• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Un vizhiyil veezhnthenada-14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
இன்று ஆதித்யாவின் நிச்சயதார்த்தம்.


நினைக்கும் போதே வெண்பாவின் மனமெல்லாம் கனமாக இருந்தது.


என்னதான் அவள் வெளியில் தைரியமாக காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் மொத்தமாக நொறுங்கிப் போய் இருந்தாள்.


இன்று ஞாயிற்றுக்கிழமை வேறு காலேஜும் லீவ் என்ன செய்யலாம் என்று பால்கனியில் நின்று யோசித்துக் கொண்டிருந்தாள் வெண்பா.


"வெண்பா!! வெண்பா!!" என அழைத்தவாறு வந்த மஞ்சுளா அறையில் அவளைக் காணாது பால்கனிக்கு செல்ல அங்கு நின்று வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் வெண்பா.


"இங்கே என்ன பண்ணிட்டுருக்க? பங்க்சனுக்கு போக நீ இன்னும் ரெடி ஆகலயா? டைம் ஆகுதுலே" என்று மஞ்சுளா கூறவும்


"ப்ச்..நான் எங்கேயும் வரலமா. நீங்க எல்லாரும் போயிட்டு வாங்க" என்று வெண்பா சலிப்பாக கூறினாள்.


"என்ன நீ வரலயா?? ஏன் வரல?ஆதித்யா உங்க எல்லாருக்கும் பிரண்ட்னு மித்ரா,ஸ்வேதாலாம் சொன்னாங்களே? மித்ரா, ஸ்வேதா மாதிரி ஆதித்யாவும் உன் பிரண்ட் தானே? அப்புறம் ஏன் வர மாட்டனு சொல்ற? மித்ரா,ஸ்வேதா கூட ஏதும் சண்டையா? நேற்று காலேஜ் போயிட்டு நல்லா தானே வந்த ஏதும் பிரச்சினை நடந்த மாதிரி தெரியலயே. ஏன் வர மாட்ட?" என மஞ்சுளா கேள்விகளாக கேட்டார்.


"ஐயோ!! அம்மா ஏன் இவ்வளவு கேள்வி கேட்குற. நான் வரலமா ப்ளீஸ்" என வெண்பா கெஞ்சலாக கூறவும்


"அதெல்லாம் இல்ல நீ ரெடியாகிட்டு வர்ற அவ்வளவு தான். டிரஸ் எடுத்து மேஜை மேல வைச்சிருக்கன். சீக்கிரம் ரெடி ஆகிட்டு வா" எனக் கூறி விட்டு சென்றார் மஞ்சுளா.


"இந்த அம்மா வேற என் சிட்டுவேஷன் புரிஞ்சுக்காம. எல்லாம் எனக்கு சதி பண்ற மாதிரியே நடக்குதே" என புலம்பிக் கொண்டே வந்த வெண்பா மேஜை மீது இருந்த ஆடையை பார்த்து விட்டு "அம்மா!!!!!!!!!" என கத்தினாள்.


"ஏன்டீ!!! இப்படி வீடே அதிர்ற மாதிரி கத்துற?" என்று கேட்டவாறே வந்த மஞ்சுளாவை பார்த்து


"என்னம்மா டிரஸ் எடுத்து வைச்சிருக்க?" என இடுப்பில் கை வைத்து முறைத்தவாறு கேட்டாள் வெண்பா.


"ஏன்டீ இந்த டிரஸ்க்கு என்ன குறை? கலர் சரியில்லையா ?" என கேட்டவாறே மேஜை மேல் இருந்த ஆடையை எடுத்து பார்த்தார்.


"கலர் சரியில்லைனு நான் சொன்னனா? சாரி எடுத்து வைச்சிருக்கியேமா. காலங்காத்தாலேயே இப்படி கடுப்பேத்துறியேமா?" என வெண்பா கூறவும் சிரித்த மஞ்சுளா


"இதுக்கு தான் இந்த சத்தம் போட்டியா? ஸ்வேதா நிச்சயதார்த்தம் அப்போ சாரி தானே கட்டுன. இப்போவும் சாரி தான் கட்டுவேனு நினைச்சேன்" எனக் கூறினார் மஞ்சுளா.


"நான் சாரி கட்டமாட்டேன்" என வெண்பா கோபம் காட்டிக் கொண்டு நிற்க "விளையாட இப்போ டைம் இல்ல வெண்பா. கீழே அப்பா வெயிட் பண்ணிட்டு இருக்காரு. லேட் ஆகிட்டு இருக்கு. இங்கே வா நான் கட்டி விடுறன்" என்று வெண்பா கை பிடித்து அழைத்து சென்றார் மஞ்சுளா.


விருப்பமே இன்றி தயாராகி வந்த வெண்பா நிச்சயதார்த்த வீட்டை நோக்கி பயணமானாள்.


வெண்பாவை கண்டதும் ஓடி வந்து கட்டி கொண்ட ஸ்வேதா"வாங்க ஆன்டி வாங்க அங்கிள்" என மஞ்சுளாவையும், கோபால கிருஷ்ணனையும் அழைத்தவள் வெண்பா புறம் திரும்பி


"ஏன்டீ இவ்வளவு லேட்? எவ்வளவு நேரம் வெயிட் பண்ணன் தெரியுமா? நீ இல்லாம பங்க்சன் செம போர். சரி சரி வா உள்ளே போகலாம். மித்ராவும் நானும் உனக்காக தான் வெயிட் பண்றோம். வா" என்று அவள் கை பிடித்து அழைத்து சென்றாள்.


தடதடக்கும் இதயத்தோடு வீட்டினுள் நுழைந்தாள் வெண்பா.


வெண்பாவின் கால்கள் பின்னிக் கொள்ள இதயமோ பந்தயக் குதிரை போல வேகமாக துடித்துக் கொண்டிருந்தது.


ஆதித்யாவைப் பார்த்து விடக்கூடாது என நினைத்தாலும் உள் மனமோ அவன் எங்காவது இருக்கிறானா? எனப் பார்க்க எண்ணியது.


சிரமப்பட்டு மனதை கட்டுக்குள் கொண்டு வந்தவள் "உன்ன அவ்வளவு அழ வைச்சு கஷ்டம் தந்தவன் பற்றி இனி யோசிக்கக் கூடாது" என முடிவெடுத்தாள்.


ஆனால் அவள் எடுக்கும் முடிவுகளுக்கோ ஆயுட்காலம் மிக குறைவு என்பதை அவளே அறிவாள்.


மித்ரா, ஸ்வேதாவுடன் பேசும் போது சாதாரணமாக இருப்பது போல் காட்டிக் கொள்ள பெரும் பாடுபட்டாள் வெண்பா.


வெண்பா வீட்டினுள் நுழைந்தது முதல் இந்த நொடி வரை அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் இரு கண்கள் பார்த்துக் கொண்டே இருந்தது.


அந்த கண்களில் தெரிந்தது பாசமா? பரிவா? ஏக்கமா? கவலையா? காதலா? என அக் கண்களின் சொந்தக்காரன் ஆதித்யாவிற்கே புரியவில்லை.


ஆதித்யாவிற்கு தன் மனதில் என்ன மாதிரியான உணர்வு ஏற்படுகிறது என்பதை அவனாலே புரிந்து கொள்ள முடியவில்லை.


வெண்பா கடைசியாக கூறி விட்டு சென்ற வார்த்தைகள் அவனை ஏதோ செய்தது.


அவனைப் பார்க்க மாட்டேன் பேச மாட்டேன் என்று வெண்பா கூறி விட்டு சென்றதும் முதலில் பெரிதாக அலட்டிக் கொள்ளாதவன் நாட்கள் செல்லச் செல்ல எதையோ இழந்தது போல உணர்ந்தான்.


ஆனால் ஒன்றில் மட்டும் உறுதியாக இருந்தான் ஆதித்யா.


தன் மனதில் வெண்பா மேல் காதல் இல்லை வெறும் நட்பு மட்டுமே உள்ளது என தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறான்.


நிஜத்தை அவன் உணரும் நாள் எப்போது வருமோ தெரியவில்லை.
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
வெகு நாட்கள் கழித்து வெண்பாவைப் பார்த்ததும் அவன் மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி.


வெண்ணிற டிசைனர் சேலை அணிந்து ஒரு மெல்லிய சையின், அதற்கு ஏற்றாற்போல் தோடு என மிக எளிமையாக வந்திருந்தாள் வெண்பா.


ஆனால் ஆதித்யாவின் கண்களுக்கு வெண்பா இன்று மிக அழகாக தெரிந்தாள்.


தன் மனம் என்ன எதிர்பார்க்கிறது என அவனுக்கு புரியவில்லை.


"ஆதி அம்மா கூப்பிடுறாங்க வா" என கவியரசன் அழைக்கவும் அவனுடன் சென்ற ஆதித்யாவின் கண்கள் வெண்பாவை தேடியது.


ஆதித்யாவைப் பார்த்த ஒரு நொடி வெண்பாவின் கண்கள் காதலை காட்டினாலும் அடுத்த நொடி வெறுப்பை வாரி வழங்கியது.


அய்யர் நிச்சயப் பத்திரிகை வாசிக்க தாம்பூலத்தட்டு மாற்றிக் கொள்ளப் பட்டது. நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் மனம் நிறைந்த வேதனையோடு பார்த்து கொண்டிருந்தாள் வெண்பா.


கலங்கிய கண்களை யாரும் கவனிக்கா வண்ணம் அடிக்கடி துடைத்து கொண்டாள்.


மோதிரம் மாற்றிக் கொள்ளும் படி கூறவும் ஆதித்யா வெண்பாவைப் பார்த்து கொண்டே எதிரில் நின்றிருந்த மதுமிதாவின் விரல்களில் மாட்டினான்.


கவியரசனும், நண்பர்களும் கேலி செய்தாலும் அவை எதுவும் ஆதித்யாவின் காதுகளில் எட்டவில்லை.


சிறிது நேரம் அங்கிருந்த வெண்பா அதற்கு மேல் அங்கிருந்தால் தன் முகமே தன்னை காட்டிக் கொடுத்து விடும் என்ற பயத்தினால் ஏதோ வாய்க்கு வந்த காரணங்களை கூறி விட்டு வீடு வந்து சேர்ந்தாள்.


அது வரை கட்டுப்படுத்தி வைத்திருந்த அழுகை மடை திறந்த வெள்ளமாய் பாய தன் வேதனைகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் கண்ணீராய் தன் கவலைகளை வெளிப்படுத்தினாள்.


இன்னும் நான்கு, ஐந்து மாதங்களில் ஆதித்யா வேறொரு பெண்ணின் கணவன் என நினைக்கும் போதே அவள் உயிர் துடிதுடித்தது.


ஆனால் அவன் தன் காதலை மறுத்த விதம் ஞாபகம் வர எழுந்து நிமிர்ந்து அமர்ந்தவள் "உன் காதலை துச்சமென நினைச்சவனுக்காக நீ கண்ணீர் சிந்தக் கூடாது வெண்பா" எனக் கண்களை துடைத்து கொண்டவள் "இனி என் வாழ்க்கையில் ஆதித்யா என்ற பெயருக்கு கூட இடம் இல்லை" என சபதம் எடுத்து கொண்டாள்.


வழக்கம் போல காலேஜ், வீடு, பார்க்கில் அவள் நண்பர்கள் பட்டாளம் என தன் கவனத்தை செலுத்தினாள் வெண்பா.


காலேஜில் ஸ்வேதா அவளது மற்றும் ஆதித்யாவினது திருமண ஏற்பாடுகள் பற்றி கூறும் போதெல்லாம் வெண்பாவிற்கு எல்லையில்லா கோபம் வரும்.


எதுவும் கூற முடியாத நிலையில் அவள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருப்பாள் வெண்பா.


ஆதித்யா என்ற பெயரைக் கேட்டாலே இப்போது எல்லாம் சட்டென்று வெண்பாவிற்கு கோபம் வந்து விடும்.


ஒரு நாள் விளையாட்டாக மித்ரா "என்ன வெண்பா உன் ஆசை நாயகன் ஆதித்யாவிற்கு கல்யாண ஏற்பாடெல்லாம் தடபுடலாக நடக்குது போல" எனக் கூறி சிரிக்கவும்


"ஜஸ்ட் ஸ்டாப் இட் மித்ரா. யாருக்கு யாரு ஆசை நாயகன். இனிமே ஆதித்யா என்கிற பேர என் முன்னாடி சொன்ன அப்புறம் நடக்குறதே வேற" எனக் கோபமாக கூறி விட்டு செல்ல அவள் பின்னே ஓடி வந்த மித்ரா


"ஸாரி ஸாரி வெண்பா நான் சும்மா விளையாட்டாக தான் சொன்னன். நீ இவ்வளவு கோபப்படுவனு தெரிஞ்சா நான் அப்படி சொல்லிருக்கவே மாட்டேன். ரியலி ஸாரி" என வெண்பாவைக் கஷ்டப்பட்டு சமாதானப் படுத்தினாள் மித்ரா.


ஆதித்யா மேல் வைத்திருந்த காதல் நாளாக நாளாக வெறுப்பாக மாறியதாக எண்ணிக் கொண்டாள் வெண்பா.


ஆனால் அவள் ஆழ் மனதில் அவன் மேல் வைத்த காதல் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது என்பதை அறியாமல் போனாள் வெண்பா.


வெண்பாவின் படிப்பு முடிவடையும் கட்டம் நெருங்கி கொண்டிருந்தது. கோபால கிருஷ்ணன் வெண்பாவிற்காக வரன் பார்க்கலாம் என ஆரம்பிக்க வெண்பாவோ இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து பார்க்கலாம் என அவரை கட்டுப்படுத்தி வைத்திருந்தாள்.


இறுதிப் பரீட்சையும் முடிவடைந்து விட்டது. வெண்பாவின் நீண்டகால ஆசை நிறைவேறி விட்டது. வெண்பா ஒரு வக்கீலாகி விட்டாள்.


மனம் நிறைந்த சந்தோஷத்தோடு நண்பர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டிருந்தனர்.


அனைத்து நண்பர்களுக்கும் திருமண அழைப்பிதழ் வழங்கி விட்டு வந்த ஸ்வேதா "இதோ பாரு வெண்பா, மித்ரா. இன்னும் ஐந்து நாள் கழித்து என்னோட மேரேஜ். ஸோ யாரு வந்தாலும் வரலனாலும் நீங்க இரண்டு பேரும் நாளைக்கே என் கூட வந்த நிற்கனும். சரியா?" என கேட்கவும்


"நாளைக்கே கஷ்டம்பா. இவ்வளவு டேஸ் எக்ஸாம் டென்சன்ல போயிடுச்சே. டூ, த்ரி டேஸ் ஆச்சும் வீட்ல நிம்மதியா ரெஸ்ட் எடுத்துட்டு மேரேஜ்க்கு முன்னாடி கண்டிப்பா வந்துடுவோம்" என ஸ்வேதாவை பல காரணங்கள் கூறி சமாதானம் செய்து அனுப்பி வைத்தாள் வெண்பா.


இரண்டு மூன்று நாட்கள் வீட்டில் நிம்மதியாக கழித்தவள் ஸ்வேதா திருமணம் நடக்க இருக்கும் மண்டபத்திற்கு மித்ராவுடன் இணைந்து சென்றாள்.


வெண்பா மற்றும் மித்ராவைப் பார்த்த ஸ்வேதா சந்தோஷத்துடன் ஓடி வந்து "எங்க நீங்க இரண்டு பேரும் இன்னைக்கும் வராம போயிடுவீங்களோனு பயந்துட்டேன் தெரியுமா? நல்ல வேளை வந்துட்டீங்க" என கூறவும்


"நாங்க வந்து உன்ன ரவுண்டு கட்டி கலாய்க்க வேணாமா? அதான் ஓடி வந்துட்டோம்" என சிரித்துக் கொண்டே கூறினாள் மித்ரா.


மித்ரா ஸ்வேதாவுடன் பேசிக் கொண்டிருக்க வெண்பாவின் உள்மனமோ ஏதோ தவறான விடயம் நடக்கப்போகிறது என அவளை எச்சரிக்கை செய்து கொண்டிருந்தது.......
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top