Urasaathey Usura Thaan -- epi 10

Jaa sha

Author
Author
#72
சுவர் இருக்கும் குதிக்க உன் காலுக்கு பவர் இருக்காது... மனம் மயக்கும் மாது...மாறப்போறேன் நான் சேது...
Super super super ka...
 
#75
அவள் மனதில் அவன் மேல் மரியாதை இருந்தது, நட்புணர்வு இருந்தது, அன்பு கூட இருந்தது. அவன் அருகில் இருக்கும் போது பாதுகாப்பாய் உணர்ந்தாள். ஆனால் அந்த கர்மம் பிடித்த காதல் மட்டும் இன்னும் வந்திருக்கவில்லை. காதல் என ஒருத்தன் அடித்த கூத்தில் நொந்து நூலானவள் ஆயிற்றே. அந்த வார்த்தையே அலர்ஜியைக் கொடுத்தது.

‘வெட்டு சார், ஐ லவ் யூன்னு மட்டும் சொல்லிறாதீங்க ப்ளீஸ். நான் இன்னும் அதுக்கு ரெடியாகல. உங்க மனச உடைக்கற மாதிரி என்னைப் பேச வச்சிறாதீங்க!’ முகம் கலங்க அவனை ஏறிட்டாள் அபி.

அவள் பயப்படும் வகையாக அவன் பேச்சு இருக்கவில்லை. பெருமூச்சு ஒன்றை விட்டவன்,

“அப்பா உன் மேல அட்டாச்டா இருக்காரு அபி. பெரிய மனசு பண்ணி கொஞ்சம் அவர் கூட நேரம் செலவு பண்ண முடியுமா?” கெஞ்சுதலாக கேட்டான் சதா.

“தோ பாருங்க வெட்டு சார், அவர் என்னை மகளேன்னு கூப்புட்டுட்டாரு. தெரிஞ்சு கூப்பிட்டாரோ, தெரியாமா கூப்பிடாரோ எனக்குத் தெரியாது. ஆனா நான் அவர அப்பாவா ஃபிக்ஸ் பண்ணிட்டேன். ஒரு தடவ ஃபிக்ஸ் ஆயிட்டா என் பேச்ச நானே கேட்கமாட்டேன்” என்றாள்.

மெல்ல நகைத்தவன்,

“நீ என் கிட்ட ஏதாச்சும் சொல்லனுமா அபி?ஹ்ம்ம் அதான் நேத்து ஹாஸ்பிட்டல் போனத பற்று?” என கேட்டான்.

அதைபற்றி பேசப் பிரியப்படவில்லை அபி. பேச்சை மாற்றும் விதமாக,

“பசிக்குது வெட்டு சார். சாப்புட போலாமா?” என கேட்டாள்.

சற்று நேரம் அமைதியாக அவள் மூக்கைப் பார்த்தவன்,

“போகலாம் அபி.” என்றான்.

“இன்னொன்னு சொல்லனும். இனிமே பணம் வேணும்னா அதோ அந்த அலமாரி ட்ராவர்ல வச்சிருக்கேன், எடுத்துக்க. என் பொண்டாட்டி யார்கிட்டயும் கைமாத்து வாங்குறது எனக்குப் பிடிக்காது. அதோட சுவரேறி குதிக்கறதும் இதோட கடைசியா இருக்கட்டும். மீறி குதிச்சா, சுவர் இருக்கும் ஆனா குதிக்க உன் காலுக்கு பவர் இருக்காது” அவள் பாணியிலே மிரட்டியவன் குரலில் காரம் கூடி இருந்தது.

“தோடா! கோபம் வருது வெட்டு சாருக்கு! இந்த பூச்சாண்டி காட்டற வேலைலாம் என் கிட்ட வச்சிக்காதீங்க! நான் பாக்கத்தான் சாது, கோபம் வந்துச்சுன்னா சேது! பீ கேர்பூல்!” என சொல்லியவள், தலையணையை எடுத்து அவன் மேல் வீசிவிட்டு வெளியே ஓடிவிட்டாள்.

முகத்தில் மோதி கீழே விழுந்த தலையணையை புன்னகையுடன் எடுத்தவன், அப்படியே அதைக் கட்டிக் கொண்டான்.

“என்னை மயக்கிய மாது, உன்னாலே நான் தான் ஆகப்போறேன் சேது!” முனகியபடியே அவளைப் பின் தொடர்ந்து சென்றான் சதா.

அங்கே சாப்பாட்டு மேசையில் இருவரின் தலையிலும் காபி சொட்ட சொட்ட, ஒருத்தரை ஒருத்தர் முறைத்தபடி நின்றிருந்தனர் குணாவும் கேசியும்.(உரசுவான்)
Ivanukku mooku......avalukku Kaadhu.....part part ah love pannraanga PA....ஐம்புலன்களும் உணர்வது எப்பொழுது.....
அருமையான பதிவு வனி சிஸ்....
 
#78
Vanisha darling... ippadi pattunu dot vaichuvittingale...
Me sad.... innum iruntha padichukitte irukkalaam pola irukku...

சேசரியில நல்லா நெய்விட்டு அல்வா பதம் வரும் வரை கிண்டி சுட சுட சாப்பிடும் போது யாராவது பிடிங்கினால் எப்படி இருக்கும் டார்லிங்... அப்படி தான் இருந்தது...இன்றைய பதிவு...

நீங்க பெரிய பதிவு கொடுத்தும் இப்படி கேட்பது நியாயம் இல்லை என்று புத்தி சொல்லுது ஆனால் இந்த பேராசை பிடித்த மனது அதை கேட்க மறுக்கிறது... what to do darling??

இந்த கேசியும் குணாவும் ஏன் எப்பவும் சண்டை போடுதுங்க...

வனிஷாவின் கதை அருமை அருமை....
அபியின் கவிதைக்கு நான் அடிமை அடிமை...

அட அட எனக்கு கூட அபி மாதிரி கவிதை எல்லாம் வருதுடோய்.....😆😆😆
 

Latest updates

Latest Episodes

Top