• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

uruvamilla oru uravu 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
உருவம் – 1

இரவு பதினோரு மணி அளவில் அடர்ந்த வயல்வெளி காட்டை ஒட்டி, அந்த ஒற்றையடி பாதையில் தன் ஸ்கூட்டியை ஓட்டிக் கொண்டு வந்தாள் ப்ரீத்தி. அந்த பாதையின் முடிவில், வலது பக்கத்தில் ரோஜா செடிகளின் நடுவே அந்த சிறிய வீட்டு காம்பவுண்டில் வண்டியை நிறுத்தினாள்.

அந்த இடத்தில், அந்த ஒற்றை வீட்டை தவிர வேறு வீடுகள் இல்லை. அங்கே தான் இவள் வசிக்கிறாள், அவளது ஐந்து வயதில் இருந்து.

ப்ரீத்தி, முப்பத்தி மூன்று வயது அழகிய மங்கை. தாய், தந்தை அவளின் ஐந்து வயதில் ஒரு விபத்தில் இறந்ததால், பாட்டி மரகதம் அவளை எடுத்து இங்கு வந்து வளர்க்க தொடங்கினார்.

சிறு வயது முதலே, அவளின் புத்திக் கூர்மையையும், கவனிக்கும் திறனையும் அறிந்த பாட்டி, அவளை நல்ல பள்ளியில் சேர்க்க விரும்பினார். ஆகையால், நகரத்தில் உள்ள ஒரு ஆங்கில வழிக் கல்வி முறையில் உள்ள பள்ளியில் சேர்த்தார் அவளை.

அங்கே இவளை கவனித்த ஆசிரியர், அவளின் iq லெவல் 200 இருப்பதை அறிந்து அப்பொழுதே இரண்டு வகுப்பு தள்ளி இவளை சேர்த்து விட்டார். இதனால், அவளை சுற்றி ஒரு கூட்டம் அவளை துன்புறுத்த தொடங்கினர்.

முதலில், பயந்து நடுங்கியவள் நாளடைவில் அவளை கண்டு அவர்கள் அஞ்ச தொடங்கினர். இதனால், அவளுக்கு நட்பு வட்டம் என்பது பள்ளி காலத்தில் இருந்து இல்லை.

இப்பொழுது, அவள் ஒரு சிறந்த மனோதத்துவ மருத்துவர். அவளின் வேலை, அவள் வசிக்கும் இடத்தில் இருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெரிய மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வருகிறாள்.

அவளுக்கு வேலை கிடைத்த அன்று, செய்தி கேட்ட சந்தோஷத்தில் அவளின் பாட்டி மூப்பின் காரணமாக இறந்து விட்டார். தனக்கு இருந்த ஒரே உறவும், இப்பொழுது இல்லை எனவும் அவளுக்கு வருத்தமாக இருந்தது.

ஆனால், அதன் பின் இனி தனக்கு தானே தான் உறவு என்ற ரீதியில் இருக்க பழகிக் கொண்டாள். தான் உண்டு, தன் பணி உண்டு என்று தான் அவளது உலகம் சுழலும்.

ஸ்கூட்டியை நிறுத்திய கையோடு, தன் கைபையை எடுத்துக் கொண்டு வீட்டு வாசல் முன் நின்றாள். கைப்பையினுள் இருந்து, வீட்டு சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே சென்று, ஹால் லைட் சுவிட்சை தட்டினாள்.

ஹாலில் வெளிச்சம் வரவும், தன் கைபையை எடுத்து சோபாவின் மேல் எரிந்து விட்டு, கதவை நன்றாக சாற்றினாள். வீட்டு சாவியை ஹங்கரில் மாட்டிவிட்டு, ஹாலை ஒட்டி இருந்த அவளின் படுக்கையறைக்கு சென்றாள்.

படுக்கை அறையில் லைட் சுவிட்ச் போட்டுவிட்டு, அந்த அறையில் இருந்த பாத்ரூம் உள்ளே சென்றாள். நன்றாக குளித்துவிட்டு, இரவு உடையை உடுத்திக் கொண்டு வெளியே வந்தாள்.

ஹாலிற்கு மறுபக்கம் இருந்த கிட்சன் நோக்கி சென்று, அங்கே இருந்த maggi பாக்கெட் ஒன்றை எடுத்து தயார் செய்ய தொடங்கினாள். சிறிய பௌலில், தயாரான maggiயை எடுத்துக் கொண்டு ஹால் சோபாவில் வந்து அமர்ந்தாள்.

எதிர் சோபாவில் அமர்ந்து இருந்த அவளது தோழி, அவளை ஏக்கமாக பார்த்துக் கொண்டு இருந்தாள். அவளோ, சாப்பிடுவதில் மட்டுமே தன் கவனத்தை வைத்து இருந்தாள்.

சாப்பிட்டு முடித்து பௌலை, அங்கே இருந்த டீபாயின் மேல் வைத்துவிட்டு, அருகே இருந்த தண்ணீர் பாட்டிலை திறந்து தண்ணீர் எடுத்து குடித்தாள்.

குடித்து முடித்த பின், அவளை பார்த்து அவள் தன் கட்டை விரலை எடுத்து மேல் நோக்கி காட்டினாள் வெற்றி என்பது போல்.

“ஹே ப்ரீத்தி! நீ சாதிச்சிட்ட! ஹே இப்போ தான் எனக்கு ஹாப்பியா இருக்கு, நாளையில் இருந்து அப்போ நானும் உன் கூடவே வரேன் சரியா” என்று அவள் குதித்தாள்.

“அது எல்லாம் சரி தான் சாஹித்யா, ஆனா எனக்கு ஒரு கண்டிஷன் இருக்கு. நீ என்னோட அசிஸ்டன்ட்டா கூடவே இருக்கணும், இந்த புது வேலையில், உனக்கு அதுக்கு சம்மதமா?” என்று கேட்டாள் ப்ரீத்தி.

“என்ன????” என்று அதிர்ந்தாள் சாஹித்யா, ஒரு வருடமாக அவளோடு ஒரே வீட்டில் வசிப்பவள், அவளின் உற்ற தோழி.

“என்ன ஷாக் ஆகுற! ஒரு வருஷமா இதே பீல்ட் ல தான, நாம இருக்கோம். அதுவும் இல்லாம, நீ ஒருத்தி தான் என்னை நல்லா புரிஞ்சி வச்சு இருக்க”.

“எல்லோரும் என் கிட்ட பழக யோசிசிப்ப, நீ மட்டும் தான் என் கூட என்னை நல்லா தெரிஞ்சிகிட்டு பழக ஆரம்பிச்ச. அப்புறம் உன் விருப்பமும், என் விருப்பமும் ஒரே மாதிரி இருக்கவும் தான், நான் அப்புறம் உன்னை பத்தி தெரிஞ்சிகிட்டேன்”.

“இந்த ஒரு வருஷத்துல, உனக்கும் எனக்கும் ஆயிரத்தெட்டு சண்டை வந்தாலும், நாம பிரச்னையை பேசி தீர்த்துட்டு அடுத்த வேலையை பார்க்கிறோம்”.

“நீ இப்போ எனக்கு அசிஸ்ட் பண்ணா, எனக்கு ரொம்ப ஈசியா இருக்கும் வேலையை முடிக்க. அது மட்டும் இல்லாம, இப்போ எடுத்து இருக்கிற கேஸ் செம ரிஸ்கியானது”.

“உனக்கு தான் அந்த கேஸ் டிடைல்ஸ் தெரியுமே, அதனால இதுக்கு நீ ஒகே சொன்னா மட்டும் தான் புது வேலையில் சேருவேன், இல்லை மாட்டேன்” என்று கூறிவிட்டு, கையை கட்டிக் கொண்டு அமர்த்தலாக சோபாவில் அமர்ந்து இருந்தாள் ப்ரீத்தி.

“சாஹி! யோசிக்காத ஒகே சொல்லிடு, இல்லைனா இவ இந்த வேலையை வேண்டாம் சொல்லிடுவா. நாம இந்த வேலை வச்சு தான், நிறைய பிளான் போட்டு இருக்கோம், சோ இந்த ஆபரை அக்செப்ட் பண்ணிக்கோ” என்று தனக்கு தானே யோசித்து முடித்தவள், ப்ரீத்தியிடம் சரி என்று ஒப்புக் கொண்டாள்.

“சரி நாளைக்கு காலையில் எட்டு மணிக்கு, இங்க இருந்து கிளம்பலாம். லேட் பண்ணாத, அப்புறம் நான் பாட்டுக்கு போயிகிட்டே இருப்பேன் சொல்லிட்டேன்” என்று கூறிவிட்டு அவளின் படுக்கை அறைக்குள் சென்று, கதவை அடைத்தாள்.


பெருமூச்சு விட்ட சாஹித்யா, மற்ற அறைகளில் லைட்டை ஆப் செய்துவிட்டு, அவளின் படுக்கை அறைக்கு சென்று, படுத்துவிட்டாள்.

மறுநாள் காலை எட்டு மணிக்கு, சாஹித்யா ப்ரீத்தியுடன் பயணப்பட்டாள் அவர்கள் வேலை பார்க்க போகும் புது இடத்திற்கு. புது இடத்தை பார்த்து, மிகவும் பரவச நிலைக்கு சென்றாள் சாஹித்யா.

ப்ரீத்தியோ, தன் முன்னால் உயர்ந்து நின்ற அந்த கட்டிடத்தை பார்த்து பெருமூச்சு விட்டாள். இந்த வேலை, அவளின் தோழிக்காக ஒத்துக் கொண்டது என்றாலும், சற்று சவாலான கேஸ் இப்பொழுது அவள் கையில் இருப்பது.

தன்னால் முடியாது என்று ஒதுங்குவதை விட, முயன்று பார்த்தால் என்ன என்ற எண்ணம் அதிகம் உண்டு ப்ரீத்திக்கு. அதை தெரிந்து கொண்டு தான், சாஹித்யா அவளை இதற்க்கு ஒப்புக் கொள்ள வைத்தது.

வருண் குரூப் ஆப் கம்பெனிஸ், என்ற பெயர் பலகையை பார்த்துவிட்டு ப்ரீத்தி, சாஹித்யாவை திரும்பி பார்த்தாள். அவளோ, அவளை கவனிக்காமல், வாயை பிளந்து கொண்டு அங்கு இருந்த கட்டிடங்களையும், அங்கும் இங்கும் ஓடிக் கொண்டு வேலை செய்யும் பணியாளர்களையும் வேடிக்கை பார்க்க தொடங்கினாள்.

“வேடிக்கை பார்த்தது போதும் சாஹி, வா reception போய் நம்ம வந்த விபரம் சொல்லலாம்” என்று கூறிவிட்டு, ப்ரீத்தி முன்னே சென்றாள்.

அங்கே reception ஹால், மிக பெரியதாக இருந்தது. ஆங்காங்கே பெரிய சோபா, சிறிய சோபா என்று அமர்வதற்கு போடப்பட்டு இருந்தது. டீபாயில் பிசினஸ் magazine, இன்றைய செய்தித்தாள்கள் என்று படிக்க அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

அங்கே நடுவில் சிறியதும் இல்லாமல், பெரிதும் இல்லாமல் இருந்த பூந்தொட்டி கண்ணை கவரும் வகையில், வருபவர்களை ஈர்த்தது. சாஹித்யா இதை எல்லாம், வாயை பிளந்த படி பார்த்துக் கொண்டே நடக்க, ப்ரீத்தியோ இதை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் reception கவுன்ட்டர் நோக்கி சென்றாள்.

அங்கே வெள்ளை சட்டையும், கருப்பு கோட்டும், குட்டை பாவடையும் அணிந்து முகத்தில் அப்பட்டமான செயற்கை புன்னகையுடன் நின்று இருந்த மங்கை, இவர்களை வரவேற்றாள்.

“எஸ் மேடம்! ஹொவ் கேன் ஐ ஹெல்ப் யூ!” என்று ஆங்கிலத்தில் அந்த மங்கை உரைக்கவும், ப்ரீத்தி அவள் கையில் ஒரு கவரை நீட்டினாள்.

அந்த கவரை வாங்கி பார்த்த அந்த மங்கை, அதில் இருந்த செய்தியை படித்துவிட்டு, அவளிடம் அந்த கவரை கொடுத்து சற்று நேரம் காத்து இருக்கும் படி கூறினாள்.

ப்ரீத்தி, அங்கே போடப்பட்டு இருந்த சோபாவில் அமர, சாஹித்யா ஒவ்வொன்றையும் பார்த்து வாயை பிளந்துக் கொண்டு பார்த்துக் கொண்டு இருந்தாள், தன்னை மறந்து.

அதை கவனித்த ப்ரீத்தி, அவள் இவள் பக்கம் பார்வையை திருப்பும் பொழுது, நன்றாக முறைத்தாள். சாஹித்யா அசடு வலிந்து கொண்டே, அவள் அருகில் வந்து அமர்ந்தாள்.

ரிசெப்ஷனில் இருந்த அந்த மங்கை அழைக்கவும், இவர்கள் அந்த மங்கையின் வழிகாட்டலில், அந்த கட்டிடத்தின் நான்காம் மாடியில் இருந்த M.D. அறைக்குள் பிரவேசித்தனர்.

அந்த விசாலமான அறைக்குள் நுழைந்ததும், சிகரெட் நெடி தான் அவர்களை முதலில் வரவேற்றது. முகத்தை சிறிது சுளித்துக் கொண்ட ப்ரீத்தி, அதன் பின் முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டாள்.

அந்த மங்கை, அங்கே M.D. அருகே சென்று, ஏதோ கூறிவிட்டு வெளியேறினாள். அவள் வெளியேறவும், M.D. நாற்காலியில் அமர்ந்து இருந்தவன், ப்ரீத்தியை ஏற இறங்க பார்த்தான்.

 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
அவனின் அந்த பார்வையில், அவளுக்கு சிறிது கூசினாலும் அதை வெளிக்காட்டாமல் அமைதியாக அவன் எதிரே போட பட்டு இருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்தாள். அங்கே அவனின் மேஜை மீது, அவனின் பெயர் பலகை, அதில் வருண் கியான் (M.D.)என்று ஆங்கிலத்தில் எழுதி இருந்தது.

“நான் உங்களை உட்கார சொல்லவே இல்லையே, மிஸ்” என்று ப்ரீத்தியை பார்த்து கூறிவிட்டு, சிகரெட் புகையை அவள் மீதே ஊதினான்.

“டேய்! நான் இருக்கிறது உன் கண்ணுக்கு தெரியலையா!” என்று சாஹித்யா மனதில் அவனை அர்ச்சித்து விட்டு, அவனை எடை போட தொடங்கினாள்.

பார்க்க அப்படியே அர்ஜுன் ரெட்டி ஹீரோ, விஜயை போல் இருந்தாலும்(தாடி, சிகரெட்), அவன் முகத்தில் தெரிந்த முதிர்ச்சி அவன் நாற்பதை நெருங்குகிறான் என்று புரிந்தது.

அதற்குள், ப்ரீத்தியின் பேச்சு, மேலும் அவனை கவனிக்க தடை செய்தது. மனதில், தோழியையும் அர்ச்சித்து விட்டு, என்ன பேசுகிறாள் என்று கவனிக்க தொடங்கினாள்.

“உங்களை பத்தி, உங்க அப்பா மிஸ்டர் தவான் கியான் சொல்லி தான் அனுப்பினாங்க. நீங்க நாளையில் இருந்து, காலை பத்தில் இருந்து பன்னிரெண்டு மணி வரை, என் கிட்ட தான் சிகிச்சை எடுத்துக்க போறீங்க”.

“இன்னைக்கு ஜஸ்ட் என்னை அறிமுகப்படுத்திக்க தான், நான் இங்கே வந்தேன். ஐ அம் ப்ரீத்தி, M.S. டிகிரி இன் psychology(மனோதத்துவம்). நாளைக்கு காலை பத்து மணிக்கு, எங்க மருத்துவமனைக்கு வாங்க” என்று கூறிவிட்டு அவளின் ஐடி கார்டை, அவனின் மேஜை மீது வைத்து விட்டு எழுந்து செல்ல திரும்பவும், அவன் இடியட் என்று கத்தியதோடு இல்லாமல் மேஜையில் இருந்த பொருட்களை எல்லாம் தட்டிவிட்டு, கத்த தொடங்கினான்.

அந்த சத்தம், பக்கத்து அறையில் இருந்த அவனின் உயிர் நண்பன் ஆஷிக்கிற்கு கேட்டு, பதறி ஓடி வந்தான். அங்கே இருந்த சூழ்நிலையை புரிந்து கொண்டவன், பிரீத்தியிடம் பணிவாக வெளியேறும் படி கேட்டுக் கொண்டான்.

அவளோ, சாஹித்யாவை ஒரு பார்வை பார்த்தாள். அவள் அதை புரிந்து கொண்டு, அங்கு இருந்து வெளியேறினாள்.

“உங்க பிரெண்ட் கிட்ட, ஒரு ரெண்டு நிமிஷம் பேசிட்டு போயிடுறேன். நீங்க ஒரு ரெண்டு நிமிஷம், வெளியே இருக்கீங்களா” என்று அழுத்தமாக அவனை ஒரு பார்வை பார்க்கவும், அவன் அந்த பார்வை வீச்சை பார்த்து அவனறியாமல், அங்கு இருந்து வெளியேறினான்.

அங்கே சிதறிக் கிடந்த பொருட்களை பார்த்தவள், அவனை பார்த்து அழுத்தமாக ஒரு கண்டன பார்வையிட்டாள். தன்னை ஒருத்தி கண்டிப்பதா என்று, மேலும் அவன் பொருட்களை சிதற விட நினைக்கும் பொழுது, அவள் சட்டென்று அவன் அருகே சென்று, அவன் கையை பிடித்து நிறுத்தினாள்.

“மிஸ்டர் வருண்! உங்க கோபத்தை இப்படி காட்டினா, நான் பயந்துப்பேன் நினைக்கிறது முட்டாள்தனம். அதை விட, நீங்க இப்படி இருக்கிறது உங்க சஞ்சனாவுக்கு சுத்தமா பிடிக்கல” என்று அழுத்தமாக கூறவும், அவன் அதிர்ந்தான்.

முதலில் அதிர்ந்தவன், பின் அவளை பார்த்து இகழ்ச்சியாக சிரித்தான்.

“எங்க அப்பா எல்லாம் சொல்லி தான, உன்னை அனுப்பி வச்சு இருக்கார். உன் வித்தை எல்லாம் என் கிட்ட காட்டாம, நீ வெளியே போ” என்று அவள் பிடித்து இருந்த கையை, உதறிக் கொண்டு கூறினான்.

“என்னது? உங்க அப்பா சொன்னாரா? உங்க அப்பா, உங்களுக்கு ட்ரீட்மென்ட் பண்ண சொல்லி தான் என் கிட்ட கேட்டார். ஆனா உங்க அப்பாவுக்கு முன்னாடியே, சஞ்சனா என் கிட்ட உங்களை ட்ரீட்மென்ட் பண்ண சொல்லி கேட்டுகிட்டா, அதான் வந்தேன்” என்று சொன்னவளை ஜந்துவை போல் பார்த்தான்.

“என்ன உளறல் இது? அவ இறந்து நாலு வருஷமாகுது, இடியட்” என்று கத்தினான்.

“அது தெரியும் எனக்கு, உங்க பின்னாடி தான் நின்னுகிட்டு இருக்கா இப்போ” என்று அவள் கூலாக சொல்லவும், அவன் தான் அதிர்ந்து விட்டான்.

“என்ன்னன்ன்ன்னா!!!!”

“எனக்கு பேய் எல்லாம் கண்ணுக்கு தெரியும், சின்ன வயசில் இருந்து. அப்படி தான் உங்க சஞ்சனா, என் கண்ணுக்கு தெரிஞ்சா. அவ தான் நீங்க அவ இறந்ததில் இருந்து, இப்படி இருக்கிறதை சொல்லி என்னை பார்க்க சொன்னா”.

“எனக்கு முதல இதில் உடன்படிக்கை இல்லை, ஆனா அவளோட முழு கதையும் கேட்ட பிறகு, செய்யணும் தோனுச்சு. உங்க அப்பா இப்போ தான் அதுக்கு, பச்சை கொடி காட்டி இருக்கார்”.

“நம்பிக்கை இல்லைனா, உங்களுக்கும் சஞ்சனாவுக்கும் உள்ள பாஸ் கோட் 3614 சரியா” என்று அவள் கூறவும், அவன் நம்ப முடியாமல் அப்படியே அமர்ந்து விட்டான்.

“சீக்கிரம் ட்ரீட்மென்ட் வாங்க நாளைக்கு, நீங்க குணமானா தான் சஞ்சனாவை கொன்னவனுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க முடியும்” என்று அடுத்த ஆயுதத்தை அவன் மேல் வீசிவிட்டு அங்கு இருந்து வெளியேறினாள்.

வெளியே கையை பிசைந்து கொண்டு இருந்த அவன் நண்பன் ஆஷிக்கிடம், அவளின் ஐடி கொடுத்து நாளை காலை அவனை கூட்டிக் கொண்டு வரும்படி கூறிவிட்டு அங்கு இருந்து சென்றாள்.

லிப்ட் மூலம் கீழே இறங்கி வந்தவள், அங்கே சாஹித்யா அவளை பார்த்து என்ன என்று கேட்கும் பொழுது, சிரித்துக் கொண்டே அவளை அழைத்து வெளியே வந்தாள்.

நண்பனை பார்த்த ஆஷிக், அவன் அழுது கொண்டு இருந்ததை கண்டு அதிர்ந்து விட்டான். ப்ரீத்தி மீது கோபம் வந்தது, நண்பனை இப்படி அழ வைத்து விட்டாளே என்று.

அவனுக்கு தெரியவில்லை, அவளின் முதற் கட்ட சிகிச்சையை ஆரம்பித்து விட்டாள் என்று. ஆனால், இது வருணிற்கு புரிந்தது. காதலி இறந்த பொழுது, அதை ஜீரணிக்க முடியாமல் தன் அழுகையை, துக்கத்தை கட்டுபடுத்தி வைத்து இருந்தது எல்லாம் இன்று இப்படி அழுகையாக வெடிக்கும் என்று அவனும் எதிர்பார்க்கவில்லை.

“நீ கொஞ்ச நாள் ஆபிஸ் பார்த்துக்கோ, நான் கொஞ்ச நாளைக்கு இங்க இருக்க மாட்டேன்” என்று கூறிவிட்டு சென்ற நண்பனை அதிர்ச்சியாக பார்த்தான்.

தொடரும்..

 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
உங்களுடைய "உருவமில்லா
ஒரு உறவு"-ங்கிற, அழகான
அருமையான, புதிய, லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
உமா தீபக் டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top