• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Un Uyir Thaa..!! Naam Vazha..!!! - Episode 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

What about this Epi..?

  • super

    Votes: 18 64.3%
  • good

    Votes: 10 35.7%
  • bore

    Votes: 0 0.0%

  • Total voters
    28

AnithaKarmegam

இணை அமைச்சர்
Joined
Jan 21, 2018
Messages
711
Reaction score
1,865
Age
27
Location
Thiruvarur
தான் பார்க்கணும்னு நினைச்சுட்டு இருந்தாள்.. அதனால அவளுக்கு ஒரு சர்பிரைஸ் வச்சுடுவோம்.. வீட்டைநீட்டா ரெடி செய்து விருந்து ஏற்பாடு செய்ய சொல்லுடா என்று கூறி சந்தோசத்துடன் மீண்டும் அவனை அணைத்துக் கொண்டார் சியோரா.. அந்த நேரம் அவருக்கு அவரின் மூத்த மகன் மறந்துப் போனான்... அவர் மனைவி மட்டுமே கண் முன் வந்தாள்...

உற்சாகத்துடன் சத்ரியா நோக்கி சென்றார் சியோரா... அதே உற்சாகத்துடன் கெளதம் வர்ஷிக்கு அழைத்துக் கூறினான்.. கெளதம் கூறியதை கேட்ட வர்சிக்கு பெரும் மகிழ்ச்சி.... உடனே மையூரியை அழைத்துக் கூறினான்..

அவளும் சரி என்றதோடு விட்டு விட்டாள்... அவனும் அவள் முகம் பார்க்காமல் கெளதம் கூடவே பேசுவதில் மும்முரமாக இருந்தான்... அவனிடம் பேசி முடிக்கவும் அவளை அழைத்துக் கொண்டு ஷாப்பிங் சென்று விட்டான்.. அப்படியாவதுஅவள் மனசை கொஞ்சம் மாற்றுவோம் என்று எண்ணி....

சத்ரியாவை அழைத்த சியோரா... ரியா இன்னைக்கு நம்ம வீட்டுக்கு முக்கியமான ஒருத்தர் வரபோறாங்க.. நீ என்ன பண்ணுற இன்னைக்கு சமையல் படு ஜோரா இருக்கணும்... வீட்டை நல்லா டேக்கரேட் செய்யணும்... வீட்டுக்கு வருகிற ஆளு மிக பெரிய VIP, அதுவும் உனக்கு ரொம்ப பிடிச்ச VIP ரியா என்று கூறி அவருக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டார் சியோரா....

அதே நேரம் மும்பை, கொலாபாவில்



கௌசிக் படு தீவிரமாக கெளதம் அரெஸ்ட் செய்வது பற்றி வாதித்துக் கொண்டு இருந்தான்... அவனும் வர்மாவும் முதலில் வேலை செய்தது ஒரே இடம் தாராவி தான்.. அதன் பிறகு சியோரா மேல் உள்ள கோபத்தில் அந்த இடத்தை விட்டு மேல் எக்ஸாம் எழுதி CPI பிரிவில் சேர்ந்து இங்கு கொலாபா வந்து விட்டான்... அவன் இப்படி இடம் மாறியது சியோரா அறிந்தது தான் ஆனாலும் அவன் இப்படி தங்களுக்கு எதிரியாக மாறுவான் என்று எண்ணவில்லை...

இப்பொழுது கௌசிக் கவனம் முழுவதுமே கெளதம் மேல் தான்.. உயிர் என்பது சாதாரணம் என்ற கெளதம் எண்ணத்தை மாற்ற வேண்டும் என்று எண்ணினான்.. கௌசிக் மனைவிஷதாக்ஷிகூட எத்தனையோ முறை கூறி இருக்கிறாள்... எப்படி இருந்தாலும் அவர் உங்க தம்பி நீங்க இப்படி செய்யாதீங்க.. அவர் பக்க நியாயத்தையும் பாருங்க என்று கூறினாள்…

அவனுக்கும் தெரியும் அவர்கள் தப்பு செய்ய மாட்டார்கள் என்று.. ஆனாலும் உயிர் எடுப்பது என்பது எப்பொழுதும் தவறு தானே.. போலீஸ் என்று நாங்கள் எதுக்கு இருக்கிறோம்.. நாங்க அந்த விதார்த்தை பார்த்துக்க மாட்டோமா? நாங்களும் அவனை தேடிக் கொண்டு தானே இருந்தோம். ஆனால் எப்படி அவன் சட்டத்தை அவன் கையில் எடுக்கலாம்.. ஒரே ஒரு நாள் மட்டும் அவனை ஜெயிலில் வைத்தால் தான் அவனுக்கும் இப்படி ஒரு செயல் செய்ய வராது என்று அவன் தொழிலுக்கு நேர்மையாக யோசித்தான் கௌசிக்...

இன்று தான் ஏதாவது ஒரு ஸ்டேப் எடுத்தால் தான் கெளதம் உயிர்க்கு ஏதும் பிரச்னை வராது... இப்பொழுது நாங்க அவனை விட்டு விட்டால்.. இவன் அழித்த மனிதர்களின் வாரிசு இவனுக்கு எதிராக வந்து விட்டால் என்ன செய்வது என்று பலவாறாக யோசித்து தான் சில பல யோசனை செய்தும், அவன் குடும்ப பாதுகாப்பை எண்ணி தான் கௌசிக் இப்படி ஒரு முடிவு எடுத்தான்.. அதாவது அவனை அரெஸ்ட் செய்வது என்று...

அன்று யார் மேலையே இருக்கும் கோபத்தில் RKஇவன் உயிரை எடுக்கப் பார்த்தான்... அது போல் மீண்டும் நடந்து விட்டால்... அதை அவனால் நினைத்துக் கூட பார்க்க முடியாததாய் இருந்தது... நாளை காலை எப்படியும் அரெஸ்ட் செய்ய வேண்டும் என எண்ணி விட்டான்.. அதிலும் இந்த விதார்த் மிக பெரிய ஆள்... இப்பொழுது அவன் சார்பாக யாராவது ஒருவன் கண்டிப்பாக இருப்பான்.. இல்லை விதார்த்துக்கு கை ஆள் இருந்தால் அவன் கண்டிப்பாக கெளதம் தேடி வருவான்.. அதற்கு முன்னே இவனை காப்பாற்ற வேண்டும் என்று எண்ணி அப்படி ஒரு முடிவு எடுத்தான் கௌசிக்...

முடிவு எடுத்ததும் அல்லாமல் உடனே ஷதாக்ஷியை அழைத்துக்கொண்டு உடனே தாராவுக்கு கிளம்பிவிட்டான்... கிளம்பி வந்து அங்கு உள்ள போலீஸ் ஸ்டேஷனில் அவன் கொண்டு வந்த ஆதாரங்கள் அடங்கிய பைல் மற்றும் கௌதக்கு எதிராக உள்ள வீடியோ, போடோஸ் எல்லாம் கொடுத்து அவர்களிடமும் ஒப்புதல் வாங்கி ரெடியாக இருந்தான் கௌசிக் சியோரா... இவன் இங்கு வந்ததும் கூடவே வர்மாவையும் அழைத்துக் கொண்டான்... ஏனெனில் வர்மா அவனை விட்டு தூரமாக இருந்தால். கெளதம் அர்ரெஸ்ட் செய்யும் விஷயம் கண்டிப்பாக கௌதம்க்கும், அவன் அப்பா சியோராவுகும் தெரிந்து விடும்...

அதன் பிறகு அவன் எங்காவது சென்றுவிடுவான்.. சியோரா அவர் பணபலத்தையும், ஆள் பலத்தையும் வைத்து ஏதும் இல்லாமல் செய்து விடுவார் என்று அவனுக்கு தெரியும்... அதனால்வர்மாவை எங்கும், இம்மியும் அகல விடாமல் அவன் கண்ணுகுள்ளையே வைத்துக் கொண்டான் கௌசிக்.....

வர்மா என்ன செய்வது, ஏது செய்வது கெளதம் பையாவுக்கு எப்படி இங்கு நடப்பதை சொல்வது என்று யோசித்துக் கொண்டும், கையை பிசைந்துக் கொண்டும் இருந்தான்.. இவன் அவஸ்தையை கௌசிக் கவனித்தும், கவனிக்காமல் இருந்தான்...

கௌதம்க்கு போலீஸ் கஸ்டடி தான் சேப் என்று கௌசிக் எண்ணினான்.. ஆனால் கோட்டையோ வேறு எண்ணினாள்?? கோட்டையா?? கௌசிக்கா???

மையூரிக்கு இந்த நாளை மிக இனிமையாக மாற்றி விட்டான் வர்ஷிக்.... அவளை பீச், ஷாப்பிங் என்று அழைத்து சென்றான்.. பீச் செல்வது அவளுக்கு ரொம்ப பிடிக்கும்.. அதுவும் கடற்கரையில் கை பிடித்து வெகு தூரம் நடக்க பிடிக்கும், கடலின் ஆழம் வரை அவளுக்கு போக ஆசை ஆனால் முடியாதே.. பாதி சென்றாலே அலை வந்து தள்ளி விட்டுவிடும்.. அதில் அலைகளுடன் செல்ல சண்டையிடவும் அவளுக்கு பிடிக்கும்... கடைசியாக எப்போ கடல் சென்றாள் என்று அவளிடம் கேட்டால் அவளுக்கு தெரியாது…

இந்த நாளை அவள் மனசார விரும்பினாள்... அவன் கையை பிடித்துக் கொண்டு கடல் மணலில் வெகு நேரம் நடந்தனர்.. அந்த அனுபவம் அவளுக்கு புதுசாக இருந்தது.. முகத்தில் புன்னகை வாடாமல் இருந்தாள்... அவள் முகம் பார்க்க அவனுக்குமே சந்தோசமாக இருந்தது... பின்னஊருக்கு போகும் போது அவள் அழுதுக் கொண்டு இருந்தால் அவன் எப்படி செல்வதாம். அது தான் அவளை இப்படி அழைத்துக் கொண்டு வந்து அவள் புன்னகை முகத்தைப் பார்த்து மனதில் பதியவைத்துக் கொண்டு இருந்தான்...

பின் நேரம் ஆகுவதை உணர்ந்து அவளை ஹோட்டல் அழைத்து சென்றான்... எங்கு சென்றாலும் அவள் அவன் கையை பிடித்திருந்தாள்... அதே போல அவன் அவளை லேசாக அணைத்தது போல் வந்தான்.. அந்நிலை இருவருக்கும் பிடித்திருந்தது...

ஹோட்டல் வந்து அவளுக்கு பிடித்த உணவையே ஆர்டர் செய்தான்.. அப்படிசெய்ததும் அல்லாமல் அவள் சாப்டுவதையே ரசித்துப் பார்த்திருந்தான் வர்ஷிக்... அவனின் பார்வையை உணர்ந்த மையூரி இவனுக்கு இதே வேலையா போச்சு.. எப்போ பார்த்தாலும் இவனுக்கு என் சாப்பாட்டையே கண்ணு வைகுறதே அவனுக்கு வேலையா போச்சு என்று மனதில் அவனை திட்டி பேசாமல் சாப்ட்டுக் கொண்டு இருந்தாள்....

அவள் சாப்டுவதை பார்த்த அவனும் மெதுவாக சாப்ட ஆரம்பித்தான்... அவன் சாப்பிட்டு முடிக்கவும் கெளதம் அவனை அழைக்கவும் சரியாக இருந்தது....

கெளதம் அழைக்கவும் அவளை அழைத்துக் கொண்டு ஷாப்பிங் சென்று அவளுக்கு தேவையான எல்லாம் வாங்கி குவித்தான்.. அது மட்டும் அல்லாமல் கெளதம் குடும்பத்திற்கு என்று எல்லாருக்கும் வாங்கிக் கொண்டு அவர்கள் வீட்டுக்கு சென்றனர்..

அவர்கள் வீட்டுக்கு சென்று அவளுக்கு தேவையான ஒரு வாரத்துக்கு உண்டான திங்க்ஸ், எடுத்துக் கொண்டு அவனுக்கான டிராவல் திங்க்ஸ் எல்லாம் எடுத்துக் கொண்டு கிளம்பினர் கெளதம் வீடு நோக்கி... கெளதம் வீட்டில் இருந்து வர்ஷிக் எகிப்து போறது போல் ப்ளான்...

வர்ஷிக் கெளதம் வீட்டுக்கு செல்லவும், அங்கு கோட்டைநல்லூரில் கோட்டைத்தாயின் பூவரசம் மரம் தன் மகிழ்ச்சியை அதன் கிளைகளை அசைத்து அசைத்து கொண்டாடியது.. அது மட்டும் இல்லாமல் கோவில் மணிகள் தானாக அடித்துக் கொண்டே இருந்தது.. காரணம் யாருக்கும் தெரியவில்லை....

மைத்ரேயி கூட கோவிலுக்கு வந்து விளக்கு பூஜைகள் செய்தும், சிறப்பு பூஜைகள் செய்து அந்த சத்தத்தை நிறுத்த முயற்சி செய்தனர்... அவர்கள் கோட்டைத்தாய்க்கு ஏதோ கோபம் அதனால் தான் இப்படி எல்லாம் நடக்குறது என்றே எண்ணினர்..

ஆனால் அவர்களுக்கு தெரியவில்லை கோட்டையின் உச்சகட்ட மகிழ்ச்சி தான் இது என்று... இப்பொழுது இருக்கும் அவளின்கடைசிவாரிசு அவளை தேடி வரப் போகிறான் என்ற சந்தோசமே கோட்டைக்கு...

அந்த மரத்துக்கும், கோட்டைக்கும் தெரிந்து விட்டது.. கெளதம் இங்கு வர ரெடி ஆக்கபட்டுவிட்டான் என்று.. ஆனால் கெளதம் இங்கு வர யோசிக்கவே இல்லை.. கோட்டையின் எண்ணம் என்னதானோ???

சத்ரியாவுக்கு கூட பெரும் சந்தோசம் வாரது யாராக இருக்கும் என்று.. அவள் கணவனின் சந்தோசம் அவளுக்கும் சந்தோசம் தானே.. சியோரா சந்தோசமாக இருக்கும் பொழுது சத்ரியாவுக்கு என்ன பயம் அவளும் சந்தோசமாகவே இருந்தாள்.. சியோராவுக்கு மையூரி இங்கு வரும்பொழுது சத்ரியா ரியாக்ஷயன் எப்படி இருக்கும் என்பதை மனதில்கொண்டு வந்து மகிழ்ந்தார் அவர்...

இன்னும் 5 நிமிடத்தில் அவர்கள் வந்து விடுவர். என்று சியோரா யோசித்துக் கொண்டு இருக்கும் பொழுது.. அவர்கள் வீட்டு வாயில் மணி ஒலித்தது.... சந்தோசத்துடன் சியோரா வந்து கதவை திறந்தார்... ஆனால்வெளியில்நின்றவர்களை பார்த்து சியோரா அதிர்ந்து விட்டார்....

உயிர் எடுப்பாள்.................
sema suspense ah podhu Sha spr....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top