• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Un vizhiyil veezhnthenada-2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

AnithaKarmegam

இணை அமைச்சர்
Joined
Jan 21, 2018
Messages
711
Reaction score
1,865
Age
27
Location
Thiruvarur
அதிகாலை 3.30 மணி. லண்டன் நகரம் முழுவதும் தூக்கத்தில் இருந்தது. எங்கும் நிசப்தம் ஆனால் அந்த நிசப்தத்தை குழப்பும் வகையில் விடாமல் அடித்துக் கொண்டு இருந்தது ஆதித்யாவின் தொலைபேசி.


"ப்ச் யாருயா இந்த நடுராத்திரில போன் பண்ற நல்லவங்க" என்றவாறு சலிப்புடன் போனை எடுத்து பார்த்தவன் திரையில் ஒளிர்ந்த கவியரசன் என்ற பெயரைப் பார்த்ததும் தானாக அவன் இதழ்கள் சந்தோஷத்தில் விரிந்தது.


போனை அட்டன்ட் செய்து காதில் வைத்தவன் "சொல்லுடா அண்ணா இந்த நடுராத்திரியில் போன் பண்ணிருக்க உன் ஆளோட டூயட் பாடலயா?" என்று கேலி பண்ணிய ஆதித்யாவை நேரில் இருந்திருந்தால் கண்களாலேயே சுட்டு எரித்திருப்பான் கவியரசன்.


அது முடியாது என்று தெரிந்ததால் பெருமூச்சு ஒன்றை விட்டு விட்டு "ஏன்டா நீ வேற எரியுற நெருப்பில் எண்ணெய் அள்ளி ஊத்துற" என்றான் சலிப்போடு.கலக்கமாக பேசும் கவியரசன் குரலை கேட்ட ஆதித்யா "என்னாச்சு கவி? ஆர் யூ ஓகே??" என்று வினவினான்.


மறுமுனையில் கவியரசன் "டேய் ஆதி! ஸ்வேதா வீட்டில் மாப்பிள்ளை பார்க்குறாங்கலாம்டா. என்னடா பண்ணுறது??" என்று கேட்டதும் விழுந்து விழுந்து சிரிக்க தொடங்கினான் ஆதித்யா.


ஆதித்யா சிரிப்பதைக் கேட்டு கடுப்பான கவியரசன் "ஏன்டா என் நிலைமைய பார்த்தா உனக்கு சிரிப்பாவா இருக்கு?" என்றான் கோபமாக.

சிரிப்பதை தற்காலிகமாக நிறுத்தி விட்டு ஆதித்யா "சரி சரி கடுப்பாகாதடா அண்ணா இப்ப என்ன ஸ்வேதாக்கு மாப்பிள்ளை பாக்குறாங்க அதானே உன் பிரச்சினை. ஸ்வேதா வீட்டில் போய் பெண் கேளு அத விட்டுட்டு சின்ன புள்ளயாட்டம் கண்ண கசக்குற ஆம்பிள புள்ள அழலாமா?. கண்ணத்துட" என்று சைக்கிள் கேப்பில் அவனை வாரினான்.


மறுமுனையில் கவியரசனோ "நான் மட்டும் போய் பேசுனா ஏத்துப்பாங்களாடா ஆதி?" என்று வினவினான்.
ஆதியோ கடுப்புடன் "உன்ன மட்டும் யாருடா போக சொன்ன என் அறிவு அண்ணா அம்மா அப்பாவ கூட்டிட்டு போய் கேளுடா" என்றான்.



"ஐயோ!!! அம்மா அப்பாகிட்ட எப்படிடா நான் லவ் பண்றனு சொல்லுறது? உனக்கு தான் தெரியுமே என்ன பத்தி அம்மாகிட்ட கூட பேசிடலாம் ஆனா அப்பா....அவர பாத்தலே எனக்கு பேச்சு வராது அப்புறம் எப்படிடா? நினைச்சு கூட பார்க்க முடிலடா" என்றான் கவியரசன்.

"அப்போ ஸ்வேதா கல்யாணத்துக்கு போய் முதல் பந்தில உக்காந்து நல்லா சாப்பிட்டு 'எங்கிருந்தாலும் வாழ்க'னு கச்சேரி நடத்து போ" என்றான் ஆதித்யா. கலவரமடைந்த கவியரசன் "அப்படிலாம் சொல்லதடா ஸ்வேதா இல்லனா என்னால வாழ முடியாதுடா" என்றான். "அப்போ வேற என்னதான்டா பண்ணனும்? நீயும் சொல்லமாட்ட சரி போகட்டும்னும் விட மாட்ட. நடுராத்திரில போன் பண்ணி ஏண்டா கொல்லுற" என்று சலித்து கொண்டான் ஆதித்யா.


"இல்லடா ஆதி நீ அப்பாகூட நல்லா எல்லாமே பேசுவ.அப்பா எதிர்ல நின்னு பேசுற தைரியம் உனக்கு மட்டும் தான்டா இருக்கு நம்ம வீட்டுல. அப்படியே இந்த லவ் மேட்டரயும் வீட்ல சொல்லி சம்மதிக்க வைக்கனும் ப்ளீஸ் ஆதி" என்று கெஞ்சி கொண்டிருந்தான் கவியரசன்.

இதழில் தவழ்ந்த இளநகையோடு "ஏண்டா இத ஆரம்பத்திலேயே சொல்லிருந்தா இவ்வளவு நேரம் வேஸ்ட் ஆகி இருக்காதுலே" என்றான் ஆதித்யா.


"சரிடா நீ அப்போ அப்பாகிட்ட பேசுவ தானே?" என்று வினவினான் கவியரசன். "டேய் அண்ணா!! நான் இன்னும் இரண்டு நாள்ல ஊருக்கு வந்துடுவன். வந்ததும் முதல் வேலையே இதுதான் போதுமா?? இப்ப போய் நிம்மதியா அண்ணியோட டூயட் பாடு போ" என்றான் ஆதித்யா.


"தாங்ஸ்டா ஆதி ரொம்ப ரொம்ப தாங்ஸ்" என்ற கவியரசனுக்கு பதிலாக ஒரு சிரிப்பை பரிசளித்து போனை கட் செய்து விட்டு மறுபடியும் தன் கடமையை தொடர்ந்தான் ஆதித்யா.


நம்ம ஹீரோ தூங்கி எழும்ப முதல் ஹீரோவ பற்றிய அறிமுகம்.


சென்னை உயர்நீதிமன்றில் 35 வருடங்களாக நீதிபதியாக கடமையாற்றி சென்ற மாதம் தான் ரிடையர் ஆகினார் பிரபல நீதிபதி வெங்கடாசலம். வெளியிலும் சரி வீட்டிலும் சரி மிகவும் கண்டிப்பானவர்.ஆனால் அவரின் கட்டுப்பாட்டினை மீறக்கூடிய வல்லமை நிறைந்தவன் நம்ம ஹீரோ ஆதித்யா விக்ரம்.


வெங்கடாசலத்தின் மனைவி கலையரசி. கணவன் மற்றும் பிள்ளைகளின் வாக்கே அவருக்கு தெய்வ வாக்கு. வீடு,கோவில் இரண்டும் தான் அவரது உலகம்.

அவர்களது முதல் வாரிசு கவியரசன். வெகு அமைதியானவன். B.E முடித்து விட்டு சொந்தமாக VK PVT.Ltd கன்ஸ்டரக்ஷன் எனும் கம்பெனியை நடத்தி வருகிறான். ஒரு நாள் கன்ஸ்டரக்சஷன் வேலையாக சென்ற போது தற்செயலாக ஸ்வேதாவை சந்திக்க நேர்ந்தது.பின்பு காதலாக மலர்ந்து இப்போது தள்ளாடிக் கொண்டிருக்கிறது ஆதித்யாவின் உதவியை நாடி. ஆதித்யா விக்ரம் கவியரசனுக்கு நேர் எதிரானவன். எதையும் அதிரடியாக செயல்படுத்துபவன். ஆறடி உயரத்தில் கட்டுக்கோப்பாக உடலை வைத்து இருக்கும் (ஆணழகன்லாம் ஓவரோ) அழகன். எப்போதும் இதழில் புன்னகையோடு வலம் வருவான். இந்த புன்னகைக்காகவே அவனுக்கு ரசிகைகள் ஏராளம். ஆனால் இது வரை எந்த பெண்ணும் அவன் மனம் கவரவில்லை என்பது தான் அதிசயம். மேற்படிப்புக்காக லண்டன் சென்று தற்போது படிப்பை முடித்து விட்டு தாய்நாடு திரும்பி தன் அண்ணணோடு பிஸ்னஸ் பார்ட்னராக சேர உள்ளான்.


இரண்டு நாட்களில் தாயகம் வரும் ஆதித்யாவிற்கு எத்தனை சர்ப்பரைஸ் காத்திருக்கிறதோ பார்க்கலாம்......View attachment 3540
nyc hero...:p
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top