• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

uruvamilla oru uravu - 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
அத்தியாயம் – 5

வேலையை முடித்துக் கொண்டு வருண் வீட்டிற்கு வந்த ப்ரீத்தியை, எதிர்கொண்டான் வருண். அவளை பார்க்கும் பொழுதே, அவள் மிகவும் அசதியாக இருக்கிறாள் என்று தெரிந்தது.

இருந்தாலும், அவளிடம் பேச வேண்டிய கட்டாயத்தில் இருந்தான் அவன்.

“சஞ்சு பத்தி கேட்கும் பொழுது, ஒன்னும் சொல்லல நீ முதல. இப்போ எப்படி சொல்ல ஒதுக்கிட்ட? அப்போ உன்னை மிரட்டினா, சஞ்சு சொல்ல சொல்லுவா உன்னை அப்படி தான?” என்று மிக தீவீரமாக கேட்டான்.

“ஹா ஹா! அப்போ சஞ்சு இருக்கான்னு நம்புறீங்க! என்று அவள் கூறவும், அவன் முழித்தான்.

“அப்படித்தான நீ எழுதி இருக்க, உனக்கு பேய் எல்லாம் கண்ணுக்கு தெரியும்ன்னு, அதான் அப்படி கேட்க தோனுச்சு” என்று மழுப்பிவிட்டு அவள் பதிலுக்காக காத்து இருந்தான்.

“சஞ்சு ஒன்னும் சொல்லல, நீங்க இருந்த கண்டிஷன் தான் என்னை சொல்ல வச்சது. சொல்ல போனா, என் சீனியர் சொல்லி தான் இந்த டைரி இப்போ உங்க கைக்கு கிடைச்சு இருக்கு”.

“இன்னும் முழுசா படிக்கல நினைக்கிறேன், படிங்க. நாளைக்கு ரிசல்ட் வந்திடும், அப்புறம் நாளைக்கு ஈவினிங் ல இருந்து ட்ரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணிடுறேன், குட் நைட்” என்று கூறி ஒரு கொட்டாவியை விட்ட படி மாடி ஏற போனாள்.

அதற்குள், வருண் அவளை அழைத்து சாப்பிட்டு செல்லுமாறு கூறவும், அவள் சாப்பிட்டு வந்ததாக கூறிவிட்டு மாடியில் இருக்கும் அவள் அறைக்கு சென்றாள். யோசனையுடன், அவன் தனதரைக்கு வந்து அந்த டைரியில், மீண்டும் விட்ட இடத்தில் இருந்து படிக்க தொடங்கினான்.

“பேய்! பேய்!”என்று கத்திக் கொண்டே ஓடினாள் சஞ்சு, ப்ரீத்தியை பார்த்து.

“நான் உனக்கு பேயா! இரு டி வரேன்!” என்று ப்ரீத்தி பதிலுக்கு அவளை துரத்திக் கொண்டே ஓடினாள்.

ஓடிக் களைத்து, இருவரும் சோபாவில் மூச்சு வாங்க அமர்ந்து இருந்தனர். பாட்டி அவர்களை சாப்பிட அழைக்க, இருவரும் தங்களை சுத்தம் செய்துக் கொண்டு வந்து சாப்பிட அமர்ந்தனர்.

“பாட்டி, ப்ரீத்திக்கு இப்படி பேய் கண்ணுக்கு தெரியுறது உங்களுக்கு கஷ்டமா இருக்கா” என்று சஞ்சனா கேட்டாள்.

“கஷ்டமா தான் இருந்தது முதல, ஆனா இதனால இவளுக்கு எந்த பிரச்சனையும் வராதுன்னு தெரிஞ்ச பின்னாடி கொஞ்சம் நிம்மதியா இருக்கு எனக்கு. ஆனா அது எல்லாம் பேய் இல்லை மா, ஆன்மா”.

“ஒரு ஆன்மா சுத்துது அப்படினா, அதுக்கு நிறைவேறாத ஆசை, கோபம் அப்படி இருக்கும். அப்புறம் திதி கொடுக்காம இருந்தாலும், அந்த ஆன்மா சுத்தும்”.

“எதுக்காக, அவங்க ஆன்மா சாந்தி அடையட்டும்ன்னு சொல்லுறாங்க? இப்படி அவங்க இருக்க கூடாதுன்னு தான், எல்லோரும் அப்படி சொல்லுறதே”/

“இதுல ரொம்ப பாவப்பட்ட ஆன்மா, எது தெரியுமா? வாழ வேண்டிய வயசுல வாழ முடியாம, அவங்க இறக்கும் பொழுது அந்த ஆன்மா எப்போவும் கண்ணீர் விட்டுகிட்டே இருக்கும்”.

“அந்த ஆன்மாக்கள் எல்லாம், திதி கொடுத்தும் மேல போக முடியாம, இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் தத்தளிச்சிக்கிட்டு இருப்பாங்க. இப்போ என் பயம் எல்லாம், இவளை கண்டு அந்த ஆன்மாக்கள் எல்லாம் பயப்ப்படுமேன்னு தான்” என்று கூறியவரை பார்த்து முறைத்தாள் ப்ரீத்தி.

சஞ்சனாவோ, பாட்டி கூறிய விதத்திலும், ப்ரீத்தியின் முறைப்பிலும் விழுந்து விழுந்து சிரித்தாள். அதன் பிறகு நேரம் அவர்களுக்கு, ரெட்கை கட்டி பறந்தது.

கல்லூரி திறக்கும் நாள் அன்று, இருவரும் ஒன்றாக வரும் பொழுது, அங்கே சஞ்சனாவின் பெற்றோர் இவர்களை எதிர்கொண்டனர்.

“சஞ்சு, பாட்டி சீரியஸா இருக்காங்க, உன்னை பார்க்கணும் சொல்லுறாங்க. நாம இப்போ மும்பை போகணும், படிப்பு அப்புறம் பார்த்துக்கலாம், இப்போ tc வாங்கிட்டோம் உனக்கு”.

“உன் திங்க்ஸ் எல்லாம் பாக் பண்ணி எடுத்துட்டு வா, நாம கிளம்பலாம்” என்று அவளின் பெற்றவர்கள் கூறவும், இருவரும் அதிர்ந்தனர்.

பழகிய குறுகிய காலத்தில், நல்ல ஒரு நட்பு கிடைத்தது ப்ரீத்திக்கு. இதுவரை அவளிடம் நெருங்காதவர்கள், சஞ்சனா வந்த பின் சற்று பேசினார்கள் அவ்வளவே.

இன்று அவள் செல்ல போகிறாள் எனவும், அதை அவளால் தாங்க முடியவில்லை. சஞ்சனாவுக்கும் இது அதிர்ச்சி என்றாலும், எப்படியும் திரும்பி இங்கே வந்து ஒரு முறை பார்த்து விட்டு செல்வேன் உன்னை, என்று அவளிடம் வாக்குறுதி கொடுத்த பின்னர் தான் அவளும் சற்று தெளிந்தாள்.

அவள் சென்ற பின், மீண்டும் தனிமை வாசம். தன்னை சுற்றி அதன் பின், அவளே ஒரு வட்டமிட்டுக் கொண்டு, அதில் இருந்து வெளியே வரவும் இல்லை, யாரையும் அனுமதிப்பதும் இல்லை.

படிப்பு, படிப்பு என்று அதையே பிடித்துக் கொண்டு, கவனம் முழுவதும் அதில் மட்டுமே இருந்தது. மேற்படிப்பு படித்து முடித்து, அவளுக்கு வேலை கிடைத்த உடன், முதல் வேலையாக அவள் அதை தன் பாட்டியிடம் தான் தெரிவித்தாள்.

“பாட்டி! எனக்கு வேலை கிடைச்சிடுச்சு, ஹே! அதுவும் மும்பையில். நம்ம அங்க போய் இருக்கலாம் பாட்டி இனி, சஞ்சுவை நாம அங்க பார்கலாம்” என்று குதித்தவளை பார்த்து சந்தோசம் அடைந்தார்.

ஆனால் மனதில் அதிக வருத்தம் இருந்தது அவருக்கு, நேற்று இரவு அந்த குடுகுடுப்பைகாரர் சொல்லி சென்ற செய்தியில் இருந்து. அதை குறித்தே அவர் யோசிதததில், அன்று இரவே அவர் இயற்கை எய்தினார்.

மகிழ்ச்சி கடலில் குதித்துக் கொண்டு இருந்த ப்ரீத்தி, பாட்டி இறந்ததை நம்ப முடியாமல் தவித்தாள். உறவுகளுக்கு தகவல் கொடுக்க வேண்டிய நேரத்தில் கூட, அவளால் தகவல் கொடுக்க முடியவில்லை.

முயன்று தன்னை கட்டுக்கு கொண்டு வந்து, ஒவ்வொரு உறவுக்கும் தகவல் சொல்லிவிட்டு, அடுத்து பார்க்க வேண்டிய வேலைகளை எல்லாம் அவள் ஒருத்தியே, சுழன்று சுழன்று பார்த்தாள்.

வந்த உறவுகளில், சிலர் அவளுக்கு உதவி புரிந்தாலும், சற்று எட்டியே நின்றனர். அவளும் அதை புரிந்து கொண்டு, எப்பொழுதையும் விட இறுக தொடங்கினாள்.

பாட்டிக்கு செய்ய வேண்டியதை எல்லாம் செய்துவிட்டு, மும்பை செல்லாமல் இங்கேயே இருபது கிலோமீட்டர் தொலைவில், தனக்கு ஒரு வேலை தேடிக் கொண்டு இங்கேயே இருந்து விட்டாள்.

மும்பை செல்ல வேண்டும் என்ற எண்ணம், கடலளவு அவளுக்கு இருந்தாலும், சஞ்சு எந்த மாதிரி இருக்கிறாள், எங்கு இருக்கிறாள் அவள் என்று ஒன்றும் தெரியாமல், அங்கே செல்ல அவளுக்கு விருப்பம் இல்லை.

அவள் அன்று சொன்னது போல், வருடம் ஒரு முறை தவறாமல் வந்து கொண்டு இருந்தாள், குறிப்பாக இவளை காண்பதற்கு. போன வருடத்தில் அவள் வரவும் இல்லை, அவளின் தொடர்பும் விட்டு போய் இருந்தது.

இப்பொழுது, மும்பையில் வேலை கிடைத்த பின் கூட பாட்டியுடன் சென்று தேடி, அவளுக்கு ஏதும் பிரச்சனை என்றால், அது குறித்து பேசி சரி செய்யலாம் என்ற எண்ணத்தில் மட்டுமே இருந்தாள்.

ஆனால், இப்பொழுது பாட்டி இல்லாமல் அவள் மட்டுமே செல்ல அவளுக்கு துளியும் விருப்பம் இல்லை. ஆகையால் இங்கேயே, வேலை தேடிக் கொண்டு தன்னை சுற்றி பெரிய வட்டமாக போட்டுக் கொண்டு, வேலை செய்வது மட்டுமே என் பணி, என்பது போல் இருந்து கொண்டாள்.

அவள் வீட்டிற்கு செல்லும் பாதையில் தான், ஒரு நாள் அவள் சஞ்சனாவை கண்டாள், அதுவும் ஆன்மாவாக அவள் சுற்றிக் கொண்டு இருக்கும் பொழுது. வண்டியை ஒட்டிக் கொண்டு வந்தவள், அவளை அப்படி ஒரு கோலத்தில் பார்த்துவிட்டு நிலை தடுமாறி கீழே விழுந்தாள் வண்டியோடு.

கையில் அடிபட்ட காயங்களுடன், அவள் தட்டு தடுமாறி எழும் பொழுது சஞ்சனா அவள் முன் தோன்றி, கண்ணீர் வடித்தாள்.

“சஞ்சு! என்ன டி இது? நீ தானா சஞ்சு! சொல்லு சஞ்சு, எப்படி சஞ்சு இப்படி?” என்று நம்ப முடியாமல் அவளை தொட்டு பார்த்தால், அவளால் தொட முடியவில்லை.

காரணம் புரிந்த பொழுது, தேம்பி தேம்பி அழுது அங்கேயே மயங்கி விட்டாள். மழை நீர் முகத்தில் தெரித்து விழவும், மயக்கம் சிறிது தெளிந்து எழுந்து பார்க்கும் பொழுது அவள் வண்டியும், அவளும் விழுந்து கிடந்து இருப்பது தெரிந்தது.
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
குளிர் உடலில் ஊடுருவ, நிற்க சற்று திணறி தான் போனாள். தன்னை சமாளித்துக் கொண்டு, தன் வண்டியை ஒட்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.

முதலில் வீட்டை திறந்து உள்ளே வந்தவள், பாத்ரூமில் ஹீட்டர் ஆன் செய்துவிட்டு, துணியை களைந்து குளிக்க தொடங்கினாள். சுடு தண்ணீரில் குளித்து விட்டு, உடை மாற்றிவிட்டு யோசிக்க தொடங்கினாள்.

கனவு ஏதும் கண்டோமா! அல்லது நிஜமாவே சஞ்சுவை சந்தித்தோமா? என்று குழம்ப தொடங்கினாள். அவள் குழப்பத்திற்கு விடை போல, சஞ்சு மீண்டும் அவள் கண் முன் தோன்றி, நீ பார்த்தது நிஜம் என்று உரக்க சொல்லியது போல் நின்றாள் அழுகையுடன்.

“சஞ்சு!!! என்ன ஆச்சு டி உனக்கு? எப்படி இப்படி?” என்று அழுகையுடன் அவளிடம், என்ன நடந்தது என்று கேட்டாள்.

“இப்போ என்னால சொல்ல முடியாது ப்ரீத்தி, ஆனா நீ எனக்கு ஒரு உதவி பண்ணனும், செய்வியா?” என்று கேட்டாள் சஞ்சு.

“கண்டிப்பா செய்றேன் சஞ்சு, உங்க அப்பா, அம்மாவை பார்துக்கனுமா” என்று கேட்டு வாக்கு கொடுத்தாள் ப்ரீத்தி.

இல்லை சஞ்சு, எங்க அப்பாவும், அம்மாவும் அண்ணா கூட இருக்காங்க. அண்ணா பார்த்துப்பான் அவங்களை, இப்போ எனக்கு வேறு ஒரு உதவி வேண்டும்.

அவள் அப்பொழுது, வருணை முதன் முதலில் பார்த்தது, காதலித்தது அதன் பின் இருவர் வீட்டிலும் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டது வரை எல்லாம் கூறினாள்.

அதன் பிறகு, அவள் கொலை செய்யப்பட்டாள் என்று கூறும் பொழுது ப்ரீத்தி அதிர்ந்தாள். அது மட்டுமில்லாமல், இப்பொழுது அங்கே வருணின் நிலைமையை எடுத்துக் கூறி, அவனை காப்பாற்றுமாறு கூறினாள்.

“சஞ்சு!! என்ன நடந்தது? நீ முழுசா சொல்லு முதல, யார் உன்னை கொன்னது எல்லாம் சொல்லு, முதல அவங்களை தண்டிக்கணும் இப்போ புரிஞ்சிக்கோ” என்று ப்ரீத்தி கூறவும், அவள் சிரித்தாள்.

“இல்லை ப்ரீத்தி, முதல வருணை காப்பாத்து. நீ அவரை காப்பாத்தினா, அவரே எல்லாம் பார்த்துப்பார்” என்று அவள் கூறவும், சரி என்று கூறுவதை தவிர அவளுக்கு வேறு வழி இருக்கவில்லை.

அவளிடம் அவன் யார்? இப்பொழுது எங்கு இருக்கிறான் என்று எல்லாம் கேட்டுவிட்டு, அவனை சந்திக்க நினைக்கும் பொழுது, அவன் யாரையும் சந்திக்க தயாராகவும் இல்லை.

அவனின் தந்தை, அவன் யாரையும் சந்திக்க விடாமல் பார்த்துக் கொண்டார். அந்த அளவுக்கு டைட் செக்யூரிட்டி போட்டு இருந்தார், இவளோ தன்னை எப்படி அறிமுகப்படுத்திக் கொள்ள என்று தெரியாமல் திண்டாடி தான் போனாள்.

முதல் முறையாக, இதுவரை உதவி என்று யாரிடமும் கேட்காமல் இருந்தவள், தன்னுடன் வேலை பார்க்கும் சாஹித்யாவிடம் கேட்டாள்.

சாஹித்யா, நல்ல அழகி. ப்ரீத்தி வயது, நவநாகரிக மங்கை. பெரிய இடத்து பெண் என்று, சிறிதும் எங்கேயும் காட்டி கொண்டு இருக்க மாட்டாள். ப்ரீத்திக்கும், இவளுக்கும் எப்பொழுதும் வேலையில் முட்டிக் கொண்டு தான் இருக்கும்.

இருவரின் திறமையும், அங்கே இருப்பவர்களுக்கு தெரியும். வேலை தவிர்த்து, சாஹித்யாவும் இவளை போல், தன்னை சுற்றி வட்டமிட்டுக் கொண்டு தான், வேலை செய்வாள்.

“சாஹித்யா! எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்” என்று இவள் முதல் முறையாக இவளிடம் கேட்கவும், அவள் இது கனவா, இல்லை நனவா என்று தெரியாமல் கிள்ளி பார்த்தாள் தன் கையை.

ஆஆஆ!!! கனவு இல்லை நனவு எனவும், ப்ரீத்தியை பார்த்தவள் அதிர்ந்தாள். சோர்ந்து போய், ஆளே பாதியாக தெரியவும் அவளுக்கு உதவி செய்ய கூறி, அவள் மனம் அவளுக்கு எடுத்து உரைக்கவும், உடனே என்ன உதவி என்று கேட்டாள்.

இவள் வருணை பற்றி கூறி, அவனை பார்க்க ஏற்பாடு செய்து தர சொல்லி கூறவும், அவள் அதிர்ந்தாள். இரண்டு நாளைக்கு முன் தான், அவன் காரை இடித்து, அவன் இவளிடம் கத்திவிட்டு சென்றான்.

“ஆத்தி! அவரை பார்க்கனுமா! இந்த விளையாட்டுக்கு நான் வரல, இரண்டு நாள் முன்னாடி நல்லா திட்டு வாங்கி இருக்கேன். அதுவுமில்லாம, அவங்க அப்பாவுக்கு இப்போ மினிஸ்டராகுற சான்ஸ் இருக்கு”.

“சாரி ப்ரீத்தி! கண்டிப்பா முடியவே முடியாது, அதுவுமில்லாம எனக்கு மாப்பிள்ளை பார்க்குறாங்க வீட்டுல, இந்த நேரத்துல எந்த பிரச்சனையும் கூடாதுன்னு நினைக்கிறன்” என்று அவளிடம் தெளிவாக கூறிவிட்டு சென்றுவிட்டாள்.

நாட்கள், வாரங்களாக, வருடங்களாக சென்ற பின் ஒரு நாள் அவன் தந்தை, இவர்களின் மருத்துவமனை வந்து, அவனை பற்றி கூறி, அவனுக்கு சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

ஹாஸ்பிட்டல் டீன். இவளை அழைத்து விபரம் கூறி உடனே பார்க்குமாறு சொல்லவும், இவளுக்கு கண்களில் கண்ணீர் வந்தது. எத்தனை நாட்கள் இதற்காக காத்து இருந்து இருப்பாள், இன்று அது கையில் கிடைக்கவும் அதை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி இருந்தது.

வாசித்து முடித்த வருண், அவள் சஞ்சுக்காக தான் இவ்வளவு தூரம் இறங்கி வந்து இருக்கிறாள் என்று புரிந்தது. ஆனால், அவனின் யோசனையோ, எதற்காக அப்பொழுது அவ்வளவு செக்யூரிட்டி தனக்கு? ஏன் தன்னை பார்க்க யாரையும் அப்பொழுது அனுமதிக்கவில்லை?

கேள்விகள் இப்படி ஒவ்வொன்றாக படை எடுக்கும் பொழுது தான், சஞ்சுவை கொன்னுடாங்க என்று ப்ரீத்தியின் குரல் காதில் ஒலிக்கவும், அவன் அதிர்ந்தான்.

“தந்தையாக இருக்குமோ! சஞ்சுவின் கொலைக்கும், அவருக்கும் ஏதும் சம்மந்தம் இருக்குமா?” என்று அவன் இந்த கோணத்தில் யோசிக்க தொடங்கினான்.

யோசிக்க, யோசிக்க தலைவலி அதிகரிக்கவும் உடனே அப்பொழுது ப்ரீத்தி கொடுத்து இருந்த மாத்திரையை முழுங்கினான். மணி இரவு இரண்டை கடக்கவும், அவன் மருந்தின் உதவியால் அசந்து உறங்கினான்.

மறுநாள் விடியல் யாருக்கும் காத்து இருக்காமல், அழகாக விடிந்தது. ப்ரீத்தி, அன்று சீக்கிரம் மருத்துவமனை கிளம்ப தயாராகி கீழே ஹாலிற்கு வந்தாள்.

அங்கே வருண், இவளுக்காக காத்துக் கொண்டு இருந்ததை பார்த்து, அவனிடம் காலை வணக்கம் கூறிவிட்டு, சாப்பாடு அறைக்கு செல்ல பார்த்தாள். ஆனால், அவனின் கேள்வி அவளை அங்கேயே தேங்கி நிறுத்தியது.

“நிஜமாவே, சஞ்சுவை கொன்னது யாருன்னு உனக்கு தெரியாதா? இல்லை தெரிஞ்சும் சொல்லாம இருக்கியா?” என்று கேட்டான் வருண்.

“ட்ரீட்மென்ட் முடிஞ்ச உடனே சொல்லிடுவேன் சொலி இருக்கா சஞ்சு, உங்களோட சேர்ந்து நானும் தெரிஞ்சுக்குறேன் அப்போ” என்று கூறிவிட்டு சென்றாள் ப்ரீத்தி.

அவனுக்கு இருக்கும் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள தான், அவன் கேட்க நினைத்தான். ஆனால் இப்பொழுதும் அவள் அப்படி கூறவும், அவனுக்கு கோபம் வந்தது.

நேராக அவளை பிடித்து இழுத்து, சுவரோடு ஒட்டி சாய்த்து அவளின் கண்களை பார்த்து நேராக கேட்டான்.

“உனக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியும், யார் செய்ததுன்னும் தெரியும். ஒழுங்கா எனக்கு இப்போவே உண்மையை சொல்லிடு, இல்லை கண்டிப்பா உன் கழுத்தை நெரிச்சிடுவேன்” என்று அவன் கூறும் பொழுது, பயம் கொள்ளாமல் அவனை எதிர்கொண்டு அவனை பார்த்து சிரித்தாள்.

“இதுக்கு தான் சொன்னேன், ட்ரீட்மென்ட் முடிஞ்சு சொல்லுறேன் அப்படின்னு. இந்த நேரத்துல சொன்னா, நீங்க என்ன செய்வீங்கன்னு தெரியும், அப்புறம் சஞ்சு உங்களை காப்பாத்த சொன்னதுக்கு அர்த்தமே இல்லாம போயிடும்”.

“அவ ஆன்மா சாந்தி அடையணும் நினைச்சா, முதல ட்ரீட்மென்ட் பாருங்க. அப்புறம் நீங்களே தெரிஞ்சிபீங்க, இன்னைக்கு டெஸ்ட் ரிசல்ட் வாங்க ஒரு பதினொரு மணிக்கு ஹாஸ்பிட்டல் வாங்க” என்று கூறிவிட்டு சாப்பிட தொடங்கினாள்.

அதுவரை ஒரு கோபத்தில் இருந்தவன், சஞ்சு சொன்ன ஒரு வார்த்தைக்காக அவள் தன்னை பார்க்க, எத்தனை முறை அலைந்து இருக்கிறாள் என்று படித்து தெரிந்து கொண்டவனுக்கு, அவள் சொல்லிய படியே ட்ரீட்மென்ட் ஆரம்பிக்க ஒத்துக் கொண்டான்.

இதையே யோசித்தவனுக்கு, தந்தை தனக்கு ட்ரீட்மென்ட் பார்க்குமாறு கூறியது உண்மை என்றால், அப்பொழுது வேறு ஒருவர் இதை செய்து இருக்கலாமோ என்ற கோணத்தில் யோசிக்க தொடங்கினான்.

அப்படி யோசித்துக் கொண்டு இருக்கும் பொழுது, அவனின் செல்பேசி சிணுங்கியது. எடுத்து பார்த்தால், அதில் ப்ரீத்தி எண் வரவும், பச்சை பட்டனை அழுத்தினான் பேசுவதற்கு.

“ரொம்ப யோசிக்காதீங்க மிஸ்டர் வருண், தலைவலி அதிகமாகும். அதனால வீட்டுல இருந்த படியே, உங்க பிசினஸ் எப்படி போகுதுன்னு, பாருங்க”.

“மறக்காம, பதினொரு மணிக்கு வந்திடுங்க டெஸ்ட் ரிசல்ட் வாங்க. அப்புறம் மாலை நாலு மணிக்கு எல்லாம் வீட்டில் ப்ரீயா இருங்க, அப்போவே ஸ்டார்ட் பண்ணிடுறேன் ட்ரீட்மென்ட்டை, டேக் கேர்” என்று கூறிவிட்டு பேசியை வைத்து இருந்தாள்.

இந்த பக்கம் அவன் பேச இடம் கொடுக்காமல், அவள் பாட்டிற்கு பேசிவிட்டு வைக்கவும், அவனுக்கு எரிச்சல் வந்தாலும், அவன் நலன் கருதி அவள் பேசியது, அவனுக்கு இதமாக இருந்தது.

அந்த இதமான மனநிலையில் அவன் மருத்துவமனை சென்றால், அங்கே அவன் கண்ட காட்சியில் உறைந்து நின்றான்.

தொடரும்..
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
hi friends,
sonna time la ud kodukka mudiyavillai ennal, very sorry friends .. kathai eppadi poguthu, ungalukku pidichu irukka appadinu sollunga..

thanks much for ur comments friends.. sorry reply pannathatharkku .. seekiram reply panniduren unga ellorukkum.. before diwali i am trying to finish this soon as possible.. so konjam time kodunga friends, unga elorukkum reply panna..

much happy to see all ur comments, keep supporting,,, way to go more ,,

anbudan,
uma deepak..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top