• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Un vizhiyil veezhnthenada-7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
காலையில் விழித்து எழுந்தது முதல் வெண்பாவிற்கு மனதில் ஏனோ ஓர் இனம் புரியாத படபடப்பு.



"சே! நைட் பூரா தூங்க விடாம வந்து இம்சை பண்ணுன விக்ரம் இப்போ காலையிலேயே வந்துட்டானே!" என்று தனக்குள்ளேயே பேசிக் கொண்ட வெண்பா வழமையை விட சந்தோஷமாக தயாரானாள்.



அதே மனநிலையுடன் தன் வேலைகளை முடித்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறிய வெண்பா பார்க்கிற்கு அருகில் செல்லும் போது அவள் கால்கள் தானாக பிரேக்கை அழுத்தியது.



"நிற்காதே! போ" என மூளை ஒரு பக்கம் கட்டளையிட "பார்க்கிற்கு உள்ளே சென்று அவன் உள்ளே இருக்கிறானா? என்று பார்த்தால் தான் என்ன?" என்று மனம் ஒரு புறம் குரலெழுப்பியது.



மனமும் மூளையும் ஒன்றுக்கொன்று போட்டியிட்டுக் கொண்டிருக்க வெண்பாவின் கால்களோ பார்க்கை நோக்கி நடை போட்டது.



"நேற்று வந்த விக்ரம் இன்னைக்கு வருவாரா? அதேபோல வந்து பேசுவாரா?" என்று தனக்குள்ளேயே பேசிக் கொண்டு பார்வையை சுழல விட்டவள் கண்களுக்குள் ஆதித்யா அகப்படவில்லை.



ஐந்து நிமிடங்கள் காத்திருந்தவள் "அந்த ஆதித்யாவ ஐந்து நிமிஷம் பார்த்திருப்பேனா? இப்படி அவனையே நினைச்சு நினைச்சு லூசாகிடுவேனோ தெரியலயே?" என்று விட்டு தன்னை ஆதித்யாவின் பெயரை சொல்லி கொண்டு அங்குமிங்கும் அலைந்து திரிவதைப் போல கற்பனை செய்து பார்த்தவள் அவளையும் அறியாமல் சத்தம் போட்டு சிரித்து விட அவளருகில் இருந்தவர்கள் அவளையே விசித்திரமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.



அதற்கு மேல் அங்கிருக்கப் பிடிக்காமல் பார்க்கை விட்டு வெளியேறி காலேஜ் நோக்கி பயணமானாள் வெண்பா.



காலேஜிற்கு வந்த பின்பும் ஏனோ அவள் மனதின் ஓரம் சிறு ஏமாற்றம் இருந்து கொண்டே இருந்தது.


அதனை வெளிக்காட்டாது முயன்று புன்னகையை வரவழைத்துக் கொண்டு தன் நண்பர்களைக் காண சென்றாள் வெண்பா.


வெண்பாவை கண்டு கொண்ட மித்ராவும் ஸ்வேதாவும் "ஹாய் வெண்பா" என்றபடி அவளருகில் வர தன் மன எண்ணங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு



"ஹாய்! ஹாய்! என்ன ஒரே அதிசயமா இருக்கு. இரண்டு பேரும் இவ்வளவு ஏர்லியா வந்திருக்கீங்க? நம்ப முடியலயே" என்ற வெண்பாவைப் பார்த்து ஸ்வேதாவும் மித்ராவும் சிரித்து விட்டு "அத நீ சொல்றியா? கிளாஸ்க்கு ப்ரபொஸர கூட்டிட்டு தானே டெய்லி நீ வருவ" என்றவர்களைப் பார்த்து


"கம்பெனி சீக்ரெட்ட வெளில சொல்லாத. விஐபி னா அப்படித்தான்" என்ற வெண்பாவைப் பார்த்து "எது அந்த விஐபி னா வேலை இல்லா பட்டதாரி தானே?" என்று மித்ரா கேட்கவும்





"இன்னைக்கு என்ன வைச்சு செய்றதுனு முடிவெடுத்துட்டீங்க. கமான் ஸ்டார்ட்" என்று வெண்பா கூறவும் "அதுக்கெல்லாம் டைம் இல்ல. காலேஜ் முடிஞ்சதும் நேரா நம்ம ஏரியா ரெஸ்ட்டாரண்ட் போறோம். இன்னைக்கு உங்க ரெண்டு பேருக்கும் என்னோட ட்ரீட்" என்றாள் ஸ்வேதா.


"என்னடி உங்க அத்தை பையன் ஓடிப் போனதுக்கு ட்ரீட்டா?" என்று அதிர்ச்சியான மித்ராவைப் பார்த்து சிரித்த ஸ்வேதா


"அதுக்கு யாரு ட்ரீட் வைப்பா? டபுள் சர்ப்பரைஸ் இன்னைக்கு ஸோ அதுக்கு தான் ட்ரீட்" என்று ஸ்வேதா கூறவும் "டபுள் சர்ப்பரைஸா என்ன அது?" என்று கேட்டாள் மித்ரா.



"நேத்து நைட் நேரத்தோட தூங்கிட்டனா காலையில எழுந்து பார்த்த போன்ல 30 மிஸ்ட் கால்ஸ் கவிகிட்ட இருந்து உடனே போன் பண்ணி என்னாச்சுனு கேட்டதும் அவங்க வீட்ல எங்க லவ்வ சொல்லிட்டாருனும் அத அக்செப்ட் பண்ணிட்டாங்கனும் சொன்னதும் முதல்ல எனக்கு ஒண்ணுமே புரியல. அப்புறம் தான் எல்லாம் டீடெய்லா சொன்னாரு. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அது மட்டுமில்ல இன்னைக்கே எங்க வீட்டுக்கு வந்து பேசுறனு சொன்னாரு. நான் தான் இப்போ வேண்டாம் அத்தை அப்பா எல்லாம் கொஞ்சம் நார்மல் ஆகட்டும்னு சொன்னதும் சரினு சொல்லிட்டு போனை வைச்சுட்டாரு. சரி குளிச்சுட்டு காலேஜ் வர ரெடி ஆகலாம்னு எழுந்தனா அத்தை திடீரென்று சத்தம் போடத் தொடங்கினாங்க.


இப்ப என்ன ஆச்சோனு நான் வெளியில் போய் பார்த்தா மாலையும் கழுத்துமா பாஸ்கரும் அந்த பொண்ணும் நின்னுட்டு இருந்தாங்க. அத்தை ஓவரா திட்டத் தொடங்கிட்டாங்க. எல்லோரும் வேடிக்கை பார்க்கவும் அப்பா தான் அத்தைய சமாதனப்படுத்தி அவங்க வீட்ல பாஸ்கரயும் அந்த பொண்ணயும் கொண்டு போய் விட்டுட்டு வந்தாங்க.எனக்கு லைட்டா ஒரு பயம் இருந்துச்சு. எங்க பாஸ்கர் கிட்ட பேசி அவன கூட்டிட்டு வந்துடுவாங்களோனு நல்ல வேலை தப்பிச்சேன்"என்ற ஸ்வேதாவை கண்ணிமைக்காது பார்த்த மித்ராவை தட்டி எழுப்பினாள் ஸ்வேதா.


"என்னடி நான் என்ன கதையா சொல்லிட்டு இருக்கன்? இப்படி வாயைப் பிளந்து பார்த்துட்டு இருக்க?" என்று ஸ்வேதா கோபமாக கேட்கவும் "சத்தியமா ஏதோ சினிமா பார்த்த மாதிரியே இருந்துச்சு ஸ்வேதா. ஒரு ஷாக் முடிறதுக்குள்ள நெக்ஸ்ட் ஷாக். இப்படி எல்லோருக்கும் அமையாது நீ ரொம்ப லக்கி. ஆனாலும் உங்க அத்தை பையன் உண்மையாவே ஓடிப் போனானா இல்ல நீ ஏதும் கோல்மால் பண்ணி ஓட வச்சியா" என்ற மித்ராவைப் பார்த்து முறைத்தவள் அப்போது தான் வெண்பாவைக் கவனித்தாள்.



"ஏய் வெண்பா! எந்த உலகத்துல இருக்க? நாங்க பாட்டுக்கு பேசிட்டு இருக்கம். நீ வேற எதையோ யோசிச்சுட்டு இருக்க? நீ வந்ததுல இருந்து சரியாகவே இல்ல.என்னடி ஆச்சு?" என்றவர்களைப் பார்த்து திரு திருவென விழித்தவள்


"ஆஹ்... அது வந்து நான் சும்மா..இல்ல இல்ல ஈவ்னிங் மதியையும்,பூவையும் பார்க்க போகலமானு யோசிச்சேன். ஆனா ட்ரீட்னு சொன்னியே அதான் உனக்கு எப்படி செலவு வைக்கலாம்னு யோசிச்சேன்?" என்று சிரித்தவளைப் பார்த்து புன்னகத்த ஸ்வேதா "நீ சிரிக்கும் போது இன்னும் அழகா இருக்க வெண்பா" என்றவளைப் பார்த்து




"ஏன்டி காலையிலேயே இப்படி ஐஸ் வைக்குற? சரி வாங்க கிளாஸ்க்கு போகலாம்" என்ற வெண்பாவோடு எழுந்து சென்றனர் மித்ராவும் ஸ்வேதாவும்.


ஜாக்கிங் முடித்து விட்ட வந்த கவியரசன் மற்றும் ஆதித்யாவிற்கு காபி கொண்டு வந்து கொடுத்த கலையரசி "என்னப்பா சென்னை பூரா ஒரே நாள்ல சுத்தி பார்த்துட்டீங்க போல" என கேட்கவும் "ஏன்மா இப்படி கேட்குறீங்க?" என ஆதித்யா கேட்கவும் "மணி என்ன ஆகுது? காலையில ஆறு மணிக்கு போன ரெண்டு பேரும் வந்த நேரத்த பாருங்க. ஒன்பது ஆகப் போகுது" என்ற கலையரசியைப் பார்த்து கவியரசன்



"இன்னைக்கு ஆதி ஆபீஸ்ல பார்ட்னரா ஜாயின் பண்றான்லே. அது விஷயமா பேசிட்டு கம்பெனி டீடெய்ல்ஸ்லாம் சொல்லிட்டு வந்ததுல டைம் போனதே தெரியலமா. நான் போய் குளிச்சுட்டு வரேன்மா.ஆதி நீயும் ரெடி ஆகு" என்று சொல்லிவிட்டு சென்ற கவியரசனைப் பார்த்த ஆதித்யா



"நீ இவ்வளவு நேரம் கம்பெனி டீடெய்ல்ஸாடா சொன்ன? நானா கேட்கவும் தானேடா ஒன்று இரண்டு வார்த்தை பேசுன. இப்போ அப்படியே உல்டாவ சொல்றியே. நீ பிழைச்சுக்குவ" என்று விட்டு ஆதித்யாவும் ஆபீஸ் செல்ல தயாராக சென்றான்.



ஆபீஸ் செல்ல தயாராகி வந்த ஆதித்யாவையும் கவியரசனையும் ஒன்றாக நிற்க வைத்து சுற்றி போட்டார் கலையரசி.


"அம்மா நான் என்ன பர்ஸ்ட் டே ஸ்கூல்க்கா போறேன். இவ்வளவு பண்ணுறீங்க?" என்று ஆதித்யா கேட்கவும்


"எத்தனை வருஷம் ஆனாலும் நீங்க இரண்டு பேரும் எனக்கு சின்ன பையன் தான்" என்று விட்டு டிபன் எடுத்து வரச் சென்றார்.


பூஜை அறையில் இருந்து வெளியே வந்த வெங்கடாசலத்திடம் ஆசிர்வாதம் பெற்று விட்டு காலையுணவை முடித்து விட்டு ஆபீஸ் செல்ல வெளியேறினர் ஆதித்யா மற்றும் கவியரசன்.


"கவி ஒரு நிமிஷம்" என்ற வெங்கடாசலத்தின் அழைப்பில் திரும்பிய கவியரசனைப் பார்த்து "இன்னைக்கு நாள் நல்லா இல்ல. அதனால நாம அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை நம்ம மருமகள பார்க்க வரோம்னு சொல்லிடு" என்றவரைப் பார்த்து புன்னகையுடன் "சரிப்பா சொல்லிடுறன்" என்று கூறினான் கவியரசன்.


ஆதித்யா காரை ஸ்டார்ட் செய்து கவியரசன் அருகில் கொண்டு வர "நான் எடுத்துட்டு வந்திருப்பேனே நீ ஏன்டா ஆதி கஷ்டப்படுற" என்று கேட்ட கவியரசனைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டவன்


"ஐயோ!! சாமி வேண்டாம். நீ அப்பா உன் லவ்வ அக்செப்ட் பண்ணதுல இருந்து ஒரு மார்க்கமா இருக்க. உன்ன நம்பி என் வாழ்க்கையை நான் பணயம் வைக்க மாட்டேன். உனக்காச்சும் ஒரு லவ்வர் இருக்கு. எனக்கு கேர்ள் பிரெண்ட்ஸ் கூட இல்ல. ஒரு பொண்ணுகிட்ட கூட பேசுனது இல்ல தெரியுமா?" என்று முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கூறியவனைப் பார்த்து "உன் கிட்ட பேசி என்னால ஜெயிக்க முடியாது" என்று விட்டு காரில் ஏறி அமர்ந்தான் கவியரசன்.



ஆபீஸ் பார்க்கிங்கில் காரை நிறுத்திய ஆதித்யா கவியரசனோடு சேர்ந்து உள் நுழைந்த போது அவனை வரவேற்க பூங்கொத்துகளோடு அனைவரும் வந்து சேர்த்தனர்.


இதனை எதிர்பார்க்காத ஆதித்யா கவியரசன் புறம் திரும்பி "என்னடா இதெல்லாம்?" என்று கேட்கவும்


"என்னதான் நீ என் தம்பியா இருந்தாலும் இப்போ நீ வன் ஒஃப் த பார்ட்னர் ஒஃப் KV PVT.Ltd ஸோ அந்த மரியாதையை தரத் தானே வேணும்" என்ற கவியரசனைப் பார்க்க பெருமையாக இருந்தது ஆதித்யாவிற்கு.


பொதுவான கம்பெனி விஷயங்கள் பற்றி பேசிக் கொண்டே ஆதித்யா பிஸியாகி விட கல்லூரியில் வெண்பாவோ எதிலும் ஈடுபாடு இன்றி பாடத்தைக் கவனிப்பது போல பாசாங்கு காட்டிக் கொண்டிருந்தாள்.
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
காலேஜ் முடிந்ததும் மஞ்சுளாவிற்கு போன் எடுத்த வெண்பா "அம்மா நான் வர கொஞ்சம் லேட் ஆகும். ஸ்வேதா மித்ரா கூட ரெஸ்ட்டாரண்ட் போறேன்" எனவும்


"பார்த்து போயிட்டு வா ரொம்ப லேட் ஆகிடாத" என்ற மஞ்சுளாவிடம் "டோன்ட் வொர்ரி மஞ்சு நம்ம பக்கத்து தெருவில இருக்குற ரெஸ்ட்டாரண்ட் தான். ஸோ லேட் ஆகாது" எனவும்" சரி ஜாக்கிரதை" என்று விட்டு போனை வைத்தார் மஞ்சுளா.


"சரி கிளம்பலாமா?" என்று ஸ்வேதாவிடம் கேட்ட மித்ராவிடம் "ஜஸ்ட் பை மினிட்ஸ்" என்று விட்டு சென்றவள் போனை எடுத்து யாரிடமோ பேசி விட்டு வந்து "வீட்ல சொன்னேன்பா. வாங்க போகலாம்" என்றவளை நம்பாமல் பார்த்தனர் வெண்பாவும்,மித்ராவும்.



"ஏன்டீ இப்படி பார்க்குறீங்க? சத்தியமா அம்மாகிட்ட தான் பேசுனன் வேணா போனை பார்க்குறீங்களா?" என்று பைக்குள் இருந்த போனை எடுக்கப் போனவளைத் தடுத்த வெண்பா "சரி நம்பிட்டோம். வா லேட்டாகுது. நீ அரிச்சந்திரனோட லேட்டஸ்ட் பீமெல் வேர்ஸன் போதுமா? வா" என்று கூறி சிரித்துக் கொண்டே ரெஸ்ட்டாரண்ட் நோக்கி சென்றனர்.



ரெஸ்ட்டாரண்டை அடைந்தவர்கள் உள் நுழையும்போது "ஏய் மித்து! வெண்பா! ஒரு நிமிஷம் நில்லுங்கபா. இன்னும் இரண்டு பேர் வர இருக்காங்க" என்ற ஸ்வேதாவை மேலும் கீழும் பார்த்த மித்ரா


"என்னது இன்னும் இரண்டு பேரா?யாரு அந்த இரண்டு பேர்? அப்போ அவங்கள கூப்பிடத்தான் போன் பண்ண போனியா?" என்று கேட்கவும்



"இல்ல இல்ல அம்மாக்கு தான் போன் பண்ணன். இது காலையிலேயே அவங்க வாரதா சொல்லிட்டாங்க" என்ற ஸ்வேதாவைப் பார்த்து வெண்பா



"ஓஹ்... ஆல்ரெடி பக்காவா பிளான் போட்டுட்டு எங்ககிட்ட அப்போதான் ரெடியான மாதிரி கதை அளந்து விட்டியா?" என்றதும் "ஹேய் அப்படிலாம் இல்லபா. உங்களுக்கு சர்ப்பரைஸா இருக்கட்டும்னுதான் சொல்லல. இங்க வந்து சொல்லலாம்னு இருந்தன். அதுக்குள்ள நீங்க இப்படி சொல்றீங்களே" என்ற ஸ்வேதாவைப் பார்த்து



"சரி சரி டேம திறந்துடாத. ஊர் தாங்காது. நாங்க முன்னாடி போறோம். நீயே அவங்கள கூட்டிட்டு வா" என்று விட்டு வெண்பாவும் மித்ராவும் உள்ளே சென்றனர்.


ஒரு மேஜையைத் தெரிவு செய்து அமர்ந்ததும் மித்ரா அவள் போனை எடுத்து பார்க்கத் தொடங்க வெண்பா சுற்றிலும் பார்வையை சுழலவிட்டாள்.



அந்த ரெஸ்ட்டாரண்டின் பின்புறம் பெரிய நீச்சல் தடாகம் ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது.



அதில் பல குழந்தைகள் விளையாட அதனைப் பார்த்துக் கொண்டிருந்த வெண்பா "அவங்க வராங்க" என்ற மித்ராவின் குரலில் திரும்பியவள் ஸ்வேதா கவியரசனோடு வந்த ஆதித்யாவைப் பார்த்து ஆனந்த அதிர்ச்சி அடைந்தாள்.



தன்னையறிமால் வெண்பா எழுந்து கொள்ள மித்ராவும் எழுந்து கொள்வதைப் பார்த்த ஆதித்யா "என்னபா இது இவ்வளவு மரியாதை நம்மளுக்கு?" என்று விட்டு சிரிக்கவும் வெண்பா கையை இழுத்து நடப்பிற்கு கொண்டு வந்தாள் மித்ரா.



உடனே தன்னை சுதாரித்துக் கொண்ட வெண்பா அமைதியாக அமர்ந்தாள்.



மித்ரா கேள்வியாக ஸ்வேதாவைப் பார்க்க "இவங்க ஆதித்யா. அவரோட தம்பி. லண்டனில் இருந்து இரண்டு நாள் முன்னாடி தான் வந்தாங்க" என்றதும் மரியாதை நிமித்தம் புன்னகத்து வைத்தாள் மித்ரா.


வெண்பாவிற்கோ எல்லையில்லா ஆனந்தம். யாரைக் காலையில் இருந்து மனம் தேடியதோ தன் எதிரில் அவன். நிமிர்ந்து அவன் முகம் பார்க்க மனம் தூண்டினாலும் பெண்ணவளுக்குரிய நாணம் அவளை தடுத்தது.



அருகில் இருந்த ஸ்வேதாவிடம் "ஒரு கால் பண்ணிட்டு வரேன்" என்று மெதுவாக கூறியவள் "எக்ஸ்கியுஸ் மீ. நீங்க பேசிட்டு இருங்க பை மினிட்ஸ்ல வரேன்" என்று பொதுவாக எல்லோரிடமும் கூறி விட்டு ஆதித்யாவின் புறம் திரும்பாமலே நீச்சல்குளம் இருந்த பகுதியிற்கு வந்தவள் ஆழ்ந்த மூச்சுகளை எடுத்து விட்டு தன்னை சமன் செய்ய முனைந்தாள்.



"ஏன் நான் இப்படி ஆனேன்? ஏதோ மிட்டாய வெறிச்சு பார்க்குற மாதிரி விக்ரம பார்க்குறன். நல்ல வேளை அவன் என்ன பார்க்கல. பார்த்திருந்தா என் மானம் காற்றுல இறக்கை கட்டி பறந்திருக்கும். வெண்பா கூல் டவுன். கவி அண்ணாவோட தம்பி அவரு. அதை தவிர வேறு எதையும் யோசிக்காதே ஓகே" என்று தனக்குத் தானே பேசிக் கொண்டவள் "சரி அவங்க வெயிட் பண்ணுவாங்க போகலாம்" என்று விட்டு வேக நடை போட்டு சென்றவள் கீழே கொட்டி இருந்த நீரைக் கவனிக்கவில்லை.



கீழே பார்க்காமல் நீரில் காலை வைத்தவள் வழுக்கி விழப் போகிறோம் என்ற பயத்தில் "அம்மா!!" என்றவாறு கண்ணை மூடிக்கொண்டு விழப்போக அவளை விழ விடாமல் அவள் இடையை வளைத்து தாங்கிப் பிடித்தது ஒரு வலிமையான கரம்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top