Urasaathey Usura Thaan -- epi 12

vanisha

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
வணக்கம் டியர்ஸ்,

இன்னிக்கு எபி 12.. கொஞ்சம் கொஞ்சமா இவங்க ரெண்டு பேர் உறவும் இனிமே ஒட்டி வரும். மறக்காம கமேண்ட் போட்டு கருத்த சொல்லுங்க...

UUT-- CV.jpg
 

vanisha

SM Exclusive
Author
SM Exclusive Author
#3
அத்தியாயம் 12டிமென்ஷியாவைத் தடுப்பது எப்படி


  • நல்ல தூக்கம்
தூக்கம் நம் வாழ்வில் மிக முக்கியமான அம்சம். சரியான தூக்கம் இல்லாதவர்கள் மூளையில் ஒரு வகையான புரோட்டின் உற்பத்தியாகிறது. இதுவே மூளையின் செல்களை பாதித்து டிமென்ஷியா வர காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. எப்பொழுதும் ஒரு ஒழுங்கு முறையான தூங்கும் பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். குறட்டை போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் டாக்டரை அணுகி தகுந்த சிகிச்சைப் பெற வேண்டும்.

முகம் சிரிப்பில் பிரகாசிக்க திரும்பிய அபி, அப்படியே ராமை இறுக அணைத்துக் கொண்டாள். அணைத்தப்படியே இருவரும் குதிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

“ராம், நீதானாடா? நிஜமாவா? என்னால நம்பவே முடியலையே!”

“நான் தான் அப்பி! நானேதான். உன்னைப் பார்க்க ஓடி வந்துட்டேன்” உற்சாகத்தில் கத்தினான்.

“நான் உன்னையேதான்டா எப்போவுமே நினைச்சுட்டு இருப்பேன். ஸ்கூலுக்கு வந்து பார்க்கலாமான்னு நினைப்பேன். அப்புறம் சிக்ஸ்பேஸ்கு தெரிஞ்சா உன்னை பிழிஞ்சிருவாறேன்னு தான் அடக்கிக்கிட்டு இருந்தேன். அவங்க அடிச்சா நான் கூட பக்கத்துல இல்லையே தடுக்க!” கண்கள் நீரில் நிறைய தன் பிடியை இறுக்கினாள் அபி.

அபியின் நெஞ்சில் வாகாக சாய்ந்துக் கொண்டு,

“ஆரம்பத்துல நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன் அப்பி. ராத்திரிலாம் நினைச்சி அழுவேன். வெட்டு சார்தான் ரெண்டு தடவை ஸ்கூல்ல வந்து பார்த்தாரு. நான் சாப்பிட்டு, அழாம சந்தோசமா இருந்தாதான் நீ சந்தோசமா இருப்பேன்னு சொன்னாரு. அதுல இருந்து நான் அழறது இல்ல தெரியுமா. வெட்டு சார் கூப்புடற மாதிரி நான் மேன்(man) ஆயிட்டேன்.” சிரித்தபடி அபியின் கண்களைத் துடைத்தான்.

“என் ராம் அழறது இல்லையா? நெஜமாலுமா? எவ்வளவு ஹேப்பியான நியூஸ் இது!” அப்படியே அவனைத் தூக்கிக்கொள்ள முயன்றாள் அபி.

அவள் காதருகில்,

“அப்படியெ இடுப்பு உடஞ்சி கீழ விழ போறியா அபி? எதுக்கு இந்த விஷப்பரீட்சை?” என மெல்லிய குரலில் சதாவின் அதட்டல் கேட்கவும் ராமைக் கீழே விட்டாள் அபி. அவன் வயதுக்கு ராம் கொஞ்சம் புஷ்டியாகத்தான் இருந்தான்.

எவ்வளவுதான் பிள்ளைகள் வளர்ந்துவிட்டாலும் பெற்றவர்களுக்கு அவர்கள் எப்போதுமே சிறுவர்கள்தான். பிள்ளைகளுக்குமே பிள்ளைகள் இருந்தாலும், இன்னும் அவர்களைக் குழந்தையாய் பாவித்து திட்டுவதையோ சீராட்டுவதையோ விடமாட்டார்கள் தாய் தந்தையர். அந்த நிலையில் தான் இருந்தாள் அபி.

பின்னால் திரும்பி சதாவை முறைத்தவள்,

“ஹலோ வெட்டு சார், நான் தான் அவனைத் தூக்கி வளர்த்தேன். அவன் எப்பவும் எனக்கு குழந்தைதான். குஞ்சி மிதிச்சு கோழி செத்துறாது!” என்றாள்.

“நானும் ராம் உன் குழந்தை இல்லைன்னு சொல்லலையே அபி. உருவத்துல இப்போ நீதான் அவனுக்கு குழந்தை மாதிரி இருக்க. ஆமாதானே ராம்?”

“ஆமா வெட்டு சார்! அப்பி என்னோட சின்னதாதான் இருக்கா. அப்பியால என்ன தூக்க முடியாட்டி என்ன, நான் அப்பிய தூக்கிருறேன். ப்ராப்ளம் சால்வ்ட்” என்றவன் பட்டென அபியைத் தூக்கிவிட்டான். அதிர்ச்சியில் அபி கத்தவும், தடுமாறி போனான் ராம். கீழே விழ இருந்த இருவரையும் அணைத்துப் பிடித்துக் கொண்டான் சதா.

“ஹ்ம்ம்ம், வியர்வையில முங்கி குளிச்ச ரோஜா மாதிரி ரெண்டு பேர் வாசமும் கலந்து என் மூக்கைத் தாக்குது” என்றவன் இன்னும் அருகில் இழுத்து இருவரையும் ஆழ்ந்து சுவாசித்தான்.

அவனைத் தள்ளிவிட்ட அபி,

“உங்க மூக்குல ஆசிட்டை ஊத்தி தேய்க்கனும்!” என முனகினாள்.

பின் ராமின் புறம் திரும்பி,

“ராம் செல்லம் எப்படி இங்க வந்த? அம்மா அப்பாவுக்கு தெரியுமா? எப்ப கிளம்ப போற?” என கடைசி கேள்வியைக் கவலையாக கேட்டாள்.

“வெட்டு சார்தான் கூட்டிட்டு வந்தாங்க. எங்க ஸ்கூலுல இன்னிக்கு கேம்பிங் ட்ரீப் போறாங்க. நானும் போறேன்னு சொன்னேன், அப்பா சரின்னு சொல்லிட்டாரு. அப்பாட்ட ஃபோர்ம்ல சைன் வாங்கி காசும் வாங்கிட்டு, நான் ட்ரீப்கு பேர் குடுக்கல. ட்ரீப் போற மாதிரி கிளம்பினேன். அப்பா ஸ்கூல்ல விட்டுட்டு வேலை இருக்குன்னு கிளம்பி போயிட்டாரு. நான் அப்படியெ மறைஞ்சி நடந்து வந்து பக்கத்துல இருக்கற கடையில இருந்து வெட்டு சார்க்கு போன் பண்ணேன். அவர் வந்து ஏத்திக்கிட்டாரு” என சொன்னவன் வாயிலேயே போட்டாள் அபி. கையிலும் முதுகிலும் கூட அடி விழுந்தது.

“இந்த வயசுலேயே ஏமாத்து வேலையாடா படவா? இதைத்தான் நான் சொல்லிக் குடுத்து வளர்த்தனா?” குரலில் கோபம் கொப்பளிக்க இன்னும் அடிக்கப் போனாள் அபி.

சட்டென ராமைத் தன் பக்கம் இழுத்து கொண்ட சதாவுக்கும் சில பல அடிகள் விழுந்தது.

“அவனை விடுங்க வெட்டு சார். இப்போவே பொய் சொல்ல ஆரம்பிச்சிருக்கான். இன்னும் வளர வளர என்னெல்லாம் செய்வானோ!” என குமுறினாள் அபி.

“விடு அபி, விடு அவன! ஏற்கனவே நான் வர வழியெல்லாம் மேன் டூ மேன் அட்வைஸ் செஞ்சுட்டேன். வளறர பையனை அடிக்கக் கூடாதுமா! குணமா வாயால சொல்லு, ராம் கேட்டுக்குவான். நீ வளர்த்தப் பையனாச்சே, அவன பற்றி உனக்குத் தெரியாதா” என அடித்துவிட்டு அழும் அபியையும், அடி வாங்கி அழும் ராமையும் மீண்டும் அணைத்துக் கொண்டான் சதா.

அவன் மார்பின் இரு பக்கத்திலும் சாய்ந்திருந்த இருவரும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“அப்பி, சாரி அப்பி! உன்னைப் பார்க்கனும், உன் கூட ரெண்டு நாளாச்சும் இருக்கனும்னு ரொம்ப ஆசையா இருந்துச்சு தெரியுமா? எனக்கு கேம்பிங் போக ஆசையா இருந்தாலும், உனக்காக தான் போகாம இங்க வந்துருக்கேன். பொய் சொன்னது தப்புதான். இனிமே இப்படி செய்ய மாட்டேன். அழாம என்னை மன்னிச்சிரு அப்பி. ப்ளீஸ்” என கெஞ்சினான்.

ஒன்றும் பேசாமல் ராமையே பார்த்திருந்தாள் அபி.

“பேசு அப்பி!”
 

vanisha

SM Exclusive
Author
SM Exclusive Author
#5
இன்னும் அவளிடத்தில் மௌனம். அவர்களே சமாதானம் ஆகட்டும் என இருவரையும் இன்னும் தனக்குள் இறுக்கிக் கொண்டான் சதா.

“உன்னை பேச வைக்க ஒரு கவிதை சொல்லவா அப்பி?”

மௌனமே பதிலாகக் கிடைத்தது. சதாவுக்கும் கவலைப் பீடித்துக் கொண்டது.

‘ஐயோ! கோபம் வந்தா சைலண்ட் ட்ரீட்மெண்ட் குடுத்து கொல்லுவா போலிருக்கே! இந்த படபட வாய், பேசாம இருந்தா என்னால தாங்க முடியுமா?’

“எனக்கு வேற வழியே இல்லை அப்பி. வெட்டு சார் முன்னுக்கு நம்ம சீக்ரேட் கவிதைய எடுத்துவிட்டு தான் ஆகனும் போலிருக்கு”

“வேணாம்டா ராம். உதை வாங்குவ!”

“இவ்வளவு நேரமா கெஞ்சறேன், தெரியாத மாதிரி நிக்கற! நான் சொல்லித்தான் ஆவேன்” என சதாவின் அணைப்பில் இருந்து தள்ளிப் போய் நின்று கொண்டான் ராம்.

“கொன்னுருவேன்டா ராஸ்கல்!” என அவனைப் பிடிக்கப் போனாள் அபி.

அவள் கையில் அகப்படாமல் ஓடியவன்,

“தலைக்குப் போட தொப்பி

கடல்ல கிடைக்கும் சிப்பி” என ஆரம்பித்தான்.

“ராம் டேய்! போதும்டா, வேணா சொல்லாதே!” என துரத்தினாள்.

புன்னகையுடன் இவர்களின் ஓட்டத்தைப் பார்த்திருந்தான் சதா.

“என் செல்ல நாய் பப்பி

குறட்டை விடுவா அப்பி!” என ராம் சொல்லி முடிக்கவும் அவன் மேல் பாய்ந்திருந்தாள் அபி. இருவரும் புல் தரையில் கட்டிப் புரண்டார்கள். சிரிப்புடன் அவர்களைப் பிரித்துவிட்ட சதா, சாமியை அழைத்து ராமை குளிக்க அனுப்பும்படி பணித்தான்.

வெட்கச்சிவப்புடன் தலை குனிந்து தன் முன்னே நின்றிருந்த அபியின் தாடையப் பற்றி தூக்கி அவள் மூக்கைப் பார்த்தவன்,

“இத்தனை நாளா உன் கையைப் பிடிச்சுட்டு தூங்கறனே, எனக்குத் தெரியாதா நீ குறட்டை விடறியா இல்லையான்னு! அவன் சும்மா உன்னை வம்பிழுக்கறான் அபி” என சமாதானப் படுத்தினான்.

இரவில் அவள் தூங்கும் போது சன்னமாக சத்தம் கேட்கும்தான். அது கூட சதாவுக்கு கீரவாணி ராகம் போல இனிமையாக இருக்கும். அந்த ராகம் இதயத்திற்கு நல்லதாமே! அந்த சத்தத்தில் அவன் இதயமும் இனிமையாய் அதிரும், இன்பமாய் சிணுங்கும். மெல்ல முன்னேறி அவள் இடுப்பில் பட்டும் படாமல் கை போட்டுக் கொண்டு அந்த ராகத்தைக் கேட்டுக் கொண்டே கண் அயர்வான் சதா. அவன் மனைவி அவனுக்கு மனதிற்கினியவள் மட்டும் இல்லை, மூக்குக்கும் காதுக்கும் கூட இனியவள்.

அவன் கரத்தில் இருந்து தன் முகத்தை விடுவித்துக் கொண்டவள்,

“வெட்டு சார், ராம் என்னைப் பார்க்க வந்ததுல எனக்கு சந்தோஷம் தான். ஆனா இப்படி ஏமாற்றி வந்ததுல உடன்பாடு இல்ல. நீங்க எப்படி என் கிட்ட, இது சரியா இல்லையான்னு கேட்காம கூட்டிட்டு வரலாம்?” என ஊசி பட்டாசாய் வெடித்தாள்.

“பாவம் அபி அவன். போன் பண்ணதும் அவன் சொன்ன முதல் வாக்கியமே ‘எனக்கு அப்பி கண்ணுலயே நிக்கிறா’ன்னுதான். புள்ளைங்களுக்கு நம்ம நியாயம் வெங்காயம்லாம் புரியாது அபி. அவங்களுக்கு தெரிஞ்சது பாசம்தான்”

அபிக்கும் தொண்டையில் வார்த்தைகள் சிக்கியது.

“அவனுக்கு பாசம் காட்டனாலும், சின்ன பிள்ளையில இருந்து நீதி, நேர்மை, நியாயம் எல்லாம் எனக்கு தெரிஞ்ச அளவுல சொல்லிக் குடுத்துருக்கேன் வெட்டு சார். அவங்க அண்ணன் மாதிரி” குரலை செறுமி சரிப்படுத்திக் கொண்டவள்,

“அவங்க அண்ணா, அக்கா மாதிரி அவன் வந்துற கூடாதுன்னு ரொம்ப பாடுபட்டேன். ஆனா நான் சரியா சொல்லிக் குடுக்கலையோ?” என கண்கலங்கினாள்.

அவளை இழுத்து அருகே நிறுத்திக் கொண்டவன், அவள் கண்களைப் பார்த்து,

“அபி, ராம் பொய் சொன்னாந்தான்! ஆனா அது உன் மேல உள்ள பாசத்துல சொன்னது. சின்ன பையன்மா அவன், எத்தனை நாளைக்கு உன்ன பார்க்காம இருப்பான்? உடம்பு நல்லானவுடனே, நானே உன்னைக் கூப்புட்டு ஸ்கூல் போகனும்னு தான் இருந்தேன். ஆனா அதுக்குள்ள அந்த ராஜாவை நீ போய் பார்த்துட்ட. கேஸ் வாபஸ் வாங்க மாட்டோம்னு நீ சொன்னதுல, உங்க மாமா ரொம்ப கோபமா இருக்காரு. எனக்கு போன் போட்டு ஒரே ரகளை வேற. இப்போ நீ போய் ராமை பார்க்கறதுனால அவனை வச்சி உன் கிட்ட நெருங்குவாங்கன்னுதான், உன்னை கூட்டிட்டுப் போகல. ராம் மேல நீ அக்கறை இல்லாம இருக்கற மாதிரி இருக்கறதுதான் கொஞ்ச நாளைக்கு உங்க ரெண்டு பேருக்கும் நல்லதுன்னு நினைச்சேன். நாம ஒன்னு நினைச்சா இந்த குட்டிப்பையன் ஒன்னு நடத்தி வச்சிருக்கான்.”

“இப்போ என்ன செய்யறது வெட்டு சார்?” கவலையாகக் கேட்டாள் அபி.

“வேற என்ன செய்ய? ஜஸ்ட் எஞ்ஜாய்! இந்த வீக்கேண்ட் அவன் கேம்ப் போனதாகவே அவங்க நினைச்சிக்கட்டும். நீ அவன் கூட சந்தோசமா இரு. சண்டே பஸ் வர நேரத்துக்கு யாருக்கும் தெரியாம கொண்டு போய் ஸ்கூல்ல விட்டுறலாம். அங்க ஒரு டீச்சர கரேக்ட் பண்ணி வச்சிருக்கேன். டைமிங்லாம் கரெக்டா சொல்லிருவாங்க”

அபி இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தாள்.

“என்ன அபி? ஏன் முறைக்கிற?” கலவரமாகக் கேட்டான் சதா.

“உங்களுக்கு சொந்த பொண்டாட்டியே கரேக்ட் பண்ண தெரியல! இந்த லட்சணத்துல ஸ்கூல் டீச்சர கரேக்ட் பண்ணி வச்சிருக்கீங்களா? விளங்கிரும்!” என நொடித்துக் கொண்டாள்.

அவள் வார்த்தையில் வாய் பிளந்து பேச்சிழந்து நின்றான் சதா.

“பொண்டாட்டிய கரேக்ட் பண்ண தெரியலையா? எனக்கா?” முகம் அஷ்டகோணலாக மாறியது அவனுக்கு.

“ஆமாம் உங்களுக்குத்தான்!” அவனை நிமிர்ந்துப் பார்த்து விறைப்பாக சொன்னாள் அபி.

“அது எப்படின்னு கொஞ்சம் சொல்லி தரீங்களா சகலமும் தெரிஞ்ச சரஸ்வதி?”

“தோ இப்படிதான்” என எக்கி அவன் கன்னத்தில் எச்சில் பட முத்தமிட்டவள், அவன் திகைத்து விழிக்கும் போதே உள்ளே ஓடி விட்டாள்.

“ராமை கூட்டிட்டு வந்ததுக்கு ரொம்ப நன்றி வெட்டு மாமா” குரல் மட்டும் காற்றோடு கேட்டது.

“வெட்டு மாமாவா?” எச்சில் கன்னத்தைத் துடைக்கக் கூட மனமற்று முப்பது பல்லையும் (இடண்டை பிடுங்கிவிட்டார்கள்) தெரிய தேன் உண்ட வண்டு போல மதிமயங்கி நின்றான் சதா. அவன் அம்மா எப்பொழுதும் பாடும் பாடல் அவன் காதில் ரீங்காரமிட்டது

தேன் உண்ணும் வண்டு
மாமலரைக் கண்டு,
திரிந்தலைந்து பாடுவதேன்
ரீங்காரம் கொண்டு
பூங்கொடியே நீ சொல்லுவாய் ஓ ஓ!!


ஓஓவென ஹம் செய்தபடியே வீட்டினுள் நுழைந்தான் சதா.

முத்தமிட்டு எச்சில் செய்த கன்னத்திலேயே கூடிய விரைவில் அறைந்து வைக்கப் போகிறாள் என தெரியாமல் சந்தோசமாக விசில் அடித்துக் கொண்டு சாப்பிட அமர்ந்தான் சதா.

(உரசுவான்)
 

Advertisements

Top