• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Unathu Vizhiyil Tholainthen Penne! - 17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
போங்கப்பா இவங்க எப்ப காதலை சொல்ல எப்போது கல்யாணம் முடிப்பது
தேங்க்ஸ் ஹா.. ஹா.. ஹா.. முடிந்துவிடுவாங்க சிஸ்டர்..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

Mahizhini bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 24, 2019
Messages
701
Reaction score
357
Location
Tamilnadu
தியாகு – சுமித்ரா இருவரும் திகைப்பில் ஆழ்ந்தவர்கள் வெளிவரவே வெகு நேரமானது.. அவர்களைப் பொறுத்தவரையில் எழில்விழி ஒரு நல்ல பொண்ணு.. அவளை தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கின்றனர் என்பது மட்டுமே அவர்கள் அறிந்த விஷயம்.. ஆனால் அவள் இத்தனை விஷயத்தை தனியாக நின்று சாதித்திருக்கிறாள் என்று அவர்களுக்கு வாயடைத்துப் போனது..

இவர்கள் மூவரும் திகைப்பில் இருப்பதை கவனிக்காமல், “இப்பொழுது என்னோட அண்ணா ஊரை சுற்றி கடன் வாங்கி சீட்டாட்டத்தில் தோற்று போய் கடனாளியாக இருக்கிறான்..” என்று சொல்ல அன்பைத் தவிர மற்ற இருவருக்கும் ஏதோ புரிவது போல இருந்தது..

“இப்பொழுது உன்னோட அண்ணா வக்கீல் நோட்ஸ் அனுப்பி இருப்பதன் காரணம்.. உன்னோட அப்பா விட்டு சென்ற நிலத்தை வைத்து தானே நீ இந்த சொத்துகளை வாங்கினாய்.. அதனால் அந்த சொத்துகளையும் எனக்கே கொடுக்க வேண்டும் என்றும், உனக்கும் உன்னோட தங்கைக்கும் இதில் பங்கு கொடுக்க முடியாது என்று சொல்லி உன் மீது கேஸ் போட்டிருக்கிறான்..” என்று சொல்ல அவள் மேலும் கீழும் தலையசைத்து ஆமாம் என்றாள்..

“உன்னோட வாதம் உனக்கு, உன்னோட தங்கைக்கும் அவன் எதுவும் செய்யவில்லை.. உன்னோட அண்ணிக்கு மட்டும் பங்கு தருவேன் அதுவும் அப்பாவின் சொத்தில் இருந்து மட்டுமே.. என்னோட சொத்தில் நான் யாருக்கும் பங்கு தர மாட்டேன் என்று சொல்கிறாய்..” என்று சொன்னதும்,

“அவனிடம் இருந்து என்னையும், என்னோட தங்கை, என்னோட அண்ணி மூவரையும் காப்பாற்றவே இந்த கேஸை நான் போடுகிறேன்..” என்று அவள் சொல்லவும், அனைத்தையும் கேட்ட தியாகு, “உனக்கு இப்படி ஒரு அண்ணன் இருப்பதும் ஒன்று இல்லாமல் இருப்பதும் ஒன்று..” என்று கூறிவிட்டு மகனின் பக்கம் திரும்பி,

“அன்பு என்ன ஆனாலும் இவள் பக்கம் இருக்கின்ற நியத்தை சொல்லி அவளை இந்த கேசில் வெற்றியடைய வைப்பது உன்னோட பொறுப்பு..” என்று சொல்லிவிட்டு அவரின் அறைக்கு எழுந்து செல்ல,

“அப்பா சொல்வது தான் கண்ணா சரியானது.. எழில் தான் இந்த கேஸில் வெற்றி பெற வேண்டும்..” என்று சொல்லிவிட்டு கணவனின் பின்னோடு சென்றார் சுமித்ரா

அவர்கள் எழுந்து சென்றதும் அவளின் விழிகளை மட்டும் பார்த்தவன், ‘உனக்கு நான் எதுவும் செய்யாமல் உன்னிடம் வந்து காதலைச் சொல்ல மாட்டேன் எழில்..’ என்று நினைக்கவும் ஆஷா வரவும் சரியாக இருந்தது..

“உன்னோட கேஸில் நான் ஆஜர் ஆகிறேன்.. நீ சொல்வது எல்லாம் சரியாக இருப்பதால் கேஸில் உனக்கு தான் வெற்றி..” என்று அவன் சொல்லவும் எழில் முகம் தானாக மலர அவளைப் பார்த்த படியே அமர்ந்திருந்தான் அன்பரசன்..

அவர்களின் நிலைக்கும் தங்களின் நிலைக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்பதால் அவள் எழில் தனது காதலை தனக்குள் புதைத்துக் கொண்டாள்.. அவனின் பார்வையில் உயிர் பெற்று எழும் தன்னோட காதல் தனக்குள் மட்டும் இருக்க வேண்டும் என்று மனதிற்கு கடிவாளம் இட்டு அவனின் முன்னே அமைதியாக அமர்ந்திருந்தாள் எழில்..

“ஹாய் எழில்.. அன்பு சார் நான் உள்ளே வரலாமா..?” என்று கேட்டதும், ஆஷாவைப் புன்னகையுடன் பார்த்தவள் எழுந்து அவளின் அருகில் செல்ல, “அதுதான் வந்து விட்டாயே.. இன்னும் என்ன கேள்வி உள்ளே வா..” என்று சொல்ல அவனின் குரலில் இருந்தே கோபத்தை அறிந்தவள்,

எழில் பக்கம் திரும்பி, “என்ன எழில் இருவரும் கேஸ் பற்றி பேசாமல் வெட்டி கதை பேசினீர்களா..?” என்று குறும்புடன் கண்சிமிட்ட எழில், “உனக்கு ரொம்பவே நக்கல் அதிகம் ஆஷா..” என்று கூறியவள், “நானும், சாரும் அமர்ந்து கேஸ் விஷயமாக பேசிட்டு இருந்தோம்.. நாங்கள் பேசி முடித்தும் நீயும் சரியாக வந்துவிட்டாய்..” என்று கூறியதும்,

அவள் சொன்னதை ஆஷாவினால் நம்பவே முடியவில்லை.. எழில் அன்புவை ‘சார்..’ என்று அழைத்ததில், கிட்டத்தட்ட மறுபடியும் ஒரு அதிர்ச்சியில் உறைந்தாள் அவள்.. அவள் அதிர்ச்சியில் பிரீஸ் ஆகி நிற்பதை பார்த்த அன்புவிற்கு, எழிலுக்கும் சிரிப்பை அடக்கவே முடியவில்லை..

இவர்கள் இருவரின் சிரிப்பு சத்தம் கேட்டு ஹாலிற்கு வந்த தியாகு – சுமித்ரா கண்களில் முதலில் பட்டது ஆஷா அதிர்ச்சியில் உறைந்த காட்சியே..

அவர்களுக்குமே அவளைப் பார்த்து சிரிப்பு வர அதிர்ச்சியில் இருந்து வெளியே வந்தவள் நின்று இடையில் கையூன்றி அவர்களை முறைக்க, “ஆஷா என்னம்மா வந்தவள் அதிர்ச்சியில் ப்ரீஸ் ஆகி அப்படியே நிற்கிறாய்..” என்று கேட்டார் தியாகு..

அவரை நிமிர்ந்து பார்த்த ஆஷா, உன்னோட மகனும், இவளும் கொடுக்கும் அதிர்ச்சியில் உறைந்து நிற்காமல் என்ன பண்ண சொல்றீங்க..? என்று மனதால் பரிதாபத்துடன் பாவமாக நினைத்தவள் தான் நினைத்தை மற்றவரிடம் சொல்லவில்லை..

அவள் அதிர்ச்சியில் இருந்து மீண்டு வந்து, “அடிக்கடி எனக்கு அதிர்ச்சி ஏற்றபடுகிறது.. நல்ல ஒரு டாக்டரைப் பார்க்க வேண்டும்..” என்று சொல்ல அன்புவும், எழிலும் அவளைப் பார்த்து சிரித்தனர்..

“சரிம்மா வா சாப்பிடலாம்..” என்று அழைத்த சுமதி, அனைவரையும் அமரவைத்து சாப்பாடு பரிமாற, முதலில் சாப்பிட்ட தியாகுவிற்கு உண்மை தெரியும் என்பதால், “எழில் ரொம்ப நல்ல சமையல் செய்திருக்கிறாய்.. அப்படியே கிராமத்து மணம்..” என்று கூறி சாப்பிட,

“எழில் நீயா சமைத்தாய்..?” என்று கேட்ட ஆஷாவும், “ரொம்ப நல்ல இருக்கிறது எழில்..” என்று சொல்ல அன்பு மட்டும் எதுவும் சொல்லாமல் சாப்பிட எழில் முகம் வாடிப்போனது.. அதை கவனித்த அன்புவின் பெற்றோர் அமைதியாக இருந்தனர்..

அவர்கள் சாப்பிட்டு முடித்துவிட்டு, “எழில் நீ இன்னைக்கு ஊருக்கு போகிறாய் இல்லையா..?” என்று அன்பு கேட்டதும் சுமித்ராவிற்கு அவளை அனுப்ப மனமே இல்லை..

“என்னடா அன்பு அந்த பெண்ணை விரட்டுகிறாய்.. அவள் இங்கே இரண்டு நாள் இருக்கட்டும்..” என்று மகனை அதட்ட, ஆஷா சுமித்ராவை அதிர்ச்சியுடன் பார்த்தாள்..

சுமித்ரா ஆஷா, ஆதி இருவரை தவிர மற்ற யாரையும் வீட்டில் தங்க வைக்கவே மாட்டார்.. அது அவருக்கு பிடிக்காது.. எழில் விஷயத்தில் எல்லாம் தலைகீழாகவே இருந்தது.. அவளைத் தங்கவைத்து, இப்பொழுது அவளை அனுப்ப மனம் இல்லாமல் தவிக்கும் சுமித்ரா ஆஷாவிற்கு முற்றிலும் புதிது!

“இல்லம்மா ஊரில் தங்கை தனியாக இருப்பாள்.. நான் இல்லாமல் எந்த வேலையும் நடக்காது அதனால் நான் ஊருக்கு போகிறேன்..” என்று எழில் பக்குவமாக அவரிடம் சொல்ல,

“அடுத்தமுறை வந்ததும் இங்குதான் வர வேண்டும் சரியம்மா எழில்..” என்று பாசத்துடன் கூறியவர் அவளின் தலையை வருடிக் கொடுத்து வாசல் வரை வந்து அவளை வழியனுப்பி வைத்தனர் அன்புவின் பெற்றோர்..

அவர்கள் பின்னோடு வாசலுக்கு வந்த ஆஷா, “அன்பு நீ ரயில்வே ஸ்டேஷன்ல பத்திரமாக ரயில் ஏற்றி விடு.. எழில் எனக்கு அவசரமாக ஒரு இடத்திற்கு போகவேண்டும் அதனால் நான் உன்னுடன் வர முடியவில்லை..” என்று கூறிய ஆஷா,

“ஊருக்கு போனதும் எனக்கு போன் செய்கிறாய்.. நான் உன்னோட போனை எதிர்பார்த்துடே இருப்பேன்..” என்று கூறியவள் அவளின் அருகில் சென்று தோளோடு அணைத்து,

“எழில் பத்திரமாக போய்ட்டு வாடா.. ஊரில் அம்மாவை ரொம்ப கேட்டதாக சொல்லு..” என்று கூறியவள் மற்ற மூவரின் பார்வைக் கண்டு, “நான் இவளின் அண்ணியை அம்மா என்று தான் சொல்வேன்..” என்று விளக்கம் கொடுத்தாள் ஆஷா..

அவளின் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு ஆஷா கிளம்ப காரில் ஏறியவர்கள் ஆஷாவின் பின்னோடு கிளம்பினர்.. அவளை அனுப்பிவிட்டு வீட்டிற்குள் வந்த சுமித்ரா,

“இந்த எழில் இல்லாதது ஏதோ போலவே இருக்கிறது..” என்று கணவரிடம் சொல்ல, “எனக்கும் தான் சுமி..” என்று கூறினார் தியாகு..

அவள் ஊருக்கு செல்வது அவனுக்கு ஏதோ போல இருந்தாலும், இந்த பிரிவு நிரந்தரம் இல்லை என்று மனதை தேற்றிக்கொண்டு அமைதியாக காரை செலுத்த எழில் வெளியே வேடிக்கை பார்த்த வண்ணம் வந்தாள்.. அவளுக்கு இவனை விட்டு பிரிய மனம் இல்லை.. இருந்தாலும் அதை வெளிப்படுத்தாமல் அமைதியாக இருந்தாள்..

இந்த மௌனத்தைக் கலைக்காமல் இருவரும் வர அவர்கள் கார் பயணம் இனிதே முடிய, ரயில்வே ஸ்டேஷன் வந்ததும் காரைப் பார்க்க செய்துவிட்டு வந்தவனைப் புரியாமல் பார்த்தாள் எழில்..

அவளின் விழிகளைப் பார்த்தவன், “உன்னை டிரெயின் ஏற்றி விட்டு வர சொல்லி இருக்கிறாள் உன்னோட உயிர் தோழி ஆஷா..” என்று அவன் சொல்ல அவளின் கண்கள் கலங்குவதை மறைத்துக் கொண்டு,

“வேண்டாம் அன்பு நீங்க போங்க நான் போய் கொள்கிறேன்..” என்று அவள் சொல்ல அவளை முறைத்தான் அன்பு..

அவன் முறைப்பதைக் கண்டு, “ரயில்வே ஸ்டேஷன் வரை மட்டுமே உங்களால் என்னுடன் வர முடியும்.. இந்த பயணம் முழுவதும் நான் தனியாக தானே செல்ல வேண்டும்.. அதனால் நீங்க கிளம்புங்க..” என்று எதார்த்தமாக சொல்ல அவளின் கைகளை இறுகப்பற்றினான் அன்பு..

அந்த வலியைத் தாங்க முடியாமல், “கையை விடுங்க அன்பு..” என்று கூறியதும் அவளின் கைகளை விட்டான் அன்பு.. அவன் விட்டதும் அவள் கையைப் பார்க்க அவன் பிடித்திருந்த இடம் கன்றி சிவந்திருக்க அவள் அவனை நிமிர்ந்து பார்க்க அவன் எதுவும் சொல்லாமல் நின்றான்..

“சரிங்க சார் நான் கிளம்புகிறேன்..” என்று கூறியவள் ரயிலில் ஏறியதும் அறிவிப்புகள் வர ரயில் கிளம்பியது.. அன்பு அவள் ரயிலில் செல்வதைப் பார்த்துக் கொண்டே நின்றான்..
Parava ila anbu vitla ivala ethukitanga nala manam konda characters superr sis
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top