• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Un vizhiyil veezhnthenada-27

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
சென்ற udக்கு லைக், கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி!!! நன்றி!! :giggle::giggle::giggle:


ஆதித்யாவை அங்கு எதிர்பார்க்காத வெண்பா அதிசயித்து போய் நிற்க ஆதித்யாவோ வெகு நாட்களுக்குப் பிறகு நேருக்கு நேராக வெண்பாவைப் பார்த்த மகிழ்ச்சியில் இருந்தான்.


"கம் இன்" என்ற வெங்கட்ராமனின் அழைப்பில் நடப்புக்கு வந்தவள் அவர்களுக்கு முன் போய் அமர்ந்து கொண்டாள்.


வெங்கட்ராமன் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் எவ்வித பதட்டமோ, படபடப்போ இன்றி பதிலளித்தவள் ஆதித்யாவை மறந்தும் கூட திரும்பி பார்க்கவில்லை.


ஆனால் ஆதித்யாவோ வெண்பாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.


எளிமையான ஆகாய நீல நிற காட்டன் புடவையில் இடை வரை நீண்டிருந்த கூந்தலை பின்னலிட்டு வந்திருந்தாள் வெண்பா.


தன் மனைவியின் அழகை கண்களால் ஆசை தீர ரசித்து கொண்டிருந்தான் ஆதித்யா.


ஆதித்யாவின் பார்வை தன் மேல் தான் இருக்கிறது என்பதை உணர்ந்த வெண்பா அவனை நேர் கொண்டு பார்க்க தயங்கினாள்.


வெங்கட்ராமன் வெண்பாவிடம் "சரிமா வெண்பா. நீங்க போய் வெளியில் வெயிட் பண்ணுங்க. ஒரு அரை மணி நேரம் கழித்து யாரு செலக்ட்னு என்னோட பி.ஏ வந்து சொல்லுவாறு" எனவும்


"ஓகே ஸார் தாங்க்ஸ்" என்று விட்டு வெண்பா வெளியேற அவளை தொடர்ந்து ஆதித்யாவும் வெளியேறி செல்ல எழுந்தான்.


"என்ன ஆதி!!! வைப்ப பிரிஞ்சு ஐந்து நிமிஷம் கூட இருக்க முடியலயோ?" என்று கேட்க


"அங்கிள் உங்களுக்கு எப்படி தெரியும்??? வெண்பா என்னோட வைப்னு. நீங்க என் மேரேஜ்க்கு கூட வரலயே?" என்று சந்தேகமாக கேட்க


"மேரேஜ்க்கு தான் என்னால வர முடியல. கேஸ் விஷயமாக மும்பை போயிட்டேன். ஆனா ரிசப்சனுக்கு வந்தேனே. நீ தான் கவனிக்கல. உன் கவனமெல்லாம் வேற எங்கேயோ இருந்துச்சே" என்று வெங்கட்ராமன் கூற


"அப்படி எல்லாம் இல்லை அங்கிள்" என்று வெட்கப்பட்டவாறே ஆதித்யா கூற


" அடடே ஆதி வெட்கமெல்லாம் படுற போல" என்று கூறி வெங்கட்ராமன் சிரித்தார்.


"அப்போ அதனாலதான் என்ன நீங்க இண்டர்வியூவ பார்க்க இருக்க சொன்னீங்களா?" என்று ஆதித்யா கேட்க


"ஆமா உன் ஆபீஸ் இருக்குறது அந்த சைட். நீ இந்த வழியா வேலைனு சொன்னதுமே புரிஞ்சுடுச்சு. நானே ஊரை விட்டு தள்ளி இவ்வளவு தூரத்துல தான் ஆபீஸ் கட்டியிருக்கேன். இந்த ஏரியால உனக்கு வேர்க்கா?? படவா" என்றவாறு ஆதித்யாவின் காதை அவர் பிடிக்க


"பரவாயில்லையே அங்கிள் நல்லா கெஸ் பண்ணுறீங்க. லாயர்னு நிருபிச்சுட்டீங்க. வெல் டன்" என்றவாறு அவர் பிடியிலிருந்து விலகி கொண்டவன்


"அப்போ நான் என் வைப் கூட போய் பேசிட்டு இருக்கேன். உங்களுக்கு தான் தெரிஞ்சுடுச்சே நான் எதற்காக வந்தேனு. இனி தெரியாத மாதிரி காட்டிக் கொள்ள தேவையில்லை தானே. பாய் அங்கிள்" என்று கூறி விட்டு வெண்பாவைக் காண விரைந்து சென்றான்.


வெங்கட்ராமன் சிரித்துக்கொண்டே அவர் வேலைகளை கவனிக்க தொடங்கினார்.


வெளியில் வந்து அமர்ந்த வெண்பா அவள் தலையை பிய்க்காத குறையாக யோசித்து கொண்டிருந்தாள்.


"விக்ரம் எப்படி இங்க?? ஏதும் வேலையா வந்துருப்பாரோ? வேலையா வந்தா இண்டர்வியூ நடக்கும் போது அங்க எப்படி வர முடியும்? அவர் லாயர் இல்லையே! எப்படி வந்துருப்பாரு? எதற்காக வந்துருப்பாரு?" என்று பலவாறாக யோசித்து கொண்டிருந்தாள் வெண்பா.


வெளியில் வந்த ஆதித்யா சேரில் அமர்ந்து கொண்டு நகத்தை கடித்தவாறு கடுமையாக யோசித்து கொண்டிருந்த வெண்பாவைப் பார்த்து சிரித்துக் கொண்டவன் அவள் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.


ஆதித்யா வந்து அருகில் அமரவும் நிமிர்ந்து பார்த்த வெண்பா "நீங்க இப்படி எங்க? எதுக்கு வந்தீங்க? ஏன் வந்தீங்க? எப்படி வந்தீங்க?" என்று கேட்க


அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஆதித்யா "இவ்வளவு நீளமாக என்கூட பேச இப்போ தான் உனக்கு மனசு வந்ததா வெண்பா?" என்று கேட்க வெண்பாவிற்கு மனதினுள் சுருக்கென்று இருந்தது.


"அப்படி எல்லாம் இல்லை. இண்டர்வியூக்கு ரெடி ஆகுறதுக்காக தான் பேச டைம் கிடைக்கல. மத்தபடி வேணும்னு நான் பண்ணல" என்று வெண்பா கூறவும்


"ஓஹ்....அப்போ அம்மாகிட்ட, வீட்ல வேலை செய்ற பாட்டிகிட்ட, தோட்டகாரன் கிட்ட எல்லாம் பேச டைம் இருக்கா?" என்று ஆதித்யா கேட்க என்ன சொல்வது எனப் புரியாமல் விழித்தாள் வெண்பா.


"அதை விடு இன்னைக்கு இண்டர்வியூ போறத எல்லார்கிட்டயும் சொல்லிட்டு வந்துருக்க. அத கூட என்கிட்ட சொல்லத் தோணலயா உனக்கு?" என்று ஆதித்யா வருத்தமாக கேட்க வெண்பாவிற்கு பேச நா எழவில்லை.


"சொல்லு வெண்பா எதற்காக இப்படி என்ன அவாய்ட் பண்ணுற? உன் கூட நான் பேசுறது, பழகுறது உன்ன ஹேர்ட் பண்ணுதுனா சொல்லிடு. இப்படி அவாய்ட் பண்ணாத. எதுவா இருந்தாலும் ஓபனா சொல்லு. கமான் சொல்லு. என்ன உன் ப்ராப்ளம். டெல் மீ டெல் மீ ரைட் நவ்" என்று ஆதித்யா கேட்டு கொண்டே இருக்க


பொறுமை இழந்த வெண்பா "நீங்க தான் ப்ராப்ளம்" என்று சத்தம் போட்டு கத்தினாள்.


வெண்பாவின் சத்தம் கேட்டு எல்லோரும் திரும்பி பார்க்க தன்னை சுதாரித்துக் கொண்ட வெண்பா "ஸாரி ஸாரி" என்றவாறு வெளியே செல்ல அவளைத் தொடர்ந்து ஆதித்யா சென்றான்.
 




Last edited:

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
வெளியில் ஒரு மரத்தின் கீழ் சென்று நின்று கொண்ட
வெண்பா நீண்ட மூச்சுகளை எடுத்து விட்டு தன்னை சமன் செய்து கொண்டிருந்தாள்.


வெண்பாவின் எதிரில் வந்து நின்ற ஆதித்யா "நான் உன்னை என்ன பண்ணுணேன் வெண்பா" என்று புரியாமல் கேட்க


அவனை நேர் கொண்டு பார்த்த வெண்பா "உங்கள பார்த்தா நான் நானாகவே இருக்க முடியல. என்னையே மறந்துடுறேன். எந்த விஷயத்தையும் கவனிக்க முடியல. உங்க ஞாபகமாகவே இருக்கும். அதனால தான் உங்கள விட்டு விலகி விலகி போறேன். நீங்க பக்கத்தில் வார ஒவ்வொரு செக்கனும் நான் என்ன பீல் பண்ணுறேனு புரியல. இன்பாக்ட் நான் என்ன எதிர்பார்க்குறேனு எனக்கே தெரியல" என்று உள் வாங்கிய குரலில் கூறியவளை இழுத்து அணைத்துக் கொண்டான் ஆதித்யா.


"இதுக்கு தான் இப்படி ஓடி ஒளிஞ்சுக்கிட்டியா?? இதை நீ என் கிட்ட நேரடியாகவே சொல்லி இருக்கலாமே. நீ என்னை அளவுக்கதிகமாக நேசிக்குற. அதனால தான் இப்படி எல்லாம் யோசித்து உன்னை நீயே குழப்பிக்குற. எதுவாக இருந்தாலும் நீ என் கிட்ட நேரடியாகவே பேசுனா எந்த குழப்பமும் வராது. இனி கண்டதையும் யோசித்து உன் மண்டைய உடைச்சுக்குதா சரியா?" என்று ஆதித்யா கேட்க


"ம்ம்ம்ம்" என்று கூறிய வெண்பா அவன் மேல் இன்னும் நன்றாக சாய்ந்து கொண்டாள்.


"மை டியர் வெண்பா!! இப்படியே நின்னுட்டு இருந்தா நான் ஆபீஸ் போக வேணாமா?" என்று ஆதித்யா கேட்க


நிமிர்ந்து அவனை பார்த்து சிரித்தவள் அவனது கன்னத்தில் பட்டும் படாமலும் முத்தமிட்டு விட்டு ஓடி சென்றாள்.


வெண்பா முத்தமிட்டு சென்ற கன்னத்தை தடவி கொண்ட ஆதித்யா மனம் முழுவதும் சந்தோஷச் சாரல் வீசியது.


உள்ளே வந்து அமர்ந்த வெண்பாவை வெட்கம் பிடுங்கி தின்ன தன்னாலே சிரித்துக் கொண்டு இருந்தாள்.


இது நாள் வரை அவர்களுக்கு இடையில் இருந்த திரை நீங்கி விட்டதைப் போல உணர்ந்தாள் வெண்பா.


வெங்கட்ராமனின் பி.ஏ வந்து எல்லோரையும் உள்ளே அழைத்து சென்று விட மனம் நிறைந்த மகிழ்வுடன் ஆபீஸ் நோக்கி சென்றான் ஆதித்யா.


வெங்கட்ராமன் பொதுவாக எல்லோருக்கும் சில அறிவுரைகள் வழங்கி விட்டு


"ஏற்கனவே என்கிட்ட ஐந்து பேர் அசிஸ்டண்டா வேரக் பண்றாங்க. இன்னும் மூன்று பேர் எக்ஸ்ட்ராவா இருந்தா வேர்க் டென்சன் குறையும்னு தான் இந்த இண்டர்வியூ. இங்க வந்த எல்லாரும் நல்லா பண்ணுணீங்க. பட் இப்போ மூணு பேரைதான் செலக்ட் பண்ணிருக்கோம். யார் யார்னா மாதவ், வெண்பா அண்ட் குணா. மத்தவங்க நல்லா பண்ணலனு இல்ல. இவங்க கொஞ்சம் எக்ஸ்ட்ரா குவாளிபிகேஷனோட இருக்காங்க. எனி வே ஆல் தி பெஸ்ட் எவ்ரி வன்" என்று கூறியவர்


"நீங்க மூன்று பேரும் வாங்க" என்று அழைத்து சென்றார்.


உள்ளே ஒரு ஹாலில் மேஜை போடப்பட்டிருக்க அதைச் சூழ ஐந்து பேர் அமர்ந்து ஏதோ மும்முரமாக பேசிக் கொண்டிருந்தனர்.


அவர்களில் ஒருவர் வெங்கட்ராமன் வருவதைப் பார்த்து விட்டு "ஹேய் ஸார் வராரு" என்று கூற அனைவரும் எழுந்து நின்றனர்.


வெண்பாவின் மனதோ எல்லையில்லா ஆனந்தத்தில் இருந்தது.


ஆதித்யாவுடனான உறவு சீரான மகிழ்ச்சி ஒரு புறம், தன் சிறு வயது கனவு நிறைவேறிய சந்தோஷம் ஒரு புறம் என ஆனந்த வெள்ளத்தில் நீந்தி கொண்டிருந்தாள் வெண்பா.


"ஹலோ பசங்களா!!! இவங்க தான் நம்ம நியூ ஜாயினிஸ்" என்று மற்றவர்களிடம் கூறியவர் இவர்களின் புறம் திரும்பி


"இவங்க எல்லாம் உங்களுக்கு சீனியர்ஸ். ஏதும் டவுட்னா இவங்க கிட்ட டிஸ்கஸ் பண்ணிக்கலாம். ஓகே" என்று விட்டு வெங்கட்ராமன் போன் வரவும் வெளியே சென்று விட


"ஹாய் ஐ யம் மாதவ்" என்று புதிதாக வந்தவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.


"ஐ யம் மாயா" என்று ஒருவரும்
"ஐ யம் ஹரிஷ்"
"ஹாய் ஐ யம் சரண்"
"ஐ யம் தனா" என்று ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.


"உங்க இரண்டு பேர் நேமும் சொல்லவே இல்லையே" என்று ஐவரில் நல்ல உயரமாக கம்பீரமான தோற்றத்தோடு நின்ற ஒருவர் கேட்க புதியவர்கள் குழப்பமாக அவனைப் பார்த்தனர்.


"வை இப்படி கன்பியூஸிங்கா பார்க்குறீங்க?? ஓஹ்...நான் என் நேம் சொல்லலயோ. மை நேம் இஸ் சூர்யா" என்று கூறியவனின் பார்வை வெண்பாவின் மேலேயே இருந்தது.


வெண்பா புன்னகத்தவாறே " ஐ யம் மிஸஸ். வெண்பா ஆதித்யா விக்ரம்" என்று கூற சூர்யாவின் முகம் ஒரு கணம் துணுக்குற்றாலும் தன்னை உடனே சரி செய்து கொண்டான்.


ஒவ்வொருவரும் அவரவர்களைப் பற்றி பொதுவாக பேசி கொண்டிருக்க வெண்பா தன் போனை எடுத்து ஆதித்யாவிற்கு அழைத்தாள்.


பலமுறை ரிங் போன பின்பும் ஆதித்யா அழைப்பை எடுக்காமல் இருக்க சோர்வுடன் போனைப் பார்த்தவள் மஞ்சுளா, கோபால கிருஷ்ணனிடம் அழைத்து வேலை கிடைத்து விட்ட செய்தியைப் பகிர்ந்து கொண்டாள்.


வெண்பா வந்தது முதல் சூர்யாவின் பார்வை வெண்பாவையே அளந்து கொண்டிருந்தது.


இதை அறியாத வெண்பாவோ சந்தோஷமாக போனில் பேசி கொண்டிருந்தாள்.


மறுபடியும் ஆதித்யாவிற்கு அழைத்து பார்த்தவள் அவன் எடுக்காமல் போகவே குழப்பமடைந்தாள்.


"ஏன் போன் அட்டன்ட் பண்ணுறார் இல்லை. ஏதும் பிரச்சினையோ?" என்று யோசித்தவள்


"ப்ளீஸ் கால் மீ" என மேசேஜ் ஒன்றை அனுப்பி வைத்தாள்.


வெகு நேரமாக வெண்பாவையே பார்த்து கொண்டிருந்த சூர்யா வெண்பா அருகில் வந்து "ஹாய்!!!" என்று கூற வெண்பாவும் புன்னகத்தவாறே அவனுடன் பேசத் தொடங்கினாள்.


சூர்யாவோ அவளை வைத்த கண் வாங்காமல் ரசித்து கொண்டிருக்க இதை அறியாத வெண்பாவோ சாதாரணமாக
எல்லோருடனும் பேசிக்கொண்டு இருந்தாள்.


தன் வாழ்வே இனி வரும் நாட்களில் தத்தளிக்கப் போகிறது என்பதை அறியாமல் அளவு கடந்த மகிழ்வோடு சிரித்துக் கொண்டு இருந்தாள் வெண்பா......
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top