• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

uruvamilla oru uravu - 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
அத்தியாயம் – 6

மருத்துவமனையில், நோயாளி ஒருவரை பார்த்துக் கொண்டு இருந்த ப்ரீத்தியை தேடி ஓடி வந்தாள் நர்ஸ் ஒருத்தி.

“டாக்டர்! சீக்கிரம் வாங்க, அங்க அந்த தாத்தா குடிச்சிட்டு எல்லோரையும் போட்டு அடிச்சிகிட்டு இருக்கார்” என்று பதற்றத்துடன் கூறி அவளை கையோடு கூட்டி சென்றாள்.

மருத்துவமனை ரிசப்ஷனில், அந்த முதியவர் ஒரு கையில் பெரிய கத்தியும், ட்ரிப்ஸ் ஏற்றும் அந்த கம்புடனும் நின்று கொண்டு, யாரையும் கிட்ட நெருங்க விடாமல் மிரட்டிக் கொண்டு இருந்தார்.

“அவர் கையில் எப்படி, இவ்வளவு பெரிய கத்தி வந்தது?” என்று பக்கத்தில் இருந்த நர்ஸிடம் கேட்டாள் ப்ரீத்தி.

“அவர் பேத்தி ஆப்பிள் கட் பண்ண, கத்தி அங்கே வச்சு இருந்தா. கொஞ்சம் அவ அந்த பக்கம் போன உடனே, இவர் கத்தியை எடுத்துட்டு வந்து இங்க இருந்து போகணும்ன்னு ரகளை பண்ணுறார் டாக்டர்” என்று கூறியவளை பார்த்து முறைத்தார்.

“இப்படி இருக்கிறார்ன்னு தெரிஞ்சு தான, இருபத்தி நாலு மணி நேரமும் இவரை கண்காணிக்க, நர்ஸ் ரெண்டு பேரை போட்டது. இவருக்கு டுயுட்டி நர்ஸ் யாரு இப்போ?” என்று விசாரித்தாள் ப்ரீத்தி.

“சரவணனும், ஹேமாவும் தான் டாக்டர். அவங்க அப்போ ட்ரிப்ஸ் மாத்த போனாங்க, அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சு” என்று அந்த நர்ஸ் கூறவும், பல்லை கடித்தாள் ப்ரீத்தி.

“ஒருத்தர் போனா போதாதா, சரி injection ரெடி பண்ணுங்க” என்று கூறிவிட்டு அவரை நோக்கி முன்னேறினாள்.

அவரோ கிட்டே வராதே, வந்தால் குத்திக் கொள்வேன் என்னை என்பது போல் மிரட்டிக் கொண்டு இருந்தார்.

“தாத்தா! உங்களுக்கு இப்போ குடிக்கணும் அதான, சரி வாங்க உங்க கதையை சொல்லிகிட்டே குடிங்க. உங்க கதையை நான் கேட்குறேன் தாத்தா, அதை கீழே போடுங்க” என்று கூறிக் கொண்டே மெதுவாக அவரை நெருங்கினாள்.

“நீ பொய் சொல்லுற, என் கஷ்டம் உனக்கு புரியாது. எனக்கு இப்போ உடனே டாஸ்மார்க் போகணும், வழியை விடுங்க” என்று இப்பொழுது கத்தியை தன் கழுத்துக்கு நேராக பிடித்துக் கொண்டு, நின்று இருந்தார்.

அங்கு இருந்த ஒவ்வொருவருக்கும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று புரியவில்லை. ப்ரீத்தி மட்டுமே சற்று தைரியமாக அவரை நெருங்கிக் கொண்டு இருந்தாள்.

அப்பொழுது உள்ளே வந்த வருண், இதை பார்த்து அதிர்ந்தான். ப்ரீத்தியின் செயல், அவனுக்கு முட்டாள்தனமாக தோன்றியது.

“எல்லோரும் அமைதியா இருக்கும் பொழுது, இவ மட்டும் ஏன் இப்படி அசட்டுத்தனமா அவர் கிட்ட போறா” என்று எண்ணினான்.

ஆனால், அடுத்து ப்ரீத்தி செய்த செயல் அவனை வியப்பில் ஆழ்த்தியது. அவரிடம் மெதுவாக பேச்சுக் கொடுத்துக் கொண்டே, அவரின் கவனம் முழுவதையும் தன் மீது இருக்குமாறு பார்த்துக் கொண்டாள்.

பின் இருந்து இருவர் இவர் அறியாமல், இவரை நெருங்கிக் கொண்டு இருந்தனர். ஒரு கட்டத்தில் அவர் கையில் இருந்த கத்தியை, அவர் உணரும் முன்பாக இவள் அதை எடுத்துக் கொண்டாள்.

அதிர்ந்து, அவர் அதை அவளிடம் இருந்து வாங்க, மற்றொரு கையில் இருந்த ட்ரிப்ஸ் கம்பியை கொண்டு, அவளை தாக்க கம்பியை உயர்த்தும் பொழுது, வருண் அவளை பிடித்து பின் இழுத்துக் கொண்டான்.

அதற்குள் அந்த முதியவர் பின் நின்று இருந்த இருவர், அவரை பிடித்து நிறுத்தி அவள் கொண்டு வர சொன்ன ஊசியை எடுத்து, அவருக்கு போட்டு விட்டனர்.

மயங்கிய அவரை, உடனே ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து அவரின் அறைக்கு அழைத்து சென்றனர். வருணின் பிடியில் இன்னும் இருந்த ப்ரீத்தி, அவனிடம் நன்றி உரைத்துவிட்டு விலகி நின்றாள்.

“இப்படி தான் ஸ்டன்ட் பண்ணுவியா நீ, அவர் உன் மேல கத்தியை சொருகி இருந்தா என்ன ஆகி இருக்கும்” என்று கோபத்தில் அவளிடம் சிடுசிடுத்தான்.

“அவருக்கு, அப்படி எண்ணம் எல்லாம் கிடையாது. அதனால தான் நான் தைரியமா, அவர் கிட்ட நெருங்கவே போனேன். இன்னைக்கு உங்க ரிபோர்ட்ஸ் வந்துடுச்சு, மாத்திரை எல்லாம் எழுதி இருக்கேன்”.

“உங்க food chart கூட ரெடி ஆகிடுச்சு, இனி இதை தான் நீங்க follow செய்யணும். அப்புறம் இன்னைக்கு வீட்டுல மாலை நாலு மணி ல இருந்து, நான் ட்ரீட்மென்ட் ஸ்டார்ட் செய்துடுவேன்”.

“உங்க வேலை எல்லாம் அதுக்கு தகுந்த மாதிரி, இனி மாத்திகோங்க. எவ்வளவு நேரம் ட்ரீட்மென்ட் இருக்கும்ன்னு, சொல்ல முடியாது, அது உங்க ஒத்துழைப்பு பொறுத்து” என்று அவனுடன் அவள் இருந்த அறைக்கு, நடந்து வந்து கொண்டு இருக்கும் பொழுது
கூறினாள்.


அவளின் அறைக்கு வந்து, அவனை அமர சொல்லிவிட்டு இவள் அவனுடைய ரிபோர்ட்ஸ் எல்லாம், பீரோவில் இருந்து எடுத்துக் கொண்டு வந்து அவள் இடத்தில் வந்து அமர்ந்தாள்.

மீண்டும் ஒரு முறை அதை படித்து பார்த்துவிட்டு, அவனிடம் சில விளக்கங்கள் எல்லாம் கொடுத்துவிட்டு, அவள் தயாரித்த food chart மற்றும் சாப்பிடும் மாத்திரைகள் எல்லாம் அவன் கையில் கொடுத்தாள்.

“தேங்க்ஸ் டாக்டர், அப்புறம் இனி இப்படி ஸ்டன்ட் பண்ணாதீங்க, ஒவ்வொரு முறையும் நான் உங்களை காப்பாத்த முடியாது பாருங்க” என்று அவளுக்கு ஒரு கொட்டு வைத்துவிட்டு சென்றான்.

அவன் அப்படி கூறி சென்றதும், கோபத்தில் பல்லை கடித்தாள். அப்பொழுது பார்த்து, உள்ளே சாஹித்யா பாடிக் கொண்டே வரவும், கோபத்தை அவள் மீது காட்ட தொடங்கினாள்.

“எப்போ வர சொன்னா, நீ எப்போ வர? சரி, நான் சொன்ன வேலை என்னாச்சு? முடிச்சியா, இல்லையா” என்று கேட்டாள் ப்ரீத்தி.

“முடிச்சிட்டேன் ப்ரீத்தி, நான் உன் கிட்ட சில விஷயம் பேசணும், இன்னைக்கு நம்ம வீட்டுக்கு வரியா நீ” என்று கேட்டாள் சாஹித்யா.

“இல்லை சாஹி, இன்னைக்கு தான் ட்ரீட்மென்ட் ஆரம்பிக்க போறேன் அவருக்கு. இன்னைக்கு அவரை பேச வைக்கணும், அப்போ தான் முழு உண்மையும் சொல்லும் பொழுது, அவருக்கு சஞ்சனாவோட மரணம் எப்படிபட்டதுன்னு தெரியும்” என்று கூறி பெருமூச்சு விட்டாள்.

“அது சரி தான், ஆமா இப்போ எதுக்கு வந்த உடனே என் மேல கோபம் வந்தது உனக்கு. இப்போ தான், வருண் போனதை பார்த்தேன், அப்போ சம்திங் சம்திங் நடந்ததா யா” என்று சிரிப்புடன் கேட்டவளை, முறைத்தாள் ப்ரீத்தி.

“நானே, அவனை அடிக்க முடியலையேன்னு கோபத்தில் இருக்கேன், நீ என்னனா சம்திங் சம்திங்னா கேட்குற” என்று பல்லை கடித்தவளை பார்த்து முழித்தாள் சாஹித்யா.

“என்ன டி நடந்தது? நீ இப்படி ரியாக்ட் பண்ணுற அளவுக்கு” என்று கேட்டாள் சாஹித்யா.

நடந்ததை எடுத்துக் கூறிக் கொண்டே வந்தவள், அவன் கூறி சென்ற வார்த்தையையும் எடுத்துக் கூறியவளுக்கு மீண்டும் கோபம் வந்தது.

“சரி, சரி நான் கிளம்புறேன் ப்ரீத்தி. நாளைக்கு நைட் கண்டிப்பா வீட்டுக்கு வா, பேசியே ஆகணும்” என்று அழுத்தமாக கூறிய சாஹியை பார்த்து சரியென்றாள்.

அடுத்து அடுத்து குவிந்த வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு, அவள் வீட்டிற்கு வரும் பொழுது மூணு மணியாகி இருந்தது. வருண் அவனின் அலுவலக அறையில் இருக்கிறான் என்பதை, சமையல் செய்யும் அம்மா இவளிடம் தெரிவித்த பின், இவள் மாடியில் இருக்கும் அவள் அறைக்கு சென்றாள்.
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
அலுப்பு தீர ஒரு குளியல் போட்டுவிட்டு, சாதாரண காட்டன் சுடி ஒன்றை அணிந்து கொண்டு கீழே இறங்கினாள். மாலை காபி, வடையுடன் வந்த சமையல்கார அம்மாவிடம், அவனின் உணவு முறைகளை எடுத்துக் கூறி, ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய உணவு பட்டியலை கொடுத்து விட்டாள் அவரிடம்.

அதன் பின், கையில் காபியுடன் அவனின் அறை கதவை தட்டி அனுமதி கேட்கவும், அவன் உள்ளே வரலாம் என்றான்.

உள்ளே நுழைந்தவுடன், ஜில்லென்று மோதிய ஏசி குளிர் அவளை வரவேற்றது. லேப்டாப் முன், எதையோ தீவிரமாக டைப் செய்து கொண்டு இருந்தவனை பார்க்கும் பொழுது, அவன் வேலையாக இருக்கிறான் என்று புரிந்தது.

“ஒரு டூ மினிட்ஸ், இப்போ வேலை முடிஞ்சிடும். சோபாவில் உட்காருங்க டாக்டர், இப்போ வந்திடுறேன்” என்று அவன் கூறவும், அங்கே இருந்த சோபாவில் அவள் அமர்ந்தாள்.

காபியை அருந்திக் கொண்டே, அந்த அறையை நோட்டம் விட்டாள் ப்ரீத்தி. அவள் கண்ணில், அப்பொழுது ஒரு புகைப்படம் சிக்கியது. அதை பார்த்தவள், அதை வைத்து இன்றைய ட்ரீட்மென்ட் ஆரம்பிக்க முடிவு செய்தாள்.

அவளது ட்ரீட்மென்ட், காயத்தை கீறி விட்டு அதுக்கு மருந்து போடுவது தான். ஆனால் கீறல் சற்று ஆழமாக இருக்கும் பட்சத்தில், அதை துடைத்து மருந்திடுவது கடினம். அதை தான் சவாலாக ஏற்றுக் கொண்டு, இப்பொழுது இங்கே இருக்கிறாள் அவனை குணப்படுத்த.

“சாரி! கொஞ்சம் அவசரமா முடிக்க வேண்டிய வேலை அது, அதான் காக்க வைக்க வேண்டியதா போச்சு” என்று கூறிக் கொண்டே, எதிர் சோபாவில் அமர்ந்தான்.

“நீங்க காபி குடிச்சீங்களா? இல்லைனா காபி கொண்டு வர சொல்லட்டுமா?” என்று கேட்டாள் ப்ரீத்தி.

“இல்லை, நான் காபி குடிக்க மாட்டேன்” என்று அவன் கூறினான்.

“உங்க தலைவலிக்கு, இப்போ காபி தான் பெஸ்ட் மெடிசின். சோ கொஞ்சம் இப்போ குடிக்கலாம், நான் அவங்க கிட்ட சொல்லிட்டு வரேன்” என்று அவள் எழும் பொழுது, அவன் கை பிடித்து அவளை அமர வைத்தான்.

“இருங்க, இண்டர்காம் வழியா சொல்லி கொண்டு வர சொல்லுறேன்” என்று கூறி, அதை செயல்படுத்தினான்.

காபி வந்தவுடன், அதை அவன் குடித்து முடித்த பின் அவள் அவனிடம் அந்த புகைப்படம் பற்றி விசாரித்தாள்.

“அதுவா, அது நான், சஷாங், அப்புறம் ஆஷிக். நாங்க மூணு பேருமே ஒரே காலேஜ், ரொம்ப நெருங்கிய நண்பர்கள். ஆஷிக் அவங்க அப்பா பெரிய லாயர், அவனை லா படிக்க எவ்வளவோ கெஞ்சினார். ஆனா, அவன் என் கூட பி.பி.ஏ பண்ணான்”.

“அவனுக்கு லா படிக்க ஆசையே கிடையாது, பிசினஸ் பண்ண தான் ஆசை. அதனால படிச்சு முடிச்சிட்டு, ஒரு கம்பெனி ல வேலைக்கு போயிகிட்டு இருந்தவனை, நான் தான் கஷ்டப்பட்டு அவனை இங்க வர வச்சேன்”.

“எனக்கு வலது கை, இடது கை எல்லாம் அவன் தான். அப்புறம் சஷாங், அவங்க அப்பா பெரிய தாதா. போலீஸ், அவரை பிடிச்சு encounter பண்ணிட்டாங்க”.

“அவங்க அம்மா இந்த செய்தி கேட்டு, அடுத்த நாளே இறந்துட்டாங்க. அப்புறம் எங்க அம்மா தான், அவனை படிக்க வச்சாங்க. அப்போவே அவனுக்கு என்னை விட, எங்க அம்மா தான் பெட்”.

“சஞ்சனா இறந்த நேரத்துல, நான் இருந்த நிலையை பார்த்து எங்க அம்மா ரொம்ப துடிச்சு போயிட்டாங்க. அப்போ அவன் தான், எங்க அம்மாவை சமாதானப்படுத்தினான்”.

“அடுத்து என் பாதை, போதை பழக்கம், குடி இப்படி போகவும், அம்மா என்னை கண்டிச்சாங்க. அதை எல்லாம் கண்டுக்காம, நான் அதுக்கு அப்புறம் கூட கொஞ்சம் குடிக்க ஆரம்பிச்சேன்”.

“குடிக்க, குடிக்க நான் என்னை மறக்க ஆரம்பிச்சேன். அப்போ தான், எங்க அம்மா நீ என் பிள்ளையே இல்லைன்னு சொல்லிட்டு, சஷாங்கை தான் தன் மகன் இனி, அப்படின்னு கூட்டிட்டு போயிட்டாங்க”.

“கொஞ்ச நாள் கழிச்சு என் அம்மா இறந்துட்டாங்க, ஓவர் ஸ்ட்ரெஸ் அப்படின்னு சொன்னாங்க. என்னை நினைச்சு, நினைச்சு என் அம்மா இறந்துட்டாங்கன்னு எனக்கு ஒரு கில்டி”.

“இதையே என் அப்பா சொல்லி, என்னை இங்க அனுப்பி வச்சுட்டார். அங்க என்னை விட சஷாங் தான், என் அம்மா இறக்கும் பொழுது ரொம்ப அழுதான். எனக்கு ஒரு நல்ல தோழனா மட்டும் இல்லாம, எங்க அம்மாவுக்கு நல்ல மகனாகவும் இருந்தான்”.

“இப்போ அவன் தான், எங்க அப்பா ஆபிஸ் பார்த்துகிட்டு இருக்கான்” என்று நண்பர்கள் பற்றி பேசும் பொழுது, அவன் அவனை அறியாமல் அனைத்தையும் சொல்லிக் கொண்டே போனான்.

ப்ரீத்தி, இதை எல்லாம் கேட்டவள் இப்பொழுது சில விஷயங்கள் சொல்ல வேண்டிய நேரம் வந்து இருப்பதை உணர்ந்தாள். ஆகையால், அவனிடம் சில கேள்விகளை கேட்க தொடங்கினாள்.

“உங்களுக்கு, போதை பழக்கம் எப்படி வந்தது? மும்பை ல பார்க்கு பஞ்சமே கிடையாது, அதனால அங்க தண்ணி அடிக்கிறது நார்மல் உங்களுக்கு”.

“ஆனா இந்த போதை பழக்கம், உங்களுக்கு யார் பழக்கி விட்டது. எப்படி இவ்வளவு ஹை டாக்சின் உள்ள போதை, நீங்க எடுத்தீங்க?” என்று மெதுவாக கேட்டாள்.

“வழக்கமா நான் போற பார்க்கு பதிலா, அன்னைக்கு சஷாங் என்னை வேற இடத்துக்கு கூட்டிட்டு போனான். அங்க தான் இதை சர்வ சாதரணமா, எல்லோரும் அடிச்சிகிட்டு இருந்தாங்க”.

“அப்படி என்ன இருக்கு அதுல அப்படின்னு, அதை வாங்கி டேஸ்ட் பண்ண நினைச்சேன். சஷாங் வேண்டாம் சொல்லி தடுத்தான், ஆனா எனக்கு அப்போ அதுல என்ன இருக்குன்னு தெரிய வேண்டி இருந்தது”.

“அதனால, அப்போ லைட்டா ஆரம்பிச்சேன். என்னை முழுசா வேற உலகத்துக்கு கூட்டிட்டு போன பீல், அங்கே சஞ்சுவை பார்க்க ஆரம்பிச்சேன். அப்புறம் தான் தொடர்ந்து, நானே அதை தேடி போய் எடுத்துகிட்டேன்”.

“எனக்கு அப்போ தெரிஞ்சது எல்லாம், என்னோட சஞ்சுவை அப்போ அதுல பார்க்கலாம்ன்னு மட்டும் தான். ஆனா அதுவே, என் அம்மா உயிரை பலி கொடுக்கும்ன்னு நான் நினைக்கவே இல்லை” என்று வெடித்து அழுதான்.

அவன் கூற கூற, இவள் சில நிகழ்வுகளை எல்லாம் அழுத்தி கேட்டு கேட்டு, அதை திரும்ப கூற வைத்து, காயத்தை ஆழமாக கீறி எடுத்துக் கொண்டு இருந்தாள். அப்படி எடுக்க எடுக்க, அவன் வெடித்து அழ தொடங்கவும், மனதில் சிறிது வலித்தாலும் அதை தாங்கிக் கொண்டு அவனை
குணப்படுத்தும் முயற்சியில் இறங்கினாள்.


இன்று இதோடு போதும் என்று நிறுத்திக் கொண்டு, அவனுக்கும், தனக்கும் இரவிற்கான உணவை அங்கேயே வரவழைத்து இருவரும் உண்டனர்.

இவனிடம் சொல்லிக் கொண்டு, அவள் தூங்க சென்றாள் அவளின் அறைக்கு. அப்பொழுது அவளின் கைபேசி சிணுங்கவும், எடுத்து யார் என்று பார்த்தாள்.

ஏதோ தெரியாத நம்பர் எனவும், அதை கட் செய்தாள். ஆனால் அதில் இருந்து திரும்ப, திரும்ப வரவும் எடுத்து ஹலோ என்றாள்.

“உனக்கு இன்னும் பத்து நிமிஷம் டைம் தரேன், அதுக்குள்ள வருண் வீட்டில் இருந்து நீ வெளியே போகனும். அப்புறம் ட்ரீட்மென்ட் நிறுத்தனும் அவனுக்கு, இல்லை உன் உயிர்க்கு உத்தரவாதம் இல்லை” என்று மிரட்டினான்.

“டேய்! உன் பெயர் என்ன? உன் ஊர் என்ன? எல்லாம் எனக்கு அத்துபடி. நீ இப்போ எங்க இருக்கன்னும், எனக்கு நல்லா தெரியும். தெரிஞ்சும் உன்னை நான் சும்மா விட்டு இருக்கேன்னா, நான் உன்னை அவ்வளவு ஈசியா விட போறது இல்லைன்னு அர்த்தம்”.

“நீ அதனால கம்முன்னு கிட, இல்லை நான் சாவடிச்சிடுவேன் இப்போவே ஜாக்கிரதை” என்று மிரட்டிவிட்டு படுத்து விட்டாள்.

வருணுக்கு, அவளிடம் எல்லாம் கொட்டியதாலோ என்னவோ, படுத்த உடனே முதல் முறையாக நிறைய நாட்கள் கழித்து உறங்குகிறான். ஆனால் அங்கே ஒருவன், இவர்கள் இருவரையும் அழிக்க முடிவு செய்து, தன் அடுத்த காயை நகர்த்த திட்டம் தீட்டி விட்டான்.

தொடரும்...
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
hi friends,
thanks for ur support and comments ,,
still 4 epis to go ..
daily ud ini
so full story mudich udane reply panniduren dears

anbudan,
uma deepak
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
உமா தீபக் டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top