You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.


Uyir vidum varai unnoduthaan--epi 8

vanisha

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
வணக்கம் தோழிஸ்,

இன்னிக்கு எபில ஒரு கேள்வி கேட்டிருக்கேன். மறக்காம பதில் சொல்லுங்க :LOL::LOL::LOL:

போன எபில சிவாவ பார்த்து பல பேர் பொங்கிட்டீங்க. இப்படியும் இருக்காங்க என்கிறத தாங்க சொன்னேன். மீ க்ரீன் சேண்ட். என்னை விட்டுருங்க. கத்தி கடப்பாறை, மிசின் கன்லாம் காமேன்டுல வருது. வேணாம், நான் அழுதுருவேன்.


uyir1.png


அத்தியாயம் 8

IMSI- Intracytoplasmic morphologically-selected sperm injection

இந்த முறையில் ஆணின் விந்தணு நுண்ணிய உருப்பெருக்க முறையில் தேர்தெடுக்கப் பட்டு பெண்ணின் சினைமுட்டைக்குள் செலுத்தப் படுகிறது. அதனால் கருத்தரித்தலின் வாய்ப்பு கூடுகிறது.

“ஹை! ஹை! நிலா! வா வா, வீட்டுக்குப் போலாமா?” நிலாவைப் பார்த்ததும் குதித்தாள் தீபா.

பிள்ளையைத் தூக்கி முத்தமிட்டவள், கையிலிருந்த சாக்லேட்டை அவளிடம் கொடுத்தாள்.

“சாப்பிட்டு இருடா தீபா குட்டி. நிலாக்கு முடிக்க வேண்டிய வேலை ஒன்னு இருக்கு. முடிச்சுட்டு வரேன்”

அதற்குள் சமையலறையில் இருந்து வந்தார் பத்மா.

“ஏன்டி, அதுக்குள்ள வந்துட்ட? பிள்ளை கொஞ்சம் நேரம் இங்க இருக்கட்டுமே. என்ன அவசரம்?”

பத்மாவை முறைத்தவள்,

“உங்க அருமை தொம்பி எங்க?”

“கையில ஒவன் சுட்டுருச்சாம். கிளினிக் போயிட்டு வீட்டுக்கு வந்து படுத்துருக்கான்.”

சிவாவின் அறையை நோக்கி எட்டு எடுத்து வைத்தவளை,

“எங்கடி போற? அவன் தூங்குறான், போய் டிஸ்டர்ப் பண்ணாதே. ஆம்பள பையன் ரூமுக்கு அலட்டிக்காம போறா!” நொடித்தார் பத்மா.

“தோ பத்து, பெயாம போயிரு. நான் செம்ம கோபத்துல இருக்கேன். அப்புறம் ஏடாகூடமா பேசி வச்சிர போறேன்.” திருப்பிக் கத்தியவள் சிவாவின் ரூமிற்குள் நுழைந்து கதவை மூடி பூட்டினாள்.

கட்டிலில் ஒருக்களித்துப் படுத்திருந்தவன், கதவு திறக்கும் சத்தம் கேட்டு எழுந்து அமர்ந்தான். உள்ளே வந்த நிலாவைப் பார்த்ததும் அவன் கண்கள் ஒளிர்ந்தன.

“வைசி!” ஆசையாக அழைத்தான்.

அருகில் வந்தவள், அவன் கையை இழுத்து படபடவென கட்டைப் பிரித்தாள்.

“என்னடி பண்ணுற?”

டாக்டர் போட்டிருந்த கட்டைப் பிரித்து அவனின் வலது கையை ஆராய்ந்தாள் நிலா. பல இடங்களில் சிவந்தும், கொப்பளித்தும் இருந்தது. ஏற்கனவே அழுது அழுது அவள் கண்களும் முகமும் சிவந்து போயிருந்தன. காயத்தை நேரில் பார்த்ததும் மறுபடியும் கண்கள் உடைபெடுத்தது நிலாவுக்கு. கண்ணீர் காயத்தில் படவும் ஸ்ஸ்ஸ் என முனங்கினான் சிவா.

“ரொம்ப வலிக்குதா?”

அவளை வாஞ்சையுடன் பார்த்தவன்,

“வலி மருந்து போட்டுருக்கேன். இப்ப வலிக்கல. நீ அழாதே வைசி! நல்லா போயிரும்” என்றான்.

புறங்கையால் தன் கண்ணீரை துடைத்தவள், அவன் முகத்தை நிமிர்ந்துப் பார்த்தாள்.

“ஏன்?” ஒற்றை வார்த்தை மட்டும் தான் அவள் வாயிலிருந்து வந்தது.

“நீ பேசல என் கிட்ட. என்னை தவிர்க்கிற. எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல. அதான்” சொல்லி வாய் மூடவில்லை, பளீரென அறைந்திருந்தாள் நிலா.

அவள் அறைந்த அறையில் சிவாவின் கண்ணாடி பறந்து சென்று தரையில் விழுந்தது. அதிர்ச்சியிலிருந்து அவன் மீள்வதற்குள் மறு கன்னத்திலும் அறைந்தாள். அவள் அடித்த வேகத்தில் கட்டிலில் சாய்ந்திருந்தான் சிவா. இன்னும் ஆத்திரம் அடங்காதவள் அவன் மேல் ஏறி நெஞ்சில் அமர்ந்து முடியை கொத்தாக பிடித்தாள்.

“இனி இப்படி செய்வியா? செய்வியா?” என கேட்டு கேட்டு தலை முடியைப் பிடித்து மாவாட்டுவதைப் போல் ஆட்டினாள்.

“வலிக்குது வைசி! விடுடி!” அலறினான் அவன்.

கதவின் வெளியே பத்மா வேறு,

“டேய் சிவா, என்னடா நடக்குது உள்ள? அடீ ராங்கி, கதவைத் திறடி!” படபடவென கதவைத் தட்டினார்.

எதையும் கண்டு கொள்ளாத நிலா,

“என்னடா உன் ஆம்பளத் திமிர என் கிட்ட காட்டுறியா? இமோஷனல் ப்ளேக் மேய்ல் பண்ணிப்பார்க்கறியா?” மீண்டும் ஓர் அறை.

“ப்ளெக் மேய்லாம் இல்லடா வைசி. நீ கை தீஞ்சி போன நல்லா இருக்கும்னு சொல்லவும் எனக்கு என்ன ஆச்சுன்னே தெரியல. ஒரு விதமான வெறுமை, யோசிக்காம செஞ்சிட்டேன். இனி இப்படி செய்ய மாட்டேன். மன்னிச்சிருடா! நீ கதறனதும் தான் நான் செஞ்ச காரியத்தோட வீரியத்த புரிஞ்சுகிட்டேன். சாரி வைசி.” அவள் கையைப் பிடித்துக் கொண்டான்.
 

vanisha

SM Exclusive
Author
SM Exclusive Author
#2
“உனக்கு இந்த விஷயம் சாதாரணமா போச்சுல சிவா? உனக்கு மட்டும் இல்ல, பல பேருக்கு இந்த இமோஷனல் ப்ளக்மெயில் சர்வ சாதாரணமா போச்சு. தனிக்குடுத்தனம் வராட்டினா தற்கொலை பண்ணிக்குவேன்னு பொண்டாட்டி மிரட்டறதும், உங்க அம்மா வீட்டுக்குப் போனா வர வரைக்கும் பட்டினியா இருப்பேன்னு புருஷன் மிரட்டறதும், புது போன் வாங்கி தரலனா பரீட்சையில பெயில் ஆகிருவேன்னு புள்ளையும் பயப்படாம அந்த ஆயுதத்தைக் கையில் எடுக்கறாங்க. தீ அதர் பார்ட்டியும் அதே மாதிரி மிரட்டுனா என்ன ஆகும் தெரியுமா? பார்க்கறியா?”

தன் ஜீன்ஸ் பாக்கேட்டில் இருந்து இதற்காகவே எடுத்து வந்திருந்த லைட்டரை எடுத்தவள், அவன் சுதாகரித்துத் தடுக்கும் முன் தன் உள்ளங்கையைப் பொசுக்கி இருந்தாள்.

“வைசி!” அலறிவிட்டான் சிவா. பட்டென அவள் கையிலிருந்த லைட்டரைப் பறித்தவன், அதைத் தூக்கி மூலையில் எறிந்திருந்தான். கொஞ்சம் கூட பதறாது, வலியை முகத்தில் காட்டாது அவன் மேலேயே அமர்ந்திருந்தாள் நிலா.

“என்னடி இப்படி பண்ணிட்ட? நான் தெரிஞ்சு பண்ணல வைசி. என்னை என்ன வேணும்னாலும் செய்டா, நான் தாங்கிக்குவேன். உன்னை வருத்திக்காத. என்னால தாங்க முடியாது. “ அவன் கண்களிலும் குரலிலும் கண்ணீர்.

“கையைக் குடுடி, பார்க்கறேன்”

“தேவையில்லை”

“வைசி! சொன்னா கேளு. கையைக் குடு” என வலுக்கட்டாயமாக கையை இழுத்துப் பார்த்தான். உள்ளங்கையில் வட்டமாக பொசுங்கி இருந்தது.

“என் மேல இருந்து இறங்கு. என்னோட க்ரீம் இருக்கு பூசி விடறேன்.” அவனுக்கு தாங்கவே இல்லை.

“முடியாது”

வெளியே இன்னும் கதவு தட்டப் பட்டுக் கொண்டிருந்தது. பெரிய தட்டும், சின்ன தட்டும். பத்மாவோடு சேர்ந்து தீபாவும் தட்டிக் கொண்டிருந்தாள்.

“நிலா! நீயும் சிவாப்பாவும் மட்டும் வெளாடறீங்களா? நானும் வரேன் வெளாட! கதவ தொற”

“அடியே அழுக்குமூட்டை! கதவ திறடி”

அந்தக் கலவரத்திலும் பத்மாவுக்கு திருப்பி குடுக்க தவறவில்லை நிலா.

“யாரு அழுக்குமூட்டை? நீங்கதான் அழுக்குமூட்டை, புண்ணாக்கு மூட்டை, அப்புறம் புழுகுமூட்டை எல்லாம்”

சிவாவிற்கு ஒரு பக்கம் சிரிப்பு. அவன் குமட்டிலேயே குத்தியவள்,

“என்ன இளிப்பு? அக்காவுக்கும் தம்பிக்கும் நான் என்னிக்குமே தக்காளி தொக்குதான். “ கத்தினாள்.

“இல்லடி வைசி! நீ என்னிக்குமே எனக்கு வெண்ணையில செஞ்ச ப்ளுபேரி கேக், தேன் தடவிய டோனட், கஸ்டர்ட் கலந்த பப்(puff)” ரசித்து சொன்னான்.

“அடச்சீ! நீ ஒரு பேக்கிங் பண்ணுற பேக்குன்னு நிருபிச்சிட்டடா! வர்ணிக்கிறான் பாரு கேக்கு, டோனட்டுன்னு. கர்மம்” கடுப்பானாள் நிலா.

அதற்குள் மாற்று சாவிப் போட்டு கதவைத் திறந்திருந்தார் பத்மா. படுத்திருக்கும் தம்பியின் நெஞ்சில் அமர்ந்திருந்த நிலாவைக் கண்டதும் அவருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அவருக்கு முன்னே உள்ளே ஓடி வந்த தீபா,

“நானும் நானும்!” என கட்டிலின் மேல் ஏறி சிவாவின் வயிற்றில் அமர்ந்து கொண்டாள்.

“ரயிலோடுது, ரயிலோடுது! பீம் பீம்! “ என கத்திக் கொண்டே அவன் மேல் எகிறி எகிறி குதித்தாள்.

“என்னை விட்டுரு தீபா! நான் சாப்பிட்டதெல்லாம் வெளிய வர போகுது” என அவன் அலறும் வரை அவள் விடவில்லை. இந்தக் கூத்துக்கு நடுவிலும் அவன் நெஞ்சில் இருந்து நிலா இறங்கவே இல்லை.

“ஏன்டி மகாராணி! பல்லக்குல இருந்து இறங்க முடியலையா? உனக்கு இன்னும் சின்ன பிள்ளைன்னு நினைப்பா? அவன் மேல ஏறி உக்காந்துருக்க? மாடு மாறி வளர்ந்துருக்க, அறிவு மட்டும் புல் மேய போயிருச்சு” திட்டினாள் பத்மா.

பதிலுக்கு பதில் கொடுக்காமல் அமைதியாகவே அமர்ந்திருந்தாள் நிலா. சின்ன பிள்ளையிலிருந்தே அவளும் மணியும், சிவாவுடன் இப்படி தான் விளையாடுவார்கள். தீபாவையும் , நிலாவையும் கட்டிலுக்கு மறுபுறம் தள்ளி எழுந்தவன், தீபாவைத் தூக்கி அக்காவிடம் கொடுத்தான்.

“சாப்பாடு குடுக்கா. நாங்க வரோம்” அனுப்பி வைத்தான் அவர்களை. பின் கிரிமை எடுத்தவன், நிலாவின் உள்ளங்கையில் மென்மையாக பூசிவிட்டான்.

“வலிக்குதா?”

“பரம சுகமா இருக்கு”

“ப்ச்ச்! வைசி இனிமே இந்த மாதிரி முட்டாள்தனமான வேலை எல்லாம் செய்யாத” குரலில் கண்டிப்பு.

“அத இன்னொரு முட்டாள் சொல்லக்கூடாது”

“சரி , நான் முட்டாள்தான். இருந்துட்டுப் போறேன். இந்தா க்ரீம். வீட்டுக்கு எடுத்துட்டுப் போய் போட்டுக்க”

தூக்கி அவன் மேலேயே விட்டடித்தவள்,

“உன் அக்கறை எனக்கு தேவையில்ல. உன் காதல் மட்டும் தான் வேணும். அதைக் குடுக்க முடியாதுல்ல, அப்புறம் எதுக்கு இந்த சீன்?” அவன் கண் பார்த்து கத்தினாள்.

அவன் தலை குனியவும், ஆத்திரத்துடன் அவனை இறுக்கமாக கட்டிக் கொண்டவள்,

“சீ போடா!” என விலகி நடந்தாள்.

தீபாவை தேடி சமயலறைக்கு சென்றவள்,

“தீபா செல்லம், நீ வாடா இன்னிக்கு நாம பாய் கடை பிரியாணி சாப்பிடலாம். “ என அழைத்தாள். அவள் பின்னாலயே சிவாவும் வந்திருந்தான்.

“எனக்கு பியாணி வேணாம். சோ ஸ்பைசி. நாக்கு அரிக்கும். முட்டை பரோட்டா வாங்கி தரியா?”

“சரி வா, வாங்கி தரேன். “

“நிலா! பிச்சி, பிச்சி ப்ளேட்டுல தா. நானே மைசெல்ப் சாப்புடுவேன்”

“ரோட்டு கடை சாப்பாடுலாம் வேணாம். தீபாக்கு வெஜிடேபள்லாம் போட்டு பத்மாம்மா கூட்டு செஞ்சிருக்கேன். சாதம் குழைச்சி உனக்கு பிடிச்ச மாதிரி செஞ்சு வச்சிருக்கேன். இங்கேயே சாப்பிடுவீங்களாம்” தீபாவை கொஞ்சினார் பத்மா.

“நான் விட்ட அறையில உங்க தம்பிக்கு தான் பல்லு கொட்டிருக்கும். குழைஞ்ச சாதத்த அவனுக்கே போடுங்க” முனுமுனுத்தவள் தீபாவை எழுப்பி தூக்கிக் கொண்டாள்.

“மணி அப்புறமா வந்து தீபா பேக் வாங்கிக்குவான். நாங்க கிளம்பறோம்” நடக்க தொடங்கி விட்டாள்.

“பத்தும்மா, உங்கள்கு பியாணி வேணுமா? நான் வாங்கியாரவா?” கேட்டுக் கொண்டே கையாட்டினாள் தீபா.

“பரவாயில்லடா குட்டி. நீ சமத்தா சாப்புடு. அடியே நிலா, புள்ளைக்கு நல்லா மென்னு முழுங்க தெரியாது. சின்னதா பிச்சி குடு. நீ பாட்டுக்கு தீனிய முழிங்கிட்டு அவள கவனிக்காம இருக்காத”

திரும்பி நின்று அவரை முறைத்தவள்,

“அதெல்லாம் நாங்க நல்லாவே பாத்துக்குவோம். நீங்க உங்க அருமை தொம்பிய கவனிங்க.” என்றவள், புன்னகையுடன் நின்றிருந்த சிவாவை ஒரு வெட்டும் பார்வைப் பார்த்து விட்டு வெளியேறினாள்.

‘இவ சமாதானம் ஆயிட்டாளா இல்லையா? முறைபொண்ணு மாதிரி முறைச்சிகிட்டே போறாளே!’ பெருமூச்சு அவனிடம்.

“உடம்பு முழுக்க திமிரு. மாமியாரு கையால மொத்து வாங்குனா தான் அடங்குவா” அவளை வைதவாறே சமையலறைக்குள் சென்றார் பத்மா.

டைனிங் டேபிளில் அமர்ந்த சிவா,

“நீ ஏன்கா அவளை கரிச்சுக் கொட்டிட்டே இருக்க? நாம பார்க்க வளர்ந்தவ தானே, நல்லதா நாலு வார்த்தை சொல்லக் கூடாதா?” குரலில் ஏகப்பட்ட எரிச்சல்.

“ஆமாடா, எல்லாம் அவள தலையில தூக்கி வச்சு ஆடுங்க. அதான் இப்படி ஆம்பளை மாதிரி
 

vanisha

SM Exclusive
Author
SM Exclusive Author
#3
உடுத்திக்கிட்டு திரியறா. நான் ஒருத்தி கண்டிச்சு வைக்காட்டி இன்னும் தான்தோன்றியா சுத்துவா!”

தட்டில் சாதத்தைப் போட்டுப் பிசைந்தவர்,

“வாய தொறடா, நான் ஊட்டுறேன். வேலை செய்யறவன், கொஞ்சம் கவனமா இருக்க மாட்டியா? இப்படி சுட்டுக் கிட்டு வந்து நிக்கிற.”

திட்டியபடியே ஊட்டினான்.

“தீபா வந்ததுல இருந்து நீ எனக்கு ஊட்டியே விடறதுல்லக்கா” செல்லம் கொஞ்சினான். போலியாக முறைத்தவர்,

“ஆமாடா, நீ இன்னும் பல்லில்லாத பாப்பா, மடியில போட்டு ஊட்டுறாங்க! சின்ன புள்ளைய பார்த்து பொறாமைப்படறான்! ஏன்டா சிவா, நீ இன்னும் பச்சை புள்ளையாடா? அந்த நிலா தான் மேல ஏறி விளையாடுறானா, உனக்கு மூளை எங்கடா போச்சு? வயசுக்கு வந்த புள்ளடா அவ. அடுத்த வீட்டுல போய் வாழ வேண்டியவ. தள்ளி நிறுத்தி பழகு” அவர் சொன்ன அடுத்த வீட்டில் வாழ போகிறவ என்ற சொல் கேட்டு புரை ஏறியது அவனுக்கு. தண்ணீரை அவனுக்கு புகட்டிய பத்மா,

“மெதுவா சாப்பிடுடா. தீபாவ விட சின்ன புள்ளையா நடந்துக்கற” என திட்டினார்.

“அக்கா, எதுக்கெடுத்தாலும் தீபாதானா? அவ அம்மாவ விட நீ தான் அவள ரொம்ப நினைக்கற போல இருக்கு”

கண்ணில் பொசுக்கென கண்ணீர் வந்து விட்டது பத்மாவுக்கு.

“எனக்குன்னு வேற யாருடா இருக்கா? புள்ளையா குட்டியா? பட்ட மரம் தானே நானு. இந்த பட்ட மரத்துக்கு தண்ணி விட்டவ தீபாக்குட்டி. அவள பத்தி பேசாம வேற யார பத்தி பேசுவேன் சொல்லு?” தேம்பினார்.

“அழாதக்கா! நீ அழுதா என்னால தாங்க முடியாது. கண்ண துடை. இனிமே ஒன்னும் பேச மாட்டேன். சரியா? எங்க சிரி பார்ப்போம்” என அக்காவை சமாதானப் படுத்தினான் அவன்.

கம்ப்யூட்டர் முன்னே அமர்ந்திருந்த சித்ரா, மார்கேட் நிலவரத்தைப் பார்த்து குறிப்பெடுத்துக் கொண்டிருந்தாள். ஆபிஸ் மெசெஞ்சர் சத்தம் கொடுத்து மெசேஜ் வந்திருப்பதை அறிவித்தது.

“கம் டு மை கேபின்” தட்டி அனுப்பி இருந்தான் ஜோன்.

“கமிங்” ரிப்ளை போட்டவள் அவனது கேபினுக்கு நடந்தாள். அங்கே எல்லாமே ஒபென் ஸ்பேஸ் தான். தனி தனி இருப்பிடங்கள் இருந்தாலும், எல்லோரும் சரி சமம் என்பது போல எல்லோருக்கும் ஒரே மாதிரி கேபின். இங்கே பேசுவது அங்கே கேட்கும். அதாவது ஜனகு ஒருத்தரை திட்டுவது அந்த ப்ளோரில் உள்ள அனைவருக்கும் தெரியும்.

‘இன்னேரம் ஈமெயில் படிச்சிருப்பான். அதுக்குத்தான் கூப்பிட்டுருக்கான் போல.’ லேசாக பயந்தப் படியே சென்றாள். பக்கத்து சீட் பானு தம்ப்ஸ் ஆப் காட்டி வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டாள்.

கேபினுக்கு வந்தவளை,

“உட்காரு சித்ரா” என்றான்.

அமர்ந்த உடனே,

“நீ என்ன நினைச்சிட்டு இருக்க சித்ரா?” சத்தமாக சிடுசிடுத்தான்.

‘சத்தியமா உன்னை நினைக்கலடா ஜனகு. இவன் கத்துற கத்துல மத்தவங்க எல்லாம் இன்னேரம் காத தீட்டிக்கிட்டி உட்கார்ந்துருக்குங்க. போன மாசம் எனக்கு பெஸ்ட் பெர்போர்மர் அவார்ட் கிடச்ச காண்டுல இருக்குங்க. இப்ப காதும், மனசும் குளிர்ந்துரும் எல்லாருக்கும்.’

“நீ வேணும்னா வச்சிக்கறதுக்கும் வேணான்னா தூக்கிப் போடறதுக்கும் இவங்க எல்லாம் உன் பாய்பிரண்ட்ஸ் இல்ல கிளையண்ட்ஸ். சர்வ சாதாரணமா மிஸ்டர் பிரகாஷ் அக்கவுன்ட்ல இருந்து விலகிக்கறேன்னு மெயில் போட்டுருக்க! இங்க கிளையண்ட்ஸ்ச நாங்க தான் அசைன் பண்ணுவோம். எதுவும் உங்க இஸ்டம் இல்ல. புரியுதா?”

‘புரியலைனா மட்டும் விட்டுறுவியா? எப்படியும் என் காதுல ரத்தம் வர வரைக்கும் விளக்க தான் போற’ பொருமினாள்.

“இருந்தாலும் என் பெஸ்ட் எம்ப்லோயி ஆச்சே, உனக்காக ஒரு ட்ரை பண்ணி பார்த்தேன். மிஸ்டர் பிரகாஷ் கிட்ட கேட்டுப் பார்த்தேன். அவர் ஷாக் ஆயிட்டாரு. உனக்கு ரொம்ப ஸ்ட்ரெஸ் குடுத்துட்டமோன்னு ரொம்ப பீல் பண்ணாரு. ஹீ லைக்ஸ் யுவர் டெடிகேஷன். ஹீ டொன்ட் வான்ட் டு லூஸ் யூ சித்ரா. இப்படி பட்ட ஜெம் ஆப் அ கிளையண்ட் நம்ப பேங்க்கு கிடைச்சது நாம செஞ்ச புண்ணியம்”

‘போச்சா! நீ ஏன்டா அவன் கிட்ட போய் சொன்ன? வேற அக்கவுன்ட் மேனஜர் மாத்திட்டோம்னு சொல்லி மேட்டர முடிக்க வேண்டியது தானே. என் பேர யாரு இழுத்து விட சொன்னது. இந்த ப்ரௌனி சும்மாவே காலுல சலங்கை கட்டுன மாதிரி குதிப்பான். இன்னும் என்னை என்ன டார்ச்சர் பண்ண போறானோ? நீ நல்லா இருடா ஜனகு’

“உன் கிட்ட பேசனும்னு சொன்னாரு பிரகாஷ். நெக்ஸ்ட் பில்டிங்ல இருக்கற கபேல வேய்ட் பண்ணுறாரு. போய் பார்த்து , பேசிட்டு , மன்னிப்பு கேட்டுட்டு வா”

‘மன்னிப்பு எனக்கு தமிழ்லயே பிடிக்காத ஒரு வார்த்தைடா! இரு இரு, மன்னிப்புன்றதே தமிழ் வார்த்தை இல்லையாமே, உருதுன்னு சொல்லிக்கிறாங்க. ஆமா இந்த ஆராய்ச்சி இப்ப ரொம்ப முக்கியம்’

“க்வீக், கெட் மூவிங்”

‘நீ எனக்கு மேனஜரா இல்ல மாமாவான்னு அடிக்கடி சந்தேகம் வருதுடா! கூப்டு வச்சு ஒரு வார்த்தை பேச விடல. எல்லாம் என் நேரம்’

“ஒகே ஜோன்” இருப்பிடத்திற்கு வந்து கைப்பையை எடுத்தாள் சித்ரா.

“என்ன சித்து, கிளையண்ட் மீட்டிங்கா?” கண்ணடித்தாள் பானு.

“அதான் மேனஜர் என்ன டேமெஜ் பண்ணது தெளிவா காதுல விழுந்துச்சுல, அப்புறம் என்ன கேள்வி?”எரிந்து விழுந்தாள்.

“இல்ல, திரும்பி வரும் போது அந்த கபேல எனக்கு சாக்லட் மப்பின் வாங்கிட்டு வரியா?”

“வாங்கி வந்து தொலைக்கறேன்” விடு விடுவென நடந்தாள்.

சித்ரா கபேயில் நுழையும் போது மணி மூன்று ஆகி இருந்தது. அவள் இன்னும் லன்ச் கூட
 

vanisha

SM Exclusive
Author
SM Exclusive Author
#4
சாப்பிடவில்லை. அங்கிருந்து வந்த உணவின் வாசனை அவள் நாசி வழி நுழைந்து, அவள் வயிற்றை நாக்கமுக்கா டான்ஸ் ஆட வைத்தது.

சுற்றிலும் பார்வையை சுழற்றினாள் சித்ரா. கவுண்டருக்கு பின்னே கொஞ்சம் மறைவாக இருந்த மேசையில் அமர்ந்து மெனுவை புரட்டிக் கொண்டிருந்தான் பிரகாஷ். நீல கலரில் பெர்முடாசும், ஆளை அடிக்கும் மஞ்சள் கலரில் காலர் வைத்த டீசர்டும் போட்டிருந்தான்.

‘போட்டுருக்கற கலர பாரு. அடிக்கற வெயிலுக்கு, மரியாத்தா மஞ்சள் கலருல ஒரு டீ சர்ட். என் கண்ணு அவியாம இருந்தா சரி’ என மனதில் அவனை வறுத்துக் கொண்டே அவன் எதிரில் அமர்ந்தாள்.

அவளை பிரகாஷ் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. மெனுவிலேயே கண்ணைப் பதித்திருந்தான். தொண்டையைக் கணைத்தாள் அவள். அதற்கும் எந்த ரியாக்சனும் இல்லை.

‘நாம அக்சன் எடுத்தா தான் அவன் கிட்ட இருந்து ரியாக்சன் வரும்’

“சார் !” அமைதி.

“பிரகாஷ்!” நிமிர்ந்து முறைத்தவனின் கண்கள் சிவந்து போய் இருந்தன.

‘இவன் ஒருத்தன்! அடிக்கடி, விஜய்காந்து சித்தப்பா மகன் மாதிரி கண்ணுல கலர காட்டுவான். ஏன், நீ மட்டும் தான் முறைப்பியா? நானும் கண்ணு வச்சிருக்கேன், நானும் முறைப்பேன்’

இவளும் தன் கோழி முட்டைக் கண்களை உருட்டி அவனை முறைத்தாள்.

அவள் பார்த்துக் கொண்டே இருக்க, அவனின் கண் சிவப்பு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து அதில் சிரிப்பு குடி கொண்டது.

‘அப்பாடா, மலை இறங்கிட்டான் போல’

“சிமி!” குரலில் குழைவு.

“தும்ஹாரி பொஹத் யாத் ஆ ரஹி தீ (உன் நினைப்பாவே இருந்துச்சு)”

‘தீ? ப்ரௌனி, இப்ப ஒத்துக்கறேன் நீ தீ தான்னு. விலகி போனாலும் மீண்டும் இழுத்துக்கறியே’

“தமிழ் ப்ளிஸ்”

“நான் தமிழ் பேசுறப்ப, நீ ஹிந்தி கொஞ்சம் கத்துக்க கூடாதா சிமி?”

“ஏக் மார் தோ துக்டா வரைக்கும் தெரியும். அது போதும் எனக்கு”

அவள் சொன்ன விதத்தில் கண்ணில் நீர் வர சிரித்தான் பிரகாஷ்.

‘இது அவ்ளோ பெரிய ஜோக் ஒன்னும் இல்லையே!’ சிரிக்கும் அவனையே கண் கொட்டாமல் பார்த்திருந்தாள் சிமி.

‘சிரிச்சா பார்க்க நல்லாதான்டா இருக்க கப்பூரு! ஆனா பாரு , உன்னை சிரிக்க வுட்டு பார்த்துட்டு இருந்தா என் வேலையெல்லாம் யாரு செய்வா?’

“எதுக்கு என்ன பார்க்கனும்னு சொன்னீங்களாம்?”

“முதல்ல சாப்பாடு ஆர்டர் பண்ணு சிமி. முகத்த பார்த்தாலே பசில இருக்கேன்னு தெரியுது” கரிசனையுடன் சொன்னான். அவனிடம் வம்பு வளர்க்காமல், உணவை ஆர்டர் செய்து சாப்பிட்டாள் சித்ரா. இருவரும் சாப்பிட்டு முடித்தவுடன், காபி வந்தது.

“கேக் சாப்படறியா சிமி?”

‘ஆசையா தான் இருக்கு. ஆனா இன்னிக்கு கலோரி லிமிட்ட தாண்டிட்டனே. ஹ்ம்ம் பரவாயில்ல, சாப்பிடுவோம். தீபா பின்னால எக்ஸ்ட்ரா ரெண்டு ரவுண்டு ஓடுனா கரைஞ்சிற போது’ தன்னையே சமாதானம் செய்து கொண்டவள்,

“வை நோட்” என்றாள்.

அவன் முகத்தில் மெல்லிய சிரிப்பு.

‘தீனி பண்டாரம்னு நினைக்கறானோ? ஊ கேர்ஸ்’

கேக்கை துளிதுளியாக ரசித்து உண்டாள் சித்ரா. அவனது கேக்கை சாப்பிடாமல் அவளையே பார்த்திருந்தான் பிரகாஷ். நிமிர்ந்து அவனை நோக்கியவளை,

“இன்னும் வேணுமா சிமி?” என கரகரப்பான குரலில் கேட்டான்.

‘கேக் தானே சாப்பிடறான், ஐஸ் கிரீம் சாப்பிட்ட மாதிரி இருக்கு இவனோட குரல்’

“இட்ஸ் ஓகே.” மறுத்தவள் வாயை நேப்கினில் துடைத்தவாறே நாற்காலியை இன்னும் உள்ளே நகர்த்தி அமர்ந்தாள். (எதற்காக அப்படி செய்தாள் என யூகிக்க முடிந்தவர்கள் கமேண்டில் வந்து கமேண்டவும்)

“சரி இப்ப சொல்லுங்க சார்”

“நீ ஏன் சிமி என் அக்கவுண்ட்ல இருந்து விலகிக்க பார்க்கறியாம்? ஐ நீட் அன்ஸ்சர்”

“நான் ஏற்கனெவே சொன்னது தான் சார். நீங்க லிமிட்ட தாண்டி வரீங்க. அது எனக்கு பிடிக்கல. அதனால தான் ஒதுங்கிக்க நினைச்சேன். இப்ப அது கூட நடக்கல”

“எப்ப எனக்கு கீழ வந்துட்டியோ, அதுக்குப் பிறகு அந்த ஆண்டவனே நினைச்சாலும் உன்னால விலக முடியாது தெரியுமா சிமி?”

“என்ன சொல்ல வரீங்க?”

“ஐ மீன் எப்ப நீ என் பேங்கிங் நீட்ஸ் பார்த்துக்க ஆரம்பிச்சயோ, இப்படி பாதியிலயே போக முடியாதுன்னு சொல்ல வந்தேன். போகவும் விட மாட்டேன்”

அவன் குரலில் இருந்த அழுத்தத்தில் அவன் கண்களை கூர்ந்து கவனித்தாள்.

‘அடேய்! கண்ணு முழிகூட ப்ரௌனா இருக்குடா உனக்கு!’

“சரி போக மாட்டேன். ஆனா நீங்களும் இப்படி என் கிட்ட ரொம்ப உரிமை எடுத்துக்க கூடாது. பீ ப்ரோபஷனல். டீலா?”

“என்ன சிமி நீ? சும்மா உன்னை விளையாட்டுக்கு சீண்டனதெல்லாம் சீரியசா எடுத்துக்கற? இட்ஸ் ஜஸ்ட் பார் பன்(just for fun) என்னோட அழகுக்கும் அந்தஸ்துக்கும் உன்ன போய் திரும்பி பார்ப்பனா?” குறி பார்த்து அடித்தான். கிளி அப்படியே விழுந்தது.

தன் தோற்றத்தைப் பற்றி எப்போழுதும் ஒரு தாழ்வு மனப்பான்மையிலேயே உழண்டு கொண்டிருக்கும் சித்ராவுக்கு அவன் கூறியதை கேட்டதும் கோபம் வரவில்லை, நிம்மதி தான் வந்தது.

“இனிமே இந்த மாதிரி சில்லியா பிஹேவ் பண்ணாதீங்க சார். நான் ரொம்பவே பயந்துட்டேன்.” சந்தோஷமாக சிரித்தாள் அவள்.

‘என் மனச வெளிப்படுத்தி காதலோட உன்னை கரம் பிடிக்கனும்னு நினைச்சேன் சிமி. அத தான் ஜாடை மாடையா சொல்லி பர்ர்த்தேன். ரொமாண்டிக்கா நடக்க ட்ரை பண்ணேன். நீ மசியறதா தெரியலை. இனி அதிரடி தான். காதலிச்சு கல்யாணம் பண்ணா என்ன, இல்ல கல்யாணம் பண்ணி காதலிச்சா தான் என்ன? எப்படி பண்ணாலும் அடுத்த பத்தாம் மாசம் நீ அம்மா, நான் பிதாஜி(அப்பா). அபி தோ கேல் ஷீரு ஹீயீ ஹை( தே கேம் ஸ்டார்ட்ஸ் நவ் !)

(தொடர்ந்து உன்னோடுதான்)
 

Vijayasanthi

Well-known member
#6
ஹா ஹா...சிஸ்டர் முடியல....ஒரு பொண்ணோட சாதாரண வாழ்கைல நடக்ற மாதிரி ரொம்ப எதார்த்தமா எழுதிருக்றிங்க....நிலா காதலை சொல்லியும் சிவா மனசில சித்ரா தான் இருக்கிறாளா???நிலாவின் அதிரடி அமர்களமா இருந்துச்சு..தீபாவின் ரயிலோடுது ரயிலோடுது பீம் பீம் சூப்பர்......அக்கா தம்பி பாசம் அருமை....சிம யின் மைன்ட் வாய்ஸ் டாப்டக்கர்..அதுவும் விஜயகாந்த்தின் சித்தப்பா மகன் செம்ம....நம்ம பிரௌனி அதிரடில இறங்கிட்டான் சூப்பர்...சேரை நகர்த்தியதற்கு காரணம் எங்க நம்ம வாய்ல உள்ள கேக்கை பிரௌனி தொடச்சிருவானோனு ஒரு பயம்னு நான் நினைக்கிறேன்...வழக்கம் போல் அசத்தல் எப்பி..வாழ்துக்கள்...
 

Sindu_rr

Well-known member
#9
“யாரு அழுக்குமூட்டை? நீங்கதான் அழுக்குமூட்டை, புண்ணாக்கு மூட்டை, அப்புறம் புழுகுமூட்டை எல்லாம்”
:):):)

‘போட்டுருக்கற கலர பாரு. அடிக்கற வெயிலுக்கு, மரியாத்தா மஞ்சள் கலருல ஒரு டீ சர்ட். என் கண்ணு அவியாம இருந்தா சரி’
:love::love::love:

‘என் மனச வெளிப்படுத்தி காதலோட உன்னை கரம் பிடிக்கனும்னு நினைச்சேன் சிமி. அத தான் ஜாடை மாடையா சொல்லி பர்ர்த்தேன். ரொமாண்டிக்கா நடக்க ட்ரை பண்ணேன். நீ மசியறதா தெரியலை. இனி அதிரடி தான். காதலிச்சு கல்யாணம் பண்ணா என்ன, இல்ல கல்யாணம் பண்ணி காதலிச்சா தான் என்ன? எப்படி பண்ணாலும் அடுத்த பத்தாம் மாசம் நீ அம்மா, நான் பிதாஜி(அப்பா). அபி தோ கேல் ஷீரு ஹீயீ ஹை( தே கேம் ஸ்டார்ட்ஸ் நவ் !)
This is mind voice or pottu udaichittaana kapoorru.....????o_Oo_Oo_O

பத்துவிற்கு சிவா - நிலா பத்தி தெரியுமா????
தீபாவை விட முடியாமல் தான் சிமியை தன் தம்பிக்கு கல்யாணம் பண்ண எண்ணுகிறாளா ????

As usual nice and rocking update
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top