• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Un vizhiyil veezhnthenada-29

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
ஸ்கூட்டரை பார்க் செய்து விட்டு ஆபீஸினுள் நுழைந்த வெண்பா முதலில் சூர்யாவை தான் தேடினாள்.


அவனை எங்கும் காணாமல் போகவே "ஒரு வேளை நான் திட்டுனத மனசுல நினைச்சுக்கிட்டு இன்னைக்கு வராம விட்டுட்டாரோ?" என யோசித்தவள்


"சேச்சே!!! அப்படிலாம் இருக்காது. வேற யார்கிட்டயும் சூர்யா வந்துருக்காரானு கேட்டு பார்ப்போம்" என்று நினைத்தவள் மாதவ் அருகில் சென்றாள்.


"மாதவ் நீங்க சூர்யாவை பார்த்தீங்களா?" என்று கேட்க


"ஆமா பார்த்தேனே. ஸார் கூப்பிட்டாருனு இப்போ தான் அங்க போனாரு" எனவும்


"ஓஹ்....அப்படியா சரி" என்று விட்டு போய் தன் இருக்கையில் அமர்ந்து கொண்டாள் வெண்பா.


சிறிது நேரத்தில் வெங்கட்ராமனின் அறையில் இருந்து வந்த சூர்யா "வெண்பா, மாதவ் உங்க இரண்டு பேரையும் ஸார் கூப்பிடுறாரு" எனவும்


"எதற்காக கூப்பிட்டாரு??" என்ற கேள்வியோடு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு இருவரும் வெங்கட்ராமனின் அறையை நோக்கி சென்றனர்.


"இரண்டு பேரும் வந்து இப்படி உட்காருங்க" என்று வெங்கட்ராமன் கூறவும் இருவரும் போய் அமர்ந்து கொண்டனர்.


"ஒரு கேஸ் ஒண்ணு வந்துருக்கு. வெரி கான்பிடன்சியல். நான் சூர்யாகிட்ட இந்த கேஸ் விஷயமாக டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தப்போ இதுல ஹெல்ப் பண்ண யாரை போடுறதுனு யோசிச்சோம். அப்போ தான் நியூ ஜாயினிஸை போடலாம்னு சூர்யா ஐடியா தந்தாரு. சோ உங்களுக்கு முதல் டியூட்டி இந்த கேஸ் தான்" என்று
வெங்கட்ராமன் கூற


"ரொம்ப தாங்க்ஸ் ஸார். பட் எங்கள விட சீனியர்ஸ் இருக்காங்களே. அவங்க ஏதாவது நினைக்க மாட்டாங்களா?" என்று மாதவ் தயக்கமாக கேட்டான்.


"புதுசா ஜாயின் பண்ணவங்களுக்கும் சான்ஸ் கொடுக்கணும்லே. அது மட்டுமில்லாம உங்க சீனியர்ஸ் அப்படி எதுவும் நினைக்க மாட்டாங்க" என்று சூர்யா கூறவும்



"ஓகே வேற எதுவும் டவுட் இல்ல தானே. இதோ இருக்குது பைல். இந்த கேஸை ரொம்ப கேர்புல்லா ஹேண்டில் பண்ணணும். நிறைய பொலிடிகல் பேர்சன்ஸ் இன்வால்வ் ஆகி இருக்காங்க. சோ கேர்புல். வேற எதுவும் டவுட்னா சூர்யாவோட நீங்க டிஸ்கஸ் பண்ணலாம் ஓகே" என்று வெங்கட்ராமன் கூறி விட்டு பைல்களை சூர்யாவிடம் கொடுத்தார்.


"ஓகே ஸார்" என்று விட்டு மூவரும் வெளியே வந்தனர்.


வெண்பா சூர்யாவிடம் பேச முயற்சித்த போதும் சூர்யாவோ மாதவுடன் மாத்திரம் பேசிக் கொண்டு வந்தான்.


எப்படியாவது சூர்யாவிடம் மன்னிப்பு கேட்டு விட வேண்டும் என்று நினைத்தவள் "சூர்யா அண்ணா ஒரு நிமிஷம்" எனவும் சட்டென்று நின்றான் சூர்யா.


"அண்ணாவா????" என்று ஆச்சரியமாக சூர்யா கேட்க
"ஆமா நீங்க என்னை விட சீனியர். சோ அண்ணா தானே" என்று வெண்பா கூறவும்


மாதவின் புறம் திரும்பி "நீங்க அங்க போய் வெயிட் பண்ணுங்க. நான் இப்போ வரேன்" என்று சூர்யா கூற சரியென்று விட்டு சென்றான் மாதவ்.


"என்னை என்ன சொல்லி கூப்பிட்ட?" என்று சூர்யா அவளை ஊடுருவுவது போல் பார்த்தவாறு கேட்கவும்


அவன் கேட்ட தோரணையில் சிறிது மிரண்டு போன வெண்பா "அண்...ணா...அண்ணா னு கூப்பிட்டேன்" என்று தயங்கி தயங்கி கூற


அவளை பார்த்து சிரித்த சூர்யா "யாரும் மிரட்டுற மாதிரி பேசுனா இப்படி தான் பயப்படுவீங்களா? லாயர்னா தைரியமாக பேசணும். நீங்க என்னடானா ஸ்கூல் பசங்க மாதிரி பயப்படுறீங்களே!!" என்று கூறவும் அவனைக் குழப்பமாக பார்த்தாள் வெண்பா.


"ஹலோ மேடம்!!! என்ன இப்படி அடிக்கப் போறவங்க மாதிரி பார்க்குறீங்க. சும்மா விளையாட்டுக்கு தான் அப்படி கேட்டேன். நீங்க என்னை இனி அண்ணானே கூப்பிடலாம் நோ ப்ராப்ளம்" என்று சூர்யா கூறவும் சிரித்த வெண்பா


"கொஞ்ச நேரத்துக்குள்ள என்னை இப்படி கதி கலங்க வைச்சுட்டீங்களே!! நான் சொல்ல வந்த விஷயமே வேற. நேற்று ஏதோ டென்ஷன்ல அப்படி கோபமாக பேசிட்டேன். எதையும் மனசுல வைச்சுக்காதீங்க. மன்னிச்சுக்கங்க" என்று கூற


"முடியாது மன்னிக்க மாட்டேன்" என்று சூர்யா கூறவும் கவலையுடன் அவனைப் பார்த்தாள் வெண்பா.


"தங்கச்சி திட்டுறத எல்லாம் யாரும் பெரிதாக எடுத்துப்பாங்களா?" என்று சூர்யா கூறவும் ஆச்சரியத்துடன் புன்னகத்து கொண்ட வெண்பா


"ஓகே அண்ணா நான் வரேன்" என்று அண்ணா என்ற வார்த்தையை அழுத்தி சொல்லி விட்டு சென்றாள் வெண்பா.


வெண்பா செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த சூர்யா மனதினுள் "ஐ யம் ஸாரி வெண்பா. உன்னை பெர்ஸ்ட் டைம் பார்த்ததும் ஏதோ ஒரு அட்ராக்ஷன் எனக்கு வந்துச்சு. அது தப்புனு தெரிஞ்சும் உன்னை பார்த்துட்டே இருந்தேன். நீ கோபமாக பேசவும் தான் நான் என் சுய நினைவுக்கே வந்தேன். எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டேன். நீ மேரேஜ் ஆனவனு தெரிஞ்சும்...சே..." என்று தன்னையே கடிந்து கொண்டவன்


"இந்த விஷயத்தை இதோட மறந்துறனும். இனி இதைப் பற்றி யோசிக்கவே கூடாது. வெண்பா எனக்கு இன்னொரு தங்கச்சி மாதிரி. நான் பண்ணுண தப்பு வெண்பாவிற்கு தெரிந்தால் கண்டிப்பாக என்னை வெண்பா மன்னிக்கமாட்டா. இதோட எல்லாவற்றையும் விட்டுறனும். நேற்று நடந்தது முடிந்து போன விஷயமாக போகட்டும்" என நினைத்து கொண்டவன் அந்த சிந்தனைகளை ஒதுக்கி வைத்து விட்டு கேஸ் விடயமாக யோசிக்கத் தொடங்கினான்.


மாலை 3 மணியளவில் சென்னை ஏர்போர்டில் ஸ்வேதா மற்றும் கவியரசன்
வந்து இறங்கினர்.


ஸ்வேதாவை அவ்வப்போது கவியரசன் சீண்டிக் கொண்டே வர அவனது சீண்டலில் முகம் சிவந்து போனாள் ஸ்வேதா.


"ஐயோ!! போதும் கவி. இது ஏர்போர்ட் நம்ம வீடு இல்லை. பிக்அப் பண்ண கார்ல ஆதி அண்ணா வெயிட் பண்ணிட்டு இருப்பாரு" என்று கூற


"அதெல்லாம் அவன் வெயிட் பண்ணுவான். ஒண்ணும் அவசரமில்லை" என்று கூறிக்கொண்டே ஸ்வேதாவை தோளோடு சேர்த்து கவியரசன் அணைத்துக் கொண்டான்.


"ஐயோ!! கவி உங்க கூட ரொம்ப தொல்லை. அங்கேயும் ஒரு நிமிஷம் கூட சும்மாவே இருக்கல நீங்க. ஒரு இடத்தை கூட முழுசா சுற்றி பார்க்கவே விடல" என்று அலுத்துக் கொண்டாள் ஸ்வேதா.


"அங்கே சும்மா பேசிட்டு, சுற்றி பார்க்குறதுக்காகவா போனோம்?" என்ற கவியரசனை ஸ்வேதா நிமிர்ந்து பார்க்க அவன் பார்வை சொன்ன செய்தியை விளங்கி கொண்டவள் முகம் சிவந்து போனாள்.


"ஹாய்!!! கவி" என்றவாறு அவர்கள் அருகில் ஆதித்யா வரவும்


"ஹாய் டா" என்ற கவியரசனைப் பார்த்து சிரித்த ஆதித்யா


"மறுபடியும் தொந்தரவு பண்ணிட்டேனோ?" என்று கேட்கவும்


"அது தான் தெரியுதுலே!! போடா!!" என்று கவியரசன் அவன் தோளில் தட்டவும் சிரித்துக் கொண்டே அவர்களுடன் இணைந்து நடந்தான்.


"அண்ணா வெண்பா வரலயா?" என்று ஸ்வேதா கேட்கவும்


"அவ ஆபீஸ் போயிட்டாமா. அவ வரேனு தான் சொன்னா. நான் தான் வேலைக்குச் சேர்ந்த அடுத்த நாளே லீவு போட வேணாம்ணு சொன்னேன்" என்று ஆதித்யா கூற


"ஓஹ்....சரிண்ணா" என்ற ஸ்வேதாவின் முன்னால் வந்து நின்ற ஆதித்யா


"எனக்கு ஒரு டவுட். இப்போவே இங்கேயே கிளியர் பண்ணணும்" என்று ஆதித்யா கூற


"என்னடா அப்படி ஒரு டவுட்?" என்று கவியரசன் கேட்க


"ஸ்வேதாக்கு நீ என்ன உறவு முறை?" என்று ஆதித்யா கேட்கவும் அவனை விசித்திரமாக கவியரசனும், ஸ்வேதாவும் பார்த்தனர்.


"என்னடா லூசு தனமாக கேள்வி கேட்குற? நான் அவளோட ஹஸ்பன்ட்" என்று கவியரசன் கூறவும்


"ஸ்வேதா என்னை அண்ணானு தானே கூப்பிடுறாங்க. நீ என்னோட அண்ணன். சோ அண்ணணோட அண்ணாவும் அண்ணா தானே" என்று ஆதித்யா கேட்க


"யப்பா சாமி!!! எத்தனை அண்ணா???" என்று தலையில் கவியரசன் கை வைக்கவும்


அவனது கைகளை எடுத்து விட்ட ஆதித்யா "முதல்ல நான் கேட்ட கேள்விக்கு பதிலை சொல்லுடா?" என்று விட்டு


"அப்போ நீயும் ஸ்வேதாக்கு அண்ணா தானே?" என்று யோசிப்பது போல ஆதித்யா நிற்க


"யப்பா சாமி!! ஏன்டா?? குடும்பத்தில் கும்மியடிக்க பார்க்குற? இப்போ என்ன உன்னை ஸ்வேதா அண்ணானு கூப்பிடுறதுக்கு ரீசன் வேணும் அது தானே?? அப்போ வெண்பாவும் என்னை அண்ணானு தானே கூப்பிடுறா? அப்போ நீ வெண்பாவுக்கு அண்ணணா?" என்று கவியரசன் கேட்க திருட்டு முழி முழித்த ஆதித்யா


"ஐயோ!!! லேட் ஆகுது டைம்மை பாரு. வீட்ல எல்லாரும் வெயிட் பண்ணுவாங்க. வாங்க வாங்க போகலாம் டைம் ஆச்சு" என்று விட்டு முன்னே நடந்து செல்ல


"எப்படி எஸ்கேப் ஆகுறான் பார்த்தியா?? ஒரு கேள்வி கேட்டதும் நிற்காம ஓடுறான். சரியான கேடி இவன்" என்று கூறி சிரித்துக் கொண்டே காரை நோக்கி மூவரும் சென்றனர்.


ஆதித்யாவின் கார் வீட்டினுள் உள் நுழையும் போது வெண்பாவும் வீடு வந்து சேர்ந்தாள்.


வெண்பாவைக் கண்ட ஸ்வேதா ஓடி வந்து அவளை கட்டி கொண்டாள்.


"என்ன மேடம் வன் வீக் புல் என்ஜாயா?" என்று வெண்பா ஸ்வேதாவை பார்த்து கேட்க


"போடி" என்று ஸ்வேதா வெட்கப்பட தோழிகள் இருவரும் சேர்த்து வைத்த கதை அனைத்தையும் பேசிக் கொண்டே வீட்டுக்குள் சென்றனர்.


"இந்த பொண்ணுங்களே இப்படி தான். கட்டின புருஷன் குத்துக்கல்லாட்டம் நிற்குறேன். ப்ரண்ட பார்த்ததும் நம்மள கண்டுக்காமலே போறாளே. குத்துங்க எஜமான் குத்துங்க" என்று ஆதித்யா கூறவும்


அவன் கைகளில் ஒரு பையைத் தூக்கி வைத்த கவியரசன்

"டயலாக் விட்டது போதும் பேக்கை தூக்கிட்டு வா. நம்ம நிலைமை இது தான்" என்று விட்டு செல்ல அவன் பின்னால் முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு சென்றான் ஆதித்யா.
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
வீட்டினுள் சென்ற வெண்பாவும், ஸ்வேதாவும் கலையரசியுடன் பேசிக் கொண்டிருக்க அதை பார்த்த ஆதித்யா


"இன்னைக்கு இவங்க பேசி முடிக்க மாட்டாங்க. நம்ம எல்லாரும் வயித்துல ஈரத்துணியை கட்டிட்டு இருக்க வேண்டியது தான்" என்று போலியாக அலுத்துக் கொள்ள கவியரசனோ ஸ்வேதாவையே பார்த்து கொண்டு நின்றான்.


கவியரசன் எதுவும் பேசாமல் இருக்கவும் திரும்பி பார்த்த ஆதித்யா கவியரசனின் தலையில் தட்டி விட்டு


"ஏன்டா இங்க ஒருத்தன் தொண்டை தண்ணீர் வற்ற புலம்பிட்டு இருக்கேன். நீ ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கியா?" என கேட்கவும்


"எதையோ பார்த்து ஏதோ குரைச்சா அதோட வாய் தான் வலிக்குமாம். சோ நான் எதுக்கு கவலைப்படணும்?" என்று கவியரசன் கேட்கவும்

"அப்போ என்னை பார்த்தா அப்படி தெரியுதா உனக்கு?" என்று ஆதித்யா முறைத்து கொண்டு கேட்க


"தம்பி சில நேரம் உண்மை கசக்க தான் செய்யும் வேற வழி?" என்ற கவியரசன் பேசிக் கொண்டிருந்த பெண்களின் பக்கம் சென்று விட


ஆதித்யாவோ "விடுகதையா இந்த வாழ்க்கை??....." என்று பாடிக் கொண்டே அவர்கள் அருகில் சென்றான்.


பேசிக் கொண்டிருந்த வெண்பா ஏதோ ஞாபகம் வந்தவளாக "முக்கியமான விஷயம் ஒண்ணு உன்னை பார்த்ததும் சொல்லணும்னு இருந்தேன் மறந்தே போயிட்டேன்"
என்றவள் அவளுடைய கைப்பையில் இருந்து ஒரு கவரை எடுத்து ஸ்வேதாவிடம் நீட்டினாள்.


"என்ன இது??" என்று ஸ்வேதா கேட்க


"பிரித்து பாரு தெரியும்" என்று வெண்பா கூறவும் கவரை பிரித்து பார்த்த ஸ்வேதாவின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன.


"என்ன அந்த லெட்டர்?" என்று கவியரசன் கேட்க



"உங்க வைப்க்கு இண்டர்வியூ லெட்டர் வந்துருக்கு. நாளை கழிச்சு அடுத்த நாள் இண்டர்வியூ"என்று கவியரசனிடம் கூறிய வெண்பா
ஸ்வேதாவின் புறம் திரும்பி


"ஹேப்பியா மேடம்??" என்று கேட்க அவளை தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்ட ஸ்வேதா


"ரொம்ப ரொம்ப ஹேப்பி. இந்த லெட்டர் உனக்கு எப்படி கிடைச்சுச்சு?" என்று கேட்டாள்.


"நாம மூணு பேரும் ஒரு இண்டர்வியூக்கு ஒரே அட்ரஸ் போட்டு கொடுத்தோம் ஞாபகம் இருக்கா?? எங்க வீட்டு அட்ரஸ்க்கு போட்டோம். அன்னைக்கு வீட்டுக்கு போயிருந்தப்போ அம்மா கொடுத்தாங்க" என்று வெண்பா கூறவும்


"ரொம்ப சந்தோஷமாக இருக்கு வெண்பா" என்று ஸ்வேதா கூற


"நீங்க சந்தோஷப்படுறதெல்லாம் அப்புறம் வைச்சுக்கலாம். வேலைல ஜாயின் பண்ணுணதுக்கு முதல்ல இரண்டு பேரும் எங்களுக்கு ட்ரீட் வைக்கணும்" என்று ஆதித்யா கூற கவியரசனும்


"ஆமா ட்ரீட் வைக்கணும்" என்று கூறினான்.


"ட்ரீட் தானே பெர்ஸ்ட் மன்த் செலரி வரட்டும் சிறப்பாக வைச்சுடுவோம்" என்று வெண்பா கூற


"வைத்து செஞ்சுடுவோம்" என்று கூற ஸ்வேதாவுடன் இணைந்து வெண்பாவும் சிரித்துக் கொள்ள அன்றைய மாலைப்பொழுது இனிதாக கழிந்தது.


இரவுணவு சாப்பிட எல்லாரும் வந்து அமர்ந்து கொள்ள வெண்பா ஆதித்யாவையே பார்த்து கொண்டிருந்தாள்.


வீட்டிற்கு வந்ததிலிருந்து வெண்பாவிடம் ஆதித்யா ஒரு வார்த்தை கூட பேசவில்லை.


"ஏதோ சர்ப்பரைஸ் அது இதுனு காலையில் சொல்லிட்டு போனாரு. இப்போ என்னடானா கண்டுக்கவே இல்லையே. என்ன நடந்திருக்கும்??" என்று யோசித்த வண்ணம் வெண்பா அமர்ந்திருக்க அவளது தவிப்பை ஓரக் கண்ணால் பார்த்தவாறு ஆதித்யா அமர்ந்திருந்தான்.


வேலை எல்லாம் முடித்து விட்டு வெண்பா அறைக்குள் சென்று ஆதித்யாவைப் பார்க்க அவனோ தூங்கி இருந்தான்.


கோபம் தலைக்கேற தலையணை ஒன்றைத் தூக்கி ஆதித்யாவின் மேல் எறிய அதை தன் மேல் படாமல் லாவகமாக பிடித்து கொண்டான் ஆதித்யா.


"தூங்குற மாதிரி இவ்வளவு நேரம் நடிச்சிங்களா?? உங்கள...." என்று அவனருகில் வந்தவள் அவனை கையால் மாற்றி மாற்றி அடிக்க சிரித்துக் கொண்டே இருந்தவன் மறுபுறம் திரும்பி


"வெண்பா அப்படியே இந்த பக்கமும் மசாஜ் பண்ணி விடுமா" என்று கூற அவனை முறைத்து பார்த்தவள் அருகில் ஏதாவது இருக்கிறதா என சுற்றும் முற்றும் தேடினாள்.


மேஜை மேல் பூச்சாடி ஒன்று இருக்க அதை வெண்பா தூக்கவும் அலறியடித்து கொண்டு எழுந்து ஆதித்யா


"அடிப்பாவி!!! அநியாயமாக என்னை கொல்ல பார்க்குறியா? இரு சத்தம் போட்டு எல்லோரையும் கூப்பிடுறேன்" என்று விட்டு அவன் சத்தம் போடப் போக அவசரமாக அவன் வாயை தன் கைகளினால் மூடிக் கொண்டாள் வெண்பா.


"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.....லூசாப்பா நீ??? சும்மா விளையாட்டுக்கு பண்ணுணா இப்படி சத்தம் போட்டு மானத்தை வாங்க பார்க்குறீங்க?" என்று கேட்ட வெண்பாவை இடையில் கை வைத்து அவனோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன்


"லாயர் மேடம்க்கு என் மேல என்ன கோபம்?? எதற்காக இந்த வயலன்ஸ்?" என்று கன்னத்தில் கோலமிட்டவாறே ஆதித்யா கேட்க


"காலையில போகும் போது என்ன சொல்லிட்டு போனீங்க?? யோசித்து பாருங்க" என்று வெண்பா கூறவும்


சிறிது நேரம் யோசிப்பது போல செய்தவன்
"ஓஹ்......மேடம் சர்ப்பரைஸ்க்கு தான் இவ்வளவு பண்ணுணீங்களா?? ஆனா ஒரு கண்டிசன். அதைப் பார்த்துவிட்டு கோபப்பட மாட்டேனு ப்ராமிஸ் பண்ணு" என்று ஆதித்யா கேட்க அவனை வியப்பாக பார்த்தாள் வெண்பா.


"கோபப்படுற அளவுக்கு என்ன அது?" என்று வெண்பா கேட்க


"நோ க்வொசன்ஸ் ஒன்லி ப்ராமிஸ்" என்று ஆதித்யா கையை நீட்ட


"சரி கோபப்படமாட்டேன் ப்ராமிஸ்" என்று வெண்பா ஆதித்யாவின் கையின் மேல் தன் கையை வைத்தாள்.


"சரி கண் இரண்டையும் மூடிக்கொண்டு பத்து வரைக்கும் எண்ணு" என்று ஆதித்யா கூற
சிரித்துக் கொண்டே கண்களை மூடிக் கொண்டு எண்ணத் தொடங்கினாள் வெண்பா.


ஐந்து வரை எண்ணியவள் பொறுமையின்றி கண்களை லேசாக திறக்க போக அவள் தலையில் கொட்டிய ஆதித்யா "கேடி ஒழுங்காக எண்ணு" என்று கூற தலையை தேய்த்துக் கொண்டே பத்து வரை எண்ணி முடித்தாள்.


கண்களை திறந்து பார்த்த வெண்பாவின் முன்னால் நின்ற ஆதித்யாவின் கைகளில் இருந்த பொருளைப் பார்த்தவள் திகைத்துப் போய் நின்றாள்.........
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top