உணர்த்திவிட்டாள்.... அப்பொழுது அவளின் கவலையை உணர்ந்துக் கொண்டான் அவன்...
 
shanthinidoss

SM Exclusive
Author
SM Exclusive Author
அதை கண்ட அவன் ஊருக்கு அழைத்து சில பேரை அழைத்து வந்து பெரும் பூஜை பரிகாரம் செய்து மீண்டும் கோவில் உள் வைத்துவிட்டான்... அன்று கோட்டையின் அத்தனை சந்தோசத்தையும் கண்டுக் கொண்டான் கெளதம்.. அன்று தண்ணீரில் மிதந்து போன பெட்டி இன்று பல பேர் சுமந்து கொண்டு போகும் அளவுக்கு இருந்தது... கோட்டையின் உடல் இன்னும் இருக்கிறதா? இல்லையா? என்று அவள் மட்டுமே அறிந்த உண்மை அது...

அன்றுகாலையில் ஊருக்குள் ஒரு வெளிநாட்டு கார் வந்து, கோட்டை வாயிலில் நிற்கவும், கோட்டையில் இருந்து அனைவரும் ஆச்சரியமாக வெளியில் வந்து பார்த்தனர்.. ஊர் ஜனங்கள் அத்தனையும் அந்த கார் பின் தான் நின்றிருந்தனர்... அன்று காலையில் தான் வர்ஷிக் – மையூரி மீண்டும் தன் மகளை காண வந்திருந்தனர்.. இப்பொழுது யார் என்று அனைவரும் யோசிக்கும் தருணம் கார் கதவை திறந்துக் கொண்டு அவள் இறங்கினாள்...
ஒரு5௦ வயது மதிக்க தக்க ஒருவள்... கண்கள் மட்டும் தெரியும் படி முகம் முழுவதும் மூடிய நிலையில், அவள் பார்வை முழுவதும் கௌதமையே நோக்கி கொண்டு இருந்தது, அவள் பின்னே ஒரு யுவதி பிரௌன் நிற முடியுடன், பச்சை நிற கண்களுடன் அப்படியே வெண்ணை நிறத்தில்....கோட்டையில் உள்ளவர்கள் யோசனையாக புருவம் சுருக்கவும் “ ஜிக்கி” என்று மைத்ரேயி வாய் தானாக முணுமுணுத்தது....

ஜிக்கியின் பேரை கேட்டதும் கெளதம் யோசனையாக புருவம் சுருக்கி அவளை பார்த்து மீண்டும் இயல்பானான்.. அவளின் வரவு யாரும் எதிர் பார்க்காதது.. இவர்கள் எல்லாரையும் பார்த்த அவள் மெதுவாக முகத்தை மூடி இருந்த ஷ்கார்ப்பை எடுத்தாள். அதை பார்த்த அனைவரும் அதிர்ந்து விட்டனர்...

அவள் முகம் முழுவதும் சுருங்கி, கன்னத்து சதை இல்லாமல்.. அவர்களின் திகைத்த பார்வையை கண்ட அவள் நடந்ததை கூறினாள் “ அன்று கெளதம் இறப்பை அறிந்த அவள் கால் போன போக்கில் சென்று, ஒரு விடுதியில் தங்கி மீண்டும் அவளின் ஊருக்கே சென்று அங்கிருந்து ஒருவரின் உதவியுடன் வேலைக்கு அமெரிக்கா சென்று விட்டாள்...

அவள் மனதில் அன்று கௌதம்க்கு ஆக்சிடென்ட் நடந்த பொழுது அவனை காப்பாற்றி இருந்தால் அவன் பிழைத்திருப்பான் என்றே அவள் எண்ணினாள்.. தான்,தான்அவனை கொன்று விட்டதாகவே அவள் எண்ணினாள்...

கௌதமை மறக்கவும் முடியாமல், அவனை கொன்று விட்டோம் என்ற குற்ற உணர்ச்சியுடனே வாழ ஆரம்பித்தாள்..பல வருடங்கள் கழிந்து அவள் முகத்தில் வைக்க பட்ட மைத்ரேயி கன்னத்து பகுதி அவள் முகத்தில் ஒட்டாமல் முகத்தில் இருந்து பிரிய ஆரம்பித்தது.. அதில் முகம் காண முடியாததாக மாறிவிட்டதில் இருந்துதனக்கு ஒரு துணை வேண்டும் என்று எண்ணி ஒரு பெண் குழந்தையை தத்துக் எடுத்துக் கொண்டாள்.. அவளின் இறப்பு நெருங்கி விட்டதில் கடைசி நாட்களை இங்கு கழிக்க அவள் மகளுடன் இங்கு வரவும் தான் இவர்கள் திருமண போஸ்டர் பார்த்தாள்...

அதில் அவனும், அவளும் மீண்டும் வந்ததில் அவளுக்கு சந்தோசம்... அது தான் இவன் உருவில் அந்த கௌதமை கண்டதும் அவனை பார்த்துக் கொண்டே இருந்தாள் ஜிக்கி...
அவளின் கதையை கேட்ட அனைவருக்கும் வருத்தமாக போய் விட்டது... அவளையும், அவள் மகளையும் அன்புடன் அரவணைத்துக் கொண்டனர் கோட்டையின் ஆட்கள்.. கோட்டைத்தாய் தான் அவளைஇங்கு அழைத்தாள், அன்று அவனை காதலித்து கடைசி நிமிடம் அவனை காணாமல் சென்ற வருத்தம் அவளுக்கு என்றும் உண்டு என்று அவளுக்கு தெரியும்,

அதிலும் இவனையே நினைத்து வேறு வாழ்க்கை தேடாமல் இருந்தவள் அவள். அதை எண்ணி தான் அவளின் கடைசி நிமிடத்தில் அவளின் காதலனாக இருந்த கெளதம் உருவில் இப்பொழுது அவளுக்கு மகன் போல் பிறந்து வந்திருக்கும் இவனை பார்த்து அவள் மனது சந்தோசம் அடைய வேண்டும்,அவள் குற்ற உணர்ச்சி மறைய வேண்டும்,கடைசி நாட்கள் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று தான் அவளை அழைத்து வந்தாள் கோட்டை.... எல்லாரும் அவள் குழந்தைகளே, எல்லாரையும் அன்பாக அரவணைத்தாள்....

இப்படியாக அவர்கள் வாழ்க்கை சந்தோசமாகவும், காதலாகவும் கழிந்தது.. எப்பொழுதும் இல்லாத சந்தோசத்தை கோட்டை வாரி வாரி வழக்கினாள் என்றே கூறவேண்டும்.. அன்று காலையில் எழும்போதே மைத்ரேயியால் எழ முடியவில்லை.. கெளதம் பதறிவிட்டான்.. ஓடி சென்று அவனின் பாட்டி சத்ரியாவை அழைத்து வந்து பார்க்க கூறினான்...

அவள் நிலையை பார்த்த அவருக்கு சிறு சந்தேகம் அதன் அடிப்படையில், மருத்துவரை அழைத்து பார்த்ததில் தெரிந்தது அவர்களுக்கு வாரிசு வர போகிறது என்று...
சந்தோசம் என்றால் அப்படி ஒரு சந்தோசம்.. கெளதம் அன்று மிக பெரிய விருந்தே தயார்செய்தான் கோட்டைத்தாய் கோவிலில்...

குடும்பமாக நின்று அவளை வணங்கவும் கெளதம் மனதில் “ இத்தனையும் எனக்கு செய்த நீயே மீண்டும் எனக்கு மகளாக பிறக்க வேண்டும்” என்ற எண்ணம் அவன் மனதில்.. அதே எண்ணம் தான் மைத்ரெயி மனதிலும்..

அவர்களின் வேண்டுதலை கேட்ட அந்த மரத்துக்கு சந்தோசம்,இப்பொழுது அந்த மரத்தில் கட்டிய சிறிய மணியை ஆட்டி அதன் சந்தோசத்தை வெளிபடுத்தியது, மேலும் அதன் பூக்களையும் தூவி அந்த குடும்பத்தை ஆசிர்வதித்தது.. மணி சத்தத்தில் கண்களை திறந்த அனைவரும் அந்த மரத்தை பார்த்து விட்டு கோட்டைத்தாயை நோக்கி திரும்பினர்...
அந்த நேரம் அவள் பெட்டியில் இருந்து அவர்களுக்கு காட்சி தந்தாள் கோட்டைத்தாய்... அந்த நேரம் கோட்டை மிகவும் சந்தோசபட்டாள்.. அவளின் ஆசை, கனவு எல்லாம் நிறைவேறிவிட்டது.. அவள் இழந்த அவள் பெட்டியும் அவளை நோக்கி வந்துவிட்டது... அதே சந்தோசத்துடன் இவர்களை பார்த்தாள் கோட்டை...

அவளின் வாரிசு சந்தோசத்துடன்கண்களில் நீர் வழிய அவளை வணங்கினார்கள்... “ இனி மேல் எப்பொழுதும் உங்களுக்கு சந்தோசத்தையே அருள்வேன் “ என்று அவர்களை பார்த்து புன்னகை புரிந்தாள் அந்த காவல்காரி...

இனி மேல் அவர்களுக்கு எப்பொழுதும் சந்தோசத்தையும், கௌதம்க்கு அவளே மகளாக பிறப்பாள் என்று அவளுடன் நாமும் வாழ்த்தி விடை பெறுவோம்.....

###################################################################################
 
Last edited:

AnithaKarmegam

Well-known member

semya iruku SHa....spr..takknu mudichutu mathiri iruku Sha..nyc endinggggg luvlyyy
 
Priyapraveenkumar

Well-known member
superb ending......romba arumaya niraivana finishing......very lovely gowtham mytheryi marujenmam eduthu palaya kathal unarthu love panni kalyanam rombave alaga irunthathu padikka...very very lovely..........
Jikkikum ,ellarukkum mana niraivu kottai kodutthutta..........
wonderful story.....(y)(y)(y)(y)(y)(y)(y)(y)(y)
 
Advertisements

Latest updates

Advertisements

Top