You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.


Uyir vidum varai unnoduthaan-- epi 20

vanisha

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
வணக்கம் மக்களே,

என்னடா மண்டே வந்துருக்கேன்னு பார்க்கறீங்களா? எல்லாம் இந்த மண்டே மாதி குடுக்கற தலை வலிதான். செம்ம ஸ்ட்ரெசா இருக்கு ப்ளாஸ்பேக் எழுதறது. இன்னிக்கு ஒரு எபிய போட்டுட்டு, உங்க ரெஸ்போன்ஸ் எப்படி இருக்குன்னு பார்த்துட்டு நாளைக்கு ஒரு எபிய போட்டு மூடுவிழா பண்ணிறலாம்னு நினைக்கிறேன். படிச்சுப் பாருங்க.


uyir1.png
உயிர் விடும்வரை உன்னோடுதான்அத்தியாயம் 20

குழந்தையின்மை ஸ்ட்ரெஸ்—சமாளிப்பது எப்படி?

7. சுவாசிக்க கற்றுக் கொள்ளுங்கள்

இந்த ஸ்ட்ரெஸ்சை சமாளிக்க இன்னொரு அற்புதமான வழி ஆழ்ந்து சுவாசிப்பது ஆகும்
. கண்களை மூடி அமைதியான இடத்தில் மூச்சுப் பயிற்சி செய்வதால், நீங்கள் ரிலேக்ஸ்சாக இருப்பதை உணர்வீர்கள்.
 

vanisha

SM Exclusive
Author
SM Exclusive Author
#2
மாதியை மணக்கோலத்தில் பார்த்த அந்தக் குடும்பமே பேச்சிழந்து அதிர்ச்சியில் உறைந்திருந்தது. வள்ளிதான் முதலில் சுதாகரித்தார். அவள் அருகில் ஓடியவர், பளீரென ஒர் அறை விட்டார். அப்பொழுதும் ஆத்திரம் தாளாமல் அடித்து தள்ளிவிட்டார்.

“பாவி! பாவி! இப்படி என் தலையில மண்ணை வாரி போட்டுட்டியேடி பாதகத்தி. கல்யாணம் பண்ணிட்டு வந்து தைரியமா எங்க முன்னுக்கு நிக்கறியே! இதுக்காடி பாராட்டி சீராட்டி உன்னை வளர்த்தேன். ஏன்டி இப்படி பண்ண? ஏன்” அவளை அடித்தது போதாது என தன் நெஞ்சிலும் அறைந்து கொண்டு அழுதார் வள்ளி. கண்ணில் நீர் வழிய ஒவ்வொரு அடியையும் வாய் திறக்காமல் வாங்கிக் கொண்டாள் மாதி.

ஆனால் அவள் பார்வை மட்டும் சித்ராவை விட்டு விலகவில்லை. பார்வையாலே கொலை செய்ய முடியும் என்றால் இன்னேரம் சித்ரா செத்துப் போயிருப்பாள். அந்தப் பார்வையில் இருந்த துவேஷத்தில் சித்ராவின் முதுகுத் தண்டு ஜில்லிட்டுப் போனது.

வள்ளியின் கூக்குரலில் உயிர் பெற்ற மற்றவர்கள், நிலைமையின் தீவிரத்தை அப்பொழுது தான் உணர்ந்தனர். மாதியின் கணவனின் சட்டையை கொத்தாக பற்றினார் சிங்காரம்.

“ஏன்டா பொறுக்கி! எங்க வீட்டுப் புள்ளைய ஏமாத்தி இப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நிக்கறியே, உனக்கு வெக்கமா இல்லை?” விட்டார் ஓர் அறை. அவன் எந்த வித ரியாக்‌ஷனும் காட்டாமல், அப்படியே நின்றிருந்தான். பார்வை மட்டும், சித்ராவின் முகத்திலேயே நிலைத்திருந்தது.

“என்னை எவ்வளவு வேணும்னாலும் அடிங்க, கொல்லுங்க! என் ராஜேஷ் மேல இனி ஒரு அடி விழுந்தாலும், என்னை பொணமா தான் பார்ப்பீங்க!” கத்தினாள் மாதி.

மீண்டும் மயான அமைதி அங்கே. ராஜேஷ் என்ற பெயரை கேட்கவும் நவநீதம் சித்ராவை திரும்பிப் பார்த்தார். அமைதியாக நிற்பதைப் போல இருந்தாலும், அவளது உதடுகள் துடிப்பது இவருக்கு நன்றாக தெரிந்தது. எப்பொழுதும் போல உள்ளுக்குள்ளேயே எல்லாவற்றையும் புதைக்கிறாள் என அவரால் உணர முடிந்தது. அவளைக் கண்டு நெஞ்சு கணத்தாலும், இப்பொழுது இந்தப் பிரச்சனையை சுமூகமாக தீர்ப்பது தான் முதல் காரியமாக இருந்தது அவருக்கு. சூழ்நிலையை தன் கையில் எடுத்தவர்,

“மாமா, பையன் சட்டையை விடுங்க. அவர கூப்பிட்டு வந்து உட்கார வையுங்க. பேசி தீர்த்துக்கலாம். அடிதடி வேணாம். சத்தம் போட்டு நாலு பேருக்கு இந்த விஷயத்தைப் பரப்ப வேணாம். அக்கா, அழாதீங்க. வந்து உட்காருங்க, என்ன விஷயம்னு கேட்கலாம்.” வள்ளியை கைப்பிடித்து கூட்டி வந்து நாற்காலியில் அமர்த்தியவர், தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். சித்ராவையும், நிலா, மணியையும் பத்மா வீட்டுக்குப் போக சொன்னார்.

“அவ இருக்கட்டும். மத்த ரெண்டு பேர மட்டும் போக சொல்லுங்க” என சித்ராவை நிறுத்தினாள் மாதி.

வெளியில் போய் விட்டு வந்த சண்முகம், மணக்கோலத்தில் அமர்ந்திருந்த மகளைப் பார்த்து மயங்கி சரிந்தார். பதறிவிட்டார்கள் அனைவரும். பெரியவர்களுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. சித்ராதான், நீர் கொண்டு வந்து முகத்தில் தெளித்து, சட்டையை கொஞ்சம் தளர்த்தி அவருக்கு முதலுதவி செய்தாள். மயக்கம் தெளிந்து அமர்ந்தவரை நாற்காலியில் உட்கார வைத்தவள், பம்பரமாக சுழன்று அனைவருக்கும் காபி கலந்து எடுத்து வந்தாள். முதலில் நவநீதத்திடம் கப்பை நீட்டியவள், நடந்தது நடந்து விட்டது அடுத்ததை கவனியுங்கள் என கண் ஜாடைக் காட்டினாள்.

அந்த களேபரத்திலும், அதிராமல் நிலைமையை சமாளித்த சித்ராவை கண் கலங்கப் பார்த்துக் கொண்டே இருந்தான் ராஜேஷ். கையெட்டும் தூரத்தில் இருந்தாலும் இந்த சொர்க்கம் தனக்கில்லை எனும் நிதர்சனம் அவனைக் குத்தி கிழித்தது. தன்னிடம் நீட்டப் பட்ட காபி கப்பை கண்ணில் ஒரு யாசிப்புடன் பெற்றுக் கொண்டான் ராஜேஷ். சித்ராவைப் பார்க்கும் ராஜேஷை எரிப்பது போல பார்த்திருந்தாள் மாதி.

“புள்ளைங்க இப்படி பண்ணிட்டு வந்து நிக்கறாங்க. நாம அடிதடின்னு போனா எல்லாம் சரியா போயிருமா? இனி நடக்க வேண்டியத பார்ப்போம். மாமா, ராஜேஷ் கிட்ட கேட்டு, அவங்க பெத்தவங்களுக்கு விஷயத்தை சொல்லிருங்க. அவங்க வந்தவுடனே, என்ன செய்யறதுன்னு பேசலாம்.” சிங்காரத்துக்கு உத்தரவிட்டார் நவநீதம்.

“அக்கா, நீங்க வாங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. ரொம்ப ஓஞ்சி போய் தெரியறீங்க. பெரிய மாமாவையும் உள்ள கூட்டிப் போங்க.” அதிர்ச்சியில் இருந்த இருவருக்கும், அதிலிருந்து வெளி வர நேரம் கொடுத்தார். சிங்காரம், ராஜேஷை வெளியே அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார். இவர்கள் மூவர் மட்டும் தனித்து விடப்பட்டனர்.

இவர்களை நிமிர்ந்துப் பார்த்த மாதி,

“சின்னம்மா, நான் சித்ரா கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்” என்றாள்.

“அதெல்லாம் ஒன்னும் வேணாம் மாதி. அவகிட்ட பேச என்ன இருக்கு? சின்ன புள்ள அவ.” மறுத்தார் நவநீதம்.

“உங்க சின்ன புள்ள, ராஜேஷ புடிச்சிருக்கு, ஆனா லவ்வா இல்லையான்னு தெரியலன்னு சொன்னத என் ரெண்டு காதால கேட்டேன். அதனால ஒன்னும் பசப்ப வேணாம். நீங்க ஒன்னும் முட்டாள் இல்ல, இப்ப நடந்த கல்யாணத்துக்கும் இவளுக்கும் சம்மந்தம் இருக்கும்னு உங்களுக்கு கண்டிப்பா புரிஞ்சிருக்கும். சோ !” தன்னைப் பெற்ற அன்னையையே தெனாவெட்டாகப் பார்த்தாள் மாதி.

முடியாது என சொல்ல வந்த நவநீதத்தைக் கையமர்த்திய சித்ரா, மற்றொரு ரூமுக்குள் சென்றாள். அவளைப் பின்பற்றி உள்ளே சென்று கதவை அறைந்து சாத்தினாள் மாதி. மூடிய கதவை திகிலுடன் பார்த்திருந்தார் நவநீதம்.

‘கடவுளே என் சித்ராவுக்கு எதையும் தாங்கும் இதயத்தைக் குடுப்பா!’ வேண்டிக் கொண்டார்.

கைகளைக் கட்டிக் கொண்டு தன் அக்காவை நிமிர்ந்துப் பார்த்தாள் சித்ரா. வாயை மட்டும் திறக்கவில்லை. ஏதாக இருந்தாலும் அவள் வாய் மூலமே வரட்டும் என அமைதி காத்தாள். அவளது அமைதி திமிராக பட்டது மாதிக்கு.

“என்னடி ராஜேஷ மயக்கி உன் வலையில விழ வச்ச திமிரா? பார்த்தல்ல, உன் காதலன எப்படி என் கணவனா மாத்திட்டேன்னு!” வாய் விட்டு சிரித்தாள் மாதி. அதற்கும் அமைதியே உருவாக நின்றிருந்தாள் சித்ரா.

“நீ பொறந்ததிலிருந்து எனக்கு சனியன் புடிச்சதுடி. வேற எங்கயாச்சும் பொறந்து தொலைக்க வேண்டிதானே? ஏன்டி என் அம்மா வயித்துல வந்து பொறந்த?” இத்தனை நாளாய் மனதில் பூட்டி வைத்திருந்த அவளின் வஞ்சினம் எல்லாம் கரை உடைத்து வார்த்தைகளாக வந்து கொட்டின.

“நெஞ்சுல உள்ள பாசத்த அவங்க மறைக்கலாம், ஆனா கண்ணுல தோணும் நேசத்தக் கூடவா மறைக்க முடியும்? நீ கவனிக்காத போது, பாசத்தோட உன்னை தழுவும் அவங்க பார்வைகள நான் வெறுக்கறேன். எனக்கு தெரியாம, உனக்கு பார்த்து பார்த்து வாங்கி, லாக்கருல பூட்டி வச்சிருக்கர நகை தொகைய நான் வெறுக்கறேன். என் கிட்ட பாசத்த கொட்டுனாலும், உன் கிட்ட திருட்டுத்தனமா அவங்க வச்சிருக்கற அன்பை நான் வெறுக்கறேன். எனக்குப் பார்த்து பார்த்து செஞ்சி குடுத்தாலும், நீ விரும்பி சாப்பிடற சாப்பாடு வகைகள கிச்சன் முழுக்க நிறைச்சு வைக்கிறத நான் வெறுக்கறேன். அவங்க என் அம்மாடி! என் உயிர். எனக்கு உன்னைப் பிடிக்கலனு தெரிஞ்சு உன்னை ஒதுக்கி வைக்கவும் முடியாம, கிட்ட சேர்த்துக்கவும் முடியாம அல்லாடற அவங்க நிலைமைய நான் வெறுக்கறேன். மொத்தத்துல எங்கம்மா மனச சலனப்படுத்தற உன்னை வெறுக்கறேன். ஐ ஹேட் யூ!”

மாதி சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியில் நின்றவளை, உலுக்கினாள் அவள்.

“அத்தனை வருஷம் கழிச்சு நீ ஏன்டி பொறந்த? ஏன்? எங்கம்மா பாசத்தா ஏன்டி பங்கு போட வந்த, ஏன்? உன்னைக் கொன்னு புதச்சா கூட என் ஆத்திரம் அடங்காதுடி! அம்மாவுக்காக உன்னைப் பொறுத்துப் போனேன். அவங்களுக்காக உன்னை
 

vanisha

SM Exclusive
Author
SM Exclusive Author
#3
சீண்டறத கொறைச்சேன். அப்படியும் என் ராஜேஷ என் கிட்ட இருந்து பறிச்சிட்டியேடி! உனக்கு நான் என்னடி பாவம் பண்ணேன்? சொல்லு! என் அம்மா, அப்புறம் என் ராஜேஷ்! நான் உயிருக்கு உயிரா நினக்கற இவங்க ரெண்டு பேரும் உன்னைத்தான்டி மனசுக்குள்ள வச்சிருக்காங்க. இப்படி என் வாழ்க்கைய பறிக்கறதுக்கு என்னை கொன்னுப் போட்டுருடி ராட்சசி! கொன்னுரு!” முகத்தை மூடிக் கொண்டு கதறினாள் மாதி.

சித்ராவுக்கும் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. மாதியை நெருங்கி கைகளைப் பிடித்தாள். இவள் கை வைத்தவுடன் அப்படி ஒரு வெறி வந்தது அவளுக்கு. ஆக்ரோஷமாக சித்ராவை கீழே தள்ளி விட்டு அவள் வயிற்றில் ஏறி உட்கார்ந்தவள், மாறி மாறி அறைந்தாள் தங்கையை.

“பாவி, உன்னை நிம்மதியா வாழ விடமாட்டேன்டி. நான் படற இந்த மனக் கஸ்டத்தை உன்னையும் அனுபவிக்க வைப்பேன்.” சூளுரைத்தாள். அவள் அழுத்தி தன் மேல் உட்கார்ந்ததால் மூச்சு விட முடியவில்லை சித்ராவுக்கு.

“இறங்கு மாதி, மூச்சு முட்டுது.”

“மூச்சு முட்டுதா? இரு சீக்கிரமா உனக்கு விடுதலை தரேன்” கைகளை அவள் கழுத்தில் வைத்து நெரித்தாள். அவளின் தாக்குதலிலிருந்து தன்னை காத்துக் கொள்ள போராடினாள் சித்ரா.

“மாதி, சித்து! என்ன நடக்குது? வெளிய வாங்க” வெளியிலிருந்து நவநீதம் தான் கத்தினார். பட்டென கையை எடுத்த மாதி, அவள் மேலிருந்து இறங்கி தரையில் குத்துக் காலிட்டு அமர்ந்தாள். சித்ராவும் பெரிய பெரிய மூச்சுக்களை இழுத்து விட்டு கொண்டு தன்னை ஒரு நிலைப் படுத்திக் கொண்டாள். பின் பயத்துடன் சற்று நகர்ந்து உட்கார்ந்துக் கொண்டாள்.

“ஒன்னும் நடக்கல. உங்க மக இன்னும் உயிரோட தான் இருக்கா. பயப்படாதீங்க.” நக்கலாக மொழிந்தவள் , சித்ராவை உறுத்துப் பார்த்தாள்.

“என்னை பெத்தவ, ஆனா பாசம் மட்டும் உன் மேல துடிக்கிது! என்னை சுத்தி இருக்கற எல்லாருமே வேஷக்காரங்கடி. பாசம் இருக்கு ஆனா இல்ல. எங்கயாச்சும், பிள்ளைய பெத்து தூக்கி குடுத்துட்டு, தொட்டு கூட கொஞ்சாத பெத்தவங்கள பாத்திருக்கியா? அது இந்த கர்மம் பிடிச்ச வீட்டுல மட்டும் தான் நடக்கும்.” இன்னும் கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டினாள் மாதி. பின் சித்ராவையே வெறித்துப் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.

“என் வாழ்க்கையில ஒரு வசந்தம் வந்ததுனா அது ராஜேஷாலதான். அவனோட அழகுல, அறிவுல மட்டும் நான் மயங்கலடி, அவன் காட்டுற அன்புல மயங்கினேன். என்னை எப்படி பார்த்துக்குவான் தெரியுமா?”கண்களில் கனவு மின்ன சொல்ல ஆரம்பித்தாள்.

“என்னோட ப்ராஜேக்ட் கைட் அவன். பார்த்த முதல் பார்வையிலயே நான் விழுந்துட்டேன். அப்படி ஒரு கவர்ச்சியான சிரிப்பு அவனோடது. பாடம் சம்பந்தமா எந்தக் கேள்வி கேட்டாலும் சலிக்காம சொல்லிக் குடுப்பான். எப்ப பார்த்தாலும், சாப்பிட குடிக்கன்னு முதல்ல என் வயித்த கவனிச்சுட்டு தான் மத்த வேலையா பார்ப்பான். அவன் என் கைய பிடிச்சு பேசுறப்ப, தோளை தொட்டு நடக்கறப்ப அப்படியே சிறகில்லாம வானத்துல பறப்பேன். என் பிரின்ஸ் எனக்காக பைக்ல வந்துட்டான்னு பூரிச்சுப் போவேன். என் புருஷன்னு அவன மனசுல நினைச்சதுனால தான்டி தைரியமா வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன். என் ஆசை கோட்டையில கல்ல விட்டு அடிச்சு நொறுக்கிட்டியேடி” தேம்பி தேம்பி அழுதாள்.

“அன்னைக்கு சின்னம்மாகிட்ட சொல்லிட்டு இருந்தியே, அவன உனக்குப் பிடிக்கும்னு. அன்னிக்கு காலைல தான் அவன்கிட்ட நானா ப்ரோபோஸ் பண்ணேன். அதுக்கு அவன்…” இன்னும் தேம்பினாள்.

சித்ராவுக்கும் கண்ணீர் விடாமல் வழிந்தது.

“அவன் சொல்லுறான், என் கிட்ட ப்ரண்டா தான் பழகுனானாம். அதை தாண்டி எந்த பீலிங்சும் என் மேல இல்லையாம். அவன் கைய பிடிச்சு கெஞ்சுனேன்டி. வெக்கத்த விட்டு கெஞ்சினேன். நீ இல்லைனா நான் செத்துப் போயிருவேன்னு கெஞ்சினேன். அவன் சொல்லுறான், என்னைக் கட்டிக்கிட்டா அவன் செத்துருவானாம். நெஞ்சு நிறைய நேசத்த இன்னொருத்தி மேல வச்சிருக்கானாம். நான் யாருன்னு கேட்டதுக்கு சொல்லவே மாட்டேன்னு சொல்லிட்டான். மனசு ஒடிஞ்சு போய் வீட்டுக்கு வரேன், அப்போத்தான் நீ சொன்னது காதுல விழுந்துச்சு. நான் உள்ளுக்குள்ள செத்துப் போயிட்டேன்டி. உன்ன விட நான் எதுலடி மட்டம்? கொஞ்சம் நிறம் குறைவு, மத்ததெல்லாம், உனக்கு உள்ளது தானே எனக்கும் இருக்கு? ஏன்டி என்னை வேணான்னு சொன்னான்?” ரௌத்திரம் அவள் குரலில்.

“அப்ப முடிவு பண்ணேன், உங்க ரெண்டு பேரையும் சேர விட கூடாதுன்னு. என்னை பாடு படுத்தன உங்க ரெண்டு பேருக்கும் நானே தண்டனை குடுக்க முடிவெடுத்தேன்.”

கேள்வியாக நோக்கிய தங்கையை,

“எப்படி கல்யாணத்த நடத்துனேன்னு நினைக்கறியா? உயிருக்கும் மேல மதிக்கனும்னு அம்மா சொல்லி கொடுத்த கற்பை அடகு வச்சுதான்” இடி இடியென சிரித்தாள் மாதி.

“மாதி! “ அதிர்ந்தாள் சித்ரா.

“ஸ்ஸ்ஸ்! ஏன் சத்தம் போடுற? யாருக்கு என் கற்ப குடுத்தேன்? நான் புருஷனா நினைச்ச என் ராஜேஷுக்கு தானே! எனக்கு மட்டும் இப்படி நடக்கனும்னு ஆசையா? ஊர் மெச்ச கல்யாணம் பண்ணி, காதலோட அவன் காலடியில சமர்ப்பணம் செய்ய பாதுகாத்து வச்சிருந்த என் கற்ப , குடி போதையில இருந்த அவன் கிட்ட ஒப்படைக்கனும்னு எனக்கு மட்டும் தலையெழுத்தா?.” கண்களில் கரகரவென கண்ணீர் வழிந்தது மாதிக்கு.

“பசங்க எல்லாம் திருட்டுத்தனமா தண்ணியடிக்கப் போறாங்கன்னு தெரியும். விடிகாலை மூனு மணிக்கு யாருக்கும் தெரியாம அவன் ரூம் கதவ போய் தட்டுனேன். போதையில வந்து திறந்தான். என்னைப் பார்த்ததும் பதறி போய் என்னாச்சுன்னு கேட்டான். அப்ப கூட அவனுக்குப் பாசத்தப் பார்த்தியா? அவன தள்ளிட்டு உள்ள போனேன். பதறிட்டான். நாக்கு குழற என்ன திங்கள்னு கேட்டான். நீ வேணும் எனக்குன்னு வெக்கத்தை விட்டு சொன்னேன். அந்த ராஸ்கல், போதையில கூட உன் தங்கச்சி மேல மட்டும்தான் என் கை
 

vanisha

SM Exclusive
Author
SM Exclusive Author
#4
படும்னு வசனம் பேசறான். நீ வெளிய போன்னு சொல்லிட்டான். எனக்கு எவ்வளவு அவமானமா இருந்துச்சு தெரியுமாடி? தட்டு தடுமாறனவன அப்படியே என் நெஞ்சுல சாய்ச்சுக் கிட்டேன். ஒரு ஆம்பள செய்யற காரியத்த நான் செஞ்சேன். யெஸ், ஐ செடுயூஸ்ட் ஹிம்.” கதறினாள் மாதி.

ராஜேஷ் கிடைக்க தன் சகோதரி எப்படி எல்லாம் நடந்திருக்கிறாள் என இன்னும் இன்னும் அவள் விவரிக்க கேட்டு வயிற்றைப் பிரட்டிக் கொண்டு வந்தது சித்ராவுக்கு.

“அந்த ராஸ்கல், மேட்டர என் கிட்ட முடிச்சுட்டு, ராத்திரி முழுக்க சித்து, சித்து, பாப்பூ, பாப்பூனே பிணாத்திட்டு இருந்தான். அப்பவே உள்ளுக்குள்ள நான் செத்துட்டேன்டி. மறுநாள் என்னை ரூம்ல பார்த்துட்டு அதிர்ந்துட்டான். எப்படி, எப்படின்னு ஒரே புலம்பல். பொம்பள நான் தைரியமா இருக்க, அவன் அழுவுறான், ராஸ்கல். ஒழுங்கு மரியாதையா என்னை கல்யாணம், பண்ணிக்க, இல்லைன்னா உன் லீலைய சித்ராகிட்ட சொல்லிருவேன்னு சொல்லி நைட் எடுத்து வச்ச போட்டோச காட்டுனேன். ஆடி போயிட்டான். போட்டோவ வச்சு ஆம்பிளைங்க தான் பயம் காட்டுவாங்களா? பொம்பளைங்க செய்ய மாட்டோமா?” பைத்தியம் மாதிரி சிரித்தாள்.

எங்கே இவள் பைத்தியம் ஆகி விட்டாளோ என நிலாவுக்கு பயம் வந்தது. கவலையுடன் மாதியை ஏறிட்டுப் பார்த்தாள்.

“என்ன பார்க்கற? லூசாயிட்டன்னா? நல்லா தான் இருக்கேன். நீங்க ரெண்டு பேர்தான் இனிமே லூசா திரிய போறீங்க”

“நான் அவ்வளவு சொல்லியும் உன்னை வந்து பார்த்தானாமே! நீ ஒரே வார்த்தையில ஓடி போக முடியாதுன்னு சொல்லிட்டியாம்.” பொங்கி சிரித்தாள் மாதி.

“நவநீதம் தெ கிரேட் வளர்ப்பு அப்படி! பெத்த புள்ளைய தூக்கி குடுத்துட்டு, பெறாத பிள்ளைய சீராட்டி வளர்க்கறாங்க. ஹ்ம்ம்.”

“இந்த கிறுக்குப் பய ஏதோ உன் மேல உள்ள மயக்கத்துல வந்து கெஞ்சிருக்கான். ஆனா அவனோட நேர்மை கண்டிப்பா என் கிட்ட இழுத்துட்டு வரும்னு எனக்கு தெரியும். அதே போல வந்தான். கப்புன்னு புடிச்சு தாலிய வாங்கிகிட்டேன். இனி பயபுள்ள உன் மூஞ்சிய பார்த்துப் பார்த்து துடிக்கும். என்னை வேணாம்னு சொன்னதுக்கு இந்த தண்டனை அவனுக்கு கண்டிப்பா தேவை. என் காதல காலடியில போட்டு நசுக்கனதுக்கு இந்த மரண அடி அவனுக்கு கிடைச்சே ஆகனும். உன்னை மட்டும் விட்டுருவேன்னு நினைக்கறியா? நான் உயிரோட இருக்கற வரை நீ கன்னியா தான்டி சாகனும். எப்போ உன் பேர பெட்ரூம்ல கூட சொல்லி என் காதல கொன்னானோ, அந்த சுகம் உனக்கு கிடைக்கவே கூடாதுடி. நீ இப்படியே இருக்கறத பார்த்து அவன் நொந்து நொந்து சாகனும்.”

அவளது குரூரமான எண்ணத்தைக் கண்டு நெஞ்சு பதறியது சித்ராவுக்கு.

“எவனையாச்சும் இழுத்துட்டு ஓடலாம்னு நினைச்ச, உனக்கு கிடைக்கற தண்டனை அப்படியே உன் ஆசை தங்கச்சி நிலாவுக்கு ஷிப்ட் ஆகிரும். நான் எவ்வளவு புத்திசாலியா காய் நகர்த்துவேன்னு உனக்கே தெரியும். பார்த்து நடந்துக்க. இனி என் புருஷன் முன்னுக்கு வந்து மினிக்கிட்டு நிக்கற வேலைலாம் வச்சுக்காத. அவன் எனக்கு மட்டும் தான் சொந்தம். என்னோட ராஜேஷ்” மிரட்டி விட்டு வெளியேறினாள்.

பேயடித்தது போல அமர்ந்திருந்தாள் சித்ரா. மாதி வெளியேறியதும், உள்ளே ஓடி வந்தார் நவநீதம்.

“சித்தும்மா” அணைத்துக் கொண்டார் மகளை.

“சின்னம்மா” அவரை பிடித்துக் கொண்டு கண்ணீர் உகுத்தாள் சித்ரா.

“என்னம்மா சொன்னா அந்த ராட்சசி?” கலங்கிய குரலில் கேட்டாள்.

“அது வந்து, அவ ராஜேஷ உயிருக்கு உயிரா நேசிக்கறாளாம். அவரும் அப்படித்தானாம். அதான் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாம்”

“ஏன்டி என் கிட்டயே பொய் சொல்லுற? இத்தனை நாளா உன் பின்னால சுத்துனவனுக்கு, இப்ப இவ மேல லவ்வு வந்துருச்சாமா? இத நான் நம்புனுமா? இந்த கேடி ஏதாவது கேம் ஆடிருப்பா. அன்னிக்கு அம்மாவும் மகளும் அழுது சீன் போட்டப்பவே எனக்கு தெரியும் ஏதோ ஒன்னு பெருசா நடக்கப் போகுதுன்னு. சின்ன குருத்து உன் மனசுல, ஆசைய வளர்த்து உன் வாழ்க்கையில இப்படி விளையாடிட்டாங்களே இவளும் இவ கட்டிக்கிட்டவனும். நீ என்னடான்னா சமாதானம் பண்ணி வைக்க சொல்லி ஜாடை காட்டுற. என்னால ஏத்துக்கவே முடியல சித்து”

“சின்னம்மா! இப்போ அவர் என்னோட அக்கா கணவர். இது மட்டும் தான் என் நினைப்புல இருக்கு. இனிமே இதப் பத்தி பேச வேணாம்” வாயை அடைத்து வெளியே அனுப்பி விட்டாள்,

கல்யாண விஷயம் தெரிந்து ராஜேஷின் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்கள், அன்றே ப்ரைவேட் ஜெட்டில் சென்னை வந்திறங்கினார்கள்.

அவர்கள் வீட்டிற்கு வந்ததும் இன்னும் கச்சா முச்சாவென பேச்சும், சண்டையும் வளர்ந்தது. ராஜேஷின் அப்பா, படிக்க வந்த இடத்தில் கல்யாணம் செய்து கொண்டு நிற்கும் மகனை அடிக்கவே போய் விட்டார். பாலனும் இவர்களோடு சேர்ந்து பேசியதால் ஒரு வழியாக கல்யாணத்தை ஏற்றுக் கொண்டார்கள் அவர்கள். ஆனாலும் இப்பொழுது குடும்பத்துக்குள் விட முடியாது எனவும், பெங்களூரிலே இருவரையும் தனிக் குடித்தனம் வைப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்ததில் நிம்மதி மூச்சு விட்டனர் சித்ராவின் வீட்டில். ராஜேஷை இவர்கள் வீட்டிலேயே விட்டு விட்டு, பெங்களூரில் தனிக்குடுத்தன ஏற்பாடை கவனிக்க அவன் பெற்றவர்களுடனே கிளம்பினர் சண்முகமும், சிங்காரமும்.

எல்லோரும் கிளம்பியவுடன் வீடு அலை அடித்து ஓய்ந்தது போல இருந்தது.

கல்யாணம் தான் நாள் பார்த்து நடக்கவில்லை, சாந்தி முகூர்த்தமாவது நல்ல நேரத்தில் நடக்கட்டும் என நேரம் பார்க்க கோயிலுக்கு சென்றிருந்தார் வள்ளி. மாப்பிள்ளைக்கு தடபுடலாக சமைக்கவென சமயல் கூடமே கதியாக கிடந்தார் நவநீதம். தலை வலிக்கிறது என தனது ரூமில் முடங்கி விட்டாள் மாதி. சித்ராவோ வீட்டில் நடந்த எந்த கலேபரத்திலும் கலந்து கொள்ளாமல் ரூமிலே அடைக்கலம் இருந்தாள். யார் கண்ணிலும் பட அவளுக்கு விருப்பமில்லை.
 

vanisha

SM Exclusive
Author
SM Exclusive Author
#5
நண்பனை பார்க்க போகிறேன் என மொழிந்துவிட்டு இலக்கில்லாமல் சுற்றி அலைந்த ராஜேஷ் வீடு திரும்பும்போது வீடே அமைதியாக இருந்தது. சித்ரா இருக்கும் அறையை ஏற்கனவே பார்த்திருந்ததால் சத்தம் செய்யாமல், அதற்குள் நுழைந்து கதவைப் பூட்டினான்.

மெல்ல நடந்து கட்டிலை நெருங்கியவன் கண்டது, கன்னத்தில் கண்ணீர் கரையுடன் உறங்கும் சித்ராவைதான்.

அவன் உதடுகள்,

“பாப்பூ” என மெல்ல முனுமுனுத்தது. தொண்டை அடைக்க, கைகள் நடுங்க அவளது கண்ணீர் கரையை துடைத்தான். கைகளின் ஸ்பரிசத்தில் திடுக்கிட்டு எழுந்தாள் சித்ரா. மூடிய ரூமின் உள்ளே ராஜேஷை காணவும் அதிர்ந்துப் போனாள்.

“இங்க என்ன பண்ணறீங்க ராஜேஷ்? தயவு செஞ்சு வெளிய போங்க” மன்றாடினாள்.

“உன் கிட்ட பேசனும் சித்து” குரலில் ஒரு யாசிப்பு.

“இனிமே பேச ஒன்னும் இல்ல. நீங்க என் அக்கா கணவர். அந்த லிமிட்குள்ளயே நில்லுங்க”

“அக்கா கணவன்! இத கேட்கறப்ப எனக்கு எப்படி கோபம் வருது தெரியுமா சித்து? அப்படியே அவளை கொன்னுட்டு நானும் செத்துரனும்னு தோனுது! அவளாம் ஒரு பொம்பளையா? தோழின்னு நினைச்சு பாசம் காட்டனதுக்கு என் வாழ்க்கையையே நாசம் பண்ணிட்டாளே.” முகத்தை மூடிக் கொண்டு குலுங்கினான்.

“ராஜேஷ், கண்ட்ரோல் யுவர்செல்ப் ப்ளிஸ்.”

“எப்படி சித்து கண்ட்ரோல் பண்ண முடியும்? இப்படி நம்ப வச்சு கழுத்த அறுத்துட்டாளே. இத்தன வருஷமா நீதான் எனக்கு எல்லாம்னு நினைச்சு வாழ்ந்தேனே, அது இல்லைன்னு போறப்ப எனக்கு எப்படி இருக்கும்னு உனக்குப் புரியலயா? அப்பவே கூப்பிட்டேனே, நீ வந்துருந்தா இப்படி ஒரு நிலைமை நமக்கு வந்துருக்குமா?” கோபம் கொப்பளித்தது குரலில்.

அவன் முகத்தைப் பார்த்து பேச முடியாமல், அவனுக்கு முதுகைக் காட்டி நின்று கொண்டவள்,

“எப்ப கூப்டீங்க ராஜேஷ்? எங்க அக்காவோட மேட்டர முடிச்சதுக்கு அப்புறமா?” கண்ணீர் குரலில் கேட்டாள்.

“பாப்பூ!” அதிர்ச்சி அவன் குரலில்.

“இனி ஒரு தடவை அப்படி கூப்பிட்டீங்க, அப்புறம் என்னோட மறுபக்கத்த பார்க்க வேண்டி இருக்கும்”

அவளின் கோபத்தில் கூட அவனுக்கு மெல்லிய சிரிப்பு வந்தது.

அவள் முகத்தைப் பார்ப்பதற்காக அவள் முன்னே போய் நின்றவன்,

“இதப் பத்தி உன் கிட்ட சொல்லி மன்னிப்பு கேட்கதான் உள்ள வந்தேன். முதல்ல என்னால ஏத்துக்கவே முடியல நான் செஞ்ச செயல. என் கண் முன்ன வந்து நின்னது உன்னை இழந்துருவோமோன்ற பயம் தான். அதனால தான் உன் கிட்ட ஓடி போயிரலாம்னு கேட்டேன். நீ மறுத்ததும் நல்லா யோசிச்சுப் பார்த்தேன். போதையில நடந்திருந்தாலும் நான் செஞ்சது தப்பு சித்து. உனக்கும் என் காதலுக்கும் துரோகம் பண்ணிட்டேன். அதுக்கு தண்டனையா இந்த வாழ்க்கைய ஏத்துகிட்டேன். இனிமே என்னால உனக்கு எந்த தொல்லையும் வராது”

திரும்பி செல்ல போனவன், மறுபடியும் அவள் அருகில் வந்து அவள் கழுத்தைத் தடவிப் பார்த்தான்.

“யார் பண்ண வேலை இது?” சிவந்து ரத்தக்கரையுடன் இருந்த அவள் கழுத்தைப் பார்த்து கோபத்துடன் கேட்டான்.

“அது வந்து, நிலா விளையாடறப்ப கீறிட்டா” சமாளித்தாள்.

“நான் எங்க?” என கேட்க வந்த நிலாவை பார்வையால் அடக்கினாள் சித்ரா. இவ்வளவு நேரம் ரூமின் ஒரு மூலையில் படுத்தவாறு இவர்களையே கவனித்துக் கொண்டிருந்த நிலாவை அப்பொழுது தான் கவனித்தான் ராஜேஷ்.

அவள் சொன்னது காதில் விழுந்தது என்பது போல தலை அசைத்தவன், தூக்கு தண்டனை கைதி தூக்குக்கு போகும் முன் கால் வழுவிழந்து எப்படி நடப்பானோ அது போல் மெதுவாக அடி எடுத்து வைத்து வெளியேறினான். கதவை திறக்கும் முன் மீண்டும் ஒரு முறை சித்ராவை விழிகளில் நிரப்பிக் கொண்டு கண்களை இறுக மூடி, தன்னை சமன் செய்து கொண்டான்.

சித்ராவின் ரூமிலிருந்து வந்தவனைப் பார்த்து பதறி போனார் நவநீதம். அவன் அருகில் விரைந்தவர்,

“மாப்பிள்ளை, இதுக்கு முன்ன எப்படியோ, இனி நீங்க மாதியோட கணவர். எங்க சித்து கல்யாணம் ஆக வேண்டிய பொண்ணு. அவள மறந்துருங்க, விட்டுருங்க. இனியாச்சும் அவ நல்லா இருக்கட்டும்.” கண் கலங்க கையெடுத்து கும்பிட்டார்.

அவர் கைகளைப் பற்றி கொண்டவன்,

“அத்தை, இனிமே மாதி தான் என் வைப். சித்ரா பௌர்ணமி என் வைப்போட தங்கச்சி மட்டும் தான். கவலைப் படாம போய் சமைங்க.” என சொல்லியவன் ஹாலில் அமர்ந்து கொண்டான்.

பிரச்சனைகளை சமாளித்து இவர்களை நல்லபடியாக தனிக்குடித்தனம் வைத்துவிட்டு வந்தார்கள். இது எதற்குமே சித்ராவோ, பிள்ளைகளோ போகவில்லை. மாதி இல்லாத வாழ்க்கை வள்ளியைத் தவிர மற்றவர்களுக்கு நிம்மதியாகவே போனது.

அந்த நிம்மதிக்கும் ஐந்து மாதங்களிலேயே ஆப்பு வந்தது. வாழ போய் சரியாக ஐந்தாவது மாதத்தில் கையில் பெட்டி படுக்கையுடன் தனியாக வந்து நின்றாள் மாதி.

(தொடர்ந்து உன்னோடுதான்)
 

Jensi Jose

Well-known member
#8
Maadhiku song dedicate seyrenda

அடிடா அவளை.....
( மீதி லிரிக் நீ போட்டுக்க)

செம்ம கடுப்ஸ்டா

அவ கேஸை சீக்கிரம் க்ளோஸ் பண்ணு...

ஒரே இர்ரிடேட்டிஙடா

லூஸுக்கு லூஸீ வள்ளி கொடுக்கிற செல்லம் போதாதாமா ஹ்க்கும்
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top