• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Un vizhiyil veezhnthenada-10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
தன் பின்னால் கேட்ட குரலில் திடுக்கிட்டு திரும்பிய வெண்பா கைகளை குறுக்கே கட்டிக் கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்த மித்ராவைப் பார்த்ததும் ஒரு கணம் பதட்டமடைந்தாலும் உடனே தன் பதட்டத்தை மறைத்து முகத்தை புன்னகத்தவாறு வைத்துக் கொண்டு "என்ன மித்ரா இந்த பக்கம்? எதுவும் வேலையா வந்தியா?" என்று கேட்ட வெண்பாவை மேலும் முறைத்தாள் மித்ரா.


"ஆமா ரொம்ப முக்கியமான வேலை. என்னடி ஆச்சு உனக்கு? நானும் காலையில இருந்து பார்க்குறன். ஆளும் சரியில்ல உன் ஆக்டிவிடிஸும் சரி இல்ல. அந்த ஆதித்யாவ வச்ச கண் வாங்கமா பார்த்துட்டே இருக்க. அவன் எங்க போனாலும் நீயும் சாவி கொடுத்த பொம்மை மாதிரி போய்ட்டே இருக்க. யாரும் பார்த்தா என்ன நினைப்பாங்க? சொல்லு ஏன் இப்படி பண்ற?" என்று கேட்ட மித்ராவைப் பார்த்து விழித்தாள் வெண்பா.


"சேச்சே அப்படி எதுவும் இல்லையே! நான் சும்மா வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன். நீ நினைக்குற மாதிரி எதுவும் இல்லை. வா ஸ்வேதாகிட்ட போகலாம் தேடுவா" என்று மித்ரா கை பிடித்து அழைத்தாள் வெண்பா.


அவள் கையில் இருந்து தன் கையை விடுவித்தவள் "நீ என்ன தான் ஆஸ்கார் லெவல் ஆக்டிங் பண்ணுனாலும் என்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது. உண்மைய சொன்னதான் நான் வருவேன். உன் முகமே உன்ன காட்டிக் கொடுக்குதே. நீ ஏதோ கோல்மால் பண்ணுறனு" என்று விட்டு வெண்பாவை செல்ல விடாது அவள் வழியை மறித்தவாறு நின்றாள் மித்ரா.


"சரி இப்போ உனக்கு என்ன தெரிஞ்சுக்கனும்? நான் ஏன் ஆதித்யாவையே பார்க்குறனு தெரியனும்? அதுதானே?" என்ற வெண்பா சிறிது நேரம் அமைதி காத்து விட்டு


"நான் விக்ரம பெர்ஸ்ட் எங்க வீட்டுக்கு பக்கத்தில் இருக்குற பார்க்ல தான் பார்த்தேன்" என்றவளை இடைமறித்த மித்ரா "விக்ரமா????" என்று கேள்வி கேட்க "அவரோட முழுப்பெயர் ஆதித்யா விக்ரம்லே" என்ற வெண்பாவைப் பார்த்து தலையிலடித்துக் கொண்டாள் மித்ரா.


பாவமாக வெண்பா பார்க்கவும் "சரி மேல சொல்லு" என்று வெண்பாவை பார்த்தாள் மித்ரா.


அன்றைய நிகழ்வுகளை சுருக்கமாக கூறி முடித்தவள் அடுத்த நாள் அவனை பார்க்கில் தேடியதையும் கூறினாள் வெண்பா. "ஓஹ்....அதான் மேடம் அன்னைக்கு அவ்வளவு டல்லா இருந்தீங்களா?" என்று மித்ரா கேட்கவும் தலையைக் குனிந்து கொண்டாள் வெண்பா.


"ஹேய் இங்க பாரு வெண்பா" என்று வெண்பாவின் முகத்தை நிமிர்த்தியவள் அவள் கண்கள் கலங்கியிருப்பதைக் கண்டு பதறிப் போனாள் மித்ரா.


"ஏய் லூசு இப்போ நான் என்ன கேட்டுட்டனு கண்ல வாட்டர் பால்ஸ ஓபன் பண்ற?" என்று விட்டு அவள் கலங்கிய கண்களைத் துடைத்து விட்டாள் மித்ரா.


"நான் தப்பு பண்ணிட்டனா?" என்று கண்களை விரித்து சிறு குழந்தையாய் கேட்ட வெண்பாவைப் பார்க்க பாவமாக இருந்தது மித்ராவிற்கு.


"இப்போ நீ தப்பு பண்ணிட்டனு யாரு சொன்னா? உனக்கு என்ன ஆச்சுனுது தானே கேட்டன். சரி எனக்கு ஒண்ணு மட்டும் சொல்லு. நீ அந்த ஆதித்யாவ லவ் பண்ணுறியா?" என்று மித்ரா கேட்கவும் அவளை விழி விரியப் பார்த்தாள் வெண்பா.


"எனக்கு தெரியலயே. அவர பெர்ஸ்ட் டைம் பார்க்கும் போதே எனக்குள்ள ஏதோ வித்தியாசமான பீல்.. சம்திங் ஹெப்பன்ட். அடுத்த நாள் பார்க்கிற்கு போய் அவர தேடுவனு நான் எதிர்பார்க்கல. அதே நாள் மறுபடியும் அவர ரெஸ்ட்டாரண்ட்ல பார்ப்பேனும் நான் எதிர்பார்க்கல. அதற்கு அப்புறம் எக்ஸாம் ஸ்டார்ட் ஆச்சு ஸோ அத பத்தி நான் மறந்துட்டனுதான் நினைச்சன். இன்னைக்கு அவர மறுபடியும் பார்த்ததும் ஐயம் ஸோ ஹெப்பி. பட் இது தான் லவ் ஆ எனக்கு தெரியல" என்ற வெண்பாவை ஆறுதலாக அணைத்துக் கொண்ட மித்ரா


"சின்ன பாப்பா மாதிரி அழக்கூடாது சரியா? உனக்கு அவருதான்னு இருந்தா அத யாராலயும் மாத்த முடியாது சரியா? அதப் பத்தி யோசிச்சு நீ கன்பியுஸ் ஆகாத" என்றவளைப் பார்த்து சரியென்று தலையாட்டினாள் வெண்பா.


அதன் பிறகு நண்பர்களோடு பேசுவதிலும் ஏனைய வேலைகளிலும் கவனத்தை செலுத்தினாள் வெண்பா.


நிச்சயதார்த்த நிகழ்வுகளை முடித்து விட்டு வீடு வந்த கவியரசன் மற்றும் ஆதித்யா தங்கள் அறைகளுக்குள் சென்று விட வெங்கடாசலமுடன் வந்த கலையரசி எதோ யோசனையோடு வருவதைப் பார்த்த வெங்கடாசலம்


"என்னமா ஏதோ பலமா யோசிச்சுட்டு வர மாதிரி இருக்கு?" எனவும் "அது பெரிசா ஒண்ணுமில்லங்க. நம்ம கவிக்கு நல்ல இடத்தில் சம்மந்தம் அமைஞ்ச மாதிரி ஆதிக்கும் நல்ல வரன் வந்தா ஒரே மேடையில இரண்டு பேரோட கல்யாணத்தையும் நடத்தலாமேனு யோசிச்சன்" என்றார் கலையரசி.


"அதுவும் நல்ல யோசனை தான். கவியோட கல்யாணத்துக்கு ஒரு வருஷம் இருக்கே. அதுக்குள்ள ஆதிக்கும் நல்ல வரன் அமைஞ்சா உன் ஆசைப்படியே பண்ணிடலாம்" என்ற வெங்கடாசலத்தைப் பார்த்து மகிழ்வோடு புன்னகைத்தார் கலையரசி.


வெண்பாவின் முகம் ஒரு கணம் கலையரசி மனதில் தோன்றி மறைந்தது.


"ஆதிக்கு அந்த பொண்ண பேசலாமா?" என்று யோசித்த கலையரசி வரன் பார்க்க ஆரம்பிக்கும் போது சொல்லிக் கொள்ளலாம் என நினைத்து கொண்டார்.


வீடு வந்த வெண்பா காலையில் அலங்கோலப்படுத்தி வைத்த அறையை துப்புரவு செய்து விட்டு திரும்புகையில் அவள் கண்களில் தட்டுப்பட்டது அவள் டயரி.


அதீத சந்தோஷம்,கவலை,மனக்குழப்பங்கள் ஏற்படும் போதெல்லாம் வெண்பாவின் ஆறுதல் அவள் டயரி.



எல்லாவற்றையும் அதில் எழுதி விடுவாள். அவ்வாறு செய்தால் மனதில் இருக்கும் பாரம் நீங்கியது போன்ற உணர்வு அவளுக்குள் ஏற்படும்.


இன்றும் தன் மனக்குழப்பத்தை தன் டயரியிடம் ஒப்புவித்து கொண்டிருந்தாள் வெண்பா.


ஆதித்யாவை சந்தித்தது முதல் இன்று மித்ராவிடம் பேசியது வரை எழுதி முடித்தவள் மனம் குழப்பங்கள் நீங்கி இலேசாகி இருந்தது போன்று தோன்றியது.


நாட்கள் வேகமாக இறக்கை கட்டி பறந்தது. படிப்பில் தன் கவனத்தை முற்றிலும் செலுத்தி தன் மனதை திசை திருப்ப முயன்றாள் வெண்பா.


ஓரளவு அதில் வெற்றி கண்டாலும் அவ்வப்போது ஆதித்யாவை சந்திக்கும் போதும் அவன் பெயரைக் கேட்கும் போதும் அவனது ஞாபகங்கள் அவளை இம்சை செய்யும்.


ஆதித்யா எல்லோரிடமும் பழகுவது போல வெண்பாவுடனும் நட்பாகவே பழகினான்.


நிச்சயதார்த்த நிகழ்வன்று தன் மனதை கட்டுக்குள் கொண்டு வந்தவன் மீண்டும் தன் மனதை அலைபாய விடவில்லை.


கலையரசி வெண்பா பற்றிய எண்ணங்களை வெங்கடாசலத்திடம் கூற மறந்து விட வெங்கடாசலம் ஆதித்யாவிற்கு ஏற்ற வரனை ஒரு புறம் தேடிக் கொண்டிருந்தார்.


மறுபுறம் வெண்பாவோ ஆதித்யாவுடனான எல்லா நிகழ்வுகளையும் மீட்டிப் பார்த்தவள் ரெஸ்ட்டாரண்டில் அவனது கை வளைவில் நின்றதையும் அவனை வெகு அருகில் பார்த்து தன் மனதை பறி கொடுத்து விட்டதையும் தாமதாமாகவே உணர்ந்தாள்.


தனியாக அமர்ந்து ஆழ்ந்து யோசித்தவள் இறுதியாக ஒரு முடிவை எடுத்தாள்.


வெண்பாவின் மனதை எப்போதோ ஆதித்யா அவனது கண்ணியமான நடவடிக்கைகளாலும், பிறரை மகிழ்வித்து பார்க்கும் குணத்தினாலும், தன்னை சூழ உள்ளவர்களுக்கு உதவும் குணத்தினாலும் கொள்ளை கொண்டு விட்டான்.


சரியான சந்தர்ப்பம் அமையும் போது தன் மனதை அவனிடம் கூறி விட வேண்டும் என்று முடிவெடுத்தவள் அதற்கான சரியான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.


எல்லோரிடமும் பழகுவது போன்று தன்னிடமும் நட்பாக பழகுவதாக கூறி விடுவானோ என்ற பயம் ஒரு புறம் இருந்தாலும் தன் காதல் அவனை தன்னிடம் சேர்க்கும் என்ற நம்பிக்கை அந்த பயத்தை இல்லாமல் செய்தது.


வெண்பா தன் காதலை ஆதித்யாவிடம் கூற முடிவெடுத்து இன்றோடு ஆறு மாதங்கள் முடிந்து விட்டன.


ஆனால் வெண்பாவிற்கு சரியான தருணம் தான் இன்னும் அமையவில்லை. என்ன செய்யலாம் என்ற யோசனையோடு காலேஜ் கேன்டீனில் அமர்ந்திருந்தவள் காதில் தேனாக வந்து சேர்ந்தது ஸ்வேதா கூறிய செய்தி.....
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஏம்மா, கலையரசி அம்மா?
கவியரசனுக்கு ஸ்வேதாவை
முடித்த நீங்கள், எங்கள்
ஆதித்யாவை மறந்துட்டீங்களா?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஆதித்யாவுக்கு வெண்பாவை
கல்யாணம் பேசலாம்-னு
உங்கூட்டுக்கார்-கிட்டே
நீங்க ஏன்மா சொல்லலை,
கலையரசி அம்மா?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இப்போ பாருங்க
உங்கூட்டுக்கார் வெங்கடாசலம்
ஆதிக்கு வேற பொண்ணைப்
பார்க்குறாரு, கலையரசியம்மா?
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
அப்படி என்ன சந்தோஷமான விஷயம்பா??? Chance to meet Vikram!!
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
வெண்பா பாவம், ஹுஸ்னா டியர்
எவ்வளவுதான் சுட்டிப் பெண்ணாய்
இருந்தாலும், காதல்-னு வரும்
பொழுது பயமும் பரிதவிப்பும்
வந்திடுதேப்பா
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மித்ராவிடம் மாட்டிக்கொண்டு
வெண்பா, விழிப்பதைப் பார்த்தால்
ரொம்பவே பாவமாக இருக்கு,
ஹுஸ்னா டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top