• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Un vizhiyil veezhnthenada-17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
"என்ன வெண்பா இது? உன்னோட ஹஸ்பன்ட் கல்யாணத்துக்கு அப்புறம் பெர்ஸ்ட் டைம் உன்கிட்ட பேச வந்துக்குறன். இப்படி முறைச்சு பார்க்குறியே! நான் பாவம் இல்லையா?" என ஆதித்யா சிரித்துக் கொண்டே கேட்கவும் வெண்பாவின் கோபம் கூடிக்கொண்டே போனது.


"சரி நீ தான் பேச மாட்ட. நானாச்சும் பேசுறன். உள்ளே போய் பேசலாம் வா" என்று விட்டு ஆதித்யா அறைக்குள் நுழைய பார்க்க வழியை மறித்துக் கொண்டு நின்றாள் வெண்பா.


"நான் உங்க கிட்ட எதுவும் பேசுறதா இல்ல. நீங்க போகலாம்" என வேறெங்கோ பார்த்து கொண்டு வெண்பா கூற அவள் பார்த்து கொண்டு இருந்த இடத்தை திரும்பி பார்த்து விட்டு


"அங்கே யாரைப் பார்த்து பேசுற? உன் பிரண்ட்ஸ் யாராச்சும் இருக்காங்களா என்ன? ஆனா உன் பிரண்ட்ஸ் அந்தரத்துலயா இருக்காங்க? மேல பார்த்துட்டு சொல்றியே!" என ஆதித்யா சிரித்துக் கொண்டே கூற அவனை மேலும் முறைத்தாள் வெண்பா.


"இப்படி வாசல்ல நிற்க வைச்சு என்ன ரசிச்சு பார்க்கத்தான் போறேனே நல்லா பார்த்துக்கோ" என முன்னும் பின்னும் திரும்பி பல்வேறு போஸ்களில் ஆதித்யா நிற்க தலையில் அடித்துக் கொண்டு வழி விட்டாள் வெண்பா.


அறைக்குள் நுழைந்த உடன் ஆதித்யா கதவை லாக் செய்ய பதற்றமடைந்த வெண்பா "இப்போ எதுக்கு கதவ லாக் பண்ணிங்க. முதல்ல கதவ திறங்க.எதுவா இருந்தாலும் கதவை ஓபன் பண்ணி வைச்சிட்டு பை மினிட்ஸ்ல சொல்லிட்டு போங்க." என அவனை மிரட்டும் தொனியில் கூறினாள்.


"என் வைப் கிட்ட பேசும் போது எனக்கு பிரைவஸி வேணும்லே. அதோட ஹஸ்பன்ட் அன்ட் வைப் ஆயிரம் பேசுவோம். அதை மத்தவங்க கேட்டா நல்லா இருக்காதுலே"என ஆதித்யா வெண்பாவைப் பார்த்து கண்ணடித்துக் கொண்டு கூறினான்.


"ஸ்டாப் இட் விக்ரம். நானும் நீங்க வந்ததுல இருந்து பார்க்குறன். ஹஸ்பன்ட் ஹஸ்பன்ட்னு சொல்லி ஓவரா சீன் போடுறீங்க. தாலி கட்டிட்டீங்க தான். அதுக்காக இப்படி ஓவர் ஆக்டிங்லாம் பண்ண வேணாம். நேற்று வரைக்கும் என்ன பிடிக்காதுனு சொல்லிட்டு இருந்தீங்க. இப்போ என்னடனா அப்படி எதுவும் நடக்காத மாதிரியே வந்து பேசுறீங்க. ஏன் என் லைப்ல இப்படி விளையாடுறீங்க. அடுத்தவங்க பீலிங்ச புரிஞ்சுக்காம அவங்கள ஹேர்ட் பண்றது தானே உங்க பழக்கம். மத்தவங்க முன்னாடி நடிக்குற மாதிரி ஏன் என்கிட்டயும் நடிக்குறீங்க. இன்னொரு தரம் உங்கள நம்பி நான் ஏமாற மாட்டேன்" என வெண்பா கோபமாக கூறினாள்.


"சூப்பர்!!! சூப்பர்!!!" என ஆதித்யா கை தட்ட அவனைப் புரியாத பார்வை பார்த்தாள் வெண்பா.


"நீ ரொம்ப அழகாப் பேசுற வெண்பா. நீ பேசும் போது உன் இரண்டு கண்ணும் அவ்வளவு எக்ஸ்பிரசன்ஸ் காட்டுது. அப்படியே உன் கண்ணுல விழுந்துட்டேன். அந்த....."என்று ஆதித்யா மேலும் கூறப் போக அவனை போதும் என்பது போல கை காட்டி நிறுத்தச் சொன்னாள் வெண்பா.


"சொல்ல வந்த விஷயத்தை சொல்லிட்டு சீக்கிரம் கிளம்புங்க. உங்க வெட்டிப் பேச்சுக்கள எல்லாம்
கேட்டுட்டு இருக்க எனக்கு நேரம் இல்லை" என வெண்பா கூறவும் ஆதித்யாவின் முகம் ஒரு கணம் வாடியது.



உடனே தன்னை சரி செய்து கொண்டவன் "அதுவும் சரிதான். இனி வாழ்க்கை பூரா பேசிட்டுதானே இருக்கப் போறோம். இப்போவே எல்லாம் பேசி முடிச்சுட்டா அப்புறம் பேசுறதுக்கு விஷயம் இருக்காதுலே" என்றவனை முறைத்து பார்த்தாள் வெண்பா.


"உன்ன பார்த்தா நான் இப்படி தான் டைவர்ட் ஆயிடுறன். முக்கியமான விஷயம் பேச வந்துட்டு அதை மறந்தே போயிட்டேன். இன்னைக்கு நைட் கவி-ஸ்வேதா ரிசப்ஸன் மட்டும் தான் நடக்கும். நம்மளோட ரிசப்சன் டூ டேஸ் கழிச்சு வைச்சுக்கலாம்னு யோசிச்சிருக்கோம். ஏன்னா மேரேஜ் தான் தீடிர்னு நடந்துடுச்சு. உங்க ரிலேடிவ்ஸ் யாரையும் இன்வைட் பண்ண முடியாம போச்சு. அட்லீஸ்ட் ரிசப்சனுக்காச்சும் இன்வைட் பண்ணனும்லே அதனாலதான் டூ டேஸ்க்கு அப்புறம் வைக்க டிசைட் பண்ணன். உனக்கு ஓகே தானே?" என ஆதித்யா கேட்க


"இங்க நடக்குறது ஒவ்வொரு சம்பவமும் என்கிட்ட பெர்மிஸன் கேட்டு என்னோட சம்மதத்தை கேட்டா நடக்குது? இல்லைலே? அப்புறம் ஏன் இதை மட்டும் வந்து கேட்கனும்? உங்க விருப்பங்களை எல்லாம் என் மேல தானே போடுறீங்க. அப்படியே இதையும் போட்டுட்டு போங்க" என வேதனையுடன் கூறினாள் வெண்பா.


"வெண்பா..." என ஆதித்யா பேச ஆரம்பிக்க "விஷயத்தை சொல்லிட்டீங்களே இனி நீங்க போகலாம்" எனக் கதவை நோக்கி கை காட்டினாள் வெண்பா.


அதற்கு மேல் அங்கு நின்றால் வெண்பா கோபம் கொள்வாள் எனத் தெரிந்ததால் எதுவும் பேசாமல் சென்றான் ஆதித்யா.


என்னதான் ஆதித்யாவிடம் கோபமாக பேசினாலும் அவன் முகம் வாடி செல்வதை வெண்பாவினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.


அவனை மனதார கணவனாக ஏற்கவும் முடியாமல் எதிரியாக நினைத்து விலகவும் முடியாமல் இரு தலைக் கொள்ளி எறும்பாய் தவித்தாள் வெண்பா.


அவளுக்கு ஒரு விடயம் தான் இப்போது வரை குழப்பமாக இருந்து கொண்டே இருக்கிறது.


நேற்று வரை வேறொரு பெண்ணுடன் திருமணம் என்று இருந்தவன் இன்று சடுதியாக நடந்த திருமணத்தை எவ்வாறு ஏற்றுக் கொண்டான்?

தன் மேல் காதலே இல்லை எனக் கூறியவன் இப்போது காதலாக கசிந்துருகி பேசுவது எப்படி?

உன்னை என் தோழியாக மட்டுமே பார்க்கிறேன் எனக் கூறியவன் இப்போது வார்த்தைக்கு வார்த்தை மனைவி எனக் கூறுகிறானே இதில் எதை நம்புவது?

எல்லாவற்றையும் யோசிக்க யோசிக்க வெண்பாவிற்கு தலையே வெடித்து விடும் போல் இருந்தது.


சாப்பிட வருமாறு மஞ்சுளா அழைக்கவும் "எனக்கு பசியில்லை. கொஞ்ச நேரம் தூங்கி எழும்பி வரேன்" என்று விட்டு கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவள் அவ்வாறே தூங்கி போனாள்.


அவள் தூங்கிய பின் ஆதித்யா அறைக்குள் வந்ததோ அவளை நேராக கட்டிலில் படுக்க வைத்து போர்வையை போர்த்தி விட்டு அவளை ரசித்து கொண்டு இருந்ததையோ வெண்பா அறியவில்லை.


சிறு குழந்தை போல உறங்கும் தன் மனைவியின் அழகை ரசித்து பார்த்தவன் அவளருகில் இருந்த கதிரையில் அமர்ந்து தன் மனைவியின் அழகை மீண்டும் மீண்டும் ரசித்து கொண்டிருந்தான்.


"இந்த மூக்கு மேல எவ்வளவு கோவம் வருது?" என அவள் மூக்கைப் பிடித்து செல்லமாக மெதுவாக ஆட்ட வெண்பா சிறிது அசைய உடனே கையை பின்னிழுத்துக் கொண்டான்.


"நான் உன்ன ரொம்ப ஹேர்ட் பண்ணிருக்கன் வெண்பா. நீ என் மேல வைச்சிருந்த லவ்வ நான் சரியா புரிஞ்சுக்காம நடந்திருக்கன். ஒரு ஸாரி என்ற வார்த்தையால நீ பட்ட கஷ்டத்தை எல்லாம் சரியாக்கிட முடியாது. காலம் பூரா என் காதலால உன்ன சந்தோஷமா வைச்சிருப்பேன். நீ எவ்வளவு தான் என் மேல கோபப்பட்டாலும் உன் மேல எனக்கு கோபமே வராது" என்று தன் மனதில் உள்ளவற்றை எல்லாம் நன்றாக தூங்கி கொண்டிருந்த வெண்பாவிடம் கூறிக்கொண்டு இருந்தான் ஆதித்யா.
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
அப்போது அங்கு வந்த கவியரசன் "அடப்பாவி!!! நீ வெண்பாவ லவ் பண்ணுனியா?" எனக் கேட்க திடுக்கிட்டு எழுந்து கவியரசன் அருகில் சென்ற ஆதித்யா கவியரசனின் வாயை மூடினான்.


"ஸ்ஸ்ஸ்ஸ்...அவ தூங்கிட்டு இருக்காலே. ஏன்டா இப்படி கத்துற?" என மெல்லிய குரலில் ஆதித்யா கேட்க அவனது கை பிடித்து அறைக்குள் வெளியில் அழைத்து சென்றான் கவியரசன்.


"உண்மையாவே நீ வெண்பாவ லவ் பண்ணுனியா?" என சந்தேகமாக கவியரசன் ஆதித்யாவைப் பார்த்து கேட்டான்.


ஆம் என்பது போல ஆதித்யா தலையசைக்க "அப்போ ஏன்டா நீ முன்னாடியே இதெல்லாம் சொல்லல? ஒரு வேளை மதுமிதாவோட உன் கல்யாணம் நடந்திருந்தா என்னடா பண்ணிருப்ப?" எனக் கவியரசன் கேட்க அவனைப் பார்த்து சிரித்த ஆதித்யா
"அம்மா இந்த கல்யாணத்த நிறுத்தலனாலும் நான் நிறுத்திருப்பேன்" என்றான்.



"எனக்கு ஒண்ணுமே புரியல" என தலையில் கை வைத்த கவியரசனை பார்த்து சிரித்த ஆதித்யா


"உனக்கு என்னதான் புரிஞ்சிருக்கு? இது மட்டும் புரியுறதுக்கு" என்று விட்டு வெண்பா தன்னிடம் காதலை கூறியது முதல் அதை அவன் ஆரம்பத்தில் நிராகரித்தது, அவள் பிரிந்து சென்ற பின் அவள் நினைவுகள் அவன் மனதை மாற்றியது, வெகு நாட்கள் கழித்து அவளை பார்த்த பின் அவன் மனதில் தோன்றிய புதுவித உணர்வு, அதன் பின் அவளிடம் தன் மனதை இழந்து விட்டதையும் அதை உணர்ந்து கொள்ள இத்தனை நாட்கள் தேவைப்பட்டது என்பதையும் கூறியவன்


"அம்மாகிட்ட சொல்லலாம்னு தான் வந்தேன். அதற்குள்ள என்னென்னமோ ஆகிடுச்சு. எப்படியோ நான் ஆசைப்பட்ட மாதிரி என் வெண்பா எனக்கு கிடைச்சிட்டா" என்று சந்தோஷத்துடன் கூறினான் ஆதித்யா.


"எப்படியோ நல்லா இருந்தா சரிதான்" என்று கூறி விட்டு "ஆனா ஒண்ணு மட்டும் புரிஞ்சுக்கோ. நீ வெண்பாவ இந்த ஆறு,ஏழு மாசமா கஷ்டப்படுத்துனதுக்கு உன்ன அவ சும்மா விடமாட்ட. சேர்த்து வைச்சு மொத்த கோபத்தையும் காட்டப் போறா. நீ அலறியடிச்சு ஓடப் போற. அதைப் பார்த்து நான் சந்தோஷப்படப் போறேன்" என்று சொல்லி விட்டு கவியரசன் சென்று விட ஆதித்யா சிந்திக்க ஆரம்பித்தான்.


"வெண்பாவ ரொம்ப கோபப்படுத்திட்டோமோ???" என யோசித்த ஆதித்யா "வெண்பா யாரு? மை வைப். அவ என்கிட்ட தானே கோபத்தை எல்லாம் காட்டப் போறா! இட்ஸ் ஓகே" என்று தன்னை தானே தேற்றி கொண்டான் ஆதித்யா.


கவியரசன்-ஸ்வேதா ரிசப்சன் வேலைகள் இருந்ததனால் தற்காலிகமாக சிந்தனைகளை நிறுத்தி விட்டு் அந்த வேலைகளைக் கவனிக்க சென்றான் ஆதித்யா.


நண்பியின் ரிசப்சன் என தன்னால் முடிந்த வேலைகளையும் மித்ரா செய்து கொண்டிருந்தாள்.


அலங்கார வேலைகள் செய்பவர்களுக்கு ஜூஸ் பரிமாறிக் கொண்டிருந்த போது அங்கு வந்த சம்யுக்தா "மித்ரா கீழே மாப்பிள்ளையோட பிரண்ட்ஸ் வந்திருக்காங்க. அவங்களையும் கொஞ்சம் கவனிச்சுக்கோமா" எனவும் "சரி ஆன்டி" என்று விட்டு கீழே சென்றாள் மித்ரா.


வந்திருந்தவர்களுக்கு கொடுப்பதற்கு வேலை பார்க்கும் ஒருவரிடம் ஜூஸ் அனுப்புகிறேன் என்று விட்டு கலையரசி செல்ல இதை அறியாத மித்ராவோ தட்டில் ஜூஸ் எடுத்து கொண்டு அவர்களை நோக்கி சென்றாள்.


அனைவரும் ஜூஸை எடுத்துக் கொள்ள அவர்களில் ஒருவன் மட்டும் மித்ராவை ஆராய்ச்சியாக பார்த்து கொண்டிருந்தான்.


"என்ன இவன் இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பார்த்ததே இல்லையா? இப்படி பார்க்குறான். பார்க்குறத பாரு ஆந்தை மாதிரி. கடன்காரன் கடன்காரன்" என மனதுக்குள் அவனுக்கு அர்ச்சித்துக் கொண்டு வெளியில் சிரித்தவாறு முகத்தை வைத்திருந்தாள்
மித்ரா.



அவள் திரும்பி செல்லலாம் என்று இரண்டு அடி எடுத்து வைக்க அவர்களில் ஒருவன் "இந்த மண்டபத்துல தான் இவ்வளவு பளிச்சென்று வேலைக்காரங்க வைச்சிருக்காங்கடா! பார்த்தா அல்ட்ரா மாடர்னா இருக்கா ஆனா வேலைக்காரியாமே!" என கூறி சிரிக்க கோபமடைந்த மித்ரா அவர்கள் அருகில் சென்று நின்றாள்.


எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தவள் அவளையே ஆரம்பத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்தவன் கையில் மாத்திரமே ஜூஸ் பாட்டில் இருக்க அந்த ஜூஸ் பாட்டிலை பிடுங்கி அவளை கேலி பண்ணியவன் முகத்தில் ஊற்ற ஏனையவர்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்......
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
super UD sis...

Ha ha... mithra.. Super ma...

Aadhi thangam... unaku vantha sathiya sothanaiyada... ha ha... Venbaku un mela love irukuda.. crctahna wire connect pana bulb earium... wrongah panuna.. maganey.. unaku fuse poirum... All the best da....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top