• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Un Uyir Thaa..! Naam Vazha..! 25 (FINAL)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
Such different concept u have choosen...and u done very well mam...such a fabulous novel with full of thrilling...congratulations mam...
hi sis..

ithoda thodarchi keele "pesum silaiyai kaddavilkka vaa..!" story irukkum athai padinga romba thrilling ah irukkum....
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
Such different concept u have choosen...and u done very well mam...such a fabulous novel with full of thrilling...congratulations mam...
வாவ் வாவ்... ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்... உங்க கமெண்ட்ஸ் பார்த்து அவ்ளோ ஹாப்பியா இருக்கு..??? ஒரே நாளில் படிச்சீங்களா வாவ் ???
 




Shalini01

இணை அமைச்சர்
Joined
Oct 8, 2018
Messages
668
Reaction score
271
Location
Australia
அதை கண்ட அவன் ஊருக்கு அழைத்து சில பேரை அழைத்து வந்து பெரும் பூஜை பரிகாரம் செய்து மீண்டும் கோவில் உள் வைத்துவிட்டான்... அன்று கோட்டையின் அத்தனை சந்தோசத்தையும் கண்டுக் கொண்டான் கெளதம்.. அன்று தண்ணீரில் மிதந்து போன பெட்டி இன்று பல பேர் சுமந்து கொண்டு போகும் அளவுக்கு இருந்தது... கோட்டையின் உடல் இன்னும் இருக்கிறதா? இல்லையா? என்று அவள் மட்டுமே அறிந்த உண்மை அது...

அன்றுகாலையில் ஊருக்குள் ஒரு வெளிநாட்டு கார் வந்து, கோட்டை வாயிலில் நிற்கவும், கோட்டையில் இருந்து அனைவரும் ஆச்சரியமாக வெளியில் வந்து பார்த்தனர்.. ஊர் ஜனங்கள் அத்தனையும் அந்த கார் பின் தான் நின்றிருந்தனர்... அன்று காலையில் தான் வர்ஷிக் – மையூரி மீண்டும் தன் மகளை காண வந்திருந்தனர்.. இப்பொழுது யார் என்று அனைவரும் யோசிக்கும் தருணம் கார் கதவை திறந்துக் கொண்டு அவள் இறங்கினாள்...
ஒரு5௦ வயது மதிக்க தக்க ஒருவள்... கண்கள் மட்டும் தெரியும் படி முகம் முழுவதும் மூடிய நிலையில், அவள் பார்வை முழுவதும் கௌதமையே நோக்கி கொண்டு இருந்தது, அவள் பின்னே ஒரு யுவதி பிரௌன் நிற முடியுடன், பச்சை நிற கண்களுடன் அப்படியே வெண்ணை நிறத்தில்....கோட்டையில் உள்ளவர்கள் யோசனையாக புருவம் சுருக்கவும் “ ஜிக்கி” என்று மைத்ரேயி வாய் தானாக முணுமுணுத்தது....

ஜிக்கியின் பேரை கேட்டதும் கெளதம் யோசனையாக புருவம் சுருக்கி அவளை பார்த்து மீண்டும் இயல்பானான்.. அவளின் வரவு யாரும் எதிர் பார்க்காதது.. இவர்கள் எல்லாரையும் பார்த்த அவள் மெதுவாக முகத்தை மூடி இருந்த ஷ்கார்ப்பை எடுத்தாள். அதை பார்த்த அனைவரும் அதிர்ந்து விட்டனர்...

அவள் முகம் முழுவதும் சுருங்கி, கன்னத்து சதை இல்லாமல்.. அவர்களின் திகைத்த பார்வையை கண்ட அவள் நடந்ததை கூறினாள் “ அன்று கெளதம் இறப்பை அறிந்த அவள் கால் போன போக்கில் சென்று, ஒரு விடுதியில் தங்கி மீண்டும் அவளின் ஊருக்கே சென்று அங்கிருந்து ஒருவரின் உதவியுடன் வேலைக்கு அமெரிக்கா சென்று விட்டாள்...

அவள் மனதில் அன்று கௌதம்க்கு ஆக்சிடென்ட் நடந்த பொழுது அவனை காப்பாற்றி இருந்தால் அவன் பிழைத்திருப்பான் என்றே அவள் எண்ணினாள்.. தான்,தான்அவனை கொன்று விட்டதாகவே அவள் எண்ணினாள்...

கௌதமை மறக்கவும் முடியாமல், அவனை கொன்று விட்டோம் என்ற குற்ற உணர்ச்சியுடனே வாழ ஆரம்பித்தாள்..பல வருடங்கள் கழிந்து அவள் முகத்தில் வைக்க பட்ட மைத்ரேயி கன்னத்து பகுதி அவள் முகத்தில் ஒட்டாமல் முகத்தில் இருந்து பிரிய ஆரம்பித்தது.. அதில் முகம் காண முடியாததாக மாறிவிட்டதில் இருந்துதனக்கு ஒரு துணை வேண்டும் என்று எண்ணி ஒரு பெண் குழந்தையை தத்துக் எடுத்துக் கொண்டாள்.. அவளின் இறப்பு நெருங்கி விட்டதில் கடைசி நாட்களை இங்கு கழிக்க அவள் மகளுடன் இங்கு வரவும் தான் இவர்கள் திருமண போஸ்டர் பார்த்தாள்...

அதில் அவனும், அவளும் மீண்டும் வந்ததில் அவளுக்கு சந்தோசம்... அது தான் இவன் உருவில் அந்த கௌதமை கண்டதும் அவனை பார்த்துக் கொண்டே இருந்தாள் ஜிக்கி...
அவளின் கதையை கேட்ட அனைவருக்கும் வருத்தமாக போய் விட்டது... அவளையும், அவள் மகளையும் அன்புடன் அரவணைத்துக் கொண்டனர் கோட்டையின் ஆட்கள்.. கோட்டைத்தாய் தான் அவளைஇங்கு அழைத்தாள், அன்று அவனை காதலித்து கடைசி நிமிடம் அவனை காணாமல் சென்ற வருத்தம் அவளுக்கு என்றும் உண்டு என்று அவளுக்கு தெரியும்,

அதிலும் இவனையே நினைத்து வேறு வாழ்க்கை தேடாமல் இருந்தவள் அவள். அதை எண்ணி தான் அவளின் கடைசி நிமிடத்தில் அவளின் காதலனாக இருந்த கெளதம் உருவில் இப்பொழுது அவளுக்கு மகன் போல் பிறந்து வந்திருக்கும் இவனை பார்த்து அவள் மனது சந்தோசம் அடைய வேண்டும்,அவள் குற்ற உணர்ச்சி மறைய வேண்டும்,கடைசி நாட்கள் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று தான் அவளை அழைத்து வந்தாள் கோட்டை.... எல்லாரும் அவள் குழந்தைகளே, எல்லாரையும் அன்பாக அரவணைத்தாள்....

இப்படியாக அவர்கள் வாழ்க்கை சந்தோசமாகவும், காதலாகவும் கழிந்தது.. எப்பொழுதும் இல்லாத சந்தோசத்தை கோட்டை வாரி வாரி வழக்கினாள் என்றே கூறவேண்டும்.. அன்று காலையில் எழும்போதே மைத்ரேயியால் எழ முடியவில்லை.. கெளதம் பதறிவிட்டான்.. ஓடி சென்று அவனின் பாட்டி சத்ரியாவை அழைத்து வந்து பார்க்க கூறினான்...

அவள் நிலையை பார்த்த அவருக்கு சிறு சந்தேகம் அதன் அடிப்படையில், மருத்துவரை அழைத்து பார்த்ததில் தெரிந்தது அவர்களுக்கு வாரிசு வர போகிறது என்று...
சந்தோசம் என்றால் அப்படி ஒரு சந்தோசம்.. கெளதம் அன்று மிக பெரிய விருந்தே தயார்செய்தான் கோட்டைத்தாய் கோவிலில்...

குடும்பமாக நின்று அவளை வணங்கவும் கெளதம் மனதில் “ இத்தனையும் எனக்கு செய்த நீயே மீண்டும் எனக்கு மகளாக பிறக்க வேண்டும்” என்ற எண்ணம் அவன் மனதில்.. அதே எண்ணம் தான் மைத்ரெயி மனதிலும்..

அவர்களின் வேண்டுதலை கேட்ட அந்த மரத்துக்கு சந்தோசம்,இப்பொழுது அந்த மரத்தில் கட்டிய சிறிய மணியை ஆட்டி அதன் சந்தோசத்தை வெளிபடுத்தியது, மேலும் அதன் பூக்களையும் தூவி அந்த குடும்பத்தை ஆசிர்வதித்தது.. மணி சத்தத்தில் கண்களை திறந்த அனைவரும் அந்த மரத்தை பார்த்து விட்டு கோட்டைத்தாயை நோக்கி திரும்பினர்...
அந்த நேரம் அவள் பெட்டியில் இருந்து அவர்களுக்கு காட்சி தந்தாள் கோட்டைத்தாய்... அந்த நேரம் கோட்டை மிகவும் சந்தோசபட்டாள்.. அவளின் ஆசை, கனவு எல்லாம் நிறைவேறிவிட்டது.. அவள் இழந்த அவள் பெட்டியும் அவளை நோக்கி வந்துவிட்டது... அதே சந்தோசத்துடன் இவர்களை பார்த்தாள் கோட்டை...

அவளின் வாரிசு சந்தோசத்துடன்கண்களில் நீர் வழிய அவளை வணங்கினார்கள்... “ இனி மேல் எப்பொழுதும் உங்களுக்கு சந்தோசத்தையே அருள்வேன் “ என்று அவர்களை பார்த்து புன்னகை புரிந்தாள் அந்த காவல்காரி...

இனி மேல் அவர்களுக்கு எப்பொழுதும் சந்தோசத்தையும், கௌதம்க்கு அவளே மகளாக பிறப்பாள் என்று அவளுடன் நாமும் வாழ்த்தி விடை பெறுவோம்.....

###################################################################################
மிக அருமையான படைப்பு வாழ்த்துக்கள் ????
 




Shakthi35

மண்டலாதிபதி
Joined
May 23, 2018
Messages
113
Reaction score
346
Location
Coimbatore
Super story sis.. unga stry characters awesome... அருமையான முடிவு... கோட்டை அஹ் மறக்கவே முடியாது..chance ah illa..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top