• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Un vizhiyil veezhnthenada-32

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
சென்ற udக்கு லைக்,கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி:giggle::giggle::giggle:!!!!

IMG_20180919_173338.jpgIMG_20180919_171407.jpg


வீதி முழுவதும் இரத்தம் படிந்து இருப்பதை பார்த்த ஆதித்யாவின் இதயம் ஒரு கணம் நின்றது.


அருகில் நின்ற நபரிடம்
"ஆக்சிடெண்டான அந்த பொண்ணு எங்கே?" என்று ஆதித்யா கேட்க


"இப்போது ஒரு ஐந்து நிமிஷத்துக்கு முன்னாடி தான் ஆம்புலன்ஸ்ல கொண்டு போனாங்க தம்பி" என்று அந்த நபர் கூறவும்


"எந்த ஹாஸ்பிடல்??" என்று பதட்டத்துடன் வினவினான்.


"எந்த ஹாஸ்பி்டல்னு தெரியல தம்பி. அதோ அந்த பொண்ணு தான் போன் பண்ணி போலீஸையும், ஆம்புலன்ஸையும் வர வைச்சா" என்று எதிரில் கை காட்ட அந்த திசையில் பார்த்தவன் சிலையென உறைந்தான்.


வெண்பா போலீஸாருடன் நின்று எதைப் பற்றியோ தீவிரமாக பேசிக் கொண்டிருந்தாள்.


விரைந்து அவளருகில் ஓடி சென்ற ஆதித்யா வெண்பாவின் தோள் தொட திரும்பிப் பார்த்த வெண்பா ஆதித்யாவை அங்கு காணவும் ஆச்சரியமாக அவனை பார்த்தாள்.


ஆதித்யா ஒரு கணம் கூட தாமதிக்காது தாவி அவளை அணைத்துக் கொள்ள நிலை தடுமாறி போனாள் வெண்பா.


"விக்ரம் என்ன இது?? நடு ரோட்டில் வைச்சு. எல்லாரும் பார்க்குறாங்க விடுங்க" என்று கூற


சூழ்நிலை அறிந்து விலகியவன்
"வெண்பா உனக்கு ஒண்....ஒண்ணும் ஆகலலே. நீ....நீ நல்லா இருக்க தானே?" என்று அவள் முகம், கை, கால்களை ஆராய்ந்து பார்த்தவாறு ஆதித்யா கேட்க


"எனக்கு எதுவும் ஆகலபா. நான் நல்லா தான் இருக்கேன். நான் இந்த தெருவிற்குள் நுழையும் போது தான் சரியா ஆக்சிடெண்டும் நடந்துச்சு. என் முன்னாடி தான் அந்த பொண்ணு போய்ட்டு இருந்தா. ஒரு செக்கன்ல எல்லாம் நடந்து முடிஞ்சுடுச்சு. பாவம் அந்த பொண்ணு நிறைய ப்ளட் லாஸ் ஆகிடுச்சு" என்று வருத்தத்துடன் கூறிய வெண்பா


"ஆமா நீங்க எப்படி இங்க? இந்த டைம்ல?" என்று கேட்கவும்


அது வரை இருந்த மனநிலை மாற
"உன் போன் என்னாச்சு??" என்று கோபத்துடன் வினவினான் ஆதித்யா.


"அது என் பேக்ல...." என்று விட்டு கைப்பையில் இருந்த போனை எடுத்து பார்த்தவள் தன் தலையில் தட்டி கொண்டாள்.


"போன்ல சார்ஜும் கம்மியாக இருக்கு. டவர் கூட இந்த ஏரியால இல்ல போலிருக்கே" என்று போனை பார்த்து கொண்டு வெண்பா கூற


"வண்டியை எடுத்துட்டு பாஸ்டா வீட்டுக்கு வந்து சேரு" என்று கோபமாய் ஆதித்யா கூறி விட்டு செல்ல போக


"என்கியுரி முடியாமல் எப்படி நான்..." என்று கேட்டவளை ஆதித்யா பார்த்த பார்வையில் சர்வமும் நடுங்கி போக அமைதியாக வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் வெண்பா.


சிறிது இடைவெளி விட்டு காரில் அவளைப் பின்தொடர்ந்து ஆதித்யாவும் சென்றான்.


வீட்டிற்குள் நுழைந்ததும் வாசலிலேயே காத்திருந்த கலையரசி
"எங்கப்பா போனீங்க இரண்டு பேரும் இவ்வளவு நேரமா?? உங்கள காணோம்னு எவ்வளவு பதறிப் போயிட்டோம் தெரியுமா? கவியை உங்க இரண்டு பேரையும் தேடி பார்க்க சொல்லி அனுப்பி வைச்சேன். எங்க இருந்தீங்க இரண்டு பேரும்?" என்று கேட்க


வெண்பாவை உறுத்து விழித்த ஆதித்யா
"கவிக்கு போன் பண்ணி நாங்க வந்துட்டோம்னு சொல்லி வீட்டுக்கு வரச் சொல்லிடுங்கமா" என்று விட்டு வெண்பாவின் கை பிடித்து இழுக்காத குறையாக அவளை அறைக்கு அழைத்துச் சென்றான்.


அறைக்குள் வந்து கதவை சாத்தி விட்ட பின்பும் வெண்பாவின் கைகளை ஆதித்யா விடவில்லை.
"விக்ரம் வலிக்குது. ப்ளீஸ் கையை விடுங்க. ஏன் இப்படி ரூடா பிஹேவ் பண்ணுறீங்க??" என்ற வெண்பா அவன் கைகளில் இருந்து தன் கைகளை உருவிக் கொள்ள முயன்று கொண்டிருக்க மேலும் அவள் கைகளை அழுந்தப் பிடித்தவன்


"உன்னை காணோம்னு தெருத் தெருவா அலைந்து திரிந்து தேடிட்டு இருந்தா நீ சாவகாசமாக நின்னுட்டு அங்கே பேசிட்டு நிற்குற. ஏதாவது வேலையா வெளியில் போனா இன்பார்ம் பண்ண தெரியாதா உனக்கு?? அட்லீஸ்ட் வர லேட் ஆகும்னு யார்கிட்டயாவது சொல்லனும்னு கூட உன் புத்திக்கு தெரியாதா?? இன்னும் நீ என்ன சின்ன குழந்தையா?? இங்க எத்தனை பேரு உன்ன காணாம தவிச்சுப் போயிட்டோம். கொஞ்சம் கூட யோசித்து நடக்கமாட்டியா??" என்று கோபம் கொண்ட சிங்கமாய் அவன் கர்ஜிக்க அரண்டு போனாள் வெண்பா.


காலையில் பார்த்த கடிதம், மாலையில் கண்ட கனவு, வெண்பாவைக் காணாமல் தவித்தது, ஆக்சிடெண்ட் செய்தி என எல்லாம் சேர்ந்து ஆதித்யாவை மொத்தமாய் நிலை குலைய செய்து இருந்தது.


"இப்போ என்ன ஆயிடுச்சுனு இப்படி கோபப்படுறீங்க?? வர்ற வழியில் ஒரு ஆக்சிடெண்ட் அதனால கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. அதற்கு போய் ஏன் இப்படி டென்சனாகுறீங்க??" என்று வெண்பா கேட்க


கை முஷ்டி இறுக தன் கோபத்தை கட்டுப்படுத்தி கொண்டு நின்ற ஆதித்யா
"இங்கே பார். எல்லா விஷயத்தையும் உன்கிட்ட விலாவாரியாக சொல்லிட்டு இருக்க முடியாது. நீ தான் புரிஞ்சு நடந்துக்கணும். இனி நீ வெளியே எங்க போனாலும் என் கிட்ட சொல்லிட்டு தான் போகணும். எங்க போற, எங்க வர எல்லா டீடெய்ல்ஸும் என்கிட்ட சொல்லணும். அதோட முக்கியமான விஷயம் இப்போ உனக்கு கிடைச்சுருக்குற இந்த கேஸை நீ விட்டுடனும்" என்று கூற


அதிர்ச்சியடைந்த வெண்பா
"வாட்???? கேஸை விட்டுடனுமா?? நான் என்ன கேஸ் டீல் பண்ணுறேனு உங்களுக்கு எப்படி தெரியும்?? இதோ பாருங்க ஒரு ஹஸ்பன்டா நான் எங்க போறன், வரேனு நீங்க தெரிஞ்சுக்குறது பரவாயில்லை. ஆனா அதுக்காக என் கேரியர்ல தலையிடுற உரிமை உங்களுக்கு இல்லை. திடீர்னு இந்த கேஸை விட்டுட சொல்லுறீங்க ஏன்???

ஓஹ்... ஒரு வேளை உங்களையும் காசு கொடுத்து வாங்கிட்டாங்களா? அது தான் அவங்களுக்கு ஜால்ரா...." என்று கூறியவளின் கன்னத்தில் இடியென இறங்கியது ஆதித்யாவின் கை.
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
திகைத்துப் போய் நின்ற வெண்பாவின் தோள்களை அழுத்தி பிடித்தவன்
"என்ன சொன்ன? நான் அடுத்தவங்களுக்கு ஜால்ரா போடுறனா? என்னை பார்த்தா எப்படி தெரியுது உனக்கு?" என்று அதட்டலாக கேட்க வெண்பாவோ திக் பிரமை பிடித்தவள் போல் நின்றாள்.


"இப்போ கடைசியாக ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோ. உனக்கு நான் முக்கியம்னு நினைச்சா நீ இப்போவே இந்த கேஸை விட்டுடனும். இப்போவே முடிவு பண்ணு நான் முக்கியமா? இல்லை அந்த கேஸ் தான் முக்கியமா?" என்று ஆதித்யா வினவ


தவிப்புடன் அவனைப் பார்த்த வெண்பா
"எனக்கு ஒரு கண் என்னோட கேரியர்னா, மற்றைய கண் நீங்க. ஒரு கண்ணை இழந்துட்டு ஒரு கண்ணோட வாழ சொல்றீங்களா??" என்று உடைந்து போன குரலில் கேட்க தடுமாறி போனான் ஆதித்யா.


"நீங்க என்னை அடிச்சது கூட வலிக்கல விக்ரம். இப்போ கேட்ட கேள்வி தான் என்னை உயிரோட கொல்லுது. நீங்க இல்லாமல் என்னால வாழ முடியாது. என்னோட உயிர் நீங்க. அதே போல இந்த கேஸ் என் லைப்லையே ஒரு டேர்னிங் பாயின்ட். என்னோட வளர்ச்சிக்கு நீங்க துணையாக இல்லைனாலும் பரவாயில்லை ஏன் தடையாக இருக்குறீங்க? ஏன் என்னை புரிஞ்சுக்க மாட்டேன்குறீங்க?" என்று முகத்தை மூடிக் கொண்டு வெண்பா அழவும் ஆதித்யாவின் கோபமெல்லாம் காற்றாய் கரைந்து போனது.


அவளை ஆதரவாய் அணைத்துக் கொண்டவன் அவளது தலையை வருடி விட்டான்.


"உனக்கு ஏதாவது ஆகிடுமோனு எனக்கு பயமாக இருக்கு வெண்பா. எனக்கு மட்டும் உன் மேல அன்பு, அக்கறை இல்லைனா நினைச்சா? உன்னை விட்டு ஒரு நிமிஷம் கூட என்னால பிரிஞ்சு இருக்க முடியாது. உன்னை காணலனு சொன்னதும் எவ்வளவு தவிச்சுப் போயிட்டேனு தெரியுமா? உன்னை பார்க்குற வரை என் உயிர் என் கிட்ட இல்லை. காலையில் பார்த்த அந்த லெட்டர் வேற என்ன ரொம்ப பயப்பட வைச்சுடுச்சுடி..." என்று வெண்பாவை இறுக அணைத்துக் கொண்டு ஆதித்யா கூற அந்த அணைப்பே அவனின் தவிப்பை அவளுக்கு உணர்த்தியது.


"என்ன லெட்டர்???" என்று அவனை விலக்கி நிறுத்தி வெண்பா கேட்க


"அது ஒண்ணுமில்லை விடு. வா முதல்ல சாப்பிட போகலாம்" என்று விட்டு செல்ல போக அவன் கை பிடித்து தடுத்தவள்


"என் கிட்ட மறைக்காமல் உண்மையை சொல்லுங்க விக்ரம்" என்று அவன் கண்களை நேர் கொண்டு பார்த்து வெண்பா கேட்க தயங்கியபடி காலையில் அவன் பார்த்த அந்த கடிதத்தை பற்றி கூறினான்.


புருவங்கள் முடிச்சிட யோசித்த வெண்பா
"அந்த லெட்டர் இப்போ உங்ககிட்ட இருக்கா?" என்று கேட்க


"அதை அப்போவே கிழித்து போட்டுட்டேன். ஆனாலும் அந்த லெட்டரை பார்த்ததலிருந்து மனசு சஞ்சலமாகவே இருந்துச்சு" என்று கூறிய ஆதித்யா கன்றி சிவத்திருந்த அவள் கன்னத்தை வருடி


"ஐ யம் ஸாரி வெண்பா ஏதோ கோபத்துல...ஐ யம் எக்ஸ்ட்ரீம்லி ஸாரி...ஸாரி" என்று கண்ணீர் வடிக்க


பதறிய வெண்பா "நீங்க என் மேல இருக்குற அன்பினால தானே அடிச்சுங்க. எனக்கு அது வலிக்கல விக்ரம். உங்க காதலோட நினைவாக தான் அதை நான் பார்க்குறேன்" என்று கூற அவளை இறுக அணைத்துக் கொண்டான் ஆதித்யா.


"உன்னால எப்படி வெண்பா என் மேல இவ்வளவு அன்பை காட்ட முடியுது?? உன்னை மாதிரி ஒரு லைப் பார்ட்னர் கிடைக்க......நான் எவ்வளவு லக்கி" என்று அவளினுள் மேலும் புதைந்து கொண்டான் ஆதித்யா.


கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு விலகி கொண்ட வெண்பா கதவை திறக்க போக அவளை தடுத்த ஆதித்யா
"நான் போய் பார்க்குறேன். நீ போய் முதல்ல பிரஸாகு" என்று விட்டு சென்று கதவைத் திறந்தான்.


வெளியே பதட்டத்துடன் மொத்த குடும்பத்தினரும் நின்று கொண்டு இருக்க
"என்னம்மா? என்னப்பா? ஏன் எல்லாரும் இவ்வளவு டென்சனா நின்னுட்டு இருக்கீங்க?" என்று ஆதித்யா கேட்கவும்


"நீங்க இரண்டு பேரும் மேல வந்து இரண்டு மணி நேரம் ஆச்சு. என்னாச்சோ ஏதாச்சோனு பதறிப் போய் வந்துருக்கோம். நீ என்னடானா கேசுவலா கேட்குற?" என்று கவியரசன் கூற


சிரித்துக் கொண்ட ஆதித்யா
"ஹஸ்பன்ட் அண்ட் வைப்னா அப்படி தான். இதுக்கு போய் டென்சனாகிட்டு. ஒரு பிராப்ளமும் இல்லை. நீங்க எல்நிம்மதியாக போங்க. நான் ப்ரெஸ் ஆகிட்டு வரேன்" என்று கூறவும் அனைவரும் கீழே சென்றனர்.


கதவை சாத்தி விட்டு திரும்பிய ஆதித்யாவின் மனதில் குற்றவுணர்வு எழுந்தாலும் நடந்த விடயங்களை வீட்டாரிடம் சொல்லி அவர்களை வீணாக கவலைக்குள்ளாக்க வேண்டாம் என்று எதையும் சொல்லாமல் அப்படியே விட்டு விட்டான்.


குளித்து தயாராகி வந்தவன் கீழே சென்று சாப்பிட்டு முடிக்கும் வரை வெண்பாவையே கவனித்துக் கொண்டிருந்தான்.


அவன் மனதில் பல்வேறு குழப்பங்கள் ஒன்று மாற்றி ஒன்றாக அணி வகுத்து கொண்டே இருந்தது.


அறைக்குள் வந்தவன் வெண்பா உறங்கி விட்டாள் என்பதை உறுதி செய்து கொண்ட பின் அவனுடைய போனை
எடுத்துக் கொண்டு பால்கனிக்கு சென்றான்.


வெண்பா எழுந்தாலும் அவளுக்கு அவன் பேசுவது கேட்காத தொலைவில் நின்று கொண்டு அழைப்பை மேற்கொண்டான்.


இரண்டு ரிங் அடித்த பின் மறுமுனையில் போன் எடுக்கப்பட
"ஹலோ!!! குமார். நான் ஆதித்யா பேசுறேன் கவியோட தம்பி" என்று கூறவும்


"சொல்லுடா ஆதி. என்ன இந்த நேரத்தில் போன் பண்ணி இருக்க?? ஏதாவது பிரச்சினையா?" என்று கேட்டான்.


"ஒரு சின்ன பிராப்ளம். உங்க ஹெல்ப் வேணும்" என்று கூறி விட்டு ஆதித்யா காலையில் இருந்து நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் கூறினான்.


"ஓஹ்...ஒரு நாளையிலேயே இவ்வளவு நடந்துருச்சா?? இப்போ நான் உனக்கு என்ன ஹெல்ப் பண்ணணும்?" என்று குமார் கேட்க


"நீங்க ஒரு சி.பி.ஐ ஆபீஸர் இருந்தாலும் எனக்கு வேற வழி தெரியலை. நீங்க பண்ணுவீங்கனு நம்பி தான் கேட்குறேன். என்னோட வைப்ப கொஞ்சம் கேர்புல்லா கண்காணிக்கனும். இந்த விஷயம் அவளுக்கு தெரியக் கூடாது. அவளுக்கு எந்த ஆபத்தும் வந்துடக் கூடாதுனு தான் இதை பண்ண சொல்லுறேன். இது கொஞ்சம் காம்ப்ளீகேடட் தான் பட் அன் ஓபிசியலா தான் இதை நீங்க பண்ணணும் ப்ளீஸ்"என்று ஆதித்யா கூறவும் ஒரு சில நிமிடங்கள் அமைதியாக இருந்தான் குமார்.


"ஓகே ஆதி. நான் பண்ணுறேன். சிஸ்டருக்கு எந்த ப்ராப்ளமும் வராமல் பார்த்துக்குரேன். டோன்ட் வொர்ரி" என்று குமார் கூற


"தேங்க்யூ தேங்க்யூ சோ மச் குமார்" என்று ஆதித்யா கூறவும்


"இட்ஸ் ஓகே டா ஆதி" என்று விட்டு போனை வைத்தான் குமார்.


"உப்......." என்று பெருமூச்சு விட்டு கொண்டவன் மறுபடியும் போனை எடுத்து வேறு ஒருவருக்கு அழைப்பை மேற்கொண்டான்.


"ஹலோ!!! கமிஷ்னர் ஸார்" என்று ஆதித்யா கூற


"ஹலோ ஆதி!!!! என்னடா புதுசா மரியாதை எல்லாம்?? வழக்கம் போல அங்கிள்னே கூப்பிடு" என்று கமிஷ்னர் மெய்யப்பன் கூற


"ஓகே அங்கிள். அப்புறம் வீட்ல ஆன்டி, சர்வேஷ் எல்லாம் எப்படி இருக்காங்க?? நீங்க எப்படி இருக்கீங்க?" என்று ஆதித்யா கேட்கவும்


"என்ன ஆதி?? இந்த டைம்ல போன் எடுத்து சுகம் விசாரிச்சுட்டு இருக்க? என்ன மேட்டர்?" என்று மெய்யப்பன் வினவவும்


"அது வந்து...அங்கிள்...நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணணுமே!" என்று ஆதித்யா கூறினான்.


"சொல்லுபா உனக்கு இல்லாத ஹெல்பா?" என்று கூற அவரிடம் அவன் திட்டமிட்டு இருந்த விடயங்களை கூற


"சரி ஆதி. எப்போ தேவைப்பட்டாலும் என்ன கான்டாக்ட் பண்ணு" என்று
விட்டு போனை கட் செய்தார் மெய்யப்பன்.


போனை வைத்த ஆதித்யா மனதளவில் முற்றிலும் அமைதியாக உணர்ந்தான்.


"இனி எந்த பிரச்சினையும் வராது. மீறி வந்தால் சமாளித்து கொள்ளலாம்" என்ற நம்பிக்கையோடு நிம்மதியாக உறங்கச் சென்றான் ஆதித்யா........
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
ஹுஸ்னா டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஹுஸ்னா டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top