• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Un vizhiyil veezhnthenada-8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
கவியரசன்,ஸ்வேதா,மித்ரா மற்றும் ஆதித்யா தங்களுக்குள் பொதுவாக பேசிக் கொண்டிருந்த வேளை ஆதித்யாவின் தொலைபேசி அழைத்தது.


எடுத்து பார்த்த ஆதித்யா "கவி ஒரு நிமிஷம் வினோத் கால் பண்றான். பேசிட்டு வரேன்"என்று வெளியில் சென்றவன் போனில் சிறிது நேரம் பேசி விட்டு உள்ளே செல்லலாம் என்று செல்கையில் எதிரில் வெண்பா தனக்குள்ளே ஏதோ பேசிக்கொண்டு வருவதைப் பார்த்தான்.


"இந்த பொண்ணுக்கு என்ன ஆச்சு? தனியாப் பேசிட்டு இருக்கா. பார்த்தா நல்ல அழகா இருக்கா. எந்த ப்ராப்ளமும் இல்லாத மாதிரி தானே இருக்கா" என்று விட்டு அவள் வரும் வழியைப் பார்த்தவன் நீர் கொட்டியிருந்ததை கண்டு கொண்டான்.


அவளை அழைத்து சொல்லலாம் என்று முயன்றால் அவள் பெயர் அவனுக்கு தெரியவில்லை.


அவசரமாக அவன் வெண்பா அருகில் வரவும் அவள் நீரில் காலை வைக்கவும் சரியாக இருந்தது.


உடனே அவளை விழாது ஆதித்யா தாங்கிப் பிடித்ததும் விழுந்து விடப் போகிறோம் என்ற பயத்தில் இருந்த வெண்பா அவன் சட்டைக் காலரை இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள்.


வெகு அருகில் வெண்பாவின் முகத்தினைப் பார்த்த ஆதித்யா ஒரு நிமிடம் தன்னை மறந்து அவள் முகத்தை ஆவலுடன் கவனித்தான்.


இறுக மூடிக் கொண்ட அவள் கண்கள், கூர்மையான மூக்கு, இயல்பாக எவ்வித ஒப்பனையுமின்றி சிவந்திருந்த அவள் அதரங்கள், அழகான குண்டு கன்னங்கள் சிறு குழந்தையை அவனுக்கு நினைவூட்டியது.


தன் எண்ணம் சென்ற பாதையை தடுத்து தற்காலிகமாக தடை போட்டு நிறுத்தியவன் மெதுவாக அவள் காதருகில் குனிந்து "இப்படியே இருந்தா அப்புறம் ரெஸ்ட்டாரண்ட மூடிடப் போறங்க. பார்க்குறவங்க ஏதும் போட்டோ ஷூட்டிங் நடக்குதுனு வந்து வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க. பரவாயில்லையா?" என்று ஆதித்யா கூறவும் சட்டென்று தன் விழிகளைத் திறந்த வெண்பா தனக்கு வெகு அருகில் அவன் முகத்தை பார்த்ததும் மெய் மறந்து தான் போனாள்.


உடனே அவனிடமிருந்து விலகி நின்றவள் இதயம் தாறுமாறாக துடித்தது மட்டுமின்றி எகிறிக் குதித்து அவன் வசம் செல்ல பார்த்தது.


தன்னை சமன் செய்தவள் நிமிர்ந்து அவன் முகம் பார்த்து "ஸாரி நான் கீழே கவனிக்கல. அதனால தான் தெரியாம.. ஸாரி" என்ற வெண்பாவைப் பார்த்து "இட்ஸ் ஓகே ஆனால் உங்கள விழ விடாம பிடிச்சதுக்கு நியாயமா தேங்க்ஸ் தானே சொல்லனும்" என்ற ஆதித்யாவைப் பார்த்து விழித்தவள் "அது வந்து...ஸாரி நான் மறந்துட்டேன் ஸாரி" என்றாள் வெண்பா.


"மறுபடியும் ஸாரியா???"என்று போலியாக அதிர்ச்சியடைந்த ஆதித்யாவைப் பார்த்து சிரித்த வெண்பா "ஓகே ஓகே ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். போதுமா?" எனவும் "இவ்வளவு நேரமா பேசுறம். ஆனால் உங்க பேர சொல்லலயே மிஸ்..." என்று நிறுத்தவும் " மை நேம் இஸ் வெண்பா" என்று புன்னகையோடு கூறினாள் வெண்பா.


"நைஸ் நேம். சரி அவங்க வெயிட் பண்ணுவாங்க போகலாமா?" என்று ஆதித்யா கேட்கவும் "ஆமா வந்து ரொம்ப நேரம் ஆச்சுலே. திட்டப் போறாளுங்க இரண்டு பேரும் சேர்ந்து என்ன" என்று பதட்டமடைந்த வெண்பாவை பார்க்க அவனிற்கு சிறு குழந்தையாகத் தான் தெரிந்தாள்.


உள்ளே சென்ற வெண்பா ஸ்வேதா மித்ரா நடுவில் அமர்ந்து கொள்ள அவளெதிரில் ஆதித்யா அமர்ந்தான்.


"எங்கடீ போன இவ்வளவு நேரமா? காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து ஓடிட்டியோனு நினைச்சன்" என்ற மித்ராவைப் பார்த்து முறைத்த வெண்பா "என்ன பார்த்தா உனக்கு எப்படி தெரியுது? சுவரேறி குதிக்குற மாதிரியா தெரியுது?" என கேட்கவும் பக்கத்தில் இருந்த ஸ்வேதா சிரிக்கத் தொடங்கினாள்.



"இப்போ என்ன சொல்லிட்டனு சிரிக்குற?" என்ற வெண்பாவைப் பார்த்து "இல்ல உன்ன அந்த பொசிஸன்ல யோசிச்சுப் பார்த்தன். அது தான் சிரிப்பு வந்துடுச்சு" என்ற ஸ்வேதாவுடன் இணைந்து சிரித்தாள் மித்ரா.


கவியரசனும் ஆதித்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு "எக்ஸ்கியுஸ் மீ லேடீஸ். நாங்க இங்க இரண்டு பேர் இருக்குறத மறந்துட்டீங்களா?" என ஆதித்யா கேட்கவும் "அதெல்லாம் ஒண்ணுமில்ல. இன்னைக்கு ஸ்வேதா ராசிபலன்ல செமத்தியா அடி வாங்க போறானு போட்ருந்துச்சாம் அததான் சொல்லிட்டு இருந்தா" என்றாள் வெண்பா.


கேலியும் கலாட்டாவுமாக பேசிக்கொண்டு சாப்பிட்டு முடித்தவர்கள் அனைவரும் ஒவ்வொரு விதத்தில் மனதளவில் சந்தோஷத்தை உணர்ந்தனர்.


காலையில் வெங்கடாசலம் தன்னிடம் கூறிய விடயத்தை ஸ்வேதாவிடம் பகிர்ந்து கொண்ட கவியரசன் சிறிது நேரம் அவளிடம் பேசி விட்டு ஆதித்யாவுடன் கார் பார்க்கிங்கை நோக்கி சென்றான்.


"ரொம்ப சந்தோசமா இருக்கு. எல்லாம் ரொம்ப பாஸ்ட்டா நடக்குற மாதிரியே இருக்கு. ஆனால் எல்லாம் சீக்கிரம் நல்ல படியாக நடக்கும்னு தோணுது. ஆனால் என்ன அடுத்த வாரம் எக்ஸாம் ஸ்டார்ட் ஆகுது. அதான் ஒரு பெரிய கவலை" என்ற ஸ்வேதாவைப் பார்த்து வெண்பா "நாம பார்க்காத எக்ஸாமா? கூல் பேபி. தெறிக்க விட்ரலாம்" என்று விட்டு தோழிகள் சிறிது நேரம் தங்களுக்குள் பேசி விட்டு தங்கள் வீடு நோக்கி பயணித்தனர்.




வீடு வந்த வெண்பாவிற்கு புதிதாக பிறந்தது போன்று புத்துணர்வு. மனம் முழுவதும் சந்தோஷத்தினால் நிறைந்து இருந்தது.



தன் அறைக்குள் வந்து போனில் ரேடியோவை ஆன் செய்தவள் அதில் ஒலித்த பாடல் தனக்கே பாடப்பட்டது போல் இருக்கவும் தன்னை எண்ணி சிரித்துக் கொண்டாள்.



ஹாஆ...ஹாஆ.......ஹாஆ.......ஹாஆ....ஹாஆஆஆஆ........ஹாஆ....ஹாஆ.......ஹாஆ.....ஹாஆஆஆ......
அய்யய்யோ ஆனந்த அவஸ்தை தந்தானே
தீயாலே கவிதை எழுதி சென்றானே
என் தோட்டக் குயிலே நில்லாய்
ஒரு காதல் கீதம் சொல்லாய்
அட பூவா.... தீ ஆனாய்....
நீ கொஞ்சிக் கொஞ்சி சொல்லாயோ.....
நீ கொஞ்சிக் கொஞ்சி சொல்லாயோ.....
அய்யய்யோ ஆனந்த அவஸ்தை தந்தானே
தீயாலே கவிதை எழுதி சென்றானே


கண்களை மூடிக்கொண்டவளுக்கு வெகு நெருக்கத்தில் பார்த்த ஆதித்யாவின் முகமே தெரிந்தது.

அவனது குரல், தன் காதோரம் அவன் பேசும் போது தன் கன்னத்தில் அவன் முடி ஏற்படுத்திய குறுகுறுப்பு.


இப்போது நினைத்தாலும் அவளை வெட்கப்பட செய்தது. அவள் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறப்பது போன்ற உணர்வு.


அவனது கண்கள், அதன் வசீகரம் அவள் உயிர் வரை ஊடுருவியது போல இருந்தது.


"வச்ச கண் எடுக்காம பார்த்த மாதிரி இருந்துச்சே. ஒரு வேளை எனக்கு தான் அப்படி தோணியதோ?" என்று எண்ணியவள் "நெக்ஸ்ட் வீக் எக்ஸாம். ஸோ வெண்பா லீவ் இட். பெர்ஸ்ட் ஸ்டடீஸ். அப்புறம் இதைப் பற்றி யோசிக்கலாம்" என்றவள் படிப்பதில் மும்முரமானாள்.


நாட்கள் அதன் பாட்டிற்கு வேகமாக சென்றது. வெங்கடாசலம் கவியரசனிடம் கூறியது போல ஸ்வேதா வீட்டில் பேசி அவர்களை திருமணத்திற்கு சம்மதிக்க செய்தார்.



வெங்கடாசலம் பற்றி ஸ்வேதா குடும்பத்தினர் நன்கு அறிந்திருந்ததினால் அவர்கள் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.


நடைபெறும் பரீட்சை முடிந்ததும் நிச்சயதார்த்தம் என்றும் ஒரு வருடத்தில் ஸ்வேதாவின் படிப்பும் முடிந்து விடும் என்பதால் அதன் பிறகு திருமணம் என்றும் பெரியவர்கள் ஒரு மனதாக முடிவெடுத்தனர்.


படிப்பதில் மும்முரமான வெண்பா
ஆதித்யாவின் மேல் ஏற்பட்ட ஈர்ப்பு பற்றி மறந்தே போனாள்.


முதலில் தன்னுடைய படிப்பு என அதற்கு முக்கியத்துவம் கொடுத்து படிப்பில் கவனத்தை செலுத்தினாள் வெண்பா.


ஆதித்யா தன் கம்பெனி வேலைகளில் மும்முரமாகி விட வெண்பாவை சந்திக்கும் வாய்ப்பு அவனுக்கு கிட்டவில்லை.



வெண்பாவும் ஆதித்யா பற்றிய எண்ணங்களை மறந்து போனாள்.



பரீட்சை முடிந்ததும் நிச்சயதார்த்தம் என்பதனால் நிச்சயதார்த்தத்திற்கு தேவையான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று கொண்டிருந்தன.


நிச்சயதார்த்த நாளும் வந்தது. மனதின் ஓரத்திற்கு சென்றிருந்த ஆதித்யாவின் நினைவுகள் மெல்ல வெண்பாவின் மனதில் தலை தூக்க ஆரம்பித்தது.


தன் உயிர்த் தோழியின் நிச்சயதார்த்தம் ஒரு புறம் தன் மனதுக்கினியவனை காணப் போகிறோம் என்ற ஆவல் ஒரு புறம் அளவிடா முடியாத ஆனந்தத்தோடு விடியலை எண்ணி காத்திருந்தாள் வெண்பா.....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top