Un vizhiyil veezhnthenada-35 [Final]

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nubha

New member
Joined
Oct 23, 2019
Messages
23
Reaction score
23
Points
3
Nice story husna. From yesterday only I started to read ur stories . Superb
 
Premalatha.S

New member
Joined
May 16, 2020
Messages
4
Reaction score
3
Points
3
Location
Mysore
"நீங்க என்னை பேச விட்டாத்தானே. நான் என்ன சொல்ல வந்தேன்னா
அவரு சி.பி.ஐ ஆபீஸர்னு தெரியாம ஒரு தப்பு பண்ணிட்டேன். காலையில வீட்டில் இருந்து கிளம்பி போகும் போது யாரோ பாலோ பண்ணிட்டு வர்ற மாதிரி இருந்துச்சு.


திரும்பி பார்த்தா ஒருத்தரு நின்னுட்டு இருந்தாரு. மறுபடியும் கொஞ்ச தூரம் போய்ட்டு திரும்பி பார்த்தா அதே ஆள் நிற்குறான். அந்த எம்.எல்.ஏ ஆளா இருக்குமோனு நினைச்சு கீழே கிடந்த கல்லை எடுத்து அவன் தலையை குறி வைச்சு எறிஞ்சுட்டு நிற்காம போயிட்டேன்" என்று வெண்பா கூறவும்


"அடப்பாவி!!! நான் நெற்றியில என்ன காயம்னு கேட்டதுக்கு வீட்ல பார்க்காம போய் சுவர்ல இடிச்சுட்டேனு என் கிட்ட கதை அளந்துருக்கான். பாவிப்பயல்" என்று ஆதித்யா கூற விழுந்து விழுந்து சிரிக்க தொடங்கினாள் வெண்பா.


அவளோடு இணைந்து சிரித்த ஆதித்யா
"நான் ஒண்ணு கேட்பேன் நீ பண்ணணும்" என்று கூற"என்ன அது???" என்று கேட்டாள் வெண்பா.


"நீ நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு வாட்டி கூட எனக்கு ஐ லவ் யூ சொல்லலயே. இப்போ ஒரு வாட்டி சொல்லேன்" என்று ஆதித்யா கேட்க


தலை குனிந்து கொண்டாள் வெண்பா.


"என்னாச்சு வெண்பா??" என்று கேட்ட ஆதித்யா அவள் முகம் நிமிர்த்தி பார்க்க வெண்பாவின் கண்கள் கலங்கி இருந்ததைப் பார்த்து பதறி போனான்.


"ஸாரி வெண்பா நான் உன்னை ஹேர்ட் பண்ணணும்னு கேட்கல. ஐ யம் ஸாரி" என்று ஆதித்யா கூற


அவன் மீது சாய்ந்து கொண்ட வெண்பா


"நான் தான் ஸாரி சொல்லனும். இவ்வளவு நாள்ல ஒரு வாட்டி கூட நான் உங்க கூட சரியா பேசலலே" என்று வருத்தத்துடன் கூற


அவளை அணைப்பில் வைத்து கொண்டே கட்டிலில் சென்று அமர்ந்தவன் கட்டிலில் சாய்ந்து கொண்டு அவள் கைகளை எடுத்து தன் கையில் வைத்துக் கொண்டான்.


"நீ சரியாக
பேசலனு யாரு சொன்னா?? உன் கூட இருக்கும் போது எனக்கு நேரம் போறதே தெரியாது. இன்பாக்ட் நான் என்னையே மறந்து போயிடுறேன். ஒரே ஒரு குறை தான். அடிக்கடி கராத்தே மாஸ்டர் ஆகிடுற" என்று கூறி ஆதித்யா சிரிக்கவும் அவன் தோளில் தட்டியவள் வாகாக அவன் மேல் சாய்ந்து கொண்டாள்.சிறிது நேரம் அமைதியாக கண் மூடி அமர்ந்திருந்தவள்


"விக்ரம்...." என்று அழைக்க


"சொல்லுடா அலமு.." என்று ஆதித்யா கூறவும் திகைப்புடன் அவனை பார்த்தாள் வெண்பா.


"அலமு???..." என்று கேட்டு ஆதித்யாவைப் பார்க்க அவளைப் பார்த்து சிரித்த ஆதித்யா


"நிகில் எல்லாம் சொல்லிட்டான். உன் உண்மையான பேரு அலமேலுவாமே. நீ தான் ஸ்கூல் படிக்கும் போது வீட்ல கத்தி சண்டை போட்டு பேரை மாத்தி வைச்சுக்கிட்டியாம்" என்று கூற அவனை முறைத்து பார்த்தவள்


"அந்த நிகில் எருமை மட்டும் என் கையில கிடைக்கட்டும் அப்புறம் இருக்கு அவனுக்கு பூஜை" என்று வெண்பா கோபமாக கூறவும் அவள் கன்னத்தில் முத்தமிட்ட ஆதித்யா


"எதுக்கு அலமு சின்ன பையன் மேல கோபப்படுற?? எனக்கு வெண்பாவை விட அலமு தான் பிடிச்சிருக்கு" என்று கூறி சிரித்தான்.


ஆதித்யாவைத் தள்ளி விட்டு விட்டு அவன் மார்பில் மாற்றி மாற்றி வெண்பா அடிக்கவும் அவள் கைகளை சேர்த்து ஆதித்யா பிடித்து கொள்ள நிலை தடுமாறி அவன் மேல் வீழ்ந்தாள் வெண்பா.


அவன் பார்வையில் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை இழந்து கொண்டிருந்தாள் வெண்பா.


அவன் கைகள் அவள் இடையில் தவழ அவனிடம் தன்னை முழுவதுமாக தொலைத்தாள் வெண்பா.


ஆதித்யாவை நிமிர்ந்து பார்த்த வெண்பா அவன் கண்களை பார்த்தவாறே
"ஐ லவ் யூ விக்ரம்..." என்று காதலோடு கூற அவளை இறுக ஆதித்யா அணைத்துக் கொள்ள" நானும் உன்னை ரொம்ப லவ் பண்ணுறேன் அலமு...." என்று கூற

ஒரு அழகிய காதல் அங்கே இனிதே அரங்கேறியது.


ஆதித்யா மற்றும் வெண்பாவின் வாழ்வில் இனி என்றென்றும் காதலும், மகிழ்வுமே நிறைந்து இருக்கும்.
 
Advertisements

Latest Episodes

Advertisements

Top