• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Un vizhiyil veezhnthenada-5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
கண்ணிமைக்காது தன்னையே பார்த்துக் கொண்டிருந்த வெண்பாவின் முகத்திற்கு முன்பு ஆதித்யா விரலை சொடக்கிடவும் கனவில் இருந்து எழுந்தது போல விழித்தாள் வெண்பா.


"ஹலோ மேடம் இப்படி தான் அடுத்தவங்க தலையில் பந்து எறிந்து விளையாடுவீங்களா? எங்க அம்மாவிற்கு நான் ஒரே இரண்டாவது பையன். ஏதாவது ஆச்சுனா யார் பதில் சொல்றது?" என்று கேட்கவும்


"அது வந்து.. அது பசங்க .. இல்ல அது நாங்க...இல்ல" என்று தடுமாறிய வெண்பாவை பார்த்து சிரித்த ஆதித்யா


"என்ன மேடம் இப்ப என்ன கேட்டுட்டனு இப்படி தடுமாறுரீங்க ரிலாக்ஸ். நான் ஏதோ சின்னபையன் அதனால இவ்வளவு கேசுவலா எடுத்துட்டன். யாரும் வயசானவங்க தலையில விழுந்திருந்தா இந்நேரம் கொலை கேஸ்ல உள்ள போயிருப்பீங்க" எனவும்


"ஐய்யயோ நான் வேணும்னு பண்ணலங்க தெரியாம பண்ணிட்டன் ஸாரி" என்றாள் வெண்பா.


"இட்ஸ் ஓகே இனி விளையாடும் போது அக்கம் பக்கம் பார்த்து விளையாடுங்க. வன்முறை வேண்டாம்"என்று விட்டு பந்தை அவளிடம் கொடுத்து விட்டு திரும்பி சென்ற ஆதித்யாவை


"ஸார் ஒரு நிமிஷம். உங்க பேர் என்ன?" என கேட்ட வெண்பாவை ஆச்சரியமாக பார்க்கவும்

"தப்பா எடுத்துக்காதீங்க ஸார். உங்கள இப்ப ரீசென்டா எங்கயோ பார்த்த மாதிரி இருந்துச்சு அதானலதான் கேட்டேன்" என்றாள் வெண்பா.


"என் பேரு ஆதித்யா விக்ரம். அன்ட் வன் மோர் திங்க் கடந்த நான்கு வருடங்களுக்கு பிறகு இன்னைக்கு தான் நான் இந்தியாவிற்கு வந்திருக்கன். நான்கு வருடங்களுக்கு முன்பு நீங்க என்ன பாத்திருக்கீங்களா? இப்பவும் ஞாபகம் வச்சிருக்கீங்க போலயே" என்று நக்கலாக கூறவும்


"ஐயோ!! மாட்டிக்கிட்டோமே" என்று தனக்குள் கூறிக்கொண்டு வெண்பா அவனைத் திரும்பியும் பார்க்காது ஓடிவிட்டாள்.


"ஹலோ மிஸ் உங்க பேர் என்ன? சொல்லமாலே போறீங்க" என்று அவன் சத்தம் போட்டு கேட்கவும் ஒரு நிமிடம் நின்று அவனைப் பார்த்தவள் எதுவும் கூறாது ஓடிவிட்டாள் ஆனால் ஆதித்யாவின் சிரிப்பு சத்தம் அவளை பின் தொடர்ந்தது.


"லவ்லி" என்று தனக்குள் கூறிக்கொண்டே


"எங்க போனான் இந்த கவி போன் பண்ணி வரச்சொன்னான். ஆளையே காணோம்" என்று சுற்றி பார்த்தவன்


கவியரசனும் தன்னைத் தேடுவதைப் பார்த்தவன் அவனருகில் சென்று "என்னடா ஏதோ அவசரம்னு போன் பண்ண? கம்பெனில ஏதும் ப்ராப்ளமா?" என்று வினவும்


"கம்பெனில பிரச்சினைனா வீட்டுல வைத்து பேசிருப்பேனேடா. இது வேற" என்றான் கவியரசன்.


"வேற என்ன பிரச்சினை"என்று கேட்ட ஆதித்யாவைப் பார்த்து கவியரசன்


"ஸ்வேதாக்கு நிச்சயதார்த்தம் பண்ணிட்டாங்கலாம்டா. என்ன பண்ணுறதுனே தெரில" என்று வருத்தத்துடன் கூறிய கவியரசன் தோளில் தட்டி கொடுத்தவன்


"ஹே ரிலாக்ஸ் கவி.ஏன்டா இவ்வளவு அவசரம் அவங்களுக்கு? இன்னும் அவங்க ஸ்டடீஸ் கூட முடியலயே.சரி இன்னைக்கு நைட்டே அப்பாகிட்ட பேசிடலாம். டோன்ட் வொர்ரி" என்ற ஆதித்யா அடுத்தடுத்து என்ன செய்வதென்று மனதில் பட்டியல் போட ஆரம்பித்தான்.



மூச்சிறைக்க ஓடி வந்த வெண்பாவை பார்த்த நிகில்
"அம்மா வெண்பா நாய்கிட்ட வம்பிழுத்துட்டா போல எப்படி ஓடி வரா பாரு" என கை கொட்டி சிரித்தான்.



"டேய் வாய வச்சுட்டு கொஞ்ச நேரம் சும்மா இருடா" என்ற மஞ்சுளா வெண்பாவை பார்த்து


"ஏன்டீ இப்படி ஓடி வர்ர? நிகில் சொன்ன மாதிரி நாய் ஏதும் விரட்டுதா என்ன?" என்ற மஞ்சுளாவை பார்த்து கண்ணடித்து சிரித்து விட்டு தன்னறையை நோக்கி ஓடினாள் வெண்பா.


"என்னம்மா இது? இன்னைக்கு மழை வரப்போகுதோ என்னவோ வெண்பா ஸைலண்டா அதுவும் ஒரு மார்க்கமா வேற சிரிச்சுட்டுப் போறா. இதெல்லாம் சரியில்லமா பார்த்துக்க" என்ற நிகிலின் முதுகில் செல்லமாக தட்டிய மஞ்சுளா


"எப்போ பாரு அவகிட்ட வம்பு பண்ணிகிட்டு. போய் வேலைய பாருடா" என்று விட்டு சென்றார் மஞ்சுளா.


அறைக்குள் வந்து கதவை சாத்தி விட்டு கட்டிலில் விழுந்தவளுக்கு இன்னும் படபடப்பு குறையவில்லை.


ஆதித்யாவின் முகமே கண்களுக்குள் வந்தது.


"அந்த கண்கள் இரண்டும் அவன் சிரிக்கும் போது எவ்வளவு அழகாக இருந்தது. அந்த சிரிப்பு செம ஸ்மார்ட்.சின்ன பையனாமே எப்படி கதை விடுறான். நான் பொய் சொல்லி அவன் பேர் கேட்டத கண்டுபிடிச்சிருப்பானோ?" என்று தனக்குள் பேசிக் கொண்டிருந்த வெண்பா


"சே! என்னாச்சு எனக்கு? யாருனே தெரியாத ஒருத்தர பற்றி இவ்வளவு யோசிக்குறன். இதெல்லாம் சரியில்ல வெண்பா"என்று மனதைக் கட்டுப்படுத்த நினைத்தாலும் அவன் எண்ணங்கள் அவள் மனதில் எழுவதை தடுக்க முடியவில்லை.


மீண்டும் மீண்டும் ஆதித்யாவின் முகமே கண்களுக்குள் வந்து நின்றது.


தற்காலிகமாக அந்த எண்ணங்களை ஒதுக்கி வைத்தவள்
"குளிச்சு ப்ரெஸானாதான் மைண்ட் ரிலாக்ஸ் ஆகும். இல்லனா இந்த விக்ரமோட நினைப்பாவே இருக்கும்" என்று விட்டு குளியலறைக்குள் நுழைந்தாள் வெண்பா.




சிறிது நேரம் பார்க்கில் அமைதியாக அமர்ந்திருந்தனர் கவியரசனும் ஆதித்யாவும்.


"சரிடா கவி உனக்கு ஏதும் முக்கியமான வேலை இருக்கா?" என ஆதித்யா வினவவும்


"இல்லடா இனி வீட்டுக்கு தான் ஏன்?" என்று கவியரசன் கேட்கவும்


"அப்போ என்ன நீயே வீட்டுல கொண்டு போய் விடு" என்று கூறிய ஆதித்யாவைப் பார்த்து புன்னகைத்து விட்டு ஆதித்யாவும் கவியரசனும் காரை நோக்கி சென்றனர்.


ஹார்ன் சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்த கலையரசி
"என்னப்பா கவி சீக்கிரமா வந்துட்ட? ஆபீஸ்ல வேலையெல்லாம் முடிஞ்சதா?" என்று வினவியவர் அருகில் வந்த ஆதித்யாவைப் பார்த்து



"நீ எங்க இருந்துடா வர்ற? எல்லா இடமும் சுற்றி பார்த்துட்டியா?" என்று கேட்டார்.


"சுற்றி பார்க்கவா?" என்று அதிசயமாக பார்த்த கவியரசனைப் பார்த்து கண்சிமிட்டு விட்டு


"சும்மா" என்று கூறியவன் கலையரசியைப் பார்த்து


"அம்மா உன் கையால காபி சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. சுடச்சுட காபி போட்டு கொண்டு வாங்கமா" என்று ஆதித்யா கூறியதும்


"இதோ கொண்டு வரேன்" என்று விட்டு சமையலறையை நோக்கி சென்றார் கலையரசி.


"என்னடா அம்மா ஏதோ சொல்றாங்க? எங்க போன?"என்று கவியரசன் கேட்கவும்


"உன்ன பார்க்கத்தான் ரெடியாகி வந்தன். அம்மா பார்த்துட்டு எங்கடா போறனு கேட்டாங்க? அதான் வாய்க்கு வந்தத அடிச்சு விட்டன்" என்று கூறி சிரித்தான் ஆதித்யா.


"என்னப்பா சிரிப்பெல்லாம் பலமா இருக்கு?" என்றவாறு உள் நுழைந்த வெங்கடாசலத்தை பார்த்ததும்


அறைக்குள் செல்ல முனைந்த கவியரசன் கையை பிடித்து தடுத்து நிறுத்திய ஆதித்யா "எங்கடா ஓடப் பார்க்குற? பேசமா நில்லு" என்றவன்


"ஒண்ணுமில்லப்பா உங்ககிட்ட முக்கியமான விஷயம் ஒன்னு பேசனும். அதான் எப்படி ஆரம்பிக்கறதுனு பேசிட்டு இருந்தோம்" என்றதும்


"சொல்லுப்பா" என்றவாறு சோபாவில் அமர்ந்தார் வெங்கடாசலம்.


"நம்ம கவிக்கு என்ன வயசாகுது?" என்று ஆதித்யா கேட்கவும்


"என்னடா கேள்வி இது? உன்ன விட இரண்டு வயது பெரியவன். அப்படினா 29 வயசாகுது" என்றவாறு சமையலறையிலிருந்து வெளி வந்தார் கலையரசி.


வெங்கடாசலத்தைப் பார்த்ததும் சட்டென்று அமைதியாகி விட்டார் கலையரசி.


"பார்த்தீங்களா அம்மா எவ்வளவு நாளைக்கு இப்படி தனியாக கஷ்டப்பட்டுட்டே இருக்குறது? வீட்டு வேலைகளும் பார்த்துகிட்டு நம்ம எல்லாரயும் கவனிச்சுக்கனும். பாவம் இல்லையா அம்மா" என்ற ஆதித்யாவைப் பார்த்து


"இப்ப எதுக்கு நீ இவ்வளவு ஐஸ் வைக்குற அம்மாவுக்கு?" என்று கேட்டார் வெங்கடாசலம்.



அவர் முன்னால் சென்று அவரது கைகளை எடுத்து தன் கையில் வைத்து "அப்பா அண்ணணுக்கும் வயது கூடிட்டே போகுது. அம்மாவுக்கும் ஓய்வு தேவை.அதனால..." என்று இழுத்து ஆதித்யாவைப் பார்த்து புன்னகத்தவர்


"நீ சொல்ல வர்றது புரியுது. கவி கல்யாண விஷயமாகத்தான் என் ப்ரெண்ட மீட் பண்ணிட்டு வரேன்" என்றார் வெங்கடாசலம்.


"இது என்னடா புது ட்விஸ்ட்டு" என்பது போல ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் ஆதித்யாவும் கவியரசனும்.


"உங்களுக்கு எதுக்குப்பா கஷ்டம்.கவி ரொம்ப நல்லவன். கவியே நல்ல பொண்ணா பார்த்து வைத்திருப்பான். இல்லடா கவி?" என்று கவியரசனைப் பார்த்து ஆதித்யா கேட்கவும் கண்கள் இரண்டும் தெறித்து விழுந்து விடும் அளவிற்கு திரு திருவென விழித்துக் கொண்டிருந்தான் கவியரசன்.


"என்ன???" என்று ஒன்றாக அதிர்ச்சியோடு வினவினர் கலையரசியும் வெங்கடாசலமும்.


"ஏன் இவ்வளவு ஷாக்காகுறீங்க. கவி பண்ணது ஒன்னும் தப்பில்லையே. அப்பா நீங்க பார்த்து நிச்சயம் பண்ணுற பொண்ண உங்க சந்தோஷத்திற்காக கல்யாணம் பண்ணி கடைசி வரை பொய்யா ஒரு வாழ்க்கை வாழ்றத விட அவன் மனசுக்கு புடிச்ச பொண்ணோட சந்தோஷமா வாழட்டுமேபா" என்று கூறி விட்டு வெங்கடாசலத்தின் முகத்தையே பார்த்து கொண்டிருந்தான் ஆதித்யா.

எதுவும் பேசாமல் அமைதியாக தன்னறையை நோக்கி சென்றார் வெங்கடாசலம்.


ஆதித்யாவின் அருகில் வந்து தோளைத் தொட்ட கவியரசனைப் பார்த்து "அப்பா எப்படியும் சம்மதிச்சுடுவாரு. நீ அதையே நினைச்சு கவலைப்படாதே. போய் ரெஸ்ட் எடு" என்று கூறி விட்டு


ஆதித்யா கலையரசி அருகில்
"அம்மா நீங்களாவது ஏதாவது சொல்லுங்கம்மா" என்றதும் கவியரசனையும் ஆதித்யாவையும் மாறி மாறி பார்த்தவர்



கவியரசனைப் பார்த்து "ஆதி சொன்னதுலாம் உண்மையா கவி?" என்ற கலையரசியைப் பார்த்து


"அம்மா ஸ்வேதா ரொம்ப நல்ல பொண்ணுமா. நம்ம வீட்டுக்கு ஏத்தவ. அவளப் பார்த்தா உங்களுக்கு கட்டாயம் பிடிக்கும்" என்ற கவியரசனைப் பார்த்து புன்னகத்தவர்


"எனக்கு உங்க இரண்டு பேரோட சந்தோஷம் தான் முக்கியம். அதற்காக உங்க அப்பா பேச்சையும் மீறி நடக்க மாட்டேன்" என்று விட்டு கலையரசியும் சென்று விட ஆதித்யாவும் கவியரசனைப் பார்த்து விட்டு அவனறைக்கு சென்றான்.



குளித்து முடித்து விட்டு வெண்பா அறைக்குள் நுழைய சரியாக அவளது தொலைபேசி சிணுங்கியது.


போனை எடுத்து பார்த்தவள் திரையில் ஒளிர்ந்த பெயரைப் பார்த்து புன்னகத்து விட்டு போனை அட்டன்ட் செய்து காதில் வைத்தவள் மறுமுனையில் சொன்ன செய்தியைக் கேட்டு "என்ன????" என்று அதிர்ச்சியாக நின்றாள்......
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top