Uyir vidum varai unnoduthaan -- epi 9

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#61
தினமும் உழைத்துக் களைத்து வரும் தன் இரு அக்காக்களும் அவன் கண் முன்னே வந்து போனார்கள். அந்த துக்கத் தினத்தன்று தன்னை கட்டிப் பிடித்து, நான் இருக்கேன்டா இந்த குடும்பத்துக்கு என தன் கண்ணீரையும் மறந்து தாயாய் அரவணைத்த சித்ராக்கா ஞாபகத்துக்கு வந்தாள். அவன் கையைப் பற்றிக் கொண்டே கண்ணீர் விட்ட நிலா நினைவுக்கு வந்தாள்.

‘நான் முன்னேறுனா தான் அவங்க நல்லா இருப்பாங்க. என் மனச சிதற விடக்கூடாது’ அழுத்தமான முடிவெடுத்தான் மணி.

“ரொம்ப தேங்க்ஸ் ஜீஜூ. தக்க சமயத்துல நீங்க குடுத்த அட்வைசை நான் எப்பவுமே மறக்க மாட்டேன். “ உணர்ச்சி வசத்தால் பிரகாஷின் கையை இறுகப் பற்றி கொண்டான் மணி.

“இதுக்கெதுக்கு நன்றிலாம் மணி ! இந்த பூமில ப்ரீய கிடைக்கறது அட்வைஸ் ஒன்னுதான். எந்த நேரத்துல உனக்கு மனச விட்டு காய்ஸ் டோல்க் வேணும்னாலும் யூ கென் கால் மீ.” தனது பிஸ்னஸ் கார்டை எடுத்துக் கொடுத்தான்.

“கண்டிப்பா கால் பண்ணுவேன்” சிரித்தான் மணி.

“சரி சொல்லு, நாளைக்கு கவிகிட்ட என்ன சொல்ல போற?”

“மேய்பீன்னு சொல்லப் போறேன்”

பெரிதாக நகைத்தான் பிரகாஷ்.

“ஸ்மார்ட் காய்! அதையே சொல்லு. நோ சொல்லி ஏதாச்சும் பண்ணிக்க போறா. மேய்பீ சொல்லி, படிச்சு முடிக்கற வரைக்கும் டைம் கேளு. உனக்கா சொல்லுக் குடுக்கணும்! கண்டிப்பா சமாளிச்சிருவடா நீ” முகம் முழுக்க புன்னகை பிரகாஷுக்கு.

சாப்பிட்டு புறப்படும் நேரத்தில், பிரகாஷை இறுக அணைத்துக் கொண்டான் மணி.

“தேங்க்ஸ் அகேய்ன்”

“பாரேன் மறுபடியும் நன்றி சொல்லுற! இதுக்கு தண்டனையா உன்னை வீட்டுல நான் தான் ட்ராப் பண்ணுவேன்” வேண்டாமென பிகுவெல்லாம் செய்யவில்லை மணி.

“எப்படியும் நான் வாங்கன பொருட்களையெல்லாம் எடுத்துப் போக ஆட்டோ தான் பிடிக்கனும். அதனால உங்க ஆஃபர நான் ஏத்துக்கறேன்” என ஒத்துக் கொண்டான்.

பொதுவாக மற்ற விஷயங்களைப் பேசியவாறே வீட்டை அடைந்தனர்.

“வீட்டுக்கு வாங்க ஜீஜு. இப்ப யாரும் இருக்க மாட்டாங்க. “

‘சிமி இல்லாம உள்ள வந்து நான் என்னடா செய்யறது?’ குறும்பாக நினைத்தவன் மணியுடன் உள்ளே நுழைந்தான்.

சின்ன வீடாக இருந்தாலும் சுத்தமாக அழகாக இருந்தது. தீபாவின் விளையாட்டுப் பொருட்கள் மட்டும் அங்கங்கு கிடந்தன. நாற்காலியில் அமர்ந்தவன், சுவற்றில் மாட்டப் பட்டிருந்த குடும்பப் படங்களை பார்வையிட்டான். அனைத்துப் போட்டோக்களிலும் தீபாவுடன் இவர்கள் மூவர் மட்டுமே இருந்தனர். அம்மா, அப்பா போன்ற பெரியவர்கள் படம் எங்கும் தென்படவில்லை.

தீபா கைக்குழந்தையாக இருந்த படங்களில், சிமி இன்னும் கொளுக் மொளுக்கென இருந்தாள்.

‘அரே மேரி ப்யாரி மோட்டி(என் செல்ல குண்டம்மா)’ என சித்ராவை மனதிலே கொஞ்சிக் கொண்டான் அவன்.

சமையலறையிலிருந்து ஒரு டம்ளர் தண்ணீருடன் வந்த மணி,

“குடிங்க ஜீஜு. நான் போய் முகம் கழுவிட்டு வரேன்” என உள்ளே சென்று விட்டான்.

‘சொந்த வீட்டுல என்னை தனியா விட்டுட்டு பாத்ரூம் போகற அளவுக்கு என் மேல நம்பிக்கை வந்துருச்சு என் மச்சானுக்கு. இந்த ராஜா, ராணிய பிடிக்கறதுக்கு முதல் தடையான மந்திரிய(மணி) சாய்ச்சுட்டேன். இன்னும் இருக்கறது ஒரு அடங்கா குதிரை(நிலா), தேஞ்சு போன கோட்டை(சிவா), அப்புறம் இத்துப் போன சிப்பாய்(பத்மா). கண்டிப்பா ராணிய பிடிச்சு கொடிய நாட்டுவேன்’ சபதம் எடுத்தான். ராணிக்கு ஏற்கனவே பெரிய செக் வைத்திருந்தான். அது வெடிக்கும் போது ஜான்சி ராணி, அவன் இதய ராணியாக கண்டிப்பாக மாறுவாள். மாறுவாளா? மும்பை பப்பு சென்னையில் வேகுமா?

அவன் யோசனையைக் கலைத்தது வீட்டுப் போனின் சத்தம். மணி வெளியே வரும் வழியைக் காணோம். இவனே சென்று போனை எடுத்தான். எடுத்தவுடன் அந்தப் பக்கம், புச்சு புச்சு புச்சு என முத்த சத்தம். அசந்து நின்று விட்டான் பிரகாஷ்.

“மணி” சித்ராதான் அழைத்திருந்தாள்.

குழைவான அவள் குரலை கேட்டதும் தன்னை அறியாமலேயே ஹ்ம்ம் என்றான் பிரகாஷ்.

“என் செல்லம்ல, என் குட்டில்ல” இன்னும் கொஞ்சல் அந்தப் புறமிருந்து.

“ஹ்ம்ம்”

“என்னோட டோபில போட்ட யுனிபார்ம போய் சமத்தா எடுப்பியாம்.” இன்னொரு முத்தம் அவளிடமிருந்து.

அப்படியே சொக்கி போய் நின்றிருந்தான் பிரகாஷ்.

“என் பட்டுக் குட்டி, லட்டுக் குட்டி அப்படியே இன்னிக்கு உப்புமா கிண்டிருவியாம். நான் வர லேட்டாகும்” இன்னும் பல முத்தங்கள். வஞ்சனையில்லாமல் வாரி வழங்கினாள் இங்கிருப்பவன் நிலைமை புரியாமல்.

“ஹ்ம்ம்”

“என்னடா எல்லாத்துக்கும் ஹ்ம்ம், ஹ்ம்ம்னு அணத்துற? எப்போதும் லேட்டுன்னா அந்தக் குதி குதிப்ப. ஏன் லேட்டுன்னு கேக்க மாட்டியா?

“”ஹ்ம்ம்”

“எல்லாம் அந்தப் பாழா போன ப்ரௌனியால வந்ததுடா. அதாண்டா அந்தக் கப்பூரு பையன் இருக்கானே அவனால வந்த வினை “

‘ப்ரௌனி தான் நீ எனக்கு வச்சிருக்க பேரா? அப்போ அன்னிக்கு என்னைதான் இம்சைன்னு பாடுனீயா? ஏன்டி, நான் உனக்குப் பையனா? கல்யாணம் பண்ணியிருந்தா நமக்கே ஒரு பையன் இருப்பான். ஹ்ம்ம்’ பெருமூச்சு அவனிடம்.

“அதுக்குள்ள ஏன்டா பெருமூச்சு விடற. இன்னும் கேளு. கப்பூரு அக்கவுண்ட் பார்க்க மாட்டேன்னு சொன்ன நாளுல இருந்து இந்த ஜனகு என் மேல செம காண்டுல சுத்துறான்டா. ஷேர் மார்க்கேட் விழுந்தா கூட, நான் புடிச்சு தள்ளி விட்ட மாதிரி குதிக்கறான்டா இந்த கிரகம் புடிச்சவன். லைன்ல இருக்கியா? “

“ஹ்ம்ம்”

“புதுசா ஹவுசிங் லோன் ப்ரோமோஷன் வந்துருக்கு. அதுக்கு என்னை ஸ்டேபேக் பண்ணி தெலிசேல்(telesales) பண்ண சொல்லிட்டான் அந்த கர்மம் பிடிச்சவன். ஒவ்வொருத்தனுக்கா போன் போட்டு சேல்ஸ்ன்ற பேருல பிச்சை எடுக்கறதுக்கு பேசாம, தெருவுல பிச்சை எடுக்கலாம்டா. ஹ்ம்ம். எல்லாத்துக்கும் அந்த ப்ரௌன் மண்டையன் தான் காரணம். நான் யாருன்னு தெரியல அவனுக்கு. அபி தேக்கோ சூபிஸ்தானு!” என்றவள் கலகலவென சிரித்தாள்.

“சரிடா மணி. அப்புறம் பார்க்கலாம். ஐ லவ் யூ! உம்மா!” என போனை வைத்திருந்தாள்.

போனையே சந்தோஷமாகப் பார்த்து, ஐ லவ் யூ டூ பேபி என்ற முணுமுணுப்புடன் திரும்பியவன் திகைத்து நின்றான்.

அங்கே அவன் பின்னால் மணி நின்றிருந்தான்.(தொடர்ந்து உன்னோடுதான்)
nice darling
 
#64

Omg 😱😱😱😱
 
Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top