UNUN-1(2)

Maya @12

Author
Author
#1
அவர்கள் நெருங்குவதைக் கண்ட அவர்களின் ஆண் நண்பர்களும் அவர்களுடன் சேர்ந்து அந்த பெண்களுக்கு காவலாகவும் பேட்டி கொடுக்க தயாராகவும் இருந்தனர்.

அந்த கேமரா மேனும், மைக் மேனும் பெண்களிடம் மைக்கை நீட்ட ஆண்களோ அந்த இங்க உங்களுக்கு எங்கள தெரியலயா அவங்க கிட்ட மைக்க நீட்ற என்று கேட்டு சண்டைக்கு வர அவர்கள் சிறிது நேரம் நக்கல் பண்ணிட்டு ஆண்களிடம் கேள்வி கேட்க தொடங்கினர்

“எந்த காலேஜ் நீங்க? எந்த டிபார்ட்மெண்ட் ஸ்டூடன்ஸ் நீங்க? எதற்கு இந்த போராட்டம் இதில நீங்க உங்கட காலேஜ்க்கு ஏதாவது டிமான்ட்ஸ் வைக்கிரிங்களா?” என நிபுனர் இருவரும் இவர்களோடு பேசிக் கொண்டே நடந்தனர்.

“எங்க காலேஜ் பெயர் ABC இன்ஸ்டிட்யூட் நாங்க Fashion technology டிபார்ட்மெண்ட் எங்கட காலேஜ்ல கட்டணத்த உயர்த்தி இருக்காங்க அதனால தான் இந்த போராட்டம் அன்ட் நோ டிமான்ட்ஸ்” என ராகுல் கூறிவிட்டு மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டான்.

கடைசியில் எல்லோரும் காலேஜ் சென்று போராட்டத்தை முடித்தனர்.
முடித்த கையோடு KFC க்கு போகின்றனர்.அர்ச்சனா,ஹரிணி,கருணை மலர்,ராகுல்,ரோஹன்,துருவ் இவர்கள் ஆறு பேரும் இணைப்பிரியா நண்பர்கள் இதில் அர்ச்சனா அண்ணன் அர்ஜுன்னும் அடக்கம்.

அர்ஜுன்,அர்ச்சனா இருவரும் இரட்டையர்கள்.அர்ஜுன் medicine படிக்கிறதால சில நேரம் இவர்களுடன் சேர்ந்து கொள்வான்.

இடம்:KFC Resturant
“என்னடா இன்னும் இந்த அர்ஜுன் பயல காணோம்” என ரோஹன் கேட்க
அவன் எதற்குடா உனக்கு அவன் சாப்பாட ஓடர் பண்ண சொல்லிட்டான் அதனால ஒழுங்கான ஓடர் பண்ணு மகனே அவன் வார டயத்துக்கு சரியா வருவான்.
இப்படி இந்த ஆறும் பேரும் உணவுக்கு ஓடர் கொடுத்துட்டு சிரிப்பும் பேச்சுமாக அரட்டையடித்துக் கொண்டிருந்தனர்.
அதன்பின் அர்ஜுனும் இவர்களுடன் சேர்த்துக் கொண்டான்.

அரட்டையோடே மாலை உணவை முடித்து விட்டு எல்லோரும் திக் திக் என்ற மனநிலையுடன் வீட்டுக்கும்,விடுதிக்கும் சென்றனர்.அவரகளின் செல்போனை 📱ஓன் பன்னிவிட்டுட்டு.

இனி வீட்டில் நடக்கப்போவது ...
 

Latest updates

Latest Episodes

Top