Urasaathey Usura Thaan -- epi 26

vanisha

SM Exclusive
Author
SM Exclusive Author
#3
அத்தியாயம் 26

டிமேன்ஷியாவைப் பற்றிய தகவல்கள்

டிமேன்ஷியாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிக குறைவாக இருக்கும். நிமோனியா போன்ற நோய் சீக்கிரமாக இவர்களைப் பீடித்துக் கொள்ளும்.

ஹாஸ்பிட்டலின் காரிடரில் கிடந்த நீண்ட பெஞ்சில் சதா அமர்ந்திருக்க, அவன் மடியில் தலை சாய்த்து அபி படுத்திருந்தாள். அவர்களுக்கு சற்று தள்ளி மணியம் அமர்ந்திருந்தார்.
“ராத்திரில இருந்து ரெண்டு பேரும் இப்படியே இருக்கீங்க. பிள்ளைத்தாய்ச்சி பொண்ணு உனக்கு ரெஸ்ட் வேணாமாம்மா? வீட்டுக்குப் போம்மா அபி”
“நல்லா சொல்லுங்க மணி சார். நானும் கெஞ்சி கூட பார்த்துட்டேன். அப்பாவைப் பத்தி ஒன்னும் தெரியாம வீட்டுக்குப் போக மாட்டேன்னு ஒரே அடம்.” அவள் நெற்றியை வருடியவாறே சொன்னான் சதா.
மெல்ல எழுந்து அமர்ந்தவள்,
“டாக்டர் வந்து ஏதாச்சும் சொல்லட்டும் மணிப்பா. உடனே வீட்டுக்கு ஓடி போயிருறேன். இப்போ போனாலும் என்னால கண்ண மூடி தூங்க முடியாது. அப்பா ஞாபகமாகவே இருக்கும்.”
சதாவும் மணியமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். மணியத்தின் கண்ணசைவில் சொல்லிவிடு எனும் வற்புறுத்தல் இருந்தது. மெல்ல தலையாட்டினான் சதா.
“சரி இங்கயே இருங்க. நான் போய் ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வரேன். இந்த மாதிரி நேரத்துல காலாகாலத்துல வயித்துக்கு ஏதாவது குடுத்துக்கிட்டே இருக்கனும்” என்றவர் காபிடேரியாவைத் தேடிப்போனார்.
“படுத்துக்கோ அபிம்மா”
“இடுப்பு வலிக்குது மாமா. கொஞ்ச நேரம் உட்கார்ந்து இருக்கேன்.” என்றவள் அவன் தோள் வளைவில் சாய்ந்து கொண்டாள்.
மெல்ல அவள் இடுப்பைப் பிடித்து விட்டான் சதா.
“மாமா”
“ஹ்ம்ம்”
“அப்பா அவரோட கதைய சொன்னாரே, அதுக்கப்புறம் என்னாச்சு? அவருக்கு ஏன் ஞாபகம் இல்ல?”
“அதுக்கப்புறம் நடந்தது இந்த டிமேன்ஷியா வந்ததுக்கப்புறம் அவர் நினைவில இருந்து அப்படியே அழிஞ்சு போச்சு அபிம்மா. மனதுக்கு கஷ்டமானத ஏன் ஞாபகம் காட்டனும்னு நானும் அப்படியே விட்டுட்டேன். அவரோட கண்ணுரங்கமும் மகனும் எங்கயாச்சும் நல்லா இருக்கறதா நினைச்சுட்டே போயிறட்டும்னு விட்டுட்டேன்.”
சதாவின் வாயிலே பட்டென ஒன்று போட்டாள் அபி.
“அதென்னா போயிறட்டும்? அப்படிலாம் சொல்லாதீங்க. அப்பா ரொம்ப நாளைக்கு நல்லா இருப்பாரு. அவருக்கு என்ன மிஞ்சி மிஞ்சி போனா 55 வயசு இருக்குமா? அதுக்குள்ள ஏன் போகனும். அதெல்லாம் இருப்பாரு” என சிடுசிடுத்தாள்.
கசந்த புன்னகை ஒன்று அவன் இதழ்களில் நெளிந்தது.
“எனக்கும் அதே ஆசைத்தான் அபிம்மா.”
“அவருக்கு ஞாபகம் இல்ல, உங்களுக்கு ஏதாச்சும் ஞாபகம் இருக்கா? சொல்லுங்களேன் மாமா. அத்தை இறந்துட்டாங்கன்னு தெரியும். ஆனா எப்படி இறந்தாங்க? கடைக்குப் போனப்போ என்ன ஆச்சு?”
நெடிய பெருமூச்சை இழுத்து விட்டான் சதா.
“அப்போ எனக்கு பத்து வயசு இருக்கும் அபி”
எப்போதும் வீட்டுக்குள் நுழையும் முன்னே அம்மா மகனின் சத்தம் தெருவரை கேட்கும். இன்று ஒரே அமைதி. மெல்ல சத்தம் செய்யாமல் தங்கள் அறைக்குள் நுழைந்தார் குமரகுரு. அங்கே கட்டிலில் அமராவதி உட்கார்ந்திருக்க, அவர் மடியில் தலை வைத்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தான் சதா. கையில் அமராவதியின் முந்தானையை சுற்றிக் கொண்டு அதை மூக்கில் வைத்து முகர்வதும், பின் புத்தகத்தைப் படிப்பதும், மீண்டும் முகர்வதுமாய் இருந்தான். அமராவதியோ, ஒரு கையில் கதை புத்தகத்தைப் பிடித்துக் கொண்டு மறு கையால் மகனின் தலையைக் கோதிக் கொண்டிருந்தார்.
சற்று நேரம் கவிதையாய் தெரிந்த அந்தக் காட்சியை தன் கண்களுக்குள் கிளிக் செய்து நெஞ்சுக்குள் புதைத்துக் கொண்டார் குமரகுரு. முகமெல்லாம் புன்னகை. என் குடும்பம் என்கிற பூரிப்பு. அவர் அப்படி நின்று மூன்று நிமிடம் கூட இருக்காது.
“அம்மா, அப்பா வாசம் அடிக்குதும்மா. அவர் வந்துட்டாரு போலம்மா” என தன் தாயின் மடியில் இருந்து எழுந்து அமர்ந்த சதா, ரூமின் வாயிலை நோக்கினான். அங்கே சிரித்த முகமாக நின்றிருந்தார் குமரகுரு.
“அப்பா!!!” என ஓடி வந்தான் சதா. அவன் கட்டிப் பிடிப்பதற்குள் அவனைப் பிடித்து நிறுத்தினார் குமரகுரு.
“டேய் மூக்கழகா! அப்பா மேலலாம் அழுக்குடா. இரு குளிச்சிட்டு வரேன், அப்புறம் கட்டிப்புடிச்சு உருளலாம்” என்றார்.
“எத்தனை தடவை சொல்லிருக்கேன் உங்க கிட்ட, என் புஜ்ஜிமணிய மூக்கழகான்னு கூப்புடாதீங்கன்னு. இன்னொரு தடவை என் காதுல விழுந்துச்சு, வாசல்ல படுக்க வச்சிருவோம் மாமா. ஜாக்கிரதை” என மிரட்டினார் அமராவதி.

“ஐயோ கண்ணு, பயமா இருக்கே! அப்படிலாம் ரொம்ப பெரிய தண்டனை எல்லாம் குடுத்துறாதடி” என நடுங்குவந்து போல நடித்தார் அவர். சதாவுக்கு சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது.
 

vanisha

SM Exclusive
Author
SM Exclusive Author
#4
“என்ன மாமா இன்னிக்கு சீக்கிரமா வந்துட்டீங்க? உடம்புக்கு ஒன்னும் இல்லையே?” கவலையாக கேட்டார் அமராவதி.
“என் வேலைய முடிச்சுட்டேன் அமரா. முதலாளிகிட்ட பெர்மிசன் கேட்டேன், குடுத்துட்டாரு. நாம பீச்சுக்குப் போயிட்டு அப்படியே ஹோட்டல்ல சாப்பிட்டு வரலாம்.”
“சமைச்சிருக்கேன் மாமா. பையனுக்கு மட்டும் வெளிய பிரியாணி வாங்கிக்கலாம். நாம வீட்டுல வந்து சாப்பிட்டுக்கலாம்”
“அதெல்லாம் முடியாது கண்ணு. உன் பிள்ளைக்கு மட்டும் பிரியாணியா? என் பிள்ளைக்கு தேவையில்லையா? என் செல்ல கண்ணுக்கும் இன்னிக்கு பிரியாணித்தான். நான் மட்டும் வீட்டு சாப்பாடு சாப்பிட்டுக்கறேன்” என சிரித்தார் குமரகுரு.
தன் ஆசை மாமனை காதலாக அணைத்துக் கொண்டார் அமராவதி.
“அழுக்குடி அமரா”
“அதெல்லாம் பரவாயில்ல. எப்படினாலும் குளிப்பாட்டி விடறப்ப என் மேல இந்த அழுக்க பூசத்தான் போறிங்க!” என ரகசியமாக அவர் காதில் முணுமுணுத்தார் அமராவதி.
“உனக்கு நான் பூசிவிட, எனக்கு நீ பூசிவிட ஜலக்கிரீடை அமோகமாக தொடங்கட்டும் தேவி” இவரும் மெல்ல முணுமுணுத்தார்.
இருவரையும் இழுத்துப் பிரித்து விட்டான் சதா.
“எப்போ பாரு எனக்கு கேட்காத மாதிரி குசுகுசுன்னு பேசறீங்க நீங்க ரெண்டு பேரும். எனக்கும் பத்து வயசு ஆச்சு. எனக்கும் கேட்கற மாதிரி பேசுங்க.” என காலை தரையில் மிதித்துக் கொண்டு அழ ஆரம்பித்தான்.
“பாருங்க வந்ததும் என் பிள்ளைய அழவைக்கறீங்க. போங்க போய் குளிங்க. சோப்பு எங்கன்னு தெரியலைனா கூப்புடுங்க, நான் வந்து எடுத்துக் குடுக்கறேன். போங்க, போங்க” என கண்ணடித்து சிடுசிடுப்பதைப் போல நடித்த அமராவதி மகனிடம்,
“நீ வாடா செல்லக்குட்டி. அம்மா புது சட்டை மாத்தி விடறேன். இன்னிக்கு பீச்சுல பிங்க கலர் பஞ்சு மிட்டாய் வாங்கலாமா?” என கேட்டு அவனை அணைத்துக் கொண்டார்.
“இல்ல ப்ளூ கலர்ல தான் வேணும்” என பதிலளித்த மகனை கிளப்பி, இவர்களும் கிளம்பி பைக்கில் புறப்பட்டார்கள் பீச்சுக்கு. பீச்சில் மகனோடு ஓடிப்பிடித்து விளையாடி, அலைகளில் கால் நனைத்து அவன் கேட்ட தின்பண்டங்களை வாங்கி கொடுத்து என நேரம் அழகாக பறந்தது.
வீட்டுக்கு வரும் வழியில் அவர்கள் எப்போதும் வாங்கும் பிரியாணி கடைக்கு சென்றார்கள் பொட்டலம் வாங்க. அந்த கடைக்குப் பக்கத்திலேயே விளையாட்டு பொருட்கள் விற்கும் கடை ஒன்று இருந்தது. அதில் டிஸ்ப்ளேயில் வைத்திருந்த ரிமோட் கார் மீது சதாவின் மொத்த கவனமும் திரும்பியது. அமராவதியின் சேலை முந்தானையைப் பிடித்து இழுத்தான். அவனுக்கு எது வேண்டும் என்றாலும் அம்மாதான் தூது. நேராக தகப்பனிடம் கேட்டால், பல தடவை கேட்டது கிடைக்கும். சில தடவைகள் வண்டி வண்டியாய் அறிவுரைகள் கிடைக்கும். அம்மாவிடம் எது சொன்னாலும் சட்டென நடந்துவிடும் என்பது அவன் பத்து வருட அனுபவத்தில் கண்டிருந்த பேருண்மை.
“என்ன சதாக்குட்டி?”
கையைப் பக்கத்து கடையை நோக்கிக் காட்டினான் சதா.
“ரிமோட் காரும்மா. பார்க்கவே நல்லா இருக்கு. அப்பா கிட்ட சொல்லி வாங்கி குடும்மா. ப்ளிஸ்” மூக்கை சுருக்கி கண்ணையும் சுருக்கி, உதட்டைப் பிதுக்கினான். மகனின் முகம் காட்டிய ஜாலத்தில், கன்னத்தில் அழுந்த முத்தமிட்டார் அமராவதி.
“அம்மா!! வெளிய வந்தா முத்தம் குடுக்காதீங்கன்னு எத்தனை தடவை சொல்லிருக்கேன். எல்லாம் பார்க்கறாங்கம்மா. வீட்டுல எவ்ளோ வேணா குடுங்க, நான் சமத்தா வாங்கிப்பேன்”
“யாரு பார்த்தா என்ன? என் செல்ல குட்டிக்கு நான் குடுக்கறேன்!” மீண்டும் மறுகன்னத்தில் அழுத்திக் கொடுத்தார்.
“அம்மா!!”
“சரி, சரி குடுக்கலடா!”
“ம்மா, கேளும்மா அப்பாகிட்ட ப்ளிஸ்”
“இருடா வரட்டும். “
பொட்டலம் வாங்கிக் கொண்டு வெளியே வந்த குமரகுருவை,
“மாமா” என பாசமாக அழைத்தார் அமராவதி.
மனைவியையும் மகனையும் மாறி மாறி பார்த்தவர்,
“என்னவாம் உன் மகனுக்கு? என்ன வேணுமாம்?” என பாயிண்டைப் பிடித்துக் கேட்டார்.
“அது வந்து, தோ அந்த கடையில வச்சிருக்காங்களே அந்த காரு வேணுமாம். நல்லா படிக்கற பையன், ஆசைப்பட்டத வாங்கி குடுக்கறதுல தப்பில்லயே மாமா” அழகாக புன்னகைத்தார்.
மனைவியின் புறம் குனிந்து மெல்லிய குரலில்,
“இப்போ காசு அந்தளவுக்கு இல்லம்மா. உனக்கு சேலை எடுத்து குடுக்கறதுக்காக ஒரு சீட்டு போட்டுருக்கேன் கண்ணு. நாளைக்குத்தான் பணம் கைக்கு வரும்.” என்றார் குமரகுரு.
“இப்போ சேலை கட்டி மினுக்கிகிட்டு நான் எங்க போக போறேன்? அந்த காசுல பையனுக்கு ரிமோட்டு காரு வாங்கி குடுங்க மாமா”
“கண்ணுரங்கம், உன்னைக் கட்டி இங்க கூட்டி வந்து நல்லபடி வச்சிக்கலையோன்னு மனசு அடிச்சுக்குதுடி. ஒரு சேலை வாங்கி குடுக்க கூட சீட்டு போட வேண்டியதா இருக்கு. அதையும் வேணான்னா எப்படிம்மா? எனக்காக அன்னிக்கு தோப்புக்கு நீ வராம இருந்திருந்தா, நல்ல புருஷன் கட்டி நல்லா ராஜாத்தியாட்டம் இருந்துருப்ப!”
“உங்க தலை! என் வாயப் புடுங்கி வாங்கி கட்டிக்காதீங்க சொல்லிட்டேன். பேச்ச பாரு, இன்னொருத்தன கட்டி, மசுரு வாழ்க்கை வாழ்ந்திருப்பேன்னு. அப்படி எதாச்சும் நடந்துருந்தா என்னை புதைச்ச எடத்துல மரமே வளர்ந்துருக்கும்யா இந்நேரம்” மகனுக்கு கேட்காமல் குமரகுருவை பிரித்து மேய்ந்து விட்டார் அமராவதி.
“சதாப்பையா, அப்பா கிட்ட இப்போ காசு இல்லையாம். நாளைக்கு வாங்கி தருவாரு. சரியாடா?”
“சரிம்மா. நாளைக்கே வரலாம்” கிடைக்கும் என்பதில் சந்தோஷமாகி விட்டான் சதா.
அமராவதி வீடு வரும் வரை முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு வந்தார். உள்ளே நுழைந்ததும் சதாவை பாத்ரூமுக்கு அனுப்பி குளிக்க சொன்னவர், பிரியாணியைப் பிரித்து தட்டில் வைத்தார். மகன் வெளியே வந்ததும் அவனை அமர வைத்து உணவை ஊட்டி விட்டார்.
“போதும்மா!”
“இன்னும் கொஞ்சம்டா செல்லம். இது அம்மா வாய். ஆ காட்டு” என ஊட்டியவர் அப்பா வாய், பாட்டி வாய், தாத்தா வாய் என ஏமாற்றி முழுதையும் அவன் வயிற்றுக்குள் நிரப்பி விட்டார்.
“போம்மா! எப்போ பாரு என்னை ஏமாத்தி வயிறு முட்ட ஊட்டி விடற. இனிமே நானே சாப்பிட்டுக்குவேன்.”
“இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்டா கண்ணா. அப்பா மாதிரி வளர்ந்ததும் நீயா சாப்பிட்டுக்குவியாம். இப்போ அம்மாதான் ஊட்டி விடுவனாம்”
மகன் சாப்பிட்டதும் பள்ளி பாடம் செய்ய சொன்னவர், தான் சமைத்த உணவைக் கொண்டு வந்து தாங்கள் அமர்ந்து சாப்பிடும் இடத்தில் வைத்தார்.
“சதாக்கண்ணு, அப்பாவ சாப்பிட வர சொல்லு”
வந்ததில் இருந்து மனைவியும் மகனுமாய் மட்டும் தங்கள் உலகத்தில் இருந்தவர்கள் அவரைக் கண்டு கொள்ளவே இல்லை.
“ப்பா, அம்மா சாப்பிட கூப்புடறாங்க”
“வரேன்னு சொல்லு”
“ம்மா வராராம்”
“சீக்கிரம் வர சொல்லுடா. எனக்கு கண்ண கட்டுது”
“ப்பா சீக்கிரம் வரனுமாம். அம்மாக்கு கண்ண கட்டுதாம்”
“கண்ண கட்டுனா போய் படுக்க சொல்லு சதா. நானே போட்டுகிட்டு சாப்பிடுவேன். அதுக்கு முன்ன அவளுக்கு வாங்கி வச்சிருக்கற பிரியாணிய சாப்பிட்டு போய் படுக்க சொல்லு”
“ம்மா, சாப்பிட்டு படுப்பியாம்.”
“உங்கப்பா இப்போ வரப்போறாரா இல்லையா?” குரலில் சுதி ஏறியது.
கடுப்பாகி போனான் சதா.
“உங்க ரெண்டு பேருக்கும் வேற வேலை இல்ல. பேச வாயிருக்கு, கேக்க காதுருக்கு சொந்தமா பேசிக்குங்க. நான் போய் படுக்கப்போறேன். ம்மா, சீக்கிரம் சாப்புட்டு வாம்மா. கை வேணும் மோந்துக்க.”
“நீ போய் படுய்யா. அம்மா வரேன்”
சதா ரூமுக்கு சென்றதும், குமரகுருவின் அருகில் வந்தார் அமராவதி.
“என்ன மாமா நக்கலா? நீ சாப்பிடாம நான் சாப்பிட மாட்டேன்னு தெரியும்தானே. ஒழுங்க வந்து சாப்புடு”
“யாருக்குடி நக்கலு? ஏதோ ஆதங்கத்துல நாலு வார்த்தை சொல்லிட்டேன். பொசுக்குன்னு கோச்சிகிட்டு பேசாம இருக்க! நீ பேசாமா ஒன்னும் கடுப்புல எனக்கு சோறு போட வேணாம் போ”
“பேசறதெல்லாம் பேசிட்டு, என்னமோ தப்பு என் மேல மாதிரி நீ கோபப்படறது நல்லா இல்ல சொல்லிட்டேன். உன் பிரியாணியும் வேணாம், ஒரு மண்ணும் வேணா போ. நான் பட்டினியா போய் படுக்கறேன்”
“ஏ புள்ள கண்ணு. உடனே கண்ண கசக்காத புள்ள. நான் பேசனது தப்புத்தான். மன்னிச்சிரு. எப்பொழுதும் போல காலுல விழுந்துறவா?”
“அதெல்லாம் ஒன்னும் வேணா மாமா”

“அப்போ வா, வந்து சாப்புடு.”
 

vanisha

SM Exclusive
Author
SM Exclusive Author
#10
கையைப் பிடித்து மனைவியை கூட்டி சென்று சாப்பிடும் இடத்தில் அமர்த்தினார் குமரகுரு. வீட்டு சாப்பாட்டையும் பிரியாணியையும் ஒருவருக்கு ஒருவர் ஊட்டியபடி சாப்பிட்டு முடித்தனர்.
சாப்பிட்டதும் படுக்கை அறைக்கு வந்தார்கள் இருவரும். சதாவுக்கு தூக்கம் கண்ணை சுழட்டினாலும் அமராவதிக்காக காத்திருந்தான்.
“ஏன்டா இன்னும் தூங்கலையா?” கேட்டார் குமரகுரு.
“அம்மா கை வேணும்”
“பத்து வயசாச்சு, இன்னும் அம்மா வேணும் கை வேணும்னு”
“பாரும்மா, அப்பா திட்டுறாரு”
“தூங்கறப்போ ஏன் பையனைத் திட்டறீங்க? கெட்ட சொப்பனம் ஏதாச்சும் வரதுக்கா? நீ வாடா என் தங்கம்” மகனை அருகே படுக்க வைத்து தன் கையைக் கொடுத்தார் அமராவதி. கையை முகர்ந்த சில நிமிடங்களில் தூங்கி விட்டான் சதா.
“அவன கெடுத்து வைக்கறதே நீதான்டி. ஆம்பள பையன் மாதிரியா வளர்க்கற? எப்போ பாரு அம்மா, அம்மானு உன் முந்தானையில ஒளிஞ்சிக்கிறான்.”
“ஒளிஞ்சிக்கிட்டும். இப்ப அதுக்கு என்ன? எவ்வளவு வளந்தாலும் அவன் எனக்கு குழந்தைதான். நானே பையன் என்னை விட்டு விலகிப் போறானோன்னு கவலைல இருக்கேன். நீங்க வேற! குளிப்பாட்ட விடமாட்டறான், வெளிய போனா கைப்பிடிக்க விடமாட்டறான்.”
“வளருறான்டி! ஆம்பள பசங்க இப்படித்தான் வளர வளர விலகிப் போவாங்க. பொம்பள புள்ளைங்கனா எப்பவுமே ஒட்டிக்கிட்டே இருப்பாங்க”
“ஹ்கும். அதுக்குத்தான் இங்க வழி இல்லையே.”
“விடுடி கண்ணும்மா”
“என்னத்த விட? இவன பெக்கறப்போ ரத்தப்போக்கு ரொம்ப இருக்கு அடுத்த பிள்ளைய கொஞ்ச நாள் தள்ளிப் போடுங்கன்னு சொன்னாங்க. ஓரேடியா தள்ளிப் போடற மாதிரி பொசுக்குன்னு போய் ஆபரேஷன் பண்ணிட்டு வந்துட்டீங்களே!”
எப்பொழுது இந்த விஷயம் அவர்களுக்குள் வரும் போதும் கண்ணைக் கசக்குவார் அமராவதி.
“கண்ணெல்லாம் நெட்டுக்கிட்டு, நீ மூஞ்சி வேளிரி போய் கிடந்தத பார்த்து பாதி உசுரு போச்சுடி எனக்கு. புள்ள பெருசா இருக்கான்னு கத்திரிக்கோல் போட்டது மட்டுமில்லாம, பொழச்சி வருவியான்னு தெரியாதுன்னு வேற சொல்லிட்டாங்க. மூனு நாளு பைத்தியக்காரன் மாதிரி சுத்திகிட்டு இருந்தேன் ஆஸ்பத்திரில. திரும்ப உன்னை அந்த நிலைமைக்கு ஆளாக்கவே கூடாதுன்னுதான், போய் நான் பண்ணிகிட்டு வந்துட்டேன். இல்லைனா என்னை எப்படியும் கரைச்சி அடுத்தப் புள்ளைக்கு அடி போடுவன்னு தெரியும்டி கண்ணுரங்கம்.” அழும் மனைவியை அணைத்துக் கொண்டார்.
“நமக்கு சதா ஒருத்தன் போதும்மா! நம்ம பொருளாதர நிலையில நிறைய புள்ளைங்கல பெத்து எதுக்கு அதுக்கும் இதுக்கும் ஏங்க விடனும். இவன மட்டும் நல்லா படிக்க வச்சு, முடிஞ்ச வரைக்கும் அவன் ஆசைகள நிறைவேத்தி ராஜாவாட்டம் வளப்போம் கண்ணு. என் கண்ணுல, அழாதேடி.”
“அழாம எப்படி மாமா? நான் உன் மேல வச்ச காதல் தான் பெருசுன்னு நினைச்சுக்குவேன். ஆனா அப்படி இல்லைடி மண்டு, என்னோட காதல் தான் பெருசுன்னு அடிக்கடி என்னை திக்குமுக்காட வச்சிருற. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எனக்கு நீதான் மாமா புருஷனா வரனும்.”
“எனக்கும் நீதான் பொண்டாட்டியா வரனும்டி கண்ணுரங்கம்” தழுதழுத்தார் குமரகுரு.


(உரசுவான்)


ஆண்கள் குமரகுரு மாதிரி இருக்காங்களான்னு கேட்டிங்கன்னா, எனக்கு தெரிஞ்சு இருக்காங்க. என்னோட கெமிஸ்ட்ரி சார் மிஸ்டர் லிம். அவர் மனைவிக்காக தானே போஉ ஆப்ரேஷன் செஞ்சுட்டு வந்தாரு. எங்க கிட்ட எல்லாம் ஷேர் பண்ணிகிட்டாரு இந்த விஷயத்தை. ஆண்கள் பண்ணிகிட்ட ஒரே வலியா போயிரும். பெண்கள் செஞ்சிகிட்டா, போக போக எஆதவது பிரச்சனை வந்துகிட்டே இருக்கும்னு சொன்னாரு. க்ரேட்ல. அதோட தாக்கம்தான் இந்த எபி..
 

Advertisements

Latest updates

Top