• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Un vizhiyil veezhnthenada-6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
அதிர்ச்சியில் உறைந்து நின்ற வெண்பாவை

"ஹலோ ஹலோ வெண்பா லைன்ல இருக்கியா?" என்ற ஸ்வேதாவின் குரலில் தன்னை மீட்டுக் கொண்டவள்


"என்ன ஸ்வேதா சொல்ற? உன்னோட மேரேஜ் கேன்சல் ஆயிடுச்சா? என்னால நம்ப முடியல. காலையில தான் மேரேஜ் பிக்ஸ்ட்னு சொன்ன இப்போ கேன்சல்னு சொல்ற" என்று வெண்பா கேட்கவும்


"உனக்கே இப்படி இருந்தா என்னால இன்னும் நம்ப முடியலடி" என்று கூறி சிரித்த ஸ்வேதாவிடம்


"நான் தான் காலையிலேயே சொன்னன்லே. நீ ஆசைப்பட்ட மாதிரி உனக்கு எல்லாம் நடக்கும்னு இப்போ பார்த்தியா?" என்று வெண்பா கேட்கவும் "உன் வாய்க்கு சர்க்கரையை தான் போடனும்" என்றாள் ஸ்வேதா.


"அது சரி என்ன ஆச்சுனு டீடெய்லா சொல்லு. என் குட்டி மூளையால நிறைய யோசிக்க முடியாது" என்று வெண்பா கூறவும் "சரி சரி சொல்றன்" என்று விட்டு நடந்ததைக் கூறத் தொடங்கினாள் ஸ்வேதா.



(சின்னதாக பிளாஷ்பேக்)

காலேஜ் முடிந்து வீடு செல்லும் வரை எப்படி இந்த திருமணத்தை நிறுத்துவது எப்படி தன் காதலை வீட்டில் சொல்வது என்று யோசித்தவாறு சென்றாள் ஸ்வேதா.


வீட்டினுள் நுழைந்தவள் ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்தாள்.


அவளது தந்தை சேகர் மும்முரமாக போனில் யாருடனோ பேசிக் கொண்டிருக்க அவளது அத்தை கனகம்பாள் மூலையில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்க அவரிடம் ஸ்வேதாவின் தாய் சம்யுக்தா ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார்.


ஸ்வேதாவைப் பார்த்ததும் அவளருகில் எழுந்த வந்த கனகம்பாள் "ஐயோ என் தங்கமே!!! உன் வாழ்க்கையை நானே சீரழிச்சுட்டேனே. செவனேனு இருந்த பொண்ணு உன் மனசுல ஆசைய வளர்த்துட்டு இப்படி எதுவும் நடக்க முடியாம போச்சே!! பாவி இப்படி பண்ணுவானு நான் நினைச்சு கூட பார்க்கலயே" என்று தலையில் அடித்துக் கொண்டு கதறியவரைப் பார்க்க பாவமாக இருந்தாலும் அவளுக்கு சரியாக எதுவும் புரியவில்லை.


"அத்தை ஏன் இப்படி அழுவுறீங்க? நீங்க சொல்றது ஒண்ணுமே எனக்கு புரியல. கொஞ்சம் தெளிவா சொல்லுங்க" என்ற ஸ்வேதாவைப் பார்த்து சம்யுக்தா "உள்ளே வா சொல்றன்" என்று கை பிடித்து அறைக்குள் அழைத்து சென்றவர் வெளியில் யாருக்கும் கேட்காதவாறு மெல்லிய குரலில்


"உனக்கு நிச்சயம் பண்ணுனமே பாஸ்கர் அவன் அவனோட காலேஜ்ல படிக்குற பொண்ண கூட்டிட்டு ஓடிப் போய்ட்டான். கடைக்கு போய்ட்டு வீட்டுக்கு போன அத்தை மேஜை மேல இருந்த லெட்டர எடுத்து படிச்சுட்டு நேரா இங்க வந்து ஒரே அழுகை. என்ன பண்றதுனே தெரியல. அப்பாவும் பாஸ்கர் போனுக்கு ட்ரை பண்ணா கிடைக்கல. அதான் அவன் ப்ரெண்ட்ஸ்க்கு எடுத்து அவனப் பத்தி விசாரிச்சுட்டு இருக்காரு. நல்ல வேலை நிச்சயதார்த்தம் தான் முடிஞ்சது. கல்யாண மேடையில வச்சு அவமானப் படுத்தாம போய்டான். இல்லனா உன் வாழ்க்கை என்ன ஆகியிருக்கும்? எல்லாம் கடவுள் புண்ணியம்" என்று விட்டு சம்யுக்தா செல்ல ஓடிச்சென்று கதவை சாத்தி விட்டு வந்த ஸ்வேதா துள்ளிக் குதித்து மகிழ்ந்தவள் உடனடியாக போனை எடுத்து கவியரசனுக்கு அழைத்தாள்.


நான்கு ஐந்து முறை ரிங் போனது ஆனால் பதில் இல்லை. ஏமாற்றத்துடன் போனை பார்த்தவள் உடனடியாக வெண்பாவிற்கு அழைத்தாள்.




"அப்படியே கனவு மாதிரி இருக்கு வெண்பா" என்று ஸ்வேதா கூறியதும் "ஏதோ மெடிக்கல் மிராக்கல் உன் லைப்ல விளையாடுது போல என்ஜாய் என்ஜாய். ஆமா ஏன் அண்ணா போன் அட்டன்ட் பண்ணல" என்று வெண்பா வினவவும்


"தெரியலயே ஏதும் வேலைல இருக்காரு போல. போன் பார்த்தா திரும்ப கூப்பிடுவாரு" என்றாள் ஸ்வேதா.


"சரி ஸ்வேதா எப்படியோ உன் ரூட் கிளியர் ஆச்சு. இப்படியே சந்தோஷமா இரு" என்ற வெண்பாவிற்கு "ரொம்ப தாங்ஸ்டி" என்று விட்டு போனை கட் செய்தாள் ஸ்வேதா.


ஸ்வேதாவிடம் பேசிய பிறகு மனம் இலேசானது போல இருந்தது வெண்பாவிற்கு.


அதே மகிழ்வுடன் அறையில் இருந்து வெளியேறி ஹாலுக்கு சென்றாள் வெண்பா.


"வாங்க வாங்க வெண்பா மேடம். இப்போதான் ஹாலுக்கு வழி தெரிஞ்சுதா?" என்று கேலி பண்ணிய நிகிலின் மேல் குஷனைத் தூக்கி போட்ட வெண்பா "ஏதோ சின்னபையன் போனா போகுதுனு விட்டா ஓவரா போற. இரு இரு உன் மிஸ்கிட்ட மாட்டிக் கொடுக்குறன்" என்றவளைப் பார்த்து சிரித்த நிகில்


"வெண்பா நீ காலேஜ் போற பொண்ணு. அப்படி நடந்துக்க ட்ரை பண்ணு. அத விட்டுட்டு இன்னும் சின்ன புள்ளையாட்டம் மிஸ் கிட்ட சொல்லுவன் அம்மாகிட்ட சொல்லுவனு சொல்ற. நீ இன்னும் வளரனும் மிஸ் வெண்பா" என்றவனைப் பார்த்து கொலைவெறியுடன் முறைத்தாள் வெண்பா.


"வெண்பா நிகில் சாப்பிட வாங்க" என்ற மஞ்சுளாவின் அழைப்பில் "சாப்பாடா? கோபமா?" என மனதில் கணக்குப் போட்டு பார்த்த வெண்பா "நமக்கு சோறு தான் முக்கியம்" என்று விட்டு சாப்பிட சென்றாள்.


இரவுணவைத் தயார் செய்து விட்டு வந்த கலையரசி ஆதித்யாவின் அறைக்குச் சென்று கதவைத் தட்டி "ஆதி சாப்பிட வா" என்றதும் மடியில் இருந்த லெப்டாப்பை எடுத்து மேஜை மீது வைத்துவிட்டு கதவை திறந்தவன் "நீங்க ஏன்மா கஷ்டப்படுறீங்க? வேலை பார்க்குற யாரிடமாச்சும் சொல்லி இருந்தா வந்திருப்பேனே" என்ற ஆதித்யாவைப் பார்த்து புன்னகத்தவர் "உங்க அப்பா தான் வேலைக்காரங்க எல்லாருக்கும் இன்னைக்கு லீவு போட்டு அனுப்பி வைக்கச் சொன்னார்" என்ற கலையரசியை ஆச்சரியமாக பார்த்த ஆதித்யா "ஏன்மா?" என்று கேட்கவும் "தெரியலப்பா. அப்பா காத்துட்டு இருக்காங்க. நீ போ நான் கவியயும் கூட்டிட்டு வரேன்" என்ற கலையரசியை தடுத்த ஆதித்யா "நீங்க போங்கமா நான் கூட்டிட்டு வரேன்" என்று விட்டு கவியரசன் அறையை நோக்கி சென்றான் ஆதித்யா.



"கவி கதவைத் தொற" என்று ஆதித்யா கதவைத் தட்டவும் கதவைத் திறந்த கவியரசன் முகம் பிரகாசமாக இருப்பதைக் கவனித்த ஆதித்யா "என்னடா ரூமுக்குள்ள போக முன்னாடி எதையோ பறி கொடுத்தவன் மாதிரி போன இப்போ என்னனா முகம் பூரா ஆயிரம் வாட்ஸ் பல்ப் மாதிரி பிரகாசமா இருக்கு?" என்ற ஆதித்யாவை ஆரத்தழுவிய கவியரசனை விலக்கி நிறுத்தியவன் "என்னடா நடக்குது? சொல்லேன்டா. ஆளாளுக்கு சஸ்பென்ஸ் வைக்குறீங்க. மீ பாவம்" என்றவனைப் பார்த்து சிரித்த கவியரசன் "ஸ்வேதா மேரேஜ் கேன்சல்ட். அவளுக்கு பார்த்த பையன் ஓடிப் போய்டானாம்" என்று சிரித்தவனை மேலிருந்து கீழாக பார்த்த ஆதித்யா "இந்த உலகத்திலேயே ஒரு பொண்ணோட மேரேஜ் நின்னு போனத நினைச்சு சந்தோஷப்படுற ஒரே ஆள் நீதான்" எனவும் "நான் சந்தோஷப்படாம வேற யாருடா சந்தோஷப்படுவா?" என்ற கவியரசனைப் பார்த்து ஏதோ சொல்ல வாயெடுத்த ஆதித்யா "ஆதி கவி சாப்பிட வாறீங்களாப்பா?" என்ற கலையரசியின் குரலில் பேசுவதை தற்காலிகமாக நிறுத்தியவர்கள் டைனிங் ஹாலுக்கு சென்றனர்.



அங்கு ஏற்கனவே அமர்ந்திருந்த வெங்கடாசலத்தை பார்த்து விழித்த கவியரசன் கையை பிடித்து அழைத்து சென்று அவரருகில் அமரச் செய்த ஆதித்யா கவியரசன் எதிரில் அமர்ந்து கொண்டான்.


"கவி உனக்கு அந்த பொண்ண எவ்வளவு நாளா தெரியும்?" என்ற வெங்கடாசலத்தின் கேள்வியில் விழித்தவனைப் பார்த்து "பேசுடா" என்று ஆதித்யா கையை காட்டவும் தடுமாறிய படியே "இரண்டு வருஷமா தெரியும்" என்று தலை குனிந்தவாறே பதில் சொன்னான் கவியரசன்.


"ஓஹ்...ஒரு வேளை இந்த திருமணத்துக்கு நான் சம்மதிக்கலனா?" என்ற வெங்கடாசலத்தை அதிர்ச்சியாக பார்த்த கவியரசன் "அவ ரொம்ப நல்ல பொண்ணு. நீங்க அவளப் பார்த்து பேசுனா நிச்சயம் அவள மருமகளா ஏத்துக்குவீங்க.எனக்கு அவள ரொம்ப பிடிக்கும்.அவ இல்லாம ஒரு லைப் எனக்கு வேண்டாம்பா.நான் இதுவரைக்கும் உங்ககிட்ட எதுவும் கேட்டதில்ல. முதல் தடவை கேட்குறன். ஸ்வேதாவ இந்த வீட்டு மருமகளா ஏத்துகோங்கப்பா" என்று மூச்சு விடாமல் பேசிய கவியரசன் தோளில் தட்டி கொடுத்தவர்


"சபாஷ் இதுதான் நான் எதிர்பார்த்தது. நம்ம தேவைகளை நாம தான் முன்னின்று பேசனும். அதனால்தான் அப்படி கேட்டேன்.என் கவி ஆசைப்பட்டத செய்ய வேண்டியது என்னோட கடமை. எனக்கு உங்க சந்தோஷம் தான் முக்கியம் நாளைக்கே அந்த பொண்ணு வீட்டுக்கு போய் பேசுறன்" என்ற வெங்கடாசலத்தினை தாவி அணைத்த கவியரசன் "தாங்க்ஸ்பா ரொம்ப ரொம்ப தாங்ஸ்" என்று கண்ணீர் விடவும் வெங்கடாசலத்தின் கண்களும் கலங்கியது.


முதன்முதலாக மனம் திறந்து பேசிய தன் கணவரைப் பார்க்க கலையரசிக்கும் ஆனந்தமாக இருந்தது.




தன் கலங்கிய கண்களை யாரும் கவனிக்காத வண்ணம் துடைத்து கொண்டு ஆதித்யா "சென்டிமென்ட முடிங்கப்பா. பசி தாங்கல. ஒரு குழந்தைய இப்படி பட்டினி போடலாமா? அந்த கடவுளுக்கே அடுக்காது" என்ற ஆதித்யாவைப் பார்த்து சிரித்த வெங்கடாசலம் கலையரசியைப் பார்த்து "சாப்பாடு எடுத்து வைம்மா" என்றார்.


வெகு நாட்களுக்குப் பிறகு வெங்கடாசலத்தின் மனமும் நிறைந்தது போல இருந்தது.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top