• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Un vizhiyil veezhnthenada-3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
சென்னை விமான நிலையம் எப்போதும் போல பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.


லண்டனில் இருந்து வந்த விமானம் தரையிறங்குவதற்கான அறிவிப்பு கேட்டதும் கவியரசன் ஆவலுடன் ஆதித்யாவின் வருகையை எதிர்பார்த்து நின்றான்.


படியினூடு இறங்கி வந்த ஆதித்யாவை கண்டதும் மகிழ்வுடன் கையசைத்தான்.


பதிலுக்கு கையசைத்துக் கொண்டே கவியரசன் அருகில் வந்து சேர்ந்தான் ஆதித்யா.


"டேய்!! கவி நீ இம்புட்டு நல்லவனா?? நாலு வருஷமா இந்த தம்பிய பார்க்காம இருக்க முடியாம ஏர்போர்ட்க்கே வந்துட்டியா என் பாசமலரே!!!" என்று வராத கண்ணீரை துடைத்து கொண்டான் ஆதித்யா.


அவன் தோளில் செல்லமாக தட்டிய கவியரசன்
"உன்னால எனக்கு காரியமாகனுமே தம்பி. அதுவரை உன்ன நல்லா பார்த்துக்கனுமே" என்று அவனும் வாரினான்.



"அட பாவி அண்ணா!!! இப்படி பண்ணிட்டியேடா" என்று போலியாக சலித்து கொண்டான் ஆதித்யா.


ஆதித்யாவின் சலிப்பினை பார்த்து சிரித்துக் கொண்டே கவியரசனும் ஆதித்யாவும் கார் பார்க்கிங்கிற்கு வந்து சேர்ந்தனர்.


காரில் லக்கேஜ்களை ஏற்றி விட்டு ட்ரைவர் சீட்டில் கவியரசன் அமர பக்கத்தில் ஆதித்யா அமர்ந்து கொண்டான்.


வண்டி புறப்பட்டதில் இருந்து ஏதாவது பேசுவான் என்று கவியரசன் முகத்தையே பார்த்து கொண்டு வந்தான் ஆதித்யா.


தற்செயலாக ஆதித்யா புறம் திரும்பிய கவியரசன்
"ஏன்டா இப்படி வெரிச்சு பாக்குற??? நான் அவ்வளவு அழகாவ இருக்கன்?" என்று முன் பக்க கண்ணாடியை சரி செய்து பார்த்தவனை விசித்திரமாக பார்த்தான் ஆதித்யா.



சட்டென்று கவியரசன் கையில் கிள்ளவும் "ஆஆஆஆ!! ஏண்டா இப்படி கிள்ளி வைச்ச" என்று கையை தேய்த்துக் கொண்டே கேட்டான் கவியரசன்.


"இல்ல நீ என் அண்ணண்தானானு டவுட்டாவே இருக்கு. நீ இவ்வளவு பேசுவியா?? அமைதிப்புயலாச்சே நீ எப்படி இப்படி அதிரடியா மாறுன? இவ்வளவு பேசுற உனக்கு அப்பா கிட்ட பேச தைரியமில்லயா??" என்று ஆதித்யா கேட்டதும் தான் தாமதம் சட்டென்று காரை நிறுத்தினான் கவியரசன்.


"அப்பானு சொன்னாலே என் தைரியம் எல்லாம் பறந்து போய்டுதுடா" என்று அப்பாவியாக கூறிய கவியரசனை பார்க்க பாவமாக இருந்தது ஆதித்யாவிற்கு.


"சரி சரி வண்டிய எடு. வீட்டில வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க" என்று விட்டு யோசனையில் ஆழ்ந்தான் ஆதித்யா.


"டேய் என்னடா இவ்வளவு யோசனை? வீடு வந்துருச்சு இறங்கு" என்ற கவியரசனின் குரலில் தற்காலிகமாக யோசனையை இடை நிறுத்தி விட்டு தன் பெற்றோரைப் பார்க்க ஆவலுடன் உள்ளே சென்றான் ஆதித்யா.


"ஆதி என்னடா இப்படி இளைச்சுப் போய்ட்ட? ஒழுங்கா நேரத்துக்கு சாப்பிடுறியா? இல்லையா?" என்று கேட்ட கலையரசியின் தோளில் கையை போட்டு அழைத்து சென்று


சோபாவில் அமர வைத்து அவரது மடியில் தலை வைத்து படுத்தவன் "கலை செல்லம் சாப்பாடுலாம் கரக்ட்டா சாப்பிடுறன் ஆனா இப்படி பாசமாக பார்த்துக்க என் கலை செல்லம் இல்லையே அதனாலதான் இளைச்சுப் போய்ட்டனோ என்னவோ" என்று கூறி புன்னகைத்தான் ஆதித்யா.


"ஏழு கழுதை வயசாச்சு இன்னும் அம்மா மடியில படுத்துருக்கியேடா?" என்று தலையிலடித்த கவியரசனைப் பார்த்து


"நானாச்சும் பரவால. ஆனா நீ அப்பா சத்தம் கேட்டதும் ஓடி ஒழியுறியே என் தைரிய சிங்கமே!!" என்று நக்கலடித்தான் ஆதித்யா.


"வாப்பா ஆதி! எப்போ வந்த ? பயணமெல்லாம் சௌகரியமா இருந்துச்சா?" என்றவாறு உள் நுழைந்தார் வெங்கடாசலம்.


மரியாதை நிமித்தம் எழுந்து நின்ற ஆதித்யா "இப்போதான் பா வந்தன். நீங்க எப்படிப்பா இருக்கீங்க?" என்று அவரை தழுவி கொண்டான் ஆதித்யா.


"நான் நல்லா இருக்கேன்பா. போய் குளித்து விட்டு வந்து சாப்பிட்டு ரெஸ்ட் எடு ட்ரவல் பண்ணி வந்த டயர்டா இருப்ப" என்ற வெங்கடாசலத்தை பார்த்து


"சரிப்பா" என்று புன்னகத்து விட்டு தன் அறையை நோக்கி சென்றான் ஆதித்யா.


வெங்கடாசலம் கலையரசியின் புறம் திரும்பி
"ஆதிக்கு சாப்பாடு ரெடி பண்ணுமா டயர்டா இருப்பான்" என்றதும்



"இதோ ரெடி பண்ணுறன்" என்றவாறு சமையலறை நோக்கி சென்றார் கலையரசி.


"அம்மா நான் ஆபீஸ் கிளம்புறன்" என்று விட்டு கவியரசனும் கிளம்பி சென்றான்.



வழக்கம் போல தன் தாய் தம்பியோடு வம்பிழுத்துக் கொண்டு தன் கல்லூரி செல்ல தயாராகி வந்தாள் வெண்பா.


"அம்மா பை பை" என்று விட்டு தன் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்து வெளி கேட்டை தாண்டியதும் தான் தாமதம் வெண்பாவின் ஸ்கூட்டரை வழிமறித்து நின்றது ஒரு கும்பல்.


வண்டியை விட்டு இறங்கிய வெண்பா என்னவென்பது போல பார்க்க கும்பலில் இருந்து ஒருவன்
"ஏய்!!! வெண்பா உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க? இப்போலாம் எங்க கூட முதல் மாதிரி விளையாட வராதே இல்ல. எங்கல எல்லாம் மறந்துட்டியா?" என்று அதட்டலாக கேட்டான் அக்கும்பலின் தலைவனான ஆறு வயது நிரம்பிய அருண்.



"ஆமாடா மேடம் இப்போலாம் ரொம்ப பிஸி. நம்மல எல்லாம் கண்டுக்குறதே இல்ல"என்று ஏற்றி விட்டான் கமல்.


"என்னங்கடா ஓவரா பேசுறிங்க? ஏதோ இரண்டு நாள் வேலையால விளையாட வரல அதுக்குள்ள இவ்வளவு வாய் பேசுறிங்க. இதெல்லாம் டூ இல்ல இல்ல த்ரீ மச் டா வாண்டுகளா" என்று பதிலுக்கு அவளும் முறுக்கிக் கொண்டு நின்றாள்.


"சரி சரி வெண்பாவ பார்த்தாலும் பாவமா இருக்கு இந்த ஒரு வாட்டி மன்னிச்சுரலாம் என்ன ப்ரண்ட்ஸ்" என்று பெரிய மனுஷியாக சமாதானம் செய்ய வந்தாள் அம்மு என செல்லமாக அழைக்கப்படும் அமுதா.


அவர்களது சம்பாஷணையை பார்த்து தனக்குள் சிரித்துக் கொண்டே வெண்பா கோபமாக இருப்பது போல காட்டிக் கொண்டாள்.


கூடி நின்று வாண்டுகள் எல்லாம் ஒரு முடிவு எடுத்து விட்டு வெண்பா அருகில் வந்து அவளை அருகில் வரும் படி அழைத்தனர்.


வெண்பா முழங்காலிட்டு அவர்களது உயரத்திற்கு ஏற்றவாறு அமர்ந்து கொள்ள அக்கும்பலின் தலைவன் அருண்
"நீ டூ டேஸ் விளையாட வரல ஸோ அதுக்கு பனிஷ்மென்டா இன்னைக்கு ஈவ்னிங் பார்க்கிற்கு விளையாட வரணும் ஓகே" என்றவனை பார்த்து சிரித்துக் கொண்டே



"ஓகே ஓகே டன் இப்போ நான் போகலாமா காலேஜ்க்கு டைம் ஆச்சு இன்னைக்கு மரவள்ளியோட கிளாஸ் (நம்ம வெண்பா ப்ரபொஸர் பேரு மரகதவள்ளி. ரொம்ப ஸ்ட்ரிக்ட் அதனால நம்ம வெண்பா செல்லமா மரவள்ளினு சொல்லுவா) ஸோ நான் போகலாமா?" என்று பெர்மிஸன் கேட்டு நின்றவளை பார்த்து வழி விட்டு சம்மதம் தெரிவித்தனர் நம் வெண்பாவின் நண்பர் குழாம்.


மனம் நிறைந்த மகிழ்வுடன் தன் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்து குழந்தைகளுக்கு கையசைத்து விட்டு காலேஜை நோக்கி பயணமானாள் வெண்பா
பார்க்கில் தன் வாழ்வே மாறப் போகிறது என்பதை அறியாமல்...
 




Last edited:

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
ஹஸ்னா சூப்பர் போங்க ஆதியின் என்ட்ரி அண்ணன் தம்பி பாசம் அம்மா மகன் பாசம் அப்பா மகன் எல்லாம் அடுத்தடுத்த சீன்ல நைஸ் ப்ளோ அப்புறம் அப்படியே வெண்பாகிட்ட தாவனிங்க பாரு சான்சே இல்லை
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
அடுத்து பார்க்கில் என்ன ஹுரோவா மீட் பன்னுவாளா வேற ஏதாவது :unsure: இது உங்க முதல் கதைன்னா நான் நம்ப மாட்டேன்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top