• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Unathu Vizhiyil Tholainthen Penne! - 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Mahizhini bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 24, 2019
Messages
701
Reaction score
357
Location
Tamilnadu
அவளின் விழியைப் பார்த்த அந்த நொடியே தன்னை அவளுக்குள் தொலைத்ததை அவன் மறந்தே போனான்.. இப்பொழுது அவன் மனம் அவளின் நினைவுகளை மறக்கவில்லை..

அங்கே அவனின் மனதை அறிந்தாலும் இன்னும் முழுவதுமாக அறியாமல் இருக்கிறான்.. இங்கே நடப்பதையும் கொஞ்சம் கவனிக்கலாம் வாருங்கள்..

அன்று காலையில் எழுந்த எழில்விழி தந்தையை தேட அவரோ காலையிலேயே வயலுக்கு சென்றுவிட்டார்.. அவள் எழுந்து வாசலை கூட்டிவிட்டு தண்ணீர் தெளித்து கோலம் போட்டவள் சமையல் வேலையை செய்ய மஞ்சரி நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள்..

“எழில்.. எழில்..” என்று அழைத்துக்கொண்டு அவசர அவசரமாக வீட்டிற்குள் நுழைந்தாள் தனலக்ஷ்மி..

“வாங்க அண்ணி..” என்று சமையல் அறையில் இருந்து குரல் கொடுத்த எழில்விழி,

“என்ன அண்ணி இன்னைக்கு காலையில் வந்திருக்கீங்க..?” என்று கேட்டுக் கொண்டே காபியை எடுத்து வந்தவள், தனத்தின் முகத்தைப் பார்த்தும் அதிர்ச்சியில் காபியைக் கீழே தவறவிட

“ஐயோ என்ன அண்ணி..?” என்று பதறியவள் வாயைப் பொத்தி வெளியே அழைத்து சென்றாள் தனலக்ஷ்மி..

அவள் வாயில் இருந்து கையை எடுத்த நொடியே, எழில் கண்கள் கலங்க, “என்ன அண்ணி இது கன்னம் இப்படி வீங்கி இருக்கிறது..” என்று கேட்டவளைப் புன்னகையுடன் பார்த்தாள் தனம்..

அவளின் கன்னம் இரண்டும் முத்துவின் அடியில் வீங்கி இரண்டு கன்னத்திலும் ஐந்து விரல்களும் பதிந்து அவளின் முகத்தைப் பார்க்க அகோரமான நிலையில் இருந்தது.. அதைப் பார்க்க பார்க்க எழிலுக்கு கண்களில் கண்ணீர் மட்டும் வந்தது..

“அது ஒன்னும் இல்லடா.. இன்னைக்கு உனக்கு பிறந்தநாள் இல்லையா..? அதுதான் உனக்கு துணி எடுக்கப் போன மாதமே பணம் சேர்த்து வைத்தேன்.. நேற்று அந்த பணத்தை எடுத்துக்கொண்டு கடைத்தெருவுக்கு போயிட்டு வரும் பொழுது உன்னோட அண்ணா பார்த்துவிட்டார்.. அப்புறம் என்ன நான் வீட்டிற்கு வந்தும் அடி வெளுத்துவிட்டார்..” என்று சொல்லவும்,

“எல்லாம் என்னால் தானே அண்ணி..” என்று வருத்ததுடன் அவள் சொல்ல, “என்னோட பிள்ளைகள் நீங்கடா உங்களுக்கு செய்யாமல் என்னால் இருக்க முடியாது.. இது பற்றியெல்லாம் நீ கவலைப்பாடாமல் சந்தோசமாக இரு..” என்று அவளின் கையில் புதிய பாவாடை தாவணியைக் கொடுத்தவள்,

“எழில் சமையல் வேலையை முடித்து குளித்துவிட்டு இந்த பாவாடை தாவணியை கட்டிட்டு கோவிலுக்கு போய் உன்னோட பெயரில் ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வந்துவிடு..” என்று சொல்ல அவள் கண்களில் கண்ணீரோடு சரியென தலையசைக்க அவளின் கண்ணீரைத் துடைத்துவிட்டவள்,

“இதுக்கு எல்லாம் என்னோட செல்லம் அழுகக்கூடாது..” என்று கூறியவள் வீட்டிற்குள் சென்று மஞ்சரியை பார்த்துவிட்டு வெளியே வரவும் வாசலில் ஒரு சைக்கில் வந்து நின்றது..

அதில் இருந்து இறங்கியவளைப் பார்த்து, “என்னடா நல்ல இருக்கிறாயா..? பாட்டி எப்படி இருக்காங்க..? பள்ளிக்கூடம் எல்லாம் எப்படி போகிறது..?” என்று கேள்வியை அடுக்கினாள் தனம்..

சைக்கிளை நிறுத்திவிட்டு இறங்கி வந்தவள், “ஹப்பா ஒரு நிமிசத்தில் எத்தனை கேள்வி கேட்கிறீங்க..?! என்னை பதில் சொல்லவே விடமாட்டிங்க..” என்று கூறியவள்,

தனத்தைப் பார்த்து, “நான் நல்ல இருக்கிறேன்.. நல்ல படிக்கிறேன்.. பாட்டி அவங்க சூப்பராக இருக்காங்க..” என்று படபடவென்று கூறியவள்,

“எழில் அக்கா..” என்று அழைக்க, தனமோ, “எழில் உள்ளே இருக்கிறாள் இனியா..” என்று கூறியவள் அவளின் வீட்டை நோக்கிச் செல்ல வீட்டின் உள்ளே இறந்து வெளியே வந்த எழில்விழி,

“என்ன இனியா மேடம் இது வரைக்கும் வந்திருக்கீங்க..? ஏதாவது முக்கியமான விஷயமா..?” என்று சிரிப்புடன் கேட்டவள் அருகில் வந்த இனியா,

“விஷ் யூ ஹாப்பி பர்த்டே அக்கா..” என்று சொல்ல, “நான் என்ன கேட்டால் நீ என்ன பதில் சொல்கிறாய்..?!” என்று கேட்டாள் எழில்விழி..

“நான் விஷ் பண்ணியதற்கு தேங்க்ஸ் கூட இல்லை..” என்று இனிய செல்ல கோபத்தில் முகத்தைத் திருப்ப, “தேங்க்ஸ் சொல்லி உன்னைப் பிரித்துப் பார்க்க தோன்றவில்லை செல்லம்..” என்று கூறியவள் இனியாவை உள்ளே அழைக்க,

“இல்ல அக்கா பாட்டி உங்களை கூட்டிட்டு வர சொன்னாங்க..” என்று சொல்லவும்,

“என்ன ஜெயந்திம்மா திடீரென்று என்னை கூட்டிட்டு வர சொல்லிருக்காங்க..?” என்று சந்தேகமாக இனியாவின் முகத்தைப் பார்க்க அவளோ,

‘ஐயோ அண்ணி உண்மையைக் கண்டுபிடித்து விடுவார்களோ..?’ என்று மனதில் நினைத்தவள்,

“எனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை..” என்று கூறியவள், “நான் வீட்டிற்கு போகிறேன்..” என்று சைக்கிளை எடுத்துக்கொண்டு சிட்டாக பறந்து சென்றுவிட்டாள்..

அதன்பிறகு வேலைகளை முடித்துவிட்டு தங்கையை அப்பாவிடம் விட்டுவிட்டு அவரிடம் விவரத்தை சொல்லிவிட்டு மெல்ல தோப்பிற்குள் இறங்கி நடக்க, தென்னை மரத்தின் கீற்றுகள் காற்றில் ஆடி சலசலக்கும் ஓசையை உருவாக்க எப்பொழுதும் இயற்கையை ரசிதவண்ணம் நடந்தவள்,

கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம் காண்பதெல்லாமே

அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம்..

காற்றினிலே வரும் கீதம்..

என்று பாடலைப் பாடிக்கொண்டே நடந்து கொண்டிருந்தவளை ஒருவரின் விழிகள் தொடர்ந்தது.. அதை அவள் கவனிக்கவே இல்லை..

அதற்குள் இனியாவின் வீடு வந்துவிட, “ஜெயந்திம்மா..” என்று அழைத்தவண்ணம் உள்ளே வீட்டின் உள்ளே சென்றாள் எழில்விழி..

“நான் இங்கே இருக்கிறேன் எழில்..” என்று ஜெயந்திம்மாவின் குரல் சமையல் அறையில் இருந்து கேட்டதும், சமையல் அறையின் உள்ளே சென்றவள்,

“என்ன ஜெயந்திம்மா.. உங்களுக்கு இந்த வேலை தேவையா..?” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் எழில்விழி..

“ஏன் ஜெயந்திம்மா சமையல் அறைக்கு வராமல் தான் இப்பொழுது இந்த இடத்தில் இருகிறார்களா..?” என்று விளையாட்டு போல கேட்டாள் இனியா..

“நீயும் இங்குதான் இருக்கிறாயா..?” என்று கேட்டாள்..

“நான் இங்கே தான் இருக்கிறேன்..” என்று கூறியவள் சமையல் அறையின் மேடையில் இருந்து குதித்து இறங்கியவள், எழிலை சுற்றி வந்து பார்த்தாள்..

கிளி பச்சை நிறத்தில் பாவாடையும் ரோஸ் நிறத்தில் தாவணியும் அவளின் தலைமுடி இடையத் தாண்டி இருக்க அதை நன்றாக வாரி, அதில் மல்லிகை பூ சூடி, விழிகளில் மைதீட்டி இயற்கையாக மஞ்சள் நிறத்தில் இருந்த முகத்தில் ரோஜா இதழ் போன்று இருந்த உதட்டில் முகத்தில் நிறைவான ஒரு புன்னகை அழகாக மறந்திருக்க காதில் ஜிமிக்கி அசைந்தாட அவளைப் பார்த்த இனியா,

‘என்னோட அண்ணாவிற்கு செம பொருத்தம்.. எங்க அண்ணா மட்டும் உங்களை ஒரு முறைப்பார்த்தால் அவ்வளவுதான்..’ ஏறனு நினைத்து அவளை சுற்றி வந்த இனியாவின் தலையில் கொட்டினார் ஜெயந்திம்மா..

“ஸ்ஸ்.. என்ன பாட்டி..?” என்று கேட்டதும், “பிள்ளையை நடுவில் நிற்க வைத்து சுற்ற அவள் என்ன அரசமரத்து பிள்ளையாரா..?” என்று கேட்டவர் எழிலைப் பார்க்க அவளைப் பார்த்தும் அவரின் மனம் நிறைந்து போனது..

“எதுக்கு பாட்டி வர சொன்னீங்க..?” என்று எழில் கேட்டதும் அவளின் கையைப்பிடித்து அழைத்து சென்ற ஜெயந்திம்மா,

“இந்த இது உனக்கு நான் எடுத்த புடவை வீட்டில் சென்று எப்படி இருக்கிறது என்று பாரு..” என்று கூறியவர், “இந்த இது உனக்காக நான் செய்தது..” என்று அவளுக்கு பால்கொழுக்கட்டை ஊட்டிவிட எழில் கண்கள் கலங்கியது..

“பாட்டி எனக்கு..” என்று இனியாவும் வாயைத் திறக்க அவளுக்கு பாசத்துடன் ஊட்டிவிட்டார். எழில்விழியின் பிறந்த நாள் மறக்க முடியாத ஒரு நாளாக மாறியது..

அதன்பிறகு அவர்களிடம் சிறிது நேரம் பேசியவள் வீட்டிற்கு திரும்பி வந்துக் கொண்டிருக்க அவளின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நபரை சந்தித்தாள்..

அவளின் பிறந்த நாளில் அந்த நபரை அவள் அங்கே சுத்தமாக எதிர்பார்க்கவே இல்லை.. அந்த நபரின் சந்திப்பு அவளுக்கு என்றும் இல்லாத ஒரு மகிழ்ச்சியைக் கொடுக்க சிலையென்று நின்றுவிட்டாள்..
???? heroo sir ahh
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top