Uyir vidum varai unnoduthaan--epi 7

SAROJINI

Author
Author
SM Exclusive Author
மண்டையைப் பிடித்துக் கொண்டான் பிரகாஷ். ஐ ஹெட் யூ எனும் வார்த்தை மட்டும் மீண்டும் மீண்டும் அவனை சுற்றி வந்தது. அந்த ராட்டினத்தின் இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டான். பொருட்களை எல்லாம் தன் மீது விட்டு வீசும் அந்த உருவம் நினைவை விட்டு அகலாமல் அவனை மிரட்டியது. ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டான்.

சிந்தனையை நெற்றிப் பொட்டிற்கு கொண்டு வந்தவன், தீபாவை அணைத்தவாறு சிரிக்கும் சித்ராவை கண் முன்னே கொண்டு வந்தான். சிமி, சிமி என அவள் பெயரை உருப்போட்டு மனதை ஒரு நிலைப்படுத்தினான். இதற்கு அவன் வைத்திருக்கும் பெயர் சிமியானம்(சிமி+தியானம்). ‘யார் நடுவுல வந்தாலும், யூ ஆர் மைன் சிமி. ஐ லவ் யூ சோ மச்.’

மெல்ல உடல் தளர்ந்து மனம் சாந்தி அடைந்தது. முகத்தில் புன்னகை உறைய கண்களைத் திறந்தான்.

பக்கத்தில் அமர்ந்திருந்த சக ராட்டின பயணி பயத்துடன் இவனைப் பார்த்திருந்தார். அவரைப் பார்த்து புன்னகைத்தவன்,

“நத்திங் டு வொரி. ஜஸ்ட் மெடிடேஷன்” என்றான். அதற்கு பிறகே தேம்ஸ் நதியின் அழகை அவனால் ரசிக்க முடிந்தது.

மறுநாள் காலை, ஹோட்டல் கிச்சனில் மாவை அடித்து துவைத்துக் கொண்டிருந்தான் சிவா. போன் பக்கதிலேயே இருந்தது. அடிக்கொரு தரம் கண்கள் போனையே பார்த்துக் கொண்டிருந்தன.

அன்று ஹாஸ்பிட்டலில் பேசியது தான் கடைசி. அதற்குப் பிறகு நிலா இவனைக் கண்டு கொள்ளவே இல்லை. இவன் அத்தனை மேசேஜ் போட்டும் எந்த ரிப்ளையும் இல்லை. மான ரோசத்தை விட்டு போன் கூட அடித்துப் பார்த்தான். காலை கட் பண்ணிவிட்டாள் அந்த ராட்சசி. அவளை மொத்துவது போல் மாவை மொத்தினான்.

‘பேசுனாலும் படுத்துறா, பேசலைனாலும் படுத்துறா. என்னை கொன்னு போடவே பிறந்திருக்கா. பேரைப் பாரு வைகாசி நிலா. வெங்காய நிலான்னு வச்சிருக்கனும்.’ முனகிக் கொண்டே கையுறை போடாமல் ஒவனை திறந்தவன் ஆவ்வ் என கைகளை இழுத்துக் கொண்டான். சுட்டுவிட்டது. பைப்பை திறந்து குளிர் நீரில் கை நனைத்தவன் மனதில் ஒரு கவிதை.

“சுட்டது ஒவன் இல்லையடி பெண்ணே

உன் பாராமுகம்தான் !”

அவன் கவிதையை நினைத்து அவனுக்கே சிரிப்பை அடக்க முடியவில்லை.

சிவந்திருந்த கையை போட்டோ எடுத்தவன், நிலாவுக்கு அப்படியே வாட்சாப்பில் அனுப்பி வைத்தான். அந்த பாழாய் போன கவிதையையும் தான். ப்ளு டிக் வருமா என ஆவலுடன் பார்த்திருந்தான். டிக்கும் வந்தது, அதனோடு சேர்த்து வீடியோ காலும் வந்தது. பட்டென முடியை கைவிட்டு சரி செய்தவன், முகத்தில் அங்கங்கு அப்பியிருந்த மாவையும் துடைத்தான். அதற்குப் பிறகு தான் காலை அட்டென்ட் செய்தான்.

எடுத்த எடுப்பிலேயே,

“என்னடா கையில? என்னாச்சு?” குரலில் அடக்கப்பட்ட பதற்றம்.

‘வாடி, வா! இத்தனை நாளு என்னை எப்படி அலைய விட்ட! இப்ப இருக்குடி உனக்கு கச்சேரி’

“ஒன்னும் இல்ல” முறுக்கிக் கொண்டான்.

“ஒழுங்கா சொல்லுறியா இல்லையா?”

“தெரிஞ்சு மட்டும் நீ என்ன செய்யப் போற? இத்தனை நாளு நான் இருக்கனா இல்ல செத்தனான்னு கவலைப்படாம இருந்த ஆள் தானே நீ?”

“இப்ப எதுக்கு பெரிய வார்த்தை எல்லாம் பேசுற? வந்தேன் அறைஞ்சிப்புடுவேன். கையில என்னன்னு கேட்டா, கடுப்பா பேசுற!”

“கையில ஒவன் சுட்டுருச்சுடி. உனக்கு சந்தோஷம் தானே?”

“கை தீஞ்சி போயிருந்தா சந்தோஷமா இருந்துருக்கும். லேசா சிவந்து தானே போயிருக்கு!” எரிச்சலில் கத்தினாள் நிலா.

சற்று நேரம் அமைதியாகவே அவள் முகத்தைப் பார்த்திருந்தான் சிவா.

“நெஜமா சந்தோஷப்படுவியாடி?” ஏக்கமான குரல்.

அவனின் அந்தக் குரலில் திடுக்கிட்டாள் நிலா.

“நீ சந்தோஷமா இருந்தா எனக்கும் சந்தோஷம் தான் வைசி”

வீடியோ காலில் இருந்தப் போனை மேசையில் செட் பண்ணினான் சிவா.

“என்னடா பண்ணுற?” ஏதோ நடக்கப் போகிறது என்ற உள்ளுணர்வில் கேட்டாள் நிலா.

“உனக்கு சந்தோசத்தை தரப் போறேன்.”

அவள் பார்த்துக் கொண்டிருக்க, அடுப்பில் பேன்கேக் பேனை எடுத்து வைத்தான்.

“சிவா” அவள் குரலில் பதட்டம்.

அடுப்பை வேகமாக எரிய விட்டான்.

“சிவா, வேணாடா. இனிமே பேசாம இருக்க மாட்டேன். இப்படிலாம் கத்த மாட்டேன். சொன்னா கேளுடா சிவா” மன்றாடினாள் நிலா.

அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே, நன்றாக சூடேறிய பேனில் தன் வலது கையை வைத்து தேய்த்தான் சிவா.

அவன் செய்த காரியத்தைக் கண்கூடாக பார்த்த நிலா,

“சிவு…………………. “ என பெருங்குரலெடுத்து கதறினாள்.

(தொடர்ந்து உன்னோடுதான்)
ennama ipdi pannitingalae
 
Sis vera level pongaaa nenga sema kadha superrr 😱😱😱😱😭😭😭😭
 
Advertisements

Top