• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

UVVP Episode 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
புதுசா புதுசா நிறைய விஷயம் சொல்றீவும்ங்க. க்ரைம் சீன் இட்ஸ் ரியலி இன்டிரஸ்டிங். உங்க பாணியில சுஜாதா ஸ்டைல் இருக்கு.

நீங்க சுஜாதாவோட முதல் கதை படிச்சிருக்கீங்களா? அது ஒரு செம த்ரிலர். ஷானுக்கு பின்னாடி இருக்கிற இந்த. மூளைகாரிக்கு???? உங்க பிஸி ஷெட்யூல்ஸ் ரெகுலர் யூடி Hats off aadhima
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
புதுசா புதுசா நிறைய விஷயம் சொல்றீவும்ங்க. க்ரைம் சீன் இட்ஸ் ரியலி இன்டிரஸ்டிங். உங்க பாணியில சுஜாதா ஸ்டைல் இருக்கு.

நீங்க சுஜாதாவோட முதல் கதை படிச்சிருக்கீங்களா? அது ஒரு செம த்ரிலர். ஷானுக்கு பின்னாடி இருக்கிற இந்த. மூளைகாரிக்கு???? உங்க பிஸி ஷெட்யூல்ஸ் ரெகுலர் யூடி Hats off aadhima
Monisha ji, thanks.. for your comments dear...
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
"ஓய் ", காதுக்குள் ஷானு மைக்ரோபோனில் கிசுகிசுத்தாள்.... "க்க்ஹ்ம் .. சொல்லு..", இவனும் பல்லை கடித்துக்கொண்டே சன்னமாய் பதிலுரைத்தான்.. "அவர் சிப்-பை பார்க்கட்டும்.. நீங்க ஒருமுறை திரும்பவும் வீட்டுக்குள்ள போங்க.."

"(y)", கட்டை விரலை காண்பித்து DCP -யை பின் தொடர்ந்தான்......

தீயின் தாக்கம் இல்லாத செக்யூரிட்டி ரூம் ,தனியாக வீட்டின் சுற்று சுவரை ஒட்டி இருந்தது..., அதனுள்ளே இருவரும் [DCP & கணேஷ்] சென்றனர்...

கணேஷ் அங்கிருந்த கணினியை உயிர்ப்பித்து , கேமராவின் சிப்பை நுழைத்து பதிவுகளை ஓடவிட்டு.., " சார் நீங்க பாத்துட்டே இருங்க.. நான் திரும்ப ஒரு கம்ப்ளீட் ஸ்டடி பண்ணிட்டு வர்றேன்...."

DCP தலையசைத்து, நேற்று மற்றும் அதன் முந்தின நிகழ்வுகளை காண ரீவைண்ட் செய்ய ஆரம்பித்தார் ....

அமைச்சர் போர்வையில் இருந்த விநாயக மூர்த்தி, காரில் இரண்டு முறை வெளியே சென்று வந்துள்ளார்.. ஒரே கார் , அதே ட்ரைவர். அவர் கைதானபின், பூபேஷ் வந்தது... அவர் முகத்தில் அதிக பதட்டம் இருந்தது... பதிவாகி இருந்தது...

மற்ற அனைத்தும் சந்தேகத்திற்கு இடமில்லாத மிக சாதாரண நடமாட்டங்கள்...

DCP இன்னனும் பார்த்துக் கொண்டிருக்க.., அங்கே வீட்டினுள் கணேஷ் மிக மெதுவாய் நடந்தவாறே, "என்ன பாக்கணும், உனக்கு?", என்றான் ஷானுவிடம்....

"எனி clues ?", மூன்றாம் மனிதரிடம் பேசும் தோரணை... அவளிடம்,, ஓ .. இவை வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரி போல..., என்று நினைத்தவாறே, "ஏய்... DCP வெளில வந்து கண்டுபிடிக்கறதுக்குள்ள ஓடிப்போய்டு", என்க ,

"அட.. கேட்டதுக்கு பதில் செல்லுங்கப்பா",

"நீதான் நான் பாத்ததெல்லாம் பாத்திட்டு இருந்தியே , நீ என்ன கண்டுபிடிச்ச சொல்லு",

"நேர்ல வாங்க சொல்றேன்.. ",

"சரி..... நீ என்னவோ வீட்டுக்குள்ள பாக்கணும்-னு சொன்னியே ?ஆச்சா?, நான் வெளில வரலாமா?",, ஏனெனில் பத்து நிமிடமாய் வீட்டினுள் அலைந்து கொண்டிருந்தான்..

"யா யா , வாங்க.. வாங்க ",

"ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணு"..

நேரே DCP இடம் சென்றவன், "சார், கொஞ்சம் வேலை இருக்கு... afternoon வர்றேன் சார், தேவைன்னா கால் பண்ணுங்க...", சொன்னவனுக்கு சின்ன தலைசைப்பே பதில்...அவர் அந்த பதிவுகளுக்குள்ளேயே சென்றிருந்தார்...

வெளியே வந்த கணேஷ், சாவியை ஷானுவிடம் வாங்கி எதுவும் பேசாமல் கிளம்பி ஐந்து நிமிடத்தில் மெயின் ரோடை அடைந்தவாறே.. "ஷானு , எழுந்துக்கோ..", என ..

மெல்ல தலை நிமிந்து பார்த்தாள், காரணம் இத்தனை நேரமும் பின்னிருக்கையில் கீழே ஒளிந்து அமர்ந்திருந்தாள் ...

"இது தேவையா ? " என கணேஷ் கூற...

"ஏன்.... இது தனி த்ரில் கணேஷ்..", என்றவள் ,"எனக்கு இதைவிட war zone தெரியுமில்லையா?, அங்க லைவ் -வா ரிப்போர்ட் பண்ண ஆசை..",என்று தொடர....

"அடிப்பாவி",

"எஸ்.. ஒரு அடி முன்னாடி மரணம் இருந்தாலும், உலகத்துக்கு உண்மையை சொல்றோம்-ன்னு கெத்தா நிக்கணும், ஏன்னா அங்க நாம செய்தி சொல்ற ஆள் கிடையாது.. வரலாறு நம்மை கருவியா வச்சு பதிய படுது.... ", சிலாகித்து சொன்னாள் , அவள்...

"அதுவுமில்லாம, எந்த வேலைலதான் ரிஸ்க் இல்ல? ஒரு முறை தான சாகப் போறோம்..., கொஞ்சம் உபயோகமா இருந்து போவோமே?"

கணேஷ் டென்ஷனானான்.. "ஷானு.. காலை-ல தான் ப்ரபோஸ் பண்ணினோம். உடனே பிணத்தை பாத்துட்டு வந்துருக்கோம்.. டாபிக் மாத்து..."

"ஆல் இன் தி கேம் ..ப்பா ..ஆனா, வேற பேசலாம் ஓகே.?.", சொல்லி நிறுத்தினாள் ,

"சரி, இத்தனை கஷ்டப்பட்டதுக்கு என்ன தெரிஞ்சது...? உன் பார்வைல இந்த கிரைம் ஸீன் பத்தி சொல்லு...", கணேஷ் வினவ...

"planned murder, கொலையாளிக்கு இவர் மூலமா எந்த விஷயமும் வெளிய போகக் கூடாது-ங்கிற ஒரே மோடிவ் தான்..., வீடு பூட்டினா மாதிரியே இருக்கு, கதவை உடைச்சு யாரும் உள்ள வரலை....சோ, மயக்க மருந்து ஸ்பிரே பண்ணி இருக்கலாம் இல்லன்னா victim -ஸ்க்கு மயக்கம் வர்ற அளவு அடிச்சு அதுக்கப்பறம் தான் சிலிண்டரை வெடிக்க வச்சிருக்கணும்..., பிரேத பரிசோதனைக்கு அப்பறம் ஒரு தெளிவான பிக்சர் கிடைக்கும்.., "

"விக்டிம்ஸ் தீ மொத்தமும் பரவிய பின்னால தான் முழிச்சிருக்கனும்.. மயக்கத்தையும் மீறி உயிர் பயம் வந்து ஓட முயற்சி பண்ணி இருக்காங்க..."

"அவங்க கால் தடயம் பாருங்க...", என்றவாறே, அவளது அலைபேசியை காண்பித்தாள்..

"ஏய், நீ எப்போ போட்டோ எடுத்த ... ?",

"உங்களை மறுபடியும் உள்ளே போக சொன்னதே இதுக்குதான்..போட்டோ மட்டுமில்ல, வீடியோவும் எடுத்திருக்கேன்...."

"செத்தவங்க மயக்கமா இருந்ததா சொல்ற, எப்படி?"

"இங்க பாருங்க,", என போட்டோ வை சுட்டி , "அங்கங்க தயங்கி தயங்கி வந்த சீரில்லாத கால் தடங்கள் தெரியுதா?, அதான் ", என்று ஷானு சொன்னாள்.

அவள் பேசுவதை கவனமுடன் கேட்டவன் , "எனக்கு இதுல புரியாத ஒரு விஷயம், பூபேஷ் கைல இருக்கிற பேப்பர் தான்..."

"கரெக்ட்.., அதே டவுட் எனக்கும் வந்தது.. இதோ பாருங்க... பூபேஷ் கைல மாட்டி இருக்கிற பேப்பர்ஸ் மொத்தமும் எரிஞ்சுடுச்சு, பட் அவர் கை அந்த பேப்பர்ஸ் மேல இருக்கறதுனால, ஒரு பேப்பரோட சின்ன பீஸ் எரியல., எங்கயும் பறக்கல, அண்ட் அதுல எதோ ஒரு க்ளூ இருக்கும் ன்னு நான் நினைக்கிறேன்."

"பை தி வே... உங்களுக்கு தெரியுமா ? அல்ட்ரா வயலட் ரே-ன்னு ஒரு டெக்னிக் பயன் படுத்தி பேப்பர் மொத்தமா எரிஞ்சிருந்தாலுமே அதுல என்ன ப்ரிண்ட் ஆகி இருக்குன்னு கண்டு பிடிக்க முடியும் .... தடயவியல் ஆளுங்களை விட்டா அவங்க பண்ணிடுவாங்க...."

"இந்த வீட்ல ஃபயர் ஸ்ப்ரின்க்லெர் சிஸ்டம் [FSS ], ஃபயர் அலாரம் ஸிஸ்டெம் [FAS], இருந்தது கொஞ்சம் வசதி நமக்கு... இல்லன்னா இந்த அளவு கூட மிஞ்சி இருக்காது.., இந்த UV கதிர்வீச்சு டெக்னிக் DCP சாருக்கு தெரிஞ்சே இருக்கும்.. ஆனாலும் ஒருமுறை ரிமைண்ட் பண்ணிடுங்க"..

அவள் சொல்ல சொல்ல, இவனுக்கு வியப்பை மீறி வியர்த்தது... "இவ இவ்வளவு மண்டைகாரியா?, கணேஷா, இனி வாழ்நாள்-ல்ல பொய் புளுகு -ன்னு விளையாட்டுக்கு கூட யோசிக்காதே.. நிச்சயமா கண்டு பிடிச்சுடுவா..." மைண்ட் வாய்ஸ் எச்சரித்தது...

"ஓகே உங்க கண்டுபிடிப்புகள் ஏதாவது...?",

{"க்கும்... என்னத்த?, எல்லாம் தான் புட்டு புட்டு வச்சிட்டியே தாயே ?"} மனக்குரலை அடக்கி, "உன்னளவு இல்ல.. ஒரு ஆள் காம்பௌண்ட் வழியா வந்து, ஜன்னலை ஒட்டி இருக்கிற காஸ் அடுப்பை திறந்து பத்த வச்சுட்டு போயிருக்கான், பெட்ரோல் ஊத்தி இருக்கணும்-கிறது என் டவுட் இல்லன்னா, காஸ் ட்யூப் எரிஞ்சிருக்காது.. ... தனியா இயங்கக்கூடிய CCTV ஒன்னு கிடைச்சிருக்கு... பாத்த வரை டிரைவர் முகம் தெளிவா இல்ல. கண்ணாடி + தொப்பியோடவே இருந்திருக்கான், அதோட அவன் முகம் கிடைச்சாலும் என்ன யூஸ் ?, அவனே செத்துட்டான்..."

"எஸ்.. சரி.. நாம இப்போ இருக்கிறத வச்சு ஏதாவது கண்டுபிடிக்க முடியுதான்னு பாக்கணும், பேப்பர்-ல என்ன இருக்குன்னு நாளைக்கு வர போற ரிசல்ட்-க்காக காத்திருக்கணும்..."

காத்திருப்போமா, friends ?

*********************%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%*****************************

விண்ணும் மண்ணும்தனியாளும் -- எங்கள்
வீரை சக்தி நினதருளே -- என்றன்
கண்ணும் கருத்துமெனக் கொண்டு -- அன்பு
கசிந்து கசிந்து கசிந்துருகி -- நான்
பண்ணும் பூசனைகள் எல்லாம் -- வெறும்
பாலை வனத்தில்இட்ட நீரோ? -- உனக்
கெண்ணுஞ் சிந்தை யொன்றிலையோ -- அறி
வில்லா தகிலம் அளிப்பாயோ?

நீயே சரணமென்று கூவி -- என்றன்
நெஞ்சிற் பேருறுதி கொண்டு -- அடி
தாயே எனக்குமிக நிதியும் -- அறந்
தன்னைக் காக்குமொரு திறனும் -- தரு
வாயே என்றுபணிந் தேத்திப் -- பல
வாறா நினது புகழ் பாடி -- வாய்
ஓயே னாவதுண ராயோ?-நின
துண்மை தவறுவதோர் அழகோ?

மகாகவி சுப்ரமணிய பாரதியார்.
??? மண்டபுல்லா மூளை.. ??? கணேஷா. கணேஷா... ???
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Nice update Akka...
Naan thriller movie kuda parkka matten...
But unga story than naan padikira first thriller... awesome
Unga info ellam semma...??
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
அப்பா ஷன்மதி செம்மா மூளைக்காரி பிரிச்சி மேய்யுரா பா கணேஷ் இவ்வளவு திறமையை ஷன்மதியிடம் எதிர் பார்க்கல போல?
Nice adhima???????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top